test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 21 November 2014

SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு


தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை கூட்டம்

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை கூட்டம்





ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு


ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக
திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


விடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

GO.1021 PUBLIC DEPT DATED.20.11.2014 - PUBLIC HOLIDAY FOR 2015 CLICK HERE...

ஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை) நியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி புதிய வழிக்காட்டுதல்கள் வழங்கி அரசு உத்தரவு

School Education DepartmentYear : 2014 G.O.(Ms) No.185 Dt: November 17, 2014 - Teachers Recruitment Board - Recruitment of Special Teachers (Physical Education, Drawing Sewing and Music) - Guidelines Click Here...

Thursday, 20 November 2014

CPS MISSING CREDIT FORM IN EXCEL, MISSING CREDIT FLOW WORK, CPS ONLINE S1 FORM..........CPS ACCOUNT SLIP பெற்ற ஆசிரியர்கள் தங்களின் MISSING CREDIT மற்றும் அதற்கான படிவங்கள்........

S.No
Name of the File


1
2
3
4
5
6
7
8
9

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு


தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

இந்தத் தொகையானது மத்திய அரசின், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆணையம் அந்த நிதியை பங்குச்சந்தை உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஓய்வுபெறும்போது இந்த சேமிப்பு நிதியிலிருந்து 40 சதவீதம் உடனடி ஓய்வூதியமாக வழங்கப்படும். எஞ்சிய 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.இது இல்லாமல், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 20 சதவீத தொகையானது உடனடியாக வழங்கப்படும். எஞ்சிய 80 சதவீதம் அந்த ஊழியரின் 58 வயது பூர்த்திக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை அனைத்தும் திட்டம் சார்ந்த அரசின் அறிவிப்புகள். இந்தத் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் திகைக்க வைக்கும் செய்தி.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், “திருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சொல்லப்பட்ட விதிகள் எதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்தத் திட்டத்தில் தேசிய அளவில் சுமார் 39 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக் கிறார்கள். இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பிடித் தம் செய்யப்பட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 2000 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.

2006-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் இருந்து ரெகுலர் பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியனிடம் கேட்டபோது, “தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களையும் இதுவரை வழங்காமல் வைத்திருக்கிறது. இதனால் பணிக் காலத்தில் இறந்துபோன ஆசிரியர்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என சுமார் 440 பேரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி மேலாளரை தமிழக அரசு உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். அந்த நிதி மேலாளர்தான் ஓய்வூதிய நிதியை உரிய இடத்தில் முதலீடு செய்யமுடியும். அப்படி நியமிக்காததால் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பணத்தை அரசு டேட்டா சென்டரிலேயே வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு சட்டம் போட்டார்களே தவிர அதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.

பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

CLICK HERE - DSE - ALL CEO / DEO REVIEW MEETING WILL BE HELD ON 24.11.2014 REG PROC

அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 24.11.2014 அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!


வரும் 24.11.2014 அன்று சென்னை  தொடக்கக் கல்வி இயக்கக கூட்ட அரங்கில் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான  ஆய்வுக்கூட்டம்  கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது 

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

GO.186 SCHOOL EDUCATION DEPT DATED.18.11.2014 - PART TIME INSTRUCTORS SALARY RAISED FROM RS.5000/- TO RS.7000/- FROM 01.04.2014 REG ORDER CLICK HERE...

Monday, 17 November 2014

பள்ளிகளில் பரவும் வன்முறை கலாசாரம்.. முளையிலே கிள்ளி எறிய 'கவுன்சிலிங்'!


           பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.

          மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

         கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆறு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலை துாக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டு பந்தால் எறிந்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல.
கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும் முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மண்டல உளவியல் நிபுணர் உதவியோடு மாணவர்களுக்கு, 'சிறப்பு கவுன்சிலிங்' வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது.
மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதி கூறுகையில்,''மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்து காண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.''தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகப்படியான வன்முறை உணர்வுகளை துாண்டுகின்றது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொடக்கபள்ளி மாணவர் எடை, உயரம் கணக்கெடுப்பு



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்த அரசு உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் மற்றும், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எடை, உயரம் சம்பந்தமான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள, அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாத பள்ளிகள், அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் உள்ள அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விபரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.

SPD - CRC - PRIMARY / UPPER PRIMARY TRAINING FOR ALL TEACHERS ON 22.11.2014 REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு

DEE - TPF / CPS AUDIT REG PROC CLICK HERE...

Wednesday, 12 November 2014

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிடி வடிவில் பாடத்திட்டம்!


பள்ளி பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், சிடி வடிவில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் முதன்மை செயலர் சபிதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாணவர்களின் சேர்க்கை விபரம், கற்பிக்கும் முறை, ஆங்கில வழிக்கல்வி, தேர்ச்சி விகிதம், காலி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது: மூன்று ஆண்டுகளில், 64 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 புதிய பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு, 5 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, சிடி வடிவில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிற துறைகளில் இல்லாத வகையில், பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அமைச்சர் வீரமணி பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா பேசுகையில், "அனிமேஷன் முறையில் பாடத்திட்டங்கள் சிடி வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து படிக்க இயலும். இந்த புதியநடைமுறையை, கையாள்வது குறித்த சிறப்பு பயிற்சி, ஆசிரியர்களுக்கு பாடவாரியாக வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் அடங்கிய சிடி தொகுப்பு, ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்" என்றார்.

இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைமை ஆசிரியர்கள் நடுக்கம்: ஆய்வு கூட்டத்தில், ஊட்டி, திருப்பூர் மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு குறைவாகவும், கோவை மாவட்டத்தில் 85 சதவீதத்திற்கு குறைவாகவும் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களிடம் தனித்தனியாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா காரணங்களை கேட்டறிந்தார்.

முதன்மை செயலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல், தலைமையாசிரியர்கள் சிலர் நடுக்கத்துடன் தலைகுனிந்து நின்றனர். வரும் தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைத்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்"


"ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைத்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அப்போதுதான் நாட்டில் வருங்கால சந்ததிகள் சிறப்பாக இருக்க முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.

சிவகங்கை சமுதாயக் கல்லூரியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: இளம் வயதில் கற்கும் நல்ல பழக்கங்கள்தான் கடைசி வரை காப்பாற்றும். அந்த வகையில், ஒரு மனிதன் நல்ல தலைவராக, அறிஞராக, விஞ்ஞானியாக உருவாக வேண்டுமெனில் குழந்தை பருவத்தில் இருந்தே அவருக்கு 3 நபர்கள் வழிகாட்ட வேண்டும். முதல் 2 நபர்கள் தாய், தந்தை, மூன்றாவது நபர் தொடக்க பள்ளி ஆசிரியர் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க துவங்கும் முன், மாணவர்களை ஒருமுகப்படுத்த நீதி போதனைகளை கற்பிக்க வேண்டும். பின்னர் பாடங்களை எடுத்தால் எளிதில் அவர்களுக்கு புரியும். ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது 75 சதவீதம் கவனித்தால் போதும் மாணவர்கள் டியூசன், வீட்டில் கூட படிக்க தேவையில்லை. இந்தியாவில் தொடக்க பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். உயர்கல்விக்கு செல்வது என்னவோ 14 சதவீதம்தான்.

தொடக்க கல்விதான் மாணவர்களிடத்தில் நம்பிக்கை, ஆற்றல், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் எதிர்கால சமுதாயம் நல்லபடியாக அமையும்.

ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைத்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அப்போதுதான் நாட்டில் வருங்கால சந்ததிகள் சிறப்பாக இருக்க முடியும், என்றார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஊராட்சி / நகராட்சி /நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பிற பணியாளர்களுக்கு கணக்குத்தாள் உடன் வழங்கிடவும், விடுபட்ட தொகையை சேர்க்க முழுமையான நடவடிக்கை விரைந்து எடுக்க இயக்குனர் உத்தரவு

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை, 'ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி


மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமானதாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அவர்களின் நலனுக்காக, ‘ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது, ‘ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டம் ஆகும். 

இதற்காக, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர் தனது கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ பயோமெட்ரிக் விவரங்களை படித்தறியக்கூடிய கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும். அதைப் பயன்படுத்தி, தனது ‘ஆதார்’ எண், பயோமெட்ரிக் தகவல்கள், அப்போதைய நேரம், நாள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை மத்திய விவரத்தொகுப்புக்கு (டேட்டா பேஸ்) அனுப்பி வைக்க வேண்டும். அதன்மூலம், ஓய்வூதியத்தை விடுவிக்கும் அமைப்பு, டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர், அந்த நேரத்தில் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஆதாரமாக கொள்ளப்படும். அதன் அடிப்படையில், அவரது வங்கிக்கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும். கூடுதல் செலவின்றி, ஓய்வூதியதாரர்கள் இச்சேவையை பெறுவதற்காக, சிறப்பு மையங்களும் இயக்கப்பட உள்ளன.

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் ! : பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி


பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 433 அரசு பள்ளிகளும், 270 தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கும், அரசு பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிப்பதற்கும், பெரும் வித்தியாசம் இருந்து வந்தது.
குறிப்பாக, அரையாண்டு தேர்வை பொருத்தவரை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, தேர்வை முடித்து, விடுமுறை அறிவிப்பது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வழக்கமாக உள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி முதல் வாரத்தில், தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரசு பள்ளிகளில், டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான், அரையாண்டு தேர்வு துவங்கும். பின், விடுமுறை அளிக்கப்பட்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் முடிந்து, 19ம் தேதிக்கு பிறகே, அரசு பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம்.
பொதுத் தேர்வுக்கு தயாராகும், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் என்பது மிக முக்கியமான காலக்கட்டமாகும். ஏனென்றால், பொதுத் தேர்வு துவங்குவதற்கு ஓரிரு மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், ஜனவரி மாதத்தில் பள்ளிகள் இயங்கினால்தான், பாடங்களை மீள்பார்வை செய்ய முடியும்; ரிவிஷன் தேர்வுகளை நல்ல முறையில் எழுத முடியும்.
எனவே, அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை, விடுமுறை போன்றவற்றை, பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளனர்.
இதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று, தனியார் பள்ளிகளை போலவே, அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வு, டிசம்பர் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் நடத்தி முடிக்கப்படும். டிசம்பர் நான்காவது வாரத்தில், அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2ம் தேதியன்று, அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tuesday, 11 November 2014

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE

CLICK HERE TO SEE YOUR CPS ACCOUNT SLIP


JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH
( * Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. ) 


பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப
மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தப் போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர் தொழில் நுட்ப மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம் - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்



ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள் என தெரிந்த நம்மில் பல பேருக்கு இந்தியாவின் தேசிய கல்வி தினம் என்றைக்கு என தெரிந்திருக்காது.

இதோ தெரிந்து கொள்ளுங்கள்.........

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்  மௌலானா அபுல் கலாம்ஆசாத் பிறந்த நாளான நவம்பர்  11 தான் தேசிய கல்வி தினம் என்று.

7 TH PAY COMMISSION HIGHLIGHTS



7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED

 BY J.R.BHOSALE


1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.



2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m.

5. Ratio of minimum and maximum wage should be 1:8.

6. General formula for determination of pay scale based on minimum living wage demanded for MTS is pay in PB+GP x 3.7.

7. Annual rate of increment @ 5% of the pay.

8. Fixation of pay on promotion = 2 increments and difference of pay between present and promotional posts (minimum Rs.3000).

9. The pay structure demanded is as under:-

               Exiting                       Proposed (in Rs.)

PB-1, GP Rs.1800      26,000

PB-1, GP Rs.1900]
PB-1, GP Rs.2000]     33, 000

PB-1, GP Rs. 2400]
PB-1, GP Rs.2800]      46,000

PB-2, GP Rs.4200       56,000

PB-2, GP Rs.4600]
PB-2, GP Rs.4800]      74,000

PB-2, GP Rs.5400       78,000

10. Dearness Allowances on the basis of 12 monthly average of CPI, Payment on 1st Jan and 1st July every year.

11. Overtime Allowances on the basis of total Pay+DA+Full TA.

12 Liabilities of all Government dues of persons died in harness be waived.

13. Transfer Policy – Group `C and `D Staff should not be transferred. DoPT should issue clear cut guideline as per 5th CPC recommendation. Govt. should from a Transfer Policy in each department for transferring on mutual basis on promotion. Any order issued in violation of policy framed be cancelled by head of department on representation.

14. Transport Allowance -

X Class Cities Y Class Cities

Pay up to Rs.75,000 Rs.7500 + DA Rs.3750 + DA

Pay above Rs.75,000 Rs.6500 + DA Rs.3500 + DA

13. Deputation Allowance double the rates and should be paid 10% of the pay at same station and 20% of the pay at outside station.

14. Classification of the post should be executive and non-executive instead of present Group A,B.C.

15. Special Pay which was replaced with SPL/Allowance by 4th CPC be bring back to curtail pay scales.

16. Scrap downsizing, outsourcing and contracting of govt. jobs.

17. Regularize all casual labour and count their entire service after first two year, as a regular service for pension and all other benefits. They should not be thrown out by engaging contractors workers.

18. The present MACPs Scheme be replaced by giving five promotion after completion of 8,15,21,26 and 30 year of service with benefits of stepping up of pay with junior.

19. PLB being bilateral agreement, it should be out of 7th CPC perview.

20. Housing facility:-

(a) To achieve 70% houses in Delhi and 40% in all other towns to take lease accommodation and allot to the govt. employees.

(b) Land and building acquired by it department may be used for constructing houses for govt. employees.

21. House Building Allowance :-

(a) Simplify the procedure of HBA
(b) Entitle to purchase second and used houses

22. Common Category – Equal Pay for similar nature of work be provided.

23. CP appointment – remove ceiling of 5% and give appointment within Three months.

24. Traveling Allowance:-
‘A1’ and ‘A’ Class Cities Other Cities

A. Executives Rs.5000+DA per day Rs.3500+DA per day
B. Non-Executives Rs.4000+DA per day Rs.2500+DA per day

25. Composite Transfer Grant :-

Executive Class 6000 kg by Goods Train/ Rate per km by road 8 Wheeler Wagon Rs.50+DA(Rs.1 per kg and single container per km)

Non-Executive Class 3000 kg – do – -do-

26. Children Education Allowance should be allowed up to Graduate, Post Graduate, and all Professional Courses. Allow any two children for Children Education Allowance.

27. Fixation of pay on promotion – two increments in feeder grade with minimum benefit of Rs.3000.

28. House Rent Allowance

X Class Cities  60%
Other Classified Cities  40%
Unclassified Locations  20%

29. City Allowance

`X’ Class Cities `Y’ Class Cities
A. Pay up to Rs.50,000 – 10%  , 5%
B. Pay above Rs.50,000 6% minimum Rs 5000 3% minimum Rs.2500

30. Patient Care Allowance to all para-medical and staff working in hospitals.

31. All allowances to be increased by three times.

32. NE Region benefits – Payment of Special Duty Allowance @ 37.5 of pay.

33. Training:- Sufficient budget for in-service training.

34. Leave Entitlement

(i) Increase Casual Leave 08 to 12 days & 10 days to 15 days.
(ii) Declare May Day as National Holiday

(iii) In case of Hospital Leave, remove the ceiling of maximum 24 months leave and 120 days full payment and remaining half payment.

(iv) Allow accumulation of 400 days Earned Leave

(v) Allow encashment of 50% leave while in service at the credit after 20 years Qualifying Service.

(vi) National Holiday Allowance (NHA) – Minimum one day salary and eligibility criteria to be removed for all Non Executive Staff.

(vii) Permit encashment of Half Pay Leave.

(viii) Increase Maternity Leave to 240 days to female employees & increase 30 days Paternity Leave to male employees.

35. LTC

(a) Permission to travel by air within and outside the NE Region.
(b) To increase the periodicity once in a two year.
(c) One visit outside country in a lifetime

36. Income Tax:

(i) Allow 30% standard deduction to salaried employees.
(ii) Exempt all allowances.
(iii) Raise the ceiling limit as under:
(a) General – 2 Lakh to 5 Lakh
(b) Sr. Citizen – 2.5 Lakh to 7 Lakh
(c) Sr. Citizen above 80 years of age – 5 Lakh to 10 Lakh
(iv) No Income Tax on pension and family pension and Dearness Relief.

35. (a) Effective grievance handling machinery for all non-executive staff.

(b) Spot settlement
(c) Maintain schedule of three meetings in a year
(d) Department Council be revived at all levels
(e) Arbitration Award be implemented within six month, if not be discussed with Staff Side before rejection for finding out some modified form of agreement.

36. Appoint Arbitrator for shorting all pending anomalies of the 6th CPC.

37. Date of Increment – 1st January and 1st July every year. In case of employees retiring on 31st December and 30th June, they should be given one increment on last day of service, i.e. 31st December and 30th June, and their retirements benefits should be calculated by adding the same.

38. General Insurance: Active Insurance Scheme covering risk upto Rs. 7,50,000/- to Non Executive & Rs. 3,50,000/- to Skilled staff by monthly contribution of Rs. 750/- & Rs. 350/- respectively.

39. Point to point fixation of pay.

40. Extra benefits to Women employees

 (i) 30% reservation for women.
(ii) Posting of husband and wife at same station.
(iii) One month special rest for chronic disease
(iv) Conversion of Child Care Leave into Family Care Leave
(v) Flexi time

41. Gratuity:

Existing ceiling of 16 ½ months be removed and Gratuity be paid @ half month salary for every year of qualifying service.
Remove ceiling limit of Rs.10 Lakh for Gratuity.

42. Pension:

(i) Pension @ 67% of Last Pay Drawn (LPD) instead of 50% presently.
(ii) Pension after 10 years of qualifying service in case of resignation.
(iii) Increase pension age-based as under:
65 years – 70% of LPD
70 years – 75% of LPD
75 years – 80% of LPD
80 years – 85% of LPD
85 years – 90% of LPD
90 years – 100% of LPD
(iv) Parity of pension to retirees before 1.1.2006.
(v) Enhanced family pension should be same in case of death in harness and normal death.
(vi) After 10 years, family pension should be 50% of LPD.
(vii) Family pension to son upto the age of 28 years looking to the recruitment age.
(viii) Fixed Medical Allowance (FMA) @ Rs.2500/- per month.
(ix) Extend medical &facilities to parents also.
(x) HRA to pensioners.
(xi) Improvement in ex-gratia pension to CPF/SRPF retirees up to 1/3rd of full pension.

உச்சரிப்புக்கான இணையதளம்


ஒவ்வொரு மொழியிலும், எந்த வார்த்தையை, எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 11 மொழிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 25 மொழிகள், 500க்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 46 மொழிகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒலிப்புகள் (Pronounce) எனும் தலைப்பில் சொடுக்கினால் கிடைக்கும் பக்கத்தில் மொழி எனும் தலைப்பில் நாம் மொழியைத் தேர்வு செய்தால் வார்த்தைகளின் பட்டியல் கிடைக்கிறது.

ஆண்,பெண் குரல்
அனைத்து வார்த்தைகளின் உச்சரிப்புகளையும் கேட்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண் குரல், பெண் குரல் எனும் இரு வழியிலான வசதிகளும் உள்ளன. ஆங்கிலம் போன்ற பல நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழிகளுக்குச் சில நாடுகளின் வாரியான உச்சரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தத் தளத்தில் இடம் பெற்றிருக்கும் சில வார்த்தைகளுக்கு உச்சரிப்பு வசதி இல்லாத நிலையில் அதைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் வார்த்தை உச்சரிப்பைப் போல் நாம் புதிய உச்சரிப்பைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியும்
இங்கு ஒவ்வொரு மொழியிலும் புதிய வார்த்தைகளையும், அதற்கான உச்சரிப்புகளையும் பதிவேற்றம் செய்ய முடியும்.
இங்கு, தமிழ் மொழியில் இதுவரை 1925 வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன. இவற்றில் 387 வார்த்தைகளுக்கு உச்சரிப்புப் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. தமிழ் மொழியில் ஆர்வமுடையவர்கள் தமிழ் வார்த்தைகளை இங்குப் பதிவேற்றம் செய்யலாம். தமிழ் மொழியைச் சரியாக உச்சரிக்கும் நல்ல குரல் வளமுடையவர்கள் தங்களுடைய குரலில் உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம்.

இத்தளத்தில் அனைத்து மொழியிலான வார்த்தை உச்சரிப்புகளையும் கேட்க விரும்பினாலும், தங்கள் மொழி தொடர்புடைய வார்த்தை உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்ய விரும்பினாலும் பயனராகப் (User) பதிவுசெய்துகொள்ள வேண்டும். இலவசமாய்ப் பதிவுசெய்து பல்வேறு மொழிகளிலான சரியான வார்த்தை உச்சரிப்பைக் கேட்டு நாமும் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கலாம்.

உலக மொழிகளின் சரியான வார்த்தை உச்சரிப்புக்கு வழிகாட்டும் இந்தத் தளத்திற்குச் செல்ல http://www.forvo.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

10, 12ம் வகுப்பு பாடங்களை டிச. 7க்குள் முடிக்க உத்தரவு


பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டங்களையும் டிச.7க்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வாக நடத்தும் முறை இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது. தற்போது டிச.10ம் தேதி பிளஸ்2வுக்கும், 12ம் தேதி பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது.

இதனால், டிச.7க்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மொத்த பாடங்களையும் நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சில பள்ளிகளில் காலிப் பணியிடம்,உடல்நல பாதிப்பு, கர்ப்ப கால மருத்துவ விடுப்பு போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஜூன் மாதம் பள்ளி துவங்கிய நிலையில், டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆறே மாதங்களில் முழு பாடங் களையும் நடத்தி முடிப்பது ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இயந்திரகதியில் வேகமாக பாடங் களை நடத்தி முடிப்பதாக மாணவர்கள் மத்தியில் புகார் நிலவுகிறது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புக்கு மொத்த பாடங்களை முடித்தால் மட்டுமே,ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அவர் களை திருப்பு தேர்வு, முன்மாதிரி தேர்வு நடத்தி, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த முடியும். அவகாசம் குறைவாக உள்ளதால், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என கூடுதல் நேரம் வகுப்பு நடத்தப்படுகிறது.சில நேரங்களில் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய நெருக்கடியும் ஆசிரியர்களுக்குஏற்படுகிறது. காலாண்டு தேர்வுக்குள் 65 சதவீதம், அரையாண்டு தேர்வுக்குள் 35 சதவீதம் என கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றினால், இந்த சிரமம் ஏற்படாது’’ என்றார். குறைந்தபட்சம் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டுமாவது ஆசிரியர்கள் பற்றாக்குறை யின்றி நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்


கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் 'புத்தகம் இல்லாமல் கல்வி' என்ற பெயரில் தேசிய எழுத்தறிவு இயக்கம் மற்றும் கர்நாடக கல்வி இயக்குனரகம் இணைந்து செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி மைசூரு மாவட்டம், உன்சூர் தாலுகா, மூதூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

அதை நாற்காலி மீது வைத்து ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். மூதூர் கிராமத்தில் தொடங்கியுள்ள இத்திட்டத்தை விரைவில் சில கிராமங்களில் செயல்படுத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது 'கணினி பாடம்' என்ற பெயரில் புதிய பாட திட்டத்தை பெலகாவி மாவட்டத்தில் கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள வடகாவி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இத்திட்டத்திற்காக டிஜி ஸ்கூல் கம்ப்யூட்டர் சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாமாண்டு பி.யு.சி. வரையிலான பாடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி அறையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் டி.வி.டி. மூலம் பாடம் ஒளிபரப்பு செய்யப்படும். ஓவியங்களுடன் இருக்கும் பாடத்தை ஆசிரியர் விளக்கினால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி கற்பிப்பதுடன், ஆசிரியர்களின் சுமையும் குறைகிறது. மேலும் பாடத்தில் எத்தனை முறை சந்தேகம் வந்தாலும், அதை அடிக்கடி டி.வி.டி. மூலம் போட்டு தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். எதிர்க்காலத்தில் டி.வி.டியை தனிதனியாக மாணவர்களுக்கு வழங்கும் யோசனையும் கல்வி இயக்குனரகத்திற்கு இருப்பதாக தெரியவருகிறது.

முதல் கட்டமாக பெலகாவியில் தொடங்கியுள்ள கணினி பாட திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது. உலகில் 18 நாடுகளில் இக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய கல்வி உலகில் கணினி உதவியுடன் கல்வி வழங்குவது அவசியமான ஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகவுள்ளது.

Monday, 10 November 2014

PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்



PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.

அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது.

TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொண்டு, அதற்கு அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.


Supreme court case appeared. Lawyer msg.

Full details:

SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை



பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமீபத்தில் கல்விச் சுற்றுலாவின்போது அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மாநில அரசுகள், தகுந்த விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைக்கான தொகுப்புகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கலைத் திட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்தல்; மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அவர்கள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற மாணவர்கள் மட்டுமே கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க இயலும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், சுற்றுலாவில் பங்கேற்கும்போது, உள்ளூர் சுற்றுலா முகவரின் துணையை பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே இருக்கவேண்டியது அவசியம். மாணவர்களின் ஒப்புதல் கடிதம் மற்றும் உடன் செல்லும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் அவசர பாதுகாப்பு நடவடிக்கையில் உதவுவோம் என்ற ஒப்புதல் கடிதமும் பெற வேண்டும்.

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை தொடக்க கல்வி அலுவலகத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை பின்பற்றாமல் கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஸ்மார்ட் கார்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை: தலைமையாசிரியர்கள் புகார்



பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரையமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட, 1.32 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல்களை, கம்ப்யூட்டர்மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என்று, கடந்த 2011 அக்., மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாணவர்களின் அனைத்து விபரங்களும் பல மாதங்களாக தலைமையாசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அறிவிப்பின்படி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். புள்ளிவிபரங்களை தொகுக்கும் பணி இதுவரை முடிந்த பாடில்லை என்று தலைமையாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அரசு அறிவித்தபடி, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பட்சத்தில் பொதுத்தேர்வு சமயங்களிலும், கல்வி ஆண்டு துவக்கம், மாணவர்கள் சேர்க்கை, பஸ் பாஸ், நலத்திட்ட வினியோகம் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் மாணவர்களின் பல்வேறு புள்ளி விபரங்களை தொகுக்க வேண்டிய அவசியமில்லை. தலைமையாசிரியர்களும் பெரும் தலைவலியை தவிர்த்து, கல்வியின் தரத்தை மேம்படுத்தி மாணவர்களின் நலனில் கவனம் செலுத்த இயலும்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'மாணவர்கள் பற்றி புள்ளி விபரங்களை ஆண்டு முழுவதும் தொகுத்து வழங்கி வருகிறோம். மீண்டும், மீண்டும் ஒரே புள்ளி விபரங்களை வெவ்வேறு திட்ட செயல்பாடுகளுக்கு கேட்கின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கும் முழுமையாக கல்விப்பணியை செய்ய இயலாமல் உள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பட்சத்தில், பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படும். 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேவையான விபரங்களை அளித்தும் பயனில்லை,'' என்றார். 

'ஸ்மார்ட் கார்டு' எப்படி இருக்கும்?

மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும். அதில் உள்ள ரகசிய குறியீட்டின்படி, சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் தவிர்க்கப்படும். தொழில் காரணமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொண்டே வரலாம்.

Saturday, 8 November 2014

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு


வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன் விவரம்: தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது. இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை

DEE - EMIS - DIRECTORS INSTRUCTIONS REG TO MEASURE STUDENTS HEIGHT / WEIGHT CLICK HERE... (link rectified)

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

DEE - EDUCATIONAL TOUR REG INSTRUCTIONS CLICK HERE...

Wednesday, 5 November 2014

TNPSC : GROUP - II EXAM HALL TICKET PUBLISHED


வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, பல பதவிகளில், 1,064 பணியிடங்களை (குரூப் - 2) நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலை தேர்வு நடந்தது. 
இதில், தகுதி பெற்றவர்கள், வரும், 8ம் தேதி நடக்கும் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று காலை, கம்ப்யூட்டர் வழியில், பொது அறிவு தாள் தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளிக்கும் வகையிலான தேர்வும் நடக்கிறது. 

இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மை தேர்வுக்கான 100 ரூபாய் கட்டணத்தை, இதுவரை செலுத்தாத தேர்வர்கள், 'செயலர், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து, நேரடியாக, தேர்வு அறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கேட்டுக் கொண்டு உள்ளார்

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி


         அரசுத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

          இந்த முறை, சோதனை அடிப்படையிலோ அல்லது அதை அறிமுகப்படுத்துவதற்கான உரிய உத்தரவுகளோ இதுவரை பிறப்பிடப்படவில்லை எனவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மாதத்தில் பல அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை (நவ.4) ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

              ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கான பட்டியலைச் சேகரித்து அவற்றைப் பரிசீலிக்கும் பணிகளை மாவட்ட கருவூலக் கணக்குத் துறை மேற்கொண்டு வருகிறது. கருவூலத் துறையில் கணினிகள் பயன்பாட்டுக்கு வந்த நேரத்தில், ஊதியத்துக்கான பட்டியலை அப்படியே தட்டச்சு செய்து அதை

குறுந்தகட்டிலும், நகல் எடுத்தும் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையில் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணியை ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள நிர்வாக அலுவலர் மேற்கொண்டு வந்தார்.

இணையவழி முறை புகுத்தப்பட்டது: கருவூலக் கணக்குத் துறையில் இணையவழி முறை புகுத்தப்பட்ட பிறகே பிரச்னை தொடங்கியது. அதாவது, எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் வெறும் கணினியில் மட்டுமே புகுத்தப்பட்ட இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எப்படி பதிவு செய்ய வேண்டும், தவறு ஏற்பட்டால் அதைத் திருத்துவது எப்படி என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு அலுவலகத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிகள், தாங்களாக யோசித்து இந்த இணையவழி முறையைக் கையாள வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஒரு அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருந்தால், ஊதியப் பட்டியல் தயாரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட பதவியிடத்துக்குப் பதிலாக வேறொரு பதவியைத் தவறாகக் குறிப்பிட்டால் அதை அந்த அதிகாரியே திருத்த முடியாது. இதைத் திருத்துவதற்கு மாவட்ட கருவூலக் கணக்குத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அவர்கள் சென்னையில் உள்ள இணையவழி பராமரிப்புப் பிரிவுக்கு அப்படியே அனுப்பி அவர்களது பதிலைப் பெறுவர். அந்த பதில், ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு ஒவ்வொரு தவறுக்கும் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

உத்தரவு வரவில்லை: இணையவழி முறையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கருவூலக் கணக்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்கள், அதிகாரிகள் யாருக்கும் அதுபோன்ற பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

மேலும், இணையவழி முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாகவும் அரசின் உத்தரவுகள் எதுவும் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் ஊதியப் பட்டியலை 15 முதல் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையிடம் அளிக்க வேண்டும்.

ஆனால், இணையவழி முறை காரணமாக, ஒவ்வொரு மாதமும் தாமதம் ஏற்பட்டு ஊதியப் பட்டியலை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இணையதள இணைப்பு இல்லாத சிறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அலுவலர்கள், இணையதள மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனால், இந்த நவம்பர் மாதத்தில் இதுவரைகூட (4-ஆம் தேதி) சில அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.

உரிய பயிற்சி அவசியம்: இணையவழி முறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பாக, அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அதுகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் அனைத்து இடங்களில் நடைமுறைப்படுத்தாமல் பகுதி பகுதியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அலுவலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது


தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும்வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு



மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதிவரை, பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும் என அத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பலன்கள்

மொத்தம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலன் அடைவர். ஒரு கல்வி ஆண்டான, ஜூன் முதல், மே வரையிலான, எந்த மாதத்தில் ஆசிரியர் ஓய்வு வயதை எட்டினாலும், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர், அந்த கல்வி ஆண்டு முழுவதும், வேலையில் இருக்க அரசு அனுமதித்துள்ளது.

ஓய்வு பெறும்போது, என்ன சம்பளம் வாங்கினாரோ, அதே சம்பளம், அந்த கல்வி ஆண்டு முடியும் வரை பெற முடியும்.

Monday, 3 November 2014

FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை



5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள  திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர் பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது   மேலும் 90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இதனால் ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட  பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவே இந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு   பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ்

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?



வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

அவசியம் தேவை
* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.

* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.

* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.

* வெளிநாட்டு பயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.

* வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.

* 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யும்போது தேவைப்படும்.

* காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.

* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.

கறுப்புப் பணம் தடைபடும்
மேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும் அவசியம் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம் வகிப்பதற்கு மிக முக்கிய காரணம் கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடை செய்வதற்காகத்தான்.
நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச் செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும் அலட்சிய போக்கு காரணத்தால் இன்றைய நிலையில் கறுப்புப் பணம் களையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.

பான் கார்டு இருந்தால்...
சரி, ஒருவர் பான் கார்டு வாங்கியதால், அவரும் வருமான வரி கட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்