test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 29 September 2013

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

                 அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

            மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.

          பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

                 இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 New Primary Schools Name List for 2013-14 | மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு


Monday, 23 September 2013

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் - Dinamalr


       பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. 

           தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
             இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 
                இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.எனவே, வருங்காலங்களில்இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"எளிய அறிவியல் சோதனைகள்' - மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி.


2013-2014ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குரு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்' என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி. 

தொடக்கநிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி~25.09.2013
உயர் தொடக்க நிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி~27.09.2013

இடம்~SIMET HALL, SCERT, CHENNAI.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

click here to download the DEE proceeding  - COLLABORATIVE LEARNING THROUGH CONNECTING CLASSROOM ACROSS TAMILNADU REG

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்


பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

நீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு


குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும்போது மாணவர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத குழந்தைகளைக் கண்டறிய வேண்டும்.மாணவர் பள்ளிக்கு வராத காரணங்களை அந்தந்த வகுப்பு மாணவர்களிடமே கேட்டறிந்து ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக அந்த மாணவரை பள்ளிகளுக்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவை சார்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் போன்றவை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற வகையில் இருந்தால் அவற்றை உடனடியாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வையிட வேண்டும். கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், பொது அறிவு ஆகியவற்றை மாணவர்களிடம் உரையாடியும், எழுத, படிக்கச் சொல்லியும் அறியவேண்டும்.பழமொழிகள் கூறுதல், பேசுதல், நடித்தல், படைப்பாற்றல் செயல்பாடுகள் போன்றவை பள்ளிகளில் தவறாமல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முறையாக நடைபெறுவது குறித்தும், அந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கைப் பதிவேடு, ஆசிரியர் வருகைப் பதிவு, அரசு நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்படும் பதிவேடு உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். இலவச புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் உள்ளிட்ட பொருள்கள் உரிய நேரத்தில் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.ஆண்டாய்வு மேற்கொள்ளும்போது ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை களைவதற்கு குறிப்பிட்ட பள்ளிக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகு, மீண்டும் அந்தப் பள்ளியை ஆய்வுசெய்து குறைபாடுகள் களையப்பட்டுள்ளனவா என பார்க்க வேண்டும்.ஆண்டாய்வுக்குச் செல்லும்போது நாள் முழுவதும் பள்ளியிலேயே இருந்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளைப் பார்வையிடும்போது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பள்ளியில் இருந்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளை ஆய்வு செய்யும்போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

Saturday, 21 September 2013

பள்ளிக்கல்வித்துறை - அக்டோபர் 15 ஆம் தேதி கைகழுவும் தினமாக கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ /மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது Hand wash liquid மூலம் கையினை சுத்தம் செய் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு

Click here-Celebrate 15thOctober (Global Hand Washing day) , for launching hand washing with soap into the Mid day Meal Scheme in all schools


இரட்டைப்பட்ட வழக்கு, மீண்டும் வருகிற வியாழக்கிழமை (26.09..2013) விசாரணைக்கு வருகிறது


தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு, இரட்டைப்பட்ட வழக்கின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது.
அதன்பின் நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும் "பார்கோடிங்" முறை அமல்


பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த முறையால், தேர்வுகளில், இனி முறைகேடுகளுக்கு முற்றிலும் இடம் இருக்காது என, ஆசிரியர் தெரிவிக்கின்றனர். தேர்வுத் துறையில், கடந்த ஒரு மாதமாக, பல்வேறு சீர்திருத்தங்கள் வந்தபடி உள்ளன. இதில், 18 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான நடவடிக்கைகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 தேர்வில், அறிவியல், கணித பாடங்களுக்கு மட்டும், பதிவெண்களுக்கு மாற்றாக, "டம்மி எண்" வழங்கப்பட்டு, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்தது. "டம்மி எண்கள்" நேரடியாக, விடைத்தாள் மீது எழுதப்படும். இதனால், குறிப்பிட்ட பள்ளியின் விடைத்தாள் எங்கே செல்கிறது என்பதையும், குறிப்பிட்ட மாணவ, மாணவியரின், "டம்மி எண்" எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

தற்போது, "டம்மி" எண்களையும், நேரடியாக தெரியும்படி பதிவு செய்யாமல், "பார்கோடிங்" முறையில், பதிவு செய்யப்பட உள்ளன. அத்துடன், குறிப்பிட்ட பாட தேர்வுகள் என்றில்லாமல், மொழித்தாள் தேர்வில் ஆரம்பித்து, முக்கிய பாட தேர்வுகள் வரை, அனைத்து விடைத்தாள்களுக்கும், "பார்கோடிங்" முறை, வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வுகளுக்கு மட்டுமில்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும், இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. "பார்கோடிங்" முறையால், குறிப்பிட்ட விடைத்தாளை, அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது.

ஏனெனில், 100 விடைத்தாள்கள் இருக்கிறது என்றால், 100 விடைத்தாள்களையும், "ஸ்கேன்" செய்தால் தான், அதற்கான, "டம்மி" எண்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படியே, "டம்மி&' எண் கண்டுபிடித்தாலும், அதற்கான உண்மையான பதிவு எண் என்ன என்பதை, கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், விடைத்தாள்களை கலந்து, வெவ்வேறு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன், மாணவர்களின் அசல் பதிவு எண்கள் விவரம் அடங்கிய சீட்டு, டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். 

உண்மையான பதிவு எண் விவரம், விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு தெரியாது. இதனால், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாளை அடையாளம் கண்டு, அதில், எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. 

மேலும், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்தே, கம்ப்யூட்டர்களில், மதிப்பெண் பதியப்பட உள்ளது; இதிலும், எந்த முறைகேடும் செய்ய முடியாது. ஏனெனில், ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு, "ஸ்கேன்" இயந்திரங்களில், இரு முறை, "ஸ்கேன்" செய்யப்படும். மதிப்பெண்கள் வேறுபாடு இருந்தால், உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை, ஆசிரியர்கள், பெரிதும் வரவேற்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறுகையில், "இதற்கு முன் இருந்த நடைமுறையில், முறைகேடு நடப்பதற்கான ஓட்டைகள் இருந்தன. தற்போதைய நடவடிக்கைகள் மூலம், அந்த ஓட்டைகள், முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதம், நேர்மையான முறையில், விடைத்தாள் மதிப்பீடு செய்வது, உறுதி செய்யப்படும்" என, தெரிவித்தனர்.

மாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது..

மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது

Friday, 20 September 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்வு விடைத்தாள் வடிவமைப்பு மாற்றம்: தனி தேர்வுகளில் அமல்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், புதிய விடைத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செப்., 23 முதல் நடக்கும் தனி தேர்வுகளில், மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில், இவற்றை தேர்வுத்துறை வழங்குகிறது.

பொதுத் தேர்வுகளில், தற்போது வழங்கப்படும் விடைத்தாளில், முதல் பக்கத்தில், மாணவர் பெயர் உட்பட பல்வேறு விவரங்கள், கையால் எழுதி நிரப்பும் வகையில் இருந்தது. தற்போது, முதல் பக்க வடிவமைப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, "பார் கோடிங்" முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் மாணவர் பெயர், தேர்வு எண், மையம், போட்டோ உட்பட விவரங்கள், "பிரின்ட்" செய்யப்பட்டு உள்ளது. எழுதிய மொத்த பக்கங்கள், வினாத்தாள், "சீரியல்&' எண் மட்டுமே மாணவர்களால் நிரப்பும் வகையில், அமைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்திய பின், முதல் பக்கத்தில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் இதுவரை, எண்ணால் மட்டுமே எழுதப்படும்.

புதிய வடிவமைப்பில், எழுத்தாலும் குறிப்பிட வேண்டும். இதுதவிர, ஆசிரியர்கள் கையால் எழுதும் அனைத்து, "பார்மேட்"களும், "பிரின்ட்" முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. "பார்கோடிங்" முறையால், விடைத்தாள் திருத்தும்போது, "டம்மி" எண் வழங்கும் முறையும் ரத்து செய்யப்பட உள்ளது.

விடைத்தாள் திருத்தப்பட்டவுடன், மாணவரின் மதிப்பெண் உடனடியாக ஒருங்கிணைந்த, "டேட்டா சென்டரில்" பதிவாகிவிடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் பணியில் தொடர உரிமையில்லை என நீதிபதி சுட்டிகாட்டியுள்ளார். மேலும் 2014-ம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர்கள் தேர்வை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும்

Thursday, 19 September 2013

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்கப்படும்


காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும் 2-ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

காலாண்டு தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல விலை இல்லா நோட்டு புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.தற்போது அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலாண்டுதேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படுகிறது.அக்டோபர் 2-ந்தேதி விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன.

தற்போது மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்கள் காலாண்டுவரை ஒரு பருவமாகவும், அரையாண்டுவரை 2-வது பருவமாகவும் முழு ஆண்டுக்கு 3-வது பருவமாகவும் வழங்கப்படுகிறது. இது 9-ம் வகுப்புவரை இந்த பருவமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி முதல் பருவம் முடிந்து அக்டோபர் 3-ந்தேதி 2-வது பருவம் தொடங்குகிறது. அன்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.எனவே தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்குவார்கள்.இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறுகையில் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடம் திறந்த அன்று எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்


பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம்.
இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.

ஆன்-லைன் கலந்தாய்வு : பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்களாக உள்ள, 50 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது. பணி மூப்பு தகுதி வாய்ந்த, 50 பேர் பதவி உயர்வு பெற்றனர். இதுபோன்று, 112 உதவியாளர்கள், இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு


வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர் விவரங்கள் அடங்கிய படிவத்தை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது. மாணவர் பெயர், தாய், தந்தை பெயர், தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பள்ளி பெயர், முகவரி, பெற்றோரின் மொபைல் எண், மாணவர் படிக்கும், "குரூப்" விவரம், பாடங்களின் பெயர் என, 11 வகையான விவரங்கள், அந்த படிவத்தில் கேட்கப்பட்டன. 

இதை பூர்த்தி செய்து, மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும் என, இயக்குனர் கூறியுள்ளார். இந்த விவரங்கள் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் என்றும், படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்குப் பதிலாக, வேறு திருத்தம் கோரி, தேர்வுக்குப் பின் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வரவில்லை


இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல் பட்டியலிடப்பட்டது. நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு இன்று மாலைக்குள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய மதியம் 3மணிவரை வழக்கு பட்டியல் வரிசை எண்.26 உடன் முடித்து சில அலுவல் காரணமாக தலைமை நீதிபதி சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பும் தயாராக இருந்த நிலையில் எதிர்ப்பாரா நிகழ்வாக தள்ளி போனது ஏமாற்றமே, எனினும் இவ்வழக்கு நாளை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் சார்பான தீர்ப்பு மீண்டும் தள்ளிபோகியுள்ளது என்பது பதவி உயர்வு மற்றும் புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே!

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

click here to download the DEE proceeding  of DENGUE & OTHER VIRUS FEVER - TAKING PREVENTION MEASURES REG

ஒன்பதாம் வகுப்பு - இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்


முப்பருவமுறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற தனியார் விண்ணப்பிக்கலாம் என, மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
முப்பருவ முறையின் கீழ் 9-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்துக்கான பாடத்திட்டம் www.dse.tn.gov.in மற்றும் www.tnschools.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பாடம் நீங்கலாக இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப்புத்தகங்களின் 2 நகல்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். .
அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர்-செயலர், மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை -6.

இரட்டைப்பட்ட வழக்கு !..... இன்றைய (18.09.2013) நிலை....

இரட்டை பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் இரட்டை பட்டம் பயின்றுள்ளோர் தரப்பு வாதம் இன்று நடந்தது. இன்று இரட்டை பட்டம் பயின்றோர் வாதம் இன்று முடிவுற்றதால், நாளை மூன்று வருட பட்டம் பயின்றோர் வாதம் நடைபெறுகிறது. 
அநேகமாக நாளைக்குள் விசாரணை முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விசாரணை முடிவுற்றால், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 

நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. 
இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத்தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Wednesday, 18 September 2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.

மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வுக்கான அரசாணை

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15

click here-MADURAI HIGH COURT BENCH 3rd INCENTIVE ORDER COPY & G.O 15 dt 28.03.2013 TO GET 3rd Incentive

02.10.2013 முதல் 08.10.2013 வரை "Joy of Giving Week"

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் 02.10.2013 முதல் 08.10.2013 வரை "Joy of Giving Week" அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

click here to download the dee proceeding of Joy of giving week from 02.10.2013 to 08.10.2013 in all schools for std 1 to 8

Tuesday, 17 September 2013

தேசிய திறனறித் தேர்வு : விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேசிய திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் இன்று 17.09.2013 (செவ்வாய்கிழமை) பகல் 12 மணியிலிருந்து 24–ந் தேதி பகல் 12 மணி வரை (www.tndge.in) என்ற இணையதள முகவரியில் தாக்கல் செய்யலாம்.

நாளை இரட்டைப்பட்டம் முடிவு- ?

நாளை (18.09.2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது..அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால்
விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும்.இதனால் பதவியுயர்வுக்காக காத்திருப்போர் பெரும் மகிழ்ச்சி அடைவர்.பெரும்பாலும் நாளை விசாரணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு, அரசுத் தேர்வுத்துறை முடிவு


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின்
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படுகிறது. இதனால் எந்த மாணவருடைய விடைத்தாள், எங்கு மதிப்பீடு செய்வதற்கு செல்கிறது என்று கண்டறிய முடியாது. ஆனாலும், அந்த தாளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்ற நிலை உள்ளது. இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசு தேர்வுகள் துறை, இனிமேல் டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய குறியீட்டை முதலிலேயே பிரிண்ட் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த குறியீட்டை யாரும் சாதாரணமாக காண முடியாதபடி கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே அறியும்படி வடிவமைத்துள்ளனர். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும், வருகிற அக்டோபர் மாதம் நடக்க இருக்கின்ற தேர்விலேயே அமல்படுத்த அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations December 2013


Tamil | English
Online up to
15 Oct 2013

Monday, 16 September 2013

பி.எட்.. இல் புதிய பாடங்களுக்கு அனுமதி...

பி.எட்.. இல் புதிய பாடங்களுக்கு அனுமதி.

பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கல்விக்குழு கூடிய கூட்டத்தில் பி.எட் படிப்பில் புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்படுவதாக பல்கலைக் கழக துணைவேந்தர் அறிவித்தார். 

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதி பெற்று வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில் பி.எட் படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இந்தப் படிப்பில் புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, 'கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டு முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பி.எட்., கல்லூகளில் வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 180 வேலை நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200 வேலை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு

TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு

Saturday, 14 September 2013

தொடக்கக் கல்வி - RTE 2009ன் படி அ.க.இ. கீழ் தோற்றுவிக்கப்பட்ட 3565 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

GO.278 POST CONTINUATION ORDER FOR 3565 SG TEACHERS & 1581 BTs SANCTIONED UNDER SSA REG PAY ORDER

பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை..


பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன், கடந்த, 5ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த துறை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல் முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பல்வேறு அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்ந்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்தும், மாணவ, மாணவியருக்கான நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர், விரிவாக ஆய்வு செய்தார்.

Friday, 13 September 2013

அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொக1(2))த் துறை நாள் :06.09.2013-க்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொக1(2))த் துறை நாள் :06.09.2013-க்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

click here to download -DEE-Dir pro 13368/d4/2011/ -dt 1109.2013 G.O NO 179,DT 06.09.2013-REVISED G.O FOR SELECTION GRADE /SPECIAL GRADE 1.6.1988 TO 31.12.1995 PERIODS

17.09.2013. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம்..

17.09.2013. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம்

DEE-20335/J3/2013-ALL DEEO'S MEETING HELD AT SIEMET CONVERNCE HALL CHENNAI ON 17.092013

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

Thursday, 12 September 2013

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை..

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

GO.141 SCL EDN DEPT DATED.03.09.2013 - COLLECTION OF FUNDS IN SCHOOLS BY THE NATIONAL ASSOCIATION FOR BLIND REG ORDER

மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

GOVT LTR.47913 / PAYCELL / 2012-1, DATED.10.09.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 -- Enhancement of Special Pay based on the recommendations of Pay Grievance Redressal Cell – Orders issued -- Clarification – Click Here...

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள், அடிக்கடி ஏற்படும் பிழைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த பயிற்சியை அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில் படித்து, திருத்தம் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, 11 September 2013

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 12.09.13 ) விடுமுறை...

நேற்று  முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து  முதல்வர் உத்தரவு. +1, +2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு கடைசி தேர்வுக்குப்பின் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் சிறப்பு குறை தீர் முகாமை விரிவுப்படுத்தி புதிய அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD SCHOOL EDUCATION DEPARTMENT G.O NO 258,DT 12.08.2013 SPECIAL GRIEVANCE DAY EXTENDED TO MINISTERIAL STAFFS IN ALL EDUCATION OFFICE REGARDING

EMIS - மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..

EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

click here to download the DEE proceeding of EMIS DATA ENTRY COMPLETION/ GRIEVANCE - TO CONTACT STATE / DISTRICT CO-ORDINATORS REG EMIS ONLINE ENTRY REG



2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

click here to download the DEE proceeding of 2013-14 NEW PRIMARY SCHOOLS DETAIL CALLED REG PROC


Monday, 9 September 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் 25 முதல் தொடர் மறியல்

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சார்பில் சென்னையில் செப்டம்பர் 25 முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கோ.காமராஜ், பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் ஆகியோர் தெரிவித்தனர். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு முழுமையான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இப்போது, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, சென்னை மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு


2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான் பி.எஸ்சி, பி.எட் முடித்துள்ளேன். கடந்த 2010–ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி எனது பெயரும் ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. 13.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.

அதன்பின்பு, எனக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. காரணம் கேட்ட போது, 23.8.2010–க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எனக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, எனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே, என்னை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதே போன்று உத்தமபாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம், மதுரையை சேர்ந்த நிர்மலா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் செய்யது இப்ராகிம் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதி, நிர்மலா சார்பில் வக்கீல் முத்தால்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
‘‘ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்பே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. எனவே, மனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும்.’’
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம். ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)சென்று லாகின் செய்ய வேண்டும்.
2.மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3.டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர்,முகவரி,பாலினம்,பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1.ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2.ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது,அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால்,அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால்,உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3.ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4.எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ,அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5.தேர்ந்தெடுத்த குறிப்புகளை,ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால்,அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்யவேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால்,பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6.முகவரியை அப்டேட் செய்யும் போது,புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7.தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Photo:ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்

கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களுக்கு..

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!
படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள். யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு. கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F
(EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார். ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.(www.eltf.in )

Saturday, 7 September 2013

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..


சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதே இணையதளத்தில் விடைத்தாள்களை மறு மதிப்பீடுசெய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க 17–ந்தேதி கடைசி நாள். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.

துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.

துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.


பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை


காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 6, 7, 8, 9, 10 ம் வகுப்புகளுக்கு, செப்., 12, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 10 முதல் செப்., 21 வரை, காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வினாக் களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, தேர்வு துறையால் "சிடி' அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே,பள்ளி கல்வி இணை இயக்குனர் ஆர். ராஜேந்திரன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,""காலாண்டு தேர்வுகள் நடைபெறும் நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது. பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் வினாத்தாள் கொண்டு செல்லப்படுவதை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் மூலம் கற்பித்த ஆசிரியருக்கு குடியரசுத் தலைவர் விருது


மாணவர்களுக்கு செல்போன் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தி கற்பித்ததற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப்புக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் எஸ்.திலீப் உள்ளிட 9 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப். இவர் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார்.

தமிழகத்திலிருந்து திலீப் தவிர, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குளோரி ரோஸ்லின் என்கிற அறிவியல் ஆசிரியருக்கும் ஐ.சி.டி. விருது கிடைத்துள்ளது. குளோரி ரோஸ்லின் பர்கூரில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.

கேமிரா மொபைல் போன் இருந்தாலே வகுப்பறையை தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் வகுப்பறையாக (ஐஇப இப்ஹள்ள்ழ்ர்ர்ம்) மாற்றிவிடலாம் என்கிறார் திலீப்.

செல்போனில் உள்ள புதிய சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிஹல இலக்கணங்களைக் கற்றுத்தருகிறார்.

மாணவர்களை ஆங்கிலப் பாடல்களை வாசிக்க செய்து செல்போனில் பதிவுசெய்வேன். அதை மீண்டும் வகுப்பறையில் உள்ள எல்சிடி புரஜெக்டரில் திரையிடுவேன். தங்களது உச்சரிப்புகளை பெரிய திரையில் மீண்டும் கேட்கும் மாணவர்கள், பிழைகளைத் தாங்களாகவே சரிசெய்துகொள்வார்கள் என்று திலீப் கூறினார்.

மனப்பாடப் பகுதிகள், ஆங்கிலப் பாடப்பகுதிகள் ஆகியவற்றை வகுப்பறையில் செல்போனில் ஒலிக்கச் செய்வதன் மூலம் மாணவர்கள் மனதில் அவை நன்றாக பதிய வைக்க முடியும். மாணவர்களையே நேரடியாக டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுக்கச் செய்வேன். அந்தப் புகைப்படங்கள் வாயிலாக அவர்களுக்கு பல்வேறு கதைகளை வகுப்பறையில் கற்றுத்தருவேன் என அவர் மேலும் கூறினார்.

இந்த வகுப்புகள் யு டியூப்பிலும் (வர்ன் பன்க்ஷங்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் ஆங்கில மொழி கற்றுத்தரும் விடியோக்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால், இவரது விளக்க உரைகள் தமிழிலும் இருப்பதால் தமிழகத்தில் வேறு பகுதிகளிலும் இவரது விடியோக்களை ஆங்கில வகுப்புகளில் பயன்படுத்துகின்றனர்.

அதோடு இவரது பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியே வலைப் பதிவை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம், ஆங்கிலம் தொடர்பான வினாக்கள் மற்றும் ஆங்கில வகுப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

நாடு முழுவதிலும் இருந்து 67 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக இறுதிசெய்யப்பட்டனர். இதில் 9 பேருக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுடன் பதக்கம் மற்றும் லேப்-டாப், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயன்படும் சாப்ட்வேர் சி.டி.க்களும் வழங்கப்படும்.

Friday, 6 September 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்வு பெற வாய்ப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம்!


           ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
                   மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
                தமிழ்நாட்டில், மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. அந்த தேர்வில் லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதினாலும், வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

               அப்போது, தேர்வுக்கு 1 மணி நேரம் போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால், தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில், தேர்ச்சி விகிதம் சுமார் 3 சதவீதமாக உயர்ந்தது.

                    இந்நிலையில், ஆசிரியர்களுக்கான 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடந்தது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் 4 லட்சம் பேரும் என மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

                    அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

                    தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் கூறியிருந்தது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, சுமார் 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.

                     இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில் 8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.

                           ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், இந்த முறை அதிகமான ஆசிரியர்கள், தேர்ச்சி பெறக்கூடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

       இது ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் செப்டம்பர் 2013 முதல் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

SSA - PART TIME TEACHERS - PAYMENT OF SALARY THROUGH ECS BY VECs REG PROC CLICK HERE...

2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்டம் இடமாறுதல் பெறலாம்: தடையை விலக்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. 

இதில் 2008-ம் ஆண்டு வரை மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால், சில மாவட்டங்களில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற வாறு குறைவான நியமனங்களே நடந்தது.

இதை எதிர்த்து மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வேண்டி வழக்கு தொடரப்பட்டது. மாநில பதிவு மூப்பை அளித்த போதும் மாவட்ட மாறுதல் இன்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

 ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டதால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாவட்ட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது. 

மாநில பதிவு மூப்பு பற்றியோ. மாவட்ட பதிவு மூப்பு பற்றியோ இன்று எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாவட்ட மாறுதல் சம்பந்தமாக இடைக்கால உத்தரவில் உள்ள தடை மட்டுமே இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விடுவிப்பு


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மாண்புமிகு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அவர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரையின்படி வைகைச்செல்வன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இதேப்போல், அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Wednesday, 4 September 2013

ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்” - என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர் வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.

ஆசிரியர் பணியின் அருமை பெருமைகளைக் குன்றாது, குறையாது போற்றிப்   பாதுகாக்கும் தமிழக அரசு, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளித்திடும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1660 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும். இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திடும் ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, ஆசிரியர் தினத்தினை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள SSA இயக்குநர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD THE SSA PROCEEDING TO MAKE NECEESARY ARRANGEMENTS FOR TLM / RP / TEA EXPENTIDURE FOR TEACHERS FROM BRC / CRC CONTIGENCY REG

ஓய்வூதிய மசோதா மீதான விவாதத்தில் அமளி : மக்களவையும் ஒத்திவைப்பு

மக்களவையில் இன்று ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் இன்று ஓய்வூதிய மசோதா மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதனால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

U-DISE குறித்த தேசிய அளவிளான பயிற்சி 13.09.2013 அன்று 10.00 அளவில் செயற்கைக் கோள் (EDUSAT) வாயிலாக அளிக்க SSA திட்டம்

click here to download the ssa proceeding of UDISE Programme by NEUPA on 13.09.2013 at 10.00am by EDUSAT

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார்.


 தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார். நேரில் வர இயலாத வெளி மாவட்ட மாணவ, மாணவியர், கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிவித்தால்,
உடனடியாக பதிலளிக்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 3 September 2013

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ..

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்களுக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.மாவட்டங்களில் இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கில் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒருவரும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்..


                     மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. 

                   "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான்.தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். 

                          குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

                  42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

                 அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச் செய்து வந்த திருடனை ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். பள்ளியில் இருக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலை குனிவானது. அதே போல் முன்பு போல் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. பள்ளியின் வகுப்பறைகளில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் தன்னிடம் டியூஷன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

                      பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களிடமும் காலப்போக்கில் பலவித குற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. இவை தவிர பிற நாடுகளில் ஆசிரியர்கள் மாணவர்களி;ன் தனிப்பட்ட நலனில் அக்கறைகாட்ட மாட்டார்களாம். ஆனால் இந்தியாவில் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டி அடிக்க வேண்டும் பொழுது அடித்தும் படிக்க வைத்தனர். தற்பொழுது ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனை பெரிதாக்கும் நிலையும் இருந்து வருகிறது. மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

                       ஆசிரியர் எப்பொழுதும் எரிகின்ற விளக்கைப் போன்றவர். அவர்தாம் பல விளக்குகளை – அறிவொளியை ஏற்றத்தக்கவர். கால நேரம் கருதாது உழைப்பவர். தம் மக்கள் – மாணவர் நலனையே முதன்மையாகக் கொள்பவர். ஊதியங் கருதி உழைகாது தம் மாணவர் உயர்வை எண்ணியே உழைபவர்; அவ்வுழைப்பில் இன்பம் காண்பவரக ஆசிரியப் பணி செய்ய அனைவரும் உழைக்க வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் 115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு


தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

Monday, 2 September 2013

4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்


"தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார்.

மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் "இன்ஸ்பையர்டு" விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாக (இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூட் பார் இன்ஸ்பைர்டு ரிசர்ச்- இன்ஸ்பையர்) நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட கண்காட்சியிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள், படைப்புகளுடன் பங்கேற்றனர்.

கண்காட்சியை கலெக்டர் சுப்ர மணியன், மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தனர். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ""மதுரையில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,&'&' என்றார்.

அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வரவேற்றார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ஏ.சங்கர் பேசியதாவது: இளம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் செயல்படுத்துகிறார். கல்வித்துறையில் 4,340 பள்ளிகளில், ஐ.சி.டி., என்னும் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 21ம் நூற்றாண்டில் மரபணு பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை மனித வளர்ச்சிக்கு பலவகை களில் உதவி வருகிறது, என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, இணை இயக்குனர் செல்லம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி பங்கேற்றனர். அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் நன்றி கூறினார்.

நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல் சென்னையில் விழா நடத்தி கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி அரசால் கெளரவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதிவாய்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. 
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று மாலை தகவல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் சார்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் அறியலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.