test

R P

Tuesday, 4 March 2014

பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் : ஆசிரியர் ஸ்டிரைக் முடிவுக்கு அரசு உத்தரவு



தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று, அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்; தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; தொடக்கக் கல்வியில், தமிழ் வழி பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடுதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச் 6ல், மாநிலம் தழுவிய, வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. ஆனால், மார்ச் 6ம் தேதி, பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. அன்று, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்றுனர்கள், ஆசிரியர்களாக நியமிக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

0 comments:

Post a Comment