test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 27 February 2016

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)



      பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.

        மாணவர்கள் தேர்வு நெருங்குகின்ற போது புதிதாக வாசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஏற்கனவே வாசித்தவற்றை திரும்ப படித்து திடப்படுத்தி கொள்வது அவசியம்.

துாக்கத்தை தியாகம் செய்தால் மதிப்பெண்கள் குறையுமே தவிர அதிகரிக்காது. ஓரளவு படித்து விட்டு கொஞ்சம் துாங்கினாலும் அதுவரை படித்தவை, நீண்டகால நினைவு பகுதிக்கு சென்று தேர்வு எழுதும் போது விடைத்தாளில் குதித்து வியக்க வைக்கும்.நாம் படித்தவற்றில் செய்முறை தொடர்பானவை கனவின் போதும், சூத்திரங்கள் தொடர்பானவை துாக்கத்தின் போதும்ஆழ்மனதில் ஐக்கியமாகின்றன. மேல் மனம் தடுமாறும் போது ஆழ்மனமே ஆபத்பாந்தவன்.தேர்வின் போது உணவை முறையாக உட்கொள்வது அவசியம். மனித மூளை சுய மூளை என கூறப்படுகிறது. 

இரண்டு சதவீத எடையிருந்த போதும், 20சதவீத உணவை முதலில் உறிஞ்சிக் கொண்டு நம் அவையங்கள் இயங்க உத்தரவுகளை பிறப்பிக்கிறது. சரியாக சாப்பிடா விட்டால் சோர்வு ஏற்படும். மூளை படித்தவற்றை அசை போட முடியாமல் அவதிப்படும். எனவே மாணவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.இளநீர், மோர் போன்றவை உடல் உஷ்ணமாகாமல் காப்பாற்றும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து ெவளியே விட்டால் கவனம் அதிகரிக்கும். தேர்வை நன்றாக எழுதுவது போல, துவங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் காட்சிப்படுத்தி பாருங்கள். பதற்றம் நீங்கும். மன அழுத்தத்துடன் படித்தால் மூளை சுருங்கும். அதன் வேலைகள் பாதிக்கப்படும். 

மகிழ்ச்சியுடன் படித்தால் அனைத்து பாடங்களும் புரியும்.படிக்கும் போது இனிய இசையால் மனத்திற்கு ஒத்தடம் கொடுத்து இளைப்பாறி கொள்ளுங்கள். நல்ல இசை, மூளை முழுவதும் வாணவேடிக்கை நிகழ்த்தி, அத்தனை செல்களையும் உசுப்பிவிடும்.தேர்வு முடிந்த பிறகு அந்த பாடத்தை பற்றி யாரிடமும் விசாரித்து சோர்வடையக் கூடாது. மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து; சிரமப்பட்டு படித்தால்பாறாங்கல்.

தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை



         பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், தேர்வறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

        தலைமையாசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களாகவும், ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களை,சரியான சாலை வசதியில்லாத தொலைதுார மையங்களில் நியமிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால்,தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்னரும்,ஆசிரியர்கள் அப்பணியிலிருந்து பின் வாங்குகின்றனர். இந்நிலையை தடுக்கும் வகையில்,குலுக்கல் முறையில் தேர்வறை கண்காணிப்பாளர்களை தேர்வு செய்யும் முறை, கடந்தாண்டு பின்பற்றப்பட்டது.

          பள்ளி நிர்வாகத்தினரே,ஆசிரியர்களை தேர்வு செய்து,அவர்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதி,மாவட்ட கல்வித்துறையில் சமர்ப்பிக்கின்றனர். மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் நடக்கும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில்,குலுக்கல் முறையில்,ஒவ்வொரு ஆசிரியரும் தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த முறை,பொது தேர்வறையில் நாற்காலி வசதி கிடையாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால்,நீண்ட நேரம் நிற்க முடியாத, உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் பெயர்களை, குலுக்கல்பட்டியலில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுளது.

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,'ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது.

அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன்ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசுகடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. 

அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும்.அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் 2016 நவ., 15ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஐந்தாண்டு நிறைவடைகிறது. இதனால், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: இன்னும் 9 மாதங்களில் அரசு அறிவித்த 5 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின்பணி கேள்விக்குறியாக உள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும், என்றார்.

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதன்படி,தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில் (கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்கபள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது.

 தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை. மொத்த காலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்கு வாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது,” என்றார்.

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு


ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணி அனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது. 
எனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது. 

நேர்முகத் தேர்வு மூலம், ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர், லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பணத்தை கொடுத்த தேர்வர்கள் பலரும், தங்கள் பணம் என்ன ஆகும் என தெரியாமல் புலம்பத் துவங்கியுள்ளனர்

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம். தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?


பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.

குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போது ரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.

மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.

தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Thursday, 25 February 2016

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு TAMILAGAASIRIYAR– TIPS 1

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு TAMILAGAASIRIYAR– TIPS 1



பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.





பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

DSE - PAY ORDER FOR RMSA POSTS - 3550 BT POSTS / 710 LAB ASSISTANT / 710 JUNIOR ASSISTANTS ORDER CLICK HERE...

பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

DSE - 4393 LAB ASSISTANTS / 1764 JUNIOR ASSISTANTS 3 MONTHS PAY ORDER FROM 19.02.2016 ORDER CLICK HERE... 

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்


பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது. 

டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது. தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது.

இதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது. இதில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி ஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர். சேசுராஜாபயாஸ் கூறியதாவது: கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.

Wednesday, 24 February 2016

NMMS EXAM Instructions

NMMS EXAM Instructions

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை



CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான படிவங்கள் வெளீயீடு

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான படிவங்கள் வெளீயீடு

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை, இறந்த, பணி ஓய்வு பெற்ற, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடித்தல் சார்பான அரசாணை நாள்

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

Monday, 22 February 2016

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேதி முதல் 25ம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று, அரசு தேவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும், மொழிப் பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்)பாடத்தில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம் மற்றும் ஏற்கனவே உரிய நேரத்தில் மேல்நிலைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இதுவரையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளாத தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்




       திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

          திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன.தொடர்ந்து, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 11, 12, 15, 16-ம் தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நேர்க்காணல் நிர்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் மீண்டும் நேர்க்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு வரும் 24, 25-ம் தேதிகளிலும், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 26-ம் தேதியும் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறும்.எனவே, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து நேர்க்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த நேர்க்காணலில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு


சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?


டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில், அதிநவீன வசதிகளுடன், 'எய்ம்ஸ்' மருத்துவமனை செயல்படுகிறது. 'இதன் கிளை, தமிழகத்திலும் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 200 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தருமாறு, தமிழக அரசிடம் கோரியது. இதன்படி, மதுரை -- தோப்பூர்; ஈரோடு -- பெருந்துறை; காஞ்சிபுரம் -- - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு, 2015 ஏப்., மாதம், ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது. அதில், ஈரோடு - பெருந்துறை; மதுரை - தோப்பூர் இடங்கள், 'எய்ம்ஸ்' கிளை அமைக்க ஏற்றது என, அக்குழு தெரிவித்தது.
 மத்தியக்குழு ஆய்வு நடத்தி, 10 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை அமையவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுரை - தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை அமைவது உறுதி செய்யப்பட்டாலும், இறுதி அறிவிப்பு வெளியாகிவில்லை. மேலும் சில மாநிலங்களிலும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளைகள் அமைக்க இடம் தேர்வு பட்டுள்ளது. அவற்றையும் சேர்த்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்' என்றார்.

தலைநகர் டில்லியில் தண்ணீருக்கு தட்டுப்பாடு:பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு


இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய, 'ஜாட்' சமூகத்தினர், டில்லிக்கு செல்லும் குடிநீர் கால்வாயின் மதகுகளை அடைத்ததால், ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்கள் சிலவற்றுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தின், அக்பர்புர் - பரோலா பாயின்ட் பகுதியில் உள்ள முனாக் கால்வாயில் இருந்து தான், தலைநகர் டில்லிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் வினியோகிக்கப்படுகிறது. 

இந்நிலையில், இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய ஜாட் சமூகத்தினர், முனாக் கால்வாயை ஆக்கிரமித்தனர்; அங்குள்ள மதகுகளையும் அடைத்தனர். முனாக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள, பல்வேறு கருவிகளை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். 

இதனால், டில்லிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. தண்ணீர் வராததால், டில்லியில் உள்ள, ஏழு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 'டில்லியில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது, 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ராணுவ வளாகங்கள், தீயணைப்பு துறையைத் தவிர மற்றவர்களுக்கு, குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கும். அதனால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி 
தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வலியுறுத்தினார். முனாக் கால்வாய் பகுதி பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப, ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

'டில்லி குடிநீர் பிரச்னையில், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், டில்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது; இது, இன்று விசாரணைக்கு வருகிறது.குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், டில்லியில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதற்கு முன், இப்படி ஒரு குடிநீர் தட்டுப்பாட்டை டில்லி மக்கள் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. பிரச்னையை சமாளிக்கும் வகையில், டில்லியில் உள்ள பள்ளிகளுக்கும், குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டில்லியில் நடந்த, தேசிய அவசரநிலை நிர்வாகக் குழு கூட்டத்தில், டில்லிக்கு தண்ணீர் வினியோகம் சீராவதை உறுதி செய்யும்படி, ஹரியானாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லிக்கு தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஹரியானா அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, டில்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஜாட் சமூகத்தினர், போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், மதகுகளை சீர் செய்து, தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் சப்ளை செய்வதற்கு, 24 மணி நேரத்துக்கு மேலாகும். அதனால், இன்னும் இரண்டு நாட்களுக்கு, டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பறந்தது விமான கட்டணம்:நெடுஞ்சாலைகளில், போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், அண்டை மாநிலங்களுக்கான போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஸ் உள்ளிட்ட சாலை வழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சண்டிகாரில் இருந்து டில்லி செல்வதற்கான விமானக் கட்டணம், அதிகபட்சமாக, 4,000 ரூபாயாக இருக்கும். ஆனால், தற்போது, 60 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

போராட்டம் வாபஸ்?
தங்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், கல்வி - வேலைவாய்ப்பில் 
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், ஜாட் சமூகத்தினர், ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். 
பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர் 
காயமடைந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, பிவானி மாவட்டத்தில், ஒரு ஏ.டி.எம்., மையத்துக்கும், கூட்டுறவு வங்கிக்கும் தீ வைக்கப்பட்டது. சோனிபட் மாவட்டத்தில், இரண்டு போலீஸ் கண்காணிப்பு அலுவலகங்கள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் காரணமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜாட் சமூக பிரதிநிதிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று பேச்சு நடத்தினார். அப்போது, தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், ஜாட் சமூகத்தினர் அனைவரும் போராட்டத்தை கைவிடும்படியும், அந்த சமூக தலைவர் ஜெய்பால் சிங் தெரிவித்தார். 

ராணுவம் குவிப்பு:போராட்டம் வாபஸ் பெறுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாவதற்கு தாமதமானதால், மேலும் பல மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சமூகத்தினரும், போராட்டத்தில் இறங்கினர். இதனால், உ.பி.,யிலும், பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. 
ஹரியானாவில் நிலைமையை கட்டுப்படுத்த, மேலும், 1,700 துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே, 3,300 வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கத்தி பாணியில்...சமீபத்தில் வந்த, கத்தி என்ற தமிழ் படத்தில், ஒரு கிராமத்தின் கோரிக்கையை வலியுறுத்த, சென்னைக்கு குடிநீர் வரும் குழாய்களுக்கும் அமர்ந்து, மூத்த குடிமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதனால், சென்னை மக்கள், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவர். அதன்பின், அந்த கிராமத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படுவது போல், அந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.தற்போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, ஜாட் சமூகத்தினர், அதே பாணியில், தங்களுடைய கோரிக்கையை உணர்த்தும் வகையில், டில்லிக்கு தண்ணீர் செல்லும் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர்.

Saturday, 20 February 2016

தி இந்து: தலையங்கம்::புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின்
சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

- ஆர். இளங்கோவன், செயல்தலைவர்,

(தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) டிஆர்இயு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயருகிறது


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது.கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண். 6.73 சதவீதமாகஉள்ளது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்து அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசுஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

NATIONWIDE INTENSIFIED PULSE POLIO CAMPAIGN ON 21.02.2016

NATIONWIDE INTENSIFIED PULSE POLIO CAMPAIGN ON 21.02.2016


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு, வரும் ஏப்.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதற்காக தனித்தேர்வர்கள், பிப்.29-ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சிறப்பு மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

கட்டண விவரம்: தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூ.50-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச் செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மகள் திருமணத்திற்கு பள்ளிக்கு 2 நாள் விடுமுறை : ஹெச்.எம் உள்பட ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்?


ஜலகண்டாபுரம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக  பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை உள்பட அனைத்து ஆசிரியர்களும்  கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.  சேலம் மாவட்டம்  ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. 

இதில் குப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச்  சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை  ஆசிரியையாக தமிழ்ச்செல்வி என்பவரும், 9 ஆசிரியர்களும் பணியாற்றி  வருகின்றனர்.  தலைமையாசிரியை தமிழ்செல்வியின் மகள் திருமணம் நேற்று  முன்தினம் சென்னையில் நடந்தது. இந்நிலையில் நேற்று முன் தினமும், நேற்றும்  என 2 நாட்கள் பள்ளிக்கு திடீரென விடுமுறை விடப்பட்டது. மகள்  திருமணத்தையொட்டி, உள்ளூர் பண்டிகை எனக் காரணம் கூறி, தலைமை ஆசிரியை 2  நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டதாக கூறப்படுகிறது. 

முழு ஆண்டுத்தேர்வு  நடைபெற உள்ள நிலையில், தலைமை ஆசிரியை தனது தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக,  பள்ளிக்கு விடுமுறை அறிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்செல்வி  கூறுகையில், ‘‘குப்பம்பட்டியில் முனியப்பன் கோயில் பண்டிகை நடந்ததால்,  பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. வேறு காரணம் இல்லை,’’ என்றார். இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ‘‘குப்பம்பட்டி  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக எந்த கோயில்  பண்டிகையும் நடக்கவில்லை. தலைமை ஆசிரியர் கூறுவது போல், முனியப்பன்  கோயிலிலும் பண்டிகை நடக்கவில்லை. தனது மகளின் திருமணத்தில், ஆசிரியர்கள்  அனைவரும் கலந்து கொள்வதற்காக, பள்ளி கல்விக்குழுவினருடன் சேர்ந்து பொய்யான  தீர்மானத்தை நிறைவேற்றி, நடக்காத பண்டிகைக்கு விடுமுறை விட்டுள்ளார்.

 கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர்  மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இந்நிலையில், இந்த புகார் குறித்து நங்கவள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் ெசங்கோட்டுவேலு விசாரணையை துவக்கி உள்ளார். அவர் கூறுகையில்,  ‘‘குப்பம்பட்டி பகுதியில் புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் உள்ளூர் கோயிலில்  திருவிழா நடைபெற உள்ளதாக பள்ளி கல்விக்குழு தலைவர் கிருஷ்ணசாமி, அனைவரின்  ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் பள்ளிக்கு விடுமுறை  விடப்பட்டது. தற்போது புகார் எழுந்துள்ள நிலையில், இது  தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல்  செய்யப்படும். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். 

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று பள்ளி வழக்கம் போல்  திறக்கப்பட்டது. இதனிடையே சுற்று வட்டாரத்தில் எங்குமே பண்டிகை  நடக்காததால், தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை  என்றே தெரிகிறது. ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைத்திருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணையை முடுக்கி  விட்டுள்ளனர். பள்ளியின் ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை  நடந்து வருகிறது. இதன் முடிவில் ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம்  செய்யப்படலாம் என தெரிகிறது. இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
  

Tuesday, 16 February 2016

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு.


பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.

NMMS EXAM HALL TICKET - 2016 download

NMMS EXAM HALL TICKET - 2016 download

NMMS EXAM HALL TICKET


NMMS EXAM NOMINAL ROLL

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

பள்ளிக்கல்வி - 16.02.2016 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது - பள்ளிகள் தடையில்லாமல் செயல்படுதல் - விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

DSE - PGT STRIKE DETAILS CALLED REG PROC CLICK HERE...

2016-17ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.2 லட்சம் கோடி


தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வரும் நிதியாண்டுக்கான வரவு, செலவு கணக்கு, கடன்தொகை  பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,
2016-17ம் நிதியாண்டில், அரசின் வருவாய் ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
2016-17ம் நிதியாண்டில், அரசின் செலவு 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் தமிழக அரசிகுக்கு நிதிப் பற்றாக்குறை 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிப்பு.
2016-17ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடியாக உள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்...உடனுக்குடன்


தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் துவங்கியது. முதல்வர் ஜெயலலிதாவின் புகழாரத்துடன் நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரையைத் துவக்கினார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,  

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக நிதிநிலை அறிக்கையில், 1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி ஒரத்தநாடு, நெல்லையில் தொடக்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு 24, 820 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கச்சத் தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 2,051 மீனவர்கள் தமிழக அரசின் முயற்சியின் காரணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு தெரிவிக்கிறது.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேளாண் துறைக்கு 6,938 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித் துறைக்கு 18,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழை, விவசாயிகளுக்கு 28 லட்சம் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

பேரிடர் நிவாரணம்

மழை, வௌள பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை

55 புதிய தாலுக்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காவல்துறையில் 1,038 உதவி ஆய்வாளர்கள் நியமனம்

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் அறிவிப்பு

அத்திக்கடவு -  அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும்.

திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.

காவல்துறையில் 1,038 உதவி ஆய்வாளர்கள் நியமனம்

தமிழகக் காவல்துறைக்கு ரூ.6,099 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

தமிழக அரசு 60,610 கோடி ரூபாய் இடைக்கால நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் 8.01 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரிய பணியின் காரணமாக தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது.

ஜெயலலிதா எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.

ஏராளமான சமூக நலத் திட்டங்கள் நிறைவேறியுள்ளன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது

Monday, 15 February 2016

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்


தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.சட்டசபை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசுஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பதி.மு.க.வும், தே.மு.தி.க.வும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும்.


அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டை பொருத்தே அமையும்.எனவே நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'


பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.சென்னை டிஸ்லெக்சியா சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை- தெற்கு சார்பில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சென்னை டிஸ்லெக்சியா சங்கத்தலைவர் டி.சந்திரசேகர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள்தான் கண்டறிய வேண்டும். மற்ற குழந்தைகள் போன்று சாதாரணமாகப் படிக்க வைக்க, கூடுதலாக சிறுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்தக் குறைபாடு குறித்து பொதுமக்களிடம் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட உலக பிரபலங்கள் பலரும் இந்தக் குறைபாடு உடையவர்கள்தான். இவர்கள் கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர்.

மற்ற குழந்தைகளுடன் சாதாரண போட்டிகளில் இவர்கள் பங்கேற்க முடிவதில்லை. எனவே இம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சென்னை டிஸ்லெக்சியா சங்கம் ஒருவார நிகழ்ச்சியை நடத்துகிறது.ஓவியம், கோலம், நெருப்பில்லா சமையல், பயனற்ற பொருட்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரித்தல், இசைமற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது.


அத்துடன்வரும் கல்வியாண்டு முதல் இம்மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்விப் பயிற்சிகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக, சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் 3 பிரிவாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சென்னை-தெற்கு உறுப்பினர் மக்தூம் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை

தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்



எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் ‘கல்வி நிதி’; பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார்

தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது.


பரிசுகளை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார். மாணவர் பரிசு திட்டம்கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழி காட்டி வரும் ‘தினத்தந்தி’ மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வந்தது.

2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி’ கல்வி நிதி திட்டத்தைஅறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து மாவட்டத்திற்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தியின் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 30 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

சென்னை மாவட்டம்
1.ப.காயத்ரி, ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்.
2.டி.பிரியதர்ஷினி, சில்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளி,மயிலாப்பூர்.
3.ஜி.சுவேதா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.
4.பி.ஜனனி, ஜான் காபிரியேல் உயர்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.
5.பி.சரஸ்வதி, நாதன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெற்குன்றம்.
6.எஸ்.ராகுல், திரு.வி.க.மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.
7.இ.பூவரசன், ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.
8.இ.ஜெயதர்ஷினி, புனித வின்சென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அமைந்தகரை.
9.பி.ராஜதுரை, அன்னை வேளாங்கண்ணி உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.
10.ஆர்.சந்தியா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.

திருவள்ளூர் மாவட்டம்
1.ப.மோகனப்பிரியா, அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, கடம்பத்தூர்.
2.ஏ.சந்திரலேகா, சுதந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
3.ஆர்.கார்த்திகா, டி.ஆர்.பி.சி.சி.சி.மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
4.பி.தாமோதரன், அரசினர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர்.
5.எஸ்.உஸ்னா, இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி.
6.வி.எம்.விவேதா, அரசு உயர்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை.
7.ஜி.சாரத பிரித்தா, டி.ஆர்.பி.சி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
8.எஸ்.கஜீதா பர்வீன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
9.ஜி.பவித்ரா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, போரூர்.
10.எம்.ராகுல், வி.எம்.எச். மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.ஜி.புரம்.


காஞ்சீபுரம் மாவட்டம்
1.ச.ஜெகதீசன், பாரதிதாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம் மாவட்டம்.
2.ஜி.கே.இளமதி, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மறைமலைநகர்.
3.எஸ்.யஷ்வந்த் குமார், செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
4.கே.தமீம் நிஷா, புனித மாற்கு உயர்நிலைப்பள்ளி, மேற்கு வேளச்சேரி.
5.எஸ்.ஆனந்த், அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குப்பட்டு.
6.டி.சாந்தகுமார், அரசு உயர்நிலைப்பள்ளி, கருநீலம்.
7.எம்.தெய்வானை, அரசு மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.
8.ஆர்.தேவதர்ஷினி, எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
9.வி.ரஞ்சனி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
10.கே.ஜின்சிவர்கிஸ், கிறிஸ்து கிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்.
பள்ளிக்கல்வி இயக்குனர்‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் நடைபெறுகிறது.விழாவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.‘தினத்தந்தி’ மேலாளர் து.ராக்கப்பன் வரவேற்று பேசுகிறார்.

Saturday, 13 February 2016

கோவை,பாரதியார் பல்கலையில், தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

கோவை, பாரதியார் பல்கலையில், தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற துறையில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், இளநிலையிலும் அதே துறை பிரிவில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில், ஆசிரியர் கல்வி படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

மேலும் விவரங்களுக்கு: www.b-u.ac.in

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான விண்ணப்பங்களை பெற்றது முதல், பெயர் பட்டியல் திருத்தம் வரை, அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. 

தற்போது, மாணவர்களுக்கு தேவையான ஹால்டிக்கெட், வருகை பதிவேடு, தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம் ஆகியவற்றை, தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள், தங்களது யூசர் ஐ.டி., வழியாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பிப்ரவரி, 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, மையம் வாரியாக தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், விடைத்தாள் முகப்பு சீட்டு ஆகியவற்றை டவுண்லோடு செய்யவும், பிப்ரவரி 17 முதல், 20 வரை வருகை பதிவேடும், பிப்ரவரி, 20 முதல், 26ம் தேதி வரை, மாணவ, மாணவியரின் ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2015-2016-ஆம் கல்வியாண்டுக்கான -EMIS-1,2,3 -வகுப்புகளுக்கு பதிவேற்றம் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள்

Friday, 12 February 2016

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்



      கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர்.

       இவர்கள் முறையே, 4,500 ரூபாய், 3,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.ஊதியத்தை உயர்த்த வேண்டும்; கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனக் கோரி, திட்ட ஆசிரியர்கள், நேற்று, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்களுடன், தொழிலாளர் நலத்துறை இணைஆணையர், பேசினார். அவர் எழுத்துப்பூர்வமாக எந்த உறுதியும் அளிக்க மறுத்ததால், திட்ட ஆசிரியர்கள் காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கினர்.இது குறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் அழகுஜோதி கூறுகையில், ''தொழிலாளர் நலன் காக்கும் துறையில் பணியாற்றும் நாங்கள், குழந்தை தொழிலாளர்களை விட மிக மோசமான நிலையில் உள்ளோம். நல்லசம்பளத்தில் மாற்றுப்பணி என்பதே எங்கள் கோரிக்கை. கோரிக்கையை அரசு ஏற்கும் வரை,இரவு, பகலாக அலுவலகத்திலேயே காத்திருப்போம்;எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,'' என்றார். 

5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது



      கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுநடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா,அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.

       இந்த விருது அவர்கள் சமர்ப்பித்த 'சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்'என்ற ஆய்வு கட்டுரைக்காக கிடைத்தது.மேலும், இந்த கட்டுரை மைசூருவில் 20 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டிலும்ஏற்றுக் கொள்ளப்பட்டது. விருது பெற்ற மாணவர்கள், விழிகாட்டுதல் ஆசிரியர்கள் தமயந்தி, பாலகிருஷ்ணனை தாளாளர் மனோகரன், முதல்வர் பரிமளா பாராட்டினர்.

மாணவர்கள் கூறியதாவது:கடல் சங்குகளை வெப்பப்படுத்தி கிடைக்கும் கால்யசியத்தை உரமாக பயன்படுத்தினால், தாவரங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இது, இயற்கை உரம்; சுற்றுச்சூழலை பாதிக்காது. இதை பயன்படுத்திய தாவரங்களில் கிடைக்கும் காய், கனி, விதைகளிலும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும்,என்றனர். 

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு



       தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


           இந்த கமிட்டியினரால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படையில், கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, 2015 - 16 வரை, மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வி ஆண்டில், கட்டணநிர்ணயம் முடிவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண விவரம், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இதன்படி, அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான பட்டியலில், கடந்த ஆண்டை விட, 20 - 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையின் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அகஇ - உயர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் பட்டியல்











8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு


தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவுதொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

Thursday, 11 February 2016

தொடக்கக்கல்வி - 15.02.16 முதல் 15.03.16 வரை BANGALORE ENGLISH TRAINING ஆசிரியர்களை பணி விடிவிப்பு செய்ய உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு



           ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்தபோராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., ௧௩ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.

           ஆனால், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், ஆசிரியர்களை சமாதானப்படுத்த, நேற்று முன்தினம் அரசு தரப்பு பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், போராட்டம் நடத்தும், 'ஜாக்டோ' சங்கம்- புதிதாக உருவாகி உள்ள, 'ஜாக்டா' ஆசிரியர் சங்கம் - அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட, 'ஜாக்கடோ' ஆசிரியர் சங்கம் போன்றவை பங்கேற்றன.அப்போது, சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் சமாதான பதில் அளித்துள்ளனர். இறுதியில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ''அனைத்து கோரிக்கைகளும் செயலர் மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, முதல்வரின் அனுமதியுடன், பிப்.,16 ல், சட்டசபையில், பட்ஜெட் உரையின் போது அறிவிப்பாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

மேலும், பேச்சின் போது, 'பிப்., 1 ல் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பாகக் கருதி, சம்பள பிடித்தமின்றி, மாத ஊதியம் தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு, அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை



13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு


தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக இருந்தனர்.

இவர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பில் இழுபறி நீடித்தது. ஒரே நாளில் அவர்கள் அனைவருக்கும் முதல்வர்களாக பதவி உயர்வு அளித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.

அவர்கள் விவரம்: 
புகழேந்தி (மதுரை), சாந்தி (தேனி), ரஞ்சனி (ராமநாதபுரம்), கோல்டா கிளாரா ராஜாத்தி (நெல்லை), செந்தில் (துாத்துக்குடி), பிரபா தேவன் (கன்னியாகுமரி), வின்சென்ட் டிபால் (திருச்சி), செல்லத்துரை (புதுக்கோட்டை), பெரியசாமி (கரூர்), மணி (தர்மபுரி), விஜயகுமார் (சேலம்), அன்பழகன் (கடலுார்), மணி (சென்னை மாநில கல்வியியல் பயிற்சி 
நிறுவன துணை இயக்குனர்).

அகஇ - 2015-16ம் ஆண்டிற்கு தலைமையாசிரியர்களுக்கு "LEADERSHIP QUALITIES" என்ற தலைப்பில் பயிற்சியினை மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது

SSA - HM TRG "LEADERSHIP QUALITIES" AT DISTRICT LEVEL - PROC CLICK HERE... 

நிதித்துறை - அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற தகுதியானவர்கள் பட்டியலை 15.02.2016க்குள் அனுப்ப அரசு உத்தரவு

Monday, 8 February 2016

வருமானவரி கட்டுவோர் கவனத்திற்க்கு FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது

FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில்,

FEB -16 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3%
பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

Ø உதாரணம்: கட்டப்படவேண்டிய தொகை = ரூ.12280 சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட வேண்டியத் தொகை 12180*0.97086 = ரூ.11825 3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 355 மொத்தம் = ரூ.12280

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (Inspire Award) அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவு



ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு

 ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை

ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை  அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட  5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்  

8 வகுப்பு மாணவர்களுக்கு சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்க இயக்குனர் உத்தரவு

8 வகுப்பு மாணவர்களுக்கு சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்க இயக்குனர் உத்தரவு



பள்ளிக்கல்வி - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - அலுவலர்கள் நியமனம் சார்பாக திருத்தம் வெளியீட்டு அரசு ஆணை

பள்ளிக்கல்வி - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - அலுவலர்கள் நியமனம் சார்பாக திருத்தம் வெளியீட்டு அரசு ஆணை



Saturday, 6 February 2016

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16



பயன்  
1. ஒரு நொடியில் துல்லியமாக கணக்கிடப்படும். 
2. ஜனவாி 2015 (அ) பிப்ரவாி 2015 ல் ஈட்டிய விடுப்பு எடுத்தவா்களுக்கும் DA Arrear துல்லியமாக கணக்கிடப்படும். 
3. பொங்கல் போனஸ் உள்ளவா்கள் (ம) இல்லாதவா்களுக்கும் துல்லியமாக கணக்கிடப்படும்.

2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல்...

2015-16 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும் குடியிருப்பின் பெயர் பட்டியல்...

ALAGAPPA UNIVERSITY-ADMISSION NOTIFICATION FOR M.PHIL SUMMER SEQUENTIAL PROGRAMMES)-2016

ALAGAPPA UNIVERSITY-ADMISSION NOTIFICATION FOR M.PHIL SUMMER SEQUENTIAL PROGRAMMES)-2016

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம்தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016 SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016

விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள், சொல் வேட்டையில்சாதிப்பார்களா...?



மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்..?கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்று வரும் ஞாயிறு ( 07- 02- 2016) அன்று மாலை7:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.அனைவரும்காணுங்கள்...
மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துங்கள்.... 

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்


கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

Friday, 5 February 2016

பிளஸ்2 பொதுத்தேர்வு: பிப்.11 முதல் விடைத்தாளுடன் முகப்புத் தாளை இணைக்க அறிவுறுத்தல்


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத் தாளை இம்மாதம் 11ஆம் தேதி முதல் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இணைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 8,510 மாணவ,மாணவியர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 66 மேல்நிலைப் பள்ளிகளில் 7,902 மாணவ, மாணவியர், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 60 மேல்நிலைப் பள்ளிகளில்   7,728 மாணவ,மாணவியர் என மொத்தம் 24,140 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், கல்வி மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மொழிப்பாடங்களுக்கான முகப்புத்தாள் கட்டுகள் வெள்ளிக்கிழமை (பிப்.5) முதல் அனுப்பப்பட உள்ளன. இவற்றை முதன்மை கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களிடம் இம்மாதம் 8 முதல் 11ஆம் தேதிக்குள் ஒப்ப டைக்க வேண்டும்.

இம்மாதம் 11ஆம் தேதி முதல் முகப்புத் தாளை முதன்மை விடைத்தாளுடன் இணைக்கும் பணியில் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

பாடங்கள் முடிக்கவில்லை: தேர்வு தேதிகள் அறிவிப்பு.


மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை கற்பிக்க போதிய அவகாசம் இன்மையால், அவசரகதியில் பாடங்களை எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக, அரையாண்டு தேர்வுகள், இரண்டாம் பருவத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, கடந்த மாதம் இறுதியில் நடத்தி முடிக்கப்பட்டது.

அதன் பின்பே, மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் துவங்க, அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம், பொங்கல் விடுமுறை, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், கணக்கெடுப்பு பணி போன்றவற்றால் வகுப்புகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் தற்போது தான் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஏப்.,5 முதல் மூன்றாம் பருவ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 25ம் தேதிக்குள் அறிவியல் பாடத்திற்கான செய் முறை தேர்வுகள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதும், பெரும்பாலான ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விடுமுறை நாட்கள் தவிர்த்து பாடங்கள் எடுக்க குறைந்த கால அவகாசமே இருப்பதால், பாடங்களை முழுமையாக பயிற்றுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவசரகதியில் பாடங்களை எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 'ஆல்-பாஸ்' திட்டத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிடுவர் என்றாலும், மதிப்பீடு செய்யும் முறையில் இம்முறை உண்மை தன்மை எதிர்பார்க்க இயலாது என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

அதே போல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 11 முதல், 31ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடக்கவுள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கேள்வித்தாள், ஏப்., 1ல் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 கல்வியாண்டு மாணவர்கள் விவரம் EMlS-ல் பதிவு செய்யப்பட வேண்டும்.

2015-16 கல்வியாண்டு மாணவர்கள் விவரம் EMlS-ல் பதிவு செய்யப்பட வேண்டும்.