test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 24 June 2015

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'


      அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
      தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது. சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன், ஒரு மணி நேரம்;  
           10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மாலையில் வகுப்புகள் முடிந்த பின், ஒன்றரை மணி நேரம், சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள் முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக்கல்வித் துறையைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 4-ம் வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவ துடன்செயல் வழிக்கற்றல் முறை யானது ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை உதவிதொடக்கக் கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்க வேண்டும்

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு


சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்


பள்ளியில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் (Fresh & Renewal ) கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் . www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm.

சம்பந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2015.

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி கட்டாயம்


அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கடந்த 2014 அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்கள் முன் யோகா பயிற்சியை தினமும் கடைபிடிக்க வேண்டும்; இந்த பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 15 நிமிடம் யோகா; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 15 நிமிடங்கள் யோகா ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்க வேண்டும்.தியான பயிற்சியை காலையில் வகுப்பறையில் நடக்கும் இறை வழிபாட்டில் நடத்த வேண்டும்.

புதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் புதிதாக 6 ஐ.ஐ.எம்.கள் துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சம்பல்பூர் (ஒடிசா), அமிர்தசரஸ் (பஞ்சாப்), விசாகபட்டினம் (ஆந்திரா), நாக்பூர்
(மகாராஷ்டிரா), புத்கயா (பீகார்), ஷிமார் (இமாச்சல் பிரதேசம்) ஆகிய இடங்களில் இந்த ஐ.ஐ.எம்.க்கள் அமைக்கப்பட உள்ளது.

ஆன்-லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை; சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்


பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன்-லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவை கழகம் சார்பில், பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரே நேரத்தில்...

தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாடநுால் கழக கிடங்குகளுக்கு செல்லும் போது, சில பாட புத்தகங்கள் இருப்பு இல்லை என்ற பதில் கிடைக்கிறது. பல பள்ளிகளின் ஊழியர்கள், ஒரே நேரத்தில் வருவதால், பணம் செலுத்த நீண்டநேரம், வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

எனவே, இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1க்கு மட்டும், ஆன் - லைன் மூலம், பாட புத்தக விற்பனை திட்டத்தை, பாடநுால் கழகம் துவக்கிஉள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில், இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகத்தினர், பாடநுால் கழக, இன்ட்ரானெட் தளத்தில், புத்தக இருப்பு நிலையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் செலுத்தி, ஆர்டர் செய்யலாம்.

அடுத்த ஆண்டு முதல் பணம் செலுத்திய ரசீதை, பாடநுால் கழக மாவட்ட கிடங்கில் கொடுத்து புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது, பிளஸ் 1க்கு மட்டும், மூன்று மாவட்டங்களில், ஆன் - லைன் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பின், சில்லறை விற்பனையிலும் அமலுக்கு வரும் என்றனர்.

அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்


சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.

வேகமாக நிரம்பும் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் கடந்த 5 நாள்களில் நிரம்பி விட்டன. 
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல்: கலந்தாய்வின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, கட்-ஆஃப் மதிப்பெண் 197.00-இல் தொடங்கி 196.50 வரை எடுத்திருந்த மொத்தம் 656 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வுக்கு 47 மாணவர்கள் வரவில்லை; இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்ற 599 மாணவர்களில், 125 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை 180 மாணவர்கள் தேர்வு செய்தனர். 
சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி பி.டி.எஸ். இடங்களை 33 மாணவர்கள் தேர்வு செய்தனர். உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத 261 மாணவர்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 313 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடரும் கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 585 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 253 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 36 பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24) கலந்தாய்வு நடைபெற உள்ளது. 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்துள்ள மாணவர்கள் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
345 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 345 பழைய மாணவர்கள் இதுவரை தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், கலந்தாய்வில் தினமும் பழைய மாணவர்கள் குறித்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கடந்த 5 நாள்களில் மொத்தம் 345 பழைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 4,679 மாணவர்களில், 548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24), வியாழக்கிழமை (ஜூன் 25) ஆகிய இரண்டு நாள்கள் கலந்தாய்வு நடைùபெற உள்ளது.

Tuesday, 23 June 2015

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை,

இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை. 
கருவூலத் துறையின் திடீர் உத்தரவு: எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது. 
இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்:
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மகாத்மா காந்தி 2015 - அமைதிக்கான விருதுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

மகாத்மா காந்தி 2015 - அமைதிக்கான விருதுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு





தொடக்கக் கல்வி - வலைதளம் மூலம் சம்பள பட்டியலில் பதிவு செய்யாத ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

DEE - WEB PAYROLL - DETAILS CALLED REG TEACHERS THOSE WHO R NOT COVERED LIST CLICK HERE...

ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?


பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு
பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன. 

அதேபோல, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 1,600-க்கும் மேல் காலியாக உள்ளன. வழக்கமாக, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது. எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்தார். 

இந்தக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மணிவாசன் கோரினார். முதல்கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரை பல பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் உள்ளதால் பணி நிரவலுக்குப் பிறகு கடைசியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி


இந்த ஆண்டு முதல் 2 வருட பி.எட். படிப்பு அமல்படுத்தப்படுகிறது. இனிமேல்மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று 100 நாட்கள் செயல்முறை பயிற்சி பெறவேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். 

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

2 வருட பி.எட். படிப்பு 

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள்(பி.எட். கல்லூரி) உள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகள் 14 இருக்கின்றன. சுயநிதி கல்லூரிகள் 669 உள்ளன. இந்த கல்லூரிகளில் இதுவரை பி.எட். படிப்பு காலம் ஒரு வருடம் மட்டுமே இருந்தன. மத்திய அரசு கடந்த வருடம் பி.எட். படிப்பின் காலத்தை 2 வருடமாக உயர்த்தி உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தனியார் பி.எட். கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடின. இருப்பினும் 2 வருடம் பி.எட். கல்வியை அமல்படுத்த அனைத்து ஆயத்த பணிகளையும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் செய்து வந்தது. 

இந்த நிலையில் பி.எட். படிப்பை 2 வருடமாக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எற்கனவே 2 வருட பி.எட். படிப்புக்காக புத்தகங்களை தயாரிக்க பாடத்திட்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு இருந்தது. 

பாடத்திட்டம் வெளியிடப்படும் 

தற்போது பாடத்திட்டம் எழுதும் பணி முடிந்து பல்கலைக்கழக கல்விக்குழு அனுமதியும் வழங்கி விட்டது. அந்த பாடத்திட்டம் 4 நாட்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

அந்த பாடத்திட்டத்தின் படி அவர்கள் புத்தகத்தை தயாரித்துகொள்வார்கள். பி.எட். கல்லூரியில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பணிக்கு சென்று விடுகிறார்கள். அதனால் தான் வேலைவாய்ப்புக்கான பிரிவு பி.எட். கல்லூரிகளில் இல்லை. 

செயல் முறை பயிற்சி 100 நாட்கள் 

பி.எட். படிக்கும்போதே கம்ப்யூட்டர் கல்வி, இசை, சுகாதார கல்வி போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இனிமேல் இதுபோன்ற உப படிப்புகள் அதிகரிக்கப்படும். இந்த காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பிரகாசிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவர்களுக்கு நன்றாக கற்பிக்க முடியும். 

பள்ளிக்கூடங்களுக்கு சென்று வகுப்புகளில் ஆசிரியர்களை போல பாடம் கற்பிக்கும் செய்முறை பயிற்சியும் இப்போது அதிகரிக்கப்பட்டுவிட்டது. முன்பு 40 நாட்கள்தான் இருந்தது. அது இனிமேல் 100 நாட்கள் ஆக அதிகரிக்கப்படுகிறது. இனிமேல் பி.எட். படிப்புக்கு முதலாம் ஆண்டு 9 புத்தகங்களும் 2-ம் ஆண்டு 7 புத்தகங்களும் படிக்கவேண்டும். படிப்பதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். அதுபோல கூடுதலான பாடத்தை, உதாரணமாக கம்ப்யூட்டர் படித்தால் அதற்கென தனி கிரேடு வழங்கப்படும். 

ஒருங்கிணைந்த படிப்பு 

இந்த 2 வருட பி.எட். படிப்பு 2015-1016 கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 2016-2017-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பும். எம்.எஸ்.சி., எம்.எட். படிப்பும் கொண்டு வரப்படும். 
இவ்வாறு துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

SSA PART TIME INSTRUCTORS - RE DEPLOYMENT WITH REFERNCE TO STUDENTS STRENGTH – ORDERED -REG

SSA PART TIME INSTRUCTORS - RE DEPLOYMENT WITH REFERNCE TO STUDENTS STRENGTH – ORDERED -REG

மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,pass port பெற NOC தேவையில்லை.மத்திய அரசு கடிதம்

CLICK HERE- NO NEED GET NOC FOR PAASPORT TO CENTRAL & STATE GOVT EMPLOYEES

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை


தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவின்
அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.

 இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
 வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 தமிழகத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதில் என்.சி.டி.இ. உறுதியாக இருந்தது.
 தொடர் இழுபறி காரணமாக வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டாகவே இருக்குமா அல்லத இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.
 இந்த நிலையில், வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
 நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எட். படிப்புக் காலம் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகளாக உயர்வது உறுதியாகியுள்ளது.
 பல்கலைக்கழகம் எச்சரிக்கை: தமிழக அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, என்.சி.டி.இ.-இன் புதிய வழிகாட்டுதல், புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 மதுரையில் வருகிற 26-ஆம் தேதியும், திருநெல்வேலியில் ஜூன் 27, கோவையில் ஜூன் 29, சேலத்தில் ஜூலை 1, திருச்சியில் ஜூலை 2, சென்னையில் ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
 இதில், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

 கல்லூரிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்படக் கூடாது. அவ்வாறு பங்கேற்கத் தவறும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு?

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு?

அரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு


உடுமலையில், ஆங்கில வழி கல்வி துவங்கும் அரசு பள்ளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 120 துவக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 2013ல், ஒன்றியத்தில் உள்ள, 11 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டியதால், கடந்தாண்டு கூடுதலாக ஏழு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.

தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடிச்செல்வதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மேலும் ஐந்து பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வகையில், உடுமலை பகுதியில் தற்போது, 23 அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் உள்ளன.

எனினும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 10 சதவீதம் வரை சரிந்துள்ளது. பல பள்ளிகளில், ஆங்கில வகுப்பு பெயரளவுக்கே உள்ளதாக, பெற்றோர் கூறு கின்றனர்.

முழுமையான ஆங்கில பயிற்சி இல்லாத ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை சரிந்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்பு இருந்தால், ஆர் வத்துடன் பெற்றோர் சேர்க் கின்றனர். மாணவர் எண்ணிக் கைக்கேற்ப, கூடுதல் வகுப்பு ஏற்படுத்த, கல்வித்துறை அறிவுறுத்துகிறது. ஆனால், அதற்கேற்ற வசதிகளையும் செய்து தர வேண்டும்.

மாணவர் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பினும், அவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, ஆங்கில வழி கல்வி வகுப்புகளை தொடர்ந்து நடத்துகிறோம். இதை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலமே, மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை முழுமையாக அளிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்; கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி


மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது, என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவதோயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில், யோகா கலையை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பாடத் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டில்லியில் நேற்று வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இனி, யோகா கட்டாய பாடமாக்கப்படும். 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். இந்த பாடத்துக்கு, 100 மார்க்குகள் வழங்கப்படும். இதில், 80 மார்க், பல்வேறு ஆசனங்களை செய்வதற்கான, செய்முறை பயிற்சிக்காக வழங்கப்படும். மீதமுள்ள, 20 மார்க், கேள்வி - பதில்களுக்காக (தியரி) வழங்கப்படும்.

இந்த பாடம், மாணவர்களுக்கு கூடுதல் பாடச் சுமையாக இருக்காது. கணிதம், அறிவியல், வணிகம் போல், இது, மற்றொரு பாடமாக இருக்குமோ என, மாணவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

மாணவர்கள் சந்தோஷமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், பள்ளியில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் யோகா போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சி மையங்களிலும், யோகா கட்டாய பாடமாக்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், யோகா பயிற்சியாளர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்படும். இதனால் தான், ஆசிரியர் பயற்சி மையங்களிலும் யோகாவை, ஒரு பாடமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகா பாடங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், அடுத்த மாதம், 17 முதல், மொபைல் ஆப் மூலமாக, டவுண்லோட்  செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் மாவட்ட கல்வி அதிகாரி பதவி உயர்வு


பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

Saturday, 13 June 2015

பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு



தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24–ந்தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது. யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.
இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது;

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
        என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது. 

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது. 


இந்த கலந்தாய்வு ஒரு மாதத்திற்கும் மேலாக திருவிழா போல நடக்கும். மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து மகிழ்ச்சியாக என்ஜினீயரிங் இடங் களை தேர்ந்து எடுத்துச்செல்வார்கள்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததா? என்று பார்க்கும் வசதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரேண்டம் எண்

மேலும் ரேண்டம் எண் 15-ந் தேதியும், ரேங்க் பட்டியல் 19-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது. 

ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விண்ணப்பம் தான் தகுதியானவை ஆகும்.

விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 29-ந் தேதியும் நடைபெற உள்ளது. 

பொது கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது

மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்வார்கள். இந்த கலந்தாய்வு ஜூலை 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார். 

கலந்தாய்வு ஏற்பாடு குறித்து பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்து எடுக்கலாம். எந்த கல்லூரியில் இடம் உள்ளது என்ற விவரம் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இடத்தில் திரையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த இடம் பெரிய கூடாரம் போல அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஆகியவை செய்யப்பட்டு இருக்கும். 

மேலும் கழிப்பிட வசதி போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் கலந்தாய்வுக்கு முன்பாக முடிந்துவிடும். 

மாணவ-மாணவிகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் இருக்க கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின் பங்கேற்பு இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது


        சென்னையில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

        சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

      இந்தநிலையில், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபினாத் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

          இந்த ஆண்டு (2015-ஆம் ஆண்டு) பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களை மட்டுமே நிகழ் கல்வியாண்டுக்கான (2015-16) எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 ஏனெனில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு கடினமாக இருந்ததால், மிகவும் குறைவான மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. கடந்த ஆண்டில் முக்கியப் பாடங்களில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 
 இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2,710 பேர் முழு மதிப்பெண்கள் (200-க்கு 200) பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு 124 மாணவர்கள்தான் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று, இதர இரு பாடங்களிலும் (உயிரியல், வேதியியல்) கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவர்களே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 பாதிப்பு ஏற்படும்: கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை, வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதித்தால் நிகழ் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதை சம வாய்ப்பு எனக் கருத முடியாது. நிகழாண்டு மாணவர்களுக்கு அநீதி இழைத்ததாக ஆகிவிடும். கடந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும், இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவர்களை கலந்தாய்வுக்கு அனுமதித்தால், அவர்கள்தான் அதிகம் நன்மை பெற வழிவகுக்கும்.
 கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு படிப்பில் சேர்ந்து, அதை நிறுத்திவிட்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு வரக்கூடும். இதனால் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு அல்ல, நிகழாண்டு மாணவர்கள் அனைவருக்கும் பாதிப்பாக அமைந்துவிடும். எனவே, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை பங்கேற்க அனுமதித்து சேர்க்கை கடிதம் அளித்தால், அது இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்படும் என உத்தரவிட்டார். மேலும் ஜூலை 8-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

Department Permission Application For Government Housing Loan


    வீடு கட்ட, அரசுக்கடன் பெற அரசுப் பணியாளர் துறை அனுமதி கோரும் விண்ணப்பம்

இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'

'
  'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

       ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011ல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த, 2014, அக்., 12 முதல், 179 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இதையடுத்து, கடந்த, ஏப்., 10ம் தேதி, பணியில் சேர்ந்தேன்.

          ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,'உங்களுக்கு, ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு:

         மனுதாரருக்கு, முதல் பிரசவத்திலேயே, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாக வைத்து, அடுத்த பிரசவத் திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்கமுடியாது என்பது ஏற்புடையதல்ல.மகப்பேறு விடுப்பு, பெண்களின் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.

 முதலில், இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. வரும், 23ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல்-2015

CLICK HERE-STATE WIDE AEEO PANNEL 2015 LIST -PDF

SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

CLICK HERE - PRIMARY 20/06/2015 & UPPER PRIMARY 27/06/2015 CRC MODULE

24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்



தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

         இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

          ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும்.
COURTESY : NAKKHEERAN

பிளஸ் 2 மறு மதிப்பீடு வரும் 15ல் முடிவு வெளியீடு


பிளஸ் 2 தேர்வில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், மறு கூட்டலுக்கு 2,835 பேர் விண்ணப்பித்ததில் 696 பேருக்கும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த 3,502 பேரில் 2,782 பேருக்கும் மதிப்பெண் மாற்றம் உள்ளது.

இந்த முடிவுகள் வரும், 15ம் தேதி http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மதிப்பெண் வராதவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு வரும், 16ம் தேதி தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Tuesday, 2 June 2015

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த மாவட்டத்தில் வேறு பள்ளி காலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்,''என்றார்.