test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 31 March 2014

பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 16ல் பள்ளி திறப்பு


எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கிய நிலையில், தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது.

கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு கடந்த மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வழக்கமாக பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த ஜூன் 10ம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த ஜூன், 24ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தி வகுப்பு துவங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கு வரும் ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு மட்டும் நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்


மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய கோவை தனியார் பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், "வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை.," டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.

கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர் கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக, மடிக்கணினியை பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஆதர்ஷினி கூறியதாவது: மடிக்கணினியை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" மற்றும் "ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" ஆகியவற்றில் இடம்பிடித்தேன்.

இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை., மார்ச் 22ல் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"



ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன்அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது. 

தாலுகா அளவில்அவை பிரித்து வழங்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம், புதிய வாக்காளர் சேர்க்காமல், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 418 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கும், 5 பேர் வீதம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 90 பேர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விடுப்பில் செல்ல நேரிட்டால், அதை சமாளிக்க கூடுதலாக, 20 சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கம்ப்யூட்டர் மூலம் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்யும் பணி அந்தந்த கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இவர்களுக்கு பணி நியமன ஆணையை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.ஒவ்வொரு பணி நியமன ஆணையிலும், ஓட்டுச்சாவடி விவரம், பணியாளரின் முகவரி, ஃபோன் எண்ணுடன் முழுவிவரம் இடம் பெற்றுள்ளது. பணி ஆணையுடன், நிலை அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப் படிவம் 12-ஏ இடம் பெற்றுள்ளது.இந்த பணி ஆணை, தபால் ஓட்டு படிவம் இரண்டையும் "பின்' செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கும் பணியில் அந்தந்த தாலுகா தாசில்தார்கள் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி மாவட்டத்தில், 2,319 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதுவரை, 11 ஆயிரத்து 410 அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 20 சதவீதம் பேர் கூடுதலாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, 30 March 2014

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீடியோவை பாருங்க! பயன் உள்ளதாக இருக்கும்!!

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீடியோவை பாருங்க! பயன் உள்ளதாக இருக்கும்!!

CLICK HERE-Presiding Officers Training Video for EVM operations

வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 15 ஆயிரம் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு வருகிற 3ம் தேதி நடைபெறவுள்ளது


வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் வரும் 3ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

அதன்படி அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த நலத்திட்டங்களும் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், மது அளித்தல் போன்ற பல்வேறு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணி நேரமும் கண்காணிக்க 13 சட்டமன்ற தொகுதிகளில் 39 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சோதனை சாவடிகளில் கண்காணிக்க 39 நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க 13 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மண்டல அளவில் தேர்தல் பயிற்சி பெற்ற 530 அலுவலர்கள், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வரும் 3ம் தேதி அந்தந்த தாலுகா அலுவலங்களில் அளிக்கப்படுகிறது. இதில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்தும், வாக்காளர்களுக்கு மை வைப்பது, வாக்களர்களுக்கு பூத் சிலிப்பு வழங்குதல், போன்ற பயிற்சிகள் குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு


தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தடுக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு, கடந்த நவம்பர் மாதத்தில், அனைத்து பள்ளிகளிலும், முன்னறித்தேர்வு நடத்தப்பட்டு, அதில், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின் கற்றல் அடைவுகளை மீண்டும் மதிப்பிடுமாறு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக, ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்


இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.


அமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் க.தனசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர் அ.ஜோசப் சேவியர், மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப் பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
 
 
"தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது.

விழாவுக்கு, மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் காமராஜ், "ஆசிரியர் காவலன்' என்ற இதழை வெளியிட்டு பேசினார். பொதுச்செயலாளர் ஈசுவரன், எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய ஐந்து புதிய ஒன்றியக் கிளைகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தொகுப்பூதியக் காலத்துக்கும் சேர்த்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தையும் பணிவரன் முறை செய்து வழங்க வேண்டும்.
தமிழக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறும்போது தரஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளில், வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும், பொதுமாறுதல்களுக்கு முன்பும், கல்வி ஆண்டின் இடையிலும் முறைகேடாக மாறுதல் வழங்கக் கூடாது.
பள்ளி விடுமுறை நாட்களில் நடக்கும் பயிற்சி நாட்களுக்கு ஈடுசெய்ய சிறப்பு தற்செயல்விடுப்பு வழங்க வேண்டும். ஜனவரி, 2014 முதலான அகவிலைப்படி உயர்வு, பத்து சதவீதத்தை உடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

எஸ்.எம்.எஸ்.,சில் ஓட்டுச்சாவடி விவரம் : ஒரு லட்சம் பேர் பயன் பெற்றனர்

எஸ்.எம்.எஸ்.,சில் ஓட்டுச்சாவடி விவரம் : ஒரு லட்சம் பேர் பயன் பெற்றனர்
 
 
தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய, எஸ்.எம்.எஸ்., திட்டம் மூலம், ஒரு லட்சம் வாக்காளர்கள், தாங்கள் ஓட்டு போடும், ஓட்டுச்சாவடி விவரங்களை அறிந்து கொண்டனர்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 13 லட்சம் பேர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
 இவர்களில், 10 லட்சம் பேர், 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. துணை வாக்காளர் பட்டியல், ஏப்., 5ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும். தாங்கள் ஓட்டு போடும் ஓட்டுச்சாவடி விவரங்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்ற விவரத்தையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதியை, 10 நாட்களுக்கு முன், தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது. இதற்கு, மொபைல் போனில், "epic' என, "டைப்' செய்து, இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தால், இரண்டு நிமிடங்களில், தகவல் வந்துவிடும்.இவ்வசதியை பயன்படுத்தி, இதுவரை ஒரு லட்சம் பேர், ஓட்டுச்சாவடி விவரத்தை அறிந்துள்ளனர். அதேபோல், தலைமைச் செயலகத்தில் உள்ள, தேர்தல் பிரிவு அலுவலகத்தில், கட்டணமில்லா டெலிபோன் எண், "1950' உள்ளது. இம்மாதம், 3ம் தேதியில் இருந்து, 34,481 புகார்கள் வந்துள்ளன. கடந்த, 27ம் தேதி மட்டும், 1,358 பேர் பேசியுள்ளனர். பெரும்பாலானோர், வாக்காளர் பட்டியல் குறித்து சந்தேகம் கேட்டனர். தேர்தல் விதி மீறல் தொடர்பாக, 80 புகார் வரப்பெற்றுள்ளது. கடந்த இரு தினங்களாக, வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, ஏராளமானோர் விசாரித்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்"

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்"
 
 
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.
வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது. கடந்த, 2012-13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, கடந்த, மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு, முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன், 10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து, முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும், ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும், நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளிகளில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி, முக்கியத்துவம் தர உத்தரவு

அரசு பள்ளிகளில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி, முக்கியத்துவம் தர உத்தரவு


தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது.

தனியார் பள்ளி மோகம் ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால், கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர். ஆனால், அப்படியெதுவும் நடக்காததால், ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது.
இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், ? லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை.
தவறான கொள்கை தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமர வைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது. இதனால், அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக்கல்வியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே, புள்ளிவிவர, "மேஜிக்' மட்டும் பெருமிதமாக இருக்கலாமே தவிர, மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாத பெற்றோர் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளியில் சேர்த்தபின், அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் கொண்டு வந்து சேர்க்க யாரும் தயாரில்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களின் நடத்தையால், பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பெரும்பாலும், மருத்துவ விடுப்பில் இருப்பதும், மற்றொரு ஆசிரியர் பள்ளி நிர்வாகத்துக்கு, அலுவலகத்துக்கு அலைவதும் சரியாக இருக்கிறது. பெரும்பாலான நாளில் ஆசிரியர் இல்லாத நிலை, பல பள்ளிகளில் உள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஆங்கில வழி துவக்கினால் மட்டும் எவ்வித முன்னேற்றமும் வந்துவிட போவதில்லை. மாறாக, தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் இருந்து வரும், தமிழ்வழிக்கல்வி, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு


தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தடுக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு, கடந்த நவம்பர் மாதத்தில், அனைத்து பள்ளிகளிலும், முன்னறித்தேர்வு நடத்தப்பட்டு, அதில், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின் கற்றல் அடைவுகளை மீண்டும் மதிப்பிடுமாறு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக, ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி கட்டணம் உயர்த்த பரிந்துரை; அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்

தனியார் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்த்த பரிந்துரை; அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்
 
 
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
 
 
நிர்ணயம் : தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை, அரசால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு செய்து வருகிறது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான பழைய கல்விக் கட்டணம், கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, வரும் கல்வி ஆண்டுக்காக, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய, இக்குழு, முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பங்களை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், தனியார் எம்.பி.பி.எஸ்., கல்லூரிகள், 12ம்; பல் மருத்துவக் கல்லூரிகள், 18ம் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, வரும், 2014 - 15ம் கல்வி ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
 

வலியுறுத்தல் : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, ஆண்டு கல்விக் கட்டணத்தை, 3.5 லட்சம் ரூபாயில் இருந்து, 6 லட்சம் ரூபாயாகவும், பி.டி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை, 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என, பெரும்பாலான மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தில் வலியுறுத்தி உள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், புதிய கல்விக் கட்டணத்தை, பாலசுப்ரமணியன் குழு அறிவிக்கும். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை, ஏற்கனவே நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணம், வரும் கல்வி ஆண்டு வரை பொருந்தும். 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, தேசிய தர நிர்ணய மதிப்பீட்டு குழுவின் (நாக்) அங்கீகாரம் பெற்ற பாடப் பிரிவுகளுக்கு, 45 ஆயிரம் ரூபாயும், அங்கீகாரம் பெறாத பாடப் பிரிவுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
 
 
தமிழகத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சைகள் 63 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். மந்தமாக துவங்கிய மனுத்தாக்கல் 1ம் தேதிக்கு பிறகு விறுவிறுப்படையும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் 6வது கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி ஒரே நாளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் டி.விக்ரமன், கோவையில்  மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடசென்னை தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போட்டியிடும் நிஜாம் முகைதீன் மண்ணடியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தங்கசாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, மாநில தலைவர் எஸ்.எம்.தெஹ்லான் பாகவி உட்பட பலர் உடன் இருந்தனர். அதே போல்,  சுயேட்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தனர். ஏப்ரல் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது.வேட்பு மனு தாக்கல் செய்வதையும், வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் வெளிமாநிலங்களில் இருந்து 78 தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காலை 10 மணிக்கு ஆஜராகினர். அவர்கள் கார்களில் தொகுதியை சுற்றி வந்து, போஸ்டர், பேனர்களை பார்வையிட்டனர். மனு தாக்கல் செய்யும் தேதியில் இருந்து செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் புதுச் சேரியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும்  ஏப்ரல் 1ம் தேதி பிற்பகல் 1.40 மணியில் இருந்து மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1ம் தேதி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். திமுக வேட்பாளர்கள் ஏப்ரல் 2ம் தேதி மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 4ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்.திருவள்ளூரில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார் 2ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 3ம் தேதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான், 1ம் தேதியும் மனுதாக்கல் செய்கின்றனர்.
பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக 1ம் தேதியும், பாமக 3ம் தேதியும், தேமுதிக வேட்பாளர்கள் 5ம் தேதியும், பாஜ வேட்பாளர்கள் தங்களுக்கு பிடித்த நாளில் மனுதாக்கல் செய்து கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர்கள் 1ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளனர்.இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை. நாளை திங்கட் கிழமை தெலுங்கு வருட பிறப்பு விடுமுறை தினம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும்.
பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
1815-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிள்ளையவர்கள் பிறந்தார். தன் தந்தையாரைக் குருவாகக் கொண்டு ஆரம்பக் கல்வியைக் கற்கத் துவங்கிய அவர், சான்றோர் முதல் சாதாரணமானவர் வரை என யாரிடமெல்லாம் கற்க வேண்டியன உள்ளனவோ அவர்களிடமெல்லாம் கைப்பொருள் கொடுத்துக் கல்வி பயின்று மகாவித்துவான் ஆனார். சிவபக்தி, வெகுளாமை, விருந்தோம்பும் பண்பு, சாதி, மதம் நோக்காத உயர்ந்த நெஞ்சம், கற்றாரைப் போற்றும் பெருந்திறம், ஆன்மீகக் கற்பனை மிக்க கவிதைகளை விரைந்தியற்றும் பேராற்றல் இத்தகைய பெருமைகளைப் பெற்றிருந்த பேராளர் அவர். தம்மிடம் வாய்த்திருந்த கல்வித் திறனைச் சாதி மதம் பாராது எவ்விதக் கைமாறும் பெற்றுக்கொள்ளாமல் வந்து சேர்ந்த மாணவர்களச் சொந்த மக்களைப் போலக் வாரி வழங்கிய திறம் என அவரது பெருமைகள் பல. அவரது மாணவர் உ.வே.சா., அவரது பெயரை எழுத்தால் எழுதுவதற்கு அஞ்சுவதாகக் குறிப்பிடுவார். மாணாக்கர்களிடம் அத்தகைய குருபக்தியை ஏற்படுத்தியவர் மகாவித்துவான். தம்மை நாடி வந்த அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்துத் தங்குமிடமும் அளித்துக் கல்வி புகட்டியவர் அவர். அவர் இயற்றிய புராணங்கள் 22. பிற காப்பியங்கள் ஆறு. பிள்ளைத்தமிழ் முதலியன 45. எண்ணிறந்த தனிப்புராணங்களும் இயற்றியுள்ளார்.
நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பால் இவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டிக் குளத்துக்கோவை என்னும் நூல் இயற்றியுள்ளார். தகுதியில்லாத யாரையும் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் கொண்டிராத மகாவித்துவான் பாடிய பாடல் அவரது சமயப் பொறைக்கும் சமயம் கடந்த சிறந்த நட்புக்கும் சிறந்த சான்றாகும். பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் வள்ளலாக வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வு இன்றைய ஆசிரியப் பெருமக்களுக்ககெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.


Saturday, 29 March 2014

டிஸ்லெக்சியா நோயால் பாதிப்பு: 50 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம்

டிஸ்லெக்சியா நோயால் பாதிப்பு: 50 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம்
 
 
தர்மபுரி மாவட்டத்தில் மறதி நோயால்(டிஸ்லெக்சியா) பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 50 பேருக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம்
கல்வித்துறை வழங்கியுள்ளது.
 
தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 69 மையங்களில் 27,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 6 இடங்களில் 10 வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக 20 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, டிஸ்லெக்சியா மாணவர்கள் 50 பேருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டிஸ்லெக்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது, என்றார்.
தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் இந்த நோய் பாதிப்பு பற்றி கேட்டபோது, ‘மரபணு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி மறதி ஏற்படும். ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அனைத்து குழந்தைகளை போலவே புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள். ஆனால் எழுத படிக்க, சிரமப்படுவார்கள்‘ என்றனர்.

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்
 
 
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம்
 செய்துள்ளது.
 

இந்த திட்டத்தை முதல் முறையாக கொல்கத்தாவில் எஸ்பிஐ வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயலலாம் என்று கூறப்படுகிறது.
 

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்கள், தங்களது முதுமை காரணமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் வந்து தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அவற்றை களையவே இந்த திட்டத்தை எஸ்பியை கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், நாட்டில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு
 
 
5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை
வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 5ம் வகுப்பு மாணவர்கள் கற்றதன்மூலம் அடைந்த திறன்குறித்து தமிழ், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
 

ஒரு மாணவர் 2 பாடத்தில் தேர்வு எழுத வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை அதற்கென வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், விழுப்புரம், தர்மபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் 275 பள்ளிகளில் வரும் ஏப்ரல் 10, 11, மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த அறிவுத்திறன் தேர்வு நடைபெறுகிறது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இத்தேர்வை நடத்த உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாகப் பதிவுசெய்து வருபவருக்கு இழப்பீடு:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாகப் பதிவுசெய்து வருபவருக்கு இழப்பீடு:


தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு செய்து வந்தும்
வேலைவாய்ப்பு கிடைக்காத முதியவருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக
அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்த
ஏ.ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நான் 5-ம்
வகுப்பு வரை படித்துள்ளேன். 1964 முதல் 1968-ம் ஆண்டு வரை பூந்தமல்லியில் உள்ள ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக் உதவியாளராகப்

பணிபுரிந்தேன். இந்த பணி அனுபவத்தைப் பெற்ற பின்
11.10.1971 அன்று செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
எனது பெயரைப் பதிவு செய்து கொண்டேன். அப்போதிலிருந்து தவறாமல் பதிவைப் புதுப்பித்து வருகிறேன். தற்போது வேலைவாய்ப்பு அலுவலகம்
திருவள்ளூருக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.
கடைசியாக கடந்த 23.11.2011 அன்று எனது பதிவைப் புதுப்பித்தேன்.
அப்போது எனது வயது 60-ஐ கடந்துவிட்டது. எனினும் பதிவைப்
புதுப்பித்த அதிகாரிகள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க 2014-ம்
ஆண்டு நவம்பர் மாதம் வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆக, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் வெறும் இயந்திரத்தனமாகப்
பணியாற்றுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 42
ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் ஏதேனும்
அரசு நிறுவனத்தில் நான்காம் நிலை மெக்கானிக் உதவியாளராக
எனக்கு பணி வழங்கியிருக்கலாம். குறைந்தபட்சம் வாயில் காவலர்
பணி அல்லது தோட்டக்காரர் பணியில் கூட அமர்த்தியிருக்கலாம். ஆனால் 42
ஆண்டு காலத்தில் ஒருமுறை கூட எனக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம்
எதுவும் வந்ததில்லை. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இப்போது எனது குடும்பத்தை நடத்த இயலாமல் மிகவும்
கஷ்டப்படுகிறேன். ஆகவே எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் முதியோருக்கான ஓய்வூதியம் வழங்குமாறும்
அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்
ராஜேந்திரன் கோரியிருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட
நீதிபதி கே.கே.சசிதரன் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில்
கூறியுள்ளதாவது:  இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள
பெரும் பணக்காரர்களினபட்டியலை வெளியிடுவதில்
ஊடகங்கள் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த வழக்கின் மனுதாரரைப்
போன்ற ஏழை மக்களின் நிலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தங்களுக்கும் ஏதேனும் ஒரு அரசு வேலை கிடைக்காதா என்ற ஆவலில் இவர் போன்ற ஏழைகள் காத்திருக்கிறார்கள். அரசும், அரசு நிறுவனங்களும்
ஏராளமானோருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கி,
பின்னர் நிரந்தரம் செய்கின்றனர். எனினும் இந்த மனுதாரரைப் போன்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்காத பாரபட்ச நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது.
உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல உலகமயமாக்கல் கொள்கைகளும்
அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கும் சாதாரண மக்களுக்கு உதவுவதாக
இல்லை. இந்தச் சூழலில் மக்களின் பாதுகாவலன் அரசுதான். எனினும்
தனது கோரிக்கை குறித்து மனுதாரர் மாநில அரசுக்கு எந்த கோரிக்கை மனுவையும் அனுப்பவில்லை. அவ்வாறு மனு அனுப்பினால்தான் பிரச்சினையை அறிந்துகொள்ள அரசுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆகவே, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரருக்கு உரிமை அளிக்கப்படுகிறது. அவர் கோரிக்கை மனு அனுப்பிய பின்னர், அவரின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு இழப்பீடு மற்றும்
ஓய்வூதியம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை
தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்போனுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்னை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப்பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத்தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத்தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடைபெறுவதாக தெரிய வந்தால், உடனடியாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும். கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெனில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக்காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

அரசு பணிக்காக 42 ஆண்டுகள் காத்து இருந்த 65 வயது முதியவர் ஓய்வூதியம் வழங்குவது பற்றி பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பணிக்காக 42 ஆண்டுகள் காத்து இருந்த 65 வயது முதியவர் ஓய்வூதியம் வழங்குவது பற்றி பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 
 
வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 42 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணிக்கு காத்திருந்த 65 வயது முதியவருக்கு மாத ஓய்வூதியம் வழங்குவது குறித்து 4 மாதங்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க
வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டை சேர்ந்தவர் ஈ.ராஜேந்திரன் (வயது 65). இவர், சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
 

முதியவர் வழக்கு
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 1971-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி, திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக பதிவு செய்துள்ளேன்.
தற்போது, எனக்கு 65 வயது ஆகி விட்டது.
கடந்த 42 ஆண்டுகளாக, இதுநாள் வரை ஒரு முறைக்கூட எனக்கு வேலை வாய்ப்புக்காக அழைப்பு கடிதம் வரவில்லை. அரசு வேலை வாய்ப்பினை பெறும் வயதை நான் கடந்து விட்டேன்.
கலெக்டர் அறிக்கை
எனவே, இத்தனை ஆண்டுகள் எனக்கு அரசு பணி வழங்காததால், ரூ.5 லட்சம் இழப்பீடும், மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் எனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், 1971-ம் ஆண்டு முதல் இதுவரை திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவர அறிக்கையை தாக்கல் செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில், மாவட்ட கலெக்டரும் அறிக்கை தாக்கல் செய்தார்.
காத்திருப்பு
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், குறுக்கு வழியில் அரசு வேலை பெற்றவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் தன் வயதை குறிப்பிடாமலேயே, தன்னுடைய பதிவை குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பித்து உள்ளார் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவர், கிராமபுறத்தை சேர்ந்தவர். ஒவ்வொரு முறையும் தன்னுடைய பதிவை புதுப்பிக்கும்போது, தான் அரசு பணியை பெற தகுதியானவர்தான் என்று நினைத்து, இத்தனை ஆண்டுகள் அவர் காத்திருந்துள்ளார்.
இப்போது, தனக்கு வேலை கிடைக்காது என்று தெரிந்தவுடன், இந்த கோர்ட்டின் உதவியை நாடியுள்ளார்.
சில மாநிலங்களில், இதுபோல் வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்தவர்களுக்கு, வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
எனவே, பிற மாநிலங்களை போல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஏழைகளுக்கு உதவும் விதமாக திட்டத்தை உருவாக்கக்கூடிய காலம் தமிழக அரசுக்கு வந்துள்ளது.
மனுதாரர் இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் கேட்டு, தமிழக அரசிடம் மனு கொடுக்க உரிமை உள்ளது. அவ்வாறு மனுதாரர் கொடுக்கும் மனுவை, தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து, 4 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்

  1. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும்.
தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள் இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும் ஆசிரியரே அதற்கான ‘டம்மி’ எண் போட்டு திருத்த வேண் டிய நிலையில் உள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து ‘டம்மி’ எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால் குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் திணறல் காணப்பட்டது. ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.

Thursday, 27 March 2014

10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி.


          நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால், மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். 

           தமிழகத்தில், 10 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. முதன்முதலாக பொதுத்தேர்வை சந்திக்கும் பதட்டத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, முதல் தேர்விலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் முதல்தாள் தேர்வில், 26வது கேள்வியாக கேட்கப்பட்ட,"வேந்தற்குரிய பொருள் யாது' என்ற கேள்வியில், "வேந்தர்க்குரிய' என அச்சிடப்பட்டிருந்தது. அதே போல், 49, இ கேள்வியில், "மீள் நோக்கும்' எனத்தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் என கேட்பதற்கு பதிலாக, "மீன் நோக்கும்' என அச்சிடப்பட்டிருந்தது. தமிழ் முதல்தாளில் இருந்த அச்சுப்பிழை காரணமாக, மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

         இதுகுறித்து தமிழ் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என, கேள்வி கேட்கப்பட்டுள்ளதால், அதன்அர்த்தமும், பொருளுமே மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என கொடுக்கப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்துள்ளனர். முதன்முதலாய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கேள்விகளுக்கும், மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முதல் தேர்விலேயே, குழப்பம் ஏற்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்

PFRDA - DEMERITS OF PFRDA ACT CLICK HERE...

நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம்: தேர்தல் ஆணையம் பரிசீலனை

 நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம்: தேர்தல் ஆணையம் பரிசீலனை



தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்படுவது போல, நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம் வழங்க பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளது.

மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்ற சின்னத்தை வடிவமைக்க பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைப்பதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வன்முறை சம்பவங்களால் கை,கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்க நேரிட்டாலோ, கண் பார்வை பாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலி காட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு


அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்


அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது.
இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஆங்கில வழி சேர்க்கை நடந்தது. மாணவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பள்ளி ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.உடுமலையில் 98 அரசு துவக்க பள்ளிகள், 22 நடுநிலை பள்ளிகளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். கடந்த கல்வியாண்டில் 11 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் 2014ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையினை இம்மாதம் முதலே பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பித்து விட்டனர். இம்முயற்சியின் முதல் கட்டமாக பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், மாணவர் எண்ணிக்கை, பள்ளியின் சிறப்பு அம்சங்கள், மாநில அளவில் பள்ளி மாணவர்கள் செய்த சாதனைகள், மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகள் பள்ளிக்கு தரப்பட்ட விபரங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 'நோட்டீஸ் ' அச்சடித்து வெளியிட சில நடுநிலைப்பள்ளிகள் திட்டமிட்டுள்ளது. உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முக்கிய காரணம், தங்களின் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசைதான். இதன் விளைவாக இன்று ஏராளமான அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. குறிப்பாக துவக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு பத்திற்கும் கீழாக மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை இந்த ஆங்கில வழிக்கல்வி முறையினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கவும், பெற்றோருக்கு அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கை உருவாகும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு கூறினர்.

Wednesday, 26 March 2014

செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்


இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ள விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணியை  ஆஸ்திரேலியா துவக்கியுள்ளது.

 ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆஸ்திரேலியா தேடி வருகிறது. இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாக செயற்கைகோளில் பதிவாகியுள்ளது .அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள், மலேசிய அரசு மிது குற்றம்சாட்டியுள்ளார்.  மலேசிய அரசு விமானம் குறித்த தகவல்களை மறைப்பதாகவும், பொய்யர்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.  மேலும் மலேசிய அரசுக்கு எதிராக சீனாவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

விமானத்தில் பயணம் செய்த 230 பேரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பி.எட்., சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பி.எட்., சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

அண்ணாமலை பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு.


அண்ணாமலை பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம், டிசம்பர் - 2013ல் நடத்திய, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள், எம்.பி.ஏ., டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்

.
மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஐந்தாம் வகுப்பு, மாணவர்கள் கற்றலில், அடைந்த திறன் குறித்து, தமிழ், கணிதம், சூழ்நிலையியல், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மாணவர், இரண்டு பாடத்தில் தேர்வெழுத வேண்டும். அதுமட்டுமன்றி, பள்ளி, ஆசிரியர்,மாணவர் விபரங்களையும், அதற்கு என வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில், 275 பள்ளிகளில் இந்த அடைவுத்திறன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், ஏப்ரல் 10,11,15,16 ஆகிய தேதிகளில்,நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு


பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், ஆங்கில பாடத்தில் பி.ஏ முடித்து விட்டு எம்.ஏ படித்தேன். அதன்பின்பு, பி.எட் முடித்தேன். என்னுடன் ஸ்ரீகாந்த் என்பவர் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பி.ஏ தமிழ் படித்த போது இரு பட்டங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பி.ஏ ஆங்கில பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின்பு, எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு, 3.10.2013 அன்று ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த பதவி உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. ஒரே பாடத்தை எடுத்து பி.ஏ, எம்.ஏ படித்தவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ் பாடத்தில் பி.ஏ படித்து விட்டு ஆங்கில பாடத்தில் எம்.ஏ படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது நியாயமற்றது.

எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர் எனது கோரிக்கையை 27.2.2014 அன்று நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, எனக்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஹேமாகார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர், திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்

Tuesday, 25 March 2014

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

click here to download the DGE proceeding for NMMS FEB-2014 Exam fee submitting Reg

கடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப் படிவம் | NOC - Appointment Authority Issuing Model Format

கடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப் படிவம் | NOC - Appointment Authority Issuing Model Format

click here to download - NOC - Appointment Authority Issuing Model Format


எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்


11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேர்வு நேரம் மாற்றம்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேர்வறையில் மாணவ–மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகளை நன்முறையில் எழுதுவதற்காக, வினாத்தாளினை மாணவ–மாணவியருக்கு வழங்கியவுடன், அதனை முழுமையாகப் படிப்பதற்காக (9.15 மணி முதல் 9.25 மணி வரை) 10 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது.
விடைத்தாளுடன் இணைக்கப்பட்டுள்ள முகப்புப்படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவெண் விவரங்களை தேர்வர் சரிபார்த்துக்கொள்ள (9.25 மணி முதல் 9.30 மணி வரை) 5 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு நேரம் 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஆகும்.
கையெழுத்து போட்டால் போதும்
மாணவ–மாணவிகளுக்கு விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய தேர்வரின் பதிவெண் முதலான விவரங்களை பதற்றத்தின் காரணமாக தேர்வர்கள் தவறான பதிவுகளை மேற்கொள்வதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு தேர்வுத்துறை மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிட்ட முகப்புச்சீட்டை விடைத்தாளுடன் இணைத்தே வழங்குகிறது. மாணவர் முகப்புச்சீட்டில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் மட்டுமே போதுமானது.
பக்கங்கள் அதிகரிப்பு
முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 30 பக்கங்களாக இவ்வாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தேர்வர்களின் முன்னிலையில் வினாத்தாள் உறை திறக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில், தேர்வு நேரங்களில் அப்பள்ளிகளை சார்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
எஸ்.எஸ்.எல்.சி தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,552 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,38,876 மாணவ–மாணவியர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 5,30,462 பேர் மாணவியர் 5,08,414 பேர் ஆவர்.
பள்ளி மாணவர்களைத் தவிர 286 தேர்வு மையங்களில் 74,647 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்து உள்ளனர்.
மொத்தத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதுகிறார்கள்.
குறை உள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கட்டுப்பாடு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளர்கள் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு வினாத்தாள் காப்பிட மையங்களிலும் கூடுதல் கண்காணிப்பிற்கு பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இரண்டு இரவுக்காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையற்ற மின்சாரம்
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டத்தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டங்களில் அவர்தம் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர்பார்வை செய்து முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் எதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள்
தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதிலும் 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், போன்ற செயல்பாடுகள் கடுங்குற்றங்களாகக் கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். காப்பி அடித்தால் தண்டனை உண்டு. எனவே, தேர்வர்கள் ஒழுங்கீனச்செயலில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச்செயல்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளி தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
74 சிறைவாசிகள் எழுதுகிறார்கள்
சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வுமையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, எஸ்.எஸ்.எல்.சி தேர்வினை 45 சிறைவாசிகள் சென்னை–புழல் சிறையிலும் 74 சிறைவாசிகள் திருச்சி மத்திய சிறையிலும் தேர்வெழுதுகின்றனர்.
இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகளில் மதிப்பீடு முறை பற்றிய கட்டுரை

தமிழக பள்ளிகளில் மதிப்பீடு முறை பற்றிய கட்டுரை

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

http://finmin.nic.in/7cpc/index.asp


Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி


குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்  வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை 1,153 பேர் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து


நாளை தேர்வெழுதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 11,552 பள்ளிகளைச் சார்ந்த 10,38,876 மாணவ-மாணவியர்கள், 286 தேர்வு மையங்களில், 77,647 தனித் தேர்வர்கள் என மொத்தம் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 523 பேர்  26.3.2014 அன்று தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இவை தவிர, புழல், திருச்சி சிறைச்சாலைகளில் 119 சிறைவாசிகளும் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் மாணவக் கண்மணிகள் தாம் விரும்பும் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் பயில்வதற்கு அடித்தளமாக இப்பொதுத் தேர்வு விளங்குகிறது. மாணவர்களின் அறிவாற்றலை முழுமையாக வெளிக்கொணரும் பரிசோதனை அல்ல தேர்வுகள் என்றாலும், மாணவக் கண்மணிகளின் பயிலும் திறனையும், பாடங்கள் குறித்த புரிதலையும் வெளிப்படுத்தும் கருவியாக இப்பொதுத் தேர்வுகள் அமைந்துள்ளன.பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைத்து, நடத்தப்பட வேண்டும் என்றுமறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கை இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனினும், மாணவச் செல்வங்கள் எந்தெந்த மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனரே அந்தந்த மையங்களில் அச்சமோ, பதற்றமோ இன்றி, கேள்விகளை நன்கு புரிந்து சிறப்பாக தேர்வு எழுதிடவும், பெற்றோர்களின் ஆசை கனவுகளை நிறைவேற்றிடும் வகையில், நல்ல எதிர்காலம் அமையப்பெற்று, வாழ்வில் உயர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: தேர்வு அட்டவணை


நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. 

அதனால் மாணவர்கள் 9.30 மணிக்கு விடை எழுதத் தொடங்கி 12 மணிக்கு தேர்வை முடிக்க வேண்டும். கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க 20 கேள்வித்தாள் கொண்ட சீலிடப்பட்ட உறைகள் தேர்வு அறைகளுக்கே எடுத்து வரப்பட்டு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று உறைகள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்படும். தேர்வு மையங்கள் செயல்படும் பள்ளிகளில் அந்த பள்ளியை சேர்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் வளாகத்திலேயே இருக்க கூடாது. 

பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை தமிழ் முதல் தாள் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தலைமை தேர்வர்கள் மற்றும் பறக்கும் படையினர், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் நடந்தது. காலை 9.15 மணிக்கே தேர்வு தொடங்க உள்ளதால் வினாத்தாள்களை பதற்றமின்றி தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக ரூட் ஆபீசர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கல்வி அலுவலர்கள் வழங்கியுள்ளனர். 

பிளஸ்2 தேர்வுக்கு 38 பக்கங்களில் விடை எழுதும் அளவிற்கான முதல் விடைத்தாள் வழங்கப்பட்டது. அதுபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 பக்க அளவில் முதல் கட்ட விடைத்தாள் வழங்கப்படும். இது போக தேவைப்படும் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 5 லட்சத்து 30  ஆயிரத்து 462 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவியர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களை  தவிர 286 தேர்வு மையங்களில் 74 ஆயிரத்து 647 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள். அவர்களில் 55 ஆயிரத்து 454 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 193 பேர் மாணவியர். டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்காக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்டோர் சொல்வதை எழுதுவதற்காக ஒருவர் நியமிக்கப்படுவார். மொழிப்பாடத்தில் ஒன்று தவிர்க்கப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெனரேட்டர் வசதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனை செய்யவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துண்டுத்தாள் வைத்திருத்தல், அதை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத் தாளை மாற்றிக் கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 பேருக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர் திடீர் ஆய்வு:

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் அவர்கள் இணைந்து செயல்படுவார்கள். அதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இடம் பெறுகின்றனர். அவர்கள் தேர்வு மையங்களை திடீரென பார்வையிடுவார்கள். இது தவிர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வு மையங்களை பார்வையிட கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர். அந்த குழுவும் திடீர் ஆய்வு செய்யும்.

சிறைக் கைதிகள்:

கடந்த சில ஆண்டுகளாக சிறைகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு அங்கேயே தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது சென்னை புழல் சிறையில் 45 கைதிகளும், திருச்சி சிறையில் 74 கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னையில் 207 தேர்வு மையம்:

பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் 588 பள்ளிகளில் இருந்து மொத்தம் 56 ஆயிரத்து 556 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களில் 27 ஆயிரத்து 943 பேர் மாணவர்கள். 28 ஆயிரத்து 613 பேர் மாணவியர். அவர்களுக்காக சென்னையில் 207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 279 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 509 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 9 ஆயிரத்து 309 பேர் மாணவர்கள். 9 ஆயிரத்து 200 பேர் மாணவியர். இவர்களுக்காக புதுச்சேரியில் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்

புதிய ஓய்வூதியத் திட்ட விவரம்: இனி தகவல் மையம் பராமரிக்கும், ஏஜிஎஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்


அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இனி 2013, 14ம் ஆண்டு கணக்கு முதல் இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும்.

மேலும் 2012-13ம் ஆண்டுக்கான சந்தாதாரர்கள் அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள் அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம் வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பும் பொருட்டு, சென்னை கருவூல கணக்கு இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இனி அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும், சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை 600025 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழக அரசு ஊழியர்களுக்கான 2011-12ம் ஆண்டின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு அறிக்கை, குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, கருவூல அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சந்தாதாரர்கள் டி.டி.ஓ.,வை அணுகி அவரவர் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04424314477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Annamalai university - DDE - Examination Results - December 2013

Annamalai university - DDE - Examination Results - December 2013

click here to Annamalai university DDE - Examination Results - December 2013

வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?


ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் சம்பளத்தில் Advance Tax ஆக தோராயமாக ஒரு தொகை (Cess சேர்த்து) வீதம் பிடித்தம் செய்து பிப்ரவரியில் துல்லியமாகக் கணக்கிட்டு எஞ்சியுள்ள தொகையை (Cess சேர்த்து) பிப்ரவரி சம்பளத்தில் முழுமையாகப் பிடித்தம் செய்து வருமான வரிக் கணக்கில் சரிக்கட்டவேண்டியது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமை. ஆனால் தவறுதலாகவோ இயந்திரக் கோளாறு காரணமாகவோ பணியாளர் மாறுதல் காரணமாகவோ பிப்ரவரி மாதச் சம்பளத்தில் முழுமையாகவோ பகுதியோ பிடிக்கப்படவில்லை என்றால் பின்வரும் நடைமுறையை மார்ச் 31க்குள் செய்ய வேண்டும்.

1. அத்தொகையை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் (DDO) வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

2. DDOவிடம் YOURSELF FOR INCOME TAX என்ற பெயரில் அதே தொகைக்குக் காசோலை பெற வேண்டும்.

3. வருமான வரி அலுவலகத்தில் 281 எண்ணிட்ட சலான் பெற்று DDOவின் TAN எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

4. இந்த சலானுடன் காசோலையை இணைத்து வங்கியில் (SBI) செலுத்தி சலானின் அடிப்பாகத்திலுள்ள Acknowledgementன் பின்புறம் சம்பந்தப்பட்ட பணியாளரின் பெயர் மற்றும் PAN எண் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த சலானைப் பெற்றுப் பத்திரமாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருமானவரிப் பதிவேட்டில் ஒட்டிவிடவேண்டும்.

5. காலாண்டிற்கொருமுறை 24Q மின்கோப்புத் தாக்கல் செய்யும் போது இச்சலான் விவரங்களையும் சேர்த்து e-Filing பண்ண வேண்டும்.
(சலானின் நகலை சார்ந்த பணியாளரின் பிப்ரவரி மாத சம்பளப் பதிவேட்டிலும், அலுவலக ரொக்கப் பதிவேட்டிலும் ஒட்டிப் பராமரித்து தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்)

* எக்காரணம் கொண்டும் வங்கியில் ரொக்கமாக வருமான வரி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* மார்ச் 31க்குள் விடுபட்டுப் போன வரியை மேற்கூறிய விதம் செலுத்தி விடவும்.

* கூடுதல் தகவல்: கடந்த ஆண்டுகளில் இதுவரை 24Q தாக்கல் செய்யாமல் உள்ள அரசுத்துறை DDOக்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 வீதம் விதிக்கப்பட்டிருந்த அபராதம் மத்திய வருமான வரித் துறையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதம் 31 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும். தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். மேலும்,  ஒரு கடிதத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாததால் எனது திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றும் மற்ற கடிதங்கள் இதனால் சொத்துகளை பதிவு செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணையில் "ஆதார் அட்டை கட்டாயம் என்று அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை உடனடியாக திரும்ப  பெற வேண்டும்" என்று விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது. மேலும், அரசு அடையாள அட்டைக்காக பெறப்படும் தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மும்பை ஐகோர்ட்டு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யுடன் யு.ஐ.டி.ஏ.ஐ. (இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம்) தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

Monday, 24 March 2014

10 - ம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: பறக்கும் படை தயார்


10ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


கடந்த 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வு, 25ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு அடுத்த நாள், 26ம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. தேர்வு துவங்க இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது.

மாநிலம் முழுவதும் 3,100 மையங்களில் (பள்ளிகள்), 50 ஆயிரம் அறைகள், தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மொழித்தாள் தேர்வுகளின் போது ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்பின் நடக்கும் தேர்வுகளில், பணியாளர் எண்ணிக்கை, 50 சதவீதமாக குறையும்.

மாணவ, மாணவியரை கண்காணிக்க, 5,000 உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுக்களை, தேர்வுத்துறை அமைத்துள்ளது. இந்த குழுக்கள், எந்தெந்த மாவட்டங்களில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளன. 10.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.

கடந்த ஆண்டு வரை காலை, 10:15 மணிக்கு துவங்கிய தேர்வு, இந்த ஆண்டு ஒரு மணி நேரம் முன்னதாக, 9:15க்கு துவங்குகிறது. வெயில் காரணமாக, தமிழக அரசு, இந்த மாற்றத்தை செய்ததாக, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. அதன்படி, மாணவர்கள், காலை 9:15 மணிக்கு, தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.

கேள்வித்தாள் படித்துப் பார்த்தல் மற்றும் விடைத்தாள் விவரங்களை நிரப்ப, முதல் 15 நிமிடம் வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 9:30க்கு துவங்கி, 12:00க்கு (இரண்டரை மணி நேரம்) முடியும்.

தேர்வு நேர மாற்றத்திற்கு, ஆசிரியர்கள், ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில், போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வு மையங்களுக்கு, உரிய நேரத்தில் செல்வதில் பிரச்னைகள் ஏற்படும் என்பதையும், காலையில், மீண்டும் ஒரு முறை பாடங்களை புரட்டிப் பார்க்கக் கூட நேரம் இருக்காது என்பதையும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி, பழைய நேரத்தின்படி, தேர்வை நடத்த, அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், நேரத்தை மாற்றியது, முதல்வர் அலுவலகம் என்பதால், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.

தேர்வு நடக்கும் தேதிகள்:
26.3.14 மொழி முதற்தாள்
27.3.14 மொழி இரண்டாம் தாள்
1.4.14 ஆங்கிலம் முதற்தாள்
2.4.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
4.4.14 கணிதம்
7.4.14 அறிவியல்
9.4.14 சமூக அறிவியல்

+2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை.


              பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

          பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. 

          முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வரும் 24ம் தேதி உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாக மொழிப் பாட விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற பாட விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது.விடைத்தாள் திருத்தப் பணி நடைபெறும் மையங்களில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் காலையில் வாயிற்கூட்டம் நடத்தப்படும்.இது காலை 9:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணிவரை நடைபெறும். அதன் பிறகு ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை அவசர, அவசரமாகமேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

            இதனால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதும், அவர்கள் விடைத்தாளை மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.பல விடைத்தாள்கள் முறையாக திருத்தாத காரணத்தினால், மதிப்பெண் குறைவாக இருப்பதும், மறு மதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெறுவது அதிகரித்து வருகிறது.கடந்தாண்டில் இதுபோன்று கவனக்குறைவாக விடைத்தாள் திருத்தியது தொடர்பாக 1,500 ஆசிரியர்களுக்கு "மெமோ' வழங்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனைத் தவிர்க்க, இந்தாண்டு தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.தேர்வுத் துறை இயக்குனரின் உத்தரவால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பே ஓட்டு சாவடி சீட்டு: விநியோகிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு


          'ஓட்டுப் பதிவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாக, வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஓட்டுச் சாவடிச் சீட்டு' வழங்கும் பணி, நிறைவு பெற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

                  இது தொடர்பாக, தேர்தல் கமிஷன், அனைத்து மாநில, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு,அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* வாக்காளர்களுக்கு வழங்கப்படும், ஓட்டுச் சாவடி சீட்டு, தரமான காகிதத்தில், அச்சிடப்பட வேண்டும். வாக்காளரின் புகைப்படம், தெளிவாக இடம் பெற வேண்டும்.

* சீட்டு, ஒரு, 'செட்' மட்டும் அச்சிடப்பட வேண்டும்.

* அச்சிடப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய, ஓட்டுச் சாவடி சீட்டு, ஓட்டுச் சாவடி அலுவலர் மூலம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.* அந்தச் சீட்டில், அதை விநியோகம் செய்யும் அலுவலர் கையெழுத்து, இடம் பெற வேண்டும். சாவடி சீட்டை, சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது வீட்டில் உள்ள வயது வந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

* சாவடி சீட்டு பெறுவோரின் கையெழுத்து அல்லது கைரேகையை, ஓட்டுச் சாவடி அலுவலர், சீட்டு பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, பதிவேடில் பெற வேண்டும்.

* வாக்காளர் இல்லாமல் இருந்தால், வீடு மாறியிருந்தால், இறந்திருந்தால், அவரின்சீட்டை தனி நோட்டில் ஒட்டி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், அன்றையதினம், வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்றால், ஓட்டுச் சாவடி அலுவலர், நோட்டை சரி பார்த்த பின், ஓட்டளிக்க அனுமதிப்பார்.

* சீட்டு வழங்கப்பட்ட விவரம், அரசியல் கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், ஓட்டுச் சாவடி ஏஜன்டுகளுக்கும், வேட்பாளரின் ஏஜன்டுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத, ஓட்டுச் சாவடி அலுவலர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* இப்பணியை தேர்தல் அலுவலர் கண்காணிக்க வேண்டும்.

* இந்தச் சீட்டுகளை, மொத்தமாக ஒருவரிடம், ஒப்படைத்து விநியோகிக்கக் கூடாது.

* விநியோகிக்கப்படாத சீட்டுகளை, உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுச் சாவடி சீட்டு கிடைக்காதோர், அங்கு வந்து வாங்கிக் கொள்ள, ஏற்பாடு செய்ய வேண்டும்.

* சீட்டு விநியோகம், தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன், முடிக்கப்பட வேண்டும்.

* சீட்டின் பின்புறம், 'ஓட்டுச் சாவடிக்குள், கேமரா, மொபைல் போன், போன்றவற்றை எடுத்து செல்லக் கூடாது' போன்ற விபரங்கள் அச்சிடப்பட வேண்டும்.

* சீட்டை, வேறு யாரும் நகல் எடுத்து விநியோகிக்கக் கூடாது. இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODOL OFFICER )ஒரு AEEO -வை நியமித்து இயக்குநர் உத்தரவு

நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODOL OFFICER )ஒரு AEEO -வை நியமித்து இயக்குநர் உத்தரவு

Click here-DEE-Court case Nodol officers list REG

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்தார்.

மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீரனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இப்பள்ளி மாணவர்களை இவர்கள், சில நாட்களுக்கு முன் உரிய அனுமதியின்றி திருச்சிக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த விபத்து ஒன்றில், மாணவர் ஒருவர் இறந்தார். 12 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை பாரதிமலர், உதவி ஆசிரியை செந்தில்ராணியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் 'சஸ்பெண்ட்' செய்தார். சங்கங்கள் அதிருப்தி: 'மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல, கல்வி அதிகாரி ஒருவர் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Friday, 21 March 2014

கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்கள்

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
www.scholarshipsinindia.com

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. இந்த வலைத்தளத்தில் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் நிபுணர்களின் கேள்வி-பதில் பகுதியும் அடங்கியுள்ளது.
www.education.nic.in

இந்த தளம் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பள்ளிகல்வி-கல்வியறிவு மற்றும் உயர்கல்வி துறை ஆகிய 2 துறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மற்றும் பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள் பற்றி இந்த தளம் குறிப்பான விவரங்களை கொண்டுள்ளது.
www.scholarship-positions.com

இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்கு பிந்தைய உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்களை அறிய முடிவதோடு, இந்த தளத்திலிருந்து செய்தி மடல்களையும் பெறமுடியும். மேலும் இதில் மாணவர்களுடைய சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. இதைதவிர வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக்குறிப்புகளை தருவதோடு அதற்கான உதவித்தொகை பெறுவதைப் பற்றியும் தகவல் தருகிறது. அதேசமயம் இந்த தளத்தில் நுழைந்து தேட சற்று சிரமம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும்.
www.studyabroadfunding.com

வெளிநாட்டு படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்த தளம். முக்கியமாக மற்றும் குறிப்பாக அமெரிக்காவில் படிப்பதற்கான விவரங்களை இது கொண்டுள்ளது.
www.scholarships.com

இந்த தளம் அமெரிக்க படிப்புகளை பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது.
www.scholarshipnet.com

உலகளாவிய அளவில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு பிந்தைய காலம் மற்றும் பட்டப்படிப்பு அல்லாதவற்றுக்காக கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றிய விவரங்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் நாடுவாரியாக விவரங்கள் இல்லை.

www.eastchance.com
இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு உதவித்தொகை விவரங்களை கொண்டிருப்பதோடு, சமூக அறிவியல் மற்றும் கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. இதில் நாடுவாரியாக விவரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

www.financialaidtips.com
இந்த தளத்தில் நிதி சம்பந்தமான விதிமுறைகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதிலுள்ள கட்டுரைகள் மூலமாக ஒன்றிலிருந்து மற்றவைக்கு தொடர்பு கிடைத்தாலும், சில கட்டுரைகள் ஆர்வமிக்கதாக இருக்காது. மேலும் சமீபத்திய நிதிசம்பந்தமான விதிமுறைகள் இதில் கிடைப்பதில்லை.