test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 29 October 2014

IGNOU B.Ed 2014 Entrance Results Published

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.


2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.இதற்கான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் இன்று மாலை வெளியிட்டார்.

Monday, 27 October 2014

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

click here for GO.66858 / CMPC / 2013-2, DATED.22.08.2014 - REVISED SELECTION / SPECIAL GRADE SCALE OF PAY TO THE CATEGORY OF VOCATIONAL TEACHERS IN GOVT HR SEC SCHOOLS REG ORDER

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 29.10.2014 INSTEAD OF 28.10.2014 AT CHENNAI REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோர்ரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

DEE - DEE CALLED DETAILS REG STUDENTS SUICIDE REG PROC CLICK HERE...

ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு.


அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படிஇட ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது நியாயமற்றது.எனவே மேற்கண்ட பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும்


இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.


பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடன நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தபிறகும் எம்பில்- உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என அரசாணையைத்திருத்தி வெளியிட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 250 -க்கும்மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 29.10.2014 -ல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு,அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (25.10.2014) சனிக்கிழமை சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது, தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குசிறப்பு கலந்தாய்வு நடத்துவது,காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும்,இதரக்கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார்.


இந்தஉறுதியைத்தொடர்ந்து வரும் 29.10.2014 (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Saturday, 25 October 2014

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது

CLICK HERE - DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 28.10.2014 AT CHENNAI REG PROC..

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

DEE - ALL DEEO / AEEOs MUST BE THERE CONCERN HEAD OFFICES ON 25.10.2014 & 26.10.2014 DUE TO HEAVY RAIN REG PROC CLICK HERE...

Friday, 24 October 2014

தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.

           தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்டகலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

      தொடக்கக் கல்வித் துறையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சிஅரசுநடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராகபதவிஉயர்வு பெறுவதற்கு உரிய முன்னுரிமை பட்டியல் கடந்த ஜூலை மாதம்வெளியானது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியை தகுதி நாளாக கொண்டுஇப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.இவர்களில் ஒன்று முதல் 30 வரைஇடம்பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்விஅலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல்உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீதம்உள்ள 165 பேர் தங்களுக்குஎப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

           இந்த நிலையில் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 முதல் 160முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்விஅலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.இதற்கான கலந்தாய்வு நாளை(25ம் தேதி) சென்னை தொடக்க கல்வி இயக்ககூட்ட அரங்கில் காலை 10 மணிக்குநடைபெறும் என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்


CLICK HERE-ALL TYPE OF CERTIFICATE FORMS

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு


சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- கரூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்னம்மாள் பதவி உயர்வு பெற்று, கரூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பொள்ளாச்சி மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவடிவு, பதவி உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி திட்ட தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜெயமீனா தேவி பதவி உயர்வு பெற்று, வேலூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி பத்மாவதி பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் அனைவருக்கும் கல்விதிட்ட முதன்மை கல்வி அதிகாரியாக செல்கிறார். இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை

GOVT LTR NO.28064 / ELE DEPT / 2014 DATED.15.10.2014 - PAY AUTHORIZATION FOR 1610 SGTs FROM JUNE 2014 TO SEPTEMBER 2014 REG ORDER CLICK HERE...

சைனிக் பள்ளி: 2015-16ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

சைனிக் பள்ளி: 2015-16ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு



Thursday, 23 October 2014

G.O No.12930 DT 29.04.98 : ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது

G.O No.12930 DT 29.04.98 : ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

GO.165 SCHOOL EDUCATION DEPT DATED.15.10.2014 - SSLC WITH DTT CONSIDER AS A PLUS 2 ORDER ISSUED REG ORDER CLICK HERE...

திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 8 உயர்நிலைப் பள்ளிகள் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 132 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2014-15-ஆம் கல்வி ஆண்டில் 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறியது: இந்த மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பூதூர், புதுகும்மிடிப்பூண்டி, ஞாயிறு ஊராட்சி ஆகிய இடங்களில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம், வெங்கல், மெய்யூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகளும், திருவள்ளூரில் உள்ள காமூனா சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், விரைவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு


முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.

அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டவர்கள் மீண்டும் அழைக் கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

Monday, 20 October 2014

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆசிரியர்களின் காவல் தெய்வம் மதிப்புமிகு ஈஸ்வரன் அவர்கள் மறைவு









தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் காவல் தெய்வம்.ஒட்டுமொத்த
ஆசிரியர்களின் வழிகாட்டி உலக கல்வி கழகத்தின் துணைத் தலைவர் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர்.அண்ணன் மதிப்புமிகு சு.ஈஸ்வரன் அவர்கள் மறைவு.

தமிழக ஆசிரியர்களை மீளாத்துயரில் ஆழத்திவிட்டு சென்ற அண்ணன் அவர்களின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடைபெற உள்ளது......

Saturday, 18 October 2014

மழை : சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


          தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

             மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.மேலும் திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித்தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு?


ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால்,இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்தது.இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில்போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம் ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது.

ஒவ்வொரு முறை தகுதித் தேர்வு நடந்து முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான நாளில் இருந்தே தேர்வு எழுதியோர் தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர்.அந்தவழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து பலர்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,வெயிட்டேஜ்முறையை ரத்து செய்து விட்டு பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய வெயிட்டேஜ்முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டியதகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித்தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"டெட்" 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி!!


'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.

இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால

முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி

வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது.

இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23.10.2014 அன்று விடுமுறை; இணை இயக்குனர் அறிவிப்பு


மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Thursday, 16 October 2014

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை


பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை


பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O No. 248 Dt: October 14, 2014 - Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2014 - Orders Click Here...

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL DEEOs REG TO ISSUE SHOW CAUSE NOTICE & JOIN THE DUTY WITHIN 27.10.2014 FOR THOSE WHO R NOT JOINED TRs, OTHERWISE APPOINTMENT WILL BE CANCELLED REG PROC CLICK HERE... 

Wednesday, 15 October 2014

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?


          இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.

       ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து வைக்கவும்தான்.

            ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன்படுத்துவதில் புதிதாக கொண்டுவரப் பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்.

1. சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தேவைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.

2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில் பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் மூன்று முறையும் பயன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்றங்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப் படும்.

3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக் கட்டணம் இருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம்.

ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமாகக் கையில் வைத்துக்கொண்டு செலவழிப்பதில்லை. சராசரியாக இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 – 12 முறை பரிவர்த்தனை செய்கிறாராம்.

தமிழகத்தில் தேசிய சராசரியைவிட பயன்பாட்டு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது என்பது மொத்த பயன்பாட்டில் 35 – 40% என்ற அளவில் இருந்தாலும், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கான பயன்பாடு என்பது குறைந்தபட்சம் 8 – 10 என்ற அளவிலும் உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தருவதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி யிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது இந்தப் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு காரணமே பணம் எடுப்பதற்காக எல்லோரும் வங்கியைத் தேடி வரவேண்டியதில்லை. காரணம், வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை.

இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணாகிறது என்கிற மாதிரியான பல காரணங்களினால்தான்.கடந்த காலங்களில் வங்கி ஊழியர் களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத வங்கிகள் ஏடிஎம் இயந்திரங் களின் எண்ணிக்கையை மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு உயர்த்தியது.

வங்கிக்கே வராதீர்கள்.

உங்களின் எல்லா வேலைகளையும் ஏடிஎம் இயந்திரம் மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல்லா வங்கிகளும் சொன்னது. கேட்காமலே ஏடிஎம் கார்டு தந்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படுத்தியபின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடுத்தால் கட்டணம் என்று சொல்வது வாடிக்கை யாளர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

சரி இனி வங்கிக்கே நேரடியாகச் சென்று பணத்தை எடுக்கலாம் எனில், அங்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கத் தான் வேண்டும். வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க, அதைப் பராமரிக்க என ஆண்டுக்கு 60 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை செல்கிறது.

சில தனியார் வங்கிகள் 1,000 ரூபாய்கூட வசூலிக்கின்றன. (சில தனியார் வங்கி களில் மாதத்துக்கு நான்குமுறை மட்டுமே நேரடியாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் சென்றால், 90 ரூபாய் சேவைக் கட்டணம் என்ற அளவிலும், 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கின்றன.)

எல்லாவற்றுக்கும் மேலாக, நேரத்தைச் செலவழித்துதான் வங்கிக்குச் சென்றுவர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் இன்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் பல சமயங்களில் செயலிழப்பதால், அது சரியாகும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது மீண்டுமொருநாள் வங்கிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதுமாதிரியான அலைக்கழிப்புகளுக்கு வங்கிகள் என்ன இழப்பீட்டை வாடிக்கையாளர்களுக்கு தரப்போகிறது என்று கேட்கிறார்கள் மக்கள்.தற்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகள்படி வங்கிகளுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றாலும், புதிய கட்டணங் களினால் ஏடிஎம் பயன்பாடு குறைந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக வரும்பட்சத்தில் அங்கு ஊழியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால் மட்டுமே பணப்பட்டுவாடா எளிதில் நடக்கும்.

ஊழியர்கள் எண்ணிக்கையை உடனடி யாகப் பெருக்குவது வங்கிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் அம்சமாகவே இருக்கும். தவிர, அதை உடனடியாகச் செய்வதும் சாத்தியமற்றது.தவிர, ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துதான் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்திருக்கின்றன வங்கிகள்.

இனி இந்த இயந்திரங்களின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் குறையும் என்கிறபோது, இதனை மீண்டும் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்படும். ஆக, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்வதற்கான நடவடிக்கைகளையே ஆர்பிஐயின் இந்தப் புதிய விதிமுறைகள் வழிவகுக்கிற மாதிரி இருக்கிறது என்பதே வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தினைக் கொன்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்.

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL REG PROC CLICK HERE...

DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL AS ON 15.03.2014 CLICK HERE...

பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு

DSE - WATCHMEN & SWEEPER APPOINTMENT REG PROC CLICK HERE...

Tuesday, 14 October 2014

மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு


           பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

         முன்னதாக, மே மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களிலே இந்தத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014-Intimation-Reg.

Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014-Intimation-Reg.

CLICK HERE-Lr.No.38241 Dt: October 14, 2014 -Personnel and Administrative Reforms Department

பள்ளிக்கல்வி - பயிற்சி - 31.06.2006 முன் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

DSE - TRAINING - ADMIN TRG FOR HIGH / HR SEC SCHOOL HMs THOSE WHO R PROMOTED BEFORE 31.06.2006 REG PROC CLICK HERE...

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

NEW CPS INDEX NO CLICK HERE...

தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.

அரசாணை : கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின், தமிழகம் முழுவதும், அங்கன்வாடி பணியாளர், 8,264 பேர், குறு அங்கன்வாடி பணியாளர், 427 பேர், உதவியாளர், 8,497 பேர் என, 17,?90 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், அதற்கான பணியை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நவ., 15ம் தேதி அரசு அறிவிப்புப்படி, அக்., 25ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்று, நவ., 5ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, நவ., 15ம் தேதிக்குள், பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு. அங்கன்வாடி பணியில், இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மாறுதல் வழங்கிய பின் தான், காலியிடம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளதால், பணி நியமனம் டிசம்பர் இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது.
5 கி.மீ., : அங்கன்வாடி அமைப்பாளர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு, எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட மையத்தில் இருந்து, 5 கிலோ மீட்டருக்குள் வசிக்க வேண்டும்.

பொது பிரிவு, தாழ்த்தப்பட்டவர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என, ஒவ்வொரு மையம் வாரியாக, ஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்படும். அதனடிப்படையில், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

பாரதிதாசன் பல்கலை: 2014-15; பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

பாரதிதாசன் பல்கலை: 2014-15; பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

TO DOWNLOAD B.Ed 2014-15 PROSPECTUS CLICK HERE....

Monday, 13 October 2014

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு..

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்


           தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்

          மேலும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் தகுதியுடைய ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸும், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரிய சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MATHS SLM KIT TRAINING MODULE


          MATHS SLM KIT TRAINING MODULE - நான்கு நாட்கள் நடைபெறும் கற்றல் உபகரணப்பெட்டிக்கான பயிற்சிக்கான கையேடு.....

ஆசிரியர் தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு


ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.மேலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். இவர்களில் 15 ஆயிரம் பேருக்கு மட்டும் சமீபத்தில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய ரோல் எண், பிறந்த தேதியை பதிவு செய்துசான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒருவர் 3 முறை மட்டும் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆசிரியர்கள் தங்களது தகுதி சான்றிதழை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.ஒருசிலர் மட்டும் இதுவரை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கிராம பகுதியை சேர்ந்தவர்கள் கணினி மையத்திற்கு சென்று அங்குள்ளவர்களின் உதவியுடன் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்து அது பலன் அளிக்காமல் போய்விட்டது. தொடர்ந்து 3 முறை முயற்சி தோல்வி அடைந்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரையில் தகுதி சான்றிதழ் பெற முடியாமல் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.அவர்களின் புகாரை பதிவு செய்து விரைவில் தகுதி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து தேர்வு வாரிய அதிகாரி கூறுகையில், ‘‘தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய 3 வாய்ப்பு கொடுத்தும் அதனை முறையாக பயன் படுத்தவில்லை. இதுவரை 400பேர் சான்றிதழ் கேட்டு பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் கிடைக்காதவர்கள் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஓரிரு நாட்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றார்.

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை


ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முதல் இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித்துறை அலுவலகங்களுக்கு வரக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 11 October 2014

இணையதள வசதி இந்திய கிராமங்களில் இலவசம்: வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்


இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். 

இந்தியாவந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் என்ற பெயரில், இலவச, சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கி நடத்தி வருகிறார், 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க். அந்நாட்டின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர். முதலிடத்தில் உள்ளவர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர், பில் கேட்ஸ்.தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில், அதற்கான வாய்ப்புகளும், வசதி களும், கிராமங்களை சரி வர சென்றடையவில்லை. இணையதள வசதிகள் இன்னமும்
கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.இதற்கான வசதிகள் கிராமங்களில் கொஞ்சம் இருந்த போதிலும், நகர்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில், இணையதளங்களின் செயல்வேகம் இல்லை.இந்த குறைபாட்டை போக்கவும், இந்திய கிராமங்களில் அடிப்படை இணையதள சேவையை இலவசமாக வழங்கவும், பேஸ்புக் முன்வந்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய, பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவை, முதலிடத்திற்கு கொண்டு செல்ல மார்க் விரும்பியுள்ளார்.பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.
இது தொடர்பாக, மார்க் சுக்கர்பெர்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, இணையதளங்களை, 25 சதவீத பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஏராளமானோருக்கு அத்தகைய ஒரு வசதி இருப்பதே தெரியவில்லை. தெரிந்த போதிலும், அதை ஏன் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது.இதை நானாக சொல்லவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அந்த ஆய்வில் பங்கேற்ற, 69 சதவீதத்தினர், இணையதளம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என, தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில், 911 என்ற, அவசர கால அழைப்பு எண்ணை, போன் இணைப்பு இல்லாதவர்களும் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலும் இது போன்ற நிலை ஏற்பட வேண்டும். இணையதளங்களிலும், அவசர கால, 100 என்ற எண்ணிற்கான அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, கிராமப்புறங்களிலும் அடிப்படை இணையதள வசதியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, டெலிபோன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வகையில், உலகம் முழுவதும், 30 லட்சம் பேருக்கு ஏற்கனவே இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.இணையதளங்களை, அந்தந்த வட்டார மொழிகளில் மேம்படுத்த வேண்டும்; மொபைல் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களை, வட்டார மொழிகளில் தயாரிப்பதற்கு, பேஸ்புக் அதிக ஊக்கம் அளித்து வருகிறது; இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, மார்க் சுக்கர்பெர்க் கூறினார்.
தண்ணீர் இல்லாத கழிப்பறை:
சாப்பிடவே வழியில்லாத ஏழை நாடுகளில் இணையதளம் தேவையா என்ற கேள்விக்கு, மார்க் அளித்த பதில்:
தண்ணீர் இல்லாமல் டாய்லெட் கட்டி எந்த பயனும் இல்லை என்பது போன்ற நிலை இப்போது உலகில், இணையதளத்திற்கு உள்ளது. இணையதளம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.ஜாம்பியா போன்ற ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாட்டில், கருவுற்ற பெண், தன்னையும், தன் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இணையதளம் மூலம் இலவசமாக யோசனை அளிக்கிறோம்.எச்.ஐ.வி.,க்கு எதிராக, அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரமாண்ட நிறுவனங்களின் தலைவர்கள் வருகை:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதால் தான், உலகின் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணமாக உள்ளனர்.மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பில் கேட்ஸ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சத்யா நாதெள்ளா, அமேசான் இணையதள நிறுவனத்தின் தலைவர், ஜெப் பெஸோஸ் போன்றோர், இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், பேஸ்புக் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மார்க் சுக்கர்பெர்க்கும், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.பிரதமர் மோடியும், இணையதளம், சமூக தொடர்பு இணையதளம், மொபைல் போன் போன்ற சாதனங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துவதில் வல்லவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், ட்விட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தினார்.
மார்க்கின் மகத்தான திட்டம்:
டில்லிக்கு நேற்று முன்தினம் வந்த பேஸ்புக் நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க், தன் செயல்திட்டம் குறித்து விரிவாக பேட்டியளித்தார்.
அதில், முக்கியமான அம்சங்களாவன:
*உலகம் முழுவதும், 270 கோடி பேருக்கு இணையதள வசதி உள்ளது. இன்னமும், 450 கோடி பேருக்கு இணையதள சேவை வழங்கப்பட வேண்டும். இதற்கு தடையாக இருப்பது, போதிய
கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் இதற்கான செலவு
அதிகரிப்பு தான்.
*உலகம் முழுவதும், 250 கோடி பேர், நாள் ஒன்றுக்கு, 120 ரூபாய் சம்பளம் பெறுபவர்களாகத் தான் உள்ளனர்; அவர்களுக்கு இணையதளம் எட்டாக்கனியாக உள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த சூரிய ஒளி சக்தி மூலம் செயல்படும் விமானங்களை இயக்கி, இணையதள சேவையை மேம்படுத்த உள்ளோம்.
*இந்தியாவில் மிகச் சிறந்த திறன் வாய்ந்த பொறியாளர்களும், வல்லுனர்களும் உள்ளனர்; அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
*இந்தியா நிறைய தொழில்நுட்ப புரட்சிகளை உருவாக்கிய நாடு. உதாரணமாக, பசுமை புரட்சி, தகவல் தொடர்பு புரட்சி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
*நாள் ஒன்றுக்கு, 2,000 கோடி எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான செலவை குறைக்க, நாங்கள் தொலைத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதில் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் கோடி எஸ்.எம்.எஸ்., தினமும் அனுப்பப்படும்.
10.89 கோடி பேரிடம் இணையதள வசதி:

இந்தியாவில் இணையதள வசதி, அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2013ல், 7.78 கோடி பேரிடம் தான் இணையதள வசதிகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரித்து வருகிறது; இந்த ஆண்டின் இறுதியில், இணையதள வசதி கொண்டவர்களின் எண்ணிக்கை, 10.89 கோடியாக அதிகரிக்கும் என, நம்பப்படுகிறது.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு


மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது.

குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. 

நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள, ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள, வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ரங்கராஜன் கூறுகையில், ''பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு, எதுவும் கூற முடியாது,'' என்றார்.

இணை இயக்குனர், நாகராஜ முருகன் கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர், எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. TAMIL VERSION

CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. -ENGLISH VERSION

Bharathiar University : Results of M.Ed. Entrance Exam – July 2014.

Bharathiar University : Results of M.Ed. Entrance Exam – July 2014.

Bharathiar University : Results of M.Ed. Entrance Exam – July 2014. - Click Here & Check Your Result

7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு -தீபாவளிக்கு முன்னர் பணமாக பெற்றுக் கொள்ளலாம்


அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

Thursday, 9 October 2014

பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு

DO.LETTER.NO.29534 / GE(2) / 2014-1, DATED.29.09.2014 - SCHOOL EDUCATION - SERVICE MATTERS - TAKING IMMEDIATE ACTION THE COURT CASES - STREAMLINING FOR QUICK DISPOSAL OF THE FILES REG ORDER CLICK HERE....

சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு

GO.(MS).NO.154 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.29.09.2014 - ACT - RTE 2009 - TEACHERS GRIEVANCE REDRESSAL NOTIFIED - ORDER CLICK HERE..

cleaniliness pledge--பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ' தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி'

cleaniliness pledge--பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ' தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி'

வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு



டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன்
சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், பள்ளி தலைமையாசிரியை பிரமிளா, அறிவியல் ஆசிரியர் சுந்தரம் ஆகியோரின் வழி காட்டுதலுடன், டில்லியில் நேற்று நடந்த '4வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி 2014' போட்டியில் தென் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

தற்போது டில்லியில் உள்ள மாணவனின் வழிகாட்டியான ஆசிரியர் சுந்தரம் 'நமது நிருபரிடம்' தொலைபேசியின் மூலம் கூறியதாவது: மாணவன் கோகுல், வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். வாகன ஓட்டிகள், 2 வினாடி கண் அயர்ந்து துாங்கிவிட்டால், சென்சார் தொழில்நுட்பத்தில், அவரது இருக்கை அதிர்ந்து, அவரது துாக்கத்கை கலைத்து விடும்.வேகத்தடையால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க, ரேடியோ அலைவரிசை மூலம், வேகத்தடை வருவதற்கு, 10 அடிக்கு முன்பே, டிரைவரை 'அலர்ட்' செய்யும் தொழில்நுட்பம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க 'ஆல்கஹால் சென்சார்', மொபைல் போன் சென்சார் தொழில்நுட்பங்களும், இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளன.இந்த படைப்புக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி என, 6 மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மாநில அளவில், 2ம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் கோகுலின் அம்மாவின் பெயர் தங்கமணி, தந்தை மணி, காபி துாள் கடையில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சித் திட்டம்: விரைவில் அறிமுகம்


பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையரும், பேரிடர் மேலாண்மைத் திட்ட
ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் கூறினார்.

"கட்டட, போக்குவரத்துப் பேரிடர்களால் ஏற்படும் தொழில்நுட்ப, சமூக சட்ட விவகாரங்கள்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் டி.எஸ். ஸ்ரீதர் பேசியது: சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், வாகனங்களின் சராசரி வேகமும் இப்போது அதிகரித்து விட்டது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சாதாரணமாக 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் நகரங்களுக்குள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டமைப்புகளோ, பாதுகாப்பு நடைமுறைகளோ இன்னும் மேம்படவில்லை. சாலைப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வும் மக்களிடையே பெரிய அளவில் எழவில்லை. எனவேதான் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் போன்ற போக்குவரத்துப் பேரிடர்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இதுதவிர இயற்கைப் பேரிடர்களாலும் பெரும் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இதுபோன்ற பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பேரிடர் மேலாண்மை, புனரமைப்புத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அக்டோபர் மாதத்திலேயே அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக, இந்தத் திட்டம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும் என்றார்.

தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு

அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மூன்று ஆண்டு பணி நியமனம் தொடர்பான வழிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கல்வி மாவட்ட அளவில், மூன்று ஆண்டுகள், முறையாக பணி முடித்த, பதிவறை எழுத்தர் (ரெக்கார்டு கிளர்க்) மற்றும் அடிப்படை பணியாளர்களுள், ஆய்வக உதவியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 10ம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்று உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியலை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் தயாரிக்க வேண்டும்.

இன சுழற்சி முறை: நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களுக்கு, பணி மாறுதல் வழங்க வேண்டும். இந்த முறையில் நிரம்பிய இடங்கள் போக, மீதியுள்ள இடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, பட்டியலை பெற்று, நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். இன சுழற்சி, வயது வரம்பு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி, பதிவுதாரர் பட்டியலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.

பின், பட்டியலில் இடம்பெறும் பதிவுதாரர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

குழு விவரம்

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேர்முகத் தேர்வு குழுவின் தலைவர்.

நேர்முக தேர்வுக்கு, 40 மதிப்பெண் ஒதுக்கீடு மாவட்ட கல்வி அலுவலர், செயலர்.

ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர், உறுப்பினர்களாக இருப்பர்.

வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமைக்கு, அதிகபட்சமாக, 5 மதிப்பெண், உயர்கல்வி தகுதி (பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு) இருந்தால், அதற்கு, 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், நேர்முகத் தேர்வு குழு தலைவர், செயலர், உறுப்பினர்கள் ஆகிய நான்கு பேரும், தலா, 10 மதிப்பெண் வீதம், 40 மதிப்பெண் வழங்குவர்.

மொத்தம், 50 மதிப்பெண் அடிப்படை யில், தகுதி வாய்ந்தவர்களை, தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.

நேர்மையாக நடக்குமா?:

நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், இந்த மதிப்பெண் தான், நியமனத்தை தீர்மானிக்கும்.

மாவட்ட அளவில், கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியரும் சேர்ந்து நடத்தும் நேர்முகத் தேர்வு, நேர்மையான முறையில் நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.

Wednesday, 8 October 2014

மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.


             மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன.  

              அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL AEEOs TO DEDUCT LIC / RD / SOCIETY LOAN FROM EVERY MONTH TEACHERS SALARY & PAY THROUGH ECS TO CONCERN OFFICES REG PROC CLICK HERE...

ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு


எம்.ஏ., எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ.,- பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.பின் எம்.ஏ.,- எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர், ''பி.எட்., முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். தனி நீதிபதி, ''மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,'' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பாலசவுந்தரி சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள்: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க முடியும் என்பதையும், பாலசவுந்தரி பணியின் போதே மூன்றாவது ஊக்க ஊதியம் கோரியிருக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவுப்படி, பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு கால அட்டவணை, விடுமுறை, நலத்திட்ட தேவைகள், மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், தொடர்பான தகவல்கள் அனைத்துமே, கல்வித்துறை
அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு, இ-மெயில் மற்றும் தபாலில் அனுப்பப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த தகவல்கள் விரைவில் பள்ளிகளை சென்றடையவும், காகித பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், "சிந்தியா சாப்ட்வேர்' திட்டம் நடைமுறையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்க மற்றும் 293 நடுநிலைப்பள்ளிகளில், பல ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சிறப்பு தினங்கள் மற்றும் மாணவர்களுக்கான உறுதிமொழி எடுப்பது, பேரணி நடத்துவது, மாணவர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கல்வித்துறைக்கு அனுப்புவது மற்றும் பெறுவதில், நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள், தபால் சேவை ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், விழா கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை, உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருந்து தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், கல்வித்துறைக்கு சென்றடைந்தனவா என்ற குழப்பமும் நிலவுகிறது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, திடீரென பெறப்படும் தகவல்களால் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கல்வித்துறை தொடர்பான தகவல்களை பெற, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "சிந்தியா சாப்ட்வேர்" முறை நடைமுறையில் உள்ளது. நடுநிலைப்பள்ளிகளுக்கும் இவ்வசதியை செய்துதர, ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தரப்படுகிறது. முக்கியமான தகவல்கள் தபால் மூலமாக அனுப்பப்படுவதால், அவை பள்ளிகளை வந்தடைய தாமதமாகிறது. பெரும்பாலும், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அருகில் உள்ள துவக்கப்பள்ளிகளும் இத்திட்டத்தை பயன்படுத்தும்படி, இணைப்பு சேவை ஏற்படுத்தினால், தகவல்களை பெறவும் அனுப்பவும் வசதியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

Tuesday, 7 October 2014

மூன்று அறிஞர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


                  ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ  அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. 

                 சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தா புதிய எரி சக்தியான நீல ஒளியை உமிழும் டயோடுகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். . இந்த பரிசை  டிசம்பர் 10-ந் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் சுவீடன் அரசர் வழங்குகிறார்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாளை(வியாழக்கிழமை அறிவிக்கப்படுகிறது. முன்னதாக நேற்று மருத்துவத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மூளை நரம்பு செல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக, பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானியான ஜான் ஓகீப் மற்றும் நார்வேயை சேர்ந்த மருத்துவ ஆய்வுத்தம்பதியான எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் உள்ளிட்டோர் கூட்டாக பகிர்ந்து கொள்கின்றனர்.

கல்வி சுற்றுலாவின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் -

கல்வி சுற்றுலாவின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் -
CLICK HERE--பள்ளிகல்வி இணை இயக்குனர் செயல்முறைகள் நாள்:26.09.2014