test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 30 March 2016

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது.


இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை,இனி 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.


இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறைமுடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.தமிழகத்தில், இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, காகித வழி விண்ணப்ப நடைமுறை தான் அமலில் இருந்து வருகிறது.

விண்ணப்பங்கள் வாங்க, மையங்களுக்கு மாணவர்கள் அலைய வேண்டும். அதன்பின், சமர்ப்பிப்பதிலும் பல சிக்கல்கள் இருந்தன. தற்போது, இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.இனி, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கும் நடைமுறை, இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தலைமையில், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறித்து, உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில், இரண்டாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், விண்ணப்ப வினியோகம் குறித்து, விரிவாகவிவாதிக்கப்பட்டு, தேதி முடிவானது.

பின், அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் அளித்த பேட்டி:


இந்தாண்டு முதல், இன்ஜி., சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம்மட்டுமே விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். சென்ற ஆண்டே, எம்.இ., மற்றும் பகுதிநேர, பி.இ., - பி.டெக்.,படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.ஏப்., 15ம் தேதி முதல், மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்து விவரங்களும், அதிகாரபூர்வ அறிவிப்பில், ஆன்லைனில் வெளியாகும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதி, பின் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும், 60 மையங்களில், ஆன்லைன் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின்தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது


G.O.Ms.No.35 Dt: February 23, 2016 Loans and Advances HBA-Inclusion of the cost of Rooftop Solar photo voltaic panel as a component within the overall ceiling of eligible HBA as a optional item of expenditure - orders issued - rulesamended

             கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின்தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு...



Departmental Exam Last Date: 11.4.2016


Departmental Exam Last Date Extended: 11.4.2016

மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்'?


பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது. அத்துடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. மற்ற பிரிவு மாணவர்களுக்கு, மார்ச், 28ல் தேர்வுகள் முடிந்து விட்டன. 

மே முதல் வாரத்தில் இருந்து, ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டி உள்ளது.அதனால், ஏப்., 18க்குள் விடைத்தாள் திருத்தப்பட்டு, 20 முதல், 25க்குள், மதிப்பெண் ஒருங்கிணைப்பு, கணினி வழி மதிப்பெண் சரிபார்த்தலும் முடிக்கப்படும். ஏப்., 29 அல்லது மே, 2ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tuesday, 29 March 2016

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதிவெளியீடு


       சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா கூறியுள்ளார்.

       60 மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் இந்தத் தகவலை உயர்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார்.ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில், அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை

ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை

APRIL DIARY- Tentative

*.1-fri -  April fool day,   
*.2- sat-Grievance day,
*.8- fri-Telugu new year holiday,
*.14- thurs- Tamil new year,
*.Dr.Ambedkar birthday holiday,
*.19- tue- Mahaaveer Jayanthi - holiday,
*.21- thurs- R.L- Chitra Pournami,

III TERM EXAM TIME TABLE(1 to 5th std)

*.22- fri-  Tamil,  World Earth Day,
*.25- mon - English,
*.26- tue- Maths,
*.27- wed- Science,
*.28- thurs- Social Science,
*.29- fri- Physical Education,
*.30- Last working day for this academic year.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஊழியர்களின் பிடித்தத் தொகையில் இருந்து 25% பகுதி தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு

CLICK HERE-PFRDA- CIRCULAR-LETTER

தேர்தல் - அரசியல் தலைவர்கள் / கட்சி சின்னங்கள் / விளம்பரங்கள் ஆகியவைகள் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்கவது சார்பான உத்தரவு



தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தீ தடுப்பான் அமைத்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

அகஇ - முன் அனுமதி பெறுதல் - வீட்டுகடன் பெறுதல், நிலம் கையகப்படுத்துதல் முன்பு முன்னனுமதி பெறுதல் சார்பாக இயக்குனர் செயல்முறைகள்

Annamalai University December 2015 Exam Results

Annamalai University December 2015 Exam Results

Annamalai University December 2015 Exam Results Click Here...

Sunday, 27 March 2016

குழந்தைகளை பாதுகாக்க ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டம்


குழந்தைகளுக்கான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் வயிற்றுப்போக்கினால் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 80 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர். இதை கட்டுப்படுத்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய அளவிலான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 2.7 கோடி குழந்தை களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன.

தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016- தேர்விற்கான கால அட்டவணை



பெற்றோர் கவனத்திற்கு : மொபைல் பேட்டரி வெடித்து சிறுவன் பலி



       மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான்.

செகோர் மாவட்டம், பட்கோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபதேஹ் என்பவரின் மகன் உவேஷ் (10). இச்சிறுவன் நேற்று தனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். இந்நிலையில் போன் பேட்டரி திடீரென வெடித்ததில் சிறுவனின் ஆடையில் தீப்பற்றி மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை அஷ்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக சித்திக்கஞ்ச் காவல் நிலையை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட கோரிக்கை


      வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 

         இந்த பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், போதிய நிலம் இல்லாத, 746 பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகார நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பள்ளிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், ’பாடம்’ நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ’மே, 31ம் தேதியுடன் இந்த பள்ளிகளுக்கு, அங்கீகாரம் முடிகிறது; இனி, அங்கீகாரம் நீட்டிக்கப்படாது’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் முதல், 746 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாவதால், மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வகையில், ஐந்து லட்சம் மாணவர்; 25 ஆயிரம் ஆசிரியர்களின் கதி என்ன என தெரியாமல் பள்ளிகள் தவிக்கின்றன.

இதேபோல், மாணவர்களின் பெற்றோரும் கூடுதல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஜூன் முதல், 746 பள்ளிகள் மூடப்படுமா; அவை எந்த பள்ளிகள்; நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளா; பள்ளிகளை மூடினால் மாற்று ஏற்பாடு என்ன? என, தெரியாமல் தவிக்கின்றனர்.


பெற்றோர் சிலர் கூறும்போது, ’குழப்பத்தை தீர்க்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரசு இணையதளத்தில், அங்கீகாரம் இழந்த பள்ளிகளின் பட்டியலை, முகவரியுடன் வெளியிட வேண்டும். அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் மாணவர்களை, மற்ற பள்ளிகளில் சேர்க்க, அரசே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, தெளிவான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும்’ என்றனர்.

அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை


அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் எதிர்ப்பால் யோகா கற்றுத் தருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யோகா கிறிஸ்துவ மத கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாகவும், வணக்கம் சொல்லும் முறை மத உணர்வுகளை பாதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போது அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

What Next After 12th?

What Next After 12th?

Wednesday, 23 March 2016

Ambedkar Birthday (14th April) declared as Central Holiday throughout the country

Ambedkar Birthday (14th April) declared as Central Holiday throughout the country

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- மதிய உணவுத்திட்டம்- அரசு/அரசு உதவி பெறும் /ஊராட்சி ஒன்றிய -தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது சார்பாக ஒரு தலைமையாசிரியர்(HM) மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்(Nodel Teacher) தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமுல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண் 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை


தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது. 

ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்?


பிளஸ் 2வுக்கு பின், உயர் கல்வியில், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் போன்ற சந்தேகங்களுக்கு வழிகாட்டும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 2 முதல் 10 வரை பல மாவட்டங்களில் நடக்க உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர்கள், இன்ஜி.,மருத்துவம் உட்பட, பலவகை படிப்புகளில், ஒன்றை தேர்வு செய்து படிப்பர். இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பல குழப்பங்கள் இருக்கும்.

என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம்; எந்த கல்லூரி சிறந்தது; அவற்றின் தொழில்நுட்ப வசதிகள் என்ன என, பல சந்தேகங்களை தீர்க்க வேண்டும். மாணவர், பெற்றோர், ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கு நேரில் சென்று விசாரிக்க முடியாமல் அவதிப்படுவர். எனவே, உயர் கல்வி குறித்த சந்தேகங்களை தீர்க்க, வழிகாட்டி நிகழ்ச்சி தினமலர் நாளிதழ் மூலம், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், கல்லூரி அதிபர்கள் பங்கேற்று, மாணவர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைகள், ஒரே இடத்தில் தங்களின் கல்வி அனுபவங்கள், தங்கள் நிறுவனங்களில் உள்ள பாடங்களின் சிறப்புகள், தொழில்நுட்ப வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற பல அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு, தினமலர் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகத்தில் உயர் கல்வி குறித்த அனைத்து தகவல்களும், கல்வி நிறுவனங்களின் விவரங்களும் இடம் பெற்று இருக்கும்.

நிகழ்ச்சி தேதி விவரங்கள்:

ஏப்.,2 முதல் 4 வரை, சென்னை, மதுரை மற்றும் கோவை

ஏப்.,5 முதல் 7 வரை, புதுச்சேரி

ஏப்., 6 மற்றும் 7 திண்டுக்கல்

ஏப்., 9 மற்றும் 10 திருப்பூர்

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதில் அளிப்பவர்களுக்கு டேப்லட்கள் மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்படும்.

Monday, 21 March 2016

பி.எப்., பணத்தை எடுக்க புதிய நெறிமுறைகள்.


பி.எப்., எனப்­படும் தொழி­லாளர் வருங்கால வைப்பு நிதி­யி­லி­ருந்து பணத்தை எடுக்க, புதிய நெறி­மு­றைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இதன் படி, பணியில் இருந்து வில­கி­ய­வர்கள் தங்கள் முழுத்­தொ­கை­யையும் எடுத்துக் கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.ஓய்வு கால திட்­ட­மான பி.எப்.,ல் ஊழியர்கள் தங்கள் ஊதி­யத்தில், 12 சத­வீதம் மாதந்­தோறும் செலுத்த வேண்டும். அதே அளவு தொகை, நிறு­வனம் சார்பில் செலுத்­தப்­படும். 

நிறு­வனம் செலுத்தும் தொகையில் ஒரு பங்கு, ஓய்வு நிதி திட்­ட­மான இ.பி.எஸ்.,ல் சேர்க்­கப்­படும்.பி.எப்., தொகையை, இடைப்­பட்ட காலத்தில் குறிப்­பிட்ட தேவை­க­ளுக்­காக மட்டும் தான் பகுதி அளவு எடுக்க முடியும். ஊழியர் வேலை­யி­லி­ருந்து விலகும்பட்­சத்தில், தொடர்ந்து இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் வேலையில் இல்­லாமல் இருந்தால், தன் கணக்கில் உள்ள முழுத்­தொ­கை­யையும் எடுத்துக் கொள்­ளலாம்; ஆனால் இதில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.கடந்த பிப்­ர­வரி, 10ம் தேதி வெளி­யி­டப்­பட்­டுள்ள அறி­விக்கை படி, இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் ஊழி­யர்கள் வேலையில் இல்­லாமல் இருந்­தாலும் கூட முழுத் தொகை­யையும் எடுக்க முடி­யாது. அவர்கள் பங்­க­ளிப்பு மற்றும் அதற்­கான வட்டி மட்­டுமே பெற முடியும். நிறு­வனம் செலுத்­திய தொகை அவ­ரது கணக்­கி­லேயே நீடிக்கும். அவர், ஓய்வு பெறும் வயதில் தான் அந்த தொகையை பெற முடியும்.மேலும் பணம் எடுக்கும் வயது, 55லிருந்து, 58 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே இடைப்­பட்ட காலத்தில், வேலையில் இருந்து வில­கி­விட்டால் கூட முழுத்தொகை­யையும் எடுக்க முடி­யாது. ஆனால், திரு­மணம் அல்­லது குழந்தை பிறப்பு கார­ண­மாக பணியை விட்டுச் செல்லும் பெண் ஊழி­யர்­க­ளுக்கு இதி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும்.

பணி மாறும் நிலையில், பி.எப்., கணக்கை எளி­தாக தொடரும் வகையில் நிரந்­தர கணக்கு எண் வசதி அம­லுக்கு வந்­து­விட்­டதால், ஓய்வு காலம் வரை பி.எப்., பின் ஒரு பகு­தியை சேமிக்கும் வகையில், இந்த புதிய விதி­முறை கொண்டு வரப்­பட்­டுள்­ளது.எனினும் வேலையை விட்ட பின், புதிய வேலைக்கு சேராமல் இருப்­ப­வர்கள் விஷ­யத்தில் இது புதிய சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம். அவர்கள் கணக்கில் பணம் செலுத்­தப்­ப­டா­ததால், மூன்று ஆண்­டு­களில் இயங்­காத கணக்­காக கரு­தப்­பட்டு வட்டி நிறுத்­தப்­படும். இது தொடர்­பாக, அரசு தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை


மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274-வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது.

அதில், கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ‘பல்கலைக்கழக மானிய குழுவின் மீதும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மீதும் சமீபத்தில் புகார்கள் வந்துள்ளன. அவை தீவிரமான புகார்கள் ஆகும். அவை தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேர்மையும், வெளிப்படையான தன்மையும் இந்த கணத்தில் தேவை. அவர்கள் பொறுப்பு கூற வைக்கப்படுவதோடு, வெளிப்படையானவையாகவும் இருக்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆனால் அந்த பதிலில் பாராளுமன்ற குழு திருப்தி அடையவில்லை என தெரிய வந்துள்ளது.

தொலைதூர கல்வியை (அஞ்சல் வழி கல்வி) பொறுத்தமட்டில், பாரதீய தொலைதூர கல்வி மசோதா கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற குழு அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.



நாளை 22.3.16 அன்று  ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

பவானி அம்மன் திருவிழா காரணமாக நாளை 22.3.16 அன்று  ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

ஈடு செய்ய வேண்டிய வேலை நாள் : 23-04-16

பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்.



    வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிமுகம்இன்றைய உலகச்சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில் பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. 

        புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.


தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக்குகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உட்பட 490-க் கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல் லூரிகள் இயங்கி வருகின்றன.பாலிடெக்னிக் பாடத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி யமைக்கப்படும். அந்த வகையில், முதல் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றி யமைக்கப்பட்டது. பாலிடெக்னிக் பாடத்திட்டத்துக்கு ஆங்கில வரிசைப்படி பெயர் கொடுப்பார்கள். அதன்படி, முந்தைய ‘எல்’ வரிசை பாடத்திட்டம், ‘எம்’ வரிசை பாடத்திட்டமாக மாறியது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில், முதல் ஆண்டு மாண வர்களுக்கான புதிய பாடத்திட் டத்தில், சமீபத்திய முன்னேற்றங் கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்பான பாடங்கள் சேர்க்கப் பட்டன. உலகளவில் பிரபலமாகி வரும் நானோடெக்னாலஜி, ரோபாட் டிக்ஸ் உள்ளிட்ட பாடங்களும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிலிருந்து (2016-17) 2-ம்ஆண்டு மாணவர்களுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட உள்ளது.இன் றைய உலகச்சூழலுக்கு ஏற்ப வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக் கவும், அவர்களை வேலைவாய்ப் புக்கு தகுதிபடைத்தவர்களாக மாற் றும் வகையிலும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக பாடத்திட்டத்தில் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டத் தில் மட்டுமின்றி கேள்வித்தாள் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது இருக்கும் 12 மதிப்பெண் வினாக்கள் நீக்கப்படும். கேள்விகளுக்கு அதிக பட்ச மதிப்பெண் 5 ஆக இருக்கும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:தொழில்நிறுவனங்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும்வகை யில் புதிய பாடத் திட்டம் தயாரிக் கப்பட்டுள்ளது. தற்போது புதிய முயற்சியாக நூலக நேரமும், கருத் தரங்க பங்கேற்பும் சேர்க்கப்படுகி றது. 
மாணவர்கள் வெறுமனே மனப் பாடம் சார்ந்து இருக்காமல் நன்கு யோசித்து சூழலுக்கு ஏற்ப தங்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய வர்களாக, எதையும் தைரியமு டன் சந்திக்கக்கூடியவர்களாக மாற் றும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கும்.கருத்தரங்க பங்கேற்பு திட்டம் மூலமாக அவர்கள் நூலகங்களுக் குச் சென்று குறிப்புகள் தயாரித்து சொந்தமாக உரையாற்றுவார்கள். ஒரு விஷயம் தொடர்பாக கருத்து களை எடுத்துரைப்பார்கள். 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பாடத்திட்டத்துக்கான வரைவு பாடத்திட்டங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணை யதளத்தில் வெளியிட்டுள்ளோம். இதுதொடர்பான ஆலோசனை களை மார்ச் 27-ம்தேதிக்குள் தெரி விக்குமாறு அனைத்து பாலிடெக் னிக் கல்லூரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.2ம் ஆண்டு மாணவர் களுக்கான புதிய பாடத்திட்டம் (எம் வரிசை) வரும் கல்வி ஆண்டி லிருந்து (2016-17) அமல்படுத்தப் படும். இதற்கு அடுத்த கல்வி ஆண் டில் (2017-18) இந்த மாணவர்கள் 3-ம் ஆண்டுக்கு வரும்போது “எம்” வரிசையில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

EMIS - 17.03.2016 முடிய மாவட்ட வாரியாக "ONLINE" இல் EMIS பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை விபரம்

பிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு



       பிளஸ் 2 வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ட்டுள்ளது.
          கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் 2 வேதியியல் படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
        வேதியியல் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்க வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

        இந்நிலையில், நாளை நடக்கவிருந்து வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு


சேலம்:பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.இதனால், மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு, பிளஸ் 2 பாடத்தையே நடத்தி, மனப்பாடம் செய்ய வைத்து தேர்வெழுத வைக்கும் வழிமுறையை, பல தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.சராசரியாக படிக்கும் மாணவர்களை, அவர்கள் பலவீனமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து பயிற்சியெடுக்க வைத்து மதிப்பெண் பெற வைத்தன.

இதனால், 100 சதவித தேர்ச்சி, அதிக கட் ஆப், மாவட்ட அளவிலான ரேங்க் என பேனர் வைத்து, பள்ளியின் கட்டணத்தையும் பல மடங்கு அதிகரித்து வந்தன.நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு, மனப்பாடம் செய்யும் வழிமுறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த வேதியியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் வழக்கமான கேள்விகள் இல்லாமல் புதிய வகை வினாக்களும், சுயமாக சிந்தித்து பதில் எழுதக் கூடிய வினாக்களும் அதிகமாக இடம்பெற்றன. இதனால், மனப்பாடக் கல்வி மூலம் சென்டம் வாங்கும்

மாணவர்களின் எண்ணிக்கை மிக அரிதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மனப்பாட முறையில் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாணவர்களிடம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்பதால் தனியார் பள்ளிகளும் தவிக்கின்றன. இதை சமாளிக்க, சலுகை மதிப்பெண்கள் தர வேண்டும்; மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மாணவர்களுக்கு மனப்பாட முறையில் பயிற்சியளித்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், இந்த முறை பாதிக்கப்படலாம். இதனால் அட்மிஷன் குறைந்து, நற்பெயர் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட, தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன.இதேபோல், இனி வரும் தேர்வுகளும் இருக்கும் பட்சத்தில், தனியார் பள்ளிகள் மனப்பாட முறையில் பாடம் நடத்துவதை கைவிட வேண்டியிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு ஒருபக்கம்; தேர்தல் மறுபக்கம்


தேர்வு பணி, தேர்தல் வேலை என, இரட்டை பணிச்சுமையால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மூன்றாம் பருவ பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது; மறுபக்கம், சட்டசபை தேர்தல் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. தேர்வு பணி மற்றும் தேர்தல் பணி என, இரண்டிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏப்., 22ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு துவங்குகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு டிச., மாதம் நடக்க வேண்டிய இரண்டாம் பருவ தேர்வு, ஜன., மாதம் நடைபெற்றது. தேர்வுக்குபின், ஒன்றரை மாதங்களாக, மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. நான்கு மாதங்களில் நடத்த வேண்டிய பாடங்களை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது சட்டசபை தேர்தல் பணி, பொதுத்தேர்வு பணி என வழங்கப்பட்டுள்ளதால், அப்பணிகளுக்கு சென்று விடுகின்றனர். வகுப்பறையில் சொற்ப ஆசிரியர்களே உள்ளதால், பாடத்தை முழுமையாக முடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சில பாடங்கள், இன்னும் அரை குறையாக பாதியில் நிற்கிறது. 

சில ஆசிரியர்கள், கிடைக்கும் நேரத்தில் சிலபஸ்சை முடிக்க வேண்டும் என, அவசரகதியில் பாடம் நடத்துகின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அடுத்த மாத இறுதிக்குள் மூன்றாம் பருவ பாடங்களை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், அவசரகதியில் நடத்தி முடிப்பதை தவிர, வேறு வழியில்லை என்றார்.

Sunday, 20 March 2016

வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.5000/லிருந்து ரூ.6000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது...

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கக் கல்வி - குழு காப்பீட்டு திட்டம் - குடும்ப நல நிதி ரூ.150000/-லிருந்து ரூ.300000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது, மாத சந்தா தொகை ரூ.60/- ஆக பிடித்தம் செய்ய இயக்குனர் உத்தரவு

Thursday, 17 March 2016

பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் 

click here to download -பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் -புதிய மாதிரி படிவங்கள்

'மட்டம்’ போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு!


கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், மட்டம் போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை, ஜெர்மனியை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டு வருகிறது. கல்வித் துறையில் உள்ள ஊழல்கள் குறித்த, 448 பக்கங்கள் அடங்கிய, மிக விரிவான அறிக்கையை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கல்வி:

கல்வித் துறையில் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், நடந்து வரும் மோசடிகள் குறித்தும் இந்த அறிக்கை தோலுரித்து காட்டியுள்ளது.குறிப்பாக, ஆரம்ப கல்வித் துறையில் உள்ள ஊழல்கள், முறைகேடுகள், அனைவருக்கும் கல்வி உரிமையை நசுக்குவதாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதில், மிக முக்கியமான பிரச்னையாக இந்த அறிக்கை கூறுவது, ஆசிரியர்களின் விடுமுறையைத் தான். ஆண்டு விடுமுறைகளைத் தவிர, பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பது, பள்ளிக்கு மட்டம் போட்டு, தன் சொந்த வேலையைச் செய்வது ஆகிய வற்றையும் குறிப்பிடுகிறது. 

மேலும், அரசு திட்டப் பணிகளுக்குசெல்வதாகக் கூறி, சொந்த வேலைக்கு செல்வதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு ஆசிரியர்கள் அதிகளவு விடுமுறை எடுக்கும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில் ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 

உலக அளவில், ஆசிரியர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பது அல்லது பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில், கென்யா, 30 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. உகாண்டாவில், 27 சதவீதம் பேரும்; இந்தியாவில், 25 சதவீதம் பேரும் விடுமுறையில் இருக்கின்றனர். இதில், தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையில் இருப்பவர்கள், 10 சதவீதத்தினர் மட்டுமே. 

மக்கள் கணக்கெடுப்பு, போலியோ சொட்டு மருந்துகொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகளுக்காக செல்வது என, 7 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வருவதில்லை. மீதமுள்ளவர்கள், தங்களுடைய சொந்த தொழில் அல்லது வேறு வேலையைச் செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தேவை:

ஆசிரியர்கள் அதிக அளவுக்கு விடுமுறை எடுப்பது அல்லது பள்ளிக்கு வராமல் இருப்பது, பாடம் எடுக்காமல் இருப்பதற்கு, போதிய கண்காணிப்பு இல்லாததே காரணம். ஆசிரியர்களை விட, அவர்களை கண்காணிக்கும் தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளே அதிகமாக, காணாமல் போய்விடுகின்றனர் என, இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வழி காட்டுகிறது ராஜஸ்தான்:

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு கணினி மயமாக்கப்பட்டது. வகுப்புகள், ரகசிய கேமராக்களால் கண்காணிக்கப்பட்டன. விடுமுறையைத் தவிர, மாதத்தில் பள்ளிக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் என்ற திட்டமும் கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது, 44 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

900 ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் சிக்கல்!


கடந்த, 2012-13ம் ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்ட பிரச்சனைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 2012- 13ம் ஆண்டில், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், ஒரு பள்ளிக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் என, 9 புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டு, 900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பணி நீட்டிப்பு ஆணை, கடந்த, 2015, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. 

இதனால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத சம்பளம் பெற முடியாமல், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள இந்த ஆணையில், ஐந்தாண்டு தொடர் நீட்டிப்பு ஆணைக்கு தமிழக அரசை கோரியுள்ளதாகவும், அதற்கு முன், தற்காலிகமாக ஓராண்டு பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம், கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

Wednesday, 16 March 2016

Alagappa University Distance Education Examinations May 2016- Notification

Alagappa University Distance Education Examinations May 2016- Notification

பள்ளிகளில் உலகவனநாள் - மார்ச் 21,உலக நீர் தினம்,மார்ச் -22 கொண்டாட அறிவுறுத்துதல்.

பள்ளிகளில் உலகவனநாள் - மார்ச் 21,உலக நீர் தினம்,மார்ச் -22 கொண்டாட அறிவுறுத்துதல்.

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?


சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இதனால், மே 16 முதல் 19 வரை பெரும்பாலான மையங்களில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும் தடைப்படும். இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே, ஏப்ரல் 25-இல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆன்-லைனில் பதிவிறக்கம்: இதுதவிர, கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வு விண்ணப்பங்களை w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u‌t‌n‌ea என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும். கலந்தாய்வு ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்பட்டு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வெழுதும் நாளுக்கான பதிவு மார்ச் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும். 

இதே போல் உடல் நல அறிவியல் ("ஹெல்த் சயின்ஸஸ்') பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, எம்.டெக் படிப்புக்கான எஸ்.ஆர்.எம்.ஜி.இ.இ.டி. தேர்வு, எம்.பி.ஏ. படிப்புக்கான எஸ்.ஆர்.எம். "கேட்' நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கும் நாள் மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Expert Committee to examine the demand for continuing Old Pension Scheme – Constituted – Orders – Issued.

G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Expert Committee to examine the demand for continuing Old Pension Scheme – Constituted – Orders – Issued.



பகுதி நேர பயிற்றுநர் ஊதியம் 2015-16 - மார்ச் 2016 ஊதியம் வழங்கல் மற்றும் பயன்படுத்தாத பள்ளி மான்யத்தை 31.03.2016க்குள் திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

Monday, 14 March 2016

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்

குடும்ப நலநிதி உயர்த்திய அரசாணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF. Deduction from Rs.30 to Rs.60 wef: 1.2.2016

எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம்  முதல் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.

இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு  அங்கன்வாடி அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்......

சட்டமன்றத் தேர்தலில் பெற்றோர் வாக்களிப்பது குறித்தான உறுதிமொழி- பெற்றோரிடம் பெற்று வர உத்திரவு

சட்டமன்றத் தேர்தலில் பெற்றோர் வாக்களிப்பது குறித்தான உறுதிமொழி- பெற்றோரிடம் பெற்று வர உத்திரவு

முக்கியச் செய்தி +2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்.


12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது.  தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு தேர்வுகள், வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.

12ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

7th Pay commission latest news.



1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.

7. Calculations 2.86 x basic pay agreed.7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016. Member (attached 26 pages report) Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old PB+GP)*2.15 (.) Pension and family pension multiply factor should be 2.50. Member (attached 14 pages report) annual rate of increment divided into five categories(A) 2500 for fixed basic (B) 1500 for class 1(C) 1200 for class 2 (D) 1000-Group A,800-Group B,600-Group C for class 3 (E) 400 for class 4 annually. Member(attached 32 pages report) The present MACPs scheme should be replaced by giving 4 up gradation after completion of 10,18,25,30 years of continues service. Member (attached 28 pages report) house rent allowance should be as it was in 6th CPC and date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and house building advance should be 50 times of new basic pay. Member (attached 12 pages report) Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities. Member (attached 38 pages report) (a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three States. (b)Maximum service length 33years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region. Member (attached 24 pages report)

 New pay scale .
Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,
Old PB-1,GP-1900&2000 New pay scale are 21500-40100,
Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.
Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,
Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,
Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,
Old PB-3.GP-6600 New pay scale are 52000-100000.
Old GP-7600 New pay scale are 60000-110000.
Old GP-9000 New pay scale are 75000-125000.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு



கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் யல்படுகின்றன; அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆய்வு நடத்த வேண்டும்.

உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் குழு அமைத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், முன்னறிவிப்பின்றி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து, இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா; பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா; பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நூலகம் பயன்பாடு, அரசின் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம், கழிப்பறை வசதி மற்றும் துப்புரவு பணி, பாதுகாப்பான குடிநீர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சில் உட்காருவதில் சண்டை: சக மாணவன் தள்ளிவிட்டதில் 7 ஆம் வகுப்பு மாணவன் கொலை

விழுப்புரம் அருகே உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்மைககார அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான்.இன்று பள்ளி வந்த பாலமுருகனுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் அமர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர் ஒருவர் பாலமுருகனை கீழே தள்ளியுள்ளார்.மர பெஞ்சின் மீது விழுந்த பாலமுருகனுக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், செல்லும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டார்.

இதுகுறித்து சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பாலமுருகனை தள்ளிவிட்ட சக மாணவரை பிடித்து சிறுவர் நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். அவர் பின்னர் கடலூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்தாண்டு, ஆங்கிலம் வினாத்தாளில் பல பிழைகள் இருந்தன.

'இந்த ஆண்டு வினாத்தாள் பிழைகள் இல்லாமல் இருக்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதே போல், கடந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் ஏராளமானோர், 'சென்டம்' எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு அறிவியல் வினாத்தாள் கடினமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச், 4ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. மொழிப்பாட தேர்வுகள் முடிந்து, இன்று முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன. மேலும் இன்று முதல், விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. முதல் நாளான இன்று, விடைத்தாள் திருத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மார்ச், 16 முதல், விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. தேர்வுகள் முடிய முடிய, அந்தந்த பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவியர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 200 வீதம், ஒரு கல்வியாண்டில், பத்து மாதத்துக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

நடப்பு கல்வியாண்டில், இந்த உதவித்தொகைக்கு, சேலம் மாவட்டத்தில், 367 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவியர் நடப்பு கல்வியாண்டில், பத்து மாதங்கள் பள்ளிக்கு வந்ததை உறுதி செய்யும் சான்று, மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் ஆகியவை தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. 

மாணவியருக்கான உதவித்தொகை நேரடியாக, அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள் இத்தொகையை மாணவியருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேஇ - தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் ஒளிநகல் பதவிறக்கம் பெறுவது அதன்பின் மறுகூட்டல் / மறுமதிப்பீடு விண்ணப்பங்கள் வரவேற்பது சார்பான செய்தி அறிக்கை

DGE - D.T.EL.ED - ANSWER SCRIPTS DOWNLOAD & RE-VALUATION REG INSTRUCTIONS CLICK HERE...

Sunday, 13 March 2016

இந்தியாவில் 13 சதவீத பள்ளிக் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை:ஆய்வில் தகவல்


நாடு முழுவதிலுமாக பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜேந்திர பிரசாத் கண் சிகிக்சை அறிவியல் மையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதன் தலைவர் அதுல் குமார் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிட்டப்பார்வை குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 7 சதவீதமாக இருந்த இக்குறைபாடுள்ள குழந்தைகளின் வீதம், தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு, விடியோ கேம்கள், செல்லிடப்பேசிகள், டேப்ளட்டுகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் அதிகமான பயன்பாடே காரணமாகும்.

கிட்டப்பார்வைக் குறைபாட்டை நுட்பமாகக் கூறுவதானால், விழிக்குள் ஊடுருவம் ஒளியானது நேரடியாக விழித்திரையில் (ரெட்டினா) படாமல் அதற்கு முன்பாக விழுவதாகும்.

இதன்படி, இக்குறைபாடு உடையவர்கள் தூரத்தில் இருக்கும் பொருள்களைக் காணும்போது அது அவர்களுக்கு தெளிவாகத் தெரிவதில்லை. மாறாக, அருகில் இருக்கும் பொருள் நன்றாக தெரியும். இந்தியாவில் கண் பிரச்னைகள் தொடர்பாக குறைவான அளவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும், கிட்டப்பார்வை குறித்தும் மிகவும் அரிதாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னைகள் தொடர்பாக தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

அதில், வயது ரீதியான தசைச் சிதைவுகளுக்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்துவது, உலக வெப்பமயமாதல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சு போன்றவற்றால் கண் பார்வையில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் என்று அதுல் குமார் கூறினார்.

கண் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்காக கடந்த 1967ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ராஜேந்திர பிரசாத் கண் சிகிச்சை மையம், தற்போது 14 ஆய்வகங்களுடன் இயங்கி வருகிறது.

HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS

 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:
முதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்:

குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். 

அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்' 

எடுத்துக்கொள்ள வேண்டியவை : காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?


*வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.


* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

* போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

* உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1) கூர்ந்து கவனித்தல் (Observation):- கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.

2)தொடர்பு படுத்துதல் (Correlation):-அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.

3) செயல்படுத்தல் (Application):-நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.


கற்றல் செயற்பாங்கு: (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.

குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.


புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.


முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.


ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.


அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும். ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.


படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.


இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)


வினா எழுப்புதல்: (Asking Questions)
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)


வாசித்தல் (Read):
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.


படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.
புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.
இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்: வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.
இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

தேர்வு எழுதிப் பார்த்தல்: இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும். ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

எங்கே உங்கள் முயற்சிகள் திருவினையாகட்டும் என்ற வாழ்த்துக்களுடன் வணக்கம்.

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு



       கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். 

      தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 

        தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2 தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவில், வாக்குச்சாவடி அலுவலர், ஆசிரியர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த விஏஓ ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடம் விளக்கி வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள். தற்போது, கல்லூரிகளில் மட்டுமே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படும். மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுதவிர திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் மால்களிலும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படும். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதுவரை ஆன்லைன் மூலம் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கோரி 466 பேரும், வாகன பிரசாரம் நடத்த கோரி 154 பேரும், ஊர்வலம் நடத்தக் கோரி 74 பேரும், தேர்தல் அலுவலகம் திறக்க கோரி 14 பேரும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படும் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன். கூட்டத்துக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற ேதர்தலில் 240 கம்பெனிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 70 முதல் 100 வீரர்கள் வரை இருப்பார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 140 கம்பெனியை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ கான்பரன்சிங்

15ம் தேதி சென்னை வந்து அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை  நடத்த உள்ளேன். தொடர்ந்து 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்  வாரியாக தேர்தலுக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  ஆய்வு செய்ய உள்ளேன் என்று ராஜேஷ் லக்கானி கூறினார்.

அரசு பள்ளி, கல்லூரி விழா:கட்சியினரை அழைக்க தடை



      தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.எனவே, அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடைபெறும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா போன்றவற்றுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்கக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லுாரிகளில், பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி முதல்வரே, பட்டங்களை வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு விலக்கு:சட்டசபை தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது

TAMILNADU OPEN UNIVERSITY B.Ed Admission Counselling Date and Time of Tamil and English Medium cut-off marks called for counselling published

Tuesday, 8 March 2016

SLAS 2015/2016 - 8 TH STD - ALL DISTRICT RESULTS

SLAS 2015/2016- 5 TH STD - ALL DISTRICT RESULTS

SLAS 2015/2016 - 3RD STD - ALL DISTRICT RESULTS

டி.என்.பி.எஸ்.சி., குளறுபடி; பாதிக்கப்பட்டோர் கண்ணீர்


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2014ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றோருக்கு, 2015 டிசம்பரில் நேர்காணல் நடந்தது.  இதில், 28 பேருக்கு சிவகங்கை வருவாய் துறையில், டைப்பிஸ்ட் பணியிடம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 20 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கேட்டு பணி நியமனம் வழங்குவதாக கூறி, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். மார்ச், 4ல் தேர்தல் தேதி அறிவித்ததால், அன்றைய தினம் அவசர அவசரமாக, 20 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கினர்.

ராமநாதபுரம், மதுரை, நாகர்கோவில், துாத்துக்குடி பகுதிகளை சேர்ந்த, எட்டு பேருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. நியமனம் செய்யப்பட்ட, 20 பேரும் நேற்று பணியில் சேர்ந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர் நேற்று, கலெக்டர் மலர்விழியிடம் புகார் தெரிவித்தனர். அவரோ, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. டி.என்.பி.எஸ்.சி., தலைவரை சந்திக்குமாறு தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டோர் கண்ணீருடன் சென்றனர்.

சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கேட்டதற்கு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், 32 காலி பணியிட பட்டியல் கொடுத்தனர். அதனால் அங்கு கேட்டு கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பினர். இங்கு வந்தால் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் பணியில் சேர்ந்தாலும் சீனியாரிட்டி பாதிக்கப்படும். எங்கள் வாழ்க்கையே வீணாகி விட்டதுபாரதிராஜா, ராமநாதபுரம்

ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்


தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறது.

அவர்கள், ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகின்றனரா, முழு நேரமும் பள்ளியில் இருக்கின்றனரா என்பதை கண்காணித்து வருகிறது. அந்த குழு ஆய்வு குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில், அதிகாரிகள் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர் புகார் வந்த பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளில் மட்டுமே ஆய்வு நடத்துகிறோம். ஆசிரியர்களின் வருகை, நடவடிக்கைகளை கண்காணிக்கிறோம். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தேர்தல் தொடர்பான ஆய்வு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!
மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.


WD
எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.


WD
அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன

பள்ளிக்கல்வி - 125 BT/AEEO TO HIGH SCHOOL HM - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஆணை வழங்கி இயக்குனர் உத்தரவு - பதவி உயர்வு பெற்றோர் பட்டியல் வெளியீடு

Monday, 7 March 2016

TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE - MAY 2016

TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE - MAY 2016

CBSE (or) State Board - Which is Best?



       எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.

        நண்பர்களிடம், உறவினர்களிடம் "உங்கள் குழந்தை என்ன படிக்கிறாள்/ன்" என்று கேட்டால் அவர்களின் பதில்..
"First standard CBSE SYLLABUS" என்று syllabusஐயும் சேர்த்து அழுத்தி சொல்வார்கள். இதில் அவர்களுக்கு பெருமை.
ஆனால் cbse syllabusல், குழந்தைகளுக்கு தரும் burdenஐ பற்றி யோசித்துள்ளீர்களா????
CBSE SYLLABUSல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வு எழுத பயந்துகொண்டு அவன் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியுற்றால்தான் தற்கொலை செய்து கொள்வார்கள். இப்பொவெல்லாம் தேர்வு எழுத பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் மாணவர்கள்.
ஏன் CBSE?? என்று கேட்டால்..
குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் இங்கு பெற்றோர்களின் பதிலாக இருக்கும். குழந்தைகளின் நிகழ்காலத்தை தொலைத்துதான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமா??
இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.. பெருமைக்காக cbseல் குழந்தைகளை சேர்த்து விட வேண்டியது. பிறகு பள்ளியில் கொடுக்கும் ஹோம்-வொர்க்கையும் ப்ராஜக்ட்-வொர்க்கையும் இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் ப்ராஜக்ட் எதுவுமே குழந்தைகள் செய்வது போல் இருக்காது. பெற்றோர்கள்தான் விடிய விடிய உட்கார்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அதை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இப்படி ப்ராஜக்ட் கொடுக்கறாங்கன்னு பெருமை கலந்த சளிப்புடன் பதிவு வேறு இடுவார்கள். அந்த பதிவிலும் கூட CBSE SYLLABUS என்ற குறிப்பு கட்டாயம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்(cbse அல்ல) 95.9% மாணவியரும், 90.5% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். 
எப்படி சாத்தியம்?!!!
எங்கள் உறவினர் ஒருவரிடம் இதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்.. "இந்த சமச்சீர் வந்தவுடன் கல்விக்கான தகுதியே போயிடுச்சு. இந்த மாதிரி கல்விமுறை இருந்தா இப்படித்தான் எல்லா பயலும் நல்லா மார்க் வாங்குவாய்ங்க. முதல்ல இந்த சிஸ்டத்த மாத்தணும். அதனால்தான் எம்புள்ளைகள CBSEல சேர்த்து விட்டிருக்கேன்" என்றார்.
பெரும்பாலான பெற்றோர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கல்வி என்பது கடினமானதாகத்தான் இருக்க வேண்டும். நிறைய ஹோம்-வொர்க் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது தரமான கல்வி. மிக எளிமையாக, குழந்தைகளின் மனநிலைக்கும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றார் போல் கல்வி இருந்தால் அது தரமற்ற கல்வி.

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக உள்ளது. அதன்படி, 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.