test

R P

Thursday, 23 April 2015

கட்டாய இலவச கல்வி சட்டப்படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரிக்கை



சென்னை: இலவச கல்விக்கான நிலுவை தொகையை தமிழக அரசு வழங்காவிட்டால் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் நந்தகுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி சுமார் 1,50,000 லட்சமாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்த்ததாக கூறினார். 

இந்த வகையில் தமிழக அரசு தங்களுக்கு 150 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக அவர் கூறிப்பிட்டார்.  நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றார். 

8&ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நந்தகுமார் வலியுறுத்தினார். தமிழ் அல்லாத மற்ற மொழி பாடங்களிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

0 comments:

Post a Comment