test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 29 August 2013

IGNOU- Hall Ticket for BE.d / M.ED Entrance Exam 2013

IGNOU- Hall Ticket for BE.d / M.ED Entrance Exam 2013


காலியிடம் இல்லை என சம்பளம் மறுப்பதா? ஆசிரியருக்கு சம்பளம் வழங்க ஐகோர்ட் உத்தரவு


காலியிடம் இல்லை எனக் கூறி, எந்தப் பள்ளியிலும் வேலையில் சேர்க்கப்படாத, இடைநிலை ஆசிரியருக்கு, ஓராண்டுக்கு உரிய, சம்பளப் பாக்கியையும், தொடர்ந்து சம்பளமும் வழங்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர், சூசை மகேஷ். இங்குள்ள, புனித மேரி தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக, 2005ல் நியமிக்கப்பட்டார். இந்தப் பள்ளி, அரசின் நிதி உதவி பெறுகிறது. நிரந்தர பணியிடம் என்பதால், நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து, மாதச் சம்பளம் பெற்று வந்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், இப்பள்ளி மூடப்பட்டு விட்டது. பின், பள்ளிக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், வாபஸ் பெறப்பட்டது. மனுதாரர் நியமிக்கப்பட்ட பணியிடத்தை, கூடுதல் பணியிடமாக அறிவித்து, சூசைக்கு சம்பளம் வழங்க கல்வித்துறை மறுத்தது.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், சூசை மகேஷ் தாக்கல் செய்த மனுவில், "காலியிடங்கள் உள்ள பள்ளிகளில், என்னை நியமிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரைத்துள்ளார். எந்தப் பள்ளியிலும் சேர, நான் தயாராக உள்ளேன். இதுவரை, பள்ளி கல்வித் துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், சம்பளம் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: கீழ் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள, பள்ளி மூடப்பட்டதால், செண்பகராமன் புத்தன்துறையில் உள்ள பள்ளியில், மனுதாரர் நியமிக்கப்பட்டார். அந்தப் பள்ளியிலும், காலியிடம் இல்லாததால், அவரை சேர்க்கவில்லை. திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, இம்மாதம், 16ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, ஏதாவது ஒரு பள்ளியில், மனுதாரரை சேர்க்கும்படி கோரியுள்ளார். இதற்கிடையில், குமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் சேர்க்கவும், சம்பளம் வழங்கவும், மனுதாரர் கோரியுள்ளார். எனவே, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், மனுதாரருக்கு, பள்ளி கல்வித் துறை சம்பளம் வழங்க வேண்டும்.

சம்பளப் பாக்கித் தொகையை, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அதன்பின், வேறு பள்ளியில் சேரும் வரை, மனுதாரருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் இடைக்கால உத்தரவிட்டுள்ளார்.


அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

SPD - SPD ORDERED TO MAKE NECEESARY ARRANGEMENTS FOR TLM / RP / TEA EXPENTIDURE FOR TEACHERS FROM BRC / CRC CONTIGENCY REG

SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.

தாள் 1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் 2 மார்க் போனஸாகவும், தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேட்கப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது.

TRB வெளியிட்டுள்ள விடைகளின் ஏதேனும் தவறுகள் இருக்கும் எனில் உங்கள் ஐயங்களை சரியான காரணங்களுடன் Comment Box-ல் பதிவு செய்யவும்.உங்களது சரியான விடைகள் சரிபார்க்கப்பட்டு TRB -க்கு அனுப்பப்படும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை  மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் தாங்கள் பங்குகொள்ள , தங்களின் அதரவை தெரிவிக்க hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும். 
தகவல்-புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு இயக்கம் -சென்னை 

Wednesday, 28 August 2013

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்..

8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்
தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
 புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனராக மதிப்புமிகு. பூஜா குல்கர்னி அவர்களை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tuesday, 27 August 2013

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்களுக்கு சிக்கல்..


பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும்.

இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.

இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

குரூப் 4 தேர்வு விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு |

குரூப் 4 தேர்வு விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு | TNPSC Group 4 Tentative Answer Keys

click here to download TNPSC Group 4 official Tentative Answer Keys

இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.
எனவே அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் விராசணைக்கு நிச்சயம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2

TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்

Monday, 26 August 2013

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ தமிழ் வழிக்கல்வியில் அரசு/ அரசு நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் 2013-14ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணம் பெறப்படுவதை, இரத்து செய்து, ஈடுசெய்ய நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம்?

அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இன்றும், நாளையும் மாற்று பணி மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னை
உயர்நீதிமன்றத்தில் நாளை வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நாளை வருவது சந்தேகம் தான் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் வழக்கு 29.8.2013 அன்று வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி


சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதுகுறித்து, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, தமிழக நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், எட்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் தினமும், 60 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுடன், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, பிரசார வழிகாட்டு பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளில், மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட உள்ளனர்.

எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு..


                 எம்.எட்., தேர்வு முடிவு, இன்று (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

               தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பல்கலையின் இணைப்பு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களில், எம்.எட்., தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, இன்று (26ம் தேதி), www.tnteu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
               தேர்வு முடிவு குறித்த தொகுப்பு பட்டியல், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ், செப்., 2ம் தேதிக்குப் பின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெறவும், உரிய விண்ணப்பங்களில், செப்., 5ம் தேதிக்குள், "தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை - 5" என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்


தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.‌என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்கள் சேகரிக்க முடிவு.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர். இந்த பிரச்னையை, முற்றிலும் தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன், 11 வகையான விவரங்கள் மற்றும் மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகிய, நான்கு பேரிடமும் கையெழுத்து பெற, தேர்வுத்துறை, ஏற்பாடு செய்துள்ளது.

பொதுத்தேர்வை எழுதியதற்குப் பிறகோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ, "மதிப்பெண் சான்றிதழில் உள்ள விவரங்களில், பல பிழைகள் உள்ளன, அதை சரிசெய்து தாருங்கள்" என கேட்டு, ஏராளமானோர், தேர்வுத்துறையிடம் விண்ணப்பிக்கின்றனர். இது, தேர்வுத்துறைக்கு, பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

இந்த பிரச்னையை, நிரந்தரமாக தீர்க்கும் வகையில், இயக்குனர் தேவராஜன், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 11 வகையான விவரங்கள் அடங்கிய படிவத்தை, மாணவர்களிடம் வழங்கி, அதில், மாணவர்களின் புகைப்படத்துடன், மாணவர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரிடமும், உறுதிமொழி கையெழுத்தை பெற, ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு: வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள், வரும், 26ம் தேதி முதல் சேகரிக்கப்பட உள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். ஒருசில பெற்றோர், குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் போது, பெயர், இனிஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை, தவறாக வழங்கி விடுகின்றனர். இதனால், மதிப்பெண் சான்றிதழிலும், தவறான விவரங்கள் பதிவாகி விடுகின்றன. இதனால், மாணவர்கள், உயர்கல்விக்குச் செல்லும் போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைகளை சரி செய்ய, அதிக கால தாமதமும் ஏற்படுகிறது. 

இதை தவிர்க்க, தற்போது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவ, மாணவியரிடமும், உறுதிமொழிச் சான்றிதழ் படிவம் வழங்கப்படும். இதில், பெயர், இனிஷியல், பிறந்த தேதி, மாணவர் எந்த வகுப்பை சேர்ந்தவர் (ஜாதி) என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொண்டு, அதை, பதிவு செய்ய வேண்டும்.

இந்த படிவங்களை, 26ம் தேதி முதல், செப்டம்பர், 7ம் தேதிக்குள், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோர், பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். சான்றிதழ்களை பெற இயலாத பெற்றோர், அவர்கள் அளிக்கும் உறுதிமொழி ஆவணத்தின் அடிப்படையில், விவரங்கள் அனைத்தும் பதியப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Sunday, 25 August 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி"

தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை முதல், செப்., 11ம் தேதி வரை, "திறன் வளர் பயிற்சி" வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு, பாடங்களை எளிமையாக கற்பிக்க, முதுகலை ஆசிரியர்களுக்கு, திறன் வளர் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் பாட வாரியாக பயிற்சி பெற்ற, முதன்மை கருத்தாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பேராசிரியர்களை கொண்டு, இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.வரும், 26, 27ல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல், கணக்கு பதிவியல்; ஆக., 29, 30ல், கணிதம்; செப்., 2, 3ல், இயற்பியல்; செப்., 6, 7ல், வேதியியல்; செப்., 10, 11ல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த கல்வி ஆண்டில், தமிழகத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரத்தை, ஆன்- லைனில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்துடன், பெற்றோரின் மொபைல் எண்களும், ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.பொதுத்தேர்வு முடிவுகளை, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பவும் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்..


மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை போன்று சரளமாக ஆங்கிலம் பேச தயங்குகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்ள, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர் புராஜெக்ட் 100' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
டில்லி மற்றும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 100 பள்ளிகள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஏழு பள்ளிகளிலும், கோவை மாநகராட்சியில் 13 பள்ளிகளிலும் "இங்கிலீஷ் ஹெல்பர்' திட்டம் துவங்கப்படுகிறது. கோவையில், ஒப்பணக்கார வீதி (பெண்கள்), ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, ராமகிருஷ்ணாபுரம், 

பீளமேடு, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், செல்வபுரம் (பெண்கள்), கே.கே.புதூர், ராமலிங்கம்காலனி, கோவில்மேடு, புலியகுளம், வரதராஜபுரம், அனுப்பர்பாளையம் ஆகிய உயர்நிலைப்பள்ளிகளிலும், "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு துவங்கப்படுகிறது. பள்ளியில் 6 - 8ம் வகுப்புக்கான ஆங்கில பாடம் "சாப்ட்வேர்' மூலம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பாடம் நடத்துவது போன்று, "ஆடியோ விஷுவல்' முறையில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். ஆனால், "இங்கிலீஷ் ஹெல்பர் சாப்ட்வேர்' மூலம் பாடத்திலுள்ள சந்தேகங்கள் நீங்கும் வரையிலும், பாடம் கற்கலாம். இதற்காக "ஹெட் போன்' வழங்கப்படுகிறது. பாடத்தில் சந்தேகம் ஏற்படும் இடத்தில், கம்ப்யூட்டரில் தேர்வு செய்தால், எதிர்சொல், இணைச்சொல், பொருள் போன்றவற்றை காண முடியும். பாடத்தை பார்ப்பதை போன்று, "ஹெட் போன்' உதவியுடன் கேட்கவும், முடியும். இத்திட்டத்தால், ஆங்கில பாடத்தில் தவறுகள் ஏற்படாது; அர்த்தம் புரியாத வார்த்தைகளை உடனுக்குடன் தெரிந்து படிக்கலாம்; ஆங்கில பேச்சு திறன் மேம்படும். மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட 

ஆசிரியர்களுக்கு "இங்கிலீஷ் ஹெல்பர்' பயிற்சி கொடுத்து, அதன்பின், மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது.

"அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' நிர்வாகி அலெக்ஸாண்டர் கூறுகையில், ""கோவை மாநகராட்சியில் 13 பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு படிக்கும் 2424 மாணவர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்' மூலம் ஆங்கிலப்பாடம் போதிக்கப்படும். இதற்காக, 26 ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) பயிற்சி வகுப்பு நடக்கிறது. பள்ளிகளுக்கு தலா ஐந்து கம்ப்யூட்டர்கள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் மூன்று வகுப்புகள் இங்கிலீஷ் ஹெல்பர் வாயிலாக கற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில திறன் மேம்படும்,'' என்றார்.

ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2 படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, 21 August 2013

2014ல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு

பள்ளிக்கல்வி - ஆகஸ்ட் 16 முதல் 22 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு கடிதம் வெளியீடு

மேல்நிலை (HSC) மற்றும் பத்தாம் வகுப்பு S S L C பொது தேர்வுகள், மார்ச்/ஏப்பரல் 2014-பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் (DECLARATION FORM ) பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

பள்ளிக்கல்வி - ”SAVE PAPER - SAVE TREES” - பள்ளிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ஒரு பக்கத்தில் (ONE SIDE) மட்டும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியிட்டுள்ளார்

click here to download the DEE proceeding of RevisedGuidelines  for Republic Day - Chess Game Project for 7 to 14 age children

SPECIAL ALLOWANCE மற்றும் PERSONAL PAY - விளக்கம்

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.
SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010. 

    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர். 

பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது. 

சிறுவிளக்கம் உங்களுக்காக:

     இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

      அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய  நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம்  பொறுமையாக படியுங்கள்.

  S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால் 

1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண     நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )

2.  1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று  5200 - 20200 + தனி ஊதியம் 2800                 பெற்றுகொண்டிருப்போர்.

3.   இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.

4.   இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்            
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
  
இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண்  3 மற்றும் 4 இல் உள்ளவர்கள்  அரசாணை  23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள  " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை? 

   அவர்களுக்கு  "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:

 பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு  தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர். 

    இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும்  தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

  இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள். 

கூடுதல் பதிவுகள் தொடரும். 
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு 

தற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள், அச்சுப்பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக,முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன

Thursday, 15 August 2013

இரட்டைப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை - மூன்று வருட பட்டபடிப்பு பயின்று வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு


ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்  பதவி உயர்வுக்கும் இடமாறுதலுக்காகவும் காத்திருக்கிறார்கள் ஏனென்றால்  இரட்டைப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே பதவி உயர்வும் இடமாறுதலும் பெறமுடியும் என்ற சூழ்நிலை உள்ளது.

இவ்வழக்கை ஒவ்வொரு முறையும் முழு முயற்சி மேற்கொண்டு விசாரணைக்கு எடுத்து வருவது நாங்களே (மூன்று வருட பட்டபடிப்பு பயின்றவர்களின் சார்பாக வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு) இருந்த போதிலும் எதிர்தரப்பினர் ஆர்வம் காட்டாமையால் சில காரணங்கள் சொல்லப்பட்டு வழக்கு தள்ளிபோடப்பட்டு வருகிறது.

இவ்வாறாக வழக்கு தள்ளிபோவதால் பாதிக்கபடுவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமே என்பதை உணர வேண்டும். ஏனென்றால் பதவி உயர்வு பெற ஆசிரியர்களின்  முன்னுரிமை (Seniority)  தள்ளிப்போவதுடன் பல பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்த பல ஆசிரிய நண்பர்கள் அனைவரும் எப்போது இவ்வழக்கு முடிவு பெறும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.அவர்களின் மனக்குமுறல்கள் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உணர வேண்டும் .

ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதெல்லாம் எங்கள் தரப்பினால் ( மூன்று வருட பட்டபடிப்பு பயின்றவர்களின் சார்பாக வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு.)வழக்கு தாமதம் ஆகிவிடக்கூடாது  என்ற கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் ஆஜராகி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர் .

மேலும் வழக்கைத் தொடுத்தவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமே என்பதை உணர வேண்டும் .வழக்கு எந்த நிமிடத்தில் விசாரணைக்கு வந்தாலும் எங்கள் தரப்பு வழக்கறிஞர்கர்கள்  விசாரணைக்கு தயாராக உள்ளனர் .மேலும் ஒவ்வொரு முறையும் விசாரணைக்குகொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் .

இதே போல எதிர்தரப்பும் ஆர்வம் காட்டினால் வழக்கை விரைந்து முடிக்கலாம் .தள்ளிபோவதால் எந்த பயனும் வர போவதில்லை. இந்நிலையில் வருகின்ற 22.08.2013 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் பொழுது ஒரு தரப்பு மட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் இரு தரப்பும் ஆஜராகினால் வழக்கை அன்றே முடித்து தீர்ப்பு கிடைக்கப் பெற்று ஒட்டுமொத்த ஆசிரியர்கள் வாழ்கையில் ஒளி ஏற்றலாம் என்பதை உணர வேண்டும்.

- மூன்று வருட பட்டபடிப்பு பயின்று  வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு 

EMIS - தொடக்கக் கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை - மாணவர்களின் விவரம் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் - விடுப்பட்ட பள்ளிகளை ஆன்லைனில் 23.08.2013க்குள் பூர்த்தி செய்ய உத்தரவு

DEE - EMIS - PENDING SCHOOLS ENTRY - TO BE FINISHED WITHIN 23.08.2013 REG PROC CLICK HERE...

67 வது சுதந்திர தினவிழா தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இன்று 15.08.2013 தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் திரு ஆர். இளங்கோவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


டி.இ.டி., தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"


ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.

* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.

* தமிழில் நூலாசிரியர்கள், தமிழ் எண்கள், பா வகை, யாப்புவில் தளை, அணி, ஆகுபெயர்களை படிக்க வேண்டும்.

* குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில், கோட்பாடுகளை கூறியவர்கள், பயன்பாடு, தோன்றிய ஆண்டு, உளவியலில் பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.

* ஆங்கிலத்தில் சுருக்கு வடிவத்தின் விரிவாக்கம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான, எதிர்மறை சொற்கள், பறவை, விலங்குகளின் ஒலிகள், அவற்றின் பாலினங்கள், அவற்றின் கூட்டப் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

* கணக்கில் எண்ணியல், பரப்பளவு, கனஅளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, சராசரி, புள்ளியியல் பாடங்களில் முக்கிய சூத்திரங்கள் தெரிவது அவசியம்.

* இயற்பியலில் அலகுகள், விதிகள், பயன்கள் தெரிந்து இருக்க வேண்டும். வேதியியலில் தனிமங்களின் குறியீடுகள், சேர்மங்களின் பயன்கள், வேதிப்பெயர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.

* தாவரவியலில் செல்கள், வைரஸ், பாக்டீரியா போன்ற பகுதிகளை நினைவுபடுத்தவும்.

* உலக புவியியலில் கோள்களின் சிறப்பம்சங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், உலகில் நடைபெற்ற முக்கிய பேரழிவுகள், நடந்த ஆண்டு, இந்திய மலைகள், காடுகள் தொடர்புடைய பகுதிகளை அறிந்திருக்க வேண்டும்.

* மனித உடலியல் பகுதியில் நோய்கள், வைட்டமின்கள், ரத்தசெல்கள் பற்றி அறிய வேண்டும்.

* வரலாறு பகுதியில் முக்கிய போர்கள், நடந்த ஆண்டு, சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், நூல், நூலாசிரியர்கள், இயக்கங்களை தோற்றுவித்தவர்கள்.

* அரசியல் அமைப்பின் முக்கிய ஷரத்துகள் (குறிப்பாக குழந்தை கல்வி தொடர்பானவை), அட்டவணைகள், சட்ட திருத்தங்கள் அறியவேண்டும்.

* சூழ்நிலையியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகள், தினங்கள், சட்டங்கள், கல்வி தொடர்புடைய தினங்கள், தேசிய நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்த வேண்டும்.

* விண்வெளி தொடர்புடைய நிகழ்வுகள், ஆண்டுகள், மையங்கள், ஊராட்சி நிர்வாகம், தமிழக வரலாறு தொடர்புள்ள நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியம்.

கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில், பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தும், நேர மேலாண்மை தெரியாததால் பலர் தோல்வி அடைந்தனர். எனவே, வீட்டிலேயே மாதிரி தேர்வுகளை எழுதிப் பழகலாம்.

150 வினாக்களில், முதலில் நன்கு தெளிவாக தெரிந்த விடைகளை எழுதியபின், மற்ற வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் கிடையாது. எனவே, எல்லா வினாக்களுக்கும் விடையளித்து விடவும்.

தேர்வுக்கு முன்தினம், நன்கு தூங்க வேண்டும். தேர்வு நாளில் ஹால் டிக்கெட், பால் பாயின்ட் பேனாவை முதலிலேயே எடுத்து வைத்து, கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.

நேர மேலாண்மைக்கு கடிகாரம் அணிந்து செல்வது நல்லது. தேர்வு மையத்தை முன்தினமே அறிந்து வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றையும்விட, "என்னால் வெல்ல முடியும்" என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்தார். தொடர்புக்கு 90470 34271

RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு..

G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.

தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION  பற்றி ஒரு சிறு விளக்கம்.

    1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது,    முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய  விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம். 
RE-OPTION பற்றிய விளக்கம்.
      மேற்கண்டவாறு அனுமதிக்கப்பட்ட வாய்ப்பை  பயன்படுத்தத் தவறியவர்கள் தற்போது பயன்படுத்திகொள்ளலாம். இதுவே RE-OPTION.

RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான அடிப்படை ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர்  விளக்கம்.

        இந்த அரசாணையில் RE-OPTION பற்றி குறிப்பிடுகையில்  "re-option should not be in any case lead to fixation of a lower pay than what has already been fixed". என்ற வரிகளும்  உள்ளது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை விட குறைவான தொகை RE-OPTION செய்யும் போது  நிர்ணயிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதாகும்.

       ஆனால் தற்போது  RE-OPTION கொடுத்தால், பெற்று வருவதை விட குறைவான ஊதியம் பெறும்  நிலை தான் உள்ளது. பெரும்பாலும் 1.1.2009 முதல் 31.5.2009 -க்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஊதிய விகிதத்தில்  தேர்வு நிலை பெற்றிருந்தவர்கள்  தான் OPTION கொடுக்க தவறியிருப்பார்கள். 

   உதாரணத்திற்கு 5.1.2009 இல் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றவர்கள் தற்போது RE-OPTION கொடுத்தால் தற்போது அவர்கள் பெற்றுவரும் அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயிக்க இயலும் என்பதை உங்களுக்காக விளக்குகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

5.1.2009 இல் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றவர்கள் OPTION கொடுக்காமல் 1.1.2006 இல் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து வரும் நிலையில் தற்போது அவர்களது ஊதியம்.               (தற்போதைய 3% + 3% Grant of one additional increment -ம்   சேர்த்து கணக்கிட்டு காட்டப்பட்டுள்ளது.)

5.1.1999 இல் நியமனம் பெற்றவர் ஊதியம் 31.12.2005 இல் 5250. இவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்து பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஜனவரி ஆண்டு  ஊதிய உயர்வினை பெற்றிருப்பர்.

1.1.2006 இல் ஊதியம்         5250 x 1.86 =  9765 + G.P.2800 =  12565

1.1.2006 இல் Increment           12565 + 380             =   12945

1.1.2007 இல் Increment           12945 + 390             =   13335

1.1.2008 இல் Increment           13335 + 400              =   13735

1.1.2009 இல் Increment           13735 + 420              =   14155

5.1.2009 ல் Sel.Gr.(3%+3%)    14155 + 430 + 430    =  15015

1.1.2010 இல் Increment           15015 +450               =  15465

1.1.2011 இல் P.P + Increment  (15465 +750) + 490  =  16705

1.1.2012 இல் Increment             16705 + 510            =   17215

1.1.2013 இல் Increment             17215 + 520            =   17735
======================================================================

தற்போது RE-OPTION கொடுத்தால் பெறக்கூடிய ஊதியம்.

1.1.2009 இல் பெற்ற பழைய ஊதிய விகித  ஊதியம்         =   5750.

5.1.2009 இல் தேர்வு நிலை ஊதியம்           =      5750 + 125   =   5875

5.1.2009 இல் RE-OPTION கொடுப்பதால்
பெறக்கூடிய ஊதிய நிர்ணயம்                   =      5875 x 1.86  =  10928    

GRADE PAY  சேர்த்து ஊதியம்                       =  10928 + 4300  =  15228

1.1.2010 இல் Annual Increment                              =  15228 + 460    =  15688

1.1.2011 இல் Annual Increment                              =  15688 + 470    =  16158    

1.1.2012 இல் Annual Increment                              =  16158 + 490     = 16648

1.1.2013 இல் Annual Increment                              =  16648 + 500     =  17148

========================================================================
     
RE-OPTION வாய்ப்பை 5.1.2009 இல் தவற
விட்டவர் தற்போது பெறும்  ஊதியம்          = 17735
 
தற்போது RE-OPTION வாய்ப்பை பயன்
படுத்தினால் பெறக்கூடிய ஊதியம்              = 17148
                                                      ----------------
  குறைவான ஊதியம்                  587
                                                      ----------------


உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.

2013-14 ஆம் கல்வியாண்டு - தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.

DEE - AEEO / AAEEO TRANSFER & MIDDLE HM TO AEEO / AAEEO TRANSFER COUNSELLING ON 20.08.2013 AT CHENNAI - S.NO.251 TO 350 - PROC CLICK HERE...


NOTE : TO VIEW SENIORITY LIST AFTER DOWNLOAD.


Communicative English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

SCERT - ENGLISH COMMUNICATIVE SKILL TRAINING FOR 40% PRIMARY ON 24.08.2013 & UPPER PRIMARY TEACHERS TRG ON 07.09.2013 REG PROC CLICK HERE...



குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள்..

7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான செயல்த்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியீட்டுள்ளார்


வருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்


"பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியும், (கல்லூரிக்கான இடத்தை சேர்க்காமல்)15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இதில் 3 கோடி ரூபாய் மத்திய அரசும், 2 கோடி ரூபாய் மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தனியார் அமைப்பு வழங்க வேண்டும். கல்லூரிக்கான இடத்தை தனியார் அமைப்பு உருவாக்கி தர வேண்டும். மாநில அரசுகளும் குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அட்மிஷன், அந்தந்த மாநில விதிமுறைகளின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 14 August 2013

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒருவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒருவழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொண்ட தனி நீதிபதி அவர்கள் வழக்கின் முக்கியவத்தை கருதி தனி நீதிபதி அவர்கள் இந்த வழக்கு மற்ற வழக்குகளுடன் சேர்த்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஒருங்கிணைத்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருகிறது.இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்களின் முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே 2012ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.ஏங்கெல்ஸ் என்பவர் ஒரு வழக்கும், இதையடுத்து வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  34 ஆசிரியர்கள் தொடுக்கப்பட்ட வழக்கு  உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து இந்த வழக்கை மறுசீராய்வு செய்ய  கோரி மனு தாக்கல் செய்து தற்பொழுது நிலுவையில் உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி

TN GOVT PRESS RELEASE NO.216 DATED.14.08.2013 - Independence Day message of the Honble Chief Minister - dated 14 August 2013 Click Here...

ஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்தம் - தமிழ்நாடு மாநிலப் பணி / பிறவகை பணிகளின் கீழுள்ள ஒய்வு பெற்றவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் மீது அரசு / சம்பந்தப்பட்ட துறை, அந்த ஒழுங்கு நடவடிக்கையின் மீது, நடவடிக்கை மேற்கொள்வது - அதிகாரம் வழங்குவது குறித்த திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு

Pension – Tamil Nadu Pension Rules, 1978 – Amendment to rule 9 of the Tamil Nadu Pension Rules, 1978 - Order - Click Here...

பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்குழு கூட்டம், நாளை நடத்த வேண்டும்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) நடத்தப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான தமிழரசு கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் செயல்முறைப்படி, தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்புக்கூட்டம் சுதந்திர தினமான நாளை (15ம் தேதி) நடத்தப்பட வேண்டும்.
அதன் தலைவரான பள்ளி தலைமையாசிரியர் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில், குழு உறுப்பினர்களான 9ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகளுக்கான உதவி தலைமையாசிரியர், உள்ளாட்சி வார்டு உறுப்பினர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆகியோர் பங்கேற்கும் வகையில், குழு தலைவர் தெரியபடுத்த வேண்டும்.
கூட்டத்தை நடத்தி, நடவடிக்கை குறித்து உரிய பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு CBSE உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தும் 31.08.2013 அன்று ஈடுசெய்யும் வேலை நாளாகவும் அறிவித்து அரசாணை 131 வெளியீடு

சுதந்திர தினம்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை கிடுக்கிப்பிடி


சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், ஆக., 15ம் தேதியன்று, சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். அன்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு எந்த ஆசிரியர்களும் வருவது கிடையாது. பள்ளியில் உள்ள வாட்ச்மேன்கள், பள்ளிகளில் கொடி ஏற்றி விடுகின்றனர். பல பள்ளிகளில், தலைமையாசிரியர் மட்டும் வருகை தந்து கொடி ஏற்றிச் செல்வார். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதாவது: சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் குறித்து, தனி வருகைப் பதிவேட்டில், பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தெரியப்படுத்த வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும். சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், மாணவர்களுக்குக் கட்டுரை, ஓவியம், கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகள் நடத்தப்பட்ட விவரத்தை, போட்டோவுடன், முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


Monday, 12 August 2013

அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு..


 தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை
எடுத்து வருகிறது. குறிப்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டு முதல், தமிழகம் முழுவதும் உள்ள 4,340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம், மத்திய அரசு நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு பள்ளிக்கு, தலா 19 லட்சம் ரூபாய் என, மொத்தம் 86 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் கம்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்க வேண்டும். மேலும், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனம் செய்து, மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப கல்வி குறித்து கற்பிக்கப்பட உள்ளது.

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை தமிழக அரசு உத்தரவு


அரசு பள்ளிகளில் கடந்த 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது.  இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு...


பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. 

*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,

*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி  அவர்களையும்,

*இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும்,

*இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும்,

*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்)  திருமதி.லதா அவர்களையும்,

*இணை இயக்குநர்  (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்)  திரு.செல்வராஜ் அவர்களையும்,

*இணை இயக்குநர்  (அனைவருக்கும் கல்வி இயக்கம்)  திரு.நாகராஜ முருகன் அவர்களையும்,

*இணை இயக்குநர் (மாநில கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) திருமதி.ஸ்ரீதேவி மற்றும் உமா அவர்களையும்,

*இணை இயக்குநர் (அரசுத் தேர்வுகள் இயக்ககம்) திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களையும்,

*இணை இயக்குநர் (நூலகம்) திருமதி.சுகன்யா அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.ஆர்.பி யின் அற்புதச் சேவை...

 தொலைப்பேசியில் புகார் கொடுத்தால், நிவர்த்தி செய்து தேர்வர்களுக்கு தொலைப்பேசியில் தகவல்

ஹால் டிக்கெட்டில் உள்ள பிழைகளை குறிப்பிட்டு டி.ஆர்.பி வெளியிட்ட ஹெல்ப் லைனுக்கு அழைத்தாலே, உங்கள் பதிவு எண், விண்ணப்ப எண் மற்றும் உங்கள் தொலைப்பேசி எண்ணைக் கொண்டு அவை சீர் செய்யப்பட்டு, புகார் அளித்தவர்களுக்கு அவர்கள் அளித்த தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து. புதிய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துக்கொள்ள அலோசனை வழங்குகிறார்கள். 

TNTET HELP LINE 
044 - 28272455, 64525208, 64525209 

டி.ஆர்.பி-யின் இந்த சேவை தேர்வர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தவறாக மாவட்டத்தை Coding செய்தவர்களுக்கும் அதை குறிப்பிட்டு விண்ணப்பித்து வேண்டுவோர்க்கு மாற்றி வழங்கினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதுகின்றனர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளிஆசிரியர் கூட்டணியினர் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டம்

7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளதாக உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவரும், அகில இந்திய பொதுச் செயலருமான சு. ஈசுவரன் தெரிவித்தார்.

சிவகங்கையில் சனிக்கிழமை மாலை, ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு 6-ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியம் போல் தமிழ்நாடு அரசும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் 1.1.2006 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வியியல் கல்வி கற்று ஆசிரியராகத் தேர்வு பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்பது தேவையற்றது. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பகுதிநேர தொழில்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும்.

பின்னர் நடைபெற்ற தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் எஸ். அந்தோணிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் (ஓய்வு பிரிவு) என். முத்தையா முன்னிலை வகித்தார். தொடர் மறியல் குறித்து கூட்டணியின் மாநில பொருளாளர் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலர் அ. ஜோசப் சேவியர், இயக்கப் புரவலர் எஸ். பொன்ராஜ், மாநிலத் தலைவர் கோ. காமராஜ், பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

Friday, 9 August 2013

Thursday, 8 August 2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களின் "ரம்ஜான்" திருநாள் வாழ்த்துச் செய்தி

TN GOVT PR.NO.213 DATED.08.08.2013 - RAMZAN GREETING MESSAGE FROM THE HONBLE CHIEF MINISTER CLICK HERE...

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு

TN GOVT PR NO.435, DATED.08.08.2013 - Honble Chief Minister Merit Award Scheme for Backward Classes, Most Backward Classes, Denotified Communities and Minority students Click Here...

U-DISE - பள்ளிகளின் பட்டியலை இறுதி செய்தல், அறிக்கை சமர்பித்தல் அறிவுரை வழங்கி அகை மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

click here to download the ssa proceeding of UDISE reg Guidelines

அனைத்து வகை பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் 15.08.2013 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

அகவிலைப்படி கணக்கீடு செய்யும் முறை..


ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர்.

அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217, நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76ஐ கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.

இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை ஆகும்.

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை..

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.
தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

 வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெளிவிரை கடிதத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அரசாணை  எண் .18ன் படி ஊக்க ஊதியம் பெற்று கொள்வதற்கான வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கெனவே  ஆசிரியர்கள் பெற்ற எம்.பில்., ஊக்க ஊதியத்தை திரும்ப அரசு கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தபின்பே தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 7 August 2013

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு..


ஆகஸ்ட் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு
நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.

தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை, முழுவீச்சில் செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.இவ்வாறு, விபு நய்யார் கூறினார்.

இவராவது கவனிப்பாரா? : ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு செய்யும் பணியை செய்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, இதுவரை பதவியில் இருந்த தலைவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பதவியேற்றுள்ள புதிய தலைவராவது, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கவும், டி.ஆர்.பி.,யின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

RMSA - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

RMSA - SMDC - DIRECRTOR ORDER TO OFFICIALS, ALL HIGH / HS SCHOOLS TO CONDUCT SMDC SPECIAL MEETING ON 15.08.2013 REG PROC CLICK HERE...

2012-13ம் கல்வியாண்டில் வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்க திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு| BTRE Seniority List 2012-13

click here to download the DSE Proceeding  BRTE List 2012-13

 click here to download the Tamil BRTE List 2012-13

click here to download the English BRTE List 2012-13

click here to download the Maths BRTE List 2012-13

click here to download the Chemistry BRTE List 2012-13

click here to download the Physics BRTE List 2012-13

click here to download the Botony BRTE List 2012-13

click here to download the Zoology BRTE List 2012-13

click here to download the History BRTE List 2012-13