test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 30 April 2014

8- ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால், ஆன்லைன் மூலம் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்வுத்துறை அமைத்துள்ள மண்டல மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுத் துறை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது மாற்றுச் சான்று நகல், பதிவுத் தாள் நகல், பிறப்பு சான்று நகல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து அனுப்ப வேண்டும். ரூ.40க்கு தபால் தலை ஒட்டிய உறையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 8ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து விவர மும் தேர்வுத்துறை இணைய தளத்தில் காணலாம்.

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..


புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

      அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

      இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Here) என்றபகுதியில்   +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

     அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...



கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு


தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள், ஏற்கனவே தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,- பி.எட்., தேர்ச்சியடைந்தேன். ஆங்கில வழியில் பி.காம்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012--13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். 'கட்-ஆப்' மதிப்பெண் 92. எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில், 'நீங்கள் முதுகலை (எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,) ஆங்கில வழியிலும் படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தனி நீதிபதி: தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், அவருக்கு டி.ஆர்.பி., பணி வழங்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அகிலா உட்பட 6 பேர்,' தனி நீதிபதியின் உத்தரவுப்படி ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்டவர்களின், ஒட்டுமொத்த பட்டியலையும் டி.ஆர்.பி., மாற்றியமைத்தது. இதில், மாரியம்மாளின் பெயரை சேர்த்து வெளியிட்டது. இதனால் ஏற்கனவே, தேர்வு பெற்ற எங்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் சண்முகநாதன், மாரியம்மாள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகினர்.

நீதிபதிகள்:

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, அரசு 2010 ல் அமல்படுத்தியது. அதன்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. இவ்வழக்கைப் பொருத்தவரை, முதல் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, சலுகை வழங்குவதா? அல்லது பட்டமேற் படிப்பு, பி.எட்., மட்டும் தமிழ் வழியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதா? என தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கில், ஆசிரியர் பணிக்கு தகுதியாக, மாரியம்மாள் தமிழ் வழியில் எம்.காம்.,மற்றும் பி.எட்., படித்துள்ளார். சட்டம் அமலாவதற்கு முன் பலர் தமிழ், ஆங்கில வழியில் படித்திருக்கலாம். அமலானபின், தமிழ் வழி கல்விக்கு மாறியிருக்கலாம். இவ்வாறு தமிழ் வழிக்கு மாறி, படித்ததால் பணி வழங்க முடியாது என கூற முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு


ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. ஊதியக்குழு பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை, சொந்த பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை பெற முடியவில்லை. எனவே அவர்கள் அனைவருமே 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைத்தான் பெறலாம்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டது, 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தியது. 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறுபவர்களுக்கு, கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட அகவிலைப்படி உயர்வை பெற முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் அகவிலைப்படி 183 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடித்தபடி இருந்தது.

தற்போது அவர்களுக்கும், அகவிலைப்படியை 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தி தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக நிதித்துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார். அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஊதிய விகிதங்களுக்கு கீழ்வரும் அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை


பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது. 

இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும், 6 முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 
புதிய ஆசிரியர்கள் 

இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது.

ஆசிரியர் தேர்வு விவகாரம் புதிய மதிப்பெண் வழங்கும் விதிமுறை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் புதிய விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் பிரியம்வதனா உள்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கணக்கிட்டு முறையை அரசு அறிமுகம் செய்து அரசாணையில் புதிய விதிமுறை வகுத்தது.

இந்த விதிமுறை சட்டவிரோதமானது. சமமில்லாதவர்களை, சமமாக்க இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. 90 முதல் 104 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் நிர்ணயித்து சமமாக கருதுவது தவறானது. எனவே அரசின் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் கூறிய படி, விதிமுறை சட்டவிரோதமானது. இதை ரத்து செய்கிறேன். எனவே மனுதாரர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு சதவீதம் நிர்ணயிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

Monday, 28 April 2014

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்.



மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. 

மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, அதற்கடுத்தவெள்ளிக்கிழமையான, 23ம் தேதி வெளியிடப்படுகிறது. 

இப்படி, தொடர்ந்து மூன்று வாரங்களும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது, பொதுமக்கள் தரப்பில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் முதல், ஓட்டு போட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமையை, "ரிசல்ட்' தெரிந்து கொள்ளும் ஆவலுடன்எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

JOINT REVIEW MISSION OF TEACHER EDUCATION (SCERT) on 28-30th April 2014 (DATE OF VISIT IN VELLORE 29.04.14)

JOINT REVIEW MISSION OF TEACHER EDUCATION (SCERT) on 28-30th April 2014 (DATE OF VISIT IN VELLORE 29.04.14)

click here for JOINT REVIEW MISSION OF TEACHER EDUCATION (SCERT) on 28-30th April 2014 (DATE OF VISIT IN VELLORE 29.04.14)

பி.இ. கலந்தாய்வு: விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன்



          பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக "3ஜி' அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டுள்ளது. 

           பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தபுதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2014-15 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்குகிறது."எஸ்.எம்.எஸ். அலர்ட்': கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என்பதோடு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அளிக்கும் வசதி கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதாவது, கலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.இதற்காக விண்ணப்பத்தோடு அவர்களது செல்பேசி எண்ணும் பெறப்பட்டது.

          வழக்கமான அழைப்புக் கடிதம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் லிஸ்ட்ஆகியவற்றோடு இந்த எஸ்.எம்.எஸ். தகவல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் என்பதோடு, புதிதாக"டி.என்.இ.ஏ.' என்ற பெயரில் புதிதாக 3ஜி அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்த இலவச அப்ளிகேஷனை மாணவர்கள் தங்களுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.பின்னர் விண்ணப்ப எண்ணை சமர்ப்பித்தால், கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது




இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந்
தேதி தொடங்குகிறது.

5 சதவீத மதிப்பெண் சலுகை

ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர்கள்

இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.

மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு



2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய seniority -ஐ வழங்க வேண்டும்

2)01.01.2012 pannel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு )நிலையிறக்கம் செய்ய வேண்டும்

3)01.01.2013 pannel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை pannel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும் .அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே 01.01.2012 -pannel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம் )நிலை உருவாகி உள்ளது.01.01.2013 pannel மற்றும் 01.01.2014 pannel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -


CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus

 Important Dates
Application Forms are issued from  
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு


அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக, தமிழக அரசு அறிவித்து
ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலம் முழுவதும், மேல்நிலைப்பள்ளிகளில் 3300 தொழில்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பணி ஓய்வு பெறுபவர்களின் இடங்களை நிரப்பாமலும், புதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்யாத காரணத்தாலும், 1000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.அரசு பள்ளிகளில், 2000ம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, காலியாகவுள்ள இடங்களில், தொழில்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தற்போது வரை 2000 அல்லது 3000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தன்படி, குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.கடந்த 2006ம் ஆண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த 213 தொழில்கல்வி ஆசிரியர்கள் பணிநிரந்தம் செய்யப்பட்டனர். மீதம் உள்ள, 622 பேர் தகுதியின் அடிப்படையில், படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2007ம் ஆண்டு முழு தகுதி பெற்ற, 271 ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அறிவிப்புகளை வெளியிட வேண்டி, தமிழ்நாடு தொழில்கல்வி ஆசிரியர் கழகம் பல முறை போராட்டங்கள், உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொண்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என்று சங்க நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''கடந்த 2000ம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ஊதியம் 3000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டு, பணி வரன்முறை செய்வதற்காக 271 பேர் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு கிடைத்தும், வேறு வழியின்றி அரசை நம்பி கடந்த ஏழு ஆண்டுகளாக காத்துக்கிடக்கின்றோம். குறைந்த ஊதியத்தால், குடும்ப பொருளாதார சூழலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.'எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதை உணர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 271 பேரையும், பணி நியமனம் செய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.

Tuesday, 22 April 2014

தலைமை வாக்குசாவடியாளர்களுக்கான காணொளி காட்சி...

தலைமை வாக்குசாவடியாளர்களுக்கான காணொளி காட்சி...

தலைமை வாக்குசாவடியாளர்களுக்கான
காணொளி காட்சி click here...

நாளை வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூர பூத்களுக்கு செல்ல பஸ் வசதி...


ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, நாளை வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நாளன்று, பூத்களில் ஓட்டுப்பதிவு அலுவலர்களாக நியமித்து உள்ள அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான, இறுதிகட்ட பயிற்சி, சட்டசபை தொகுதி வாரியாக அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாம்,நாளை (ஏப்., 23 ) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏப்., 16ல் பயிற்சியில் கலந்துகொண்ட, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அதே மையத்தில் கலந்துகொள்ளவேண்டும். அன்று, ஓட்டுச்சாவடி பெயர் அடங்கிய பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தொலைவாக உள்ள பூத்களுக்கு செல்ல, பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளதாக, தகவல்கள்  தெரிவித்து உள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வீடியோ! தமிழில்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வீடியோ! தமிழில்

CLICK HERE-EVM TRAINING VIDEO -PART - 1 IN TAMIL

பிளஸ்2 படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு தகுதியானவர்கள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி குரூப்-2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி குரூப்-1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது. இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

இவர்கள் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்-2 படிக்காமல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர் என்று ஒரு பிரிவினரையும், பிளஸ்-2 படித்துவிட்டு இளங்கலை பட்டம் படிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்று மற்றொரு பிரிவினரையும் காரணம் கூறி தேர்வு முடிவுகளை வெளியிடாமலும், அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்தும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி மற்றும் தமிழக அரசு சார்பில் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களில், ‘இளநிலை பட்டம் பெறாமல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல, 10-ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்-2 படிக்காமல், நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று தமிழக அரசு கடந்த 2009 -ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தும், அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமலும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- இளங்கலை பட்டம் படிக்காமல், நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை சரிதான். அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், 10-ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்-2 படிக்காமல் நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பில் சேர்பவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்றும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களை இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழு (யு.ஜி.சி.) உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற பட்டப்படிப்பு செல்லாது என்று 2009- ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஒரு பட்டப்படிப்பு செல்லும், செல்லாது என்பதை யு.ஜி.சி. பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில்தான் பரிசீலிக்க முடியுமே தவிர, மாநில அரசின் அரசாணையின் அடிப்படையில் அவற்றை பரிசீலிக்க முடியாது. மேலும், இவர்கள் பிளஸ்-2 படிக்காவிட்டாலும், பல்கலைக்கழகம் நடத்திய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர். எனவே, இந்த நேரடி இளங்கலை பட்டப்படிப்பு குறித்து யு.ஜி.சி. பிறப்பித்த விதிகளின் அடிப்படையில்தான் பரிசீலிக்க முடியும். யு.ஜி.சி. விதிகளின்படி, பிளஸ்-2 படிக்காமல் சிறப்பு நுழைவுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பின்னர் நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பு பெற்றவர்களின் பட்டம் செல்லும். இந்த பட்டத்தை பெற்றவர்கள், அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள்தான். அவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும். எனவே, பிளஸ்-2 படிக்காமல் நேரடியாக இளங்கலை படித்தவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தும், அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தும் டி.என்.பி.எஸ்.சி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏப். 23 -ல் மூன்றாம் கட்டப்பயிற்சி


எதிர்வரும் 24.4.2014 -ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தோóதலுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோóவு செய்யப்பட்டு, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப்பயிற்சி நாளை(ஏப்.23) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 23 -ம் தேதி கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், விராலிமலை தொகுதியில் பணம்பட்டி மகாத்மா பொறியியல் கல்லூரியிலும், புதுக்கோட்டை தொகுதியில் அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் தொகுதியில் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குடி தொகுதியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அனைத்து அலுவலர்களுக்கும் மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது.

இந்த நாளில் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி விபரங்களுடன் நியமன ஆணை மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தில் நேரில் வழங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்

Monday, 21 April 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு : பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.

இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர். 

தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

DEE - ADMISSION CANCELLED FOR 2014-15 ACADEMIC YEAR FOR 723 UN-RECOGNIZED SCHOOLS REG PROC CLICK HERE..

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏன், அரசியல் கட்சிகளும் கூட உருவாக்கி வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.


அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க வேண்டும் எனக் கேட்டு அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பை அளித்த நீதிபதி, தனது வீட்டின் கழிப்பறையை தானே சுத்தம் செய்வதாகக் கூறியதோடு, கழிப்பறை சுத்தம் செய்தலை ஒரு குறிப்பிட்ட சாதிதான் செய்ய வேண்டும் என்ற சாதிய கட்டமைப்பை அகற்றவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தனி மனிதனின் அகந்தை அகலவும் மகாத்மா காந்தி கூறிய சில வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

இன்றைய நாகரிகச் சூழ்நிலையில் பள்ளிகளின் சூழல் பெரிதும் மாறிவிட்டது. முன்பெல்லாம் கிராமப்புற பள்ளிகளின் அன்றாட பராமரிப்பை மாணவ, மாணவிகளே மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, பள்ளியை சுத்தம் செய்வது, வகுப்பறைகளுக்கு தண்ணீரை பிடித்து வந்து மண் பானைகளில் கொட்டி வைப்பது, கரும்பலகைகளை சுத்தம் செய்வது, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வகுப்பறைகளில் ஒட்டடையை அகற்றுவது, ஆசிரியர்களின் இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களை சுத்தம் செய்வது என மாணவர்களின் கல்வி சாரா பணிக்கென ஒரு நீண்ட பட்டியலே இருக்கும். அந்த பணிகளை மேற்கொள்ள, பாட கால அட்டவணை போன்றே தனியாக ஒரு அட்டவணை தலைமை ஆசிரியரின் இருக்கைக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கி கொண்டிருக்கும்.

சுழற்சி முறையிலான இந்தப் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாவிட்டாலோ அல்லது ஏதேனும் குறை இருந்தாலோ தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியரிடமிருந்து "ஓலை' வரும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். சில வேளைகளில் பாராட்டும் வரும்.

இதற்கு அன்று யாரும், எந்த பொதுநல அமைப்பும், அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, பள்ளியை சுத்தம் செய்யும் பணி இருக்குமானால் பெற்றோரே பிள்ளையை அதிகாலையில் எழுப்பி அனுப்பி வைப்பார்கள். மாணவர்கள் மனம் விரும்பி அந்தப் பணிகளை செய்தார்கள். கல்வியோடு வாழ்வியல் நடைமுறைகளையும் அவர்கள் கற்றார்கள். அதனால் வாழ்வில் உயர்ந்தார்கள்.

பள்ளிகளில் மாணவர்கள் பெறும் இந்த அடிப்படை வாழ்வியல் பயிற்சிகள் அவர்களது பிற்கால வாழ்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த "பொதுநலன்' காப்போர் அறிய வேண்டும். பள்ளியில் அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் தலைமைப் பண்பை பெறுதல், பொருள்களை முறையாக பராமரித்தல், தனது தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தானே நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்ற பல வகைகளில் அதன் பயனை பிற்காலத்தில் அனுபவிப்பர்.

இன்றும் கூட மேல்தட்டு மக்களின் குழந்தைகள் பயிலும் சில தனியார் பள்ளிகளில் அவ்வப்போது வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு வாயில் எளிதில் நுழையாத ஒரு பெயரை சூட்டி, அபரிமிதமான கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். அங்கெல்லாம் இந்த "பொதுநல' விரும்பிகளின் கவனம் செல்லாது. மாறாக, அதை புகழ்ந்து பேசிக் கொள்வோரும் உண்டு. காரணம், அவர்களது குழந்தைகள் அங்கே கல்வி பயின்று கொண்டிருக்கும். அரசு பள்ளிகளில் எளிமையாக, அன்றாட நடைமுறைக்கு ஏற்ப அளிக்கப்படும் வாழ்வியல் பயிற்சிகளில்தான் இவர்களால் குறை காண முடிகிறது.

"நாடு தற்சார்புடையதாக மாற வேண்டும்; எவரையும் சார்ந்திருக்க கூடாது' என வாய் வலிக்க பேசுகிறோம். அதன் முதல்படியாக தனி மனிதன் தற்சார்புடையவனாக வாழ வேண்டாமா? அதற்கான பயிற்சிக் களங்கள்தான் பள்ளிகள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அவற்றை நீக்குவதற்கு வழிவகை காணப்பட வேண்டும். அவற்றைப் பொதுமைப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் பாதிப்பு மாணவர்களுக்குதானே தவிர ஆசிரியர்களுக்கல்ல. இதை பெற்றோரும், அரசும் புரிந்து கொண்டால் இந்த போலியான "பொதுநல' விரும்பிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

21.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்( 22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

21.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்( 22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு,ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sunday, 20 April 2014

21ம் தேதி மூன்றாம் பருவ தேர்வுகள்


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இம்மாணவர்களுக்கு 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை மூன்றாம் பருவ தேர்வுகள் நடக்கவுள்ளது. தேர்தலை முன்னிட்டு 23, 24, 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி இறுதி வேலைநாளாக பள்ளிகள் செயல்படும். மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்


'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

* ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டருக்குள் 'பூத்' இருக்க கூடாது.
* மொபைல் போன், அந்த எல்லைக்குள் அனுமதிக்கப்படாது.
* ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீட்டருக்குள், வேட்பாளர்கள், பூத் அமைத்து கொள்ளலாம்.
* அதில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் போடலாம்.
* வெயிலுக்கு குடை பிடித்துக் கொள்ளலாம். வெயில் மிகவும் அதிகமாக இருந்தால், அதிகாரிகள் அனுமதி பெற்று, தார்ப்பாய் அல்லது துணியால், கூரை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள்- கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் ஐஏஎஸ்


          படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக்கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார். . 

         கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் பேசியதாவது: அரசுப்பணிக்கு வந்த 22 ஆண்டுகளில் 22 பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். என்னை விட அதிகளவு பணியிடமாற்றம் செய்யப்பட்ட 
அதிகாரிகளும் இந்தியாவில் உள்ளனர். நாட்டில் முக்கியப் பிரச்னை லஞ்சம். நாமக்கல் ஆட்சியராக இருந்தபோது மது அருந்தி வாகனம் ஓட்டிய இரு இளைஞர்கள் சாலையில் செல்லும்போது பிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மது அருந்திய நிலையிலும் ரூ. 100 லஞ்சம் என்னிடம் தர வந்தனர். மது அருந்திய நிலையிலும் லஞ்சம் தந்தால் தப்பிக்கலாம் என்றஎண்ணம் மனதில் பதிந்துள்ளது தெரிந்தது. 
        ஆட்சியராக இருந்தபோது அடிக்கடி அரசு பள்ளிகளை ஆய்வு செய்வேன்.ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள். பல ஏழைக்குழந்தைகள்அரசு பள்ளிகளில் நன்கு படித்து நல்லமதிப்பெண்பெற்று உயர்நிலைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். 
         தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த மதுரை ஆட்சியராக தேர்தல்ஆணையம் என்னை 2011ல் தேர்வு செய்து நியமித்தது. நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பல தரப்பினரையும் அணுகினேன். ஒத்துழைப்பு இல்லை. இறுதியில்கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் பேச தொடங்கினேன்.அதற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து நீதிமன்ற வழக்கு,உடன் பணியாற்றியோர் அளித்தபுகார் என பல விசயங்களையும் தாண்டிநேர்மையாக பணியாற்றினேன். 
     அதேபோல் கிரானைட் குவாரி தொடர்பான விசயத்தில் விவசாயிகள்புகாரைத்தொடர்ந்து ஆய்வுகளை தொடங்கினேன். பணியிடமாற்றம் வந்தது.இதையடுத்து 3 நாளில் எனது ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பினேன்.அதையடுத்து பல ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பானவிசாரணை நடந்தது. பணியில் பணியிடமாற்றம் இருந்தபோதிலும் இன்னும் அச்சுறுத்தல்கள்இருக்கதான் செய்கிறது. 
      இளையோர் பலரும் சூழல்களினால் மனமாற்றம்அடைந்து விடக்கூடாது. தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.எப்படி இச்சூழலில் இயங்குகிறீர்கள் என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். அதற்கு, நான் இன்னும்நம்பிக்கையை இழக்கவில்லை என்று பதிலை கூறுகிறேன். 
        தற்போது கோ ஆப்டெக்ஸில் பணியாற்றத்தொடங்கியுள்ளேன். லாபத்தில்நிறுவனம் இயங்குவதால் நெசவாளர்கள் பயன்கிடைக்கிறது. இதற்கும் மாணவ,மாணவிகள் ஆடைகளை வாங்குவது ஓர் காரணம்.அதனால்தான் நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு மாறியதுடன் இரு தேசிய விருதுகளை கோ-ஆப்டெக்ஸ் வென்றுள்ளது. 
          படிக்கும் காலத்தில் இலக்கு நிர்ணயித்து கொள்வது முக்கியம். திட்டமிட்டு நேர்மையாக விடாமுயற்சியுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். நாட்டில் முக்கியப்பிரச்சினை லஞ்சம். லஞ்சம் தேச முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. அதை தடுக்க மனஉறுதி முக்கியம். 
         மனஉறுதியுடன் எதிர்க்காவிட்டால், சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். நண்பருக்காகவோ, உறவினருக்காகவோ என லஞ்ச விசயத்தை அணுகக்கூடாது. லஞ்சம் மனித மாண்புக்கு எதிரானது, தவறானது, சுயமரியாதைக்கு எதிரானது என உறுதியாக எண்ணுவது அவசியம். 
         பணியாற்றுவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. இருவரும் இச்சமூகசூழலில் ஒரே வித பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. உண்மையில் பெண்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாக வந்தால் லஞ்சத்தை அதிகளவில் கட்டுப்படுத்த இயலும். அதனால் பெண்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதமுன்வரவேண்டும் என்றார் சகாயம்.

10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்

10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு.

பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன் லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக் கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக முன்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர்.மாவட்ட தலைமையகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்வதால் மாணவர் களுக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன் பல்வேறு சிரமங்களையும் அவர் கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த நிலையில், நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கவும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக்கவும் பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவுசெய்யும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.கையோடு பதிவு அட்டைஆன்லைனில் பதிவுசெய்வது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் சம்பந்தப் பட்ட பள்ளிக்குச் சென்று ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பதிவு செய்வதற்கான உபயோகிப்பா ளர் அடையாளம் (யூசர் ஐ.டி.), ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகிய வற்றையும் வழங்கி விடுவார்கள். பள்ளி ஊழியர்களே பதிவுப் பணியை செய்துவிடுவர்.10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் படும் நாளில் அனைத்து மாணவர் களுக்கும் பள்ளியிலேயே கல்வித்தகுதி ஆன்லைனில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, சாதி விவரம், ரேஷன் அடையாள அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங் களை பதிவுசெய்து கையோடு வேலைவாய்ப்பு பதிவு அட்டை யும் கொடுக்கப்பட்டுவிடும்.

தாமதத்தை தவிர்க்க...

வெவ்வேறு நாட்களில் பதிவு செய்ய நேர்ந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாள்பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அளிக்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது. மாணவர்கள் தொடர் பான விவரங்களை ஒவ்வொன் றாக ஆன் லைனில் பதிவேற்றம் செய்வதால் கால தாமதம் ஆவதால் ஆன்லைன் பதிவை விரைவுபடுத்த புதிய நடை முறையை இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மாணவர்கள் பெயர், பிறந்ததேதி, இருப்பிட முகவரி, ரேஷன் அடையாள அட்டை விவரம் உள்பட அனைத்து தகவல்களையும் மாணவர்களிடம் முன்கூட்டியே பெற்று கணினியில் பதிவுசெய்யப்படும்.

மே 2-ம் தேதிக்குள்..

மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான விவரங்கள் மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று பதிவுசெய்யப்படும். இதன்மூலம், இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்துவிவரங்களையும் ஒரே நேரத்தில் பதிவுசெய்யத் தேவையில்லை.

சான்றிதழ் விவரம் நீங்க லாக மற்ற தகவல்கள் அனைத் தும் முன்கூட்டியே டேட்டா என்ட்ரி செய்யப்பட்டு விடுவ தால் ஆன்லைன் பதிவை விரைவாக முடித்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாளில் பதிவு அட்டையை வழங்கிவிட முடியும். இதற்காக, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மே 2-ம் தேதிக்குள் சேகரிக்கு மாறு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்

CLICK HERE-உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் 

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள்

அன்பார்ந்த நண்பர்களே!

நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப்பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்டநேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினைமறக்கக் கூடும்.

வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக்கொண்டால் நல்லது தானே! இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக்கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில்எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பலபயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன. உங்களுக்குஉதவக்கூடிய மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்துபயன்பெறுங்கள்.

Wednesday, 16 April 2014

NEWS UPDATE: 16.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்...

NEWS UPDATE: 16.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்...

இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் பிற மாநிலங்களில் பின்பற்றிவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆராய்ந்த பின்னரே தமிழகத்திலும் அதற்கென அமைக்கப்பட்ட குழு இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையினை பரிந்துரைத்தது. எனவே இது சரியானதுதான் என வாதிட்டார்.நீதியரசர் நாகமுத்து இம்முறையில் தேர்வர்கள் பெற்ற தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் முறைமூலம் பெறும் மதிப்பெண்களுக்கும் நேர்விகித தொடர்பு உள்ளதா? என வினா எழுப்பியதாக தகவல் தெரிவிக்கின்றன.வழக்கு விசாரணை நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஇவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ்வழக்கும் நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்


பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பதில், தமிழக அரசு, கால தாமதம் செய்து வருகிறது. 

வரும், 2015 - 16ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கும், 2016 - 17ல், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், பாட வாரியான வல்லுனர் குழு
மூலம், 25 பாட தலைப்புகளில், வரைவு பாட திட்டத்தை தயாரித்தது.

பின், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும், கருத்துக்களை கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, வரைவு பாடதிட்டத்தை, இறுதி செய்தது. இதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு, கோப்பு அனுப்பி, பல மாதங்கள் ஆகின்றன. இதுவரை, அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. முதல்வர், தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, அரசின் ஒப்புதலுக்காக, கோப்பு அனுப்பப்பட்டதாக, கல்வித்துறை கூறுகிறது.

இது குறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்தால் தான், அடுத்த கட்டமாக, பாட தலைப்பு வாரியாக, விரிவாக பாடம் எழுத முடியும். இந்த பணி முடியவே, ஓர் ஆண்டை தாண்டிவிடும். பின், எழுதிய பாடங்களை, ஒன்றுக்கு பல முறை சரிபார்த்து, பாட புத்தகங்களை அச்சிட வேண்டும். இந்த பணிகளுக்கு, அதிக கால அவகாசம் தேவைப்படும். எனவே, புதிய பாடத்திட்டங்களுக்கு, விரைந்து அனுமதி கிடைத்தால் தான், அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடக்கும். இவ்வாறு, அவ்வட்டாரம் தெரிவித்தது. பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம் கொண்டு வரும் விவகாரத்தில், கடைசிவரை, அரசு, எவ்வித முடிவும் எடுக்காததால், வரும் கல்வி ஆண்டில், பழைய முறையே தொடர உள்ளது. இதே நிலை, பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்களுக்கும் ஏற்பட்டால், பெரிய குழப்பம் ஏற்படும்.

நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு பதிவுக்கு பிறகு இயந்திரத்தின் குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்


         மோசடி புகாரை தவிர்க்க வாக்கு பதிவுக்கு பிறகு இயந்திரத்தின் குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்: தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு.

         வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை கண்டிப்பாக அழுத்த வேண்டும்’’ என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

           இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை : வாக்குப் பதிவுமுடிந்தவுடன், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தவில்லை என்று கடந்த தேர்தல்களின்போது புகார்கள் வந்தன. குளோஸ் பட்டனை அழுத்தாமல் விட்டுவிட்டால், மோசடி நடக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே, தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்தவுடன், அந்த வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை வாக்குச் சாவடி அதிகாரி அழுத்த வேண்டும். அதன்பின்னர், கடைசியாக வாக்களித்தவரின் வரிசை எண்ணுக்கு கீழே, ஒரு கோடு வரையவேண்டும். இந்த நடைமுறை அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் நடைபெற வேண்டும். 

        மேலும், வாக்கு பதிவு முடிந்தவுடன், எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற அத்தாட்சி நகலை வாக்குச்சாவடி அதிகாரிகள், அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கும் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

2013-14ம் ஆண்டுத் தேர்வு தேர்ச்சி சுருக்கம், தரநிலை தேர்ச்சி அறிக்கை, மதிப்பெண் அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆசிரியர்கள் விடுப்பு விவரம், பள்ளி வேலை நாட்கள் விவரம் படிவங்கள்

ANNUAL REPORT FORMAT CLICK HERE...

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் - சில முக்கிய குறிப்புகள் மற்றும் TALLY SHEETS,படிவங்களின் விவரங்கள்,மற்றும் தேர்தல் பணியில் வழங்கப்படும் போருட்களின் விவரங்கள் ......

CLICK HERE TO DOWNLOAD ELECTION TIPS IN SIMPLE AND EASY METHOD GUIDE - ONLY 4 PAGES ONLY.

Ignou December 2013 Revaluation Result published

Ignou December 2013 Revaluation Result published


Sunday, 13 April 2014

நல்லாண்பிள்ளைபெற்றாள் பள்ளி ஆண்டு விழா

               நல்லாண்பிள்ளைபெற்றாள் பள்ளி ஆண்டு விழா






       விழுப்புரம் மாவட்டம்.  செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்  ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார்.  கிராமக்கல்விக்குழு தலைவரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான  அஞ்சுகம் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.  ஊராட்சிமன்றத் தலைவர் ரஞ்சித்குமார், ஒன்றிய கவுன்சிலர் முருவம்மாள் சந்திரன் முன்னிலை வகித்தனர்.  உதவி ஆய்வாளர் குமார், வங்கி மேலாளர் நாகராசு, ஆசிரியர் பயிற்றுனர் தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பின்னர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும், விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கும்   உதவி தொடக்கக்  கல்வி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அன்பழகன் ஆகியோர் பரிசுகளை வழங்கி   சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் ஆசிரியைகள் அமுதா, விஜயலட்சுமி, சாந்தி, விஜயலட்சுமி சசிகலா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின்  ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

TET Court Cases அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

TET Court Cases அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

GROUPING MATTERS

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014

இன்று வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நடைபெற்றது தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இறுதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறை எந்த பார்முலாவின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை அரசு தரப்பில் தாக்கல் செய்ய கோரிய நீதியரசர் வழக்கு விசாராணையை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.

2012 TET -5% தளர்வு குறித்த வழக்கும் அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6156, 1590, 6872 ஆக மொத்தம் 14612 பணியிடங்களுக்கு 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6156, 1590, 6872 ஆக மொத்தம் 14612 பணியிடங்களுக்கு 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு


திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது


திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ் தெரிவித்தார்.


ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.  

கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993 பேர், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர், திருநங்கை வாக்காளர் கள் 107 பேர் என்று மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர். இதுதவிர 312 பேர் சர்வீஸ் வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் சீட்டுவாக்காளர்களுக்கு 19-ந் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கொடுக்க வாக்குச்சாவடி அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். 

இதுதவிர வாக்குப் பதிவு நாள் அன்று வாக்குச் சாவடி மையம் அருகில் உதவிமையம் அமைக்கப்பட்டு விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் மாவட்டத்தில் 10,126 பேர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர்.

 தபால் ஓட்டுப்பதிவுஇவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முடிந்து விட்டது. அடுத்தகட்ட பயிற்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பயிற்சியும், மாலையில் அரசியல் கட்சியினர் முன் னிலையில் தபால் ஓட்டுப்பதிவும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், தபால் ஓட்டுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித் தார். 

Friday, 11 April 2014

வேலூர் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி


வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்திலுள்ள 3,272 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்து 967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக கடந்த 3ம் தேதி, மாவட்ட முழுவதும் மொத்தம் 11 பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்றுமுன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் 2ம் கட்ட பயிற்சி வரும் 13ம் தேதி மாவட்டம் முழுவதும் நடக்கிறது. இந்த பயிற்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு தயார் செய்து வைக்க வேண்டும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும்போதே அவர்களின் பணிகள், அதற்குரிய படிவங்கள் பூர்த்தி செய்வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் வாக்களிக்க தேவையான 12 வகையான ஆவணங்கள்

பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் வாக்களிக்க தேவையான 12 வகையான ஆவணங்கள்

Election Commission Ordered to Voters, Use 12 Documents for Polling..

1.Passport
2.Epic
3.Booth Slip
4.Driving Licence
5.ID card which is authorized by State or Central Govt
6.Bank Passbook
7.Pan Card
8.Adhaar
9.Pension Book
10.Medical Insurance Card
11.Smart Card with Photo 
12. Rural Employee Card.

"பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று துவக்கம்



சென்னை: ""வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிந்துள்ளது. 

"ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' : சில தொகுதிகளில் மட்டும், பணி நடந்து வருகிறது. அதேபோல், வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய, "பூத் சிலிப்' அச்சிடப்பட்டுள்ளது. இதை, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இன்று துவக்கி, 19ம் தேதிக்குள் முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. "பூத் சிலிப்' வெள்ளை நிற காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் பெயர், முகவரி, பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பின்புறம், "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். "பூத் சிலிப்' கிடைக்கப் பெறாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் அன்று, ஓட்டுச் சாவடியிலும் வழங்கப்படும்.
ஓட்டுச்சாவடிக்குள் யாரும், மொபைல் போன் எடுத்து செல்லக் கூடாது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து, வேட்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் பாதுகாப்பு கேட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆய்வு செய்யப்படும் : ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் சம்பவம் நடந்தால், அந்த ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அத்துடன், ஓட்டுச்சாவடி அலுவலர், "டைரி' மற்றும் அங்கு பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள், மறுநாள் ஆய்வு செய்யப்படும். அப்போது, தவறு ஏதும் நடந்திருப்பதாக தெரிய வந்தாலும், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.

11 ஆவணங்கள் செல்லும் : புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலையங்கள், புகைப்படத்துடன் வழங்கியுள்ள கணக்கு புத்தகம், பான் கார்டு, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, பென்ஷன் ஆவணம், தேர்தல் கமிஷன் வழங்கும், "பூத் சிலிப்' ஆகியவற்றை கொண்டு, ஓட்டு போடலாம். இதில் எதுவும் இல்லையென்றால், ஓட்டு போட முடியாது.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு


ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன | Pension DA GO

அரசாணை எண்.100 நிதித்துறை நாள்.09.04.2014 - ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

Wednesday, 9 April 2014

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்...


     குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

             நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில் 20 உள்ளூர் மற்றும் தேசிய குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இலவசமாக பெறலாம்.மேலும் 45 நிமிஷம் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் எண்கள் அல்லது இதரமொபைல் போன் எண்களுடனும் இலவசமாக பேசலாம்.நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசாவும், 10 கேபி டேட்டாவுக்கு 2 பைசா எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தொலைத் தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களைக் கவரும் நோக்கில் இப் புதிய சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய திட்டம் குறித்து முழு விவரங்களை சென்னை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு


     அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

          மாநிலம் முழுவதும், 23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்கு, தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பிரித்து தரப்படுகிறது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த, சில நாள் கால தாமதம் ஆனாலும், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை, மின்வாரியத்திற்கு, தொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை, மாவட்ட வாரியாக, தொடக்கக் கல்வித் துறை, இயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும், மின் வாரிய அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. 

          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். இந்த பள்ளிகளிலும், ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கக் கல்வித் துறையை போல், பள்ளிக்கல்வி இயக்குனரகமே, நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால், பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 23-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பேருந்து பயண அட்டைகள் காலதாமதமின்றி வழங்கிட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பேருந்து பயண அட்டைகள் காலதாமதமின்றி வழங்கிட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

பிளஸ் 2-வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள்


பிளஸ் 2 தேர்வில் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அடிப்படையாக வைத்து விரைவாக கற்கும் மாணவர்கள், மெல்ல கற்கும் மாணவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர் கல்வியியலாளர்கள். மெல்ல கற்கும் மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு தேர்வுக்கு முன்னர் அவர்களுக்கான முக்கியமான வினா-விடை, சிறப்பு பயிற்சிகள் எல்லா அரசுப் பள்ளிகளிலும் வழங்கப்பட்டது.இதன் மூலம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 50 மதிப்பெண் களுக்கான வினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டிலிருந்து கேட்கப் பட்டிருந்தது. இதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2-வில் அதிக அளவில் தேர்ச்சியும் நல்ல மதிப்பெண்களும் பெறுவார்கள் என கல்வித்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தனியார் பள்ளிகளிலிருந்து வேறு மாதிரியான எதிர்வினை வந்துள்ளது. “மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து கேள்விகளை எடுத்ததால, எங்க மாணவர்களுக்கு தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த முறை எங்க மாணவர்கள் நிறைய மார்க் எடுக்க மாட்டாங்க போலிருக்கு. அதனால், நீங்க இப்படி வினாக்களை தேர்வு செய்யக்கூடாது” என்கிறார்களாம்.இதற்கு தனியார் பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள் குறித்து பாடம் நடத்தாதது தான் காரணம். “பிளஸ் 2 பாடத்தை 2 ஆண்டுகளாக நடத்துகிறீர்கள், ஆனால், மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் கடினமாக இருக்கிறதா?” என்று மறைமுகமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிண்டல் செய்கிறார்கள்.மெல்ல கற்கும் மாணவர்களுக் கான பயிற்சி ஏடு அரசுப் பள்ளி களில் பிப்ரவரியில்தான் கொடுக் கப்பட்டிருக்கிறது. இதையே இன்னும் முன்கூட்டியே வழங்கி னால் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்னும் அதிகமான மதிப்பெண் கள் எடுக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். வரும் கல்வியாண்டிலிருந்து இந்த பயிற்சி ஏட்டை பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்வி முகாமில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது - தினப்படி (D.A.) மற்றும் பயணப்படி (T.A.) வழங்குவது குறித்து.


 மார்ச் / ஏப்ரல் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதடிந தேர்வு முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி (T.A.) / தினப்படி (D.A.) வழங்கக்கூடாது.

 தேர்தல் பணியில் ஈடுபடாத பணியாளர்களுக்கு பயணப்படி (T.A.) / தினப்படி (D.A.) வழங்கப்படும்போது """"தேர்தல் பணியில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபட்டதாக பின்னர் தெரிய வந்தால் மேற்காண் தொகை பிடித்தம் செடீநுய சம்மதிக்கிறேன்."" எனவும் உறுதிமொழி பெறப்பட்ட பின்னர் தொகை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

Tuesday, 8 April 2014

IGNOU GENUINENESS APPLICATION FORMAT.


தற்போது IGNOU  இரண்டாமாண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு PROVISIONAL CERTIFICATE, GRADE CARD வந்து கொண்டுள்ளது. வந்தவுடன் GENUINENESS CERTIFICATE பெற விண்ணப்பிக்கவேண்டும். அதற்கான மாதிரி விண்ணப்பம் வெளியிட்டுள்ளோம். WORD இல் உள்ளதை  EDIT பண்ணி பயன்படுத்திகொள்ளுங்கள். நண்பர்களுக்கு உதவுங்கள்.

அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு

DGE - DGE ORDERED REG TA, DA WILL NOT BE GIVEN FOR THOSE WHO R WORKED ON ELECTION CLASSES OR OTHER WORK PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

DEE - 2013-14 BEST SCHOOL AWARDS - SCHOOLS LIST CALLED REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு

10ம் வகுப்பு அறிவியல் கேள்வித்தாளில் பிழை , அறிவியல் தேர்வு எளிது: மகிழ்ச்சியில் மாணவர்கள்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக, மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக, அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த, அறிவியல் தேர்வில், இரு கேள்விகளில், பிழை மற்றும் குழப்பம் இருந்ததால், மாணவர்கள் பதிலளிக்க சிரமப்பட்டதாகவும், இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் எனவும் அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியர் கண்ணன் கூறியதாவது: ஒரு மதிப்பெண் பிரிவில் 14ம் கேள்வி, மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தில் தவறான பதில் இருப்பதே, இதற்கு காரணம்.

இரண்டு மதிப்பெண் பிரிவில் 29ம் கேள்வியில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை என தமிழில் கேட்கப்பட்டுள்ளது; ஆனால், ஆங்கிலத்தில், "பயோ பியூல்" என கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் அர்த்தங்கள் வேறு; தமிழில், "உயிரி எரிபொருள்" என கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதனால், தமிழ் வழி மாணவர்கள் பொதுவான பதிலை எழுதியுள்ளனர். 

இரு கேள்விகளில் உள்ள குழப்பங்களால், சென்டம் குறைய வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை, இதற்கான மதிப்பெண்களை வழங்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

அறிவியல் தேர்வு எளிது: மகிழ்ச்சியில் மாணவர்கள்:
"பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததால், சராசரி மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற முடியும்" என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
"கணிதம் தேர்வில், "கிரியேட்டிவ்" வினாக்களால் 100க்கு100 போச்சே..." என கவலையடைந்த மாணவர்களுக்கு, அறிவியல் தேர்வு, மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர் கூறியதாவது:

ஏ.சதீஷ்குமார், மாணவர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: எதிர்பார்த்தை விட வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. பாடங்களின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் அதிகம் இடம் பெற்றன. குறிப்பாக, ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டவை. ஐந்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும், விடை தெரிந்தவையாக இருந்தன. &'சென்டம்&' எளிதில் பெறலாம்.

மு.முத்துலட்சுமி, மாணவி, அரசு உயர்நிலை பள்ளி, பாரைப்பத்தி, மதுரை: இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன். பின், எழுதியவற்றை பொறுமையாக திருப்பி பார்க்க நேரம் இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில், 30 வினாக்களில் 20ஐ எழுத வேண்டும். ஆனால், 30 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன.

செ.மஞ்சுளா, ஆசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, திருப்பாலை, மதுரை: மூன்றாவது திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் வந்திருந்தன. மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று, இரண்டு, மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், கடந்த பொதுத் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்டவை. வேதியியல், இயற்பியலில் கணக்கு பயன்படுத்தி எழுதும் வினாக்கள், மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்றவையாக இருந்தன.

நோய்த் தடுப்புகள், புகை மண்டலம், நவீன அணுக் கொள்கை, விண்வெளி நிலையத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பகுதிகளில், அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே வந்துள்ளன. சராசரி மாணவர்கள், 70 மதிப்பெண் வரையும், ஓரளவு நன்றாக படிப்பவர்கள்கூட எளிதில் &'சென்டம்&' எடுக்கவும் வாய்ப்புள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்வி முகாமில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது - தினப்படி (D.A.) மற்றும் பயணப்படி (T.A.) வழங்குவது குறித்து. மார்ச் / ஏப்ரல் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதடிந தேர்வு முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி (T.A.) / தினப்படி (D.A.) வழங்கக்கூடாது.

 தேர்தல் பணியில் ஈடுபடாத பணியாளர்களுக்கு பயணப்படி (T.A.) / தினப்படி (D.A.) வழங்கப்படும்போது """"தேர்தல் பணியில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபட்டதாக பின்னர் தெரிய வந்தால் மேற்காண் தொகை பிடித்தம் செடீநுய சம்மதிக்கிறேன்."" எனவும் உறுதிமொழி பெறப்பட்ட பின்னர் தொகை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

click here to doenload DEE proceeding - ICT - NATIONAL AWARDS FOR Teachers DETAILS CALLED REG