test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 30 November 2013

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு..


தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.

ஊதியத்தில் சிக்கல்: தமிழ் பண்டிட் என, அழைக்கப்பட்ட தமிழாசிரியர்களுக்கு தர ஊதியம், 4,400 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,600 ரூபாய் என, அரசு நிர்ணயம் செய்தது. தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், தமிழ் பண்டிட் என்பதால் தர ஊதியம், 4,600 ரூபாய் பெற்றவர்கள், தணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த, தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்களை வலியுறுத்தினர்.

தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை: தமிழாசிரியர்கள் அனைவரும், தமிழ் பண்டிட் என்பதை விடுத்து, பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட வேண்டும். பட்டதாரிஆசிரியர்கள் பெறும் தர ஊதியம் 4,600, தமிழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். தமிழாசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என அழைக்கப்படுவர், என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்

குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்..


         தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.

             வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு, செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. கடைசி தேதி முடிந்த பின், விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின், 6.65 லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன.

               நாளை காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை மாநிலம் முழுவதும் 2,269 மையங்களில் தேர்வு நடக்கிறது. அனைத்து மையங்களிலும், தேர்வுப் பணியை வீடியோ பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

          தேர்வுக்கான அனைத்துப் பணிகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 226 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள், முதுநிலை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து, தேர்வை கண்காணிப்பர்.

              பறக்கும் படையில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். 392, வாகன பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர், தேர்வு மையம் வாரியாகச் சென்று, தேர்வை கண்காணிப்பர். சென்னையில் மட்டும், 263 மையங்களில் நடக்கும் தேர்வில், 79,550 பேர் பங்கேற்கின்றனர். அப்ஜக்டிவ் முறையில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

            பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின், நடக்கும் முதல் குரூப்-2 தேர்வு இது தான். குரூப்-1 தேர்வுக்கு அடுத்து, மிகவும் முக்கிய தேர்வாக, குரூப்-2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.

              ஜெனரல் ஸ்டடிஸ் பகுதியில் 75 கேள்விகள்; திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி



முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.

எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


வழக்கின் அடுத்த கட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.


எனவே இந்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளை எனும் தனியார் அமைப்புடன் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்து, பின்தங்கியுள்ள 20 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்தாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளில் 36 முதுநிலை ஆசிரியர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் நியமிக்கப்படுகின்றனர். அதற்காக இக்கல்வி ஆண்டு முடியும்வரை மாதந்தோறும் ரூ.2.16 லட்சத்தை அறக்கட்டளை வழங்கும். மேலும், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 500 பேருக்கு சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர வகுப்புகள் நடத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் 3 மாணவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.2.32 லட்சம் செலவிடவும், ரூ.5.69 லட்சம் மதிப்பில் பயிற்சி கையேடுகளையும் வழங்கவும் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, 29 November 2013

மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை...

மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இந்த புதிய கூட்டு முயற்சி திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு -தனியார் கூட்டு முயற்சியில் நாடு முழுவதும் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பள்ளிகளின் உள்கட்ட மைப்புக்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் மானிய உதவி வழங்கும். அத்தோடு இந்த பள்ளிகளில் அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிவிடும். அரசு ஸ்பான்சர் மாணவர்கள் நீங்கலாக மற்ற பொது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே இன்றைய நிலைக்கேற்ப நிர்ணயித்து அந்த மாணவர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்.

இதுபோன்று தனியாருடன் கூட்டுசேர்ந்து மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவரும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தினால், தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 41 கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்கட்டமாக தொடங்கப்பட வேண்டிய பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.

மத்திய அரசு அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கிடையே, கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் தனியார் யாரும் முன்வரவில்லை.

மத்திய அரசுடன் கூட்டு முயற்சி என்பதால் நிர்வாகத்தில் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்பதால் தனியார் பள்ளி நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. “இத்தகைய சூழலில், மத்திய அரசு-தனியார் கூட்டு பள்ளிகள் தொடங்குவதற்கு அரசும் எதிர்ப்புதான் தெரிவிக்கும். எனினும் இதுகுறித்து மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை” என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர் தனது கணக்கை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றும் போது அவரது கணக்கு எண் மாறக் கூடாது-RBI.


வாடிக்கையாளர் தனது கணக்கை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றும் போது  அவரது கணக்கு எண் மாறக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி  உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  “வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் தனது  விருப்பப்படி கணக்கை, எத்தனை முறைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள அனுமதிக்க  வேண்டும். 

அவ்வாறு வாடிக்கையாளர்,அதே வங்கியின் வேறொரு கிளைக்கு தனது கணக்கை  மாற்றும் போது, பழைய வங்கி கணக்கு எண்ணையே பராமரிக்க வேண்டும். புதிதாக கணக்கு தொடங்குவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது” என்று  கூறப்பட்டுள்ளது.

IGNOU ENTRANCE EXAM RESUSLT 2013

இந்திரா காந்தி பல்கலைக்கழக B.Ed நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது  IGNOU ENTRANCE EXAM RESUSLT 2013

click here for  IGNOU ENTRANCE EXAM RESUSLT  2013

மாணவ / மாணவியருக்கு சதுரங்கம் பற்றிய ஆர்வத்தை வளர்க்க - குறும்படம் இணையதளத்தின் மூலம் வெளியிடுவது - மாணவர்கள் காணவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,


தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயின்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர். திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது. இதுகுறித்து, நாடெங்கிலும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைகளுக்கு, யு.ஜி.சி. அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன. இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு சமமானவை என யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

சில இடங்களில் இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ( 30.11.13 ) கனமழைக்கு வாய்ப்பு


தமிழகம் மற்றும் புதுவையில் சனிக்கிழமை (நவம்பர் 30) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் வளிமண்டத்தின் மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு

ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

click here to download the DEE proceeding - JOINT SITTING MEETING REPORT FOR TEACHERS TPF A/C AUDIT UNDER REG PROC

குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..


தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, 28 November 2013

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி..


ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். 

ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு, மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண், ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.

கடும் போட்டி : அதேபோல், பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த, 40 மதிப்பெண்களையும், முழுமையாக பெற வேண்டும் எனில், முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன், டி.இ.டி., தேர்வில், 90 சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே, வேலை உறுதி. மற்றவர்கள், கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். 

கடந்த தேர்வுகளில், காலி பணியிடங்களை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால், தற்போது, காலியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவும், தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை, அதிகமாகவும் இருப்பதால், இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

Wednesday, 27 November 2013

தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி.



          "சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.

          இதுகுறித்து, அவர் கூறியதாவது: "கணினி மேம்பாட்டுக்காக தொழில்நுட்ப பூங்காக்களும், செயல் உருவாக்க மையங்களையும், மத்திய அரசு துவங்கியுள்ளது. இவை பெரும்பாலும் தனியாகவோ, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலோ அமைக்கப்பட்டுள்ளன. கணினி மேம்பாட்டு ஆய்வுகளை இப்பகுதிகளுக்கு சென்று செய்து வருகின்றனர். இது போன்ற மையங்கள் தமிழகத்தில் சென்னை தரமணி, சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், திருப்பெருந்துறை கொங்கு பொறியில் கல்லூரி ஆகியவற்றில் உள்ளன.

          இந்நிறுவனங்களால் தமிழ் மென்பொருளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. தற்போது பெருகி வரும் தமிழ் மென்பொருளின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை துவக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தமிழ் இணைய கல்விக் கழகம் கோரிக்கை விடுத்தது.

              இக்கோரிக்கையை ஏற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை அமைக்க 45 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் அமைக்க தேவையான அடிப்படை வசதிகள் குறித்த பரிந்துரையை அளித்துள்ளது.

               இப்பரிந்துரையை ஏற்று தமிழ் இணைய கல்விக் கழகத்தின் தரைத் தளத்தில் தனி அறைகள், கலந்துரையாடல் கூடம், நூலகம், வரவேற்புக் கூடம் ஆகியவற்றை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மையத்தில் கணினிகள், மென்பொருள்கள் மற்றும் கருவிகள் இருக்கும். தமிழ் மென்பொருள்களை உருவாக்க விரும்புவோர், இம்மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

            மென்பொருள் உருவாக்கம் குறித்த திட்ட வரைவை தமிழ் இணைய கல்விக் கழகத்தில் அளித்தால் அவற்றை ஆய்வு செய்து தகுதியானவர்களை வல்லுனர் குழு தேர்வு செய்யும். புதிய தமிழ் மென்பொருளை உருவாக்க தேர்வு செய்யப்பட்டோருக்கு தனி அறைகள், கணினி மற்றும் கருவிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு திட்டத்தையும் முடிக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்களும், அதிகபட்சம் ஒரு ஆண்டும் அவகாசம் அளிக்கப்படும்.

               திட்ட செயலாக்க காலத்தில் மாதம் ஒன்றுக்கு மாணவர்களிடம் 1,000; தனி நபரிடம் 4,000; சிறு, குறுந் தொழில் முனைவோரிடம் 10 ஆயிரம் ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய மென்பொருள் பயனுள்ளதாக இருந்தால் அதன் அடிப்படையில் சேவை கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்." இவ்வாறு, நக்கீரன் கூறினார்.

அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு. விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கத்தயார்...


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவம் என்ற அடிப்படையில், தேர்வு நடத்தி, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது. தற்போது இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் நிலையில், வரும் டிச., 10 முதல் 23 வரை, பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு நடக்கிறது. தேர்வு விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 

Thursday, 21 November 2013

2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

CLICK HERE -DEE 30268/D3/2013- ELE DIR SEEKS 3% RESERVED TO DISABLED PERSONS DETAILS FOR SPECIAL SELECTION

PTA மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,TRB மூலம்ஆசிரியர்கள் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது 7 மாதங்கள் வரை இதில் எது முன்னரோ அதுவரை பணியாற்றலாம்

PTA மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,TRB மூலம்ஆசிரியர்கள் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது 7 மாதங்கள் வரை இதில் எது முன்னரோ அதுவரை பணியாற்றலாம்

ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு

DEE - AIDED SCHOOL STAFFS RESIGNED B4 IMPLEMENTATION OF PENSION DETAILS CALLED REG PROC & GO CLICK HERE...

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய......

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. 

முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர...்களை உருவாக்கிக் கொள்ளவும். 

EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும்.

போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். 

பின்பு Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். 

கீழே ஐந்தாவதாக வரும் create new action என்பதை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும்.

பின்பு Record பட்டனை அழுத்தவும்.

பின்பு Image மெனுவில் Image size என்பதை தேர்ந்தெடுக்கவும்.

Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.

Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும்.

பின்பு Save As கொடுத்து EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording என்பதை கிளிக் செய்து உங்களுடைய action நிறுத்தவும். 

அவ்வளவுதான் 99 சதவீத வேலையை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்! 

இனிமேல் File மெனுவில் Automate இல் Batch பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்! 

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை அரசு கொண்டு வந்துள்ளது. அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் பணி அமர்த்தப்படும் ஆசிரியர்கள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மாவட்ட கல்வி அதிகாரிகளின் நிபந்தனை அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் 15.11.2011-ம் ஆண்டுக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்றும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 7.11.2013 அன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேனியை சேர்ந்த சுப்பிரமணியசிவா மற்றும் சிவகங்கை இளையான்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஹமீதியா பள்ளி தாளாளர் ஹமீதுதாவூத் உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன்லால், லஜபதிராய், சேவியர்ரஜினி, திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதே போன்று மதுரையை சேர்ந்த புவனேசுவரி, உமா, ராம்சங்கர், பிரேமலதா, நாகராஜன், முருகன், சதீஷ்குமார், தஞ்சாவூர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராகவாச்சாரி, வக்கீல் என்.சதீஷ்பாபு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். பின்னர், வழக்கின் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Wednesday, 20 November 2013

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்


'குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

முன்னுரிமை அளிக்க: முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில், படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.

 தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்' என, முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்' என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.

தேவையில்லாத குழப்பம்:

இது குறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு, தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை. அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான்.

மீடியம் தான் கணக்கு:

பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, 'தமிழ் வழியில் படித்திருக்கிறேன்' என, கூறுகின்றனர். எந்த, 'மீடியத்தில்' சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு | List of Public Holidays for the year 2014

G.Os of Public Department ( Tamil Version ) - List of Public Holidays for the year 2014

மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்


மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆங்கிலம் கற்பதற்கான புதிய மென்பொருளை அறிமுகம் செய்து, பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் டேவிட்சன் கூறியதாவது: இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. இந்தியர்களின் ஆங்கில தேவையை அறிந்து, அதற்கேற்ப, ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இந்தியாவின் பெரும்பகுதி மக்களிடம், ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல, மொபைல் போன் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துகிறோம்.

"மொபைலில் ஆங்கிலம்" என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும், தொலைபேசி மூலம், ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதன்மூலம் ஆங்கில உரையாடலை அறியலாம். இத்திட்டத்தில், ஆரம்ப நிலை, இடைநிலை, முன்னேறிய நிலை என மூன்று நிலைகள் உள்ளன.

மொபைல் மூலம், ஆங்கிலம் கற்றோரின் தகுதியை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிந்து, அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கிறது. இதற்கு, "அப்ளைடு லேப், ஏ.ஏ. எஜுடெக்" ஆகிய நிறுவனங்களின் மென்பொருள் உதவுகிறது. இவ்வாறு, மார்ட்டின் டேவிட்சன் கூறினார். அப்ளைடு மொபைல் லேப் தலைமை நிர்வாக அதிகாரி, மிரிகங்க திரிபாதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர், விழாவில் கலந்து கொண்டனர்.

Monday, 18 November 2013

10 நிமிடத்தில் மணியார்டர் பணம் பட்டுவாடா தபால் துறையில் புதிய சேவை அறிமுகம்


தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில் பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது.தபால் துறை சார்பில், மணியார்டர், "ஸ்பீடு' மணியார்டர் போன்ற சேவைகள்,இருந்தாலும், வங்கிகளின் "ஆன்லைன்' பரிவர்த்தனைகள், "டிராப்ட்' போன்ற சேவைகளால், மணியார்டர்களுக்கு வரவேற்பு குறைந்தது.இதனால், மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும் 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது. பணம் அனுப்புவோர், தபால் நிலையம் சென்று, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது பெயர், மொபைல் எண், முகவரியை குறிப்பிட்டு, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், தபால் துறை சார்பில் 6 இலக்க ரகசிய குறியீட்டு எண், வழங்கப்படும். 

பணம் பெறுபவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் 6 இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை, பணம் அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும். இந்த ரகசிய குறியிட்டு எண், பணம் பரிவர்த்தனை செய்யும் இருவருக்கு மட்டுமே தெரியும். பணம் பெறுபவர் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, மொபைல் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்து, 10 நிமிடத்தில் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

1000 முதல் 1500 ரூபாய் வரை பணம் அனுப்ப, 45 ரூபாயும், 1501 முதல் 5000 வரை 79 ரூபாயும், 5001 முதல் 10 ஆயிரம் வரை 112 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த செலவு, 10 நிமிடத்தில் பணப்பரிமாற்றம் போன்றவற்றால், இச்சேவை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

RMSA-ஒன்பதாம் வகுப்பிற்கான இணைப்புப் பயிற்சி கட்டகம்.

RMSA-ஒன்பதாம் வகுப்பிற்கான இணைப்புப் பயிற்சி கட்டகம்

CLICK HERE -BRIDGE COURSE FOR 9TH STANDARD MOUDULE 

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு.

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு

DEE - NATIONAL INTEGRATION DAY - OBSERVANCE ON 19TH NOVEMBER REG PROC & PLEDGE CLICK HERE...

கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிப்பு: கலக்கத்தில் அலுவலர்கள்..


பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, தினமும் வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 6,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிய வழிகாட்டுதல், நிதியின்மையால் கல்வி அலுவலர்கள், சிக்கலில் தவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் மற்றும் பொதுநல என்ற பிரிவுகளின் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடமாறுதல், ஊதிய முரண்பாடு, ஓய்வூதியம், பணிநியமன முறைகேடு, முறையற்ற அரசாணை போன்ற காரணங்களுக்காக பலர், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். 

மாநிலம் முழுவதும், 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை கையாள்வதற்கு, போதிய நிதியின்மையால் பள்ளிகள் வளர்ச்சி, பராமரிப்பு, விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தும் அவலநிலை, பல மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறுகையில்,""பள்ளிக்கல்வித்துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், நாளுக்குநாள் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்ற செலவுக்காக, பள்ளிக்கல்வித்துறை எவ்வித நிதியும் ஒதுக்குவது கிடையாது. 

 நீதிமன்றங்கள் சார்ந்த போதிய அடிப்படை தெரியாத நிர்வாக ஊழியர்கள் பெரும் அலைக்கழிப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி திணறிவருகின்றோம்,'' என்றார். கல்வித்துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில், நீதிமன்ற வழக்குகள் என்பது பெரும் தலைவலியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகளை, கல்வித்துறை அலுவலர்களை கொண்டு கையாள்கின்றோம். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அளவில், வழக்குகளை எதிர்கொள்ள அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய தெளிவில்லாத அரசாணைகளால் தான் வழக்குகள் அதிகரிக்கிறது' என்றார்.

கூட்டுக்கல்வி திட்டம் கல்வியை வணிகமாக்கும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அச்சம்


"மாதிரி பள்ளிகள் என்ற பெயரில், கொண்டு வரப்படும் கூட்டுக்கல்வி திட்டம், தனியாரை ஊக்கப்படுத்தி, கல்வியை வணிகமாக்கி விடும்" என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர்
ஜோசப் சேவியர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், மாதிரி பள்ளிகளை தனியார் நடத்துவதற்கு, மத்திய அரசு அங்கீகரிக்கிறது. இந்த பள்ளிகளை யார் வேண்டுமானாலும் துவங்கலாம். பள்ளிகள் துவங்கக் கோரும் விண்ணப்பத்தில் "லாப நோக்கமற்ற" எனும் வார்த்தையை சேர்க்க வேண்டும். பள்ளி துவங்குவோருக்கு அடிப்படை தகுதி, ரூ.5 கோடி மற்றும் 3 ஏக்கர் நிலம் தான்.

நிலம் இல்லையெனில், மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். இப்பள்ளிகளுக்கு, மத்திய அரசு 10 ஆண்டு மட்டுமே நிதியுதவி செய்யும். அதன் பின், மாநில அரசு நிதியளிக்க வேண்டும். இந்த பள்ளிகளின் கொள்கை முடிவில், மாநில அரசு தலையிட அதிகாரம் கிடையாது.


இந்தியா முழுவதும் துவங்கவிருக்கும் 2,500 மாதிரிப் பள்ளிகளில், 356 தமிழகத்தில் வரவிருக்கிறது. இதற்கு தமிழக அரசு மறுத்துள்ளதை வரவேற்கிறோம். மாதிரி பள்ளிகள் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY, RULE AMENDMENT, ADVANCE INCREMENT, ADDITIONAL PAY, PAY ANOMALY ...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியலினை வெளியிட்டுள்ளதை உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம்.

LIST OF PIO & P & A R DEPT OFFICERS CLICK HERE...

Sunday, 17 November 2013

1330 திருக்குறள்களையும் பாடலாக்கிய இசையமைப்பாளர் பரத்வாஜ்


500 பாடகர்களை பாடவைத்து 1330 திருக்குறள்களையும் பாடலாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அஜீத் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர், சமீப காலமாக எந்த படத்திற்கும் இசையமைக்காமல் இருந்தார்.இது பற்றி விசாரித்ததில் தனக்கு கிடைத்த இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி இருக்கிறார் பரத்வாஜ்.

 அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளுக்கு மூன்று விதமாக இசையமைத்து இருக்கிறார்.இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதற்காக உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் பாடகர்களை பாட வைத்திருப்பதுதான். மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருகிறார்கள். இது குறித்து பரத்வாஜிடம் கேட்டால், “எந்த தலைமுறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. அதை வெறும் வார்த்தையால் சொல்வதைவிட, இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்.இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன். ஜனவரி 17ஆம் தேதி அன்று திருவள்ளுவர் தினம் அன்று இதை வெளியிட இருக்கிறேன்” என்கிறார் பரத்வாஜ்.

தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு டிசம்பர் 7 -ல் சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி


தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

மாவட்ட அளவில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகஇ திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு

click here to download the SSA proceeding of  - TEACHERS SALARY DISBURSEMENT UNDER SSA HEAD REG CLARIFICATION ORDER

Saturday, 16 November 2013

ஏப்ரல், 8ம் தேதி முதல், 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, மைக்ரோசாப்ட் கைவிட உள்ளது - 'மைக்ரோசாப்ட்' முடிவால் வங்கிகள் முடங்கும் அபாயம்


நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150 தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின், அலுவலக பயன்பாட்டு மென்பொருளான, 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, நம் நாட்டின், 34 ஆயிரம் வங்கிகளும் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த ஆண்டு, ஏப்ரல், 8ம் தேதி முதல், 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, மைக்ரோசாப்ட் கைவிட உள்ளது. அதற்குப் பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற மென்பொருளை அறிமுகப்படுத்துகிறது.நம் நாட்டில், 40 - 70 சதவீத வங்கிப் பணிகள், விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருள் மூலம் தான் நடக்கிறது. இந்த மென்பொருள் நிறுத்தப்பட்டால், வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால், இந்திய வங்கிகளுக்கு, 3,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது.விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் படி, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம், வைரஸ் தாக்குதலில் இருந்து, எக்ஸ்பியை விட, ஆறு மடங்கு அதிகமாக தாக்கு பிடிக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை


           அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

              கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

                      மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

               ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

                   மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத் திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

உதவிபெறும் பள்ளிகளில் நியமனம்

              அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பம் இன்றுவரை தொடர்கிறது.

                           இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர் களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

டிஸ்மிஸ்

                        தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லா மலேயே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும் வழங்கியது.

                           யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது சரிவர முடிவுசெய் யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர் களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள்.

5 ஆண்டு கால அவகாசம்

                    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

                           பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                         இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

தொடக்கக் கல்வி இயக்ககம்

                                பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்) மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

                   உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - அடுத்த ஆண்டு வழங்கப்படும்


16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம். 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். 

மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும். 

அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் இனிமேல் தவிர்க்கப்படும். 

தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப் பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. 

மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

சச்சின், சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் அறிவிப்பு

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம் முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.

உலக விளையாட்டு அரங்கில் சச்சின் இந்தியாவின் தூதராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் துறையில் அவரது சாதனைகள் ஈடு இணையற்றது. அவர் புரிந்துள்ள சாதனைகளுக்கு நிகரில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு விளையாட்டு வீரராக அவரது உத்வேகம் சாலச்சிறந்தது. அவரது திறமைக்கு பல்வேறு விருதகள் வழங்கப்பட்டுள்ளன.

பாரத ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அதே போல், வேதியியல் துறையில் மிகச் சிறந்த சாதனைகள் புரிந்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவ், 1400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

45 புத்தகங்கள் எழுதியுள்ளார். சி.என்.ஆர். ராவ் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது ஆய்வுகளை உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்துள்ளனர்.

விடுமுறை உத்தரவை பின்பற்ற வேண்டும் ! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.


இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்து உள்ளது.வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் உத்தரவிடும்போது, கல்வி நிறுவனங்கள், கண்டிப்பாக, அவற்றை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கல்வித் துறையின் உத்தரவில், "மழைக்காலங்களில் பள்ளி கட்டடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால், முதன்மைக் கல்விஅலுவலருக்கு தகவல் தர வேண்டும். இயற்கை இடர்பாடுகளுக்காக, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும், உள்ளூர் விடுமுறை தினத்தில், பள்ளிகளை திறக்கக் கூடாது. மழைக்காலங்களில்,மாணவர்கள், பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

Tuesday, 12 November 2013

தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி

தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு  Elementary Dept 2013 -14 calendar

click here to download the Elementary Dept Calendar 2013 -14

மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

Monday, 11 November 2013

மொஹரம் விடுமுறை 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு


மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP - 2 Application Status | 01.12.2013 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP - 2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டதா / இல்லையா என்ற விவரம் அறியுங்கள்.

TNPSC GROUP - 2 Application Status | 01.12.2013 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP - 2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டதா / இல்லையா என்ற விவரம் அறியுங்கள். 

Posts included in Combined Civil Services Examination-II
(Group-II Services)
Preliminary Examination
(Date of Written Examination:01.12.2013)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)

           Enter Your Registration ID :                                      

இன்று தேசிய கல்வி தினம்: 11.11.2013 - அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்


இந்தியாவின் முதல் கல்வி  அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்போற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.

அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.

மெனலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய‌ நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்...


 தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும்.

ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும். இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.

அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.

அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

"WE FOR SECONDARY GRADE TEACHERS" டிட்டோஜாக்...

தமிழகத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின் அனைத்து சங்கங்களின் மாநில பொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின்( TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION JOINT ACTION COMMITTY )பொதுக்குழு கூட்டம் 9/11/13 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின் முதல் தள கூட்ட அரங்கில் கூடியது.



கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கங்கள்,
1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
4.தமிழக ஆசிரியர் கூட்டணி
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மற்றும்
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் .
ஆகியன.

சுமார் இரண்டு மணிநேர கருத்துரையாடலுக்கு பின்னர்

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது
கடந்த கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன்
"WE FOR SECONDARY GRADE TEACHERS" என்ற கோட்பாட்டின் படிஇடைநிலை ஆசிரியர் வாழ்வாதாரப்பிரச்சினையான ஊதியக்குறைபாட்டினைக்களைய பாடுபடுவது என ஒருங்கிணைந்த கருத்துடன்

1.இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தினை மத்திய அரசு வழங்குவதுபோல
மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்

2.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.என்ற இரு கோரிக்கைகள் மட்டும் டிட்டோ ஜாக் -ன் கோரிக்கைகளாக அனைவராலும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது

அடுத்தகட்டமாக

முதலில் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த சங்கங்கள் இனைந்து போராட முடிவெடுத்துள்ளதை அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் முரையாக தெரியப்படுத்தும் விதமாக வரும் 13/11/13 அன்று
மாண்புமிகு முதலமைச்சர்,மாண்புமிகு நிதியமைச்சர்,மாண்புமிகு கல்வியமைச்சர், ஆகியோர்களுக்கும்,தமிழக அரசின் தலைமைச்செயலர்,
தமிழக அரசின் நிதிதுறைச் செயலர்,தமிழக அரசின் கல்வித்துறைச் செயலர்,
மற்றும் கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள் அனைவரையும் 7 சங்க பொறுப்பாளர்கள் ஒன்றினைந்து சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது என்றும்,வரும் 20/11/13 அன்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், மாவட்ட ,வட்டார அளவில் டிட்டோஜாக் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பேச்சுநடத்த ஏதுவாக மாநில டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகமான “முத்துசாமி அரங்கில்” நடைபெறும் என்றும் முடிவாற்றப்பட்டது,

அது சமயம் அனைத்து சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின் (தலைவர்,செயலர்,பொருளர்) பட்டியல் கொண்டு வரக்கேட்டுக்கொள்ளப்பட்டது மேலும் டிட்டோ ஜாக் மாநில அமைப்பின் தொடர்பு அலுவலகமாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகமே செயலாற்றஅனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

Sunday, 10 November 2013

பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு


தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போட்டோக்களை கல்வித் தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சுய விபரங்களுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் போட்டோ எடுக்கப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போட்டோ எடுக்கப்படாத மாணவர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றிபோட்டோ எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உயர் தர செல்போன் வசதி கொண்டு மாணவர்களை போட்டோ எடுப்பது, வெப் காமிரா வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களை போட்டோ எடுப்பது, 20பேர் அல்லது 10பேர் கொண்ட அணியாக நல்ல தரமான போட்டா கருவி மூலம் தரமான போட்டோ எடுத்து தனித்தனி போட்டேவாக மாணவர்களின் போட்டோக்களை பிரித்து எடுப்பது போன்ற முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 9 November 2013

EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD DSE PROCEEDING OF EMIS - ALL STUDENTS PHOTOS HANDOVER TO CONCERN EMIS CO-ORDINATORS

Thursday, 7 November 2013

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வாசிப்புத் திறன் 64 சதவீதமாக இருப்பதும், எஸ்.எஸ்.ஏ., மூலம் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "பள்ளிகள் இல்லாத தொலை தூர குடியிருப்பு பகுதிகளில் புதிய பள்ளிகள் துவங்க கருத்துரு அனுப்பவும், ஆசிரியரல்லாத பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழ்வாசிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு - தனியார் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு - தனியார் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள  356 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பட்டியல் மாட்டவாரியாக...


மாவட்ட வாரியாக பார்க்க Pls Click Here

தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27 ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளுக்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையிலும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எனவே, தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் தற்போது 15 ஆயிரம் பேர் மட்டும்தான் ஆசிரியர் பணிக்கு எடுத்து கொள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2 வாரத்தில் தொடங்கும் என்று தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பப்படும். அத்துறை காலியாக உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கான பணி ஆணையை வழங்குவார்கள்.

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு

Wednesday, 6 November 2013

2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள SSA முடிவு


ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களில் 27,092 பேர் தேர்ச்சி


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) மாலை வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.


இரண்டு மாதங்களில் முடிவுகள்: தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர். இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80 சதவீதமாகும். அதில், ஆண்களின் தேர்ச்சி 4.56 சதவீதமாகவும், பெண்களின் தேர்ச்சி 4.88 சதவீதமாகவும் உள்ளது.

மொழிப்பாடங்களில் எத்தனை பேர்: மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாள் இரண்டில் ஆண்களின் ஆதிக்கம்: பட்டதாரிகள் அதிகளவில் பங்கேற்ற தாள் இரண்டினைப் பொறுத்தவரையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62. தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் இரண்டினைப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tuesday, 5 November 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்
 8-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை, ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில், இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டது.

 இந்தத் தேர்வில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNTET PAPER - 1 RESULT PUBLISHED

TNTET PAPER - 1 RESULT PUBLISHED


TET PAPER I RESULT AVAILABLE

அகஇ - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள முடிவு

SPD - 2013-14 ACHIEVEMENT TEST FOR STUDENTS THOSE WHO R STUDYING IN 3, 5 & 8 STD IN GOVT / MUNICIPAL / ADW / AIDED SCHOOLS REG PROC CLICK HERE...

மாதந்தோறும் 1 முதல் 4 வகுப்புகளில் நடைபெறும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையையும் (SABL) மற்றும் 6 முதல் 8 வகுப்புகள் வரை நடைபெறும் படைப்பாற்றல் கற்றல் முறையையும் (ALM) ஆசிரிய பயிற்றுனர்கள் பார்வையிட்டு (A,B,C,D) என தரமிட்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்க மாநில திட்ட இயக்ககம் உத்தரவு

Sunday, 3 November 2013

மெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு "பூட்டு


அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழக அரசு சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம், போன்றவற்றின் தாக்கமே இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

தற்போது உள்ள 23 ஆயிரத்து 576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட அரசு முயற்சித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது:
முதல் கட்டமாக, 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் உள்ளனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல் நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகள் இல்லாமல் போகும். இவ்வாறு கூறினர்.