test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 27 July 2015

தொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என RTIல் தகவல்



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், 2015-16-ஆம் கல்வியாண்டில் 6, 9, 11-ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையுடன் இந்த ஆண்டுள்ள வேறுபாடு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை எடுத்துவர வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் பள்ளிக் கல்வி இயக்ககம் கோரியுள்ளது.

Friday, 24 July 2015

தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி


     தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன.


அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு, பரமக்குடி ஆகிய இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் உள்பட 65 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் மேலும் சில கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, கற்றல், கற்பித்தல் மேற்பார்வைப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், 600-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Thursday, 23 July 2015

பள்ளி ,ரேஷன் கடைகளில்" மொபைல் சென்டர் "அமைத்த ஆதார் கார்டு வழங்கப்படும்!!!


      மத்திய, மாநில அரசு அலுவலக ஆதாரத்திற்கென "ஆதார் அட்டை' கட்டாயமாகிறது. சிவகங்கையில் இப்பணி மந்தநிலையில் நடப்பதை, துரிதப்படுத்த பள்ளி, ரேஷன் கடைகளில் "மொபைல் சென்டர்' அமைத்து "ஆதார் அட்டைக்கு' போட்டோ, கண்விழி சேகரிக்கலாம் என கலெக்டர் மலர்விழி திட்டமிட்டுள்ளார்.
       மத்திய, மாநில அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், வங்கி உட்பட அனைத்து இடங்களிலும் ஆதாரமாக "ஆதார் அட்டை' எண் கேட்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 13.75 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இதில், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைக்கான போட்டோ, கருவிழி, கண்புருவம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
     60 சதவீதம்: கடந்த ஒரு ஆண்டாக ஓட்டுச்சாவடி, நகராட்சி, பேரூராட்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதாருக்கு போட்டோ எடுத்து வருகின்றனர். இப்பணியை தனியார் நிறுவனம் முழுமையாக மேற்கொள்ளவில்லை. 
    போதிய இயந்திரங்கள் இன்றி, பற்றாக்குறை இயந்திரங்களை வைத்தே போட்டோ எடுத்து வந்தனர். இது வரை 8 லட்சம் பேருக்கு மட்டுமே, ஆதாருக்கான போட்டோ, கருவிழி, கண்புருவம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துள்ளனர். இதில், 4 லட்சம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை வந்துள்ளன. இன்னும் பெரும்பாலானவர்களுக்கு அட்டை வழங்கப்படவில்லை. 
       திட்டம்: இந்நிலையில், மத்திய, மாநில அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் செலுத்துதல், அரசு வழங்கும் கல்வி உதவி தொகை பெறுதல் போன்ற அனைத்து நலத்திட்டங்களை பெறவும், மாணவர்களிடம் கட்டாயம் ஆதார் எண் கேட்கின்றனர். இதற்காக, 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் விடுமுறை நாட்களில், ஆதார் எடுக்கும் மையத்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு, கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், விடுமுறை நாட்களில் எடுக்க முடியாமல் திரும்பி வருகின்றனர். இதை தவிர்த்து மாவட்டத்தில் நூறு சதவீதம் பேருக்கும் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கும் நோக்கில், பள்ளி, ரேஷன் கடைகளில் "மொபைல் சென்டர்' அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 
     கலெக்டர் கூறும்போது: மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலும், பெரியவர்களுக்கு ரேஷன் கடைகளிலும் ஆதாருக்கு போட்டோ எடுக்க "மொபைல் சென்டர்' அமைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைத்தால், நூறு சதவீதம் ஆதார் அட்டை பணியை முடிக்கலாம், என்றார்.

பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ'.


      கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

           இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பட்டமளிப்பு விழாக்களுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு, விலை உயர்ந்த பட்டாடை, சால்வை போர்த்தி, மரியாதை செலுத்தப்படுகிறது. இனி, கைத்தறித் துணிகளையே இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எல்லா கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோ,ஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது -தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

All News Channel & News paper Office Address

All News Channel & News paper Office Address

CLICK HERE-NEWS CHANNELS ADDRESS

ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்


ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் பேசியதாவது:

அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டுமென அரசு விரும்புகிறது. ஏனெனில், கல்விக்காக அரசு அதிகமான நிதியை செலவிடுவதால், அதற்கான பலனை எதிர்பார்க்கிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்.

குழந்தைகள் மன ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வளர்வது பள்ளியில்தான். ஆசிரியர்களின் பேச்சு, நடத்தை, அவர்களின் உடை ஆகியவையை மாணவர்கள் முன்மாதிரியாகக் கருதுகிறார்கள். எனவே, ஆசிரியர்கள் அதற்கேற்றார்போல நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறையே காரணம்


ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது. மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது. இதற்கு ஒவ்வொருவரின் மூளையின் அடைவுத்திறன் வேறுபாடே காரணம்.இதை அறியாமல் பெற்றோர், ஆசிரியர்கள் 'படி, படி' என தொந்தரவு செய்வதால் மாணவர்களின் எண்ணங்கள் மாறுகின்றன. சிலர் தீய பழக்க வழக்கம், சினிமா போன்றவற்றுக்கு மாறிவிடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்தது.
பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது:ஒவ்வொரு மாணவரின் அடைவுத்திறனுக்கு ஏற்ப கற்பிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஆசிரியர்களால் முழுமையாக கற்பிக்க முடியாது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் 1:25 க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் கல்வித்திட்டத்தை மாற்ற வேண்டும். கற்பிக்கும் முறையை சிறந்த ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவம், ஆய்வின் அடிப்படையில் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும், என்றார்.

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!


மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகை, இலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க, இந்த சான்றிதழ்கள் அவசியம். ஆனால், இந்த சான்றிதழ்களை, 'ஆன் - லைன்' மூலம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிகள் மூலமே சான்றிதழ் வாங்கித் தர, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.எல்லாப் பள்ளிகளும், மாணவ, மாணவியரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை, தனித்தனி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து, உரிய முகவரி ஆவணங்களுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் பொது இ - சேவைத் துறை மூலம் சான்றிதழ்களை பெற்றுத் தர, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, 21 July 2015

எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா



தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா இதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது என அவர் கூறினார். 1,200 தொடக்க பள்ளிகளை மூடப்போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றது என்றும் சபிதா மறுத்தார்.முன்னதாக ஆயிரத்து 200 தொடக்க பள்ளிகள் மூடப்பட இருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்திருந்த தகவலை பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

ஆசிரியர் தகுதித்தேர்வு: தமிழக அரசு மேல்முறையீடு; வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!


தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது. இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பள்ளிகள்: ஒரு புள்ளி விவரம்


* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன.
* இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
* தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முக்கியமானது இலவச பாடநூல்.

* 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  5 பாட புத்தகம் ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது.
* 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் ஒரே தவணையாக 6 பாட புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு  தலா ஒரு துணை பாடநூல் வழங்கப்படுகிறது.

'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு


ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், புதிதாக திருத்திய விதிமுறைகளை, அரசு அறிவித்துள்ளது.முன், ப்ளே ஸ்கூல் விதிமுறையில், 'ப்ரி கே.ஜி.,' வகுப்பு மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, புதிதாக, எல்.கே.ஜி., -  யு.கே.ஜி., நடத்தவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 

*ப்ளே ஸ்கூல் வகுப்பறைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 
*குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். 
*அறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
*மாணவர், 15 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 
*தகுதி வாய்ந்த ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும்.
*ஒவ்வொரு வகுப்பிற்கும், இரண்டு வழிகள் இருக்க வேண்டும். 
*வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அரசு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 20 July 2015

பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம்; தடுக்க மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் உத்தரவு

மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம்


           மாணவர் சேர்க்கையில் புதியஇந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.அதன்படி, இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரலாம்.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. மேலும், 600-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.

          கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளும் ஒரு சில கல்லூரிகளில் எம்.பில் (கல்வியியல்) படிப்பும் வழங்கப்படுகின்றன.கடந்த ஆண்டு வரை பிஎட் படிப்பு காலம் ஓராண்டாக இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பிஎட் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கைவழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய அம்சமாக, பொறியியல்பட்டதாரிகளும் (பிஇ அல்லது பிடெக்) பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் அறிவியல் (இயற்பியல், வேதியியல்) மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பிஎட் படிப்பில் சேரலாம்.குறைந்தபட்ச கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி, உயர் கல்வித்தகுதி, என்சிசி, என்எஸ்எஸ் போன்றவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் உட்பட இதர விதிகளில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடை முறைகளே இடம்பெற்றுள்ளன.கடந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தியது. 
ஆனால், இந்த ஆண்டு அப்பொறுப்பு சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து இதே கல்வி நிறுவனம்தான் பிஎட் மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வந்தது)பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎட் சேரும் வாய்ப்பு அளிக் கப்பட இருப்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆசிரியர் பணி தரும் வகையில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக் கலாம்” என்று தெரிவித்தனர். பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளதால், விண்ணப்பங்கள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படக்கூடும்.பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நிலையில் இந்தவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2015-16 பராமரிப்பு மானியம்- செயல்முறைகள்

2015-16 பராமரிப்பு மானியம்- செயல்முறைகள்











UPPER PRIMARY CRC : 25/07/2015 அன்று உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு " Enriching Training on CCE in ALM "என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: விரைவில் தேதி அறிவிப்பு - தினமணி


ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றனர்.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்தது.இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் சிவராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.அதாவது, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறுவது, புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட காரணங்களால் 82 அரசுக் கல்லூரிகளிலும் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட 14 அரசுக் கல்லூரிகளில் காலிப் பணியிட நிலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், 24 அரசுக் கல்லூரிகளில் முழு நேர முதல்வர்கள் நியமிக்கப்படாமல், பொறுப்பு முதல்வர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


இந்த நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 1026 உதவிப் பேராசிரியர்களுக்கு, இன்னும் பணி நியமன ஆணைகளும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டுமன்றி, கல்வியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், காலியாக உள்ள 5 மண்டல இணை இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மன்றம் முடிவு செய்துள்ளது என்றார்.

Friday, 3 July 2015

11.07.2015---CRC-SABL SCIENCE POWER POINT...-

11.07.2015---CRC-SABL SCIENCE POWER POINT...-

அம்பானியின் வாழ்க்கையை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க குஜராத் அரசு பரிசீலனை


குஜராத் அரசு மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், ரிலையன்ஸ் குழும நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை பள்ளிப் புத்தகங்களில் சேர்ப்பது குறித்து, பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து குஜராத் மாநில பள்ளி பாடப்புத்தக வாரியத் தலைவர் நிதின் பெதானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி பாடத்திட்டத்தில் திருபாய் அம்பானி உள்ளிட்ட குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று கடந்த முறை நடைபெற்ற வாரியத்தின் கூட்டத்தில், மாநில கல்வி அமைச்சர் பூபேந்தி ரசிங் சூடாஸ்மா வலியுறுத்தினார்.

அம்பானி தவிர, தேனா வங்கியின் நிறுவனர் தேவ்கரண் நாஞ்சி உள்ளிட்ட பல தொழிலதிபர்களும் சமூகத்துக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காக, தொழில் துறையில் முக்கிய பங்காற்றியவர்களின் பட்டியலை அளிக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் சூடாஸ்மா அறிவுறுத்தியுள்ளார்.

9-வது முதல் 12-வது வகுப்பு வரையிலான பாடத்திட்டத்திலோ அல்லது 6ஆவது முதல் 8ஆவது வகுப்பு வரையிலான பொது அறிவியல் பாடத்திலோ இந்தப் பாடங்கள் சேர்க்கப்படும். என்றார்.

ஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.


மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPCல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது 

"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".

அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு  ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

   உதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20 =17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன் புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள் முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.

7th Pay Commission Pay and Allowances Estimation - GConnect Calculator -

http://www.gconnect.in/orders-in-brief/7thcpc/7th-pay-commission-pay-allowances-estimation-gconnect-calculator.html

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்


வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள் என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது. ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள்செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது.

படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்டு வரை கால நீட்டிப்பு

மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களை தெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி


பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.

எனவே, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சியை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 10-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது தேர்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதேபோன்று சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

Thursday, 2 July 2015

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி

 உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

         இந்தியாவில் இணைய சமத்துவம் பற்றி விவாதங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு இணைய சமத்துவத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் குரல் அழைப்புகள், வீடியோ, படங்கள் போன்ற அனைத்து சேவைகளையும் சமமாக நடத்த வேண்டும். ‘வேகம் மற்றும் அனைவருக்கும் சேவை’ ஆகியவற்றில் பாகுபாடு இருக்க கூடாது என்பது இணைய சமத்துவத்தின் அடிப்படை. தற்போது டேட்டா அடிப்படையில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்றவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக பொது மக்களிடம் கருத்துக்கேட்கப்படும் என கூறப்படுகிறது.

2012-13ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 900 புதிய முதுகலை ஆசிரியர் பணியடங்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2015 - ACADEMIC COUNSELLING - VACANCY POSITIONS

TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2015 - ACADEMIC COUNSELLING - VACANCY POSITIONS

click here-vancant position

ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.


பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான, கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால் பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.

ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு விலக்கு


தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம்ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதால், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பின்னால் அமரும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம்


பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.இந்த தொழில்நுட்பம் வாயிலாக, வருங்காலத்தில் பிராட்பேண்ட் வேகமானது ஒரு நொடிக்குஒரு டெராபிட் (Terabits) எனும் அளவுக்கு அதிகரிக்கப்படும், இந்த வேகத்தில் இண்டர்நெட்டை உபயோகிக்கும் போது ஒரே சமயத்தில் பல கோப்புகளை (Files) பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாம் உபயோகிக்கும் பிராட்பேண்ட் வேகத்தில், ஒரு HD திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய ஒரு மணி நேரம் கூட ஆகலாம். மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தால் தற்போதய வலையமைப்புகளில் எந்தவித மாறுதல்களும் செய்ய தேவை ஏற்படாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு


தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், அதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, ஆராய்ச்சிப் படிப்பில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 10 புதிய துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 170 மாணவ, மாணவியர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் எம்.எட்., ஒருங்கிணைந்த பி.எட். பட்டப்படிப்பு தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டயப் படிப்புகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பி.எட். படிப்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பி.ஏ.பி.எட், பி.எஸ்சி. பிஎட் பயில முடியும். தற்போது தமிழ்நாடு முழுவதும் பி.எட். பட்டப் படிப்பில் 70 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். படிப்பில் 4 ஆயிரம் மாணவர்களும் பயின்று வருகின்றனர் என்றார்.
நிகழ் கல்வியாண்டு முதல் பி.எட். பட்டப் படிப்பிற்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, அதுகுறித்து தனியார் கல்லூரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பி.எட் பட்டப்படிப்பிற்கான கால அளவு அறிவிக்கப்படும் என்றார்.

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு


சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 இந்த திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
 மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, இதர துறைகள், நலவாரியங்கள் உள்ளிட்ட துறைகளிடமிருந்து நிகழாண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.
 புதிதாக, புதுப்பிக்கும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தாங்கள் பயின்று வரும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 மேலும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். 
 இதைத்தவிர, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்திட வேண்டும். பிறகு, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயின்று வரும் பள்ளியில் ஜூலை 31-க்குள் சமர்பிக்க வேண்டும். 
 மாணவர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் சரிபார்த்து, அதற்கான கேட்புப் பட்டியலில் பதிந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஜூலை 25-இல் சமர்ப்பிக்க வேண்டும். 
 மேலும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் ஜூலை 31- க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.