test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 31 August 2014

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

CLICK HERE-DEE - SGT - DISTRICT WISE 1675 CANDIDATE SELECTION LIST

'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை'


'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலைஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர்செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: 

தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை.எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

90 சதவீதம் : 

இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

DEE CIRCULAR - 4 - DEE ORDERED TO PASTE VACANT LIST IN CONCERN COUNSELING CENTRE AT TOMORROW 8.30AM REG PROC CLICK HERE...

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.


ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

* 04.09.2014 முதல் 06.09.2014 வரை - சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான  பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* 08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு

DEE - SGT APPOINTMENT - CANDIDATE SHOULD GET WORK ALLOTMENT ORDER ON SAME DAY, APPOINTMENT ORDER WILL BE ISSUED FROM 04.09.2014 TO 06.09.2014 AT CONCERN DEEO'S OFFICE REG PROC CLICK HERE...

Friday, 29 August 2014

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

DEE - ALL DEEO / AEEO's OFFICES ARE WORKING DAY ON 30.08.2014 & 31.08.2014 REG ORDER CLICK HERE...

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு


பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு,
திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம்,
திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.

29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம்


புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.

இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பு:

முதுகலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கான கலந்தாய்வு, 30ம் தேதியும் (நாளை), ஒரு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் சேர்வதற்கு, 31ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.

பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்திற்குள், செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4, 5ம் தேதிகளிலும் நடக்கும். தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்ட மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பணிநாடுநர்கள் ஆசிர்யர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள அவர்களின் இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆ.தே.வாரிய தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்


தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, 28 August 2014

கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கம்!


தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம், கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி துவக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின விழா அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, திட்டத்தை அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி தலைமையில், சமூக நலத்துறை அலுவலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு), ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பலவகை கலவை சாதத்துடன் மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்ட விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, அமைச்சர் வளர்மதி கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, விரைவில் அனைத்து மையங்களிலும், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சமையலர்களுக்கு, பலவகை கலவை சாதம் மற்றும் மசாலா கலந்த முட்டை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடிந்ததும், அடுத்த மாதம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு வளர்மதி தெரிவித்தார்.

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.  

          ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.  

          வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்.
          சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

        உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

              கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு; ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது

முதுகலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 31ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்ட நியமன கலந்தாய்வு நடைபெறும். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 2ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்ட நியமன கலந்தாய்வு நடைபெறும். 

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செப்டம்பர் 3ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 4 மற்றும் 5ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும். 

மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

PR No.445 Dated.28.08.2014 - 14700 Teachers Appointment - Hon'ble gave appointment order to 7Trs reg Press Release click here...

Wednesday, 27 August 2014

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி


அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.

         அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது.

 ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது. இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SSA - 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
  
           முதல்கட்டமாக மாநில அளவிலும், அடுத்ததாக, மாவட்ட அளவிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பயிற்சி வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

          கணிதப் பாடத்தில் கடினப் பகுதிகளை மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக கற்பிப்பது, புதுமையான கற்பித்தல் முறைகள் போன்றவை இந்தப் பயிற்சியில் ஆசிரியர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், கணித வல்லுநர்கள் ஆகியோர் கருத்தாளர்களுக்கு திங்கள்கிழமை வகுப்புகளை எடுத்தனர்.

பயிற்சியால் பாதிப்பா?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியால் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் கூறினர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரித்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது போன்ற பயிற்சிகளின் மூலமே புதுமையான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதோடு, தங்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கல்வித் தரம் மேம்பட இதுபோன்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.

TET பணி நியமனம் எப்போது?


         பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.
      ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையிலிருந்து அத்தகைய நிரவல் பணியிடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்களுக்கும் இன்னும் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை.எனவே அதற்கான ஆய்வும் இறுதிசெய்யும் பணி முடிவடைந்ததும் காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுவிடும்.உடன் பணி நியமனப்பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.


அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்

DGE - HSE - SEP / OCT 2014 TATKAL REG PRESS RELEASE CLICK HERE...

DGE - HSE - NODAL CENTRES LIST FOR SEP / OCT 2014 EXAM CLICK HERE...

TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


Dated: 27-08-2014

Member Secretary

Monday, 25 August 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு -தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு -தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி ஒளிபரப்பினை பார்க்க



https://www.youtube.com/watch?v=xN4uCO59tZs&feature=share

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு
 தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய
ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக  உள்ளது.

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

 தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக  உள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது.

முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்துகணக்கெடுக்கப்படுகிறது. 

இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. 

எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, 21 August 2014

டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?


நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீதமதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும்பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன.குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்குபின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வுமுடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும்தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன.இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான வழக்குகளுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டு, ஒருவழியாகஆசிரியர் நியமனத்திற்கான தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. 

இவர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மதுரை ஜெயகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ&க்கு அதிகாரம் அளித்துள்ளது. அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பதுசட்டவிரோதமானது. எனவே, ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள் ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், பதில் கிடைத்து அடுத்த உத்தரவு வரும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தகுதி தேர்வு நடந்த நிலையில், ஒரு ஆண்டு கடந்த பின்னரும் ஆசிரியர் நியமனம் இழுத்தடிக்கப்படுவதால், அடுத்த தகுதி தேர்வு அறிவிப்பு வெளியாவதும் தாமதமாகி வருகிறது.

இதனால், பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் திறந்து இரண் டரை மாதம் கடந்த நிலை யில், விரைவில் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பல பள்ளிகளில் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் கவலையில் உள்ளனர்.

TRB TNTET Paper 1 Vacancy Notification published.

TRB TNTET Paper 1 Vacancy Notification published.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click Here for Notification

 ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதிய தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரப்படி:

GT + BC + BCM + MBC + ST =  1,164

SC + SCA = 1244

Minority Language Teachers - Vacants for Urdu + Telugu + Malayalam = 174


அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை வாரியான விவரங்களும், சாதி வாரியான விவரங்களும் www.TrbTnpsc.com  வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு


          தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
         ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

         தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, விருது வழங்க உள்ளார்.

          விருதில், ரொக்கம், 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:

1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.

2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.

3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை,

விழுப்புரம் மாவட்டம்.

4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.

5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.

7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.

8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.

9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.

10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.

11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.

13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.

14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.

17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.

20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.

21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.

22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு

2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification Click Here...

Wednesday, 20 August 2014

SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014

SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014

தமிழகத்தில் 2,000 மழலையர் பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம்: தொடக்க கல்வித்துறை


மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது. அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

பணத்தை கொட்டும் பள்ளிகள்

மழலையர் பள்ளிகள் பணம் காய்க்கும் மரங்களாக விளங்கி வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதை விட, இந்த பள்ளிகளை நடத்துவதற்கு செலவு குறைவு; ஆனால் வருமானம் கொட்டும்.

சாதாரண வீடுகளை பிளே ஸ்கூல் என பெற்றோரை ஈர்க்கும் வகையில் மாற்றி, அதை குழந்தை காப்பகமாகவும், மழலையர் பள்ளிகளாகவும் ஒரே கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டரை வயது குழந்தையை முறையான பள்ளிக்கு அனுப்ப, பிரீ கேஜி வகுப்பில் சேர்த்து ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு சுளையாக 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது.

இதனால் முறையாக சான்றிதழ்களை பெற்று தொடக்க கல்வித் துறையின் அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ப, அங்கீகாரம் வழங்க தொடக்க கல்வித்துறை கிரீன் சிக்னல் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்


கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும்.

தமிழக மாணவர்கள், கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இவர்களின் எதிர்காலம், தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில், தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம் ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்அவர்.

2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப் பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே.சி.மணி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும் வழங்கினார்.


நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர் வி.மருதராஜ், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்க தொடக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு


ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.

ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டி லும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது.

எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.

உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Tuesday, 19 August 2014

2014-2015 Teachers Training calendar(Revised)

2014-2015 primary & upper primary Teachers, BRC & CRC -Training calendar Revised...

இடைநிலை ஆசிரியர்களது ஊதியப்பாதிப்பினை உடனடியாக தமிழக அரசு நீக்கிட வேண்டும். # பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்திட வேண்டும் - என அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு சு. ஈசுவரன் அவர்கள் பேட்டி







பகுதி நேர ஆசிரியர்கள் காலியிடம் கணக்கெடுப்பு


அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சம்பளம், எஸ்.எஸ்.ஏ., மூலம், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கிராம கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிப்பு, தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களையும், பகுதி நேர ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் காலியிடம் இருப்பின் அது குறித்த விபரங்களையும், அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள்

DEE - LOAN & ADVANCES - COMPUTER / VEHICLE ADVANCES PROPOSAL SENDING REG INSTRUCTIONS CLICK HERE... 

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான உத்தரவு

DEE - PU / MUNICIPAL / GOVT TEACHERS' SERVICE REGISTER MAINTENANCE & ENTRIES REG INSTRUCTIONS CLICK HERE... 

9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி அடைவு ஆய்வு தேர்வு


அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு வரும் 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின், கல்வித்தர மேம்பாட்டினை அளவிடும் பொருட்டு, அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு வட்டாரத்திற்கு, மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் உள்ள 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில், அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதன்மூலம், மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் அளவிடப்படுகின்றன.

இதுகுறித்து, கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும் 26ம் தேதி நடைபெறும். ஆய்வு நடத்த வேண்டிய பள்ளிகளின் பட்டியல், இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும், ஆய்வு நடக்கும் நாள், பள்ளி, வகுப்பு ஆகியவற்றில் மாற்றம் செய்தல் கூடாது. ஆய்வு குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

தமிழ் பாடம் காலை, 9:30 11:00 மணி; ஆங்கிலம், 11:30 1:00 மணி; கணிதம், 2:00 3:30 மணி வரையிலும், தேர்வு நடத்தப்பட வேண்டும்.
மாணவர் எண்ணிக்கை 30க்குள் இருந்தால், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின், வருகை பதிவேட்டில் உள்ள பெயர்களை வைத்து சுழற்சி முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து தேர்வு நடத்த வேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என, ஒரு பள்ளிக்கு, இரண்டு களப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டக்கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள், தேர்வினை நடத்த மேற்பார்வையாளர்களாக உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தேர்வு நடத்தும் விதிமுறைகளை, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு - 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துறையின் அறிவிப்பு: தற்போது, அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர், திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, 18ம் தேதி முதல் (நேற்று), வரும் 28ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் 50 ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு பின், இரண்டாம் கட்ட தேர்வை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) நடத்தும். இதில் தேர்வுபெறும் மாணவர்களுக்கு, பி.எச்டி., வரை, மத்திய அரசின் கல்வி உதவிதொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம்


ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.

Monday, 18 August 2014

போட்டிக்கான கட்டுரைகளை ஆகஸ்ட் 30க்குள் அனுப்ப வேண்டும்


வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் கல்வி இருக்க வேண்டும். அதற்காக வரும் செப். 5ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் "என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர்" என்ற தலைப்பிலும், ஆசிரியர்கள் "வகுப்பறையில் வசந்தம்" என்ற தலைப்பிலும், ஆர்வலர்கள் "அரசு பள்ளிகள் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் "இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை" என்ற தலைப்பிலும் கட்டுரைகளை வரும் ஆக. 30 க்குள் அனுப்ப வேண்டும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: முத்துக்கண்ணன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடலூர். மேலும் விபரங்களுக்கு 9488011128, 9944094428 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

PGTRB Cutoff for 6 Subjects Published.

PGTRB Cutoff for 6 Subjects Published.

PGTRB Cutoff for English, Maths, Chemistry, Botany, History, MicroBiology Subjects Published. - Click Here


Time Table Allotment

பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது


ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்பிறகு இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 17 August 2014

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு - தேர்வுக்கட்டணம் 10 ரூபாய்

அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தரவு: அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும், தமிழக
ஊரகப்பகுதி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. செப்டம்பரில் நடக்க உள்ள இத்தேர்விற்கான விண்ணப்பங்களை, 'ஆன்-லைன்' மூலம், நாளை காலை, 10:00 மணி முதல்,  www.tndge.in என்ற இணையதள முகவரி யில், அனைத்துப் பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 22க்குள் பெற்று, ஆக., 25 முதல் 28 வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கான 'யூசர் - ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப் பட்டுள்ளது. ஆக., 22க்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்க வேண்டும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் தேர்வுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

தேர்வு மைய பட்டியலை, 25ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். வினாத்தாள் அனுப்புவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, தேர்வர்களின் எண்ணிக்கையை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்தேர்வில் ஊரகப்பகுதி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு, 1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.

அகஇ - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறவுள்ளது, காலை 9.30 முதல் 11மணி வரை தமிழ் பாடமும், 11.30 மணி முதல் 1மணி வரை ஆங்கிலமும், 2மணி முதல் மாலை 3.30மணி வரை கணித தேர்வும் நடைபெறவுள்ளது.

SPD - ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ON 26.08.2014 REG PROC & INSTRUCTIONS CLICK HERE...

அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு

SPD - 2014-15 ACTION RESEARCH - 10 ACTION RESEARCH FOR EACH BLOCK & 4130 ACTION RESEARCH WILL BE SUBMITTED WITHIN DEC 15 & PARTICIPANTS LIST WILL BE SEND WITHIN AUG 20 TO SPD REG PROC CLICK HERE...

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு : பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாறுகிறது


தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன. கடந்த, 2003க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர், அரசு ஊழியர்களின், அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம், பங்களிப்பு ஓய்வூதியமாக, மாத சம்பளத்தில், பிடித்தம் செய்யப்படுகிறது.

பள்ளி கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு, நிலுவை தொகை விவரம் குறித்த பட்டியல் தரப்படுகிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கணக்கு விவரம், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, 'டேட்டா சென்டரில்' பராமரிக்கப்படுகிறது. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்து, கருவூலத்தில் செலுத்துகின்றனர். உள்ளூர் தணிக்கை அலுவலர்கள் தணிக்கை செய்த பின், அதன் விவரம், டேட்டா சென்டருக்கு அனுப்பப்படும். பின், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு, கணக்கு பட்டியல் தர வேண்டும்.ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், உள்ளூர் தணிக்கை, முழுமையாக நடக்கவில்லை. இதனால், இந்த துறை ஆசிரியர்களுக்கு, இதுவரை எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாமல், அல்லாடி வருகின்றனர். மேலும், இறந்த ஆசிரியர், ஊழியர்களுக்கு கூட, பிடித்தம் செய்த தொகை வழங்கவில்லை என்ற புகாரும் இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், டேட்டா சென்டரில் உள்ள கணக்குகள் அனைத்தையும், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்ற, தமிழக அரசுக்கு, தொடக்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசாணை வெளியானதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்களின் கணக்குகள், மாறுதல் செய்யப்படும் என, தெரிகிறது.

நல்லாசிரியர் விருது: தேர்வுமுறைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு


மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யும் முறைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஆண்டுதோறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது வழங்கப் பட்டு வருகிறது. செப்.5க்கு முன் னர் விருது பெறுபவர்கள் விபரம் அறிவிக்கப்படுகிறது.

விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி செய்த ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தன் சுயவிபரம் அடங்கிய விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியருக்கு அளிக்க வேண்டும்.பின் மாவட்ட கல்வித்துறைக்கு செல்லும் விண்ணப்பம் கூடுதல் விபரங்களுடன் பள்ளிக்கல் வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் சுமார் 350 ஆசிரியர்களுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது.

மத்திய அரசு விருது பெற ஏற்கனவே மாநில அரசு விருது பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையுடன் மாநில அரசு விருதுக்கான தேர்வு முறையே இதிலும் பின்பற்றப்படுகிறது. இந்த விருதுகள் பெற அரசியல் தலை யீடு, பரிந்துரைகள், அவரவர்களே விருதுக்காக விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விருது பெறுவதற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “பல சிறந்த ஆசிரியர்கள் தங்களுக்கு விருது வழங்கவேண்டும் என அவர்களே விண்ணப்பம் அளிக்க விரும்புவதில்லை. மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை இல்லாமல் கல்வித்துறை சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய ஒரு குழுவினர் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும்.

Thursday, 14 August 2014

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு திருத்திய ஊதியம் வழங்குதல் சார்பான அரசின் தெளிவுரை


உத்தர பிரதேச மாநிலத்தில் அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது


உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது. லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மந்திரி, தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கடந்த காலங்களில் காப்பியடித்த சம்பவங்கள் நடைபெற்ற பள்ளிகளில் தேர்வு மையம் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறித்த நேரத்திற்குள் பாடப்புத்தகங்களை வழங்காதது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட அமைச்சர் அலி, சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது உ.பி. அரசு உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.

லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மந்திரி, தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். கடந்த காலங்களில் காப்பியடித்த சம்பவங்கள் நடைபெற்ற பள்ளிகளில் தேர்வு மையம் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறித்த நேரத்திற்குள் பாடப்புத்தகங்களை வழங்காதது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட அமைச்சர் அலி, சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்


மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

100க்கும் குறைவான...

இதற்கு, சென்னையில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகரிப்பு, குடிசை பகுதிகளை காலி செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி வருவது ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன. மாணவர் சேர்க்கை இல்லாததால், பல மாநகராட்சி பள்ளிகள் 100க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. இதில், எட்டு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை சேர்த்து, மொத்தம் 20 முதல் 30 மாணவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிகள் சேத்துப்பட்டு, சிவராஜபுரம், சாந்தோம், திருவல்லிக்கேணி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதி என்னாச்சு?

இவ்வளவு குறைந்த மாணவர்களை கொண்டு, ஒரு பள்ளியை நடத்த முடியாது என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியாரிடம் பள்ளியை ஒப்படைக்கலாமா என்று மாநகராட்சி ஆலோசித்தது. இதற்காக சில தனியார் கல்வி அமைப்புகள், பள்ளியை தத்தெடுத்து நடத்த முன்வந்தன.

ஆனால், மாநகராட்சி விதித்த நிபந்தனைகள், தனியார் நிறுவனங்கள் கோரும் தொகை உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தபோது, தனியார் மூலம் பள்ளிகளை நடத்தும் திட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குறைவான மாணவர்கள் படிக்கும், அந்த எட்டு மாநகராட்சி பள்ளிகளையும், ஒருவேளை மூட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய மேயர் சைதை துரைசாமி, எந்த மாநகராட்சி பள்ளியும் இனி மூடப்படாது; பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

கண்காணிப்பு இல்லை: இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, மாநகராட்சி ஆசிரியர்கள், குடிசை பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவர். ஆனால், தற்போது அதுபோன்று ஆசிரியர்கள் களத்திற்கு செல்வதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம் என்று விவரம் அறிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, 13 August 2014

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

ஆக.17ல் இக்னோ நுழைவுத் தேர்வு


         மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை,

          உத்தமபாளையம், ராமநாதபுரம் ஆகிய 10 மையங்களில் 4,800 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான நுழைவு சீட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

         இக்னோவின் இணையதளம் மூலம் மாணவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 238 0733 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி


 தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது.  தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள் செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய
பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள் ளது.

இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் நடக்கும் ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கல்வி சார்ந்த ஆய்வில் பாட வாரியாக ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளுக்கு ஷீல்டுகள் கிடைக்கும். ஆனால், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு வசதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் சுமார் 15 லட்சம் மாணவ மாணவியர் இந்த பயிற்சி கையேடுகளை பெறுவார்கள்.

தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விவரம் மற்றும் புதிய பணியிடங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதன் விவரம் தெரிவிக்க இயக்குனர் உத்தரவு

DEE - PART TIME TEACHERS DETAILS & ADDL NEEDED LIST CALLED REG PROC CLICK HERE...

தமிழகத்தில் 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்


தமிழகத் தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை களை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தொடக்கப் பள்ளி களில் போதிய ஆசிரியர்கள் இருக் கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மய்யம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2011 -2012ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற் போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தை கள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.அய்.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பிரதேசம், எல்லை யோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளி களில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித் துள்ளது.
இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரி யர்களை கொண்டே இவை இயங்கு கின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்கங் களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளி களில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்று விட் டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண் டும்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் களை புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக் கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரி யருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இது போன்ற பள்ளிகளில் அதிக மாணவர் களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Saturday, 9 August 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு ....


பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரம் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.