test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 29 January 2016

ஜாக்டோ தொடர் மறியல் : ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளைநடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

ஆதார் முகாம் நிறைவு சான்றிதழ்...

ஆதார் முகாம் நிறைவு சான்றிதழ்...

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு


2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. பின் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி பேசியதாவது, குரூப் 4 தேர்வுகளின் மூலம் 4,931 பேரும், துணை கலெக்டர்களை தேர்ந்தெடுப்பதற்காக குரூப் 1 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகள், இந்தாண்டு நடைபெற உள்ளதாக அருள்மொழி கூறினார்.



ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை


'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.

இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளித் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ஒரு மாவட்டத்தில் எந்த பாடத்தில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால், தேர்வு திருத்தும் பணிகளில் எதாவது ஒரு பாடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், அந்த பாடத்தின் ஆசிரியர்கள் அதிகம் உள்ள மாவட்டத்திற்கு விடைத்தாளை அனுப்பி, விரைவில் திருத்தும் பணியை முடிக்க முடியும் என்ற திட்டத்துடன் இதன் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார்.

அரசு தேர்வுகள் துறை - மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

Thursday, 28 January 2016

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!


             நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்  ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண் கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

            ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60 சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களை அலையவிடாமல்தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த கர்நாடக மாநிலபொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர் கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளைஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

ஜனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல்


ஜனவரி 30,31,பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் வழக்கமாக வந்து போகும் நாட்கள் அல்ல.

*இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நாள்.
இடைநிலை ஆசிரிய நண்பர்களே கடந்த 22 வருடங்களாக நாம் பெற்று வந்த மத்திய அரசிற்கு இணையான ஊதியம் ஆறாவது ஊதியக் குழு நடைமுறைப் படுத்தப் பட்டதில் பறிக்கப்பட்டுள்ளது.

*மாதம் ரூ 11500 இழப்பை சந்தித்து வருகிறோம்.

*வழக்கமாக நாம் பெற்றிருக்க வேண்டிய ஊதியம் 9300-4200. ஆனால் பெற்றுக் கொண்டிருப்பதோ 5200-2800.

*9300-4200 நமக்கு கொடுக்கப் படாதாதற்கு அரசு சொல்லும் காரணம் நாம் 12 ம் வகுப்பு படிக்க வில்லையாம். கிராமப்புறத்தில் பணி புரிகிறோமாம்.கிராமங்களில் விலைவாசி குறைவாம் அதனால் நமக்கு இந்த சம்பளம் போதுமாம்.

*10 ம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 12 + டிப்ளோமா படித்த நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலை மாற வேண்டாமா? இழந்த ஊதியத்தை பெற்றெடுக்க வேண்டாமா?

பள்ளிக்கும் பள்ளியை விட்டால் வீட்டிற்கும் சென்று கொண்டிருந்தால் நாம் இழந்த ஊதியம் நமக்கு கிடைத்து விடுமா?

உங்களுக்காக மற்றவர்களா போராடுவார்கள். உங்களுக்காக நீங்களே போராட வேண்டாமா?

சிறு குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் பசியையே தீர்த்துக் கொள்கிறது. அவ்வாறிருக்க நமக்காக நாம் போராட வேண்டாமா? 

ஜனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தில் பங்கு பெற்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்போம்.

30 ஆம் தேதி மாவட்டத் தலைவர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில்

31 ஆம் தேதி மாவட்டப் பொருளாளர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில்

பிப்ரவரி 1 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில்

ஒன்றுபடுவோம் போராடுவோம்!

பள்ளிக்கல்வி - அரசு/நிதிஉதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் வெளிநாடு செல்ல பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி பெற்றபின்னரே விடுப்பு அளிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான "அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்" டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுடைய அப்ளிகேஷன் எண்ணைக்கொண்டு உறுதிபடுத்திக்கொள்ளவும்

பள்ளிக்கல்வி - அரசு/நிதிஉதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் வெளிநாடு செல்ல பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி பெற்றபின்னரே விடுப்பு அளிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்


5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர் டி.கனகராஜ் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அரசாணைப் பெற்று, 5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். சிறுபான்மை உரிமைப் பெற்ற பள்ளி நிர்வாகங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மறியல் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பக்தவத்சலம், ஜேக்டோ அமைப்பாளர் பூபாலன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பேசினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டனர்.

தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


ஜாக்டோ போராட்டத்தின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினையும் திரட்டி மறியல் களத்தில் இறக்கிட வேண்டும்.27.01.2016 முதல் 29.01.2016 முடிய நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் உணர்வு தீயினை உருவாக்க வேண்டும்.
ஜனவரி 30,31 சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மறியல் போராட்டமென்பது நமக்கு நாமே எந்த அலுவலகத்தை மறிக்கப் போகிறோம் என்ற நகைச்சுவை உணர்வே மேலிடுகிறது. எப்படியோ ஜாக்டோ மாநில அமைப்பு முடிவு செய்துவிட்டது.திரும்பிப் பார்ப்பது போராட்ட வடிவத்தில் இலக்கணமாக இருக்காது.
தேர்தல் சமயத்தில் எந்த அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பகைத்துக்கொள்ள விரும்பாது. ஜாக்டோ போராட்டம் , ஜாக்டோ ஜியோ போராட்டம் , டெஸ்மா போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்திய போர்க்குண வரலாறு உடையது. இந்த மறியல் போராட்டத்தை பழைய போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அமைப்பிற்கு இந்த 3 நாள்கள் போராட்டத்தை போராட்டமாகவே கருத முடியாது.இந்த போராட்டத்தில் தேசியப் பணியே இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு கோரிக்கைகளுக்காக களம் காணுவதுதான் போர்க்குண உணர்வாகும். இருக்கிற ஆசிரியர்கள் எண்ணிக்கையில் முதல் இரண்டு நாள் சனி ஞாயிறில் பெருந்திரளாக கலந்துகொள்ளுங்கள்.காலையில் கைது மாலையில் விடுதலை சடங்காகவே முடியும். 
பிப்ரவரி 01 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம்தான் உண்மையான மறியல் போராட்டமாகும்.முதல் 2 நாள்கள் போராட்டத்தில் கைதாகி விடுதலையானவர்களும் , போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் காத்திருப்போரும் பிப்ரவரி 01 மறியல் போராட்டத்தில் பள்ளியில் எவரும் இல்லை அனைவரும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்ற நிலையை தமிழக அரசுக்கு உணர்த்துவோம். அரசு ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் எண்ணிக்கை ஜேக்டோ அமைப்பின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தாலும் அவர்களின் பீரிட்ட எழுச்சியின் உணர்வுதான் தமிழக முதலமைச்சருக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ள தலைமைச் செயலாளரையே அழைத்துப்பேச செய்தது என்ற யதார்த்த நிலையை உணர வேண்டும்.
எனவே ஜாக்டோ மறியல் போராட்டத்தில் முழு சக்தியினையும் அரசுக்கு உணர்த்தினால்தான் 7-வது ஊதியக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சத்தில் பதிவு செய்து போர்க்குண வரலாறு படைத்த ஜாக்டோ பெரும்படையே கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்கிற முழு நம்பிகையுடன் விளைவினை ஜாக்டோ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு மறியல் களத்தில் வீறுநடை போட வாருங்கள் என அன்புடன் அழைகிறேன்.பாரதி கண்ட வீரம் செறிந்த பெண் ஆசிரிய சகோதரிகளே 3நாள் மறியல் போராட்டத்திலும் ’இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று தலைமை வகுத்து முன்னணியில் செல்லுங்கள்.
ஜேக்டோ அமைப்பு என்றும் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு இரும்பு கவசமாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இமைகளாக இருந்து கண்ணின் கருவிழியாம் உங்களை பாதுகாப்போம். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரட்டும் தொடரட்டும். வெற்றி நமதே.

Tuesday, 26 January 2016

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2016ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம் 31.12.2008 வரை கோருதல் சார்பான உத்தரவு

DSE - HIGH SCL HM / HR. SEC. SCL HMs TO DEO PROMOTION PANEL DETAILS CALLED UPTO 31.12.2008 REG PROC CLICK HERE...

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விரைவில் அட்டவணை வெளியீடு


2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2-ஏ தொகுதியில் வரக் கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படையினர் கண்காணித்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதன்பிறகு, "2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்று அவர் கூறினார். 

டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு


தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது. இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1 முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

ஆனால் 'நிர்வாக காரணங்களுக்காக இப்பயிற்சி வகுப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Sunday, 24 January 2016

சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு


பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'பிப்., அல்லது மார்ச் மாதத்தில், சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால், சத்துணவு திட்டத்தில் மானியம் மற்றும் சத்துணவு சமையல் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் இவ்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 'மாவட்டம் தோறும் பள்ளிகள் வாரியாக, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் சேகரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONAL VOTERS DAY(NVD PLEDGE)

அதேஇ - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்

CLICK HERE - SSA - WALL PAINTING IN ELEMENTARY SCHOOLS - DIR PROC REG

நேரடி நியமனம் மூலம் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலைபட்டு ஆய்வாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை

நேரடி நியமனம் மூலம் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலைபட்டு ஆய்வாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை





பள்ளிக்கல்வி - எஸ்.எஸ்.ஏ., பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - எஸ்.எஸ்.ஏ., பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.



தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு - ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு.


வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படிவத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதில், ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருப்பின், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என, மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரும் பட்சத்தில், அவை இயக்குனருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்பே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும். போலிச்சான்றிதழ் கொடுத்து பல ஆசிரியர்களும் தலைமறைவாகி வரும் சூழலில், வெளிநாடு செல்ல இயக்குனரின் அனுமதி அவசியம் வேண்டும் என, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்


பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை திரும்ப பெறும் பணியை கல்வித்துறை துவக்கியுள்ளது.

தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியரை திரும்பப் பெற துவங்கியுள்ளனர். இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Friday, 22 January 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா?: இணையதளத்தில் சரிபார்க்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா?: இணையதளத்தில் சரிபார்க்கலாம்

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு:

இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு
அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.


வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

அதேஇ - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்

Wednesday, 20 January 2016

பிளஸ் 2 தேர்வர் பெயர் பட்டியல்; பிழை திருத்த மீண்டும் வாய்ப்பு


பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதில், தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், இப்பட்டியலில் உள்ள விபரமே அச்சிடப்படும் என்பதால், அதில் பிழைகள் ஏதும் இல்லாமல் சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜனவரி, 20ம் தேதி முதல், ஜனவரி, 22ம் தேதி வரை, தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், இப்பெயர் பட்டியலை அன்றைய தினத்தில் டவுன்லோடு செய்து, மாணவர்களின் இன்ஷியல், பெயர், பிறந்ததேதி, பாடத்தொகுதி எண், பாடக்குறியீடு, பயிற்றுமொழி ஆகியவற்றை சரிபார்த்து, அதில் பிழை ஏதும் இருப்பின் திருத்தம் செய்து, ஜனவரி, 22 ம்தேதி மாலை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பின் மாணவர்களின் பெயர்களில் ஏற்படும் பிழைகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அரையாண்டு பொதுத் தேர்வு - ஜனவரி 2016 - விடைக் குறிப்புகள்

அரையாண்டு பொதுத் தேர்வு - ஜனவரி 2016 - விடைக் குறிப்புகள்

DGE - HALF YEARLY - JAN 2016 - TAMIL PAPER - I KEY CLICK HERE...

DGE - HALF YEARLY - JAN 2016 - TAMIL PAPER - II KEY CLICK HERE...

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்


TO GET ANNUAL PAY DRAWN DETAILS FOR IT PURPOSE CLICK HERE...


Enter your details :-

* Employee code (TPF/CPS number)
* Suffix (EDN)
* Date of birth(DD/MM/YYYY)

Get your
* pay slip
* annual salary statement
* pay drawn particulars...

Wednesday, 13 January 2016

தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer)நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016

தொடக்கக்கல்வி - மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தும் ஆணை வழங்காமை - நடவடிக்கை விபரம் கோருதல் சார்ந்த இயக்குனர் செயல்முறைகள்..

புதிய திருத்திய முன்னுரிமை பட்டியல் (REVISED PANEL) கோரி இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 13/01/2016)


பள்ளிக்கல்வி - 01/01/2016 உள்ளவாறு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதிவிக்கு தகுதி வாய்ந்த புதிய திருத்திய  முன்னுரிமை பட்டியல் கோரி இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 13/01/2016)





பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என கல்வித் துறை உத்தரவு


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக, அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை. ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவே இருந்ததால் அங்கு ஆண்டு விழா நடத்தப்படவில்லை.எனவே, நிகழாண்டு தொடக்கப் பள்ளிகளில் 100 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 150 பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000-மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.6,000-மும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

29.10.2015 முதல் 28.10.2016 வரை ஓராண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 2012-13ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 29.10.2015 முதல் 28.10.2016 வரை ஓராண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியீடு


அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சியாளர் வேலை


அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, 329 இளநிலை பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள, 329 இளநிலை பயிற்சியாளர் இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, பிப்., 1க்குள், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

'விண்ணப்பம், தகுதி, தகுதித் தேர்வு குறித்த விவரங்களை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.a

Tuesday, 12 January 2016

ஜல்லிக்கட்டுக்கு தடை; சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மக்கள் ஏமாற்றம்


புதுடில்லி: தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, சேலம், நெல்லை பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர் .

பல்வேறு தரப்பினர் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த வாரத்தில் அனுமதி அளித்தது. இது ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விலங்குகள் நல (பீட்டா ) அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர் .

நீதிபதி பானுமதி விசாரிக்க மறுப்பு : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக பானுமதி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் பானுமதி, மீண்டும் இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை, விசாரித்தால் உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்பு ஏற்படும்; எனவே வேறு அமர்வுக்கு மாற்றுமாறு கேட்டு கொண்டார். இதற்கிணங்க இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது .

வழக்கில் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தி , தமிழக அரசு தரப்பில் ராஜேஸ்வரராவ் சேகர் நாப்டே, விலங்குகள் நல அமைப்பு தரப்பில் அரிமா சுந்தரம், வேணுகோபால் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் . காளை வதை தொடர்பாக புதிய அறிவிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். புதிய அறிவிக்கையில் ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது . 

தடை விதித்த அறிவிக்கையை மீற முடியாது. காளைகள் வதை செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும் பீட்டா அமைப்பினர் தரப்பில் வாதிட்டனர் . இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் . ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை ஆணைக்கும் இடைக்கால தடை விதித்தனர். 

சோகத்தில் மக்கள் :
தடையால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுர பகுதி மக்கள் ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கொண்டு வந்து கொண்டிருந்தனர், பல வீரர்கள் பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கோர்ட் உத்தரவால் இப்பகுதி மக்கள் சோகத்துடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த இடம் களை இழந்தது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு - தகவல் தொகுப்பினை சரி செய்தல் மற்றும் அத்துடன் ஆதார் எண்ணை இணைத்தல் பயிற்சி தேதி அறிவிப்பு.13.01.2016

அகஇ - தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் ஆய்வு - வாசித்தலே எல்லை - பள்ளிகளில் ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு - பள்ளிகள் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் செயல்முறைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை


மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.

இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, 'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, அரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிர, பாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இந்த கேள்விகளுக்கு, வகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்தது; பிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில், இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது.

எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில், நான்கு மதிப்பெண்ணில், ஒரு கேள்வி; ஒரு மதிப்பெண்ணில், ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்கு, மொத்தம், 10 கேள்விகள், புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில், நான்கு மதிப்பெண்ணில், இரண்டு கேள்விகள்; இரண்டு மதிப்பெண்ணில் ஆறு; ஒரு மதிப்பெண்ணில் நான்கு; எட்டு மதிப்பெண்ணில் ஒன்று என, மொத்தம், 32 மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

  'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, 2014ல், மூன்று லட்சம், 2013ல், 2.35லட்சம், 2012ல், 2.01 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
        ஆனால், பல புகார்கள் பொய்யாகவும், பழிவாங்கும் நோக்கிலும் தெரிவிக்கப்படுவதால், அரசு அதிகாரிகள் மீது தேவையில்லாமல் விசாரணை நடத்த வேண்டியது நேரிடுகிறது.

                 எனவே, இனி புகார் அளிப்பவர்கள்,தங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது போன்ற புகார்களை, பிரதமர் மோடி நேரடியாக கண் காணித்து, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, சம்பந்தப்பட்ட துறைச் செயலர்களுடன் ஆய்வு செய்து வருகிறார். தேவையில்லாத புகார்களை குறைக்கும் வகையில், ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 10 January 2016

2016_ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்

2016_ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்

பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம்: 3 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு


தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
1.1.2016ன் அடிப்படையில் தலைமையாசிரியர் பதவிக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இதன்படி 2001- 2002 கல்வியாண்டில் நேரடியாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறைகளில் இருந்து கல்வித்துறைக்கு மாற்றலானவர், தொடக்க கல்வியில் இருந்து பள்ளி கல்விக்கு மாற்றமானவர் என்ற பிரிவில் உள்ள ஆசிரியர்களை பணி மூப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் 2002-2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேரை இப்பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை. 2002 டிசம்பரில் பணி நியமனம் பெற்றவர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தலைமையாசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலில் 2002 ஜூலையில் நியமனம் பெற்றவர்களை விடுவித்து, அதன் பின் டிசம்பரில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பட்டியலில் எவ்வாறு சேர்க்கலாம். காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்களையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கையாக மீண்டும் அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவர்களுக்கு 'பொற்கிழி' தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு


பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு 10 ஆயிரம், 7,000 ரூபாய் பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் இம்மாதம், 27ல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் 28ல், மாவட்டம் தோறும் கலெக்டரின் கூட்ட அரங்கில் நடக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், கூட்ட அரங்கில் வழங்கப்படும். 

நடுவர்களாக ஒன்பது தமிழாசிரியர்கள் இருப்பர். வெற்றி பெற்றவர் முடிவுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அறிவிப்பர். விண்ணப்பிக்க அழைப்பு: இதற்கான பரிசான பொற்கிழி, சான்றிதழ்களை அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார் பிறந்த நாட்களில் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார். போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டம்


வரும் 2016 - 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில் பதில்களை அளிப்பது மூலம் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் குறையும் என வருமான வரித் துறை தெரிவித்தள்ளது.

மேலும் வருமான வரித் துறையில் நடக்கும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவும் என அத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சி சென்னை உள்ளிட்ட 5 மாநகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இணையதள வழியில் தாக்கல் செய்யப்பட்ட 50 லட்சம் வருமான வரி கணக்குகள் இதுவரை மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.

Saturday, 9 January 2016

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்? தனித்தனியே கேட்கப்படும் கேள்வியால் ஆசிரியர்கள் குழப்பம்


        'உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம் கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

        தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில நாள் பாடம் சார்ந்து, பயிற்சி வழங்கப்பட்டு வந்தன. இவை சமீப காலமாக அதிகரித்து, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை என தனித்தனியே ஆண்டுக்கு, 20 நாள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

இதனால், ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலை மாறி, பயிற்சி என்றாலே, பதறியடித்து ஓடும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அனைத்து ஆசிரியர்களிடமும், 'என்ன பயிற்சி வேண்டும்?' என, விபரம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: வழக்கமாக என்ன பயிற்சி வழங்க வேண்டும் என்பதை கல்வித்துறை அலுவலர்களே முடிவு செய்து, பயிற்சிக்குஅழைப்பது வழக்கம். இந்த முறை, அனைத்து ஆசிரியர்களிடமும் என்ன பயிற்சி தேவை என, கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தேவையை கொண்டுள்ளனர் என்பதால், பல்வேறு விதங்களில் படிவங்களை நிரப்பி வருகின்றனர். எப்போது வழங்கப்படுவது? என்ன விதமான பயிற்சி? என எதுவும் குறிப்பிடாமல், படிவங்கள் வழங்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: அடுத்த, 2016-17 ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களின் தேவைகளும் கேட்கப்பட்டுள்ளது. இதில், அதிகப்படியான தேவை உள்ள பயிற்சிகள், மத்திய அரசின் நிதியுதவியுடன் அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

10th SCERT Study Material For Flood Affected Students

10th SCERT Study Material For Flood Affected Students

  • Tamil | SCERT Study Material For Flood Affected Students - Click Here
  • English | SCERT Study Material For Flood Affected Students - Click Here
  • Maths | SCERT Study Material For Flood Affected Students - Tamil Medium
  • Maths | SCERT Study Material For Flood Affected Students - English Medium
  • Science | SCERT Study Material For Flood Affected Students - Tamil Medium
  • Science | SCERT Study Material For Flood Affected Students -English Medium
  • Social Science | SCERT Study Material For Flood Affected Students -Tamil Medium

அதேஇ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2016- செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கான வழிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2016ல் உள்ளவாறு அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர் / முதுகலை மொழி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குனர் / அரசு பள்ளி தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

DSE - HIGH SCL HM / PGT TO HR. SEC SCHOOL HM PROMOTION PANEL AS ON 01.01.2016 PREPARATION REG INSTRUCTIONS CLICK HERE...

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு


அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.

செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு: தேனி மாவட்டத்தில் பிப். 8-இல் தொடக்கம்


தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் பிப். 8-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறியதாவது: மாவட்டத்தில் வரும் 2016, மார்ச் 4-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை அரசு மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 12,685 மாணவ, மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 2,167 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 14,852 பேர் எழுதுகின்றனர்.

பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கேட்டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வு வரும் பிப்.5 மற்றும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் பிப்.8 முதல் 13-ஆம் தேதி வரையும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் பிப்.15 முதல் 20 வரையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை


அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும்,பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது

Thursday, 7 January 2016

தேர்வுநாட்கள் தவிர மற்ற நாட்களில் 3ஆம் பருவ பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.DEEO - TIRUCHIRAPPALLI

தேர்வுநாட்கள் தவிர மற்ற நாட்களில் 3ஆம் பருவ பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.DEEO - TIRUCHIRAPPALLI

வேலூர் மாவட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு 11-ஆம் தேதி ஆரம்பம் - மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்

வேலூர் மாவட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு 11-ஆம் தேதி ஆரம்பம் - மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் -18.01.2016 முதல் 22.10.2016 வரை தேர்வு - சேலம் மாவட்ட DEEO -அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

IGNOU B. Ed. Entrance Test - September, 2015 Results Published

IGNOU B. Ed. Entrance Test - September, 2015 Results Published

அதேஇ - NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8 வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது. 

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். 

அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும். எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.01.2016 நிலவரப்படி உதவி / கூடுதல் உதவி / அறிவியல் / மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அகஇ - தமிழ் / சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வட்டார மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

அகஇ - தமிழ் / சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வட்டார மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு


பத்தாம் வகுப்பு தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tuesday, 5 January 2016

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

மார்ச் 4 - தமிழ் முதல் தாள்
மார்ச் 7 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 - வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17 - வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 - கணிதம், விலங்கியியல், ஊட்டச்சத்து, நூண்ணுயிரியியல்
மார்ச் 21 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு மொழி ஆங்கிலம், சிறப்பு பாடம் - தமிழ்
மார்ச் 23 - நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்
மார்ச் 28 - உயிரியியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணக்குத் தேர்வுகள்
ஏப்ரல் 1 - பொருளாதாரம், இயற்பியல் 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

மார்ச் 15 - தமிழ் முதல் தாள்
மார்ச் 16 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4 - கணிதம்
ஏப்ரல் 7 - அறிவியல்
ஏப்ரல் 11 - சமூக அறிவியல்
ஏப்ரல் 13 - விருப்ப மொழி பாடம் 

SLAS தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் - செயல்முறைகள் - பட்டியல் இணைப்பு

 SLAS தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் - செயல்முறைகள் - பட்டியல் இணைப்பு

பள்ளிக்குத் தேவையான முக்கிய படிவங்கள் - pdf (13 படிவங்கள்)

பள்ளிக்குத் தேவையான முக்கிய படிவங்கள் - pdf (13 படிவங்கள்)

1000 Most common words