test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 30 September 2014

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம்


             ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய "திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள   மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.லோகேஸ்வரன் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.

              இச்சாதனைக்காக அவனுக்கு  ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சென்னையில் சத்யா ஸ்டுடியோ வளாகத்தில் 27 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் கலந்து கொண்ட  சுமார் 850 மாணவர்களில் இருந்து  தேர்வான  10 மாணவர்கள்  கலந்து கொண்டனர். 

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் கல்வி மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவச பாட புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இலவச சீருடை வழங்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!


தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.  வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.

உடனடியாக அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் அவ்வப்போது புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.  இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் சில பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. இவர்களுடைய பட்டப் படிப்புகளைத் தகுதியற்றவையாக ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அந்த கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கூறியது: ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரங்களைத் தயாரிக்கும் பணி வரும் டிசம்பரில் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாணையாக வெளியிடப்படும். இதில் தொழில்நுட்பம், கணிதம், வணிகவியல், சமூக அறிவியல், உயிரியல், கல்வி, மொழிகள் உள்பட 8 தலைப்புகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு தலைப்பின் கீழும், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் தொடர்புடைய படிப்புகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.

மேலும் மூலப் படிப்புக்கு, அதன் கீழ் வரும் பிற படிப்புகள் எந்த அளவுக்கு இணையானவை என்பது தெரிவிக்கப்படும். உதாரணமாக, வணிகவியல் தலைப்பின் கீழ் எம்.காம்., எம்.சி.எஸ்., எம்.காம். (சி.எஸ்.), எம்.ஏ. (சி.எஸ்.) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கொண்டுவரப்படும். அதோடு, மூலப் படிப்பான எம்.காம். முதுநிலை பட்டப் படிப்புக்கு எம்.சி.எஸ்., உள்ளிட்ட பிற படிப்புகள் எத்தனை சதவீதம் இணையானது என்பது தெரிவிக்கப்பட்டிருக்கும். இதில் மூலப் படிப்புகளுக்கு 75 சதவீதம் இணையான படிப்புகளை மட்டுமே, அந்தந்தத் துறைகளுக்கு தகுதியான படிப்புகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் கருத்தில் கொள்ளும். இந்த விவரங்கள் வெளியிடப்படுவதன் மூலம், மாணவர்களிடையே எழும் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என்பதோடு, படிப்புகளில் சேருவதற்கு முன்னரே அவை எதற்கு இணையானவை என்பதை அறிந்து சேர முடியும் என்றார்.

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும் போது பொறுப்பினை வழங்கல் குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

DEE - MIDDLE SCHOOL HM INCHARGE REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு

DEE - AIDED HIGH / HIGHER SECONDARY SCHOOLS - REASONS FOR NOT APPROVED FOR VACANT POSTS IN AIDED MINORITY AIDED HIGH / HIGHER SECONDARY SCHOOLS REG PROC CLICK HERE...

Monday, 29 September 2014

ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது?


ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில் 12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டாவது பட்டியல் வெளிவரஉள்ளது இதில் 2032 பணியிடங்கள் மேல் உள்ளது இதில் தமிழுக்கு மட்டும் 250 பணியிடங்கள் வரலாம் என உறுதியான தகவல்கள் கூறுகிறது.

அக்.6ல் பக்ரீத்: அரசு காஜி அறிவிப்பு

அக்.6 ல் பக்ரீத்: அரசு காஜி அறிவிப்பு

undefined

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!


ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை,

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.

பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

பி.வி.ரமணா - பால்வளத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே.ரோசய்யா அவர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராகப் பதவிபிரமாணமும் செய்து வைத்தார்கள்

DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY

DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY



S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
1

01.09.2014
Deptl.Exam Dec'2014
01.09.201430.09.2014
23.12.2014
 to
31.12.2014
Apply Online

Friday, 26 September 2014

முதுகலை ஆசிரியர்களுக்கு 7 மாவட்டங்களில் பயிற்சி



மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள் நடக்கின்றன.இதுகுறித்து மாவட்டங்களில் பயிற்சி நடக்கும் இடம் மற்றும் ஆசிரியர்கள் விவரம்:

மதுரை: அழகர்கோவில் மகாத்மா பள்ளியில், 178 வரலாறு ஆசிரியர்கள்.திண்டுக்கல்: பாறைப்பட்டி ஆர்.வி. எஸ். பொறியியல் கல்லூரியில், 225 இயற்பியல் ஆசிரியர்கள்.சேலம்: சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 219 வேதியியல் ஆசிரியர்கள்.
நாமக்கல்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 317 ஆங்கிலம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் 191 தாவரவியல் ஆசிரியர்கள்.விழுப்புரம்: சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் 283 கணித ஆசிரியர்கள்.ஈரோடு: கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 178 விலங்கியல் ஆசிரியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளியில் 313 வணிகவியல் ஆசிரியர்கள்.பயிற்சி விவரம் மற்றும் பங்கேற்கும் நேரம் குறித்த தகவல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நிய மனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இந்த தகுதித் தேர்வை எதிர்த்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு தளர்வு வழங்க கோரியும் பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகின. இந்நிலையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்குவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பால் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.

இதற்கிடையே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆசிரியர் பணி நியமனத் துக்கு இடைக்காலத் தடை விதித்தது. எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் பணி நியமன நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடும் போக்கு தொடரும் என்றே தெரிகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்கும்போது சில அதிகாரிகளின் தவறான புரிதலால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே அரசுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிய காரணமாக அமைந்துள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியை யாரேனும் பெற்றிருந்தால், அந்த கூடுதல் தகுதிக்கு தரப்படும் கூடுதல் மதிப்புதான் வெயிட்டேஜ். பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பட்டப்படிப்பும், பி.எட். தகுதியும் அடிப்படை தகுதி என்றால் அதற்கு மேல் அவர் பெற்றிருக்கும் கல்வித் தகுதிக்குத்தான் வெயிட்டேஜ் தரப்பட வேண்டும். இதுதான் பொதுவாக பணி நியமனங்களில் பின்பற்றப்படும் நடைமுறை. இதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ளும் ஆசிரியர் கல்வி வாரியம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் அடிப்படை கல்வித் தகுதிக்கும், அதற்கும் குறைவான பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் தருவது நடைமுறைக்கு முரணானது.

இந்த விதிமுறைகள் யாவும் கல்வித் துறையைச் சேர்ந்த நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர, அமைச்சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல.

தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான காலி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களும் ஏராளமானவை நிரப்பப்படவில்லை. தற்போதைய வெயிட்டேஜ் முறை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முதல் தலைமுறையினர் ஆசிரியர் பணியில் அமர்வதை தடுப்பதாக உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெரும் பிரச்சினைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இப்போதைய வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரத்திலும் முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பித்தால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தகுதியுள்ள பலர் ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றுள்ளவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, வயது மற்றும் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் தருவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய திருப்பம்


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆசிரியர் நியமன விவகாரத்தில் இன்னொரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued

G.O.(Ms) No.145 Dt: September 18, 2014 - School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification Click Here...

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

G.O.(Ms) No.144 Dt: September 18, 2014 - School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification Click Here...

Thursday, 25 September 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

DEE - PU / GOVT / PRIMARY & MIDDLE SCHOOLS - SGT / BT TEACHERS APPOINTMENT REG INSTRUCTIONS REG PROC CLICK HERE...

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து


ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.

வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு : ஆசிரியர் பணியிடங்களில் 80-ஐ காலியாக வைக்க உத்தரவு


இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இடத்தில் 80-ஐ காலியாக வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை 80 இடங்களை காலியாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை விநியோகம்!


இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று பணியிடம் தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த பணி ஆணையை சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இதையடுத்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Wednesday, 24 September 2014

ஆசிரியர் நியமனம் சார்பான இடைக்கால உத்தரவு ரத்து; மதுரை உயர்நீதிமன்றம்


ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது. மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை பற்றிய அறிவிப்பையும், பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு


100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

*அரியலூரில் 3,
*கோவையில் 2, 
*கடலூரில் 2, 
*தருமபுரியில் 3, 
*திண்டுக்கல்லில் 2,
*வேலூர் மாவட்டத்தில் 1, 
விழுப்புரம் மாவட்டத்தில் 8,

*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி, பிள்ளையார்நத்தம், 

*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,

*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர்   உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்ட பள்ளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

அரசு பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் - மாணவர்கள் அதிக ஆர்வம்


கற்றல் முறையை நவீனப்படுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி பயிற்சியின் வாயிலாக, ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது கூட, வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை, தொழில்நுட்ப முயற்சிகள் வாயிலாக மேம்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளின் வகுப்புகளைபோல், அரசு பள்ளி வகுப்புகளிலும், மாற்றத்தை கொண்டுவர, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ராஜவீதி, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஐந்து இடங்களில், செயல்பட்டு வருகிறது. இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, குறிப்பிட்ட ஐந்து பள்ளிகளில், முக்கிய பகுதிகளை செய்முறை மற்றும் விளக்கங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலும், ஆசிரியர்கள் விடுப்பானாலும் வழக்கம்போல் வகுப்புகள் நடக்கும்.

இதற்கு, நோடல் மையமாக, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதை மற்ற வகுப்புகளுக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இணையவழி கற்றல் முறையினாலும், புதிய ஆசிரியர்கள், வகுப்பறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களை கவனிக்கின்றனர். நோடல் மைய பள்ளியில் இருந்து, ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்படும் பாடத்தை, மற்ற பள்ளி மாணவர்கள் கவனிக்க முடிவதோடு, புரியாத பகுதிகள் குறித்து கேள்விகள் எழுப்பலாம்.

இதற்கு, மற்ற நான்கு பள்ளி மாணவர்களும், வெப் கேமரா முன்னிலையில், V எழுத்து வடிவத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் வரை, விவாதத்தில் பங்கேற்கலாம்; மற்ற மாணவர்கள் அதை கவனிக்க முடியும். இப்புது முயற்சியால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பினருக்கும், புதுவிதமான கற்றல் அனுபவம் கிடைக்கிறது," என்றனர்

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்களை விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை

ஊராட்சிஒன்றிய / நிதியுதவி / நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S கணக்குத்தாள்கள் 2009-10 முதல் 2012-13 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

DEE - CPS - AIDED / PU / MUNICIPAL SCHOOL TEACHERS & NON-TEACHING STAFF - ISSUE OF ACCOUNT SLIPS FROM 2009-10 TO 2012-13 REG PROC CLICK HERE... 


Monday, 22 September 2014

Mahathma Gandhi மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - Sep. 22


     தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால்  மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.
முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை:

       இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா  காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக  காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை  முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.
கன்னிப் பயணம்:
        ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார்.  மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர்  சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் '251 ஆ' என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை   இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை  உடுத்த துவங்கி 'மகாத்மா'வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர  அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.
மூன்றாம் வருகை:
     சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது  முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து 'ஆலய பிரவேச இயக்கத்தை' துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன்  போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது.
12 ஆண்டுகளாயிற்று:
       ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல்  மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு  வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது

TET பணிநியமன அறிவிப்பு அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் வரும்!


            ஆசிரியர் தகுதிதேர்வில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இடஒதுக்கீட்டுக்கு எதிராண அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது 

       தகுதி தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிஇடங்கள் நிரப்ப பட்டு வருகிறது . இந்த பணியை ஆசிரியர்  தேர்வு வாரியம் செய்து வருகிறது.

            ஆசிரியர் தகுதிதேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் பிளஸ்டூ, பட்டபடிப்பு ,பி.எட் ,ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்பொழுது பணிநியமனம் நடைபெறுகிறது . இந்த வெய்டேஜ் முறைக்கு ஆசிரியர்களின் மத்தியில் எதிர்பு கிளம்பியது .

             வெய்டேஜ் முறையில் ஆசிரியர் தேர்வு செய்யபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

         இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது . இந்த தீர்ப்பில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அணைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது .

               நீதிபதிகள் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுகொண்டுதான்  தேர்வு எழுதுனீர்கள் இப்பொழுது அதை எதிர்ப்பது தவறு என்று  கூறி அணைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்கள் . இந்த தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனதிர்க்கு எதிராக வழங்கப்பட்ட தடை நீங்குகிறது .

            இந்த தீர்ப்பு போராட்ட காரர்க்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளதாக போராட்டகார்கள் கூறுகிறார்கள் .

            ஆசிரியர் கலந்தாய்வை முடித்தவர்கள் பணிநியமன அறிவிப்பு அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் வரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர் .

ஆசிரியர் பணி நியமன தடை நீங்கியது


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணி நியமனம் - வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் பணி நியமனம் - வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி


சென்னை தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.


கடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு, TNTET மதிப்பெண்களையும் சேர்த்து, மொத்தம் 100க்கு மதிப்பிட்டு, அதன்மூலம் வெயிட்டேஜ் வழங்கப்பட்டு, அரசுப் பணிக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கும், இன்று பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்பதால், அரசு கொண்டுவந்த புதிய வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டுமென, TNTET தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், அரசு பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஆசிரியர் பணி நியமனத்திற்கு தற்காலிக தடை விதித்தது. இதனையடுத்து அரசு தரப்பில், தடையை நீக்கக்கோரி வாதிடப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கு நடந்து வந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் செப்டம்பர் 22ம் தேதி நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தகுதித்தேர்வு எழுதிவிட்டு, தற்போது எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி ஏற்றுக்கொள்வது? எனவே, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம், 14,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அரசு பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் வெகு விரைவில் பணி நியமனம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 20 September 2014

TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?


COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I.
The learned Advocates are informed that the matters once passed over would be called again
before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. --------------------------------------------------------------------------------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~


1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/2014 - DO -WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY (Service) S.SUREKHA IN Permit the petitioner MP.4/2014 - DO -AND WA.1038/2014 AND For Stay MP.1/2014 - DO -AND For Injunction MP.2/2014 - DO -AND For Direction MP.3/2014 - DO -AND WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014 (W.A.) S.SUREKHA ----------------R1. AND R2 SERVED ON 27/07/201 R1. THE STATE OF TAMIL NADU REP BY THE PRINCIPAL SECRETARY TO GOVT.SCHOOL EDUCATION DEPT. C

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு


'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

திருப்தியில்லை:அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, 'மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், கூடுதலாக, சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சாந்தி அனுப்பிய
சுற்றறிக்கையில், 'ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும், கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர்களின், இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக, கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும், ஆசிரியர் தெரிவிக்கின்றனர்.

Friday, 19 September 2014

2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு.



BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.

தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம்பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்


பள்ளி கல்வித்துறையில் 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' மூலம் பனி நியமனம் 

சென்னை: பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை பணி நியமனம் செய்வதற்கான, 'ஆன் - லைன்' கலந்தாய்வு, 20ம் தேதி (நாளை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.வேலைக்கு தேர்வு பெற்றவர்கள், தங்கள் முகவரி சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குச் சென்று, கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு, ஒரு மணி நேரம், முன்னதாக வர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழங்கிய துறை ஒதுக்கீட்டு உத்தரவு கடிதம், கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

CLICK-HERE-DSE - CELEBRATION OF JOY GIVING WEEK FROM 2.10.2014 TO 08.10.2014 FOR 1 TO 12 STD CLASSES REG INSTRUCTIONS

Payment of Dearness Allowance to Central Govt Employees - Revised Rate from 01/07/2014 F. No. 1/212014-E.II (B)

Payment of Dearness Allowance to Central Govt Employees - Revised Rate from 01/07/2014
F. No. 1/212014-E.II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 18th September, 2014.

OFFICE MEMORANDUM

Subject : Payment of Dearness Allowance to Central Government employees­ Revised Rates effective from 01.07.2014.


       The undersigned is directed to refer to this Ministry's Office Memorandum No. 1I112014-E.II(B) dated 27th March, 2014 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 100% to 107% with effect from I"July, 2014.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry's O.M. No.  1(3)/2008-E.II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.

3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.

4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.

5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.

/ Signed /
A. Battacharya
Under Secretary of Govt. of India

To,
All Ministries/Departments of the Government of India (as per standard distribution list).

Copy to:
C&AG, UPSC, etc., as per standard list (with usual number of spare copies).

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER CLICK HERE...

Wednesday, 17 September 2014

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும் - இயக்குனர் வலியுறுத்தல்தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

click here to download DSE - CASUAL ELECTIONS TO LOCAL BODIES - DECLARATION OF HOLIDAY REG ORDER

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும் - இயக்குனர் வலியுறுத்தல்


"புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும் வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்க வேண்டும். வரலாற்று சம்பவங்களை, தற்போது நடைமுறையில் உள்ள சில நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். 'புரிதல் இல்லாத அறிவு என்பது வீண்' என்று ஆசிரியர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும், என்றார்.


முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன் (டி.கல்லுப்பட்டி), விஜயராஜன் (நர்சரி பள்ளிகள்), மோசஸ் பெஞ்சமின் (மதுரை வடக்கு) உட்பட பலர் கலந்துகொண்டனர். 15 கல்வி வட்டாரங்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் மிகவும் பின்தங்கிய தலா ஐந்து பள்ளிகள் வீதம் 75 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'


அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

முந்தைய ஆண்டுக்கான வருமான வரி செலுத்த, இந்த ஆண்டு ஜூலையுடன் கால அவகாசம் முடிந்தது. தனி நபர் முதல், நிறுவனங்கள் வரை, மாதச் சம்பளம் பெறுவோரும் வருமான வரிக்கான படிவங்களை தாக்கல் செய்தனர். அரசு துறைகளில் பணியோற்றுவோருக்கு சம்பளத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட பணம், மாநில கருவூலக் கணக்கு அலுவலகத்தில் இருந்து, முறையாக வருமான வரித்துறைக்கு சென்று சேரவில்லை.வருமான வரிக்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தோருக்கு, 'உங்கள் கணக்கில், வருமான வரி செலுத்தப்படவில்லை; அபராதத்துடன், இவ்வளவு தொகை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
வருவாய் துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களுக்கும், இந்த, 'நோட்டீஸ்' வந்த வண்ணம் உள்ளது. 'சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை, அரசு செலுத்தாததற்கு நாங்கள் ஏன், அபராதம் கட்ட வேண்டும்' என, அரசு பணியாளர்கள் புலம்புகின்றனர்.

'எங்கள் சம்பளத்தில், வருமான வரியை அரசு பிடித்தம் செய்து விட்டது. அரசு தான் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்; நாங்கள், அபராதம் செலுத்த வாய்ப்பில்லை' என, 'நோட்டீஸ்' கிடைத்தோர், பதில் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் செய்த தொகை, ஒவ்வொரு பகுதியாக, வருமான வரித்துறைக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் அச்சம் அடையத் தேவையில்லை' என்றனர்.'பிடித்தம் செய்த பணத்தை, முறையாக செலுத்தி இருந்தால், ஊழியர்களை பரிதவிக்க விடாமல் தவிர்த்திருக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது அரசு, இதுபோன்ற சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, அரசுப்பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

ஆசிரியர் பணிநியமன தடையாணை தொடர்ந்து அமலில் இருக்கும்


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார். அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும்.

அதுவரை ஆசிரியர் பணிநியமண தடையாணை தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.

தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றி அமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறினாா்கள்.

மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்.

ஒரு சில கல்வியாளா்கள் யுஜி மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


அரசு தொடக்க  நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிகமானோருக்கு, பாடப் புத்தகத்தில் வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில் அதிக இடங்களை பிடித்த நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

கல்வித்துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.

இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள்தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று ரேங்க் பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும் பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும். பாடப் புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறினால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

பிரச்னைக்கு அரசுதான் காரணம்!

மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாக பாடம் நடத்தாததுதான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், இதுகுறித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை, பிரச்னைக்கு அரசுதான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.

அவர் கூறியதாவது: தொடக்கக் கல்வித்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆயிரம் பள்ளிகள், இரு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளாக உள்ளன; இது உண்மை. இரு ஆசிரியரில், ஒரு ஆசிரியர், பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால், அந்த பணியிடத்தை உடனடியாக நிரப்புவது இல்லை.

* இருவரில், ஒருவர் விடுமுறை எடுத்தாலும், ஒரு ஆசிரியர்தான் இருப்பார். ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தது 20 மாணவர்களாவது இருப்பர். இவ்வளவு பேருக்கும், ஐந்து பாடங்களை, ஒரே ஆசிரியர் எப்படி எடுக்க முடியும்?

* இரு ஆசிரியர் பள்ளியாக இருந்தாலும், ஐந்து பாடங்களை நடத்த வேண்டி உள்ளது.

* ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 3,800 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால் 1,650 ஆசிரியர் பணியிடம் மட்டும் தற்போது நிரப்பப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள், இரு ஆசிரியர் பள்ளிகளுக்கு வழங்கவில்லை.

* இதுபோன்ற நிலை இருந்தால், மாணவர்களுக்கு வாசிப்பு பிரச்னை; எழுதுவதில் பிரச்னை என, பல பிரச்னைகள் வரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Saturday, 13 September 2014

"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'


           ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
         இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
             கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.
ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.
சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.
இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல்

கணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல் - SENIORITYLIST AS ON 21/12/2010


பள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு


இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது

CLICK HERE-TO DOWNLOAD COMPUTER TRS APPOINTMENT G.O 130 DT 05.09.2014

3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.


சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு : சென்னையில் கடந்த கோடை விடுமுறையின்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 1,150 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை, ஆங்காங்கே உள்ள உண்டு, உறைவிட பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அடுத்த மாதம் : பெரும்பாலான குழந்தைகள் கடைகளில் வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மாநகராட்சி, காவல்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவை இணைந்து ஒரு குழு அமைத்து, சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த வகையான வர்த்தகத்தில் குழந்தைகள் அதிகமாக பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது கண்டறியப்படும்.அந்த வர்த்தகர்களுடன் பேசி, குழந்தை தொழிலாளர்களை பணிக்கு நியமிப்பது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.குழந்தை தொழிலாளர்களை கண்டறிய காவல்துறையின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதை தவிர 3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Pension – Contributory Pension Scheme – Allotment of CPS Numbers to existing employees / newly joined employees


Saturday, 6 September 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!


அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என, பள்ளி ஆசிரியர்களிடம்,
கல்வித்துறை கருத்துக் கேட்டது.

மாணவர்கள் புகைப்படம், சுயவிவரம், குடும்பத்தினர் பற்றிய விபரம், பள்ளி விடுமுறை நாட்கள், உறுதிமொழி எடுக்க வேண்டிய நாட்கள், பள்ளி மற்றும் வகுப்பில் பின்பற்றப்படும் மாதிரி கால அட்டவணை, முக்கிய தினங்கள், தினமும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையொப்பமிட தனியிடம், உடற்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு, முன்னேற்ற கருத்துகள் ஆகியவை இடம் பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் டைரி தயாரித்து, காலாண்டுத் தேர்வு முடிவுக்குள் வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tuesday, 2 September 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு.


அரசு ஊராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு (service Record-SR)தொடங்கிட இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - இயக்குனர் உத்தரவு


தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு.

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி - the hindu tamil

கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.

இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.
தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள்http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.

TNPSC DEP EXAM: Department exam december -2014-notification & Online Registration

TNPSC DEP EXAM: Department exam december -2014-notification & Online Registration



Department exam december -2014-notification

*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14

*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ12 சேர்த்து 
விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து

*தேர்வு நுழைவுச்சீட்டு 17-12-14 முதல் 31-12-14

*தேர்வு முடிவு 7-3-15&16-3-15

நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான காலாண்டு பொதுத் தேர்வு பணிகள் மற்றும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் சார்பு

DSE - 2014-15 SSLC / HSC - QUARTERLY EXAMINATION - IN-CHARGE DETAILS & INSTRUCTIONS CLICK HERE... 

பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு

Govt Ltr No.40490/Allowances/2014-1, Dated.25.8.2014 - GPF – Annual Account Statement – Value Added Service – Reg order Click Here...