test

R P

Tuesday, 8 April 2014

10ம் வகுப்பு அறிவியல் கேள்வித்தாளில் பிழை , அறிவியல் தேர்வு எளிது: மகிழ்ச்சியில் மாணவர்கள்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக, மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக, அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த, அறிவியல் தேர்வில், இரு கேள்விகளில், பிழை மற்றும் குழப்பம் இருந்ததால், மாணவர்கள் பதிலளிக்க சிரமப்பட்டதாகவும், இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் எனவும் அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியர் கண்ணன் கூறியதாவது: ஒரு மதிப்பெண் பிரிவில் 14ம் கேள்வி, மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தில் தவறான பதில் இருப்பதே, இதற்கு காரணம்.

இரண்டு மதிப்பெண் பிரிவில் 29ம் கேள்வியில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை என தமிழில் கேட்கப்பட்டுள்ளது; ஆனால், ஆங்கிலத்தில், "பயோ பியூல்" என கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் அர்த்தங்கள் வேறு; தமிழில், "உயிரி எரிபொருள்" என கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதனால், தமிழ் வழி மாணவர்கள் பொதுவான பதிலை எழுதியுள்ளனர். 

இரு கேள்விகளில் உள்ள குழப்பங்களால், சென்டம் குறைய வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை, இதற்கான மதிப்பெண்களை வழங்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

அறிவியல் தேர்வு எளிது: மகிழ்ச்சியில் மாணவர்கள்:
"பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததால், சராசரி மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற முடியும்" என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
"கணிதம் தேர்வில், "கிரியேட்டிவ்" வினாக்களால் 100க்கு100 போச்சே..." என கவலையடைந்த மாணவர்களுக்கு, அறிவியல் தேர்வு, மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர் கூறியதாவது:

ஏ.சதீஷ்குமார், மாணவர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: எதிர்பார்த்தை விட வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. பாடங்களின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் அதிகம் இடம் பெற்றன. குறிப்பாக, ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டவை. ஐந்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும், விடை தெரிந்தவையாக இருந்தன. &'சென்டம்&' எளிதில் பெறலாம்.

மு.முத்துலட்சுமி, மாணவி, அரசு உயர்நிலை பள்ளி, பாரைப்பத்தி, மதுரை: இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன். பின், எழுதியவற்றை பொறுமையாக திருப்பி பார்க்க நேரம் இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில், 30 வினாக்களில் 20ஐ எழுத வேண்டும். ஆனால், 30 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன.

செ.மஞ்சுளா, ஆசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, திருப்பாலை, மதுரை: மூன்றாவது திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் வந்திருந்தன. மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று, இரண்டு, மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், கடந்த பொதுத் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்டவை. வேதியியல், இயற்பியலில் கணக்கு பயன்படுத்தி எழுதும் வினாக்கள், மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்றவையாக இருந்தன.

நோய்த் தடுப்புகள், புகை மண்டலம், நவீன அணுக் கொள்கை, விண்வெளி நிலையத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பகுதிகளில், அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே வந்துள்ளன. சராசரி மாணவர்கள், 70 மதிப்பெண் வரையும், ஓரளவு நன்றாக படிப்பவர்கள்கூட எளிதில் &'சென்டம்&' எடுக்கவும் வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment