test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 28 February 2014

வர இருக்கும் 2014 லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் -வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

வர இருக்கும் 2014 லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் -வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

Tata Communications நிறுவனத்தில் Team Member பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை.


Tata Communications நிறுவனம்Team Member பணிக்கு Any Degree பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம்: Tata Communications

வேலை: Team Member

தகுதி: Any Degree

அனுபவம்: 0-4 years

இடம்: Chennai

ஊதியம்: தேர்வு செய்யப்படும்போது அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: Online

Candidate Skills:*.Any Degree from an authorizeduniversity.

விண்ணப்பிக்க – இங்கே கிளிக் செய்யவும்

கடைசி தேதி: link expires ஆகும் முன் விண்ணப்பிக்கவும்
.

The Union Cabinet today gave its approval to the Terms of Reference of 7thCentral Pay Commission


The Union Cabinet today gave its approval to the Terms of Reference of 7thCentral Pay Commission (CPC) as follows:-

a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-

i. Central Government employees-industrial and non-industrial;

ii. Personnel belonging to the All India Services;

iii. Personnel of the Union Territories;

iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;

v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and

vi. Officers and employees of the Supreme Court.

b) To examine, review, evolve and recommend changes that are desirable and    feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.

c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.

d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.

e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.

f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).

g) To make recommendations on the above, keeping in view:

i.    the economic conditions in the country and need for fiscal prudence;

ii. the need to ensure that adequate resources are available for    developmental expenditures and welfare measures;

iii.   the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;

iv.  the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and

v.   the best global practices and their adaptability and relevance in Indian conditions.

h) To recommend the date of effect of its recommendations on all the above.

The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised.

The decision will result in the benefit of improved pay and allowances as well as rationalization of the pay structure in case of Central Government employees and other employees included in the scope of the 7th Central Pay Commission.

Background

Central Pay Commissions are periodically constituted to go into various issues of emoluments’ structure, retirement benefits and other service conditions of Central Government employees and to make recommendations on the changes required.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.


இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய
அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.

இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் என்ன விவரங்கள் அடங்கியுள்ளன என்பது பற்றி, வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் பொழுது விவரம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நெட் தேர்வில் ஓ.பி.சி., பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!


நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.

அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.

இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில் வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது: தனியார் பள்ளிகளுக்கு "செக்


கடந்த காலங்களில் தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும் தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார். தற்போது பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை எவருக்கும் அனுமதி கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது.
"தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள், பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது" என தேர்வுத்துறை, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில் சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக் கூடாது என்பதில் தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்வுத் துறை எடுத்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; 10ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பல முறைகேடுகள், தனியார் பள்ளிகளில் தான் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடந்தது. 

இதேபோல் பல பள்ளிகளில் நடக்கிறது. ஆனால், ஒருசில மட்டுமே அதிகாரிகளின் கவனத்திற்கு வருகிறது. பெரிய தனியார் பள்ளிகளில், நுழைவாயில் கதவுக்கும், "போர்டிகோ"விற்கும், 200 அடி மற்றும் அதற்கும் மேலும், நீளமாக இருக்கும். நுழைவாயில் கதவில், பள்ளியைச் சேர்ந்த, காவலர் தான் பணியில் இருப்பார்.

பறக்கும் படை குழு வந்தால், கதவைத் திறப்பதற்கே பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார். அனுமதி கிடைத்து தேர்வு அறைகளுக்கு, பறக்கும் படை குழு செல்வதற்குள், "உஷார்" நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்துள்ளன. தற்போது இயக்குனராக உள்ள, தேவராஜன் தேர்வுத் துறையில், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதனால், தனியார் பள்ளிகளுக்கு, "செக்" வைக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, "சீல்" வைத்து அங்கிருந்து எடுத்துச் சென்ற பிறகே, பள்ளி அலுவலர்கள் பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர்" என தெரிவித்தது. தேர்வுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்


பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதாக எதிர்கொள்ள இப்போதில் இருந்தே, சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கான, ஆலோசனைகள்.....இதோ:

ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாக படித்த பாடங்களுக்கு குறைந்த நேரமும், அதிகம் படிக்காத பாடங்களுக்கு, அதிக நேரமும் ஒதுக்க வேண்டும்.

கணக்கு, வரைபடங்களுக்கு, தினமும் தனியாக நேரம் ஒதுக்குவது நல்லது. படிப்பின் இடையே, டீ, பிஸ்கட், வெள்ளரி, பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.

தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள், படிப்பில் மட்டுமே முழு கவனம் செல்ல வேண்டும்.

படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதுவது, 16 முறை படிப்பதற்கு சமம்.

கிரிக்கெட் விளையாடுவது, டிவி பார்ப்பதை கைவிடுவது நல்லது; அப்போது தான் அதிக மதிப்பெண் பெற முடியும்.

தேர்வு காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.

தேர்வுக்கு தயார் செய்யும் நேரத்தில், தியானம் செய்வது, பிடித்த விளையாட்டு விளையாடுவது பதற்றத்தை தணிக்கும்.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, எழுது பொருட்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்லும் முன், தேவையான அனைத்தும் உள்ளதா என, சோதித்து பின், அறைக்குள் செல்ல வேண்டும்.

தேர்வுக்கு முந்தைய அரை மணி நேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்.

தேர்வில் ஒரு மதிப்பெண் பதில்களை முதலில் எழுதிவிட வேண்டும்; பின், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுதலாம். கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம்.

தேர்வு முடிய 2 நிமிடத்திற்கு முன் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட வேண்டும்.

Wednesday, 26 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?


2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். 

ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனபது தான் உண்மை, அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்ணும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகியதகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும் ஆக மொத்தம் 76மதிப்பெண் மட்டுமே அதிகபட்சமாக பெற முடியும் என்பதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் CUT-OFF 77 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு எந்த சுமையும் இல்லை.

இதனால் தமிழக அரசு, புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு புரிந்த பேருதவியாக இருக்கும். 

இடஒதுக்கீடு அடிப்படையில் (CUT-OFF-77 முதல் 100மதிப்பெண்களில் இல்லையெனில்) மொத்த பணியிடங்கள் நிரப்ப முடியாமல் போனால் CUT-OFF 77க்கு கீழ் உள்ளவர்களுக்கு (அரசு அறிவித்த சலுகையால் பயனடைந்தவர்களுக்கு) பணி வழங்குவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அரசு கவனிக்குமா எனபது தேர்வர்களின் கோரிக்கை...

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி


பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது. இதனால், முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

தேர்வுத் துறையின் கிடுக்கிப்பிடியால், சில தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

     இதே போல், வினாத்தாள்கள் வினியோகத்திலும், பல மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு வரை, வினாத்தாள் கட்டுகளாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தேவையானவற்றை பிரித்து, தனி கவரில் வைத்து, தேர்வு நாளன்று, மையத்துக்கு வினியோகிக்கப்படும்.தேர்வு நேரத்துக்கு, ஒரு மணி நேரம் முன்பே, அந்த கவரை பிரித்து, ஒவ்வொரு தேர்வறைக்கும் தேவையான அளவு, கவரில் வைத்து, தேர்வு மைய அலுவலர், அறை கண்காணிப்பாளரிடம் வழங்குவது வழக்கம்.இதனால், சில தனியார் பள்ளிகளில், சற்று முன்னதாகவே, வினாத்தாள்களை பிரித்து, கடைசி நேரத்தில் மாணவர்களிடம், 'அவுட்' செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

       தனித்தனியே...அப்பள்ளிகளுக்கு, பறக்கும் படை உள்ளிட்டோர் கண்காணிக்க சென்றாலும், 'வினாத்தாள்களை பிரித்து வினியோகிக்கவே, கவர் 'சீல்' உடைக்கப்பட்டது' என, காரணம் கூறி தப்பினர். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், இப்புகார் எழாத வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.ஒவ்வொரு தேர்வறையும், அதில்அமரக்கூடிய மாணவர்கள் விவரம் வரை, அனைத்தும், இயக்குனரகமே முடிவு செய்துள்ளது. இதனால், ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் சரியான எண்ணிக்கையில் வினாத்தாள் வைக்கப்பட்டு, 'சீல்'வைக்கப்பட்டு உள்ளது.

       இக்கவர்கள் அனைத்தும், தனித்தனி பெட்டிகளாக்கப்பட்டு, அவை கட்டுக்காப்பு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இப்பெட்டி, தேர்வு மையத்துக்கு, தேர்வு நாளன்று அனுப்பப்பட்டாலும், அதற்குள்ளும், தனித்தனி கவரில், வினாத்தாள்கள் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.தேர்வு மைய அலுவலர், இக்கவர் மற்றும் 'பிளேடு' ஒன்றையும், அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இக்கவர் தேர்வெழுதும் மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கிய பின் கவரை பிரித்து, வினாத்தாள்களை மாணவர்களிடம் வினியோகிக்கவும், தேர்வுத் துறைஉத்தரவிட்டு உள்ளது.

      எச்சரிக்கை:தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாள் கவர் 'சீல்' உடைக்கப்பட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது; இதை கண்காணிக்க, பறக்கும் படையினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், நடப்பாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், யாரும் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட முடியாது. இந்த நடவடிக்கையால், ஒரு சில தனியார் பள்ளிகளில், தேர்ச்சி விகிதம் சரியும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள்கலக்கத்தில் உள்ளனர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...


மத்திய அரசு  ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும் வெள்ளிக்கிழமை (27-02-14) அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 10% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால் அது 100% மாக உயரும்.

ஜனவரி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல் படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வால்  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் எந்த  நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருமுன் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது வழக்கமான நடைமுறை என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதற்கு பொருந்தாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு ?


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

Tuesday, 25 February 2014

அங்கீகரிகப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதற்காக அரசு ஊழியர் மருத்துவ நல சிகிச்சை தொகையை மறுக்க கூடாது-ஐகோர்ட் உத்தரவு


அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,'என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடி சிதம்பரம் தாக்கல் செய்த மனு: 

திண்டுக்கல் வேளாண்விற்பனைக்குழு அலுவலகத்தில், ஊழியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். இருதய ஆப்பரேஷனுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் செலவானது. தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ நலநிதி திட்டத்தின் கீழ், தொகையை திரும்ப வழங்குமாறு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை இயக்குனர், திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளருக்கு விண்ணப்பித்தேன்; நிராகரித்தனர்.தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவு:

அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், மனுதாரர்சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை எது? அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை எது? என ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.செலவு செய்த தொகையை, திரும்பப் பெற முடியுமா? இல்லையா? என சிந்திக்கவும் முடியாது.உடல்நிலை மோசமடைந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை தேவை. இத்திட்டத்தின் நோக்கமே,இதுபோல் திடீர் மருத்துவச்செலவு ஏற்பட்டால், அதை சமாளிக்கத்தான். செலவு தொகையை, திரும்பவழங்குவதுதான். மனுதாரருக்கு, மறுப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெறவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி, தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. தொகையை வழங்க மறுத்த உத்தரவை, ரத்து செய்கிறேன். 

மருத்துவ செலவு தொகையை மனுதாரருக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர்வழங்க வேண்டும், என்றார்.

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

         இந்த ஆண்டுக்கான திறனாய்வுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் 520 மையங்களில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.

       இதன் ரிசல்ட் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கு நர் கே.தேவராஜனிடம் கேட்டபோது, ‘‘விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

             அனைத்து மாவட்டங்க ளில் இருந்தும் வந்த பிறகு, கணினியில் மதிப்பீட்டு பணி கள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை 3 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்



ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது. தளர்வுக்கு 

முன்பாக 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் 

முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை

தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை - நாளிதழ் செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.

பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும் பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கு முன்னரே மேற்காணும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். 

Monday, 24 February 2014

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.
1. திருவள்ளூர் - வேணுகோபால்
2. வட சென்னை - டி.ஜி. வெங்கடேஷ் பாபு
3. தென் சென்னை - ஜெயவர்த்தன்
4. மத்திய சென்னை - விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர் - ராமசந்திரன்
6. காஞ்சிபுரம் - குமாரவேல்
7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி

8. வேலுர் - பா. செங்குட்டுவன்
9 கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார்
10. தர்ம்புரி - மோகன்
11. திருவண்ணாமலை - வனரோஜா
12. ஆரணி - ஏழுமலை
13. விழுப்புரம் - ராஜேந்திரன்
14. கள்ளக்குறிச்சி - டாக்டர் க. காமராஜ்
15. சேலம் - பன்னீர்செல்வம்
16. நாமக்கல் - சுந்தரம்
17. ஈரோடு - செல்வகுமார் சின்னையன்
18. திருப்பூர் - சத்தியபாமா
19 நீலகிரி - கோபாலகிருஷ்ணன்
20. கோவை - நாகராஜன்
21. பொள்ளாச்சி - ஊ. மகேந்திரன்
22. திண்டுக்கல் - எம். உதயகுமார்
23. கரூர் - தம்பி துரை
24. திருச்சி - குமார்
25. பெரம்பலூர் - மருத ராஜா
26. கடலூர் - அருள்மொழி தேவன்
27. சிதம்பரம் - மா. சந்திரகாசி
28. மயிலாடுதுறை - பாரதி மோகன்
29. நாகப்பட்டினம் - டாக்டர் மு. கோபால்
30. தஞ்சை - பரசுராமன்
31. சிவகங்கை - செந்தில்நாதன்
32. மதுரை - கோபால கிருஷ்ணன்
33. தேனி - ஆர். பார்த்திபன்
34. விருதுநகர் - ராதாகிருஷ்ணன்
35. ராமநாதபுரம் - அன்வர் ராஜா
36. தூத்துக்குடி - து. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
37. தென்காசி - வசந்தி முருகேசன்
38. திருநெல்வேலி - கே.ஆர்.பி. பிரபாகர்ணன்
39. கன்னியாகுமரி - ஜாண்தங்கம்
40. புதுச்சேரி - ஓமலிங்கம்

Sunday, 23 February 2014

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?



வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி? 

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர். 

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார். 

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:
தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:
பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்..

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID / PASSWORDஐ
கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Saturday, 22 February 2014

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு

CLICK HERE-DEE - DEE ORDERED TO ALL OFFICIALS PREPARE BT / TAMIL PANDIT PROMOTION PANEL AS ON 01.01.2013 & RELEASE THE FRESH PANEL AS PER 10+2+3 / 11+1+3 REG

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

DEE - ESTABLISHMENT OF MATHS LEARNING LAB IN MIDDLE SCHOOLS REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர் உத்தரவு

DEE - TESTF 2 DAYS STRIKE ON 25.2.2014 & 26.2.2014 REG DEE INSTRUCTIONS CLICK HERE...

Friday, 21 February 2014

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு.


2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு.


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பிப்ரவரி 22 சனியன்று பிற்பகல் 2 மணிக்குகலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,மற்றும் அனைத்து கல்விச்சான்றிதலுடன் எதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவலகதில் கலந்துகொள்ளலாம் நியமன ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான (22.02.2014) BRC பயிற்சி கட்டகம்.

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான (22.02.2014) BRC பயிற்சி கட்டகம்.

click here to download the 22.02.2014 training module

ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் ஒன்று ஆசிரியர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன. 

அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல்திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் ஒன்று ஆசிரியர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இக்கட்டகத்தை படிக்கும் போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் இக்கட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக் கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது


2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது. 

பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:

தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


இதுகுறித்து மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் அளித்த அறிக்கையில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என மாநில பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் முடிவு


நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.

18 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு


தமிழகத்தில் காலியாக உள்ள 18 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களை பத்வி உயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

* விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கம் புரம் தலைமையாசிரியர் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

* தும்பகுளம் தலைமையாசிரியர் தேனி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

*மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* உசிலம்ப்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.லேடி அவர்களை மதுரை மாநகராட்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

Thursday, 20 February 2014

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது



வருமானவரி துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான புதிய இணையதளம் நேற்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடக்கவிழாவில் வருமானவரி துறை இணை ஆணையர் பி.ஜெயராகவன் வரவேற்று பேசினார்.

அதன் பின்னர், வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி புதிய இணையதளத்தை ( www.tnincometax.gov.in ) தொடங்கிவைத்தார். இந்த இணையதளத்தை வருமானவரி துறை அதிகாரி கிருபாகரன் வடிவமைத்தார். இதில் புலனாய்வு பொது இயக்குநர் ஜெயசங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, அப்ரோல், மிஸ்ரா, வருமானவரி துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமானவரி துறை மக்கள் தொடர்பு அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். பின்னர் இதுகுறித்து வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த இணையதளத்தில் அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், மேல்முறையீட்டு வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன.

வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த இணையதளம் தலைமையிடமான டெல்லி இணையதளத்தில் உள்ள தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஒப்பந்த கோரிக்கைகளை (டெண்டர்) டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் பணிகள் சுலபமாகும். தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும்.

ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு அதிகாரிக்கும் தனி தனியே அனுப்புவதற்கு பதிலாக இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். அனைத்து அதிகாரிகளும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வி செயலர் நாளை காலை 10மணிக்கு சந்திப்பு


இன்று காலை முதற்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்குனருடன் நடைபெற்ற கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து நாளை காலை 10மணியளவில் தலைமை செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாலருடன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்ந்த மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் கூறுகையில் 7அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்

அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது....

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படியை 100 சதவீதம் வரை உயர்த்தியும், அதனை அடிப்படை ஊதியத்தொகையுடன் இணைத்தும் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழயர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். சந்தை பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அகவிலைப்படியை 50 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்விற்கு உதவிகரமாக இருக்கும். உயர்த்தப்பட்ட 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கினால் அரசு ஊழியர்களின் சம்பளம் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ளதால், விரைவில் அமலாகலாம் என கூறப்படுகிறது.

50 சதவீதம் அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என 5வது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் 6வது சம்பள கமிஷனில் இந்த பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து 100 சதவீதமாக வழங்கும் அரசின் உத்தரவு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில், இது அரசு அறிவிக்கும் 2வது இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இது 2013ம் ஆண்டு ஜூலை 01ம் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்பணி நியமன ஆணை வழங்கினார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை
அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.


வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால் வேறு பள்ளி ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தப்பட்டது. 

இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியை ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் போஜன், இடுவம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜெய்வாபாய் பள்ளி முதுகலை ஆசிரியை சுமதி, ஆங்கில பாடத்தை கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு நடத்தினார். 

இடுவம்பாளையம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தப்படுவது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றனர். இத்திட்டம் மூலம் ஏதாவது ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் கூட தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியில் இருந்தும், ஒரு ஆசிரியர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர் இல்லாத குறையைப் போக்க முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஞ்சம் வாங்காதே ! லஞ்சம் கொடுக்காதே !

லஞ்சம் வாங்காதே ! லஞ்சம் கொடுக்காதே !

தேர்தல் ஆணையம் அதிரடி! விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!


நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 16-வது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகள் உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு தேவைப்படும் மனித வளம் குறித்த விவரங்கள் சேகரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவோர், ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருவோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 15ம் தேதியுடன் முடித்து தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, போலீஸ் நிர்வாகத்தில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுத்த வேண்டாம். அதேபோல், சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தாலும் இடமாறுதல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வருவாய்த்துறையில் தாசில்தார்கள் பலர் அடுத்த 6 மாதத்தில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் ஆசிரியர்கள் பலருக்கும் விலக்கு அளிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்டுப்பாட்டு பிரிவுகள் தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒரு தாசில்தார், ஒரு துணை தாசில்தார் உள்பட 7 பேரை நியமிக்கவும் கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரிவு நாளைக்குள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கிறது


ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது.

வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது. 

' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB) 

இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது. 

இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார். 

மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது

Wednesday, 19 February 2014

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை 20.02.14 அன்று காலை 11மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் அனுப்பிய கடித நகல்..

Tuesday, 18 February 2014

PG TRB - 2013 - Provisional Selection List Now Published.

PG TRB - 2013 - Provisional Selection List Now Published.

           Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click Here for Provisional Selection list after Certificate Verification - Subject Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry -

Click Here

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது

DSE - HON'BLE SCL EDN MINISTER, SECY & ALL CEO / ADDL. CEO / DEO / DEEO / IMS REVIEW MEETING WILL BE HELD ON 25.02.2014 REG PROC CLICK HERE...

ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

TESTF STATE LETTER CLICK HERE...

Monday, 17 February 2014

TRB COURT NEWS - 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி-நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமன ஆணை



TRB-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

அதனை அமுல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சம்மந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் சென்று பணயிடத்தை தெரிவு செய்தபின் இணைஇயக்குனரால் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு

CLICK HERE-TEACHERS ASSOCIATION STRIKE - DEPUTE BRTE / CRTEs TO SCHOOLS REG PROC 

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்) தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை


திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். 

*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு 

*எஸ்யூவி வகை வாகனங்களுக்கு வரி 20% குறைப்பு 

*மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு 

*வாகனத்துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைப்பு 

*வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 

*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைப்பு. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் அமலுக்கு வரும். 

*மேலும் 7 புதிய அணு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்படும். 

*296 தொழில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் அனுமதி நடப்பாண்டில் இலக்கை விஞ்சி ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். 

*உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அம்ரிஸ்தர்- கொல்கத்தா இடையே 3 புதிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

*எங்கள் சாதனைகளுக்குக் காரணம் கடும் உழைப்பு தான். எனக்கு கடும் உழைப்பை போதித்தவர்கள் என் தாயாரும், ஹாவர்டும் நாங்கள் வளர்ச்சியைக் காட்டவில்லை என்பது பொய் பிரச்சாரம். 

*எங்களது 10 ஆண்டு கால சாதனையை வரலாறு தீர்மானிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையினரில் 14 லட்சம் பேர்தான் வங்கி கணக்கு வைத்திருந்தனர். தற்போது 42 லட்சம் சிறுபான்மையினர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

*ரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ. 29,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு.

*உணவு, எரிபொருள், உரங்களுக்கான மானியமாக ரூ. 2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு 

*57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

*ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்த ரூ11,009 கோடி ஒதுக்கீடு.

*நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

*10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு ரூ. 7,248 கோடி ஒதுக்கப்பட்டது 

*கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 36,400 கோடி ஒதுக்கினோம்.

*வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ1,200 கோடி ஒதுக்கப்படும்.

*ஆதார் அட்டை வழங்குவதை முழுமையாக செயல்படுத்துவோம்.

*பாதுகாப்பு துறைக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக 10% நிதி ஒதுக்கீடு 

*நாட்டில் 4 மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும். 

*செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.

*ஆதார் அட்டையை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

*பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ7 ஆயிரம் கோடி. 

*சுகாதாரத்துறைக்கு ரூ33,725 கோடி ஒதுக்கீடு உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்டியுள்ளது. 

*சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஏற்றுமதியில் சாதனை நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 

*சென்னை- பெங்களூரை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப்பணி நடக்கிறது. 

*ஐமு அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6.2%- ப.சி 

*சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அமிர்தசரஸ்- கொல்கத்தா தொழில்பூங்காக்கள் அன்னிய நேர முதலீட்டை மேலும் தாரளமாக்கி அதிக முதலீடு ஈர்க்கப்படும்- ப.சி. 

*வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு கூடுதல் நிதி அடுத்த ஆண்டு நிர்பயா நிதிக்கு ரூ1000 கோடி ஒப்புதல். 

*2013-14ல் உணவுதானிய உற்பத்திக்கு 263 மில்லியன் இலக்கு- ப.சிதம்பரம் 

*10 ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ10,145 கோடி 

*10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ79,251 கோடி 

*யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி அதிகரிக்கப்படும்- ப.சிதம்பரம் 

*மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி 3.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு 

*50 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக இருக்கும் 

*பண மதிப்பு நிலையானதாக இருக்கிறது.

*ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது- ப.சி. ஐமு கூட்டணியின் 

*கடந்த 10 ஆண்டுகால சாதனையை வரலாறு தீர்மானிக்கும்: ப.சிதம்பரம் உணவுப் பணவீக்கம் கவலை தருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. உற்பத்தித் துறையில் தேக்கம் தொடர்கிறது. உற்பத்தித் துறையில் முதலீடுகளும் குறைந்துள்ளது கவலை தருகிறது. 

*பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது.

*உற்பத்தி துறையில் முதலீடு குறைந்துள்ளது கவலையளிக்கிறது- ப.சிதம்பரம் 

*நாட்டின் ஏற்றுமதி 326மில்லியன் டாலராக இருக்கும்- ப.சிதம்பரம் 

*7 புதிய விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

*நாட்டின் பணவீக்க விகிதம் 5.05%ஆக குறைந்துள்ளது- ப.சிதம்பரம் 

*8 தேசிய உற்பத்தி மண்டலங்களுக்கு அனுமதி- ப.சிதம்பரம் 

*நிதிப்பற்றாக்குறை 4.6% ஆக கட்டுப்பாட்டில் உள்ளது-ப.சிதம்பரம் 

*ஐமு ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி 4% ஆக அதிகரிப்பு.

*நடப்பாண்டில் வேளாண்துறை வளர்ச்சி 4.6% ஆக இருக்கும்.

Saturday, 15 February 2014

பள்ளி மேலாண்மை குழு(SMC) உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயற்சி.

பள்ளி மேலாண்மை குழு(SMC) உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயற்சி.

CLICK HERE TO DOWNLOAD -SMCMEMBERS 3 DAYS NON-RESDENTIAL TRAINING

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது.


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் 
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். 

அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண் (55 சதவீதம்) எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு ஆகியவற்றின் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை இதுவரை 90 மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இப்போது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டுள்ளதால் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு 36 மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் இருக்கும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்

பள்ளிக்கல்வி - அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன் / ஆசிரியர் கல்வி பயிற்சித் தேர்வு - முன் பணி / தேர்வுகால பணிகளில் ஈடுபடும் ஆசிரிய்ர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வழங்கப்படும் உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - தமிழக அரசு ஆணை வெளியீடு

GO.306 SCL EDN DEPT DATED.23.10.2013 - 15% ENUMERATION RAISED FOR ALL GOVT EXAMINATIONS - TEACHING & NON-TEACHING STAFFS REG ORDER CLICK HERE...