test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 30 December 2015

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்


1. Thiruvallur Collector 9444132000

044 27661600 27662233 27662299

2. Chennai 9445419966 9444131000

044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025

3. Kancheepuram Collector 9444134000

044 27237433 27238478 27238477

4. Vellore Collector 9444135000

0416 2252345 2252501 2222000 2253034 2228029

5. Krishnagiri Collector 9444162000

04343 239500 239400 239100 239300

6. Dharmapuri Collector 9444161000

04342 230500 232300 232800/ 230886

7. Tiruvannamalai Collector 9444137000

04175 233333 233366 232222

8. Villupuram Collector 9444138000

04146 222450 222480 222470

9. Namakkal Collector 9444163000

04286 281101 280111 280222 281106

10. Salem Collector 9444164000

0427 2452233 2452244 2400200 2400700 2452960

11, Erode Collector 9444167000

0424 2266700 2262444 2261444

12. .The Nilgiris Collector 9444166000

0423 2442344 2442233 2443971

13. Coimbatore Collector 9444168000

0422 2301320 2213230 2301523

14. Dindigul Collector 9444169000

0451 2461199 2432600 2432133/ 2467082

15. Karur Collector 9444173000

04324 257555 257112 255444 257800

16. Tiruchirapalli Collector 9444174000

0431 2415358 2420681 2420181 2411929

17 Perambalur Collector 9444175000

04328 276300 224200 277875

18. Ariyalur Collector

04329 223351 223331

19. Cuddalore Collector 9444139000

04142 230999 230651-55 230666/ 230777 230555

20 Nagapattinam Collector 9444176000

04365 252700 247800 247400 253048
http://www.facebook.com/groups/453406141356664/

21. Thiruvarur Collector 9444178000

04366 223344 225142 224738 221033

22. Thanjavur Collector 9444179000

04362 230121 230201 230857 230627

23. Pudukkottai Collector 9444181000

04322 21663/ 221624 221690 221690
http://www.facebook.com/groups/453406141356664/

24. Sivaganga Collector 9444182000

04575 241466 241455 241581 241581

http://www.facebook.com/groups/453406141356664/
25, Madurai Collector 9444171000

0452 2531110 2532290 2530925

26. Theni Collector 9444172000

04546 253676 253626 253626

27. Virudhunagar Collector 9444184000

04562 252525 252345 252500

28. Ramanathapuram Collector 9444183000
04567 231220 221349 230558

29. Thoothukudi Collector 9444186000

0461 2340600 2320050 2326747 2340606

30. Kanniyakumari Collector 9444188000

04652 279555 260666 260999 260999

தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் கடைசியாக உள்ளது

பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு.


       மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
          மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து


ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608 ஆகும்.
நாட்டில் தற்போது 16.35 கோடி எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சமையல் எரிவாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், வசதி படைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதையேற்று, 57.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக வருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தியிருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படும்.எனவே, அதிக வருமானம் பெறும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரிவாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக
உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.
மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில்,''குழந்தை பிறந்த பின், ஆறு
மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.

தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் கருத்துருக்கள் அனுப்பி வைக்க இயக்குனர் உத்தரவு

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில்,''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார். 

Sunday, 27 December 2015

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்

கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை

கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் மீதான விசாரணை கடந்த 1-ம் தேதி நடந்தது. அப்போது, கோயில் நிகழ்ச்சிகளுக்கு பல நிபந்தனைகளை விதித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஆடைக் கட்டுப்பாடு குறித்தும் உத்தரவிட்டார்.

அவர் தனது உத்தரவில் கூறியதாவது:கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணி வது, சுத்தம்,நாகரிகம் ஆகிய வற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன. கிறிஸ்தவ, இஸ்லா மிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப் பாடு உள்ளது. இந்து கோயில் களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும்.அறநிலையத் துறைக்கு உத்தரவுதமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் அணிந்து வரவேண்டும். மாறாக, அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் போன்றவற்றை அணிந்துவருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.சீருடையை அனுமதிக்கலாம்போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர், பாதுகாவலர்கள் அவர்களது சீருடையில் வர அனுமதிக்கலாம். இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிர மாக அமல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.இதைத் தொடர்ந்து, கோயில் களின் பாரம்பரியத்துக்கு ஏற்ப ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்று மாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:திருச்செந்தூர் கோயிலில் ஆண்கள் மேலாடை அணியக் கூடாது. கன்னியாகுமரி கோயிலில் பேன்ட் அணியக் கூடாது. இது மட்டுமின்றி, பெண்கள் துப்பட்டா இல்லாத ஆடைகள், லெகிங்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவற்றை அணியக்கூடாது. ஆண்கள் அரை டிரவுசர் அணியக் கூடாது என்று தமிழகத்தின் பல கோயில்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு ஆலய நுழைவுச்சட்டம் 1949-ன் 4-வது விதி அனுமதி அளிக்கிறது.இத்தகைய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதிப் படுத்தக் கோரி3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை சுற்றறிக்கை அனுப்புவோம். ஆனால், இந்த ஆடைக் கட்டுப்பாடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல்அத்தகைய ஆடைக் கட்டுப்பாடு களை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் அந்தந்த கோயில் நிர்வாகங்களின் வழிகாட் டுதல்படி ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்பட வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அறிவிப்பு பலகைகள்

‘துப்பட்டா இல்லாத ஆடைகள், லெகிங்ஸ், ஜீன்ஸ், அரை டிரவுசர் போன்றவற்றை அணிந்து வருபவர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்ற அறிவிப்பு பலகையைதயார் செய்யும் பணியில் கோயில் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.கேரள கோயில்கள், கேரளாவை ஒட்டிய தமிழக கோயில்களில் பாரம்பரிய ஆடைக் கட்டுப்பாடு பலகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருப்பதி கோயிலிலும் கட்டண சேவைகளில் இந்த கட்டுப்பாடு சமீபகாலமாக கடை பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்


வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.கட்டணம்,பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரைபணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த:

உதவி இயக்குநர் (வெளியீடுகள்),எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,சென்னை-600 002என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம்இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm

விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக்கொள்ளலாம். (www.seithiula.blogspot.in)

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

World Days


January -1 Global Family Day

January -9 NRI Day

January -10 World Laughter Day

January -12 National Youth Day

January -15 Army Day

January -25  National Voters Day , National Tourism Day

January -26  India’s Republic Day, International Customs Day

January -28 Data Protection Day

January -30  Martyrs Day; World Leprosy Eradication Day

February second Sunday of   World Marriage Day

February-4 World Cancer Day

February-6 International Day against Female Genital Mutilation

February-12 Darwin Day ,World Day of the Sick

February-13 World Radio day

February-20 World Day of Social Justice

February-21 International Mother Language Day

February-22 World Scout Day

February-24 Central Excise Day

February-28 National Science Day

March second Monday Commonwealth Day

March second Thursday World Kidney Day

March-4 World Day of the Fight Against Sexual Exploitation

March-8 International Women’s Day

March 2nd Thursday World Kidney Day

March-15 World Consumer Rights Day

March-16 National Vaccination Day

March-18 Ordnance Factories Day

March-20 World Sparrow Day

March-21 World Forestry Day

March-22 World Water Day

March-23 ,World Earth Day

March-24 World TB Day

March-27 World Drama Day

April-2 World Autism Awareness Day

April-5 International Day for Mine Awareness,

April-5 National Maritime Day

April-7 World Health Day

April-17 World Haemophilia Day

April-18 World Amateur Radio Day

April -18 World Heritage Day

April-21 Secretaries Day

April-21 National Civil Services Day

April -22 Earth Day

April 23 World Book and Copyright Day

April -25 World Malaria Day

April -26 World Intellectual Property Day

April -29 International Dance Day

May-1 International Labour Day

May-1st Tuesday World Asthma Day

May-3 Press Freedom Day

May-3 World Asthma Day

May-2nd Sunday Mother’s Day

May-4 Coal Miners’ Day

May-8 World Red Cross Day

May-9 World Thalassaemia Day

May-11 National Technology Day

May-12 World Hypertension Day

May-12  International Nurses Day

May-14 World Migratory day

May-15 International Day of the Family

May-17 World Tele communication Day

May-18 International Museum Day

May-21 Anti-Terrorism day  (rajiv gandhi dead)

May-22 International Day for Biological Diversity

May-24 Common wealth Day

May-28 World Hunger Day

May-31 Anti-tobacco Day

June-4 International Day of Innocent Children

June-4  Victims of Aggression

June-5 World Environment Day

June, 3rd Sunday Father’s Day

June-8 World Ocean Day

June-12 World Day against Child Labour

June-14 World Blood Donor Day

June-15 World Elder Abuse Awareness Day

June-17 World Day to Combat Desertification and Drought

June-20 World Refugee Day

June-21 World Music Day

June-23 International Olympic Day

June-23 UN Public Service Day

June-26 International Day against Drug Abuse and Illicit Trafficking

June-27 International Diabetes Day

July-1 Doctor’s Day

July-6 World Zoonoses Day

July-11 World Population Day

July-12 Malala Day

July-18 Nelson Mandela International Day

July-30 International Day of Friendship

August first Sunday International Friendship Day

August-3 International Friendship Day

August-6 Hiroshima Day,Organ Donation Day

August-7 Forgiveness Day

August-8 World Senior Citizen Day

August-9 Nagasaki Day

August-12 International Youth Day

August-15 Indian Independence Day

August-18 International Day of the World Indigenous Peoples

August-19 Photography Day,World Humanitarian Day

August-20 Rajiv Gandhi Sadbhavana Divas

August-29 National Sports Day

September-2 Coconut Day

September-5 Teachers Day ,International day of charity

September-8 International Literacy Day (UNESCO)

September-14 Hindi Diwas, World First Aid Day

September-15 Engineer Day

September-16 World Ozone Day

September-21 Alzheimer Day

September-21  Day for Peace  and Non- violence (UN)

September-22 Welfare of cancer patients (Rose Day)

September-25 Social Justice Day

September-26 Day of the Deaf

September-27 World Tourism Day

September-28 World Rabies Day

September-29 World Heart Day

October-1 International Day for the Elderly

October-2 Gandhi Jayanthi

October-3 World Habitat Day

October-4 World Animal Welfare Day

October-8 Indian Air Force Day

October-9 World Post Office Day

October-10 National Post Day

October, 2nd Thursday World Sight Day

October-11 International Day of the Girl Child

October-12 World Arthritis Day

October-13 UN International Day for Natural Disaster Reduction

October-14 World Standards Day

October-15 World White Cane Day

October-15  International Day of Rural women

October-16 World Food Day

October-17 The International Day for the Eradication of Poverty

October-20 World Statistics Day

October-20 World Osteoporosis Day

October-21 Global Iodine Deficiency Disorders Prevention Day

October-24 World Development Information Day

October-24 World Polio Day, UN Day

October-28 International Animation Day

October-30 World Thrift Day

November-5 World Radiography Day

November-9 Legal Services Day

November-12 World Pneumonia Day

November-12 Public Service Broadcasting Day

November-14 Children Day

November-14 World Diabetes Day

November-16 International Day for Tolerance

November-17 National Epilepsy Day

November-17 National Journalism Day

November-19 Citizens Day

November-19 World Toilet Day

November-19 National Integration Day

November-20 Africa Industrialisation Day

November-21 World Television Day

November-21 World Fisheries day

November-25 International Day for Elimination of Violence against Women

November-26 Constitution Day

November-29 International Day of Solidarity with Palestinian People

December-1 World AIDS Day

December-2-Dec World Computer Literacy Day

December- 3 World Day of the Handicapped

December-4 Indian Navy Day

December-5 International Volunteer Day

December-7 Armed Forces Flag Day

December-7 International Civil Aviation Day

December-10 Human Rights Day

December-10 International Children Day of Broadcasting

December-14 World Energy Day

December-18 Minorities Rights Day

December-22 National Mathematics Day


December-23 Farmer’s Day

15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?


சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.

புதிய விதிமுறைகள்

கடந்த, 1973ல், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் வந்தது. 1976ல், மெட்ரிக் பள்ளிகள் எல்லாம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தன.ஆனால் தமிழக அரசு, தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில், மெட்ரிக் பள்ளிகளை சேர்க்காமல், தனியாக, 'மெட்ரிக்குலேஷன் வாரியம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கி, பள்ளிகளை அதன் கீழ் கொண்டு வந்தது.இந்த வாரியத்திற்கு, 1977ல் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தனி வாரியத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகள் இயங்கினாலும், பி.யூ.சி., முறைக்கு பதில், பிளஸ் 2 பாட திட்டத்தை, மெட்ரிக் பள்ளிகள் பின்பற்ற துவங்கின. அதனால், மெட்ரிக் வாரியம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசு கலைக்காமல் தனியாக இயங்க செய்தது. எனவே, தற்போதைய பாடத்திட்டப்படி, மெட்ரிக் வாரிய பள்ளிகளுக்கு, சட்ட அந்தஸ்து இல்லை என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பா.ம.க.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'மெட்ரிக்குலேஷன், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வம் அற்றவை. எனவே, இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த, மாநில அரசு முன் வரவேண்டும்' என கூறியிருந்தார்.இந்த வழக்கில், ஜூனில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்த, நிபுணர்கள் குழு அமைத்து, வரைவு சட்டம் உருவாக்க வேண்டும். பின், மக்களின் கருத்து கேட்டு, சட்டமாக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

ஓராண்டுக்குள்...

இதைத் தொடர்ந்து, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஆளுடையா பிள்ளை தலைமையிலான இந்தக் குழுவினர், இரு தினங்களுக்கு முன், சென்னை யில் முதல் ஆலோசனை கூட்டத்தை முடித்துள்ளனர்.அனைத்து அங்கீகாரம் பெற்ற மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகள் அனைத்தையும், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதற்கட்ட வரைவு சட்டம், ஓராண்டுக்குள் உருவாக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை 6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியரிடையே, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு போட்டியிட விரும்பும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மாணவியர் தேர்வுஅந்த நிதியில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட, மாநில, தேசிய விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இவ்விருதுக்கு போட்டியிட பிற்படுத்தபட்டோர் மற்றும் பொதுப்பிரிவில், 4,612 பேரும், எஸ்.சி., பிரிவில் 1,621 பேரும், எஸ்.டி., பிரிவில் 60 பேரும் சேர்த்து மொத்தம் 6,293 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேரடியாக வரவுஇவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மாணவ, மாணவியரின் வங்கிக்கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்

கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆட்கள் நியமிக்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், அவற்றை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லாத சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், மேற்கண்ட பள்ளிகளில் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை நியமிப்பதற்கான, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதில் தினக்கூலி அடிப்படையில், மாதத்துக்கு, 22 நாள் மிகாமலும், ஆண்டுக்கு, 10 மாதத்துக்கு மிகாமலும், பணியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், பள்ளியின் தேவைக்கேற்ப, பகுதி நேரம், முழு நேரம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் துப்புரவு சாதனங்கள் உள்ளிட்ட விவரங்களை, பள்ளியிலிருந்து சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களின் ஊதியமாக ஆண்டுக்கு, 39.79 கோடி ரூபாயும், துப்புரவு சாதனங்களுக்கு, 17.84 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.அனைத்து தலைமை ஆசிரியர்களும், இந்த விவரங்களை படிவங்களில் நிரப்பி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், ஓரிரு நாளில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Saturday, 26 December 2015

ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி!


தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது. தேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள்

இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை, வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.
இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வழங்கப்படும்..


1வது முதல் 9வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன.


விலை இல்லா பாடப்புத்தகங்கள் 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.


 இதில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு முதல் பருவம், 2–வது பருவம், 3–வது பருவம் என்று 3 பருவங்களாக கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாணவர்களின் புத்தக சுமை குறைந்து விடுகிறது.

மாணவ–மாணவிகளுக்கு 2–வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக 2–வது பருவத்திற்கு உரிய பாடங்களை ஆசிரியர்களால் நடத்த முடியவில்லை.

ஜனவரி 2–ந்தேதி 
இந்த நிலையில் ஜனவரி 2–ந்தேதி விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. எனவே மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த அன்றே 3–வது பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக 31–ந்தேதிக்குள் புத்தகங்களை குடோன்களில் இருந்து எடுக்கும்படி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு


தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.

இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்


நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள்,கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்,இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் ,பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு,புட்டு வைக்கின்றனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்கள் எவ்வாறு எல்லாம் புரிந்து கொள்ள படாமல் பெற்றோரிடமும்,சமூகத்தினாலும்,ஆசிரியர்களாலும் வதைக்கபடுகின்றனர்,சக மாணவர்களால் எவ்வாறு மோசமாக நடத்த படுகிறார்கள் , பள்ளிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன,எவ்வாறு சரியாக நடத்த வேண்டும் உட்பட மிக அருமையாக சொல்லி உள்ளனர்.

பள்ளி முதல்வர்கள் மார்க் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எவ்வாறு எல்லாம் சொற்களால் மாணவர்களை கொச்சை படுத்துகின்றனர்,அவர்களது பெற்றோர்களை எவ்வாறு அசிங்கபடுத்துகிண்டறனர் , 70 கிலோ உள்ள தந்தை ,தாய் 15 கிலோ உள்ள ஒரு குழந்தையை அடிப்பது எவ்வளவு அராஜகமான செயல் என்று பெற்றோர் பிள்ளையை அடிக்கும் பகுதியை அழகாக எடுத்து கூறி அதன் வீரியத்தை தெளிவாக சொல்லி உள்ளனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி போட ஆசை உள்ளதையும்,வெற்றி பெறும் பிள்ளையை மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் அழைத்து சென்றால் மற்ற பிள்ளைகளுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளதுடன்,மேடையில் ஏறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான் என்பதும்,மேடை ஏறுவது மட்டும்தான் நமது வேலை , வெற்றி பெறுவது பற்றி கவலை இல்லை என்பது சூப்பர் .ஆனால் இன்றைய நிலையில் இப்படி பள்ளிகளை பார்ப்பது மிக அரிது.

கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைய மருத்துவர்களால் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள்,அவர்கள் படும் வேதனை என்ன என்பதனை மிக தெளிவாக காட்டி உள்ளனர்.சமுகத்தில் இது போன்ற கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் அனைவரையும் பெருவாரியான ஆசிரிர்களும்,மற்றவர்களும் ஒதுக்கியே வைக்கின்றனர்.அவர்களுக்குள்ளும் பல்வேறு திறமைகள் உள்ளது,அதனை எவ்வாறு சரி செய்வது என்பது உட்பட பிரட்சினைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வினையும் இப்படம் தெளிவாக விளக்கி உள்ளதால் இதனை அனைத்து விதமான பள்ளி ,கல்லூரிகளிலும் வெளிட்டால் கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் பாதுகாக்க படுவார்கள் என்பது உண்மை.

குழந்தை பிறக்க இருக்கும் கர்ப்பிணி பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,அவரது கணவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,3 மாதம் முதல் குழந்தை எவ்வாறெல்லாம் தாயின் வயிற்றில் கேட்டு வளர்கிறது,படத்தின் ஆரம்பத்தில் எப்படி குழந்தை பெற்றோர் cnn தொலைக்காட்சி பார்த்து கொண்டே இருப்பதால் எவ்வளவு தவறான விசயங்கள் பிள்ளைகளுக்கு வயிற்றில் இருக்கும்போதே போய் சேர்கிறது,ஜாதகம் பார்த்து குழந்தையை மருத்துவர் உதவியுடன் அறுத்து எடுப்பது எவ்வளவு தவறான நடைமுறை சமுகத்தில் பரவி  உள்ளது , பெரிய பதவியில் உள்ள ஒருவர் எவ்வாறு தன்னை அறியாமல் தனக்கு பிடித்தமான பொருளை திருடுகிறார் என்பது உட்படவும்,வீட்டில் குழந்தைகள் பெற்றோர் பேசுவதை கேட்டு எப்படி எல்லாம் வார்த்தைகள் பேசுகிறார்கள்,கணவர் போன் பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைகள் எவ்வாறு எல்லாம் பாதிக்க படுகிறார்கள்,குழந்தைகளை பார்த்து கொள்வதில் தாய் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும்,அவரது கணவற்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என்பதையும்,படத்தின் நிறைவாக எழுத்து ஓடும்போது யாரெல்லாம் கற்றலில் அதீத திறமை உடையவர்களாக இருந்து ஜெயித்து உள்ளனர் என்பது உட்பட அனைத்து விசயங்களும் சூப்பர் .

பெற்றோர் அவர்கள் என்னவாக நினைத்து இருந்தனரோ அதனை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பதை தவறு என்பதை அழகாக எடுத்து சொல்வதுடன்,மதிப்பெண் மட்டுமே அவர்களது வாழ்க்கை இல்லை அவர்களது திறமை என்ன கண்டு அவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்க வைக்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்து கூறி உள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் முழு ஓட்டத்தையும் நிறைவு செய்யும் மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதையும் ,அதன் அவர் வாழ்கையில் எவ்வாறு நல்ல சமூக அக்கறை உள்ளவராக மாறுகிறார் என்பதையும் மிக சிறப்பாக கூறி உள்ளனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்களை இந்த சமுதாயமும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் புரிந்து கொள்ள கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள சிறப்பான படம் இது.அனைவரும் காணவேண்டிய படம் இது.

Wednesday, 23 December 2015

INCOME TAX FORMS - 2015-2016

Tuesday, 22 December 2015

SLAS EXAM DATE ANNOUNCED - DIR PROC - DATE (21/12/2015)

SLAS EXAM DATE ANNOUNCED - DIR PROC - DATE (21/12/2015)

CLICK HERE - SLAS EXAM DATE ANNOUNCED - SPD PROC - DATE (21/12/2015)

FLASH NEWS - தொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளுக்கு 2ஆம் பருவ விடுமுறை முடிந்து 02.01.2016 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளில் ஆயுத்தப் பணிகள் மேற்கொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்

G.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்பறை சுத்தம் செய்தல்- உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் - தெளிவுரை அரசாணை வெளியீடு

24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளும் மற்றும் பெயர் பட்டியலும் நாள் : 19. 12. 2015














26/12/2015 முதல் 31/12/2015 வரை10 மற்றும் 12 வகுப்புகள் செயல்பட வேண்டும் - கடலூர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ANNAMALAI UNIVERSITY DDE - 2015 EXAM HALL TICKET PUBLISHED

ANNAMALAI UNIVERSITY DDE - 2015 EXAM HALL TICKET PUBLISHED

தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது


தொடக்கக் கல்வித் துறையின் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது.மேலும் 2016 ஜனவரி 2ம் தேதி(சனி)  முதல் பள்ளி வழக்கம் போல் செயல்படும் .

'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்


''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது. 

ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இதில் கிருஷ்ணராவ் பேசியதாவது:'ஆதார்' அட்டை கணக்கெடுப்புக்கு 'பெல்' நிறுவனத்தின் கீழ் 640 மையங்களில், ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6.23 கோடி பேருக்கு புகைப்படம், கைரேகை, கருவிழி விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் 5.63 கோடி பேருக்கு 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2016 மார்ச்சுக்குள் 100 சதவீத பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சேவை மையங்கள் மூலம் 'ஆதார்' அட்டை பெற, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஜன., 18 முதல் பிப்., 5 வரை தமிழகத்தில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரித்தல்,
திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது உறுதி செய்யப்படும்.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.1 கோடி. கடந்த 2001ல் இது, 102.2 கோடியாக இருந்தது, என்றார்.

இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்


உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். 

ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.

ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார். அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.

இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.

Monday, 21 December 2015

FLASH NEWS : SLAS EXAM DATE ANNOUNCED - DIR PROC - DATE (21/12/2015)

FLASH NEWS : SLAS EXAM DATE ANNOUNCED - DIR PROC - DATE (21/12/2015)

தேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது!!! திருச்சி- சிவா நாடாளுமன்றத்தில் பேச்சு

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பான பணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாக பெண்கள் தொலை தூரத்தில் உள்ள 
கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

          பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.

           அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவு குடியரசு தலைவரோ, மாநில ஆளுநரோ தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளுக்கு தேர்தல் பணிகளுக்கு தேவை என்று கருதுகின்ற பணியாளர்களை தந்து உதவிட வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.

          அரசியல் சட்டத்தை திருத்தினால் தவிர இதற்கு வேறு வழி எதுவும் கிடையாது. என்னுடைய மசோதா அரசியல் சட்டத்தினை திருத்தி அதில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்ற சொற்களை சேர்த்திட கோருகிறது.

          2007 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இதற்கு வலு சேர்க்கிற வகையில் தரப்பட்டிருப்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இது ஒரு முயற்சி என்னுடைய சக்திக்கு உட்பட்ட வரையில். நல்லது நடக்கும் என தொடர்ந்து நடை போடுவோம்.

P.P.Rs.750/- தனி ஊதியம் பதவி உயர்வு பணியில் ஊதியத்திற்கு பிறகு கழிக்கப்படும் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் கரூர் deeo 1.1 11க்கு பிறகு திரும்பி செலுத்த ஆணை...


10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிபெற 13 லட்சம் சிறப்பு கையேடுகள்: அச்சடிக்கும் பணி மும்முரம்


      வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

        வெள்ளத்தில் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வி துறை செய்துள்ளது.மேலும் மழையால் ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்வதாக உறுதியளித்து உள்ளது.

             பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன நல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டன. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கவும், பொதுத்தேர்வுஎழுதக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறவும் அரசு சிறப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்து இருந்தார்.குறைந்தபட்ச மதிப்பெண் அதாவது பாஸ் பெறுவதற்கான வினா–விடைகள் அடங்கிய குறிப்புகள் அதில் இடம் பெற்று இருக்கும். அதனை படித்தால் அனைத்து மாணவர்களும் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிறப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.

ஏற்கனவே பிற மாவட்டங்களில் படிப்பில் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இதுபோன்ற ஒரு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் மேலும் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு புதிதாக இவை தயாரிக்கப்படுகிறது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 6 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.10–ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 லட்சம் கையேடுகளும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக 10 லட்சம் கையேடுகளும் அச்சடிக்கப்படுகின்றன.10–ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஒரே புத்தகமாகவும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடத்திற்கு ஒருபுத்தகமும் மற்ற பாடங்களுக்கு தனித் தனியாகவும் கையேடுகள் அச்சடிக்கப்படுகின்றன.பிளஸ்–2 மாணவர்களுக்கு 2–க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும். இதில் அனைத்து பாடங்களில் உள்ள முக்கிய வினாக்களும் அதற்கு உண்டான பதில்களும் இடம் பெறும்.இந்த சிறப்பு கையேடுகள் மாணவ–மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் இரவு–பகலாக நடக்கிறது.கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் 2–ந் தேதி திறக்கும்போது 4 மாவட்ட மாணவ–மாணவிகளுக்கும் கையேடுகள் வழங்கப்படும். அதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரையாண்டு விடுமுறைப்பற்றி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை!!!

கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 2015 டிசம்பா் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் திரு கே.சி.வீரமணி, மாண்புமிகு நகராட்சி, ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவா் திரு பொள்ளாட்சி வ. ஜெயராமன், மாண்புமிகு கோயம்புத்தூா் மாநகராட்சி மேயா் திரு கணபதி ப.ராஜ்குமார், கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி அா்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, பாராளுமன்ற உறுப்பினா்கள். சட்டமன்ற உறுப்பினா்கள் திரு ஆா். துரைச்சாமி(எ) சேலஞ்சா் துரை, திரு வி.சி. ஆறுகுட்டி, திரு தா. மலரவன் உள்ளிட்ட சான்றோர்கள் பலா் கலந்துகொண்டனா்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் முனைவா் ச.கண்ணப்பன் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முனைவா் நா.அருள்முருகன் சிறப்பாக செய்திருந்தார். இப்போட்டிகளில் சென்னை. கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல். ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மண்டலங்களைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து  விளையாட்டு விடுதிகள். பள்ளிகளைச் சோ்ந்த சுமார் 2400 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். பல்வேறு வயதுக்கேற்ப வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகள் நடைபெற்ற இரண்டாம் நாளில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை உயா்அலுவலர் திரு தேவாரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிறைவு விழாவில் கோயம்புத்தூா் மாவட்ட கருவூலத்துறை அலுவலா் திரு ஆா். அருணாச்சலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பரிசளிப்பு விழாவில் முதன்மை உடற்கல்வி ஆய்வா்(ஆண்கள்) முனைவா் எஸ்.எஸ்.பீட்டா்சுப்புரெட்டி, முதன்மை உடற்கல்வி ஆய்வா்(பெண்கள்) திரு எம்.கலைச்செல்வன் மற்றும் பலா் கலந்துகொண்டனா் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும். ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

Friday, 18 December 2015

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல்
19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட்
21.01.2016-இயற்பியல் /பொருளியல்
23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி
25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு
27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்
 

10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


11.01.2016-மொழி பாடம் I
13.01.2016-மொழி பாடம் ll
18.01.2016-ஆங்கிலம் l
20.01.2016-ஆங்கிலம் ll
22.01.2016-கணிதம்
25.01.2016-அறிவியல்
27.01.2016-சமூகஅறிவியல்

பள்ளிக்கல்வி - அரையாண்டு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பான அறிவுரைகள்

பள்ளிக்கல்வி - அரையாண்டு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பான அறிவுரைகள்





புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்


சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும். 

இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:வெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்

பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது. சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களை படிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்; மத்திய அரசு


நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 133 மாணவர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 133 மாணவர்களும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் திருக்குறளை ஒப்புவித்தனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள அரங்கில் 133 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் என்று கூறினார்.

பிறந்த பூமியையும், மொழியையும் தாயை போல குழந்தைகள் போற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார். திருவள்ளுவர் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராஜா, டி.கே. ராஜா, கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Thursday, 17 December 2015

முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு ஊழியர் ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்வது எவ்வாறு - வழிமுறைகள் - தெளிவுரை வழங்கி உத்தரவு

CLCIK HERE-Personnel and Administrative Reforms DepartmentYear : 2015 Lr.No.48351 Dt: December 17, 2015

SC/ ST STUDENTS SCHOLARSHIP ONLINE ENTRY

SC/ ST STUDENTS SCHOLARSHIP ONLINE ENTRY

Annamalai University (DDE) Examination DEC - 2015 HALL TICKET

Annamalai University (DDE) Examination DEC - 2015 HALL TICKET

ஜாக்டோவின் மறியல் போராட்டம் மழை காரணமாக தள்ளி வைப்பு..

NEWS: மழை பாதிப்பு காரணமாக டிசம்பர் போராட்டம் ஜனவரி 30,31,பிப்ரவரி1 ஆகிய நாட்களில் ஜாக்டோவின் மறியல் போராட்டம் நடைபெறும் மாநில ஜாக்டோ முடிவு

Wednesday, 16 December 2015

முப்பருவ தேர்வு முறை - இரண்டாம் பருவ பாடத்திட்டம் 1-8 : ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் - மாணவர்களிடம் வளர்க்க திறன்கள் - வகுப்புவாரியாக - பாட வாரியாக

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை -ஆசிரியரால் செய்து காட்ட வேண்டியவை மற்றும் மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்க்கவேண்டிய பயிற்சிகள் பட்டியல்

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை -ஆசிரியரால் செய்து காட்ட வேண்டியவை மற்றும் மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்க்கவேண்டிய பயிற்சிகள் பட்டியல்






 

TNPSC DEPARTMENTAL DECEMBER EXAM HALL TICKET PUBLISHED...

TNPSC DEPARTMENTAL DECEMBER EXAM HALL TICKET PUBLISHED...

CLICK HERE.TO DOWNLOAD HALL TICKET

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு


        மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.


        நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக இருக்கிறது. அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்து அறநிலைய துறை சார்பில் 1-12 மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெண்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் - செயல்முறைகள்

பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'


'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம். மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

12 கோடி மாணவர்கள் :
* நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது
* இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர்
* மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது
* உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது
* இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டத்திற்கு 24ம் தேதி உள்ளூர் விடுமுறை


குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக இருக்கும் என அம்மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய பென்ஷன் திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.

இதனால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் ஓய்வு பெற்றோர், இறந்தோரின் குடும்பத்தினர் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி ஆனைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி காவலாளியாக இருந்த குருசாமி 2012 ல் ஓய்வு பெற்றார். பலமுறை போராடியும் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெறமுடியாமல் 2013 ல் இறந்தார். அதன்பின் அவரது மனைவி மாரியம்மாள் போராடியும் பணப்பலன் கிடைக்காமல் சமீபத்தில் இறந்தார்.

அவர்களது மகன் குமார் பணப்பலன் கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தார். அந்த மனுவிற்கான பதிலில், 'புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத்தொகை வழங்குவது குறித்து அரசாணை, தெளிவுரை எதுவும் இல்லை. இதுகுறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் பணத்தை மட்டும் பிடிக்கின்றனர். ஆனால் பணப்பலன் வழங்குவதில்லை. இதனால் இதுவரை ஓய்வு பெற்ற 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற 6 பேருக்கு மட்டும் பிடித்த பணம் வழங்கப்பட்டு உள்ளது, என்றனர்.

Monday, 14 December 2015

G.O.(MS) No.117 (P&AR) Dt: December 13, 2015 Recent heavy rains in November and December 2015 - Disaster caused - Voluntary contribution to Chief Ministers Public Relief Fund for Relief and Rehabilitation measures - Contribution of one days salary by the Government Employees - Procedures - Orders Issued.





TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE DEC 2015

TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE DEC 2015

தொடருமா எஸ்.எஸ்.ஏ ., திட்டம்?

Thursday, 10 December 2015

MADRAS UNIVERSITY - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்தவர்கள் புதிய சான்றிதழ்கள் பெற விண்ணப்ப படிவம்

MADRAS UNIVERSITY - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்தவர்கள் புதிய சான்றிதழ்கள் பெற விண்ணப்ப படிவம்

தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுதாரருக்கு , பதில் அளிக்க வழிகாட்டும் நெறிமுறைகள் சார்பான அரசுக் கடிதம் நாள் : 23. 11. 2015

Lr.No.41633 Dt: November 23, 2015 Right to information Act 2005 - Format for giving information to the applicants under Right to Information Act - Issue of guidelines - Communicated - Regarding

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பிற ஆசிரியர்களும் செயலாற்ற வேண்டும். பள்ளிகள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு


தொடர் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

SLAS MODEL QUESTION PAPERS FOR PRIMARY SECTION III & V

SLAS QUESTION PAPERS FOR PRIMARY SECTION III & V

2014-2015 SLAS QUESTION PAPERS DOWNLOAD .............................

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலக்கெடு டிச.15 வரை நீட்டிப்பு


மேல்நிலைப் பொதுத் தேர்வை (மார்ச், 2016) எழுதும் தனித்தேர்வர்கல் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அத்தேதிகளிலும் பெருமழை நீடித்ததால், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக இயலாமல் போன தனித்தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், அரசு சேவை மையங்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் திருச்சி மண்டலத் துணை இயக்குநர் வெ.முருகன் தெரிவித்துள்ளார்.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

இதற்காக பள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களின் கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாற்றுச் சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர்.
இந்தப் பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்தி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.