test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 31 January 2014

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது?

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்.

AICPIN for the month of December 2013

Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 points and pegged at 239(two hundred and
thirty nine). On 1-month percentage change, it decreased by 1.65 per cent between November and December compared with the rise of 0.46 per cent between the same two months a year ago.
The largest downward pressure to the change in current index came from Food group contributing -4.96 percentage points to the total change. At item level, Onion, Ginger, Chillies Green, Brinjal, Cauliflower, Cabbage, Peas, Tomato, Potato and other Vegetable items, Sugar etc. are responsible for the decrease in index. However, this was compensated to some extent by Fish Fresh, Eggs, Hen, Poultry, Milk, Pure Ghee, Garlic, Firewood, ESI Contribution, etc. putting upward pressure on the index.

The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 9.13 per cent for December, 2013, as compared to 11.47 per cent for the previous month and 11.17 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 11.49 per cent against 16.17 per cent of the previous month and 13.53 per cent during the corresponding month of the previous year.
At centre level, Giridih recorded the highest decline of 12 points each followed by Ahmedabad, Chhindwara, Varanasi, Munger, Jamalpur, Nagpur and Bhavnagar (10 points each).Jamshedpur (09 points), Rourkela, Ludhiana, Tripura and Angul Talcher (08 points each) Among others, 7 points decrease was registered in 9 centres, 6 points in 8 centres, 5 points in 11 centres, 4 points in 8 centres, 3 points in 7 centres, 2 points in 9 centres and 1 point in 7 centres. On the contrary, Sholapur centre reported an increase of 4 points followed by Puducherry (2 points), Coimbatore and Srinagar centres 1 point each. Rest of the 3 centres’ indices remained stationary.
The indices of 37 centres are above All-India Index and other 38 centres’ indices are below national average. The index of Varanasi and Vijaywada centre remained at par with all-India index.
The next index of CPI-IW for the month of January, 2014 will be released on Friday, 28 February, 2014. The same will also be available on the office website www.labourbureau.gov.in.

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ஹேமந்த் குமார் சின்ஹா, உயர் கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி


முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே நியமித்து வந்தார். 
குறிப்பிட்ட சில பள்ளிகளில், குறிப்பிட்ட தேர்வு பணியில் சிலர் ஈடுபடுவதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் சென்றுள்ளது. மேலும் சீனியர் ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்காதவாறு, கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதிய ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், தேர்வுக்கு பணியாளர் நியமிப்பதை, தேர்வுத்துறை இயக்குனரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்வு மையங்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு மையத்திலும் தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விபரம், ஆசிரியர்கள் விபரங்களை ஏற்கனவே தேர்வுத்துறையிடம் பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல் விடைத்தாள் திருத்தும் பணியிலும் மாற்றம் செய்ய உள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர் விபரம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலிருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் தேர்வுத்துறை இயக்குனரகம் ஒதுக்கீடு செய்த நாட்களில் கண்டிப்பாக,தேர்வுப்பணியாற்ற வேண்டும், என்றார்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு


புதுடில்லி: டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

Thursday, 30 January 2014

மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் ரோசய்யா இன்று உரையாற்றும்போது, தமிழகத்தில் மனிதவள மேம்பாடு தொடர்பாக வெளியிட்ட தகவல்:

"மக்கள் தொகை விகிதாச்சாரத்தில், உழைக்கும் வயதுடையவர்கள் அதிக அளவில் உள்ள சாதகமான சூழலை நமது மாநிலம் தற்போது பெற்றுள்ளது என்பதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சாதகமான சூழல் வெகுகாலம் நிலைத்திருக்காது. எனவே, இச்சூழல் மாறுவதற்கு முன்பே, இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான, சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது.

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு பெறத் தகுதியுடைவர்களாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவர்களது திறன் அளவை மேம்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற தனிச்சிறப்புடைய முன்முயற்சி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் இது வழங்கும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நமது மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் ஆளுநர் ரோசய்யா.

பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மார்க் முதல்முறையாக ஆன்லைனில் பதிவு- தேர்வு முடிவுகளை வேகப்படுத்த சிறப்பு ஏற்பாடு.



          பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட உள்ளன. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த புதிய நடை முறையை அறிமுகப்படுத்துகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைகிறது. தனித்தேர்வர்கள் உள்பட ஏறத்தாழ 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் அனைத்து மாணவர் களுக்கும் பதிவு எண், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்தும் ஒதுக்கப்பட்டுவிட்டது.இந்த பிளஸ்-2 தேர்விலும் சரி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் சரி பல்வேறு புதியநடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் கட்டு, ரகசிய குறியீடு (பார்கோடு) என தேர்வில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பிளஸ்-2 தேர்வு எழுதும் அறிவியல், கணித பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு உண்டு. தேர்ச்சி பெறு வதற்கு தியரியில் 150-க்கு குறைந்த பட்சம் 30 மதிப்பெண்ணும், செய்முறைத்தேர்வில் 50-க்கு 40 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும். செய்முறைத்தேர்வை பிப்ரவரி 10-ம் தேதி முதல் 28-க்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்தில் 3 கட்டங்களாகவும், மற்ற மாவட்டங்க ளில் 2 கட்டங்களாகவும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதுநாள் வரை செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை தேர்வுக்கு வருகை தரும் வெளி ஆசிரியர்கள்தான் பதிவுசெய்து தேர்வுத் துறைக்கு அனுப்பி வந்தனர்.இந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக செய்முறைத் தேர்வு மதிப்பெண் தினசரி தேர்வு முடிய முடிய அன்றைய தினமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மதிப்பெண் விவரங்கள் மாணவர்களின் தகவல் தொகுப்பில் உடனடியாக பதிவுசெய்யப்பட்டுவிடும்.

எனவே, முன்பு போல தேர்வு முடிவுகளுக்கான பணிகளின்போது செய்முறைத்தேர்வு மதிப்பெண் விவரங்களை தியரி மதிப்பெண்ணுடன் தனியாக குறிப்பிடத் தேவை யில்லை. இதனால். மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் வேலைப்பளு வெகுவாக குறையும். தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஆன்லைன் பதிவு முறையை தேர்வுத்துறை நடை முறைப்படுத்துகிறது.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

GO.(MS).NO.244 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.

பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.

சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக் கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

ELEMENTARY EDUCATION - AWARDING OF SELECTION / SPECIAL GRADE IN THE POST OF PRIMARY SCHOOL HEADMASTER FROM THE DATE OF PROMOTION AFTER 01.06.1988 COUNTING THIS SERVICE RENDERED IN THE POST OF SG TR REG GO.234 / 179 / 270 / 210 / 216 ORDERS

30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.

click here for proceedings


மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ரோசய்யா பேச்சு


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர மேல் நிலைப்பள்ளியின் 150–ம் ஆண்டு விழா (முப்பொன் விழா) இன்று காலை பள்ளியின் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. விழாவிற்கு தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:

கும்பகோணத்தில் நகர மேல்நிலைப்பள்ளியின் 150–வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

இந்த பள்ளி கணித மாமேதை ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு மாமேதைகளை உருவாக்கியுள்ளது. 21–ம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த கல்வி புரட்சி உருவாக்க பல்வேறு வாய்ப்புக்களை இந்தியா உருவாக்கி உள்ளது.

நம்நாட்டில் 120 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் மிகப் பெரிய பலம் வாய்ந்த சக்தியாக இளைஞர் சக்தி உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் இளைஞர்களை கல்வி மூலம் தலைவர்களாக உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்களும் கல்வி நிலையங்களும் மாணவர்களை ஒழுக்கம், அன்பு, அறிவு உடையவர்களாக உருவாக்க பாடுபட வேண்டும்.

வரலாற்று பெருமைமிக்க கோவில்கள் சூழ்ந்துள்ள தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தின் பழமை வாய்ந்த நகர மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை ராமானுஜம், வயலின் வித்வான் உமையாள்புரம் சிவராமன், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார், கல்வியாளர் தம்புசாமி முதலியார் ஆகியோர்களை உருவாக்கிய பாரம்பரியமிக்கப் பள்ளி இந்த பள்ளி.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி கருப்பையா மூப்பனாரும் இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கை ஆற்றியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் என். சுப்பையன், திருவையாறு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான ஜி. ஆர். மூப்பனார், சாஸ்த்ரா பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர். சேதுராமன், நகர மேல்நிலைப்பள்ளி பொன்விழாக்குழு தலைவர் டாக்டர். டி.சீத்தாராமன், செயலர் கே.பாலதண்டாயுதபாணி, தலைமை ஆசிரியை ஆர். விஜயா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

Tuesday, 28 January 2014

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

Govt Ltr No.46373/Paycell/13-6 Dated.27.01.2014 - W.P.Nos. 21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance Pay Cell department, dated 22-7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of pay bills for the month of January,2014 - Instructions issued – Regarding.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்


4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் உத்தேசமாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்குகிறது. மொத்தம் ரூ.86 கோடி செலவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கணினிக் கல்வி கற்பிக்கப்படும்.

இதற்கான டெண்டர் பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் கோரப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல் மூலம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் கணினி கல்வி அறிவை பெற முடியும்.

ஏற்கனவே அரசு சார்பில் பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது. மடிக்கணினியை பள்ளி மாணவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:
நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.


இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து,எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி நடத்துகிறது. அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tancet2014 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், செயலாளர், டான்செட், அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து, புகைப்படத்துடன் சான்றிதழ்களையும் இணைத்து பிப்ரவரி 20–ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேரவும் இந்த டான்செட் தேர்வை எழுதவேண்டும்.

இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு


FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

உதாரணம்: 
கட்டப்படவேண்டிய தொகை = ரூ.16317
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட
வேண்டியத் தொகை 16317*0.97086 = ரூ.15842
3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 475
மொத்தம் = ரூ.16317

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்...


அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
       
     

மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு



         கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, அரசு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவை, பள்ளி நிர்வாகம் மூலம், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கல்வி உதவித்தொகை, பணமாக வழங்கப்பட்டதில், மோசடி நடந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், போலியாக, மாணவர்களின் கையெழுத்து போட்டு, கல்வி உதவித்தொகையில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. அதில் சிக்கிய, 77 தலைமை ஆசிரியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போன்ற மோசடிகளை தடுக்க, கடந்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

மாணவரின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டாலும், அதற்காக விண்ணப்பிப்பதில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, அதுவும், இணைய தளத்தில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகைகளில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, மாணவரின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்கட்டமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், கல்வி உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாக, தங்களது விவரங்களை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம், நடப்பு நிதியாண்டில் இருந்து அமல்படுத்த, உயரதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ரகசிய குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

முதன்மை கல்வி அதிகாரிகள் 7 பேர் மாற்றம்; பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு


சென்னை-தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அருண்பிரசாத், தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனராக மாற்றப்பட்டார்.தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.

கோவை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் சுப்பிரமணியன் பள்ளிக்கல்வி மின் ஆளுமை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Monday, 27 January 2014

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி,

மாற்றுத்திறனாளி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.

வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார்.


மனுவை விசாரித்த நீதிபதி, “சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.

பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

   "பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம்.

      2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர். இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகின்றனர்.

      இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே பாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது. பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "பணிநிரவல் என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது.


     ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றனர்.

எஸ்எம்எஸ் தகவலால் பள்ளிகளில் கொடியேற்றம் 2 மணி நேரம் தாமதம்


பள்ளி கல்வித்துறையிடம் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு வந்த எஸ்எம்எஸ் தகவலால் நங்கவள்ளி வட்டாரத்தில் 76 அரசு ஆரம்ப பள்ளிகளில் குடியரசு தின கொடியேற்று விழா 2 மணி நேரம் தாமதமாக நடந்தது.அரசு பள்ளிகளில் குடியரசு தின கொடியேற்று
விழா காலை 8 மணிக்கு நடத்தப்படுவது வழக்கம். சேலம் மாவட்டம் நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் இருந்து சுமார் 7.50 மணியளவில் எஸ்எம்எஸ் வந்தது.
அதில், காலை 8 மணிக்கு பதில் காலை 10 மணிக்கு கொடியேற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு சில பள்ளிகளில் எஸ்எம்எஸ் தகவலை புறக்கணித்து வழக்கப்படி காலை 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பெரும்பாலான பள்ளிகளில் காலை 8 மணிக்கு நடைபெறவிருந்த கொடியேற்ற நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.காத்திருக்க விரும்பாத ஊர் முக்கிய பிரமுகர்கள், கல்விக்குழு தலைவர்கள் விழாவில் பங்கேற்காமல் கிளம்பிச் சென்றனர். காலையில் சாப்பிடாமல் விழாவுக்கு வந்திருந்த மாணவர்கள் பலர் கூடுதலாக 2 மணி நேரம் காத்திருந்ததால் மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. நங்கவள்ளி வட்டாரத்திலுள்ள 76 பள்ளிகளில் தாமதமாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.


இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘காலை 10 மணிக்கு கொடி ஏற்றும்படி நேற்று முன்தினம் நங்கவள்ளி வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மின் அஞ்சல் வந்துள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்க தலைவருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். ஆசிரியர் கூட்டணி தலைவர் நேற்று காலை தான் தலைமை ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்துள்ளார். முன் கூட்டியே தகவல் தெரிவிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது,‘‘ என்றார்.

Sunday, 26 January 2014

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு


வாக்காளர் அடையாள அட்டையை வீடு வீடாக வழங்கி, வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் கையொப்பம் வாங்க சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், தேசிய வாக்காளர் தினமான சனிக்கிழமை வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திருத்தம் மேற்கொண்டவர்களும் வாக்குச் சாவடிகளில் அட்டைகளை பெற்றனர்.

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது

இந்தியாவின் 65-வது குடியரசு தினம் - குடியரசுத் தலைவர் உரை

இந்தியாவின் 65-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு தனது உரையை வழங்கியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலையான அரசாங்கம் வர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அப்படியொரு அரசாங்கம் அமையவில்லையென்றால் சந்தர்ப்பவாதிகளின் கையில் நாடு சீர்கெடும் என்று எச்சரித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையற்ற, முறையற்ற அரசியலுக்கு மாற்றாக, 2014-ஆம் ஆண்டு, நாட்டிற்கு ஆரோக்கியமான ஆண்டாக அமையவேண்டும், அதற்கு வாக்காளர்கள் உதவவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வெற்றி பெறுவது யாராக இருந்தாலும், நிலையான அரசுக்கு பொறுப்பேற்று, நேர்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றார்.

"நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது, அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்பைக் கொண்டது. கடந்த ஆண்டுகளில் நம் தேசம் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து, வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவேண்டும். 1950-ஆம் ஆண்டு குடியரசு பிறந்தது. 2014-ஆம் ஆண்டு இந்தியா மறு எழுச்சி பெற வேண்டும்.

இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் இந்திய கிராமங்களையும், நகரங்களையும் 21-ஆம் நூற்றாண்டின் தரத்திற்கு உயர்த்த பாடுபடுவார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப் பாருங்கள். அவர்கள் உருவாக்கும் இந்தியாவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். நிலையான அரசாங்கம் வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் நாட்டைக் காக்கும் பொறுப்பு உள்ளது. இது நாம் சுயபரிசோதனை செய்து செயலில் இறங்க வேண்டிய காலம். சமீப காலங்களில், இந்தியாவில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. நம் மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை குலைக்க மதவாத சக்திகளும், தீவிரவாதிகளும் முயற்சிப்பார்கள் ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது.

நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது; எந்த எதிரியையும் வீழ்த்தக்கூடியது. நமது படைவீரர்கள் இதை பலமுறை நிரூபித்துள்ளனர். அவர்களது நேர்மை குறித்து கேள்வியெழுப்பும் எவருக்கும் பொது வாழ்வில் ஈடுபட உரிமை இல்லை. நாம் இழந்ததை மீட்க விதி நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதில் தவறு செய்தால், நம்மை நாம்தான் பழித்துக் கொள்ள வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 25 January 2014

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!



260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்

பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காகவிண்ணப்பிக்கும்போது, முகவரி
சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்களையும் அளிக்கவேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்தபின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல்சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு, அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் சீரமைப்பு பணியின்போது ஏராளமான கற்சிலைகள் கிடைத்தன.

திண்டிவனம் அருகே சீரமைப்பு பணியின்போது ஏராளமான கற்சிலைகள் கிடைத்தன. இதை கண்டு கிராம மக்கள் பரசவம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் விளைநிலத்தின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் இருந்துள்ளது. பல வருடங்களாக யாரும் செல்லாத காரணத்தால் கோயிலை முட்செடிகள் சூழ்ந்து புதர் போல் காணப்பட்டது.நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்கள் அப்பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழுதடைந்த கிணறு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த செடி கொடிகளை அகற்றியபோது விசித்திரமான சாமி சிலைகள், கற்சிலைகள் காணப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் 11க்கும் மேற்பட்ட சிலைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர்.

தொடர்ந்து கற்பூரம் காட்டி சிலைகளுக்கு பூஜை செய்து வணங்கினர். கிராம மக்கள் கூறுகையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருந்தோம். நேற்று சிலை இருப்பதை கண்டு பரவசம் அடைந்தோம். விஞ்ஞானம் வளராத காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல சிலைகள் புதைந்திருக்கும் என்று கருதுகிறோம். 19ம் நூற்றாண்டின் கன்னிமார் சிலைகளாக இருக்கலாம் என்றனர்.

குடியரசு தின சிறப்பு பதிவு:





குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.

இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 110 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

இந்தியர்களாகிய நாம் இன்று அறுபத்தி மூன்றாவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.

உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக் கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வாக்களிப்பது ஏன்?


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி, தேர்தல் ஆணையத்தை கவுரவிக்கும்
வகையில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

தேர்தல் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.

வாக்களிப்பது ஏன்?
இந்தியாவில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் பிரதமர் வரை நேரடி அல்லது மறைமுக தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வாக்களிப்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரின் கடமை. இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு 100 சதவீதத்தை தொடும்போதுதான், மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். வாக்களிப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும் அவசியம். எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் நமது கடமையை செய்ய வேண்டும். தேர்தல் நடப்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான். அத்தினத்தில் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வாக்குரிமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தை உறுதியாக நிலைநாட்ட முடியும்.

பணம் வாங்கலாமா?

நாட்டில் தற்போது பணத்தை கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் புதிய வழியை அரசியல் கட்சிகள் புகுத்தியுள்ளன. தேர்தல் என்பது ஒரு அப்பட்டமான முதலீடாக மாறி விட்டது. முன்பெல்லாம் அடிதடி, கள்ள ஓட்டு போடுவது என்பதுதான் பிரதானமாக இருந்தது. இது மாறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுதான் இப்போது பிரதானமாக இருக்கிறது. இவர்களின் மாய வலையில் சிக்கி விட்டால், நாம் விரும்பும் ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாமல் போய் விடும். பணத்திற்காக விலை மதிப்பற்ற வாக்குகளை விற்கக் கூடாது. இது நாட்டை விற்பதற்கு சமம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனவே, அனைவரும் ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றுவோம்.

அனைவருக்கும் KALVIMANI.COM - ன் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.!

குடியரசு தினம்:

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்...!
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.! குடியரசு தினம்: இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து 

விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது

படித்தால்....பிடித்தால் ...பகிருங்கள்.... புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.

 தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். 

மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. 

இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை

. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். 

பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.

 ‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள். 

நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும் இச்செய்தியை வெளியிடவில்லை கொஞ்சம் யோசிப்போம். : என்ன மாதிரி சம்மூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்....என்று. 

Friday, 24 January 2014

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

click here to download the Republic day 2014 instruction reg

58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்


மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி பங்கேற்றார். 

மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர், 10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்றார்.

மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்

தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.


தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.

தமிழ் வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். ஆசிரியர் தேர்வு
வாரியம் நடத்திய தகுதித்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்று உள்பட கல்விச் சான்றிதழ்களையும் சாதிச் சான்றிதழையும் காட்ட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, கோரிக்கை கடிதம், ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்புக் கடிதம், பதிவாளர் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.150-க்கான டிமாண்ட் டிராப்ட், பட்டப் படிப்பு அல்லது முதுகலை படிப்பு சான்றிதழ், தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கு கல்லூரி முதல்வர் வழங்கிய சான்று அல்லது தமிழ் வழியில் பி.எட். படித்த விவரம் குறிப்பிடப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.ஏ.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ்ப் பாடத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களும், அதேபோல் ஆங்கில இலக்கிய இளநிலை, முதுகலை பட்ட தாரிகளும் தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்றும் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

Thursday, 23 January 2014

TET- CV-2014-செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை : டி.ஆர்.பி..,முடிவால் நிம்மதி .- தினமலர்

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை : டி.ஆர்.பி..,முடிவால் நிம்மதி . நாளிதழ் செய்தி வெளியிடு .......