test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 31 October 2013

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

click here to download the DEE proceeding of ALL DEEO / AEEO OFFICES to be  CELEBRATED ANTI-CORRUPTION WEEK FROM 28.10.2013 TO 02.11.2013 REG

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு.கே.சி.வீரமணி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?


ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும், டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன


2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.

கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற  விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 30 October 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.



இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் பழனிமுத்து, ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் தாக்கல் மனுவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு தேசிய ஆசிரியர் பயிற்சி கல்விக்குழு அறிவுரையின் படி மதிப்பெண்ணில் 5 முதல் 10 சதவீதம் தளர்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தளர்வு வழங்கப்படும் வரை இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும், அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். இறுதி விசாரணை நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்



தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.சி.வீரமணி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மான்ன்புமிகு விஜயபாஸ்கர் அவர்களை சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் நாளைக்கு விசாராணைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, 29 October 2013

RMSA - மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி -80 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

RMSA - மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி -80 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என
தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.40 மணிக்குள் SMS மூலமும்,மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை


தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆசிரியர்கள்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தீபாவளி 2-ந்தேதி (சனிக்கிழமை) வருகிறது. அன்று பெரும்பாலும் வெடி, பட்டாசு வெடிப்பவர்கள் சிறுவர்கள், வாலிபர்கள்தான் அதிகம். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்தான்.எனவே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:-

பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்

*பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
*பட்டாசுக்களை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
*பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
பெற்றோர் முன்னிலையில்...
*பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.
*விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம்.
தினம் தோறும் செய்து காண்பியுங்கள்.

இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.

எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில்

click here to download RTI letter of  TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT REG 

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு


சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.

தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு  வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன்.
2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவில்லை. 

ஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Monday, 28 October 2013

மின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்


அனைவருக்கும் மனப்பாடமாக பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத் தெரியும். ஆனால் வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். நான் சொல்லித் தரப்போகிற இந்த உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

ஓரிலக்க எண்கள் அனைத்தும் பத்துக்கு கீழே உள்ள எண்கள். எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன என்பதை வைத்துதான் நாம் இந்தக் கணக்குகளை போடப் போகிறோம்.

முதல் உதாரணம் : 7 x 8

முதல் எண் ஏழு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 7 =3
அடுத்த எண் எட்டு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 8 =2
இனி விடைகளை பெருக்குங்கள். 3 x 2 = 6. இது விடையின் இரண்டாவது பகுதி
எட்டில் இருந்து மூன்றை கழியுங்கள் 8 - 3 = 5. அல்லது ஏழில் இருந்து இரண்டை கழியுங்கள் 7-2 = 5. இரண்டிற்கும் ஒரே விடைதான் 5. இது விடையின் முதல் பகுதி
அதாவது 56

இரண்டாவது உதாரணம் : 9 x 6

முதல் எண் ஒன்பது. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 9 = 1
அடுத்த எண் ஆறு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 6 = 4
இனி விடைகளை பெருக்குங்கள். 1 x 4 = 4. இது விடையின் இரண்டாவது பகுதி
ஒன்பதில் இருந்து ஒன்றை கழியுங்கள் 9 - 4 = 5. அல்லது ஆறில் இருந்து ஒன்றை கழியுங்கள் 6-1 = 5. இரண்டிற்கும் ஒரே விடைதான் 5. இது விடையின் முதல் பகுதி
அதாவது 54

மூன்றாவது உதாரணம் : 7 x 9

முதல் எண் ஏழு. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 7 =3
அடுத்த எண் ஒன்பது. இது பத்தில் இருந்து எவ்வளவு குறைச்சல். 10 - 9 =1
இனி விடைகளை பெருக்குங்கள். 3 x 1 = 3. இது விடையின் இரண்டாவது பகுதி
ஏழில் இருந்து ஒன்றை கழியுங்கள் 7 - 1 = 6. அல்லது ஒன்பதில் இருந்து மூன்றை கழியுங்கள் 9-3 = 6. இரண்டிற்கும் ஒரே விடைதான் 6. இது விடையின் முதல் பகுதி
அதாவது 63

குறிப்பு
ஐந்து மற்றும் அதற்கு கீழே உள்ள எண்களுக்கு இந்த முறையை பயன்படுத்தாதீர்கள். அது எறும்பைச் சுமக்க யானையை அழைத்து வந்த கதையாகிவிடும்.

நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள.

மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது. இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும். இப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது


அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். 


ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள்என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதியகாலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போதுஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம். தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்றபெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர். 

அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில்காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறதுஅரசு ஊழியர் சங்கங்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் 2 லட்சம் பேர் ஓய்வுபெற உள்ளதால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறையில்தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் காலியிடங்கள் ஏற்படப்போகிறது. இதனால் மக்கள் நல திட்டங்கள்தான் அதிகம் பாதிக்கும். இப்போதே அரசு துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது. 

மேலும் கொல்லைப்புறம் வழியாக அவுட்சோர்சிங் என்ற முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். மருத்துவ துறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவுட்சோர்சிங் வழியாக ஸ்டாப் நர்சுகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவதுறை அளிக்கின்ற ஊதியம். Rs 5500 ஆனால்ஏஜென்சிகளுக்கு கமிஷன் போகஸ்டாப் நர்சுகளுக்கு கிடைப்பது வெறும் Rs 4000 ம்தான். பேரூராட்சிகளில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்குடிரைவர் ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. டெண்டர் மூலம் டிரைவர்களை தேர்வு செய்கின்றனர். 

Rs 4000,Rs 3000 மாத சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். அதுபோன்று எல்லா அலுவலகங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர்ஆப்ரேட்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக எம்சிஏ பட்டதாரிகள் கூட Rs 2000,Rs 2500 சம்பளத்திற்கு பேரூராட்சிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.இப்போது ஊராட்சிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் 2ஆயிரம்தான். தற்போதையவிலைவாசியில் ரூ.2 ஆயிரத்தை கொண்டு என்ன செய்ய முடியும்? குறைவான சம்பளத்தை கொடுப்பதின் மூலம் இவர்களிடம் இருந்து நிறைவான பணியை எதிர்பார்ப்பதும்இயலாது போகிறது. மேலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. மற்றொருபுறம்பணியிடங்களே காணாமல் போகிறது. 

உதாரணத்திற்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலஅலுவலகத்தில் 80 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது அது 60 பணியிடங்களாககுறைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பணியிடங்கள்நீண்டநாட்களாக காலியாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோன்று இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் எழுத்தர் நிலையில் 14 பேர் பணிபுரிந்தஇடத்தில் பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது 6இடங்களில் ஆள் இல்லை. இதுபோன்றுஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும்பணியிடங்கள் குறைப்பு, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் வாயிலாக அரசு துறைகளில் ஆட்கள் நியமனம் என்றுபணியாளர் நியமனத்தில் ஒரு புதுமுறையை அரசு செயல்படுத்துவது போன்று உள்ளதுஎன்றார். எனவே புதிதாக ஆட்களை தேர்வு செய்து காலியிடங்களை நிரப்புவது மூலம் நடைபெறுகின்ற முறையான ஊழியர் நியமனமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். 

எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககாலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 2லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் மேலும் 2லட்சம் ஊழியர்கள் வரும் 6 மாத காலத்திற்குள் பணி ஓய்வுபெற இருப்பதுடன் அடுத்து 2016ம்ஆண்டுக்குள் மேலும் 2 லட்சம் பேர் பணி ஓய்வு பெற இருப்பதும் அரசு இயந்திரத்தின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் அபாயம் உள்ளது. என்றார். வேலைப்பளு அதிகரிப்புஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள்தேர்வு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போன்று உள்ளது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் 40 உதவியாளர் பணியிடங்கள் காலியாகஉள்ளது. பொதுவாகஇளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இப்போது 1800 உதவியாளர் பணியிடம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது. இவற்றுக்கு 243 பேரை மட்டும் குரூப்&2 தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களை கொண்டு எவ்வாறு எல்லா அலுவலகத்திலும் பணிகளை செய்ய இயலும்?இப்போதே பெரும்பாலான துறைகளில் 2 ஊழியரின் பணியை சேர்த்து ஒரு ஊழியர் கவனிக்கிறார்.இனி காலியிடங்கள் அதிகரிப்பால் இந்த பணி பளு மேலும் அதிகரிக்கவே செய்யும்.

Saturday, 26 October 2013

கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்....

கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.
இன்று சென்னை, திருவல்ல்கேணி, மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழக ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இயக்ககங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உரிய முடிவுகளை மேற்கொள்ள இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கூட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த இயக்ககங்களுடன் பேச பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து விரைவில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள  முக்கிய இயக்ககங்கள் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Friday, 25 October 2013

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

தொடக்க/ உயர்த்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர்களுக்கு சென்னையில் பயிற்சி

click here to download the SCERT proceeding of READING / WRITING & ARITHMETIC IMPROVEMENT TRAINING REG

Wednesday, 23 October 2013

தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியீடு

click here to download the GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PRIORITY SHOULD BE GIVEN TO THOSE WHO ARE TRANSFERED DUE TO UPGRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG 

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது..


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர் என இரண்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது சார்பாக  தேர்வு செய்ய "OPTION" வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

தற்பொழுது முன்னுரிமைத் தேர்வு  உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநரால் திரும்ப பெறப்பட்டுள்ளது

Tuesday, 22 October 2013

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

SPD - 6,7,8 ALM GRADE FORMAT & GUIDELINES FOR ALM GRADING REG PROC CLICK HERE...


தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு

GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PREFERENCE SHOULD BE GIVEN TO THOSE WHO R TRANSFERED DUE TO UPGRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG ORDER CLICK HERE... 

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர்.

இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.

நவம்பர்.5-ல் மங்கள்யான் விண்கலம் அனுப்ப இஸ்ரோ முடிவு

 செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது. பி.எஸ்.எல்.வி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த விண்கலம் இஸ்ரோ தயாரித்து உள்ளது. எப்போது அனுப்புவது என்ற குழப்பமான நிலையில் தற்போது செவ்வாய் கிரமகத்திற்கு வரும் நவ.5-ம் தேதி விண்கலம் அனுப்பு இஸ்ரோ முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி சேர்க்கை குறைவு.....

அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசு, நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விளைவு கடலூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக ளில் இந்த ஆண்டு, முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட தமிழ் வகுப்பில் சேரவில்லை.

தனது பிள்ளையும் ஆங்கிலம் படித்து பட்டணத்துக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் என்று நம்புகிற பெற்றோர்களும், கல்வி கடைகளைத் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளின் மனப்போக்கும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம்.

தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்துள்ளதன் விளைவாக - கடலூர் மாவட்டத்தில் உள்ள 161 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 12 நடுநிலைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 109 மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட 161 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

உங்கள் கைகளில் ஒன்பதாம் வாய்ப்பாடு-எளிய முறையில் மாணவர்களுக்காக...


தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்களது பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

வழிமுறை :

படி 1 :
உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

படி 2 :
இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

படி 3 :
எந்த எண்ணை ஒன்பதால் பெருக்க வேண்டுமோ அந்த எண் கொண்ட விரலை மடக்கிக் கொள்ளவும்.

படி 4 :
பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் விடை.

விளக்கம் :
உங்கள் இடது கையில் 3 வது விரலை மடக்க வேண்டும். (ஏனென்றால் 3 ஆல் பெருக்குவதால்).பின்னர் 3 ஆவது விரலுக்கு முன் மீதமுள்ள விரல்களின் என்னிக்கை மொத்தம் 2 [2 ஆனது விடையின் முதல் பாதி]. 3 வது விரலுக்குப் பின் உள்ள விரல்களின் என்னிக்கை மொத்தம் 7 [7 ஆனது விடையின் இரண்டாம் பாதி], எனவே 3 X 9 = 27 விடையாகும்.

Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission –Fixation of pay of Junior Assistants / Agricultural Officers etc. selected prior to 1--6--2009 and appointed on or after 1--6--2009 due to administrative reasons –Allowing of fitment benefit – Orders – Issued.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் 1.6.2009 -க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு 1.6.2009 -க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசாணை

TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்

TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்



வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின் ”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின் ”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை


அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாநில கெüரவத் தலைவர் சுந்தரகணேஷ், மாநிலத் தலைவர் ராமர், துணைத் தலைவர்கள் பாபு, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் முருகதாஸ் வரவேற்றார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியன்றே அவரவர் வங்கிக் கணக்கில் கிடைக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 7 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, தீபாவளி போனஸ், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சீனிவாசன் உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Monday, 21 October 2013

தொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு

DEE - TAKE IMMEDIATE ACTION FOR TEACHERS FESTIVAL ADVANCE REG PROC CLICK HERE... 

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


 தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாகவெளியிட்டுள்ள அறிவிப்பு.. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ், வனத்தோட்டக்கழகம், தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கு 290 சதவீத போனஸ் அளிக்கப்படும். பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் தரப்படும். லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்


"ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும் குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வரை மாதத்துக்கு ஒரு நாள் என பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும் பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும் தலா ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும் 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

தற்போது, முதல் பருவத்துக்கு ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும் 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும் 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில், குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வட்டார வள மையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.

தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.

மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் 40 சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை இணைக்கும் திட்டம்....

சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

| Social Awareness and Cyber Safety Primary Training Module..

சமூக பாதுகாப்பு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு -தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சிக்கட்டகம்

click here to download the Social Awareness and Cyber Safety Primary CRC Training Module

ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் பழைய உத்தரவு

Thursday, 17 October 2013

ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம்
நடத்த வேண்டியதுள்ளது.

மெட்ரிக்., பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆசையால் அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை, இந்த ஆண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தனி புத்தகங்கள், தனி வகுப்பறை, தனி ஆசிரியர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

10 மாணவர்கள் இருந்த பள்ளியில், தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலை உள்ளது. ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறையின் ஒரு பகுதி, ஆங்கில வழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியாக ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், கூடுதல் ஆசிரியர்களை, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே நியமித்து வருகின்றனர்.

நியமனம் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்,சம்பளம் அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் தான் வழங்க வேண்டியதுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை வேண்டும் என்பதால், ஆசிரியர்களும், தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை இவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, அதற்குரிய கட்டமைப்பை மேம்படுத்தவும் வேண்டும். ஆரம்ப பள்ளிகளில், ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வழி கல்விக்கு, ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. தற்காலிக அடிப்படையிலாவது அரசு நியமிக்க வேண்டும்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆங்கில வழி கல்வி தொடக்க பள்ளிகளுக்கு, தனி ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் ஆரம்ப கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப உத்தரவு

முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?


முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும்,   14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் அல்லாதஇதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, , www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,இணையதளத்தில்,  வெளியிடப்பட்டது. மேலும்,சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 


சம்பந்தப்பட்ட தேர்வர்கள், 'ரோல் எண்'களை பதிவு செய்து, தங்களுக்கானmஅழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும்.


 ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ்சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காததேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. 

எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 16 October 2013

CCE 2nd TERM WEEKLY SYLLABUS for std 1 to 8

CCE 2nd TERM WEEKLY SYLLABUS for std 1 to 8


சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும் - PG ஆசிரியர் விவகாரத்தில் TRB எச்சரிக்கை


சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும் - PG ஆசிரியர் விவகாரத்தில் TRB எச்சரிக்கை மேலும்  இது தொடர்பாக .....

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் பெற, தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் பெற, தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

Click here to download Certificate Verification Call Letter 

இனிமையாக கணிதம் படிக்க எளியமுறை, ஆசிரியர் உமாதாணுவின் கண்டுபிடிப்பு


கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் உமாதாணு. இனிமையாகவும், ஆர்வத்தோடும் கணிதப் பாடங்களை படிப்பதற்கு ஒரு எளிய வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் என்.உமாதாணு.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கல்லூரியில் அவருக்குப் பிடித்த கணிதப் பாடத்தை படித்தார். அதுவே, அவரது வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
1962-ல் கணித ஆசிரியராக கோவையில் பணியைத் தொடங்கினார் உமாதாணு. இரண்டு தனியார் பள்ளிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வுபெற்றார். அதன்பிறகு ஏழை மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டார்.
வசதிபடைத்த மாணவர்கள் அபாகஸ் போன்ற பயிற்சிகள் மூலம் கணிதத்திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரியான வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் எளிய முறையையும்,அதற்கான உபகரணங்களையும் உருவாக்கினார். இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருந்தார்.
உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்தின் முக்கோணயியல், வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்று விளக்குகிறார். மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்க அதிகாரிக்கு, கடலுக்குள் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அந்த அதிகாரி, அந்த கப்பல் கடலில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கண்டறிவதற்காக, எவ்வளவு இறக்கக் கோணத்தில் கப்பல் தெரிகிறது என்று கிளினாமீட்டர் உதவியுடன் பார்த்து கணக்கீடு செய்வார். கரையில் இருந்து எவ்வளவு வேகமாக பாதுகாப்பு கப்பல் சென்றால், மூழ்கும் கப்பலில் உள்ள சிப்பந்திகளை காப்பாற்ற முடியும் என்று சில நொடிகளிலே கணக்கிட்டு வழிகாட்டுவார். இப்படி, ஏற்றகோணம்,இறக்ககோணம் வாழ்க்கையில் எவ்வளவு பயன்படுகிறது என்று விளக்கிவிட்டால், மாணவர்கள் உற்சாகமாக இந்தப் பகுதியைப் படிப்பார்கள். இதேமாதிரி ஒவ்வொரு பாடப்பகுதியையும் வாழ்வியலோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்து நினைவில் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் உமாதாணு, அதனை உதாரணத்துடன் விளக்குகிறார்.
இரு எண்களின் பெருக்குத் தொகை -480, கூட்டுத் தொகை -1 என்று எடுத்துக் கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும். அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும். அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும். இந்த எளியமுறைக்கு யூனூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதுபோல, 6-ம் வகுப்பில் இருந்தே ஜியோமெட்ரிக் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மூலை மட்டங்களின் முழு பயன்பாடு சொல்லித் தரப்படுவதில்லை. மூலை மட்டங்களைக் கொண்டு இணைகோடு, செங்குத்துக் கோடு வரையலாம் என்று மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், மூலை மட்டங்களைக் கொண்டு எந்த அளவில் வேண்டுமானாலும் கோணங்களை வரைய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இப்படி மூலைமட்டங்களின் பயன்பாட்டை பள்ளியிலே முழுமையாக படித்துவிட்டால் பி.இ. படிக்கும்போது எளிதாக இருக்கும் என்கிறார்.
கணிதப் பாடத்தை இனிமையாகக் கற்றுக்கொடுக்க இவர் கண்டுபிடித்துள்ள எளியமுறை, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்கள், அயல்நாடுகளையும் எட்டியிருக்கிறது.
சென்னை மாநகராட்சி மாணவர்களையும் இப்போது தொட்டிருக்கிறது. இனி வரும்காலத்தில் சென்னைப் பள்ளி மாணவர்களும் கணிதப்பாடத்தில் சக்கை போடு போடுவார்கள் என்று நம்பலாம்.

Tuesday, 15 October 2013

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.

பல மாநிலங்கள் இந்த "அனைவரும் பாஸ்" திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில், 9ம் வகுப்புவரை எந்த சிக்கலுமின்றியும், கடின உழைப்பின்றியும் கடந்துவரும் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எதிர்கொள்ளும்போது கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை மட்டுமின்றி, ஆசிரியர்களின் நிலைமையும் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று இந்த அம்சத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

மத்திய மனிதவள இணையமைச்சர், இந்த கமிட்டியின் அறிக்கையை, அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே சமர்ப்பித்து விடுமாறு, ஹரியானா அமைச்சர் புக்கலிடம் கூறியுள்ளார். ஏனெனில், இதன்மூலம் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்க முடியும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வே இல்லாத இந்த "அனைவரும் பாஸ்" திட்டம், மாணவர்களின் சுய திருப்தியை பாதிப்பதோடல்லாமல், ஆசிரியர்களின் திறனையும் பாதிக்கிறது என்பதால், இத்திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, மத்திய மனிதவள அமைச்சகத்தை இந்தக் கமிட்டி கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!


Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இரட்டைப்பட்டம் என்பது மூன்று வருடம் ஒரு பட்டம் படித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒரே வருடத்தில் மற்றொரு பட்டம் பயின்றால் அது தான் இரட்டைப்பட்டமாகும். வெவ்வேறு பட்டங்களை மூன்று மூன்று வருடங்கள் தனித்தனியே முடித்திருந்தால் அது இரட்டைப் பட்டம் அல்ல. அத்தகைய பட்டம் தகுதியுடையது தான்.

            இரட்டைப் பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

Click here to download the Thanjai Tamil University - B.Ed Admission prospectus



2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை

*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்

*நுழைவுத்தேர்வு இல்லை

*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை

*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650

*கடைசி நாள்-31-11-13

பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது.

அதன்படி அக்.,6ம் தேதி நடைபெற இருந்த நுழைவுத்தேர்வு, நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அக்.,20ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.கூடுதல் தகவல்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Friday, 11 October 2013

பள்ளி மாணவர்களின் மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் அறிமுகம்.


பள்ளி மாணவர்களுக்கான மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் பணிபுரியும் உளவியல் ஆலோசகர்களுக்கு சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னை, கோவை, வேலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைமையங்களுக்காக நியமிக்கப்பட்ட உளவியல் ஆலோசகர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சியை வழங்குகின்றன.பள்ளி மாணவர்களுக்கு குடும்பச் சூழல், வளர் இளம் பருவத்தால் ஏற்படும் மாற்றங்களால் மனச்சோர்வு, மன அழுத்தம், மனக் குழப்பம் போன்ற பிரச்னைகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக நடமாடும்ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உளவியல் ஆலோசகர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் 10 பேருக்கும், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் 10 பேருக்கும் இந்த உளவியல் ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.உளவியல் மருத்துவர் டாக்டர் விருதகிரிநாதன், சென்னைப் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்கள் கருணாநிதி, சாமிநாதன், லாவண்யா ஆகியோர் இவர்களுக்குப் பயிற்சியை வழங்கவுள்ளனர்.

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார்.
எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013  வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம்.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, ஆய்வுக் கூட்டம் 17.10.2013 மற்றும் 18.10.2013 ஆகிய இரு நாட்களில் சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டு கூட்டத்தில் நடைபெறுகிறது

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 17 & 18.10.2013 AT CHENNAI REG PROC CLICK HERE...

Thursday, 10 October 2013

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று ஏமாற்றமே..


இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டது .வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால்  வழக்கு  விசாரணை 41 உடன்  முடிவு  அடைந்ததால் இன்று (10.10.2013) வழக்கு விசாரணைக்கு வர வில்லை.ஏமாற்றமே இன்று ....

கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது. 

இலவச "நோட்ஸ்': 
இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை மூலம், அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்'கள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்," கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்' வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் பட்டியலை, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கிறோம். மாணவர்கள் பட்டியல் சென்றபின், அரசு உடனே, இலவச "நோட்ஸ்களை' வழங்கும். அரசு தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதத்தில், நவம்பர் 15க்குள் நோட்ஸ்கள் வழங்கப்படும்,'' என்றார்

அகவிலைப்படி உயர்வு- அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10% அகவிலைப்படி உயர்வு- அரசாணை வெளியீடு | DA GO | TN Govt DA GO july 2013



Tuesday, 8 October 2013

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

 எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

 இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.

 காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.

 இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

 ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6,545 ஆசிரியர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில், ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு பிரச்னையால், பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளையும் வெளியிட முடியாமல், டி.ஆர்.பி., திணறி வருகிறது. மேலும், இனிமேல், தேர்வு முடிவை வெளியிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தகுதி வாய்ந்தவர் பட்டியலை, கல்வித் துறையிடம் அளித்து, அதன் பின், கல்வித்துறை, பணி நியமனம் செய்வதற்குள், பல மாதங்கள் கரைந்துவிடும்.

6,500 பேர்... : இதேபோல், 3,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, 2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், தொகுப்பூதிய அடிப்படையில், உடனடியாக நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சம்பளம் எவ்வளவு? : முதுகலை ஆசிரியர்களுக்கு, மாதம், 5,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாதம், 4,000 ரூபாயும், சம்பளமாக வழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். "ரெகுலர்' ஆசிரியர் தேர்வு செய்யும் வரை, இந்த தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேலை வேண்டுவோர், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம்.

இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு, மிகவும் பயனளிக்கும். பணியை எதிர்பார்ப்பவர்கள், தங்கள், சொந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட தொலைவில் உள்ள, வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு, விண்ணப்பிக்கக் கூடாது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம். முதுகலை ஆசிரியர் பிரிவில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பிரிவில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 
தற்காலிக ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களே தேர்வு செய்யலாம் என, தெரிவித்திருப்பதால், ஆசிரியர் தேர்வில், கடும் போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 7 October 2013

இனி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனமா...

..................
தற்காலிகமாக 2645முதுநிலை ஆசிரியர்கள் 3900பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்வர் உத்தரவு. 

இதற்காக ₹20.18கோடி நிதி ஒதுக்கீடு .-பள்ளிக்கல்வி துறை.

பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளை பசுமைப்படுத்துதல் - மரக்கன்றுகளை பெற்று நடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

DSE - PLANTATION OF SAPLINGS REG PROC CLICK HERE...

3, 4 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கான “தேசிய அளவிலான நிலத்தடி நீர் சேகரிப்பு” சார்பான ஓவிய போட்டி - பள்ளி அளவில் மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து அனுப்ப - தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

இரட்டைப்பட்டம் வழக்கு - வரும் புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45 நிமிடம் வாதாடினார்கள். 

 மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும் என்றும் தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

D.T.Ed + B.A(TAMIL ), B.Lit or TPT, D.T.ED + B.LIT மற்றும் D.T.Ed + B.A (English) ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் B.Ed கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.

Sunday, 6 October 2013

நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி?

விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.
பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.
ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.
குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.
வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.
பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.
தேவையான அளவு அன்பு காட்டுவது.
மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.
திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.
நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.
தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.
குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.
நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.