test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 28 April 2015

நேரடி நியமனம் மூலம் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை (6 DISTRICT UPDATED)

ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)

ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)


ஆசிரியர் பற்றாக்குறையால் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம்


மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தேர்வுத் துறையின் சரியான திட்டமிடல் இல்லாததால் மார்ச் 19ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இழு... இழு... என இழுத்து ஏப்.10ல் தான் முடிந்தது. இதன் பின் ஏப்.20 முதல் வேலம்மாள், மகாத்மா, செயின்ட் மேரீஸ் மற்றும் பி.கே.என்., மெட்ரிக் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.

நான்காயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மொழிப்பாடங்களில் 80 ஆயிரம் விடைத்தாள் வரை மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திருத்தும் பணியை உடனடியாக துவங்காதது, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணத்தால் இப்பணியை தேர்வுத்துறை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பணிப்பளு காரணமாக ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தில் உள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஏப்.20ல் துவங்கி 25க்குள் திருத்தும் பணியை முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 7, 8 ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கு எடுக்கும் திறன் இருந்தும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் திருத்தும் பணியில் அவர்களை ஈடுபடுத்த முடியவில்லை.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருத்தும் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இப்பணி ஏப்.28க்கும் மேல் நீடிக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாட தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கி விடுகின்றன. இந்த நடைமுறையை பத்தாம் வகுப்பிலும் கொண்டுவர வேண்டும் என்றனர்.

6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு


சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும்.

ஜூன் முதல் வாரத்தில், சிறப்பு முகாம் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிழையான வினாக்களுக்கு விடையெழுத முயற்சித்திருந்தால் மதிப்பெண்: அரசு தேர்வுகள் இயக்ககம்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 19ம் தேதி துவடங்கி, ஏப்ரல் 10ம் தேதி முடிந்தது. பிளஸ் 2 தேர்வில், சில பாடங்களுக்கான வினாத்தாள்களில், சில கேள்விகள் தவறாக அச்சிடப்பட்டிருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

அப்படி, தவறாக அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.

அவற்றுக்கு, அரசு தேர்வுகள் இயக்கக துணைத் தலைவரும், தகவல் வழங்கும் அலுவலருமான ஜோ.லூர்து சகாயராணி பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: அச்சுப்பிழையால் ஏற்பட்ட வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தாலேயே, மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு, தவறு இல்லாத வினாத்தாள் தயாரிப்பது மற்றும் பிழை இல்லாமல் அச்சடிப்பது போன்ற நிலைகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, 23 April 2015

பிளஸ் 2-க்குப் பிறகு: வருமானம் தரும் ஹார்டுவேர் பயிற்சி


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.

எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.
அறிவியல், பொறியியல் படிப்பை மேற்கொள்ள இருப்பவர்கள் தாராளமாக இந்த விடுமுறையில் கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். இது கல்லூரி மேற்படிப்பின்போது நிச்சயம் கைகொடுக்கும். புத்திசாலித்தனமாக இதையே பகுதி நேரப் பணியாகப் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த வாய்ப்புகள் சம்பாத்தியம் மட்டுமன்றி, வளரும் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய ஹார்ட்வேர் படிப்புகள் எவையெவை, அவற்றை எப்படிப் படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார், துறை சார்ந்த வல்லுநர் வந்தவாசி ஜெ.சதீஷ்குமார்.
அடிப்படை ஹார்ட்வேர் பயிற்சிகள்
பிளஸ் 2 என்றில்லை பத்தாம் வகுப்பு முடித்ததுமே கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி போதும். சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளாகவும் இவை கிடைக்கின்றன. சாப்ட்வேர் பயிற்சி மையங்கள் பலவும் அடிப்படை ஹார்டுவேர் பயிற்சியை வழங்கிவருகின்றன. ஆனால் ஹார்ட்வேர் துறையைப் பொறுத்தவரை, பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழுக்கு மதிப்பில்லை.
ஒருவர் நிரூபித்துக் காட்டும் திறன் மற்றும் நடைமுறை அறிவையே வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் பரிசோதித்து அறிகின்றன. அதனால், குறுகியகாலப் பயிற்சியைத் தொடர்ந்து நடைமுறையில் கணிசமான அனுபவம் பெற்ற பிறகு ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஹார்ட்வேர் துறையில் A+, நெட்வொர்க்கிங்கில் N+ எனச் சான்றிதழ்களைப் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.
நடைமுறை அனுபவம் அவசியம்
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சிகளில் card level, chip level என 2 நிலைகள் உண்டு. இந்த விடுமுறை இடைவெளியில் கார்ட் லெவலில் காலெடுத்து வைக்கலாம். தொடர்ந்து ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரி தொடங்கியதும், வார இறுதி விடுமுறையில் சி லெவலில் பயிற்சி பெறுவது பற்றி, பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பாடத்தைவிட நடைமுறைப் பயிற்சியே அவசியம்.
இந்தப் பயிற்சிகளை முடித்த மாணவர்கள், பயிற்சி பெற்ற நிறுவனங்கள் அல்லது மற்ற இடங்களில் ஊதியம் இன்றி உழைப்பை வழங்க முன்வருவது அனுபவ அறிவை விருத்தி செய்யும். போதிய அனுபவ அறிவைப் பெற்ற பின்னர், நண்பர்களுடன் இணைந்து தொழில் ரீதியாகவோ அல்லது தமக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அழைப்பின் பெயரிலோ ஹார்ட்வேர் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள முடியும். இதில் பெரிய முதலீடு எதுவுமின்றி மாதந்தோறும் கணிசமான தொகையைக் கல்லூரி மாணவர்கள் பலர் சம்பாதிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
நெட்வொர்க்கிங் பயிற்சிகள்
இன்றைய இணையப் பயன்பாட்டு உலகில் நெட்வொர்க்கிங்கில் பயிற்சி பெறுவதும் கூடுதல் திறனை வளர்த்தெடுக்க உதவும். சிறு அலுவலகமானாலும், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் கணினிகளைப் பிணைத்த அலுவலகப் பயன்பாட்டில் இந்தத் துறைக்கு வல்லுநர்கள் தேவை இன்னமும் அதிகரிக்கும். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு பயிற்சிகளைப் பெற்றவர்கள் cisco சான்றிதழ்களைப் பெற முயல்வதன் மூலம், தங்கள் திறனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
இதன் அடுத்த கட்டமாக Administration level பயிற்சியைப் பெறலாம். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். சான்றிதழ்கள் இந்தத் துறையில் நாம் பெற்ற பயிற்சிக்குக் கட்டியம் கூறும். பெரிய நிறுவனங்களில் பணியில் சேர விழைகையில் இந்தச் சான்றிதழ்கள் உங்கள் மதிப்பைக் கூட்டும்.
இந்த ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சிகள் 3 மாதத்தில் தொடங்கி 1 வருடப் பயிற்சியாகக் கிடைக்கின்றன. கோடைகாலப் பயிற்சியாக வழங்குபவர்கள் துரிதப் பயிற்சியாக இந்த விடுமுறையில் பாடத்தை வழங்கிவிட்டு, நடைமுறை பயிற்சியைச் சாவகாசமாக அளிப்பதும் உண்டு. ரூ. 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 16 ஆயிரம்வரை, நிலைகள் மற்றும் பயிற்சி மையங்களைப் பொறுத்துக் கட்டணங்கள் வேறுபடும்.
ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், அடிப்படைப் பயிற்சியை நேரில் பெறுவதே சிறந்தது. மேலதிகப் பயிற்சிகளைக் கல்லூரி படிப்பின் போக்கில் பகுதி நேரமாக ஆன்லைனில் பயிலலாம்.
இதர ஹார்ட்வேர் பயிற்சிகள்
சில வருடங்களுக்கு முன்புவரை கோடை விடுமுறைப் பயிற்சியாக இருந்து வந்த ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி மெக்கானிசம் பயிற்சிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் தொழில்முறை அனுபவஸ்தர்கள் ஆகியோரது ஆக்கிரமிப்பாலும், மாணவர்களின் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பு மோகத்தாலும் வரவேற்பு இழந்திருக்கிறது. மேற்படிப்பு சார்ந்து ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம்.
மற்றபடி சீஸனில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளதும், நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ரிஸ்க் உடையதுமான இப்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். மாறாக சி.சி.டி.வி., இன்வெர்ட்டர்கள், சோலார் பேனல்களை நிறுவுதல் போன்ற வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துவருகின்றன என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்.
‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி ஹார்ட்வேர் துறை ஆர்வமுள்ளவர்கள் வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் பயிற்சி பெறலாம். அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைக்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. தன்னளவில் விரிவடைந்துவரும் இத்துறையில் திறன் மிகுந்த நபர்களின் தேவை நாளும் அதிகரித்துவருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது இந்தப் பயிற்சியில் அதிகம் சேர்கிறார்கள்.
3 மாதம் தொடங்கி 1 வருடம்வரை விரியும் இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சம்வரை செல்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுவாரசியமாகவும் பயனுள்ள விடுமுறைப் பயிற்சியாகவும் இருக்கும்.

கட்டாய இலவச கல்வி சட்டப்படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரிக்கை



சென்னை: இலவச கல்விக்கான நிலுவை தொகையை தமிழக அரசு வழங்காவிட்டால் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் நந்தகுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி சுமார் 1,50,000 லட்சமாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்த்ததாக கூறினார். 

இந்த வகையில் தமிழக அரசு தங்களுக்கு 150 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக அவர் கூறிப்பிட்டார்.  நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றார். 

8&ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நந்தகுமார் வலியுறுத்தினார். தமிழ் அல்லாத மற்ற மொழி பாடங்களிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரைவில் புதிய படிவம் : சந்தீப் சக்சேனா தகவல்


சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு விரைவில் ஒரே படிவம் அறிமுகப்படுத்த உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார். வாக்காளர்களிடையே ஏற்படும் குழப்பங்களை தீர்க்க விரைவில் புதிய படிவம் அறிமுகம் செய்யப்படும் என்றார். ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை 3 கோடி வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்பட்டுள்ளன என சந்தீப் சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார். 

ஒரு கோடியே 82 லட்சம் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2&ம் கட்டமாக வரும் 26-ம் தேதி ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம் மேலும் தமிழகத்தில் 81  சதவீதம் பேருக்கு இதுவரை ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
villupuram – 317
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52
Ramanathapuram – 106
sivagangai – 105
Kanyakumari  - 94
TirunelVeli - 108
Nagapattinam – 138
Thanjavur – 167
Ariyalur – 87
Karur – 84
Pudukkottai – 170
Tiruchirapalli – 144
perambalur – 41
Vellore -286

Other District in Tamil Nadu – 1067 ( Other District List of Post Notification Available Soon)
Educational Qualifications: 10th Pass

குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி


மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ’டாப் சீட்’ முறை நடப்பாண்டிலும் பின்பற்றப்படுகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இந்த சீட்டின் ’பி’ பகுதியில், மதிப்பெண் பதிவு செய்யப்படுகிறது.

இம்மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் ’சர்வரில்’ பதிவேற்றப்படுகின்றன. கடந்தாண்டு வரை, சம்பந்தப்பட்ட மையங்களிலேயே மதிப்பெண்கள் சரி பார்க்கப்பட்டன. நடப்பாண்டு முதல், மொழிப்பாடங்களை தவிர, மற்ற பாட மதிப்பெண்கள், மாநில அளவில் மறுபரிசோதனை செய்யும் வகையில், சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ’விடைத்தாள் முகப்புசீட்டு ’பி’ பிரிவில், மதிப்பெண் பதிவு செய்யப்படும். விடைத்தாள் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களை ஒப்பிட்டு சரிபார்க்க, அப்பகுதியிலுள்ள ’பார்கோடு’ பயன்படுத்தப்படுகிறது. மாநில அளவில் சரிபார்க்கவே சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு


அரசு ஆணை எண்.121 நாள்.22.04.2015 - படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - பதிவிறக்கம் செய்ய...

GO.121 DATED.22.04.2015 - ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2015 – Orders – Click Here...

Tuesday, 21 April 2015

CM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது

Petition Reply Details
Petition No2015/823374/AT
Forwarded toSCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Petition StatusRejected
Concerned Office Replyநிராகரிக்கப்பட்டது - அரசு ஆணை எண்.408- நாள் 25.08.2009 -ன்படி முழு நேரப்பணியில் 01.04.2003 -க்கு முன்னர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். திரு.குருசாமி என்பார் பகுதி நேரப்பணியà ��லிருந்து 2008-ல்தான் முழு நேரப்பணிக்கு ஈர்க்கப்பட்டுள்ளார். அன்னாரின் சி.பி.எஸ்.எண்.7049473. பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.025293/ஆர்1/15 நாள் 17.4.15     engelsdgl@gmail.com
Fax : 044 - 2567 6929
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764         
Fax : 044 - 2567 6929

செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன்
, தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.
இதற்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் ‘பைன்ட மை போன்’ (Find my phone) என்று தட்டச்சு செய்தால் போதும், உடனே ஒரு வரைபட திரை உருவாகும். அதில் தொலைந்த ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டு விடும். ஒருவேளை உங்கள் பொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் ‘ரிங்’ என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்யலாம்.

ஆப்பிள் ஐபோன் ஏற்கனவே இதுபோன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது


ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இந்த நடைமுறையால் மாணவர்கள் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நடைமுறையால் 50 முதல் 60 சதவீத மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுத, படிக்க கூடத் தெரியாமல் 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். பொதுத் தேர்வில்பலர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை நடப்பு ஆண்டு 9ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை நிறுத்தி, தகுதி குறைவாக உள்ள மாணவர்களை வடிகட்ட உத்தரவிட்டுள்ளது.

தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக குறைக்கவும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், “9ம் வகுப்பு வரை `ஆல் பாஸ்’ நடைமுறையால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தேர்விற்கு மட்டும் வந்து செல்லுகின்றனர். சில ஆசிரியர்களும் பாடங்களை முறையாக நடத்துவதில்லை. 5, 8ம் வகுப்பில் `ஸ்கிரின் டெஸ்ட்’ வைத்து மாணவர்களின் திறனைக் கண்டறிந்து மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டியவை


ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------
(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer ) ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
அசையா சொத்து. -------------------------- 

(1) காலி வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு வாங்கும் போது அதன் விலைமதிப்பை. (guiding value) அரசு பதிவுத்துறையிடமிருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும். 
(2) கட்டிடம் கட்ட உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 
(3)கட்டிட மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இணைக்கப்பட வேண்டும். 
(4)சொத்தோ அல்லது கட்டப்பட்ட வீடோ வாங்கப்படும் நேர்வில் உரிய பனம் ஆதாரம் (source of income ) அவசியம் இணைக்கப்பட வேண்டும். 
(5) வங்கி கடன் எனில் அதற்கான சான்று, ஒப்புதல் கடிதம், தவணைத் தொகை, தவணை மாதம, ஊதியத்தில் கையில் எடுத்துச் செல்லும் தொகை குறிப்பிடப்பட வேண்டும். 
(6) நபரின் ஊதியச்சான்று. 
(7)உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். குறிப்பு. ----------- அரசாணை எண் :409, P& AR 24/12/92 ன்படி அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரால், குடும்ப உறுப்பினரின் தொகை மூலம் வாங்கப்படும் சொத்திற்கு முன் அனுமதி தேவை இல்லை. கவனத்திற்கு. --------------------' துறை ரீதியான கடன் பெற (department loan) பெற கட்டாயம் மேற்கண்ட துறை அனுமதி பெற வேண்டும்.

வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!


போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெரும்பாலான வழக்குகள் வெயிட்டேஜ் மதிபெண் தொடர்பாகவும், இன வாரியான ஒதுக்கீடு வழங்காதது குறித்தும் தான் இருக்கிறது. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் அதிக கவனம் எடுப்பதாக தெரியவில்லை. அதிமுக ஆட்சி இன்னும் 1 ஆண்டுதான் உள்ள நிலையில் இப்படியே வழக்குகளை இழுத்தடித்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக கட்சிமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. ஆனாலும் அரசு கொள்கை முடிவு, அரசு உத்தரவுகளை காட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிரான பிரச்னைகள் தொடர்கின்றன. ஆசிரியர் தேர்வில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர், பார்வையற்ற பட்டதாரிகள் தொடர்ந்த வழக்கில் அரசு செயலாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியை போலி சான்று மூலம் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. அரசு கலைக் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு, கணினி ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடி, இது போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்துவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். இவை எல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டும் போது ஏதாவது ஒரு அரசு உத்தரவைக் காட்டி இதன்படி நாங்கள் செய்தோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தப்பித்து வருகின்றனர். இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டபிறகே அடுத்தகட்ட நியமனத்துக்கான பணிகள் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த அரசின் காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் இப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் புதிய நியமனங்களை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பட்டதாரிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர்  தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மற்ற வழக்குகள் விசாரிக்க இருப்பதாலும்,
அறிக்கைகளை முழுக்க படிக்க இருப்பதாலும், நீதிமன்ற விடுமுறைக்கு பின்னர்  இவ்வழக்குகள் வரும் ஜூலை 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு


பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப்புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும்புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் - கல்வி-ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவு பறிமாற்ற கூட்டுறவை ஏற்படுத்துதல் - என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வேதச மாநாடு தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ. கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.வருகிற ஜூலை மாதம் முதல் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 இந்த வழிகாட்டுதலின் படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைஏற்றுக்கொள்ள முடியாது.வருகிற ஜூலை முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.ஒருவேளை இதற்கு எதிராக தீர்ப்புகள் வருமானால், அதை எதிர்த்து என்.சி.டி.இ. போராடும் என்றார்

Monday, 20 April 2015

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்


ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு நாளை 21,04.2015 அன்று கோர்ட்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய  ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான பணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகம் : ரிசர்வ் வங்கி திட்டம்



எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 

வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. 

இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போதுள்ள நடைமுறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து அதே வங்கிக் கணக்குகளில் மட்டுமே உடனடியாக பணம் செலுத்த முடியும். ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 

இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் கட்டாயம் தெரிவிக்க உத்தரவு


2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை வருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும். மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.

ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவு - போலியை ஒழிக்க நடவடிக்கை


ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள்
வழங்கல்துறை எச்சரித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில், ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கும் என, குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம், இந்தாண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. ஆதார் அட்டைக்கான 'பயோமெட்ரிக்' பதிவை பயன்படுத்தி, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படும். அதற்காக, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் அறிவிப்பு, ஜூனில் வெளியாகும். அந்தந்த ரேஷன் கடைகளில், இதற்கான முகாம் நடத்தப்படும்.ரேஷன் கார்டில் ஒருவரது பெயர், இருவேறு இடங்களில் இருந்தாலும், இறந்தவர் பெயர் இருந்தாலும் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். திருமணமான பெண்களுக்கு, பிறந்த வீட்டில் பெயர் நீக்கம் செய்து, புகுந்த வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.

இருவேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுகளின், ஆதார் எண் ஒரே எண்ணாக இருந்தால், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது, தானாகவே இரண்டு இடங்களிலும் ரேஷன்கார்டுகள் தற்காலிகமாக ரத்தாகி விடும்.தகுந்த ஆவணம் சமர்ப்பித்து, புதிதாக விண்ணப்பித்து, ஏதாவது ஓரிடத்தில் கார்டு பெற வேண்டியிருக்கும். இருப்பினும், நீண்ட விசாரணைக்குப் பிறகே கார்டு கிடைக்கும். மே இறுதிக்குள் ஒரே பெயரோ, இறந்தவர் பெயரோ இருவேறு கார்டுகளில் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இதுகுறித்து ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரே நேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது. திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை


மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரையிலும், முதுகலை ஆசிரியர்கள் 2009 வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான விபரங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சேகரித்து அனுப்பியது.

இப்பதவி உயர்வு பட்டியலில் குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட விபரங்களை நேரில் வரவழைத்து கல்வித்துறை ஊழியர்கள் சேகரிக்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள் திறக்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பும் திட்டம் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது" என்றார்.

30 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல்


வரும் 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.
"கல்வி ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே
அறிவுப் பரிமாற்றக் கூட்டுறவை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்க உள்ள இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.
இதில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் எம்.ராசாராம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் இப்போது 640-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்இயங்கி வருகின்றன. வருகிற 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு, என்.சி.டி.இ.-யிடம் அளிக்கப்படும்.எனவே, வரும் கல்வியாண்டில் 20 முதல் 30 புதிய பி.எட். கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?


'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. 

தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்புபோன்ற பணிகள் நடக்கின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல், 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது.

வரும், 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், 'ரிசல்ட்' வெளியாகும் தேதி முடிவாகும்.எப்படியும், மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், 'ரிசல்ட்' வெளியாகலாம். பெரும்பாலும், மே, 7ம் தேதியே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது. இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது. 

இதற்கு ஒருபடி மேலாக ‘வாட்ஸ்அப்’ என்னும் நவீன தகவல் தொழில் நுட்பம் தற்போது உலகம் முழுவதையும் கைக்குள் கட்டிப்போட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சாதாரண டெலிபோன் (தரைவழி)களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் டெலிபோன் வசதி வைத்திருக்கும் குடும்பத்தினரே செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டனர். ஆனால் செல்போன் எப்போது வந்ததோ அதில் இருந்து டெலிபோன்களுக்கு மவுசு குறைந்தது.
பன்னாட்டுகட்டணம், வெளி மாநில கட்டணம் என பல்வேறு நிலைகளில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கப்பட்டது. காலப்போக்கில் செல்போன் கிராமங்கள் வரை சென்றடைந்ததை தொடர்ந்து தரைவழி டெலிபோன்கள் காணாமல் போய் விட்டது. இதற்கிடையில் தொலை தொடர்புத்துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியதால் கடுமையான போட்டி ஏற்பட்டது. நிறுவனங்களுக்கு இடையே போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் டெலிபோன்கள் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் கடந்த 10 வருடத்தில் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வந்ததால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அவற்றை தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள். மேலும் இதனால் பி.எஸ்.என்.எல். வருவாயும் கணிசமாக குறைந்தது. இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல். டெலிபோனை பயன்படுத்துகின்றனர். தவிர வணிக பிரமுகர்கள் வர்த்தக பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு தரை வழி டெலிபோனை உபயோகப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில்டெலிபோன் சரண்டர்களை தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். மே 1–ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதுவரையில் யாரும்எதிர்பார்க்காத வகையில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. பி.எஸ்.என்.எல். டெலிபோனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது. இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின்செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம். இந்தியாவிற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் இலவசமாக பேசும் வசதியை தர இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சலுகை திட்டம் மே 1–ந் தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள்பி.எஸ்.என்.எல்–க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் பி.எஸ்.என்.எல்.க்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறோம் என்றார்.

Saturday, 18 April 2015

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவ


சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த என்.செல்வதிருமால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டியது கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் காலையில் நடக்கும் இறைவழிபாட்டில் (அசெம்பிளி) தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அதனால் அங்கு பயிலும் மாணவர்கள் தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை அறிய வாய்ப்பில்லை.

எனவே, மேற்கண்ட பள்ளிகளில் தினமும் காலையில் நடக்கும் அசெம்பிளியில் தேசிய கீதம் இசைக்கவோ அல்லது பாடவோ உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மண்டல அதிகாரியிடம் கடந்தாண்டு ஆகஸ்டு 25-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் டெல்லியில் உள்ள உதவி செயலாளரிடம் மனு அளித்தேன்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய “வந்தே மாதரம்” பாடலைப் பாடுகின்றனர். வேறு சில பள்ளிகளில் அவர்களுக்கான பள்ளிக்கூட கீதத்தைப் பாடுகிறார்கள். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் மட்டும் தினமும் காலை தேசிய கீதம் பாடப்படுகிறது. இதுபோல சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடவும், சிபிஎஸ்இ பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்போது இதனை ஒரு நிபந்தனையாகச் சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து, சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளையும் இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். ஆனால், தலைமைச் செயலகம் வந்த ஆசிரியர்் சங்க பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்த முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஜேக்டோ அமைப்பை மீண்டும் உருவாக்கி தொடர் போராட்டங்கள் நடத்த அறிவிப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் பேரணிகளை ஆசிரியர்கள் நடத்தினர். அதற்கு பிறகும் அரசு ஆசிரியர்கள் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இப்போது மீண்டும் 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 

திட்டமிட்டபடி, நாளை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இதில், 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்க உள்ளனர். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஆசிரியர்களும் நாளை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையடுத்து, மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுவதை தடுக்கவும், தேைவப்பட்டால் ஆசிரியர்களை கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

Friday, 17 April 2015

த.அ.உ.ச 2005 - அரசின் நிதியுதவி பள்ளிகளில் பணிபுரிந்து பணிமுறிவின்றி அரசு நியமனம் பெறும் நிதியுதவி பள்ளியில் தொடங்கப்பட்ட பணிபதிவேட்டினை அரசுப் பள்ளியிலும் தொடரலாம் என தகவல்

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன் பெரும்பாலான இடங்களில் முடிகிறது. 

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. வரும் 27ம் தேதிக்கு முன், திருத்தும் பணியை முடிக்க தேர்வுத் துறை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், 30ம் தேதி வரை, திருத்தும் பணி நடக்கும் என்று தெரிகிறது.10ம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்ணுக்கான முதல் கேள்வியில், இரண்டு மதிப்பெண்களுக்கு விடைகள், குழப்பமாக அமைந்ததாக புகார் எழுந்தது.சமூக அறிவியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான சில வரைபடங்களில், அச்சுக் கோளாறு இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, இந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.

Thursday, 16 April 2015

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!


பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal
ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.
இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:
1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.
2.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் மற்ற விவரங்களையும் அளித்து அதற்கான உறுதி செய்யும் கோடை அளித்தால் உங்கள் செல்போணிற்கு வரும் குறுங்செய்தியில் உள்ள OTPயை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.
3.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கனக்கில் லாக் இன் செய்து ''டவுன்லோடு'' என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும் அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.

இதன் மூலம் இனி அந்ததந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உங்கள் கணக்கில் உள்ள தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்ககளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்ககளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்

நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா 15.4.2015 அன்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இடைநிலை ஆசிரியை அமுதா வரவேற்றார்.இவ்விழாவிற்கு பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவரும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருமாகிய திருமதி அஞ்சுகம் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார்,ஊராட்சி மன்றத் தலைவர் திரு,ரஞ்சித்குமார் ரவி அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்றார்,ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.முருவம்மாள் சந்திரன் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் சீ,அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார்,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஞ்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.சு,இராமமூர்த்தி அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவர் திரு.சு.அன்பழகன், செஞ்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.வே,லட்சுமிநாராயணன்,ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.அ.விநாயகம்,கி.நெடுஞ்செழியன் கார்ப்பொரேஷன் வங்கியின் மேலாளர் திரு.மு,நாகராசு,செஞ்சி ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆ,ஷேக்மூசா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர், விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றும் நாட்டுப்புர கலைகளில் ஒன்றான தெருக்கூத்து மாணவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.அரவான் கடபலி எனும் கர்நாடக இசை அடிப்படையிலான தெருக்கூத்து மாணவர்களால் நடத்தப்பட்டது,இதில் அரவானாக பவித்திரனும்,சகாதேவனாக சுபசங்கரனும் வேடமேற்று நடித்தனர்.விழாவில் பெற்றோர்களும் பொதுமக்களும்,ஆசிரியைகள் சாந்தி,விஜயலட்சுமி வார்டு உறுப்பினர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Like · Comment · 

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு


ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஆசிரியர் பணிக்கான தகுதியைப் பெற முடியும்.
இந்தப் படிப்புகள் (தென் மண்டல பகுதியினருக்கு) கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் (ஆர்.ஐ.இ.) மட்டுமே வழங்கப்படுகின்றன.
பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு www.rieajmer.raj.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மே 11 கடைசித் தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை மே 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 9 April 2015

ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி

ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு- வீடியோ இணைப்பு
        அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருநிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.

          தற்போது செல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் பேட்டரியை புதிதாக வடிவமைத்துள்ளனர். எனவே இதில் அதிவிரைவாக சார்ஜ் செய்ய முடியும் மேலும் இதில் தீப்பிடிப்பது போன்ற அபாயம் இருக்காது.

         மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் இந்த அலுமினியம் பேட்டரி கெடுக்காது. அதுவிலை மலிவானது. இவற்றை வளைக்கவும், மடிக்கவும் முடியும். செல்போன் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் இதை பயன்படுத்தலாம்.

          அது செல்போன் மற்றும் பேட்டரி தயாரிப்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியாக கருதப்படுகிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் குழு தலைவர் ஹாங்கி டாஸ் கூறினார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் விவகாரம்: கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு


மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஜூன் 17-ஆம் தேதிக்குள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவின் மத்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் ஆர்.வேலு கடந்த 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது.இதில், தனியார் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973-இன் கீழ் செயல்படுகிறது. அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான பாடத்திட்டம், பொதுத் தேர்வுகள்தான். தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைச்சட்டம் இருக்கும் போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இது, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவதாகும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும், புதிய தனியார் பள்ளிகளை திறப்பதற்காகவும்தமிழக அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்தது.எனவே, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்ட விரோதம் எனவும், செல்லாதது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், இந்த விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கே.பாலு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைகள் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் தற்போது அவகாசம் கோரப்படுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..

EMIS-இல் -இலவச பேருந்து விவரங்களை உள்ளீடு செய்தல்

EMIS-இல் -இலவச பேருந்து விவரங்களை உள்ளீடு செய்தல்

























IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்


அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன.

இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலைபார்க்கிறார்கள். ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அந்த தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது.

ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன

ஆனால் 22-ந் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23-ந் தேதி முதல் மே 31-ந் தேதி முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு 30-ந் தேதி வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன. அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கின்றன.


இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

எந்த எண்ணெய் நல்லது?

மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க.அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய்.

இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை. தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம்.

அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல நண்பரே... மருந்து! நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

‪#‎ஆனால்‬, கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய் வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி எடுக்கின்றன

என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் விண்ணப்பம்: மே முதல் வாரம் வினியோகம்


தமிழ்நாட்டில் 570–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்களை நிரப்ப ஒற்றைசாளர முறையில் பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் இந்த கவுன்சிலிங் நடைபெறும்.இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலை கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. வழக்கமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையே இந்த வருடமும் பின்பற்றப்படுகிறது.பிளஸ்–2 தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் எந்த பாடம் பிரிவை தேர்வு செய்யலாம். எதற்கு வேலை வாய்ப்பு அதிகம் என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கட்–ஆப் மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.மே முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என்பதால் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பங்களை வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர். விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் முக்கிய ஊர்களிலும் விற்கப்படும்.

18ல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் 2 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது.

ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 31 ஆயிரத்து 215 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இதன்விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது.ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. ஈரோடு கல்வி மாவட்டத்தில் ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையத்திலும், கோபி கல்வி மாவட்டத்தில் கோபி, குருகுலம் மெட்ரிக் பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது.இதையொட்டி, இரு பள்ளிகளிலும் விடைத்தாள்கள் திருத்தும் நாள்களில், விடைத்தாள்திருத்தும் ஆசிரியர்கள் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இரு பள்ளிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Monday, 6 April 2015

பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.

தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.

மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.

ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்துவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.

நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.

மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.

தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா


தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர் வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.
தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர் முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தபால்துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறுகையில், தற்போது உடனடியாக பணத்தை பெறும் வகையிலான எலெக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும் மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை ஆலோசித்து வருகிறது என்றார். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்


பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில்
இருந்தது. இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.
அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே உயர்கல்வி பயில முடியும். இந்த கல்வித்திட்டம் அறிமுகமான கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 38 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்ச்சி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆயினும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் திறமையற்றவர்களாக விளங்குகின்றனர்.
குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் பல மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட உயர் கல்வியில் திணறும் நிலை நிலவுகிறது. இதுகுறித்த ஆய்வில் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏற்ற அளவில் அவர்களது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. நவீன உயர்கல்வி பாடங்களை சிரமமின்றி கற்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பதும் மாணவர்களின் உயர்கல்வியில் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. இதையடுத்து பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்த விபரங்களை தயார் செய்தனர்.

பின்னர் அதை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பார்வைக்கும் வழங்கி பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் கொடுத்து கடந்த ஆண்டே கல்வித்துறைக்கு சமர்ப்பித்தனர். இதை இறுதி ஆய்வு செய்த கல்வித்துறை அரசின் அனுமதி பெற்று பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அனேகமாக வரும் 2016-17ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 கல்விக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டான 201718ல் பிளஸ் 2 கல்விக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி அரசு அறிவிக்கும் என ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அறிவித்ததும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.

ஆதார் அட்டை பதிவு நிலவரம் அறிய வாய்ப்பு! வரும் 12ல் முகாம்களில் பட்டியல் வெளியீடு


ஆதார் அட்டைக்கு உடற்கூறு பதிவு செய்தவர்களின் நிலை குறித்த பட்டியல், வரும் 12 முதல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஆதார் அட்டைக்கு உடற்கூறுகளை பதிவு செய்யாமல் விடுபட்டோருக்கான நிரந்தர முகாம், மாவட்டம் முழுவதும் நடந்து
வருகிறது. தாலுகா அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி என 16 இடங்களில் ஆதார் பதிவு முகாம் செயல்படுகிறது.
விடுபட்டவர்களில் 50 சதவீதத் தினர், கடந்த மூன்று மாதங்களில் உடற்கூறு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தபாலில் ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.
ஆதார் பதிவு செய்தவர்கள், அதற்கான ரசீதை பயன்படுத்தி, இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இருப்பினும், முதல்கட்டமாக பதிவு செய்தவர்களில், பலருக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை. மேலும், தபால் துறை ஒத்துழைப்பு முழு மையாக இல்லாததால், ஆதார் அட்டை கிடைப்பதிலும் தாமதம் நிலவுகிறது.சில கிராமங்களில், உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை; பெறப்பட்ட ரசீதை தொலைத்தவர்கள், ஆதார் பதிவுக்கான மேல்நட வடிக்கை விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். மொபைல் போன் எண்களை தவறாக பதிவு செய்தல் அல்லது, வேறு மொபைல் எண் பயன்படுத்துவதால், ஆதார் அட்டை விவரங்களை தெரிந்துகொள்ள முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.

இதுவரை உடற்கூறு பதிவு செய்து, அட்டை கிடைக்காதவர்களின் நலன் கருதி, ஆதார் பதிவு விவரங்கள், அந்தந்த இணைப்பு எண்களுடன் பட்டியலிடப்பட்டு உள்ளது. வரும் 12 முதல், அனைத்து ஆதார் மையங்களிலும், இணைப்பு எண் விவரங்கள் அடங்கிய பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீது, உடற்கூறு பதிவின்போது வழங்கப்பட்ட ரசீது உள்ளிட்ட விவரங்களுடன் சென்று, பட்டியலை பார்வையிட்டு, ஆதார் அட்டை குறித்த விவரங் களை தெரிந்து கொள்ளலாம், என, ஆதார் பதிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாக்டா'-ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்  பங்கேற்க உள்ளனர்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தனியார் பள்ளிகள் புதிதாகத் துவங்க அனுமதிக்கக் கூடாது, தமிழகத்திற்கு தனிக் கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில், 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவைப் போல், 'ஜாக்டா'
கூட்டுக்குழுவும் தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளது. இக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வரும், 12ம் தேதி நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, கட்சிகள் ஆதரவு பெற்று தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, உண்ணாவிரதத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பதாக, 'ஜாக்டா' கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தெரிவித்தார். இதனால், எதிரணியில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதால், போராட்டத்தை எப்படி நிறுத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஸ்மிருதி இரானிக்கு கல்தா?


ஸ்மிருதி இரானியை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்தபோது, இவ்வளவு பெரிய அமைச்சகத்தை, இரானி எப்படி கையாளப்போகிறார் என, சீனியர் பா.ஜ., தலைவர்கள் சந்தேகப்பட்டனர். மேலிடத்திற்கு நெருக்கம் என்பதால், இரானியை எதிர்த்து யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இரானியின் இலாகா பறிக்கப்படும் என, பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி என்ன நடந்துவிட்டது?

கடந்த 11 மாதங்களாக, பா.ஜ., தலைவர்களுக்குள் இரானிக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருந்த கோபம், தற்போது வெளியே வந்துவிட்டது என்கிறது பா.ஜ., வட்டாரம். டில்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ., முதல்வர், வேட்பாளராக தன்னை அறிவித்திருக்க வேண்டும் என்பது, இரானியின் விருப்பம். கிரண்பேடி முதல்வர் வேட்பாளர் என, பா.ஜ., அறிவித்தது இரானிக்கு பிடிக்கவில்லை. 'பேடிக்கு பதிலாக இரானியைப் போட்டிருக்கலாம்; பேடியால் தோல்விதான் கிடைக்கும்' என, இரானியைச் சந்திக்க வந்த பா.ஜ., தலைவர்களிடம் சொன்னாராம்,
இரானியின் கணவர். ஒரு சீனியர் அமைச்சரும் உ.பி., பா.ஜ., தலைவருமான அந்த நபர், இரானியை சந்தித்து, அவருடைய துறையின் உதவி கேட்டபோது, மரியாதைக் குறைவாக பேசினாராம். இன்னொரு பக்கம் சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கேவலமாக நடத்துகிறார்; பைல்களை அதிகாரிகள் மீது தூக்கி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும், அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இப்படி பல விஷயங்கள், கட்சி தலைவர் அமித் ஷா காதுக்குப் போனது.
விளைவு, கட்சியின் தேசிய குழுவிலிருந்து இரானி நீக்கப்பட்டார். இதனால், பெங்களூரில் நடைபெற்ற, பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில், இரானி கலந்து கொள்ள முடியவில்லை.
அதே நாளில், கோவாவில் ஒரு துணிக்கடைக்கு சென்ற இரானி, அங்கு உடை மாற்றும் இடத்தில், ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது ரகசிய கேமரா கிடையாது என, கடை மறுத்தாலும் போலீசிடம் திடுக்கிடும் ஆதாரங்கள் உள்ளதாம். இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியால், மீடியாக்கள் அனைத்தும் இரானி செய்தியை காட்ட, பா.ஜ., பெங்களூரு மாநாடு செய்தி, அடிபட்டுப் போனது.
மோடி பிரதமராக பதவியேற்று, ஓராண்டு முடிய உள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. அதில் இரானியின் பதவி பறிக்கப்படும் என, பேச்சு அடிபடுகிறது.

270 பைனரி எண்களை நினைவு கூறி ஆசிரியர் கின்னஸ் சாதனை


நீளமான 270 பைனரி எண்களை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்து நினைவு கூறி,கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் ஆசிரியர் கின்னஸ் சாதனை படைத்தார்.கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் மொழி ஆசிரியர் அரவிந்த் (36). 

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயசிம்ஹா என்பவர் 264 பைனரி எண்களை மனப்பாடம் செய்து ஒரு நிமிடத்தில் அதை நினைவு கூறி படைத்த சாதனையை முறியடிக்க அரவிந்த்,தீவிர பயிற்சி ஈடுபட்டு வந்தார்.இதற்காக கின்னஸ் நிறுவனத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டு போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய தொகுப்பை கின்னஸ் நிறுவனம் அவருக்கு அனுப்பி வைத்தது.இதற்காக கோவை- அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் கின்னஸ் சாதனை முயற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கே.எம்.சி.எச். மனநல மருத்துவர் ஸ்ரீனிவாசன், பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசம் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். அப்போது, 270 பைனரி எண்களை சரியாக நினைவு கூறி முந்தைய சாதனையை அரவிந்த் முறியடித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஒரு நிமிடத்தில் 270 எண்களை நினைவு கூர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக தொடர்ந்து தன்னிச்சையாகப் பயிற்சி எடுத்தேன். படிக்கும் பாடங்களை அடிக்கடி நினைவு கூரும் பழக்கம் சிறு வயது முதலே இருந்து வந்தது. புதிய மொழிகளைக் கற்கும்போதும் அதில் உள்ள வார்த்தைகள், தொடர்களை நினைவில் வைத்து கொள்ளும் பழக்கமும் இருந்ததால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது என்றார்.அரவிந்துக்கு பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் தெரியும். அயல்நாட்டு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக "மெடுஷா' என்ற அகாதெமியை நடத்தி வருகிறார்.

Saturday, 4 April 2015

பீகார் : ஆசிரியர் தகுதிதேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வி


பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3
ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி
நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து
மாநில கல்வித்துறை அதிகாரி
கூறியதாவது: மாநிலத்தில் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும்
என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது.
இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு
இருமுறை தேர்வு நடத்தப்பட்டது.
முதல்முறை தோல்வியடைந்த போதிலும்
இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3
ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும்
பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என
தெரிவித்தார். மாநிலத்தில் கடந்த 2008-ம்
ஆண்டு முதல் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு
வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட
தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி
வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர்
என்பது குறி்ப்பிடத்தக்கது.

ஜாக்டோ உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைப்பவர் மற்றும் முடித்து வைப்பவர் பட்டியல் (மாவட்ட வாரியாக)

ஜாக்டோ உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைப்பவர் மற்றும் முடித்து வைப்பவர் பட்டியல் (மாவட்ட வாரியாக)









பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை


பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிகக் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. வினாக்களில் எந்தப் பிழைகளும் இல்லை என்பதால் கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற விலங்கியல், தாவரவியல் பிரிவுகளையும் சேர்த்து 30 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானவைதான். ஆனால், எம்.பி.பி.எஸ். அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்று, தசைச் சிதைவு நோய்க்கான காரணங்கள், நாடித் துடிப்பு குறைவதற்கான காரணங்கள் போன்ற கடினமான கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. புத்தகம் முழுவதும் படித்த மாணவர்கள் கூட விலங்கியல் பிரிவில் 75-க்கு 50 அல்லது 60 மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த வினாத்தாள்களிலிருந்து 5 மதிப்பெண் அளவுக்கே கேள்விகள் பொதுத்தேர்வில் வந்துள்ளன. எனவே, விடைத்தாள் திருத்துவதில் சற்றுத் தாராளமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவு கடினமாக இருந்தாலும், தாவரவியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன