test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 March 2015

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

   இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...
1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.
2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.
அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.
3. daskeyboard.com  எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.
4.  google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.
5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.
6. இதே விஷயத்தை  இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">
7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.
8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.
9.URL பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.
மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.
இந்துலேகா. சி

எம். காம்.,பி.எட்.,முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை - தொடக்க கல்வி இணை இயக்குனரின் RTI- ...தகவல்!

எம். காம்.,பி.எட்.,முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை - தொடக்க கல்வி இணை இயக்குனரின் RTI- ...தகவல்!

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

GO.68 Dt.25.03.2015-SSLC Passed Teachers are joined 1986-87(Last Batch) Teachers Training & Passed or failed, later who completed the course which is equal to +2 reg order click here...

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

TN Govt Letter No.63734/FS/T/PGC/2013, Dated : 24.03.2015 - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions Click Here...

Monday, 30 March 2015

வானில் பறக்கும் வேளையில் வை-ஃபை இண்டர்நெட் வசதி: இந்திய விமானங்களில் விரைவில் அறிமுகம்       இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

           இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, விமானத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பிராண்ட்பேண்ட் வசதிகளை வழங்கி வரும் ஆபரேட்டர்களுக்கு இதற்கான அனுமதி வழங்குவது குறித்தும் டெலிகாம் துறை யோசித்து வருகிறது. விமானங்களில் பறந்து கொண்டிருக்கும் போது மொபைல் போன்களை பிளைட் மோடில் பயன்படுத்துவதற்கும் கூட விதிமுறைகள் இருக்கிறது. ஆகவே, வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொடுக்க விதிமுறைப்படி அனுமதி பெற வேண்டும். பொதுவாக, கிரவுண்ட் ஸ்டேஷனில் உள்ள பிராண்ட்பேண்ட் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் சர்வரிலிருந்து சாட்டிலைட் வழியாக வானில் விமானத்திற்கு இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல முன்னணி விமான நிறுவனங்கள் இந்த வை-ஃபை வசதியை வியாபார யுக்தியாக செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஏர்-கிரவுண்ட் தொழில்நுட்பம் மூலம் 3.1 Mbps வேகத்தில் வழங்கும் இண்டர்நெட்டை காஸ்ட்லியாகவும், 256 Kbps குறைவான வேகத்தில் இயங்கும் இண்டர்நெட்டை குறைந்த கட்டணத்திலும் வெளிநாட்டு விமானங்கள் வழங்குகின்றன.

ஏற்கனவே, மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள 30 முக்கிய ஏர்போர்ட்டுகளில் இலவச வை-ஃபை இண்டர்நெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாகவும் அதன்பின், பயன்படுத்த குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?


           கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி.

யாருக்காக? எதற்காக?
என்பதுதான் முக்கிய விஷயம். கற்றல் திறன் குறைவான மாணவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவ்வப்போது அவர்களின் பெற்றோரிடம் மாணவரின் பயிற்சியைக் குறித்து விவாதிக்கவேண்டும். அதிகாலையில் வாசிக்க, மாணவன் அல்லது மாணவியை எழுப்ப வைக்கவேண்டும். இரவு 9 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து, மாணவர் கற்கிறாரா என்பதை உறுதிபடுத்தவேண்டும். தலைமையாசிரியிடம் ஒவ்வொரு வாரமும் எந்தெந்த மாணவருக்கு, எத்தனை முறை, எந்தெந்த நேரத்தில் தொலைபேசியில் உரையாடப்பட்டது என்கிற விவரத்தை ஆசிரியர்கள் கையால் எழுதி அளிக்கவேண்டும். இதுதவிர. ஆசிரியர்கள் கூட்டாகவோ, தனியாகவோ ஒரு மாணவ, மாணவியரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது பார்க்கவேண்டும். அதாவது உங்களின் முழுசிந்தனையும் மாணவரை நோக்கி இரவு பகல் அமையவேண்டும் என்பதே கல்வித்துறையின் விருப்பம்.
என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?
சமீபத்தில் ஒரு விழிமாற்றுத்திறனாளி ஆசிரியர் தன் ஊரிலிருந்து தனியாகக் காலை 5 மணிக்குப் பேருந்து பிடித்து, தான் பணிபுரியும் பள்ளிக்குக் காலை 6 மணிக்கு வந்து வகுப்பு எடுக்கிறார். உண்மையில் அவர் வந்து சேரும்வரை அவருக்கு எதுவும் துர்சம்பவம் நடக்கவில்லை என்பது ஓர் ஆறுதல். பிறகு அவர், மாலை வகுப்பு முடிந்தபின் சமுதாயக்கூடத்தில் இரவு 9 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்புகிறார். அவருக்குச் சர்க்கரை நோய். ஏதாவது அவருக்கு விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு. வீடு திரும்பும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டால் அவர்தான் பொறுப்பு. மற்றொரு ஆசிரியர் குழு மாணவர்களின் இல்லம் நோக்கிச் செல்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை அந்த ஊரில் வைத்துத் தனிப்பயற்சி தருகிறது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நீங்கள் இல்லம் நோக்கிச் சென்று கற்பிக்கவேண்டும்.
ஏன் வருவதில்லை?
என்று கேட்கக்கூடாது. அதற்காகத் தான் இல்லம் நோக்கிப் பள்ளி என்ற திட்டம். இது ஒரு புதிய உத்தி. இந்த உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேடித் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவேண்டும். இன்னொரு ஆசிரியர், இரவு 7 மணி முதல் 11 மணி வரை வகுப்பு எடுத்துவிட்டு, மாணவர்களுடன் அங்கேயே தூங்கிப் பின் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வகுப்பைத் தொடங்கி காலை 7 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்பி, ஓய்வு எடுத்துவிட்டுக் காலை 9 மணிக்குப் பள்ளி திரும்புகிறார். மாணவர்களும் அவ்வண்ணமே. இதற்கிடையில் மாணவருக்குத் தேவையான உணவை ஆசிரியர்தான் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தாகவேண்டும். ஒரு பெண் ஆசிரியர் மாணவர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உணவு அளித்துக் கற்பிக்கிறார். சனி, ஞாயிறுகளில் தன் வீட்டில் உணவளித்துப் பயிற்சி அளிக்கிறார். இன்னொரு ஆசிரியை தன்னுடைய பணிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் குடும்பத்தை மறந்துவிட்டு, ஞாயிறு முழுவதும் மாணவர்களுக்குக் கற்பிக்கவருகிறார். அவருடைய குடும்பத்தைப் பற்றிய முழுசிந்தனையையும் அவர் ஒதுக்கிவிட்டுக் கற்பிக்கிறார். இரவு வீடு திரும்பியபின், அவருக்குத் தொலைபேசி ஒன்று வருகிறது. மது அருந்திய ஒருவர், அவரிடம் தவறாகப் பேசும் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது மாணவரின் தந்தை. மறுநாள் காலை அவர் மன்னிப்பு கோருகிறார். இதையும் அந்த ஆசிரியை சகித்துக்கொள்ளவேண்டும்.
ஒரு ஆசிரியையின் தொலைபேசி எண் ஏன் பொதுமக்களுக்குரியதாக வேண்டும்?
ஒரு ஆசிரியர் தன் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்று, அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, மாணவர்களைச் சேர்த்துவந்து, கட்டாயமாக உட்காரவைத்துத் தேர்ச்சிக்காகக் கற்பிக்கிறார். மீண்டும் அவர் அந்த மாணவர்களை ஊரில் விட்டுவிட்டு தன் வீடு திரும்ப இரவு 10 ஆகிவிடுகிறது. வரும் வழியில் மாணவர்களுக்கு ஏற்படும் அசாம்பாவிதத்திற்கு அவரே பொறுப்பு. அவருக்கு ஏற்படும் அசம்பாவிதத்திற்கு யாரும் காரணம் ஆகமுடியாது. காரணமும் கோரமுடியாது. காலை 6-9 வரை சிறப்பு வகுப்பு, பின் 9.00 - 4.30 வரை வழக்கமான வகுப்பு, பிறகு 4.30 - 5.30 வரை சிறப்பு வகுப்பு, பின்பு 6-9 வரை இரவு வகுப்பு, காலை 4-6 வரை சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு முழுவதும் சிறப்பு வகுப்பு என மாறி மாறி சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மாணவன் மூச்சுவிடவும், ஆசிரியர் ஓய்வு எடுக்கவும் நேரம்தான் இல்லை.
இத்தனை சிறப்பு வகுப்புகள் எதற்காக?
ஏன் இந்த ஓட்டம்..?
ஒரு கற்பவரின் தேர்ச்சி ஒரு பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துகிறது. ஒரு பள்ளியின் உயர்ச்சி, மாவட்டத்தின் உயர்ச்சி அதாவது மாநில அளவில் அதன் தரம் உயர்கிறது. ஒரு வேளை கற்பவர் தோல்வி அடைந்தால் ஒரு பள்ளி, மாவட்டத்தின் தரம் வீழ்கிறது. எனவே ஒரு பள்ளி உயரவேண்டும், ஒரு மாவட்டம் மாநில அளவில் தரம் உயரவேண்டும் என்று ஒட்டம்தான் இதற்குக் காரணம். இந்த ஓட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிகழ்கிறது. மாணவர், ஆசிரியர், பள்ளி, மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் என்ன? என்று கேள்வி எழுதாதபோது, ஏன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை.
ஏன் இந்த ஓட்டம் நிகழவில்லை?
என்பதுதான் கேள்வி. இந்த சிறப்பு வகுப்புகள் எத்தனை மாதங்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழுந்தால், தேர்வுக்கு இரண்டு மாதம் முன்புதான் என்பது பதில். உடனடி உணவு என்பதுபோல் உடனடி பயிற்சி. இந்த உடன் அடி பயிற்சியில் மாணவர்களைத் தேரவைக்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைத் தன்பிள்ளைபோல், மாணவர்களின் வறுமைக் குடும்பத்தைத் தன் குடும்பம்போல் பாவித்து. சகிப்புத்தன்மையுடன், எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் பொறுமையுடனும், ரோஷத்தையும் கவுரவத்தையும் விட்டுவிட்டு, இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவேண்டும். இது எல்லாம் எதற்காக? ஒரு மாணவர் தேர்ச்சி அடைய போதுமான மதிப்பெண் 35-க்காக. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே அந்த மாணவர் தேர்ச்சி அடைந்துவிடுவார். பள்ளி நாட்கள் மொத்தம் 205. இந்த நாட்களில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டுமே படிக்க ஒரிரு வாரம்போதும்.
ஆனால் என்ன நடக்கிறது?
ஆசிரியர் கற்று தரும் பாடங்களைத் தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்காமல், சமூகச் சீர்க்கேட்டிற்கும் விளையாட்டுக்கும் பொழுதுபோக்குக்கும் நேரத்தை வீணடித்த மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் அயராது பாடுபடவேண்டும். கோடிக்கணக்காகப் பள்ளிக்குச் செலவழிக்கும் அரசை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது. அது பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நன்றாகத்தான் வைத்துள்ளது. ஆனால், ஓர் அரசுப் பள்ளியில் கால் சதவீத மாணவர்களின் பொறுப்பின்மையால் அரசும் ஆசிரியர்களும் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் உதவிகளும் கேலிக்குரியதாகின்றன.
பெற்றோரின் பொறுப்புதான் என்ன?
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில்.
இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே.
இது எவ்வளவு பெரிய அவலம்?
அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்? ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான். தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான். ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.
பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:
* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?
* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?
* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?
* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?
* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்?
உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது. அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது இமாச்சல பிரதேசம்

   மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பிலிருந்தே, இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதாக இமாச்சல பிரதேச முதல்வர் விர்பத்ரா சிங் அறிவித்துள்ளார்.

         பாண்டா சாகிப் என்ற இடத்தில் கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய அவர், மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், தற்போது, அதன் அடிப்படை உள்-கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்குவதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது, பல தனியார் கல்வி நிறுவனங்களில் போதுமான கற்பித்தல் மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்கள் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இமாச்சல பிரதேசத்தை கல்வி மையமாக மாற்றுவதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகுமென்றும் தெரிவித்தார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-

1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல் 
3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.
குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய பணியில் பணிபுரிந்த DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும். அதேபோல் மாற்றம் செய்ய வேண்டிய DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.


பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்


அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு: ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎட் பயில்கின்றனர்.

இதற்காக இவர்கள் பள்ளிகளை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படு கிறது. எனவே, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக இருந்தால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது.எனவே, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் பயிலும்போது உரிய அனுமதி பெற்று அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே பணிக்கு இடையூறு இன்றி பயிற்சி எடுக்கலாம்.இதேபோல தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பிஎட் பயிலும்போது கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என ஆணை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது

இந்த கோரிக்கை அரசால் ஆய்வு செய்யப்பட்டு, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் படிக்கும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிற்சி மேற்கொள்ளலாம்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கும் பள்ளிகளில் மேற்கொள்ளலாம்.

Friday, 27 March 2015

இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதி

இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதிபகுதிநேர பயிற்றுநர்களின் 2015 மார்ச் மாத ஊதியமும்ஏப்ரல் 2014லிருந்து அக்டோபர் 2014 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையும் 31.3.2015 க்குள்வழங்கிஉரிய பதிவேடுகளில் பதியப்பட வேண்டும் என்றுஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள்ஆணை பிறப்பித்துள்ளனர்.

ஈடுசெய் (தற்செயல்) விடுப்பு விண்ணப்பம்.

ஈடுசெய் (தற்செயல்) விடுப்பு விண்ணப்பம்.

CLICK HERE-TO DOWNLOAD COMPENSATIVE MODEL LEAVE LETTER

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்


மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்;
இதுபோன்ற நிலைமை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும் மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும், பீதியும் அடைந்து உள்ளனர். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன், மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை, கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி, உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம் பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலை இருந்தது. இதனால், பல தனியார் மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Thursday, 26 March 2015

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லைTNPSC - DEPARTMENTAL EXAMINATION TIME TABLE - MAY 2015 FOR EDUCATION DEPT

TNPSC - DEPARTMENTAL EXAMINATION TIME TABLE - MAY 2015 FOR EDUCATION DEPT

போட்டித்தேர்வு போல் கேட்கப்பட்ட வினாக்களால் திணறிய மாணவர்கள்


பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.

பத்தாம் வகுப்புக்கு, தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இல்லாத, உள்பக்க கேள்விகளாகவும், கடினமானதாகவும் இருந்தன.

புத்தகத்தில் உள்ளது

ஒரு மதிப்பெண்ணுக்கான, ஐந்தாவது கேள்வியாக, தொகைச் சொல்லை விரித்து எழுதுக? என்ற கேள்வி, பாடத்திட்டத்தில் இல்லை என்று சில மாணவர்கள் கூறினர். ஆனால், புத்தகத்தில் உள்ளதுதான் என தமிழாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம், தமிழ் மொழி மாற்றம் செய்யும் கேள்விகள் இடம் பிடித்தன.

மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் வகையில், பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு சொத்துரிமை; நீர்ப்பற்றாக்குறைக்கான காரணம், நீர் சேமிப்பு முறை, பள்ளி விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்றுப் பேசும் முறை; சாலை வசதி வேண்டி, நகராட்சி ஆணையருக்கு மனு எழுதுதல்; வங்கியில் பணம் எடுக்க விண்ணப்பிக்கும் முறை போன்ற கேள்விகள் இடம் பிடித்தன.

இரண்டு மதிப்பெண்களுக்கான ஒரு கேள்வியில், அரபு எண்களை தமிழ் எண்களாக எழுதும் முறை, வித்தியாசமாக போட்டித் தேர்வு முறை போல், சிந்திக்க வைக்கும் வகையில் இடம் பிடித்தது. அதாவது, 34வது எண் வினாவில், ஆ பிரிவில், நான்கு வகை வாக்கியங்கள் தரப்பட்டன. உதாரணமாக, உன் வகுப்பிலுள்ள மொத்த மாணவர் எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டு, அடைப்புக்குறியில் அரபு எண்ணான, 45 தரப்பட்டு இருந்தது. இதற்கு, 45க்கான தமிழ் வடிவ எண்ணை எழுத வேண்டும்.

திணறினர்

இக்கேள்விக்கு விடை அளிக்க மாணவர்கள் முதலில் திணறினர். ஆனாலும், புரிந்து கொண்டு விடைகள் எழுதியுள்ளனர். இதுகுறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ கூறும்போது, "புளூபிரின்ட் மற்றும் புத்தகத்தில் இந்த பாடம் உள்ளது.

அதில், அரபு எண்களை மட்டும் கொடுத்து, அதற்கு தமிழ் எண் எழுத பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதைப் புதுமையாக மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில், வாக்கியமாக கொடுத்துள்ளனர்; இது வரவேற்கத்தக்கது" என்றார்.

2015ம் ஆண்டு தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான கவனிப்பு என்ன?


2015-16 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், மார்ச் 25ம் தேதி (இன்று) சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதில் கல்வித்துறை மற்றும் மாணவர் நலனுக்காக நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு,

* பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு - ரூ.20,936.50 கோடிகள்

* உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு - ரூ.3696.82 கோடிகள்

பள்ளிக் கல்வி

* பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த - ரூ.450.96 கோடிகள்

* பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், 4 செட் சீருடை, புத்தகப் பை, செருப்பு, ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் மேப், கிரயான்ஸ், கலர் பென்சில், உல்லன் ஸ்வெட்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்க - ரூ.1037.85 கோடிகள்

* 6.62 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வாங்க - 219.50 கோடிகள்

* மதிய உணவு திட்டத்திற்கு - 1470.53 கோடிகள்

உயர்கல்வி

* பட்டப் படிப்பை மேற்கொள்ளும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க - 569.65 கோடிகள்

* அண்ணாமலைப் பல்கலைக்கு நிதியுதவி அளிக்க - 110.57 கோடிகள்

இதர அம்சங்கள்

* விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த துறைக்கு 149.70 கோடிகள்

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு - 140.12 கோடிகள்

* மாநிலத்தில் எஞ்சியுள்ள 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு, கேஸ் இணைப்பு கொடுக்கப்படும்.

* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க - 1,100 கோடிகள்

* ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை வழங்க - முறையே ரூ.56.37 கோடிகள் மற்றும் ரூ.674.98 கோடிகள்

* ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் உணவு செலவினங்களுக்காக - ரூ.102.79 கோடிகள்

* ஆதிதிராவிட மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்த - ரூ.162.91 கோடிகள்.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக - ரூ.364.62 கோடிகள்

* 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!


107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி


தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பட்ஜெட் துளிகள்:
* மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த பன்னீர்செல்வம், நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
* மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்
* பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
* தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி அறிவிப்பு
* சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி
* தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் மார்க் சிட்டி திட்டத்தில் சேர்க்க நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி
* பின்தங்கிய மலைப்பகுதி மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி நிதி
* தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைக்கு ரூ.198.9 கோடி நிதி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்பிற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.46.77 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ.5,568.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.538.49 கோடி நிதி
* நீதிதுறைக்கு ரூ.809 கோடி நிதி ஒதுக்கீடு
பால் வளத்துறைக்கு ரூ.100.68 கோடி நிதி
* கைப்பேசிக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* 10 எச்.பி மோட்டார் பம்புக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* ஏலக்காய் மீதான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* எல்.இ.டி விளக்குகளுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ரூ.183 கோடி நிதி
* குடிமைப் பொருள் விநியோக திட்டத்திற்கு ரூ.5300 கோடி நிதி ஒதுக்கீடு
* பாலங்கள், ஏரிகள் பராமரிப்பு மற்றும் புதிய ஏரிகள் உருவாக்க ரூ.334.57 கோடி நிதி
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696 கோடி நிதி ஒதுக்கீடு

Wednesday, 25 March 2015

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும். 
ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் வகுத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் இல்லை. எனவே, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் கல்வி படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதி வந்தனர். 

புதுச்சேரியில் இதுவரை 400 டி.டி.எட்.,பட்டயஆசிரியர்களும், 350 பி.எட்.பட்டதாரி ஆசியர்களும் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் பணி கனவில் உள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி இயக்ககம், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்ணில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனி, நான்கு பிராந்தியங்களிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., திட்டத்தின் கீழ், (CTET) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள 180 மதிப்பெண்களில், பொதுப்பிரிவினர்-90 மதிப்பெண், எம்.பி.சி., மீனவர், ஓ.பி.சி., முஸ்லிம் பிரிவினர்-82, எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகள்-75 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றிப்பெற்றதாக கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தரமான கல்வியை வழங்குவதற்காக, நான்கு பிராந்தியங்களிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆங்கில மீடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு வரையிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வினை இனி சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திடீர் மாற்றம் ஏன்?

ஏனாமில் ஆசிரியர் கல்வி படித்தவர்கள், ஆந்திர கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி வந்தனர். ஆந்திர அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினையே வேலைவாய்ப்பிற்கான தகுதியாக எடுத்துக்கொண்டதால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏனாம் பகுதியில் ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகளை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்தது.இதனால் தெலுங்குமொழியை தாய்மொழியாக கொண்டு பாடம் படித்த ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் எங்கும் தகுதி தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதேபோல், ஒவ்வொரு மாநிலமும் புதுச்சேரியை கழற்றிவிட்டால் எதிர்காலத்தில் புதுச்சேரி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துவது சிக்கலாகிவிடும் என, கருதி தற்போது ஒரே மாதிரியான தகுதி தேர்வு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவுபள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
பார்வையற்றோரை குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என அரசு பதில் அளித்துள்ளது. 

பார்வையற்றோரையும் சாதாரண மனிதர்களாக பார்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பார்வையற்றோரை நியமிக்காதது ஏன்? இது குறித்து சபீதா விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சபீதா நேரில் ஆஜராகவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொப்பை குறைய - (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்கபொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.


சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும்.

மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

க்ரீன் டீ 
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.

பீன்ஸ் 
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.

ஆப்பிள் 
ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

அவகேடோ
 உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.

வேர்க்கடலை 
வெண்ணெய் பொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சமையல் எண்ணெய்கள் 
ஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.

காய்கறிகள் 
காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.

டார்க் சாக்லெட் 
ஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

ஓட்ஸ்
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.
பூண்டு
நறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.
முட்டை 
ஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.
செலரி 
கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

இஞ்சி 
இஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.

பெர்ரிப் பழங்கள் 
பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.

பட்டை 
மசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.

பேரிக்காய் 
பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

குளிர்ந்த நீர் 
தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.

தினை 
தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு 
சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

சிவப்பு மிளகாய் 
நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.

Tuesday, 24 March 2015

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம்


ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?

       அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.

-----------------------
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

-----------------------

அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?

அரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2 மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.

-------------------

உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?

அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

-----------------------
தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?

அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------

வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?

அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்
-----------------------

அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?

அரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

-------------------------

முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?

அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.

குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.

------------------
குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??

அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும் மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.

-------------------------

மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?

அரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !!!

தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
1)தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)
2)இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல் விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93)

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?
அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு,
ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.

தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை


* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை: 
 அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.

* பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை:
 ஆரம்ப பள்ளிகளில் 64855, நடுநிலைப் பள்ளிகளில் 50508, உயர்நிலைப் பள்ளிகளில் 27891, மேனிலைப் பள்ளிகளில் 73616 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 
 மேற்கண்ட பள்ளிகளில் 56,55,628 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

* மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 25,01483, மாணவியர் 24,67,455 படிக்கின்றனர். 

* மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 42,86,450, மாணவியர் 4109752 பேர் படிக்கின்றனர்.

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வு திட்டத்தை முதலில் அறிமுகம் செய்த போது அதை மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்றுக்  கொள்ளாமல் அதை செயல்படுத்தவில்லை. மேற்கண்ட 3 மாநிலத்திலும் அப்போது கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் இருந்தாலும் மேற்கண்ட பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வரவே இல்லை. ஆனால் தமிழகம் மட்டுமே இந்த பங்களிப்பு ஓய்வு ஊதிய  திட்டத்தை வேண்டும் என்றே கொண்டு வந்து ஆசிரியர்களை பழிவாங்குகிறது. அந்த 3 மாநில அரசுகள் ஆசிரியர் அரசு ஊழியர் நலன் காக்கும் அரசாக  இருக்கின்றன. தமிழக அரசு ஆசிரியர்களை வதைப்பதாக உள்ளது என்று ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் -DINAKARAN

ஆசிரியர்கள் போராட்டம் -DINAKARAN

குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்


பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் செயல்வழிக் கற்றல் பயிற்சி (ஏபிஎல்) பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், படைப்பாற்றல் கல்விப் பயிற்சி (ஏஎல்எம்) பயிற்சி பெறும் 6-8-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஓராண்டில் பயிற்சி பெறும் 10 நாள்களையும் 10 பணி நாள்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாள்களும் பள்ளிச் செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாள்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் எனவும் ஆணையிடப்படுகிறது.

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சிகளில் கலந்துகொள்ளும் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும் திருத்தம் செய்யப்படுகிறது.அதாவது இத்தகைய ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாள்களில் வழங்க கருதவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் நாள்கள் பணிநாள்களாக இருப்பின் பணி நாள்களாகவே கருதலாம். விடுமுறை நாள்களாக இருப்பின் 10 நாள்களுக்கு மிகாமல் அதனை ஈடுசெய் விடுப்பாக (சிறப்பு தற்செயல் விடுப்பு) அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அழைத்து பேச மனமில்லை; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

அழைத்து பேச மனமில்லை; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

கிருஷ்ணகிரி பள்ளியில் ஜெராக்ஸ் எடுத்து மோசடி


ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி  தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், அரசு மற்றும் தனியார்  பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். அன்று ஒரு அறையில் கண்காணிப்பாளராக அரசு பள்ளி ஆசிரியை பணியில் இருந்துள்ளார்.
அந்த  அறையில் மொத்தம் 22 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் வரவில்லை. இதையடுத்து அந்த கேள்வி தாளை உடனடியாக அதே  பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியையிடம் வழங்கி, அந்த கேள்வி தாளை ஜெராக்ஸ் எடுத்து, உடனடியாக  கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்திடம் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அவரும் செய்துள்ளார். தேர்வு முடிந்த பின் விடைத்தாள் அனைத்தும், அந்த மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய கிருஷ்ணகிரி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் தேர்வு எழுத வராதவரின் கேள்வித்தாள் திருப்பி வழங்கப்படாதது  தெரியவந்தது. விசாரணையில் அந்த கேள்வித்தாளை, அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியை தன்னிடமே வைத்திருந்ததும், அந்த கேள்வித்தாளை  ஜெராக்ஸ் எடுத்து தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கியதும் தெரியவந்தது. 

இதுகுறித்து மைய பொறுப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக அங்கு சென்று, அந்த ஆசிரியையிடம்  விளக்கம் கடிதம் எழுதி வாங்கி, மன்னித்து அனுப்பியுள்ளார். இது தற்போது வெளியாகியுள்ளது. இதன் பேரில், கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள அரசு  தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில், அந்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 26) ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த 8 நாள்களாக காப்பியடித்ததாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் வினாத்தாளை அனுப்பி ஒரு மதிப்பெண் விடைகளைப் பெறவும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து, தேர்வுப் பணிகளில் உள்ள ஆசிரியர்கள் விழிப்போடு பணியாற்றும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச் 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில், பிளஸ் 2 வகுப்புக்கு இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் தேர்வறை கண்காணிப்பாளர் தவிர, பிற அதிகாரிகளால் காப்பியடிக்கும் மாணவர்கள் பிடிக்கப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட தேர்வறைக் கண்காணிப்பாளர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கழகத்தின் மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த உத்தரவு தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய வைத்துள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக சோதனை செய்யக் கூடாது என்ற விதியுள்ளது.
பறக்கும்படை, உயர் அதிகாரிகள் வரும்போது அறைக்குள் மாணவர் செய்யும் தவறுக்கு தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். எனவே, இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆசிரியர்களின் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வியாழக்கிழமை (மார்ச் 26) ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இதுவரை எந்தவொரு ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை


கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டியது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.

==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம். இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம்.


15 + 7 = 22

==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும் விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க.

22 * 10 = 220

==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க.

15 * 17 = 5 7
5 * 7 = 35

==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல் பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இறுதி பெருக்கல் விடை கிடைத்து விடும்.

220 + 35 = 255
ஃ 15* 17 = 255...

மற்றுமொரு உதாரணமாக

18 * 14 = ?
(18+4) * 10 = 220
8*4 = 32
220 + 32
------
252
------
ஃ 18 * 14 = 252....
Posted by suresh v 

அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

CLICK HERE-SSA-SPD -PRO ORDER

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :

தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள் 

தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 


ஈட்டிய விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
மருத்துவவிடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சொந்தக்காரண விடுப்பு - ஊதியத்தில் 50% & படிகள் 
அசாதாரண விடுப்பு - ஊதியம் ஏதுமில்லை 
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - முழுஊதியம் & படிகள் (MA தவிர) 
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு:
0 - 2 வருடம் = இல்லை 
2 - 5 வருடம் = 90 நாட்கள் 
5 - 10 வருடம் =180 நாட்கள் 
10 - 15 வருடம் =270 நாட்கள் 
15 - 20 வருடம் =360 நாட்கள் 
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம்


மணலி புதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுமானம் துவங்கியுள்ளது.

மணலி புதுநகரில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 357 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் இன்றி மாணவர்கள் பரிதவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 8.6 லட்சம் ரூபாய் செலவில், அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. அடுத்த மாதஇறுதிக் குள் கட்டுமான பணி நிறைவு பெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, 18 March 2015

---அரசானைகள் விபரம் -----------------
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

-----------------------

ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?
அரசாணை நிலை  எண்.381 நிதித்துறை   நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும்  தற்காலிக  முன்பணமாக ரூபாய் 2,50,000,  மட்டுமே பெற முடியும்.

-----------------------
 அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?
அரசாணை நிலை  எண்.157,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.
-------------------
உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?
அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில்  ஊதியம் வழங்கப்படும்.
-----------------------
தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?
அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------
வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?
அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்
-----------------------
அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?
அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.
-------------------------
முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?
அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.
குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.
------------------
குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??
அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும்  மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ  விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.
-------------------------
மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?
அரசாணை நிலை  எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
: தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !!!
தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
                                                                  1)தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)     
                                                           2)இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல் விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93)             (SSTA நண்பர்களே நாளை விடுமுறை எடுத்தால் நாளைமறுநாள் சனிக்கிழமை வேலையில் சேரவேண்டும்.)

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?
அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு,
ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.

தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு

பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரே வாரத்தில், தமிழகத்தில், மூன்று அரசு பள்ளிகளின் சுவர் இடிந்து விழுந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்த விபத்தில், ஐந்து மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் பகுதியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.

சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது மாணவ, மாணவியர் வகுப்பறையில் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த தொடர் விபத்துகளால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் கட்டட சுவர்களில் சேதம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும், தற்போது, ஊடகங்களில் செய்தியாவதால், பிரச்னையை சரிசெய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் ஓட்டை உடைசலாக இருக்கும் பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசமான கட்டடங்களின் பட்டியல் வந்தவுடன் பட்ஜெட்டில், மானியக் கோரிக்கை அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அவற்றை பராமரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆகஸ்டில் அடுத்த டெட் தேர்வு 10000 ஆயிரம் பேருக்கு ஆசிரியராக வாய்ப்பு

ஆகஸ்டில் அடுத்த டெட் தேர்வு 10000 ஆயிரம் பேருக்கு ஆசிரியராக வாய்ப்பு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில் 5.40 லட்சம் பேர் மாணவர்கள், 5.32 லட்சம் பேர் மாணவிகள் ஆவர்.

தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இத் தேர்வுக்காக 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட 33,816 மாணவ, மாணவிகள் நிகழாண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 50,429 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

241 சிறைவாசிகள்: மேலும், 241 சிறைவாசிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் 33 பேரும், கோவை மத்திய சிறையில் 97 பேரும், புழல் மத்தியச் சிறையில் 111 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வுடனேயே நிகழாண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படுகிறது.

ஆனால், இரண்டு வகுப்புகளுக்குமான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறாத வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள்: தமிழ், ஆங்கிலம், பிற மொழிப் பாடங்களுக்கு 22 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும். இதில், சமூக அறிவியல் பாடத்துக்கான விடைத்தாள் புத்தகத்தில் முதல் நான்கு பக்கங்களில் 4 வரைபடங்கள் இடம்பெற்றிருக்கும்.

9.15 மணிக்கே தொடங்கும்: பிளஸ் 2 தேர்வு வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், 10-ஆம் வகுப்புத் தேர்வு கடந்த ஆண்டு வழக்கமான நேரத்துக்குப் பதில் 45 நிமிஷங்கள் முன்னதாக 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல, நிகழாண்டும் 10-ஆம் வகுப்புத் தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்குகிறது.

முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்ததாக 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.

சென்னையில் 57,000 பேர்: சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர்.தேர்வு அட்டவணை

மார்ச் 19 வியாழக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள்

மார்ச் 24 செவ்வாய்க்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்

மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்

ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்

ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

கண் திறக்குமா?


மனித வாழ்வின் அடிப்படை விஷயங்களில் முக்கியமானது கல்வி. இது அனைவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும். நாட்டிலேயே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு. ஆனால் இதில் பெரும்பகுதி தனியாருக்கு சொந்தமானவை. உயர்க்கல்வியைவிட முக்கியமானது அடிப்படை, தொடக்கக் கல்வியாகும். இதிலும் தனியார் கல்வி நிறுவனங்களே அதிக அளவில் உள்ளன.

அனைவருக்கும் கல்வி கிடைக்க, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டுமானால், அது அரசு கல்வி நிறுவனங்களால் மட்டுமே செய்ய முடியும். அரசுப் பள்ளியில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றாலே தற்போது அது கவுரவ குறைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே. அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருந்தால், தனியார் பள்ளிகளுக்கு செல்வதை குறைத்துவிடலாம்.
ஆனால் நடப்பதோ தலைகீழ். அரசுப் பள்ளிகள் கட்டுவதற்கும், சீரமைப்பதற்கும் மத்திய அரசு வழங்கும் நிதியைக் கூட, தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. பள்ளிகள் கட்ட, மாணவிகளுக்கு விடுதி அமைக்க என மாநில அரசுகளுக்கு மத்திய தேசிய இடைநிலை கல்வி இயக்ககம் நிதியுதவி அளித்து வருகிறது. அதன்படி இந்த வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஸீ 4,400 கோடியைத்தான் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணாக்கியுள்ளது.
இது கல்வித் துறையின் மீது அரசுக்கு உள்ள அக்கறையின்மையையே காட்டுகிறது. வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாதது கொடியதிலும் கொடியது. அரசின் அலட்சியத்துக்கு ஏழை எளிய மக்களின் குழந்தைகள் எதிர்காலம் விலையாகிவிடக் கூடாது. இன்றும் கிராமங்களிலும், நகரங்களின் புறநகர் பகுதிகளில் மரத்தடியிலும், பாழடைந்த கட்டிடங்களிலும்தான் பாடம் நடத்தப்படுகிறது.
பின்லாந்து ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு. இன்று உலகெங்கும் உள்ள நாடுகள் பின்லாந்துக்கு படையெடுக்கின்றன. காரணம் அங்குள்ள கல்வி முறைதான். உலகின் மிகச் சிறந்த கல்விமுறை இங்குதான் உள்ளது என்கின்றனர். அதற்கு காரணம் அங்கு கல்வியை அரசு அளிக்கிறது. தனியார் பள்ளிகளே கிடையாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுப் பள்ளியில்தான் கல்வி.
அதுபோன்ற நிலையை இங்கு எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளையாவது அரசு தர வேண்டும். நமது குழந்தைகளின் கல்விக் கண்ணை திறப்பதற்கு அரசு கண் விழிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!


1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்...

Tuesday, 17 March 2015

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

DSE - 8 HIGH / HIGHER SECONDARY SCHOOLS HMs PROMOTED AS DEO REG PROC CLICK HERE...

GO.56 SCL EDN DEPT DATED.12.03.2015 - 8 HIGH / HIGHER SECONDARY SCHOOLS HM PROMOTED AS DEO REG ORDER CLICK HERE...

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

GO.62 SCL EDN DEPT DATED.13.03.2015 - SPECIAL CL FOR PRIMARY & MIDDLE SCHOOL TEACHERS REG ORDER CLICK HERE...

Monday, 16 March 2015

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை வெளியீடு

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை வெளியீடு
அரசாணை  எண் :62 நாள்: 13.03.2015  தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்  பணியாற்றும்  ஆசிரியர்களுக்கான  குறுவளமைய  பயிற்சிக்கான  ஈடுசெய்  விடுப்பிற்கான  அரசாணை  வெளியீடு

அரசாணை விரைவில் ............

25ஆம் தேதி தமிழக பட்ஜெட்


தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு, 2015-16ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை, முதல்வரும் நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.