test

R P

Thursday, 16 April 2015

நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா 15.4.2015 அன்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இடைநிலை ஆசிரியை அமுதா வரவேற்றார்.இவ்விழாவிற்கு பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவரும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருமாகிய திருமதி அஞ்சுகம் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார்,ஊராட்சி மன்றத் தலைவர் திரு,ரஞ்சித்குமார் ரவி அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்றார்,ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.முருவம்மாள் சந்திரன் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் சீ,அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார்,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஞ்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.சு,இராமமூர்த்தி அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவர் திரு.சு.அன்பழகன், செஞ்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.வே,லட்சுமிநாராயணன்,ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.அ.விநாயகம்,கி.நெடுஞ்செழியன் கார்ப்பொரேஷன் வங்கியின் மேலாளர் திரு.மு,நாகராசு,செஞ்சி ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆ,ஷேக்மூசா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர், விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றும் நாட்டுப்புர கலைகளில் ஒன்றான தெருக்கூத்து மாணவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.அரவான் கடபலி எனும் கர்நாடக இசை அடிப்படையிலான தெருக்கூத்து மாணவர்களால் நடத்தப்பட்டது,இதில் அரவானாக பவித்திரனும்,சகாதேவனாக சுபசங்கரனும் வேடமேற்று நடித்தனர்.விழாவில் பெற்றோர்களும் பொதுமக்களும்,ஆசிரியைகள் சாந்தி,விஜயலட்சுமி வார்டு உறுப்பினர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Like · Comment · 

0 comments:

Post a Comment