test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 7 April 2016

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை - முதன்மை செயலாளர் ஆணை

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங் கியது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின் றன. பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் வினாக்களுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தை விட்டு வெளியே கேட்கப்பட்டிருந்த இரு வினாக் களுக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

தவறான கேள்வி
கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில வினாக்கள் தவறாக கேட்கப் பட்டிருந்ததாகவும் தேர்வெழுதிய மாணவர்கள் புகார் தெரிவித் திருந்தனர்.

குறிப்பாக 6 மதிப்பெண் வினா பகுதியில் (தமிழ்வழி) வினா எண் 43-ல் கேட்கப்பட்டிருந்த கேள்வியின் நடுவில் “கோடானது” என்ற வார்த்தை குறிப்பிடப்படாத தால் அந்த கேள்வியே அர்த்த மில்லாத கேள்வியாகிவிட்டது. அதே கேள்விக்கு ஆங்கிலத்தில் சரியான வார்த்தை (Line) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்வழியில் தவறாக கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறையிடம் கணித ஆசிரியர்கள் முறையிட்டிருந்தனர். இதுதொடர்பாக மூத்த ஆசிரியர் களைக் கொண்டு ஆய்வு செய்யப் பட்டது. அதில், சர்ச்சைக்குரிய வினா தவறாக கேட்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

6 கருணை மதிப்பெண்
இந்த நிலையில் தமிழ்வழி வினா எண் 43-ல் கேட்கப்பட்டி ருந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந் தாலே 6 கருணை மதிப்பெண் வழங்க விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத் தியுள்ளனர். அதன்படி, அந்த வினா வுக்கு விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் 6 கருணை மதிப்பெண் வழங்கப்படும். இதே வினா ஆங்கிலத்தில் சரியாக கேட்கப்பட்டிருப்பதால் ஆங்கில வழி வினாத்தாளுக்கு கருணை மதிப்பெண் உத்தரவு பொருந்தாது.


கட் ஆப் மார்க் அதிகரிக்கும்
கணித தேர்வு கடினமாக இருந்த தால் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் ணும் குறையும் என்று கணித ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தி ருந்தனர். தற்போது, கணித தேர்வில் தவறான கேள்விக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன், கணிதத் தில் தேர்ச்சி வீதமும் அதிகரிக் கும்.


பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களும், கிராமப்புற பள்ளி மாணவர்களும் தமிழ்வழியில்தான் பிளஸ்-2 தேர்வை எழுதுவது வழக்கம். எனவே, 6 கருணை மதிப்பெண் என்ற அரசு தேர்வுத் துறையின் அறிவிப்பால் இத்தகைய அரசு பள்ளி மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் பெரிதும் பயன் அடைவர். வேதியியலை தொடர்ந்து கணித தேர்வுக்கும் 6 கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டிருப்பதால், பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் வினாயகா மிஷன் தொலைதொடர்பு பல்கலைகழகத்தில் பயிலும் அனைத்து பாடங்களும் அரசு பணிக்கு ஏற்றது.பதவி உயர்வுக்கு ஏற்றது.....பள்ளிக்கல்வி இயக்ககம் துணை இயக்குநர்(மின் ஆளுமை )RTI தகவல்.....

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்


தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது. வீடு, வீடாக சென்று, ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரலில், மாவட்டம் வாரியாக, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து, அந்த பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி அளிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண் குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்தது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ.,வின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர், வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று, பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டில், இந்த கணக்கெடுப்பின் மூலம், 2,188 பேர் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

Tuesday, 5 April 2016

Tamilnadu Open University B.Ed-2016-II Counselling English Forms

Tamilnadu Open University B.Ed-2016-II Counselling English Forms









தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து.



        தமிழகத்தில் கோயில்களுக்கு செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

        திருச்சி அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில், கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை 2015 நவம்பரில் விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவில், கோயிலுக்கு வரும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அனைவரும் வேட்டி - சட்டை, சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு முழுமையாக மூடிய ஆடையை அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அனைத்து கோயில்களிலும் ஜனவரி 1 முதல் இந்த உத்தரவு  செயல்படுத்தப்பட்டது.இந்த நிலையில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு:தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த வழக்கில், இந்து கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரப்படவில்லை. எனவே, வழக்கில் தொடர்பில்லாத பிரச்னைக்கு உத்தரவு பிறப்பிப்பதை ஏற்க இயலாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்றனர்.

பெட்ரோல் விலை ரூ.2.19, டீசல் விலை 98 காசுகள் உயர்வு



       பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

 சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை இரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
 இந்நிலையில், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாற்றத்துக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 
 அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வுக்குப் பின் பெருநகரங்களில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வருமாறு:

 பெட்ரோல் (ஒரு லிட்டர்)

 சென்னை ரூ.61.32
 தில்லி ரூ.61.87
 மும்பை ரூ.67.96
 கொல்கத்தா ரூ.65.48
 டீசல் (ஒரு லிட்டர்)
 சென்னை ரூ.50.09
 தில்லி ரூ.49.31
 மும்பை ரூ.56.09

Monday, 4 April 2016

உயா்திணை - அஃறிணை பயிற்சித்தாள்


தொடக்க வகுப்பு மாணவர்களின் திறனை உயர்த்த உதவும் பயிற்சித்தாள்.
    உயர்திணை-அஃறிணை , ஆண்பால்-பெண்பால்,  ஒருமை- பன்மை, எதிர்ச்சொல் எழுதுதல் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.  சற்று கூடுதலான இடத்தை நிரப்பும் பொருட்டு  110 மதிப்பெண்களுக்கு வினாக்கள் உள்ளது.
நன்றி
ப.ரகுபதி  இநிஆ

பதிவிறக்கம் செய்ய இங்கே.....



அகஇ - 2016 SLAS- மாணவர்களுக்கு ஏற்ப்பட்ட இடர்பாடுகளை ஆராய உத்தரவு - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மாநில திட்ட இயக்குனரின் அறிவுரைகள் - செயல்முறைகள்




தெலுங்கானா - வாகன ஆவணங்கள் தேவையில்லை 'மொபைல்' இருந்தால் போதும்!



இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை.

தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது; இங்கு, 'எம் வாலட்' எனப்படும், மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த, 'ஆப்'பில், வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிராபிக் போலீசிடம், மொபைல் போனில் உள்ள இந்த ஆவணங்களை காட்டலாம்.

நாட்டிலேயே முதல்முறையாக, தெலுங்கானாவில், இந்த, 'ஆப்' வசதியை, மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாராவ், போக்குவரத்து அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டி, அறிமுகம் செய்தனர்.
சிறப்பம்சம்:
* ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை
* இரண்டு வண்டிகள் இருந்தாலும், அந்த ஆவணங்களை, இந்த, 'ஆப்'பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
* முதல்முறை மட்டும் இணைய வசதி தேவை
* வாகனத்துக்கான, ஆர்.சி., புக் எனப்படும் பதிவுச் சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா


தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தமிழகத்திற்கு மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார்.  மேலும் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:-

ஆர் கே நகர் - ஜெயலலிதா

எண்     சட்டமன்றத் தொகுதி                   மாவட்டம்

1.     கும்மிடிப்பூண்டி (கே.எஸ்.விஜயகுமார்)     திருவள்ளூர்
2.     பொன்னேரி (சிறுணியம். பலராமன்)                      திருவள்ளூர்
3.     திருத்தணி (பி.எம்.நரசிம்மன்)                      திருவள்ளூர்
4.     திருவள்ளூர் (ஏ,பாஸ்கரன்)           திருவள்ளூர்
5.     பூந்தமல்லி தனி (டி.ஏ.ஏழுமலை)                      திருவள்ளூர்

6.     ஆவடி (தா.பாண்டியராஜன்)                      திருவள்ளூர்
7.     மதுரவாயல் (பா.பென்ஜமின்)          திருவள்ளூர்
8.     அம்பத்தூர் (வி.அலெக்ஸ்சாண்டர்)                      திருவள்ளூர்
9.     மாதவரம் (டி. தஷ்ணாமூர்த்தி)                      திருவள்ளூர்
10.     திருவொற்றியூர் (பி.பால்ராஜ்)     திருவள்ளூர்
11.     ராதாகிருஷ்ணன் நகர் (ஜெயலலிதா)     திருவள்ளூர்
12.     பெரம்பூர் (பி.வெற்றிவேல்)                      சென்னை
13.     கொளத்தூர் (ஜே.சி.டி.பிரபாகர்)                      சென்னை
14.     வில்லிவாக்கம் (தாடி.ம.ராசு)     சென்னை
15.     திரு.வி.க நகர் தனி (வ.நீலகண்டன்)     சென்னை
16.     எழும்பூர் (பரிதி இளவழுதி)     சென்னை
17.     இராயபுரம் (டி. ஜெயக்குமார்)     சென்னை
18.     துறைமுகம் (கே.எஸ்.சீனிவாசன்)     சென்னை
19.     சேப்பாக்கம் (ஏ.நூர்ஜகான்)     சென்னை
20.     ஆயிரம் விளக்கு (பா.வளர்மதி)     சென்னை
21.     அண்ணா நகர் (எஸ்.கோகுல இந்திரா)     சென்னை
22.     விருகம்பாக்கம் (விருகை.வி.என்.ரவி)     சென்னை
23.     சைதாப்பேட்டை (சி.பொன்னையன்)     சென்னை
24.     தியாகராய நகர் (சரஸ்வதி ரங்கசாமி)     சென்னை
25.     மயிலாப்பூர் (ஆர்.நடராஜ்)     சென்னை
26.     வேளச்சேரி (நீலங்காரை எம்.சி.முனுசாமி)     காஞ்சிபுரம்
27.     சோளிங்கநல்லூர் (லியோ என்.சுந்தரம்)     காஞ்சிபுரம்
28.     ஆலந்தூர் (பண்ருட்டி ச. ராமசந்திரன்)     காஞ்சிபுரம்
29.     திருப்பெரும்புதூர் (கே.பழனி)     காஞ்சிபுரம்
30.     பல்லாவரம் (சி.வி.இளங்கோவன்)     காஞ்சிபுரம்
31.     தாம்பரம் (சிட்லபாக்கம். ராஜந்திரன்)     காஞ்சிபுரம்
32.     செங்கல்பட்டு (ஆர்.கமலக்கண்ணன்)     காஞ்சிபுரம்
33.     திருப்போரூர் (எம்.கோதண்டபாணி)     காஞ்சிபுரம்
34.     செய்யூர்  தனி (ஏ.முனுசாமி)     காஞ்சிபுரம்
35.     மதுராந்தகம் (செ.கு.தமிழரசன்)     காஞ்சிபுரம்
36.     உத்திரமேரூர் (வாலாஜபாத். ப. கணேசன்)     காஞ்சிபுரம்
37.     காஞ்சிபுரம் (மைதிலி திருநாவுக்கரசு)     காஞ்சிபுரம்
38.     அரக்கோணம் தனி (கோ.சி.மதிவண்ணன்)     வேலூர்
39.     சோளிங்கர் (என்.ஜி.பார்த்திபன்)     வேலூர்
40.     காட்பாடி (எஸ்.ஆர்.கே.அப்பு)     வேலூர்
41.     ராணிப்பேட்டை (சுமைதாங்கி சி.ஏழுமலை)     வேலூர்
42.     ஆற்காடு (கே.வி.ராமதாஸ்)     வேலூர்
43.     வேலூர் (பா.நீலகண்டன்)     வேலூர்
44.     அணைக்கட்டு (ம.கலையரசு)     வேலூர்
45.     கீழ்வைத்தனன் குப்பம் தனி (ஜி.லோகநாதன்)     வேலூர்
46.     குடியாத்தம் தனி (சி.ஜெயந்தி பத்மநாபன்)     வேலூர்
47.     வாணியம்பாடி (டாக்டர் நீலோபர் கபீல்)     வேலூர்
48.     ஆம்பூர் (ஆர்.பாலசுப்பிரமணி)     வேலூர்
49.     ஜோலார்பேட்டை (கே.சி.வீரமணி)     வேலூர்
50.     திருப்பத்தூர் (டி.டி.குமார்)     வேலூர்
51.     ஊத்தங்கரை (மனோரஞ்சிதம் நாகராஜ்)     கிருஷ்ணகிரி
52.     பர்கூர் (சி.வி.ராஜேந்திரன்)     கிருஷ்ணகிரி
53.     கிருஷ்ணகிரி (வி.கோவிந்தராஜ்)     கிருஷ்ணகிரி
54.     வேப்பனஹள்ளி (கே.பி.முனுசாமி)     கிருஷ்ணகிரி
55.     ஓசூர் (பாலகிருஷ்ணா ரெட்டி)     கிருஷ்ணகிரி
56.     தளி (சி.நாகேஷ்)     கிருஷ்ணகிரி
57.     பாலக்கோடு (கே.பி.அன்பழகன்)     தர்மபுரி
58.     பென்னாகரம் (எம்.கே.வேலுமணி)     தர்மபுரி
59.     தர்மபுரி (பு.தா.இளங்கோவன்)     தர்மபுரி
60.     பாப்பிரெட்டிப்பட்டி (ஜி.எஸ்.குப்புசாமி)     தர்மபுரி
61.     அரூர் (ஆர்.ஆர்.முருகன்)     தர்மபுரி
62.     செங்கம் (எம்.தினகரன்)     திருவண்ணாமலை
63.     திருவண்ணாமலை (பெருமாள் நகர் கே.ராஜன்)     திருவண்ணாமலை
64.     கீழ்பெண்ணாத்தூர் (கே.செல்வமணி)‎     திருவண்ணாமலை
65.     கலசப்பாக்கம் (வி.பன்னீர் செல்வம்)     திருவண்ணாமலை
66.     போளூர் (சி.எம்.முருகன்)     திருவண்ணாமலை
67.     ஆரணி (சேவூர் எஸ்.இராமச்சந்திரன்)     திருவண்ணாமலை
68.     செய்யாறு (துசி.கே.மோகன்)     திருவண்ணாமலை
69.     வந்தவாசி தனி (வி.மேகநாதன்)     திருவண்ணாமலை
70.     செஞ்சி (அ.கோவிந்தசாமி)     விழுப்புரம்
71.     மயிலம் (கா.அண்ணாதுரை)     விழுப்புரம்
72.     திண்டிவனம் தனி (எஸ்.பி.ராஜேந்திரன்)     விழுப்புரம்
73.     வானூர் தனி(எம்.சக்கரபாணி)     விழுப்புரம்
74.     விழுப்புரம் (சி.வி.சண்முகம்)     விழுப்புரம்
75.     விக்கிரவாண்டி (சேவல் ஆர்.வேலு)     விழுப்புரம்
76.     திருக்கோயிலூர் (சேவல் ஜி.கோதண்டராமன்)     விழுப்புரம்
77.     உளுந்தூர்ப்பேட்டை (இரா.குமரகுரு)     விழுப்புரம்
78.     ரிஷிவந்தியம் (கதிர் தண்டபாணி)     விழுப்புரம்
79.     சங்கராபுரம் (ஏ.எஸ்.ஏ.ராஜசேகர்)     விழுப்புரம்
80.     கள்ளக்குறிச்சி தனி (அ.பிரபு)     விழுப்புரம்
81.     கங்கவள்ளி தனி (அ.மருதமுத்து)     சேலம்
82.     ஆத்தூர் - சேலம் தனி (ஆர்.எம்.சின்னதம்பி)     சேலம்
83.     ஏற்காடு (கு.சித்ரா)     சேலம்
84.     ஓமலூர் (எஸ். வெற்றிவேல்)     சேலம்
85.     மேட்டூர் (அ.சந்திரசேகர்)     சேலம்
86.     எடப்பாடி (கே.பழனிச்சாமி)     சேலம்
87.     சங்ககிரி (எஸ்.ராஜா)     சேலம்
88.     சேலம்-மேற்கு (ஜி.வெங்கடாச்சலம்)     சேலம்
89.     சேலம்-வடக்கு (கே.ஆர்.எஸ்.சரவணன்)     சேலம்
90.     சேலம்-தெற்கு (ஏ.பி.சக்திவேல்)     சேலம்
91.     வீரபாண்டி (எஸ்.மனோன்மணி)     சேலம்
92.     இராசிபுரம் தனி(டாக்டர் வி.சரோஜா)     நாமக்கல்
93.     சேந்தமங்கலம் (எஸ்.டி.) (சி.சந்திரசேகரன்)     நாமக்கல்
94.     நாமக்கல் (கே,பி.பி.பாஸ்கர்)     நாமக்கல்
95.     பரமத்தி-வேலூர் (ஆர்.ஆர்.ராஜேந்திரன்)     நாமக்கல்
96.     திருச்செங்கோடு (பொன்.சரஸ்வதி)     நாமக்கல்
97.     குமாரபாளையம் (பி.தங்கமணி)     நாமக்கல்
98.     ஈரோடு கிழக்கு (கே.எஸ்.தென்னரசு)     ஈரோடு
99.     ஈரோடு மேற்கு (இரா.வரதராஜன்)     ஈரோடு
100.     மொடக்குறிச்சி (வி.பி.சுப்பிரமணி)     ஈரோடு
101.     பெருந்துறை (தோப்பு என்.டி.வெங்கடாசலம்)     ஈரோடு
102.     பவானி (கே.சி.கருப்பணன்)     ஈரோடு
103.     அந்தியூர் (இ.எம்.ஆர். ராஜா)     ஈரோடு
104.     கோபிச்செட்டிப்பாளையம் (கே.ஏ.செங்கோட்டையன்)     ஈரோடு
105.     பவானிசாகர் தனி (எஸ். ஈஸ்வரன்)     ஈரோடு
106.     தாராபுரம் தனி (கே.பொன்னுசாமி)     திருப்பூர்
107.     காங்கேயம் (தனியரசு)     திருப்பூர்
108.     அவினாசி  தனி (ப,தனபால்)     திருப்பூர்
109.     திருப்பூர் வடக்கு (கே.என்.விஜயகுமார்)     திருப்பூர்
110.     திருப்பூர் தெற்கு (எஸ். குணசேகரன்)     திருப்பூர்
111.     பல்லடம் (கரைப்புதூர். ஏ.நடராஜன்)     திருப்பூர்
112.     உடுமலைப்பேட்டை (கே.ராதாகிருஷ்ணன்)     திருப்பூர்
113.     மடத்துக்குளம் (கே.மனோகரன்)     திருப்பூர்
114.     உதகமண்டலம் (கப்பச்சி டி.வினோத்)     நீலகிரி மாவட்டம்
115.     கூடலூர் தனி (எஸ்.கலைச்செல்வன்)     நீலகிரி மாவட்டம்
116.     குன்னூர் (ஏ.சாந்தி ராமு)     நீலகிரி மாவட்டம்
117.     மேட்டுப்பாளையம் (ஓ.கே.சின்னராஜ்)     கோயம்புத்தூர்
118.     சூலூர் (ஆர்.கனகராஜ்)     கோயம்புத்தூர்
119.     கவுண்டம்பாளையம் (வி.சி.ஆறுக்குட்டி)     கோயம்புத்தூர்
120.     கோயம்புத்தூர் வடக்கு (பி.ஆர்.ஜி.அருண்குமார்)     கோயம்புத்தூர்
121.     தொண்டாமுத்தூர் (எஸ்.பி.வேலுமணி)     கோயம்புத்தூர்
122.     கோயம்புத்தூர் தெற்கு (அம்மன் கே.அர்ஜுனன்)     கோயம்புத்தூர்
123.     சிங்காநல்லூர் (சிங்கை என்.முத்து)     கோயம்புத்தூர்
124.     கிணத்துக்கடவு (ஏ.சண்முகம்)     கோயம்புத்தூர்
125.     பொள்ளாச்சி (வி.ஜெயராமன்)     கோயம்புத்தூர்
126.     வால்பாறை தனி (கஸ்தூரி வாசு)     கோயம்புத்தூர்
127.     பழநி (பி.குமாரசாமி)     திண்டுக்கல்
128.     ஒட்டன்சத்திரம் (மனிதநேய ஜனநாயக கட்சி)     திண்டுக்கல்
129.     ஆத்தூர் - திண்டுக்கல் (நத்தம் விஸ்வநாதன்)     திண்டுக்கல்
130.     நிலக்கோட்டை தனி (ஆர்.தங்கதுரை)     திண்டுக்கல்
131.     நத்தம் (எஸ். ஷாஜகான்)     திண்டுக்கல்
132.     திண்டுக்கல் (சி.சீனிவாசன்)     திண்டுக்கல்
133.     வேடசந்தூர் (டாக்டர் வி.பி.பி.பரசிவம்)     திண்டுக்கல்
134.     அரவக்குறிச்சி (வி.செந்தில்பாலாஜி)     கரூர்
135.     கரூர் (எம்.ஆர்.விஜய பாஸ்கர்)     கரூர்
136.     கிருஷ்ணராயபுரம் தனி (எம்.கீதா)     கரூர்
137.     குளித்தலை (ஆர்.சந்திரசேகரன்)     கரூர்
138.     மணப்பாறை (ஆர்.சந்திரசேகர்)     திருச்சிராப்பள்ளி
139.     ஸ்ரீரங்கம் (எஸ்.வளர்மதி)     திருச்சிராப்பள்ளி
140.     திருச்சிராப்பள்ளி மேற்கு (எஸ்.டாக்டர் தமிழரசி)     திருச்சிராப்பள்ளி
141.     திருச்சிராப்பள்ளி கிழக்கு (ஆர்.மனோகரன்)     திருச்சிராப்பள்ளி
142.     திருவெறும்பூர் (டி. கலைச்செல்வன்)     திருச்சிராப்பள்ளி
143.     இலால்குடி (எம்.விஜயமூர்த்தி)     திருச்சிராப்பள்ளி
144.     மண்ணச்சநல்லூர் (பரமேஸ்வரி முருகன்)     திருச்சிராப்பள்ளி
145.     முசிறி (எம்.செல்வராசு)     திருச்சிராப்பள்ளி
146.     துறையூர் தனி (ஏ.மைவிழி)     திருச்சிராப்பள்ளி
147.     பெரம்பலூர் தனி (இளம்பை இரா.தமிழ்செல்வன்)     பெரம்பலூர்
148.     குன்னம் (ஆர்.டி.ராமசந்நதிரன்)     பெரம்பலூர்
149.     அரியலூர் (தாமரை எஸ்.ராஜேந்திரன்)     அரியலூர்
150.     ஜெயங்கொண்டம் ( ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்)     அரியலூர்
151.     திட்டக்குடி தனி (பெ.அய்யாசாமி)     கடலூர்
152.     விருத்தாச்சலம் (வி.டி.கலைச்செல்வன்)     கடலூர்
153.     நெய்வேலி (இரா.ராஜசேகர்)     கடலூர்
154.     பண்ருட்டி (சத்தியா பன்னீர் செல்வம்)     கடலூர்
155.     கடலூர் (எம்.சி.சம்பத்)     கடலூர்
156.     குறிஞ்சிப்பாடி (இரா.ராஜேந்திரன்)     கடலூர்
157.     புவனகிரி (செல்வி ராமஜெயம்)     கடலூர்
158.     சிதம்பரம் தனி (கே.ஏ.பாண்டியன்)     கடலூர்
159.     காட்டுமன்னார்கோயில் (எம்.கே.மணிகண்டன்)     கடலூர்
160.     சீர்காழி (பி.வி.பாரதி)     நாகப்பட்டினம்
161.     மயிலாடுதுறை (வி.ராதாகிருஷ்ணன்)     நாகப்பட்டினம்
162.     பூம்புகார் (எ.நடராஜன்)     நாகப்பட்டினம்
163.     நாகப்பட்டினம் (மனிதநேய ஜனநாயக கட்சி)    
164.     கீழ்வேளூர் (என்.மீனா)     நாகப்பட்டினம்
165.     வேதாரண்யம் (ஆர்.கிரிதரன்)     நாகப்பட்டினம்
166.     திருத்துறைப்பூண்டி தனி (கே.உமா மகேஷ்வரி)     திருவாரூர்
167.     மன்னார்குடி (டி.சுதா)     திருவாரூர்
168.     திருவாரூர் (ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம்)     திருவாரூர்
169.     நன்னிலம் (ஆர்.காமராஜ்)     திருவாரூர்
170.     திருவிடைமருதூர் (யூ.சேட்டு)     தஞ்சாவூர்
171.     கும்பகோணம் (ராம.ராமநாதன்)     தஞ்சாவூர்
172.     பாபநாசம் (ரா.துரைக்கண்ணன்)     தஞ்சாவூர்
173.     திருவையாறு (எம்.ஜி.எம்.சுப்பிரமணியம்)     தஞ்சாவூர்
174.     தஞ்சாவூர் (எம்.ரங்கசாமி)     தஞ்சாவூர்
175.     ஒரத்தநாடு (ஆர்.வைத்தியலிங்கம்)     தஞ்சாவூர்
176.     பட்டுக்கோட்டை (சி.வி.சேகர்)     தஞ்சாவூர்
177.     பேராவூரணி (மா.கோவிந்தராஜன்)     தஞ்சாவூர்
178.     கந்தர்வக்கோட்டை (நார்த்தான்மலை பா.ஆறுமுகம்)     புதுக்கோட்டை
179.     விராலிமலை (டாக்டர் சி.விஜயபாஸ்கர்)     புதுக்கோட்டை
180.     புதுக்கோட்டை (வி.ஆர்.கார்த்தி தொண்டைமான்)     புதுக்கோட்டை
181.     திருமயம் (பி.கே.வைரமுத்து)     புதுக்கோட்டை
182.     ஆலங்குடி (ஞான கலைச்செல்வன்)     புதுக்கோட்டை
183.     அறந்தாங்கி (ரத்தின சாபாபதி)     புதுக்கோட்டை
184.     காரைக்குடி (பேராசிரியை கற்பகம் இளங்கோ)     சிவகங்கை
185.     திருப்பத்தூர், (கே,ஆர்.அசோகன்)     சிவகங்கை
186.     சிவகங்கை (ஜி.பாஸ்கரன்)     சிவகங்கை
187.     மானாமதுரை (எஸ்.மாரியப்பன் கென்னடி)     சிவகங்கை
188.     மேலூர் (பெரியபுள்ளான் எ செல்வம்)     மதுரை
189.     மதுரை கிழக்கு (தக்கார் பி.பாண்டி)     மதுரை
190.     சோழவந்தான் (கி.மாணிக்கம்)     மதுரை
191.     மதுரை வடக்கு (எம்.எஸ்.பாண்டியன்)     மதுரை
192.     மதுரை தெற்கு (எஸ்.எஸ்.சரவணன்)     மதுரை
193.     மதுரை மத்தி (மா.ஜெயபால்)     மதுரை
194.     மதுரை மேற்கு (செல்லூர் கே.ராஜு)     மதுரை
195.     திருப்பரங்குன்றம் (எஸ்.எம்.சீனிவேல்)     மதுரை
196.     திருமங்கலம் (ஆர்.பி.உதயகுமார்)     மதுரை
197.     உசிலம்பட்டி (பா.நீதிபதி)     மதுரை
198.     ஆண்டிப்பட்டி (தங்க தமிழ்செல்வன்)     தேனி-அல்லிநகரம்
199.     பெரியகுளம் தனி (டாக்டர் கதிர்காமம்)     தேனி-அல்லிநகரம்
200.     போடிநாயக்கனூர் (ஓ.பன்னீர் செல்வம்)     தேனி-அல்லிநகரம்
201.     கம்பம் (எஸ்.டி.கே.சக்கையன்)     தேனி-அல்லிநகரம்
202.     இராஜபாளையம் (ஏ.ஏ.எஸ்.ஷியாம்)     விருதுநகர்
203.     திருவில்லிபுத்தூர் (எம்.சந்திர பிரபா)     விருதுநகர்
204.     சாத்தூர் (எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன்)     விருதுநகர்
205.     சிவகாசி (கே.டி.ராஜேந்திர பாலாஜி)     விருதுநகர்
206.     விருதுநகர் (கே.கலாநிதி)     விருதுநகர்
207.     அருப்புக்கோட்டை (எம்.ஜி.முத்துராஜா)     விருதுநகர்
208.     திருச்சுழி (கே.தினேஷ்பாபு)     விருதுநகர்
209.     பரமக்குடி தனி (டாக்டர் எஸ்.முத்தையா)     இராமநாதபுரம்
210.     திருவாடாணை (எஸ்.கருணாஸ்)     இராமநாதபுரம்
211.     இராமநாதபுரம் (டாக்டர் எம்.மணிகண்டன்)     இராமநாதபுரம்
212.     முதுகுளத்தூர் (கீர்த்திகா முனியசாமி)     இராமநாதபுரம்
213.     விளாத்திகுளம் (கு.உமாமகேஷ்வரி)     தூத்துக்குடி
214.     தூத்துக்குடி (சி.த.செல்லப்பாண்டியன்)     தூத்துக்குடி
215.     திருச்செந்தூர் (ஆர்.சரத்குமார்)     தூத்துக்குடி
216.     ஸ்ரீவைகுண்டம் (டாக்டர் மா.புவனேஸ்வரன்)     தூத்துக்குடி
217.     ஓட்டப்பிடாரம் தனி(ஆர்.சுந்தர்ராஜ்)     தூத்துக்குடி
218.     கோவில்பட்டி (ராமானுஜம் கணேஷ்)     திருநெல்வேலி
219.     சங்கரன்கோவில் தனி(வி.எம்.ராஜலட்சுமி)     திருநெல்வேலி
220.     வாசுதேவநல்லூர் தனி (அ.மனோகரன்)     திருநெல்வேலி
221.     கடையநல்லூர் (எஸ்.ஷேக்தாவூத்)     திருநெல்வேலி
222.     தென்காசி (சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன்)     திருநெல்வேலி
223.     ஆலங்குளம் (எப்.சி.கார்த்திக்கேயன்)     திருநெல்வேலி
224.     திருநெல்வேலி (நயினார் நகேந்திரன்)     திருநெல்வேலி
225.     அம்பாசமுத்திரம் (ஆர்.முருகையா பாண்டியன்)     திருநெல்வேலி
226.     பாளையங்கோட்டை (ஆ.தமிழ்மகன் உசேன்)     திருநெல்வேலி
227.     நாங்குநேரி (மா.விஜயகுமார்)     திருநெல்வேலி
228.     ராதாபுரம் (ஜி.டி.லாரன்ஸ்)     திருநெல்வேலி
229.     கன்னியாகுமரி (தளவாய் சுந்தரம்)     கன்னியாகுமரி
230.     நாகர்கோவில் (வி.டாரதி சேம்சன்)     கன்னியாகுமரி
231.     குளச்சல் (கே.டி.பச்சைமால்)     கன்னியாகுமரி
232.     பத்மனாபபுரம் (கே.பி.ராஜேந்திர பிரசாத்)     கன்னியாகுமரி
233.     விளவங்கோடு (நாஞ்சில் டொமினிக் எ டொமினிக் சாலியோ ஜார்ஜ்)     கன்னியாகுமரி
234.     கிள்ளியூர் (ஏ.மேரிகமலபாய்)     கன்னியாகுமரி