test

R P

Tuesday, 21 January 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) வழக்குகள் NEWS UPDATE 21.01.2014

          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள (TNTET 2013) வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடந்துள்ளனர் .

             அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளதால், அவர்களின் ரிட் மனுக்களை வாபஸ் பெறவிரும்புவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே அவர்களின் வழக்குகள் மட்டும் இன்று (21.01.14 ) விசாரணைக்கு வந்தன.அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதல் எஞ்சிய TET வழக்குகள் நாளை பட்டியலிடப்பட்டாலும் விசாரணை நடைபெறுவது கேள்விக்குறியே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment