test

R P

Friday, 21 August 2015

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு புதிய இணையதளம்....

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கும், அரசு கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் வசதியாக தொடங்கப்பட்டுள்ள இணையதள சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
 www.vidyalakshmi.co.in என்ற இந்த இணையதளம் தொடர்பான அறிவிப்பை 2015-16 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். அப்போது "பிரதமரின் வித்யா லட்சுமி (பிஎம்விஎல்கே) திட்ட'த்தின் கீழ் மாணவர்கள் கல்விக் கடன், கல்வி உதவித் தொகை பெற வசதியாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
 இதன்படி www.vidyalakshmi.co.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு வடிவமைக்கத் தொடங்கியது. அதன் சேவை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் அறிமுகமானது. தற்போது முழுமையாக அதன் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
 இந்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் கல்விக் கடன், கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியும். வங்கிகளின் கல்விக் கடன் திட்டம், கல்விக் கடன் தொடர்பான பொதுவான விண்ணப்பம், கல்விக் கடன் கேட்டு பல்வேறு வங்கிகளுக்கு விண்ணப்பித்தல், கல்விக் கடன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. 
 கல்விக் கடன் தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம். மேலும், அரசு கல்வி உதவித் தொகை விவரங்களையும் பெறலாம்.
 இந்த இணையதளத்தில் இதுவரை 13 வங்கிகள் பதிவு செய்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிக்கும் வசதியை தங்களது வங்கிகளுடன் இணைத்துள்ளன.
 கல்விக் கடன் வழங்கும் அனைத்து வங்கிகளையும் இந்த இணையதளத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பாலமாக வித்யாலட்சுமி இணையதள சேவை இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

0 comments:

Post a Comment