test

R P

Friday, 21 August 2015

கல்லூரிக் கல்வி இயக்குநராக பேராசிரியர் தேவதாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பொறுப்பேற்றார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநராக பேராசிரியர் தேவதாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பொறுப்பேற்றார். அந்தப் பதவியில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் சேகர், தன்னுடைய இணை இயக்குநர் (நிதி) பொறுப்புக்குச் சென்றார்.
 கல்லூரிக் கல்வி இயக்குநராக (பொறுப்பு) ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தேவதாஸ் பணியாற்றி வந்தார். அவர் வரும் செப்டம்பர் 30-இல் ஒய்வுபெற உள்ளார். அதுவரை அவருக்கு இயக்குநர் பதவி உள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த பேராசிரியர் சேகரை புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக (பொறுப்பு) நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை ஆகஸ்ட் 6-ஆம் தேதி சேகர் ஏற்றார்.
 இந்த திடீர் மாற்றம் அரசுக் கல்லூரி பேராசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவதாஸ் வழக்குத் தொடுத்தார். 
 வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னிருந்த நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) சென்ற தேவதாஸ், மீண்டும் இயக்குநர் பொறுப்பை தாமாக ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் சேகர், தன்னுடைய முந்தைய பணியான கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பணிக்குச் சென்றார்.

0 comments:

Post a Comment