test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 December 2013

TNOU - B.Ed & B.Ed(SE) December 2013 Result published

TNOU - B.Ed & B.Ed(SE) December 2013 Result published


TNPSC - Departmental Test Bulletin form 2011 to 2013


Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2013(contains results of Departmental Examinations, December 2012)View
Bulletin No. 6 dated 7th March 2013 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2012)View
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View

2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு


ஜனவரி

04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது

05: "பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்" என, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு.

06: "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது" என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை தெரிவிப்பு.

07: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் நடு சாலையில் அரிவாளால் ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இந்த பயங்கர காட்சியை பார்த்த, பயணிகள் அலறியடித்தபடி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

09: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டார். இவர், பல்கலையின் 43 வது துணைவேந்தர் ஆவார்.

10: இயற்கை சாயம் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியை செய்து வரும் அண்ணா பல்கலை எம்.டெக். மாணவியர் 3 பேர் இயற்கை சாயம் கண்டுபிடிப்பு.

14: இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளி விவரம் வெளியீடு.

பேச்சுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆட்டிசம் பயிற்சி அளிப்பதற்கான கருவியை சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் என்பவர் உருவாக்கி உள்ளார்.

18: அமெரிக்காவைச் சேர்ந்த "மைக்ரோசாப்ட்" நிறுவனம் உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில் தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று சாதனை.

19: தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட நாடு முழுவதும் 22 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுக்கு தேர்வு.

23: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில் தமிழகத்தை சேர்ந்த பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி.

24: முகப்பேரில் உள்ள தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, தி.நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மையம், செங்கல்பட்டு கீரப்பாக்கம் ஆசான் பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம் ஜே.கே.கே., பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை.

25: திண்டுக்கல்லில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்தது குறித்து ஜனவரி 3ம் தேதி தினமலர் நாளிதழில் படம் வெளியானது. இதை, மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்தது. இவ்வழக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஜெயச்சந்திரன் எஸ்.பி., பதில் மனு.

பிப்ரவரி

03: குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கான பணிக்கு தலித் பெண் நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் மாணவர்கள், மதிய உணவை சாப்பிட மறுப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

07: அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை 65லிருந்து 70 ஆக உயர்த்தும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல்.

15: சீனாவில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க அந்நாட்டு அரசு தடை.

20: "கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது பள்ளிகளுக்கு ஆகும் செலவை,கல்விக் கட்டண நிர்ணயக் குழு கருத்தில் கொள்ள வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவு.

21: நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்தது.

28: "தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில் "ஏ.பி.சி.டி" என, நான்கு வகையான கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும்" என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு.

புதுடில்லி: நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்‌கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

மார்ச்

06:  லண்டனில் நடைபெற்ற இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை.

07: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியீடு.

08: மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் உத்தரவு.

09: மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை போராசிரியர் வி.பிரபாகரனுக்கு டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில் அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டது.

11: "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சம உரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

15: சென்னை மத்திய சிறையில் உள்ள சமுதாய கல்லூரிகள் மூலம் கல்வி கற்ற சிறை கைதிகள் 175 பேர் பட்டய படிப்பில் தேர்ச்சி.

17: "பீட்சா, பர்கர் போன்ற "பாஸ்ட் புட்" உணவுகளை பள்ளி கேன்டீன்களில் இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்" என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை.

18: இலங்கை விவகாரத்தில் கலை, அறிவியல், சட்டம் மற்றும் வேளாண் மாணவர்களோடு பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு.

20: பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் "பிட்" அடித்த 1,600 மாணவர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு "பிட்" அடிப்பதற்கு உதவியதாக மாணவர்களின் பெற்றோர் 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.

30: "தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன் இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா அறிவிப்பு.

ஏப்ரல்

01: டில்லியைச் சேர்ந்த மாணவி 23 வயதிலேயே சி.ஏ., - சி.எஸ்., - சி.டபிள்யூ.ஏ., என கணக்கியல் தொடர்பான மூன்று பட்டங்களில் தேர்ச்சி பெற்று சாதனை.

02: காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமிக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

04: "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.

07: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக துணைவேந்தர் ராமநாதனை "இடை நீக்கம்" செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு.

போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியது.

18: தமிழகத்தில் புதியதாக ஆயிரத்து 591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி.

திருப்புத்தூர்: குழந்தைகளை நல்வழிப்படுத்த, நீதிக் கதைகள் கூறும் தன்னார்வ கதை சொல்லி அமைப்புகளை கிராம நூலகங்களில், ஏற்படுத்த, தமிழக பொது நூலகத்துறை முயற்சி.

24: "காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக் கழகம், சென்னை அருகே அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பு.

25: "கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கிற காரணத்துக்காக ஒரு வீட்டுக்கு "கமர்ஷியல்" மின் கட்டணம் வசூலிக்கக்கூடாது" என்று மின் வாரிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

29: சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் சிவக்குமார், 12, என்ற மாணவர் "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றார்.

30: கட்டுரைப்போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாணவி, "பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று அறிவித்ததால்" பொதுத்தேர்வை எழுதாமல் ஜனாதிபதியிடம் பரிசு பெற சென்றார்.

மே

06: பசுவின் கோமியத்தில் இருந்து மின் உற்பத்தி செய்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் சரவணக்குமார் சாதனை.

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருந்து அறிவியல் பல்கலையில் ரூ.6.48 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.

11: "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

"ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது; தாய் மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் சட்டசபையில் வலியுறுத்தினார்.

22: அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் 20 - 30 வினாடிகளில் மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்தார்.

23: மத்திய பிரதேசத்தில் கண் பார்வையற்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

24: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் எம்.ராஜாராம் நியமிக்கப்பட்டார்.

29: "தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வரும் கல்வியாண்டில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்" என்ற அரசு உத்தரவை வாபஸ் பெறும்படி உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.

ஜீன்

05: "எம்.ஏ. பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப் படிப்பு, எம்.ஏ., வரலாறு பட்ட படிப்புக்கு இணையானது அல்ல என்ற அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார்.

08: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்த பாடப் புத்தகத்தில் கேரளாவின் குறிப்பிட்ட சமுதாயங்கள் மற்றும் அந்த சமுதாயங்களின் தலைவர்கள் குறித்து இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்ட்டது.

ஜீலை

10: விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் ராஜராஜசோழன், விஷ்ணுராம், வித்யாதரன் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடித்தனர்.

17:  பீகாரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 16 பேர்  இறந்தனர்.

18: சமூக வலைதளங்களில் ஒன்றான "பேஸ்புக்"கில் 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு.

22: "கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவு.

28: "இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை" என மின்னஞ்சலை கண்டுபிடித்த விருதுநகர் முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார்.

ஆகஸ்ட்

02: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

08: "தமிழகத்தில் இயற்கை விவசாயத்துக்கு எதிராக விவசாயக் கல்வி கற்பிக்கப்படுகிறது" என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கவலை தெரிவித்தார்.

14: "மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யும்" என, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்தியாவில் "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.

22: தெலுங்கானா உருவாக்க வேண்டுமென கோரி நடந்த போராட்டத்தால் இன்ஜினியரிங் உட்பட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. சொந்த மாநிலத்தில் படித்தால் உருப்பட முடியாது என நினைத்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள தொழிற்கல்லூரிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

23: பிற மொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன.

26: "குடி தண்ணீர் பாட்டில் விலையே 10 ரூபாயாக உள்ள போது பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல" என பார்லிமென்ட் குழு விமர்சித்தது.

27: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக 24 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியது.

மருத்துவ மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த இரட்டை மதிப்பீட்டு முறையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

செப்டம்பர்

06: "சீனாவின் அலுவலக ‌மொழியான மாண்டரின் மொழியை சுமார் 30 சதவீத மக்கள் பேசுவதி்ல்லை" என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் ‌தெரிவித்தது.

08: "அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்" என்று கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவித்தார்.

11: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில் அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

16:  மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால் "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு.

20: வேலூர், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறையை உடைத்து, முக்கிய ஆவணங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

அக்டோபர்

01: "டாக்டர்களின் சான்றிதழ்களை நோயாளிகள் சரிபார்க்கும் நேரம் வரலாம்; எனவே, மருத்துவ கல்லூரிகளை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவு.

03: "சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., சித்தா பட்ட மேற்படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்களும் சேரலாம்" என அறிவிப்பு.

09: : தமிழக மீன் வள பல்கலையும், அமெரிக்காவின் ஆபர்ன் பல்கலையும் தூத்துக்குடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.

10: மானாமதுரையில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களின் பெற்றோர் அபராதம் கட்டினர். தண்டனையாக மாணவர்கள் ஐந்து பேர், 10 திருக்குறளை 10 முறை எழுதினர்.

11: தூத்துக்குடி அருகே வல்லநாட்டில், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மூன்று பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

26: பெண்களுக்கான மிகப் பெரிய பல்கலைக்கழகம், சவுதி அரேபியாவில் கட்டப்பட்டுள்ளது. ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகங்களிலும் சி.சி.டி.வி.,க்களை பொருத்தி கண்காணிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்தது.

30: தமிழகத்தில் இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

31: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நவம்பர்

05: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2:38 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

06: மிக அதிகளவிலான கல்லூரிகளை தன்னுடன் இணைத்ததன் மூலமாக புனே பல்கலைக்கழகம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய பல்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மும்பை பல்கலையை, புனே பல்கலை முந்தியுள்ளது.

10:நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம் பெற்றது.

11: இந்தியாவில் அதிக பிஎச்.டி., மாணவர்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தது.

12: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் "ராகிங்" புகார் கொடுத்த மாணவி மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

13: தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார் இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

16: அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்திய கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

26: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவின் மேற்பகுதியானது தென்னிந்தியா மற்றும் ஆப்ரிக்காவின் மொசாம்பிக் நாட்டைப் போன்று உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

27: "சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் அறிவிப்பு.

29: "தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது" என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தியது.

30: "நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பிலாமல் உள்ளனர்" என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என அரசு உத்தரவிட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

New Year Greetings 2014 from the Hon'ble Chief Minister Click Here...

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்:  பேரவையில் 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

click here to download DEE proceeding of 43RD INTERNATIONAL LETTER WRITING COMPETITION - PARTICIPATION OF STUDENTS REG

Monday, 23 December 2013

பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கருக்கான வினா வங்கி தற்போது பள்ளிக் கல்வித் துறையால் CD வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கருக்கான வினா வங்கி தற்போது பள்ளிக் கல்வித் துறையால் CD வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்ப்பு - அரையாண்டு தேர்வுக்கு பயன்பாடு..

தமிழகத்தில் வரும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படம், பார் கோடு அச்சிடப்பட்ட 38 பக்கங்கள் அடங்கிய விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இதனால், டம்மி எண் போடும் பணியும் அதற்கான நேரமும் தவிர்க்கப்படும். மேலும், பேப்பர் சேஸிங் உள்ளிட்ட குளறுபடிகளையும் தடுக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் இம்மாதிரியான விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இந்த புதுத் திட்டத்தின்படியே வரவுள்ள பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதனால் பழைய தேர்வு முறைக்காக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் பயன்படுத்தப்படாமலே வீணாகும் நிலை ஏற்பட்டது. அவற்றை என்ன செய்வது என்று கல்வித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாட தேர்வுகளுக்கும் இந்த விடைத்தாள்களை விநியோகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி எழுதும் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Examination Result and Provisional List for Certificate Verification

click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Examination Result and Provisional List for Certificate Verification

அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!


இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்குபிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு. 9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது. இதில் ஐரோப்பிய யூனியன், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் நிதி உதவியும் அடங்கும். அந்த வகையில் பிரிட்டிஷ் அரசு மட்டும் ரூ 2370 கோடி வரை நிதி உதவி செய்து வந்தது, ஆண்டுதோறும், இந்தப் பணத்தைக் கையாளுவதில் பெரும்முறைகேடு நடந்திருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன. கல்வித் திட்டத்துக்கே சம்பந்தமில்லாமல் ரூ 80 கோடி வரை அதிகாரிகள் வெட்டியாக செலவழித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்க,அதிர்ச்சியடைந்தது பிரிட்டிஷ் அரசு. இதுகுறித்து, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது பிரிட்டன். முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் அனுப்பியது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம். இந்த நிலையில், இந்தியாவுக்கு இனி எங்களது இந்த உதவி தேவையில்லை என டேவிட் கேமரூன் அரசு அறிவித்து, நிதியுதவியை முற்றாக நிறுத்தியுள்ளது.

சர்வ சிக்ஷா அப்யான் திட்டத்துக்கு போதிய நிதி ஆதாரம் இந்தியாவிடமே இருப்பதாகவும், பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள அந்நாடு இனி தானாகவே இதனைச் சமாளித்துக் கொள்ளும் என்பதாலும் இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் சர்வதேச மேம்பாட்டுத் துறைச் செயலர் (UK Department for International Development) ஆன்ட்ரூ மிச்சேல் கூறியுள்ளார்.

TRB PG CUT OF MARKS

TRB PG CUT OF MARKS
Cutof marks

GT. 106

GTw- 106

BC. 103

BCW- 103

sc. 101

Sc - 103

MBC- 102

MMCw-102

ST. - 89

STw- 89

BCM.- 95

BCMW- 95

SCA - 94

SCAW- 94

TOTAL CALLED FOR CV 694

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு


முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்காக ஜூலை 21இல் டி.ஆர்.பி.ஆல் தேர்வு நடத்தப்பட்டது.  இந்தத்தேர்விற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 748.

தமிழ் தவிர இதர பாடங்களுக்கான முடிவுகள் 07 அக்டோபர் 2013 அன்று வெளியானது. இன்று (23.12.2013)தமிழ் பாடத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி.இன் http://trb.tn.nic.in இணையதளத்தில் காணலாம்.

மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்படாது எனவும், இணையதளத்தில் உள்ள தகவல்களை பார்த்து, அதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம், என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள்

சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் மையங்களில் நடைபெறும்.

 Click here for Certificate Verification Centre List (Tamil Subject)

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)


CLICK HERE FOR PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22-7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell -Admission of pay bills for the month of December, 2013 - Instructions Click Here...


W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (PC)department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell - Instructions issued – Regarding Order Click Here...

பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனை.


கோர்ட்டுக்கு தவறா தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக,பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில்,

தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட்டில் வழக்கு:

டில்லி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவர், பாரா காடூன். இவரது, கணவர் பெயர் ராகேஷ், கடந்த மாதம், 27ம் தேதி, டில்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.அதில், அவர் கூறியிருந்ததாவது:நானும்,என் மனைவியும் காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், இந்த திருமணத்தை, பாராவின் குடும்பத்தார் அங்கீகரிக்கவில்லை. என் மனைவியை பிரித்து, அவரது தந்தை, வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவரை மீட்க வேண்டும்.இவ்வாறு மனுவில்கூறியிருந்தார்.இதையடுத்து, பாராவை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாரா கோர்ட்டில் ஆஜராகி, அளித்த வாக்குமூலத்தில், 'எனக்கும், ராகேஷுக்கும் திருமணம் நடைபெறவில்லை.

ராகேஷ் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை' என, கூறினார்.இதுகுறித்து விசாரணை நடத்த, டில்லி போலீசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர். இந்நிலையில், பாரா திடீரென கோர்ட்டில் ஆஜராகி, கூறியதாவது: தவறான வாக்குமூலம் அளித்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தெரியாமல், திருமணம் குறித்த தகவலை ராகேஷ் வெளியிட்டதால், சமூகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால்,திருமணத்தை மறுத்து வாக்குமூலம் அளித்தேன். கோர்ட் நடவடிக்கைகள், குறித்து எனக்கு போதிய அறிவு இல்லை,இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.நீதிபதிகள் நிராகரிப்பு:பாராவின் விளக்கத்தை, நீதிபதிகள், கைலாஷ் கம்பீர், இந்தர்மீத் கவுர் ஆகியோர்அடங்கிய, 'பெஞ்ச்' நிராகரித்தது. இது தொடர்பாக, அவர்கள் பிறப்பித்த உத்தரவில்கூறியதாவது:கோர்ட்டை பாரா அவமதித்து உள்ளார். ஒரு பள்ளி ஆசிரியைக்கு கோர்ட் குறித்து,தெரியாது என்று கூறுவதை நம்ப முடியவில்லை; இதை ஏற்க முடியாது.அவரது நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாகவும், கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது. தன்தவறை நியாயப்படுத்துவது போல பேசியுள்ளார். கோர்ட்டை அவமதித்ததற்காக அவருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, அவர் காந்தி அறக்கட்டளையில், ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்.டில்லி, ராஜ்கோட்டில் உள்ள,காந்தி சமாதியில், தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு, மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்யவேண்டும்.இதை, அப்பகுதியில் உள்ள, போலீசார் கண்காணிக்க வேண்டும்.


இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தனர்.

எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம்


ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டத்தை செயல்படுத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வரும் மே மாதத்திற்குள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 56,573 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1.35 கோடி, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 89 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 46 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

தனியார் பள்ளி மாணவர், ஆங்கிலவழியிலான பாடங்களை எழுதுதல், வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில், ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மொழிப்பாடங்களை, குறிப்பாக, தமிழ் பாடத்தை படிப்பதிலும், எழுதுவதிலும், தடுமாறும் நிலை உள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும், ஏராளமான மாணவர்கள் தடுமாறுவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரிந்துகொள்ளும் ஆற்றலும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடிப்படையில் தமிழ், ஆங்கிலவழி (மீடியம்) புத்தகங்களையும் சரளமாக வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் திணறும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த வரும் கல்வி ஆண்டில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் தலைமையிலான, ஒன்பது பேர் கொண்ட குழு, புதிய திட்டத்தை செயல்படுத்த, 62 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.

வகுப்பு வாரியாக திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குள் சரளமாக எழுதவும், படிக்கவும் கூடிய திறனை ஏற்படுத்த தலைமை ஆசிரியர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக, தலைமை ஆசிரியர்களுக்கு, இதற்கான பயிற்சி அளிக்கப்படும். மே மாதத்திற்குள், இந்த பயிற்சியை அளிக்க, இயக்குனர், கண்ணப்பன் திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், "விரைவில், இதற்கான ஆய்வு குறித்து, டிசம்பரில் ஆய்வு செய்வோம். இந்த பயிற்சியில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்" என தெரிவித்தார்.

2014 Public holidays & Restricted Holidays in single sheet

2014 Public holidays & Restricted Holidays in single sheet

Sunday, 22 December 2013

வாக்காளராக சேர மீண்டும் வாய்ப்பு: ஜன.,7 முதல் விண்ணப்பிக்கலாம்


லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 2014 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியோர், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிக்காக, அக்.,1 முதல் 31 வரை மனுக்கள் பெறப்பட்டன. ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதை சரிபார்க்கும் பணி நடக்கிறது. அடுத்தாண்டு, ஜன.,6ல், திருத்தப்பட்ட வாக்காளர் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, விண்ணப்பிக்க தவறியோர் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், அந்தந்த தாலுகா அலுவலகங்களில், வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.
அது சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இருபட்டியல்களும் தொகுக்கப்பட்டு, லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன. ""இப்பணிகளை விரைந்து முடிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு


2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்,உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில்,எதிலிருந்து, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்,காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது

. இதனால்,நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு, பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு, வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும், புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும், என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை


ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது.

இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய )  புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.

 இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: 
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.

கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது. 
ஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை.
.
ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால் தேர்வர்களும், முடிந்த வரை போராடுகின்றனர். ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி இன்று வரை முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ் பாடத்தின் தேர்வு முடிவை வெளியிட கோர்ட் தடை விதித்தது. 
இந்த வழக்கில் கடந்த வாரம், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட கோர்ட் உத்தரவிட்ட நிலையில், புதிதாக இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது. 
இதற்கிடையே ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தோல்வி அடைந்தனர். "சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: 
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள் நடந்து விடுகின்றன. தவறான விடை, கேள்வி என தெரிந்தால், அதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும் "உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர் கூறுகின்றனர்.
எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு 2,000 ரூபாய் என ஐந்து பேர் சேர்ந்து, ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும், பலரும் வழக்கு தொடர்ந்ததால் வழக்குகளின் எண்ணிக்கை, மலை போல் குவிந்துள்ளது. 
"அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராத அளவிற்கு, தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Saturday, 21 December 2013

பிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்? - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி

பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. பிளஸ்-2 முடித்த பின்னர் எந்தெந்த படிப்புகளில் சேர வேண்டும்? அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், என்னென்ன நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்? என்பது குறித்து அவர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். இதற்காக கீழ்நிலை வகுப்புகளில் இருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கல்வி நிபுணர்கள், துறை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கருத்தரங்கு, பயிலரங்கம் நடத்தப்படுகின்றது.

வேலை வாய்ப்பு தகவல்கள்

அதுமட்டுமின்றி முக்கிய படிப்புகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள் தொடர்பான தகவல்கள் நாளிதழ்களில் வெளியாகும்போது அதை பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கின்றனர். இதனால் கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை மாணவர்கள் எளிதாக தெரிந்துகொள்வர்.

பல பிரபல தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கே ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு குறித்த விவரம் தெரிந்துவிடுகிறது. எனவே, அவர்கள் அப்போதிருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு மனதளவில் தயாராகத் தொடங்கிவிடுன்றனர். பிளஸ்-2 படிக்கும்போது முழு விவரங்களும் அறிந்தவர்களாக இருப்பதால் எளிதாக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பயிற்சி

இந்நிலையில், தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த வழிகாட்டிப் பணியை 9-ம் வகுப்பில் இருந்தே தொடங்க முடிவு செய்திருக்கிறோம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடித்த பிறகு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம்? உடனடி வேலைவாய்ப்புடன் கூடிய படிப்புகள் எவை? மாணவர் சேர்க்கை நடைமுறைகள், எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், அதற்கு தயாராகும் முறை குறித்து கல்வியாளர்களையும் நிபுணர்களையும் அழைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு

நன்றாக படிக்கும் பிளஸ்-2 மாணவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறும் அதுதொடர்பான தகவல்களை ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் வைக்குமாறும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

5 - ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?


அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.

மேலும், பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி, கல்வி உதவித்தொகை என எவ்வளவோ சலுகைகளை வழங்கியபோதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் என்னதான் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சிகள் வழங்கிக் கற்பித்தபோதிலும் பெற்றோர்கள் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. அண்மைக்காலமாக, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதே இதற்குச் சான்றாகும்.

பணம் கட்டிப் படித்தாலும் ஆங்கிலக் கல்வியே தேவை என்ற மாயை உருவாகிவிட்டதால், நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்கூட மெட்ரிக் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழக மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வந்த திராவிடக் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை நிறுத்தினார்களேயொழிய, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.

இன்றைக்கு எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இந்தி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு பெற்றோரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக, இந்தி கற்பிக்காத தனியார் பள்ளிகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை.

தாய்மொழிக் கல்வி - தமிழ் வழிக்கல்வி என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சியினர் தங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஆங்கில வழிக்கல்வி வழங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர்.

மத்திய அரசு எல்லா மாநிலங்களிலும் நவோதயா வித்யாலயா என்னும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆரம்பித்தது. ஆனால், தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி அரசுகள் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன. அப்பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதுதான் அப்பள்ளிகளைத் தொடங்க அனுமதி மறுப்பதற்குக் காரணம்.

எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம்தான், ஒரே பாடம்தான் என்ற உண்மை தெரியாத பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் கேட்கும் தொகையைக் கடன்பட்டாவது செலுத்துகின்றனர். இதன் விளைவாக, 200 மாணவர்கள் படித்த அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 20 மாணவர்கள்கூட இல்லை.

முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்குப் போதுமான நேரம் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 20 நாள்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு வழங்கும் நிதியை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று இப்படித் தேவையில்லாத பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரம் குறைந்துவிட்டது.

இன்றைக்குப் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் உள்ளன. இந்நிலையில் மாதத்துக்கு 2, 3 முறை தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது இல்லாமல் மாதத்துக்கு இரண்டு முறையாவது ஏதாவது விவரம் கேட்டுத் தலைமை ஆசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகின்றனர்.

இதனால் இரண்டு ஆசிரியர்கள் வேலைசெய்யும் பள்ளிகளில் ஓர் ஆசிரியர்தான் 5 வகுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அவரால் அத்தனை வகுப்புகளையும் பார்க்கத்தான் முடிகிறதே தவிர, எந்த வகுப்புக்கும் பாடம் நடத்த முடிவதில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் அரசியல் புகுந்துவிட்டது. ஒரு கட்சி கொண்டுவரும் பாடத்திட்டத்தை மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மாற்றி அமைக்கிறது.

இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சூழ்நிலைதான் நிலவும். இந்நிலை தொடர்ந்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.

இந்நிலையைப் போக்க தமிழ் மொழிப்பாடத்தைத் தவிர்த்து, மற்ற ஏனைய பாடங்களை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையே தமிழக அரசும் ஏற்று நடத்தலாம்.

ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் பாடப் புத்தகங்களையே வழங்கிவிடலாம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கலாம். இதன் மூலம் கல்வியில் அரசியல் புகுவதைத் தவிர்க்க முடியும். அத்துடன் கல்வியும் தரமானதாக இருக்கும்.

எல்லா அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழி வகுப்புகளுடன் ஆங்கிலவழி வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலவழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இப்பொழுது அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல் என்பதைப் பெற்றோர்கள் உணரும்படியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பார்கள்.

எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமில்லாத ஒரு விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம். இந்தி விரும்பாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கவும் செய்யலாம்.

இதனால் இந்தி கற்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வாய்ப்பாக அமையும்.

அரசுப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியான குழந்தைகள்தான் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், எந்த ஒரு குழந்தையின் பெற்றோரும் தங்கள் குழந்தையை 5 வயது பூர்த்தியாகும் வரை வீட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை. அதனால்தான் 3 வயதிலேயே தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விடுகின்றனர்.

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவதில்லை. தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர்.

தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்த எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இவ்வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுவதுபோல அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே நடைபெற்றுவரும் அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளிகளுடன் இணைத்து நர்சரி வகுப்புகளை நடத்தலாம்.

இதன்மூலம் நர்சரி வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அப்படியே தொடக்கப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வாய்ப்பாக அமையும். முதல் வகுப்பில் சேர்ந்துவிட்ட குழந்தை வேறு எந்தத் தனியார் பள்ளிக்கும் செல்லாது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.

கற்பித்தல் பணி அல்லாத மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் சேர்ப்பு, குடும்ப அட்டை சரிபார்ப்பு போன்ற பல வேலைகளுக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல, பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு அவர்கள் வயதுக்குப் புரியாத விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருள் ஒழிப்புப் பேரணி, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, ரத்ததான விழிப்புணர்வுப் பேரணி போன்ற பேரணிகள் நடத்தக் குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்கள் கல்வி பயிலும் நேரத்தைக் குறைக்கக்கூடாது.

வகுப்பறைக்குள் மாணவர்கள் பாடப்புத்தகம் எடுத்து வரக்கூடாது என்றும், பல வகுப்பு மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்துக் கற்பிக்க வேண்டும் என்றும், அச்சிடப்பட்ட அட்டைகளைக் கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.

இதுபோன்ற தேவையற்ற கெடுபிடிகளாலும், கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் இழக்கின்றனர். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையிலும், மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் வகையிலும் ஆசிரியர்கள் கற்பிக்குமாறு அறிவுறுத்தினால் மட்டும் போதுமானது. அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.

இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகிவிடும்.

ANNAMALAI UNIVERSITY DECEMBER 2013 EXAM HALL TICKET

ANNAMALAI UNIVERSITY DECEMBER 2013 EXAM HALL TICKET


click here to download - ANNAMALAI UNIVERSITY DECEMBER 2013 EXAM HALL TICKET

2013-14 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாவட்டத்திற்கு நான்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் (Collaborative learnig through conecting classroom across Tamilnadu) செயல்படுத்துதல் மற்றும் பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் சார்ந்து

click here to download the dee proceeding of Collaborative learnig through conecting classroom across Tamilnadu

அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - முதன்மை செயலர் சபிதா


அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல், இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்ட காலம், 2010ல், முடிந்தது; தொடர்ந்து, மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை இத்திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் இணைக்க, ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க முக்கிய பணியான, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வின் மூலம் மீண்டும் பள்ளிகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கான நிதியை, மத்திய அரசு நிறுத்தியதே காரணம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைப்பு,, இத்திட்டத்தை நிறுத்துவதற்கான, மறைமுக நடவடிக்கை என்று கூறப்பட்டது. திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, ""அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும், மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது,'' என்றார்.

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி


உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டுகின்ற தலைசிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.
சென்னை லயோலா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வணிகவியல் மற்றும் பொருளாதாரப் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெற்றது. இந்த புதிய கல்வி மையத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியது:
உயர் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் இப்போது 659 பல்கலைக்கழகங்கள், 33,000 கல்லூரிகள், ஐஐடி, என்ஐடி உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் என வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.86 கோடி பேர் உயர் கல்வியில் சேருகின்றனர்.
இப்படிப்பட்ட மிகப் பெரிய வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளபோதும், உலக அளவில் தலைசிறந்த 200 உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஒரு இந்தியப் பல்கலைக்கழகம்கூட இடம்பெறாதது மிகப் பெரிய வருத்தமளிக்கிறது.
12-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்போது இந்தியாதான் உயர் கல்வியில் தலைசிறந்த நாடாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் உயர் கல்வியில் பல மடங்கு முன்னேறியுள்ளன.
இதற்கு, உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை, இந்தியாவில் 18 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
அதே நேரம், இது ஜெர்மனியில் 21 சதவீதமாகவும், அமெரிக்காவில் 34 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையை மாற்ற நாம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் திறன், பேச்சுத் திறன், புதுமையாக சிந்திக்கும் திறன் உடையவர்களாக மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு கற்றுத் தருபவர்களும் தலை சிறந்த ஆர்வத்தை தூண்டுகின்ற ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ஆனால், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுபோல் அறிவுசார் சொத்துக்கு காப்புரிமை பெறும் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போதும் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 42,000 காப்புரிமைகளுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்தவும் கல்வி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார் அவர். தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கடலூர் - கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


            கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

        கடலூர் வட்டத்துக்குள்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

              உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி தொடக்க கல்வி அலுவலர் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரிய பயிற்றுநர்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். பின்தங்கிய மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

           இதற்காக ஜனவரி மாதத்துக்குள் கல்வி உபகரணங்களை தயாரித்து அவர்களின் கல்வித் திறனை முழுமையாகப் மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கடலூர் வட்டத்துக்குள்பட்ட 280 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அரசு தேர்வுகள் இயக்ககம் - SSLC பொதுத்தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (NOMINAL ROLL) இணையதளத்தில் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய உத்தரவு

click here to download SSLC - 2014 - Nominal Roll Upload powerpoint instructions

TNPSC - Departmental Examinations, December, 2013 Memorandum of Admission (Hall Ticket)

TNPSC - Departmental Examinations, December, 2013 Memorandum of Admission (Hall Ticket)


TNPSC - DEPTL EXAM DEC 2013 HALL TICKET CLICK HERE...Thursday, 19 December 2013

Professional Tax 2013-2014

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.   எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.  இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  

இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்கப்படும்.   இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் ஊதிய திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை வழங்க வேண்டும். இந்த பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். அதேசமயம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாயாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.  பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளியில் ஆசிரியர்களது சம்பளப்பட்டியல் தயாரிக்க அருமையான எக்ஸெல் பைல்...

click here to download the pay bill excel sheet 

ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு


பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்கம், தமிழ்நாடு பிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் சாரண - சாரணியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் மற்றும் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு நடந்தது. பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி வெளியிட்ட முடிவுகளின் படி 21 மாணவிகள், 89 மாணவர்கள் உட்பட 110 பேர் தேர்வு பெற்றனர்.

பரமக்குடி அரசு பெண்கள் பள்ளியில் 4 பேர், ஆயிர வைசிய 10, கீழ முஸ்லிம் 7, சவுராஷ்ட்ர 8, அலங்கார மாதா 11, லயன்ஸ் மெட்ரிக் 13, டான்பாஸ்கோ, நீராவி தேவாங்கர், திரு இருதய பள்ளி, கமுதி கே.என். ஆண்கள், பெண்கள் பள்ளியில் தலா 5 பேர், பரமக்குடி வ.உ.சி., 2, ஏ.வி., மெட்ரிக் 1, முதுகுளத்தூர் பள்ளி வாசல் 2, பிடாரிசேரி அரசு பள்ளி 9, பெருமாள் கோவில் அரசு பள்ளி 4, பார்த்திபனூர் கிரசண்ட் 7, தூய மரியன்னை பள்ளியில் 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - DEO மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப 2014ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு

DSE - DEO PANEL PREPARATION FOR 2014 CONCERN HMs DETAILS CALLED REG PROC CLICK HERE...

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு
பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறையின், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுக்கான, ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. காலாண்டு தேர்வு முடிந்து, அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, கல்வித்துறை சார்பில், தேர்வர்களின் ஆள்மாறட்டத்தை தடுக்க, தேர்வுக்கு முன்பாக, தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வு மைய அனுமதிச் சான்று, வருகைச் சான்று, ஃபோட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்றுகள் வழங்குவதற்கான பணிகளும் நடக்கிறது.

அதற்காக, தேர்வரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளியா, பெற்றோர் பெயர், மொபைல் ஃபோன் எண், படிப்பு குரூப், பாடங்கள் ஆகியவை உறுதிமொழி சான்று விபரங்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து, தேர்வுத்துறைக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது.

நடப்பாண்டுக்கான பாடத்திட்டங்கள் முடிவுற்ற நிலையில், வரும் நாட்களில், பள்ளிகள் அளவிலான வகுப்புத் தேர்வு நடக்கவுள்ளது. பெற்றோர்களும் பொதுத்தேர்வு எழுதவுள்ள தங்களது மாணவர்களை, தயார்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில், மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் நெருக்கடியால், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்களிடையே, தேர்வை சந்திப்பதற்கான தேர்வு பயமும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை களைய, ஆசிரியர்களுக்கு மனித வளப் பயிற்சியை வழங்குவதற்கான பணிகளை, கல்வித்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக மாணவர்களுக்காக, ஆசிரியர்களுக்கு, "கவுன்சலிங்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, "கவுன்சலிங்&' இன்று ராசிபுரம் அடுத்த பாவை இன்ஜினியரிங் கல்லூரியில், பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தி வரும், 1,200 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தஞ்சாவூரைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டு ஆலோசகர் ராமன் மூலமாக, பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவர். பொதுத்தேர்வை மாணவர்களை எவ்வித பயத்துடன் அணுகாமல் இருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஆசிரியருக்கு பயற்சி வழங்கப்படுகிறது.

மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி கட்டாயம் - இயக்குனர்


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென ,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள் இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

பள்ளிக்கல்வி - 2013ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்பக் கோருதல் மற்றும் தேர்வுக் குழு அமைத்து உத்தரவு

click here to download the DSE - 2013 NATIONAL BEST TEACHER AWARD - TO APPOINT SELECTION COMMITTEE & SUBMIT PROPOSAL & APPLICATION FORMAT REG

பள்ளிக்கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து முடிக்கப்படாத 10 மாவட்டங்கள் 23.12.2013 அன்று மாலை 4.00மணிக்குள் முடிக்கமாறு இயக்குநர் உத்தரவு


click here to download DSE - EMIS - 10 PENDING DISTRICTS COMPLETE WITHIN 23.12.2013 REG PROC

நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளை கல்வித்துறை உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் இணைந்து தேர்வறைக்குள் செல்லும் அதிகாரம் படைத்த பறக்கும்படை மற்றும் சூபர்வைசர்களை நியமிப்பர். தேர்வுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன், ரகசியமாக இந்த உத்தரவு அவர்களுக்கு வழங்கப்படும்.

பெரும்பாலான மாவட்டங்களில் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்கள் பறக்கும் படையில் வந்து விடுவதால், பள்ளி நிர்வாகங்கள் "குஷி"யாகி விடுகின்றன. முறைகேடு நடக்கும் வாய்ப்பு எளிதில் உருவாகி விடுகிறது. எனவே, சில மாற்றங்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுத்தேர்வு மையங்களை கண்காணிக்கக்கூடிய சூபர்வைசர், பறக்கும் படை அதிகாரிகள் விவரத்தை கல்வித்துறை இயக்குனரகம் அறிவிக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலையிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலைமை ஆசிரியர், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், கடந்தாண்டு பறக்கும் படையில் இருந்தவர்கள், கண்காணிப்பாளர்கள் குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும். பட்டியலை இறுதி செய்து, மாவட்டம், தேர்வு மையம் வாரியாக, ஒவ்வொருவர் பணியாற்றும் இடங்களை கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பார். அதன்படி மட்டுமே பணியாற்ற வேண்டும்; மாற்றங்கள் செய்யக்கூடாது.

உத்தரவு நகல் முதன்மை கல்வி அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும். அவர் பணிகளை மேலாண்மை செய்வார். கல்வித்துறை இயக்குனரகமே கண்காணிப்பாளர், சூபர்வைசரை நியமிப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்வறை மட்டுமின்றி, தேர்வுத்தாள் திருத்தும் மையங்களுக்கான ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரியையும், கல்வித்துறை இயக்குனரகமே நியமிக்க உள்ளது. இதனால், எந்த ஊரில், எந்த மையத்தில் நம்மை நியமிக்கப் போகிறார்களோ என்ற கலக்கத்தில் தலைமை ஆசிரியர்கள், கடந்தாண்டு தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர்கள் உள்ளனர்.

Wednesday, 18 December 2013

ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு

           சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. 

              இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது.இதுகுறித்து தபால் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும் சர்வதேச தபால் சங்கத்தின் (Puniversal Postal Union) சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

          வரும் ஜனவரி 5-ஆம் தேதி 43-ஆவது உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.முதற்கட்டமாக மாவட்ட அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கு மாம்பலம் ஜூப்பிளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி, மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்காக தங்கள் வளாகத்திலேயே போட்டியை நடத்த விரும்பினால், அந்தந்தப் பள்ளியிலேயே நடத்தலாம்.கடிதம் எழுதும் போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றார் அவர். 

           இசை எப்படி வாழ்க்கையைத் தொடுகிறது என்ற தலைப்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது, அசாமி, பஞ்சாபி, நேபாளி போன்ற மொழிகளில் ( 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்த மொழிகளிலும் எழுதலாம் ) எழுதலாம். காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும். 

           இது குறித்து மேலும் விவரங்களுக்கு "துணை இயக்குநர், தலைமை தபால் அலுவலகம், சென்னை - 600002' என்ற முகவரியிலும், "pmgccrtca@gmail.com' என்ற இணைய தளத்திலோ அல்லது 28520048, 28520430, 28551774 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தபால் துறை அறிவித்துள்ளது.

SSA seeks Training Topics for the year 2014-15 from Training Coordinators

SSA seeks Training Topics for the year 2014-15 from Training Coordinators


click here to download the SSA seeks Training Topics for  the year 2014-15

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டம் தேர்வு (NMMS) டிசம்பர் -2012 தேர்வு முடிவுகள் | NMMS Result Dec 2012

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டம் தேர்வு (NMMS) டிசம்பர் -2012 தேர்வு முடிவுகள் | NMMS Result Dec 2012

click here to download the NMMS DEC 2012 result

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி


அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறையில்

PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறையில்

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.