test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 July 2013

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கணிதம் / இயற்பியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் ..

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2013 நிலவரப்படி கணிதம் / இயற்பியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

DSE - BT MATHS TO PG MATHS REVISED PANEL LIST (S.NO.1 TO 300) AS ON 01.01.2013 RELEASED - CLICK HERE...

பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு..

   பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவின் படி:

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை  இயக்குநர் - திரு.இளங்கோவன் 
RMSA இயக்குனர் - திரு.சங்கர் 
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி 
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன் 
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை 
பாடநூல் கழக இயக்குநர் -  திரு.அன்பழகன் 
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, 28 July 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர் சமுதாயமே!
பொறுத்தது போதும்! பொங்கியெழு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,சார்பில் மூன்று நபர் குழுவின் அநியாய மற்றும் அபத்த அறிக்கையைக் கண்டித்தும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத முந்தைய மற்றும் தற்போதைய அரசுகளைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


3 நபர் குழுவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்ட அறிக்கையினை கண்டித்தும் தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் ஏமாற்றப்பட்டு வருவதைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை.
அனைவரும் போராடுவோம். வெற்றி பெறுவோம். இறுதி வெற்றி நமதே!
ஆசிரியர் சமுதாயமே!

CCE முதல் பருவம் - 2013 - 2014 - STD I TO STD VIII - வாராந்திர பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)




இதுமட்டுமின்றி கீழ்க்கண்டவைகள் பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் போதுமானது)

6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்

6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட் 
        வேண்டும்

6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக பராமரிக்கப்பட்வேண்டும்

5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும்
பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்படவேண்டும்

ஆறாவது ஊதியக் குழு - இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்புகள்..


6- வது ஊதிய குழு அறிவிக்கப்பட்டதிலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம். 

நடுவண் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துரை செய்தது.

எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 -ஐ அறிவித்தது. 

எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியதே எள்முனையளவு தான் என்பது நாம் பெற்ற முதல் ஏமாற்றம். ஆம். 

அன்று இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது 5200 – 20200 + தர ஊதியம் 2800 ஆக அடிப்படை ஊதியம் ரூ 8000/-. ஆனால் அன்று இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையிலே பெற்று வந்த ஊதியம் ரூ4500 + ரூ2250 = ரூ 6750/- வளரூதியங்கள் இல்லாமல். பெற வேண்டியது ரூ.8370/-. இதில் எதிலும் நமக்கு வழங்காமல் ரூ8000/ மட்டும் நமக்கு வழங்கி, முதல் முறையாக இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விடவும் குறைவான ஊதியத்தை வழங்கிய முதல் ஊதியக்குழு எனும் பெருமையை தட்டிச் சென்றது. 

பின்னர் ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் இந்த முரண்பாடுகளை சுட்டி காட்டி பேசிய பொழுது, மத்திய அரசு வழங்கிய 9300 எனும் முதல் நிலையை வழங்காமல், பெருக்கு விகிதத்தின் படி கிடைக்கப்பெற்ற ரூ 8370/ மட்டும் அடிப்படையாக அனுமதித்து, கிரேடு சம்பளத்தில் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை. 

ஆக மத்திய அரசு அனுமதித்த ஊதியத்தில் முதல் நிலையில் 830ம், தர ஊதியத்தில் 1400 ஆக மொத்தம் ரூ2230 01.06.2006ல் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு 01.06.2009க்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 + 2800 = ரூ 8000/- மட்டுமே நிர்ணயம் செய்து , நியமனத்தின் போது 01.06.2009க்கு முன், 01.06.09 க்கு பின் எனும் இரு வேறு நிலைகளை இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் அனைத்து சங்கங்களும் இணைந்து மாநிலந் தழுவிய அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு படியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த இது 01.01.2011 முதல் ரூ 750/ ஆக தனிப்பட்ட ஊதியமாக அனுமதிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஆணையானது பட்டதாரி / தொடக்கப்பள்ளி ஆசிரிராக பதவி உயர்வின் போது, 01.01.2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்கள், 01.01.2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்கள் எனும் இரு வேறு நிலையை உருவாக்கியுள்ளது. இந்த 750யும் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள். ஒரு சில மாவட்டங்களில் அரசாணையின்படி அனுமதிக்கப்படும் நிகழ்வும், பல மாவட்டங்களில் முடியாது 750ஐ அனுமத்தித்தால் அதிக சம்பளம் கணக்கு வருகிறது என்று அங்கலாய்ப்பு வேற! ஏற்கனவே அரைகுறையாக அனுமதிக்கப்பட்டதில் பெறுவதற்குள் அடுத்த பதவிவுயர்வும், சம்பளக் கமிஷனும் வந்து விடும் போல் உள்ளது.

இந்த நிலையில் ஓரேயொரு கலங்கரை விளக்கமாக கண்ணுக்கு தெரிந்த மூவர் குழு அறிக்கையும் வெளிவந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்தியுள்ளது கூட நமக்கு வேதனையை தரவில்லை. டிப்ளமோ படிப்புகளுக்கு தர ஊதியமாக ரூ.4200 அனுமதிக்கப்பட்டாலும், இடைநிலை ஆசிரியப்படிப்பிற்கான டிப்ளமோவிற்கு மட்டும் ரூ2800 என்பது வழங்கப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் வென்றதில்லை! இதற்கு முன் நாம் பெற்ற சலுகைகளும் உரிமைகளும் நாம் போராடி பெற்றவையே! சுதந்திரம் கூட சும்மா கிடைக்கவில்லை. நினைத்து பார்த்து நமது இயக்கங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வடிவம் கொடுப்போம்! தோள் கொடுப்போம்! பல பட்டங்களையும், டிப்ளமோ படிப்புகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியப் படிப்பிற்கான அடிப்படை ஊதியத்தை வரப் போகும் சமுதாயத்துக்கு பெற்றுத் தருவோம்.
நன்றி : திரு. ரக் ஷித்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதி இல்லாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பிறகும் அவர்கள் பணியில் தொடர்ந்ததால் சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலி இடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறுமா? இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்!...

6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை நீக்க அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவும் தங்களுக்கு எந்த பலனை தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய நோக்கான 9300-34800+4200 என்ற ஊதிய விகிதம் கனவாகவும், கானல் நீராகவுமே உள்ளது என்ற உணர்வு ஓங்கி அவர்களிடம் வெறுமை உணர்வையும் மனத்தளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோக்கை அடைய அனைத்து ஆசிரிய சங்கங்களும் முழுமூச்சாக போராட ஆயத்தமாவதும், போராட்டங்களை நடத்துவதும் தான் அவர்களுக்கு தற்போதைய அறுதல் உணர்வையும் நம்பிக்கையும் தந்து அசுவாசப்படுத்துகிறது. ஆனால் இவ்வாறு ஊதிய விகிதத்தால் பாதிக்கப்படும் ஆசிரியர்களே கூட அறியாமையாலோ அலட்சியத்தாலோ தாங்கள் சார்ந்த ஆசிரிய சங்கம் நடத்தம் ஆர்பாட்டங்களிலோ, போராட்டங்களிலோ பங்கேற்பதில்லை என்ற ஆசிரிய சங்கங்களின் வருத்தம் மிக உண்மையானது நியாயமானது. 

இந்த அலட்சியத்தையும் அறியாமையையும் போக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது ? என்ற கேள்வி ஒவ்வொரு ஆசிரியர் மனங்களிலும் எழ வேண்டியது தற்காலத்தின் தற்சூழலின் வெகு அவசியமும் அத்தியாவசியமும் ஆகும். விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவரும் பிறகுக்கு அறியாமையை போக்க வேண்டியதும் , உணர்வுகள் குறைந்துள்ள உள்ளங்களில் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை சீர் எழுச்சியடைய வைப்பது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஆசிரிய சங்கங்களுக்கு தான் அனைத்து பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, ஒதுங்கு மனப்பான்மையால் அவ்வாசிரிய சங்கங்களை பழித்து பேசுவதும் குறைக்கூரி பேசுவது என்பது அலட்சியம், அறியாமை மற்றும் உணர்ச்சிவய மனப்பான்மையாகும். உண்மையில் உங்களைப்போல் ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுக்கும் குடும்பம், வாழ்க்கை, அதன் பொறுப்புகள் உண்டு என்பதையும், அச்சங்கங்களாலேயே நாம் தற்போது பெறும் சிறு பலன்களையும் பெற்றுள்ளோம் என்பதை மறந்து நன்றியின்றி பேசுதல் பழித்தல் நியாயமா? என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

நம் மூத்தோர் நம்மை கைவிடார் என்ற நம்பிக்கை தற்சூழலுக்கு வெகு அவசியம். என்றுமே நம் ஆசிரிய மூத்தோர் நம்மை கைவிட்டதில்லை என்பதையும் அதற்கு கடந்த கால வரலாறுகளை நினைவுப்படுத்திக் கொள்வதோடு அந்நம்பிக்கைகளை வலுவாக்குதல் தான் அதற்கான செயலூக்கத்திற்கு வழிகோலும். அவநம்பிக்கை எனும் வேண்டா உணர்வு வாழ்வின் இயற்கை நீதிக்கு முரணானதும் பலன் தராததும் என்ற தெளிவில் வலிவு பெறுவோம்.

ஆசிரியர்களின் மன நோக்கை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் ஆசிரிய சங்கங்கள், நீங்கள் அறிந்தவற்றை அறியாதவற்றையும் அதையும் தாண்டி ஆசிரிய நலம் சார்ந்து சிந்திப்பவர்கள் தான் அதன் பொறுப்பாளர்கள். இந்த உண்மையை நம் அனுபத்தோடு ஒப்பிட்டு நம்பிக்கை பெறுவது அவசியம். ஆசிரிய சங்கங்களின், அதன் பொறுப்பாளர்களின் போராட்டம், தியாகம், இழப்புகளை மறந்து சோர்வு பெறக்கூடாது.

இந்த ஒட்டுமொத்த மனகுமுறலையும் ஆசிரிய சங்கங்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆசிரிய சங்கங்கள் ஆசிரிய நலனிற்காக எதற்கும் துணியும், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும். ஒருங்கிணைந்த போராட்டத்தின் பலம் என்ன என்பதையும் அதன் வெற்றிகளையும் முழுமையாக ஆசிரிய சங்கங்களை விட நன்கு வேறு யார் அறிவார்? 



Saturday, 27 July 2013

பள்ளி டிசியுடன் சேர்த்து மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளியை விட்டு செல்லும்போது, மாற்றுச்சான்றிதழுடன் (டிசி), மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை எச்சரித்துள்ளது.எஸ்எஸ்ஏ மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் கண்டறியப்பட உள்ளனர். இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மதிப்பீடு தேர்வு நடக்க உள்ளது. தவிர கடந்த வகுப்புகளில் மாணவர்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் திறள் பதிவேட்டை எஸ்எஸ்ஏ அலுவலகம் கேட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளின் திரள் பதிவேடு மட்டுமே எஸ்எஸ்ஏ அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் திரள் பதிவேடு அனுப்பப்படவில்லை. ஏற்கனவே அவர்கள் படித்த பள்ளிகளில் இருந்து வெறும் மாற்றுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், திரள் பதிவேடு வழங்க முடியவில்லை என தலைமை ஆசிரியர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

திரள் பதிவேடு இல்லாவிட்டால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கணக்கிட முடியாது. இதற்காகத்தான் தொடர் மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் திரள் பதிவேடு தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: ஏற்கனவே தங்கள் பள்ளியை விட்டுச் சென்ற 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக திரள் பதிவேடு வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் பள்ளியை விட்டு செல்லும்போது மாற்றுச்சான்றிதழுடன், மாணவர்களின் திரள் பதிவேட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். மாணவர்களின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களே! உங்கள் நிலை என்ன?

ஆறாவது ஊதியகுழுவிலும், அதைத் தொடர்ந்து வந்த ஒரு நபர் குழுவிலும், தற்போதைய மூவர் குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் சரி செய்யப்படவில்லை. 
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பெறுவதற்கு கோரிக்கை வைக்காமல், தனக்கு மட்டும் பலன் பெறுகின்ற வகையில் ஆசிரியர் சங்கங்கள் செயல்படும் நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, போராடினால் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் சரி செய்யப்படும்  என்ற நிலைக்கு ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களே! உறுதுணையாய் நிற்போம். ஒன்றுபடுவோம்! போராடுவோம்! சுயநலவாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்கிடுவீர்.

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் நேற்று வெளியிட்ட 60 அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது..

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று  மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 60 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசால் வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...

எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், உருது,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களும், பொருளாதாரம், மனையியல், வணிகவியல், அரசியல்அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர முடியும்.இவர்கள் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது.குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி), அந்தப் பாடத்தில் பி.எட். படிப்பில் சேர முடியாது. 4 ஆண்டுகளில் இரட்டைப் பட்டப் படிப்பு முடித்தவர்களும் சேர முடியாது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள்.ஆனால், அவர்களின் முதுநிலைப் பட்டப் படிப்பு மதிப்பெண்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான படிப்புகள்:  
பயன்பாட்டு இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி- இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ்ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும்,பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின்கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், இளநிலை புவியியல் படிப்பின் கீழும், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பற்றிய பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்.மதிப்பெண்கள்பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிக்க வேண்டுமானால், முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட படிப்புகளின்கீழ் பி.எட். படிப்பில் சேர விரும்புவோர், குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறாமல் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியும்.குறைந்தபட்ச மதிப்பெண் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் முதுநிலை பட்டதாரிகள், மனையியல் படிப்பின்கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப் படிப்பில்முதல் பிரிவில் தமிழைப் படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.பி.எட். படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 43 சதவீதமும், ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைஇளநிலை, முதுநிலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வித் தகுதியுடையோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண்களும், எம்.பில். பட்டப் படிப்பு முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும்,  பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும் கூடுதல் மதிப்பெண்களாக வழங்கப்படும். அத்துடன் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. (பி அல்லது சி சான்றிதழ்) பெற்றவர்களுக்கும், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கும் மேலும் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். பி.எட். படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு

click here -DSE 70536/F/S3/EMIS/2011.DT 26.07.2013 மாணவர்கள் தகவல் தொகுப்பு முறை(EMIS)யின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் / மாணவர்கள் விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்தல் சார்

மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு

click here to download GO.241 FINANCE (PAY CELL) DEPT DATED.22.07.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009– Recommendations of the Pay Grievance Redressal Cell – Dispensation of Higher Start of Pay for the posts of Junior Assistants / Typists and Record Clerks - Orders issued

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 48அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது.

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு இன்று மாலை 26 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 48 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 76 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு

GO.263 SCL EDN DEPT DATED.22.07.2013 - Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in School Education / Teacher Education Research and Training Departments – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -- Orders-Issued. 

Thursday, 25 July 2013

மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 உயர் / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு.


SMC MEETING - ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் நடத்த உத்தரவு..

SMC MEETING TO BE CONDUCTED LAST FRIDAY OF EVERY MONTH | ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை கூட்டவதை உறுதிப்படுத்தவும் அவ்வாறு நடைபெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

ஆசிரியப் பேரினமே!!! மீண்டும் நமக்கு வேதனையே மிச்சம் ....

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு 22.07.2013 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணைகளில் மிகவும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தர ஊதியம் வழங்கப்படவில்லை. மறுபடியும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பெரும் எண்ணக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் போராட்டம் கடுமையாக இல்லாவிட்டால், இத்தகைய புறக்கணிப்புகள் தொடரத்தான் செய்யும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்......

ஆகவே ஆசிரியப் பேரினமே! ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்! 

கோரிக்கைகள்:

1. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றுதல்
2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அடியோடு இரத்து செய்தல்
3. ஆசிரியர் தகுதித் தேர்வினை இரத்து செய்தல்
4. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தல்
5. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல்

உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல் மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் மறியல் அறப்போர் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்.
இன்றிலிருந்தே தயாராவோம்!
சிறைச்சாலைகளை நிரப்பிடுவோம்!
அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்போம்!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு...

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.

தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.

மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

click here to download the GO - spell 1 

click here to download the GO - spell2 

குழந்தைப் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி..

SCERT - PREVENTION OF SEXUAL EXPLOITATION OF GIRL & CHILD SAFETY AWARENESS TRG | உயர்தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர்களுக்கு குழந்தைப் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி 02.08.2013 முதல் 04.09.2013 வரை நடத்த உத்தரவு

SCERT - PREVENTION OF SEXUAL EXPLOITATION OF GIRL & CHILD SAFETY AWARENESS TRG FOR UPPER PRIMARY WOMEN TRs FROM 02.08.2013 TO 04.09.2013 REG PROC

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்..

6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

6-வது ஊதியக்குழு சம்பள உயர்வில், குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தக்குழு, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருததுக்களை கேட்டது. இதைத்தொடர்ந்து குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை சம்பள உயர்வு அளித்து நேற்று ஒரே நாளில் தனித்தனியே துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசின் இந்த உத்தரவின்மூலம் 43 பிரிவுகளைச்சேர்ந்த 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து துறைவாரியாக பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.

Wednesday, 24 July 2013

பிளஸ்–2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது..

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது. ஆனால் அவர்கள் 27–ந்தேதி நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும். அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

என்ஜினீயரிங் கலந்தாய்வு 26–ந்தேதி மாலை முடிவடைகிறது. அப்போது காலியாக உள்ள பி.இ. இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மற்றொரு கலந்தாய்வு 28–ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெயிலாகி இருந்த மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு துணைத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தகுதி படைத்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆனால் அந்த மாணவ–மாணவிகள் 27–ந்தேதி அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றே ஒப்படைக்கவேண்டும். அந்த மாணவர்கள் பிளஸ்–2 மதிப்பெண் சான்று, தேர்வு எழுதிய அனுமதி கடிதம் (ஹால்டிக்கெட்), 10–வது வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், முதல் பட்டதாரிகளுக்கான சான்று மற்றும் உறுதி அளிப்பு படிவம், புகைப்படம் ஆகியவற்றுடன் 27–ந்தேதி வரவும். விண்ணப்பத்தொகை ரூ.500. ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் நாளை (25.07.2013)வெளியிடப்படுகிறது


பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் உடனடி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சியடையாத பாடங்களுக்கு தேர்வு எழுதினர்.இந்நிலையில் பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் நாளை
( 25.07.2013 ) பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியீடு ?

மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 17000 பள்ளிகளில் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்...

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14
வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.

கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.

மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tuesday, 23 July 2013

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Monday, 22 July 2013

மாணவ, மாணவியருக்கு சுதந்திர தினத்தன்று சீருடை கிடைக்கும்...

சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்" சீருடை வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10 லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்கு தவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளி துவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.

மூன்றாவது, "செட்" சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்" சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்" சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்" சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 01.08.2013 & 02.08.2013 அன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அரசின் விலையில்லா திட்டங்கள், மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பிட, சாதி, வருமான சான்றிதழ் விவரங்கள், சிறப்பு ஊக்க தொகை, வங்கி கணக்கு துவக்கிய விவரம், தொழிற்கல்வி பிரிவு பயின்ற மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிய விவரம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தவர்கள் மாறும் சேராதவர்கள் விவரம், மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி அலுவலகங்கள் / பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் ஆகியவை ஆய்வுக் கூட்டத்திற்கு முன் சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி களில் 6,7,8 வகுப்புகளுக்கு SSA ன் கீழ் நியமனம் செய்த 7979 மற்றும் 1282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD PAY ORDER GO.157 - 7979 SSA BT POSTS SANCTIONED AS PER GO.197 REG PAY CONTINUATION ORDER FROM 01.04.2013 TO 31.03.2014

CLICK HERE TO DOWNLOAD  PAY ORDER GO.127 - 1282 SSA BT POSTS SANCTIONED AS PER GO.193 REG PAY CONTINUATION ORDER FROM 02.12.2012 TO 31.12.2013

வங்கிக் கணக்கில் உதவித்தொகை - அரசு கட்டாய உத்தரவு


"கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்வி உதவித்தொகைக்கான, காசோலையை அரசு அனுப்பிவிடும். இவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர்.

சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய, கல்வி உதவித் தொகையை முறைகேடாக எடுத்துச் செலவு செய்ததாக, அரசுக்குப் புகார் சென்றது. இதுபோன்று, மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும் முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்த முடிவு செய்தது.

அந்த வகையில், "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2013-14ம் கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகை செலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.

இதற்காகவே, "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.

இரட்டைப்பட்டம் சார்பான நீதிமன்ற விசாரணையின் தற்போதைய நிலை?

பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்தார் எனவும், எனவே இந்த வாரம் கட்டாயம் விசாரணைக்கு வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன்.

இரகசியம் காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வழக்கை தலமையேற்று நடத்தி வரும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வழக்குரைஞர் திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாட இருக்கிறார்கள். விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்கு விசாரணையை எதிர்ப்பார்த்து பல்லாயிரக்கணக்காண ஆசிரியர்கள் பதவி உயர்வுகாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்

Sunday, 21 July 2013

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு.

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள சுமார் 35 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஆண்டு (2013-14) 4 லட்சத்து 8 ஆயிரத்து 871 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தமாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 995 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்தனர்.ஆங்கில கல்வி மோகம், ஆசிரியர் காலிப்பணியிடங்கள், அரசுப் பள்ளிகளில் மோசமான வசதி போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது.

2008-09-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 28 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13-ஆம் ஆண்டு 3 லட்சத்து 18 ஆயிரமாகக் குறைந்தது. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 43 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 7 ஆயிரமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம், இலவசத் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தஆண்டு மாணவர் சேர்க்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.ஆங்கில வழி வகுப்புகள் காரணமாகவே மாணவர் சேர்க்கை இந்த ஆண்டுகணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 20 மாணவர்கள் வரை இந்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். மொத்தமாக 80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் மிக அதிகம்: மாநிலத்திலேயே அதிக அளவாக வேலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 486 மாணவர்கள் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன்ஒப்பிடும்போது 6 ஆயிரம் அதிகம் ஆகும்.கோவை, கடலூர், காஞ்சிபுரம், மதுரை, அரியலூர், சேலம், திருச்சிஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மிக அதிக அளவாக 8 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தாலும் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,201 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டுஇந்த எண்ணிக்கை 2,896 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இந்தஎண்ணிக்கைதான் மாநிலத்திலேயே மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.சென்னை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வு 18ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சுருக்கெழுத்து தமிழ், ஆங்கிலம் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர் பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடக்கிறது. 19ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை அக்கவுன்டன்சி முதல் மற்றும் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.

இதே போல், வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை ஒன்று முதல் நான்கு பேட்ஜ் வரையிலான தேர்வு நடக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ் மாணவர்களுக்கும், சீனியர் பிரிவில் 1 முதல் மூன்று பேட்ஜ் மாணவர்களுக்கும் தேர்வு நடக்கிறது. அன்று காலை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹைஸ்பீடு தேர்வுகள், மாலையில் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் தேர்வுகளும் நடக்கிறது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை முன்னிட்டு 24ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட டைப்ரைட்டிங் தேர்வுகள் 31ம் தேதியும், 25ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் மாதம் 1ம் தேதியும் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தேர்வர்கள் இரண்டு தேர்வுகளையும் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கனமழை: கூடலூர்,பந்தலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை அடுத்து மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரட்டைப் பட்டப் படிப்பு பயனுள்ள ஒன்றா? ஒரு அலசல்....

இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பல பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள்,பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.

ஒன்றில் இரண்டு...

படித்து முடித்து பணிவாய்ப்புக்காக பட்டதாரிகள் அல்லாடுவதை தவிர்க்கும் வகையில், இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு, ஒருவரை பணிக்கு தயார் செய்கின்றன. இடைவெளியின்றி, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வழங்குகின்றன.

சில நிறுவனங்களுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மை திறன்களைப் பெற்ற மனிதவளம் தேவைப்படுவதால், அவை, இரட்டைப் பட்டப் படிப்பு பெற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சாதாரண பட்டப் படிப்பு தகுதிகளைவிட, பணிக்கு தேவையான உடனடித் தகுதியைப் பெறுவது மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். பி.டெக்., படிப்புடன், எம்.பி.ஏ., பட்டத்தையும் (4+1) என ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்யலாம். எனவே, இந்த இரட்டைப் பட்டப் படிப்பு திட்டத்தை, விரைவுபடுத்தப்பட்ட படிப்புத் திட்டம் என்றும் கூறலாம்.

படிப்பின் காலகட்டம்

படிப்பை பொறுத்து, கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, காலகட்டம், 4 முதல் 7 ஆண்டுகள் வரை விரியும். இன்டர்மீடியேட் முதல் பிஎச்.டி., வரையான படிப்புகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி பெறும்போது, மாணவர்களை எளிதாக பணிக்கு தயார்படுத்த முடிகிறது மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டத்துடன் மாணவர்கள் நன்கு பழக்கமாகி, மேம்பட்ட சிந்தனைகளைப் பெறுகிறார்கள் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உற்சாகமாக படித்தல்

பொறியியல் பிரிவில், இரட்டைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களுக்கான பாடங்கள், வேறுபட்ட முறையில் விரிவாக கற்பிக்கப்படுவதின் மூலம், புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பொறியியல் முதுநிலைப் பட்டம்பெற மொத்தம் 6 ஆண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகளிலேயே முதுநிலைப் பட்டம் பெற்றுவிடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

பழைய பட்டப் படிப்பு முறைகளிலிருந்து(6 ஆண்டுகள் படிப்பு) புதிய இரட்டைப் பட்டப் படிப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, பல கல்வி நிறுவனங்களில் உற்சாகமுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மாணவரை, தொழில்துறைக்கு தயாரானவராக மாற்றுவதில், இந்த இரட்டைப் பட்டப்படிப்பு முறை தெளிவாக செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் புதிய கல்வி முறையின் மூலமாக, நுணுக்க சிந்தனை மற்றும் கற்றல் உற்சாகம் அதிகரிக்கிறது. பொதுவாக, இரட்டைப் பட்டப் படிப்பின் பாடத்திட்டமானது, நிறைந்த உள்ளடக்கமும், பயன்பாட்டு அடிப்படையும் கொண்டது.

பாடத்தை தெரிவு செய்தல்

ஒரு கல்வி நிறுவனத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை தேர்வு செய்கையில், அந்த கல்வ நிறுவனத்தின் அங்கீகாரம், புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை கட்டாயம் மனதில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மூன்றாம் வருட பி.டெக்., படிப்பை முடித்தவுடன், எம்.டெக்., படிப்பில் சேர முடியும்.

ஆறாவது செமஸ்டர் முடிந்த பின்னர், 6.5 CGPA அளவில் மதிப்பெண் வைத்துள்ள அத்தகைய ஆர்வமிக்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துறைத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதன்மூலம், இரட்டை டிகிரி படிப்புக்கு மாறிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.

இரட்டை டிகிரி படிப்புகளுக்கான சேர்க்கை முறை, கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்கள், முதல் நாளிலிருந்தே, இரட்டை டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்கள், இரட்டை டிகிரி படிப்பிற்கான சேர்க்கையில், மாணவர்களின் சூழலைப் பொறுத்து, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்களில், இரட்டை டிகிரி படிப்பு முறையை ஒரு மாணவர் கடினமாக உணர்ந்தால், அவர் எம்.டெக்., படிப்பில் சேராமலேயே விலகிக் கொள்ளலாம்.

பணத்தையும், நேரத்தையும் சேமித்தல்

போட்டி நிறைந்த சந்தையில், ஒரு வருடத்தை சேமிப்பதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர், ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.டெக்., படிப்பை முடித்தால், இரட்டை டிகிரி பட்டதாரிக்கு சமமாகவே கருதப்படுவார் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இரட்டைப் பட்டப் படிப்பானது, தொழில் தொடர்பாக, விரைவான முடிவெடுக்க உதவுகிறது.

பொதுவாக, பி.இ., படிப்பிற்கு 2 லட்சமும், எம்.டெக்., படிப்பிற்கு 1.25 லட்சமும் செலவாகிறது. ஆனால், இரட்டை டிகிரி படிப்பில், குறைந்தபட்சம் 1 லட்சம் வரை மிச்சமாகிறது மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்காக எழுத வேண்டிய நுழைவுத்தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அலைச்சலின்றி, இரண்டு பட்டங்களையும், ஒரே கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

சந்தை தேவையை நிறைவுசெய்தல்

இன்றைய நிலையில், ஒவ்வொருவரும் ஸ்பெஷலைசேஷனை எதிர்பார்க்கின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக இருந்தாலும், அனுபவம் அதிகமுள்ளவர்களே, தொழில்துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில்தான், இரட்டை டிகிரி படிப்பின் தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. தனித்தனியாக இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்தால் என்ன மரியாதையோ, அதேயளவு மரியாதைதான், இரட்டை டிகிரி முறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடிப்பதற்கும் கிடைக்கிறது.

ஒரு பி.டெக்., பட்டதாரி ஆண்டு சம்பளமாக ரூ.6 - 12 லட்சம் பெறுகிறார் என்றால், ஒரு இரட்டை டிகிரி முடித்தவர், ஆண்டுக்கு ரூ.9 - 15 லட்சங்கள் பெறுகிறார். கூகுள் போன்ற பிரபலமான நிறுவனங்கள், பி.டெக்., பட்டதாரிகளை விட, இரட்டை டிகிரி முடித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது, ஆராய்ச்சி செய்யும் மனப்பாங்கு மற்றும் தனியாக சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்ற நபர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

மாறுபாடுகள்


குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு, இந்த இரட்டை டிகிரி படிப்பு ஒத்துவருவதில்லை. அவர்கள் இப்படிப்பில் சேர விரும்புவதுமில்லை. ஏனெனில், சிலருக்கு பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கும்போதே, நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, அதற்குமேல் அவர்கள் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புவதில்லை. எனவே, கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, நிலைமை வேறுபடுகிறது.

சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DEE - CM AWARD - "BEST PERFORMANCE AWARD 2013" - APPLICATION CALLED REG PROC CLICK HERE...

தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?

தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை முழுவதுமாக நிரப்பும் நோக்கில், விதிமுறையில் ஒரு சில தளர்வு காட்டலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப, நேற்று சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. தரம் உயர்ந்த ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 முதல் 9 முதுகலை ஆசிரியர் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்தந்த சி.இ.ஒ., அலுவலகங்களில் நேற்று உள் மாவட்ட முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை உட்பட ஒரு சில மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் உத்தரவு பெற்றனர். இந்நிலையில்,நாளை (ஜூலை22)மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும், மாறுதல் கோரும் மாவட்ட சி.இ.ஒ., அலுவலகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டத்தில் உள் மாவட்ட மாறுதலை சில ஆசிரியர்கள் விரும்பாததால்,தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமாறுதல் விதிமுறைகளை கடைபிடித்த போதிலும், தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பற்றாக்குறை தவிர்க்க,போட்டி இல்லாத இடங்களில் பணியில் சேர்ந்து, ஓராண்டு நிறைவு பெறாமல் இருந்தாலும்,தேவையின் அடிப்படையில் மாறுதல் பெற வாய்ப்பளிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, 19 July 2013

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நாடகக் கலை பாடம் கற்றுத்தரப்படுகிறது...

மேடை நாடகக் கலையை பாடமாக கற்றுத் தரும் பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை இருக்கிறது. இங்கு நாடகக்கலையில் முதுநிலை படிப்பு - மாஸ்டர் ஆப் பர்ஃபாமிங் ஆர்ட்ஸ் இரண்டு ஆண்டுப் படிப்பு இருக்கிறது. எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் சேர தகுதி படைத்தவர்கள்.   இப்பல்கலைக்கழகத்தில் எந்தப் படிப்பில் சேருவதாக இருந்தாலும் நுழைவுத் தேர்வு உண்டு.

தமிழ்நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் நாடகம் தொடர்பாகப் படிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாநிலங்களைப் பொருத்தவரையில்,   கேரளத்தில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சூர் நாடகப் பள்ளியும், அதே மாநிலத்தில் காலடி சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையும் இருக்கிறது. ஆந்திரபிரதேசத்தில் உள்ள ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை இருக்கிறது. இங்கெல்லாம் நாடகத்துறையின் துறைத் தலைவர்களாக இருப்பவர்கள், புதுச்சேரி நாடகத்துறையில் படித்தவர்களே.

இந்தத் துறை தொடங்கியபோது துறையின் தலைவராக இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இத்துறை 2012-ம் ஆண்டில் 25-ம் ஆண்டை அடியெடுத்து வைக்கப் போகிறது. அதனால் துறையினர் வெள்ளி விழா தயாரிப்பிலும் இருக்கின்றனர். புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் முதுநிலை என்ற அளவில் நாடகத்தின் எல்லா தொழில்நுட்பங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. நாடகம் எழுதுதல், வடிவமைத்தல், மேடை அமைப்பு, ஒளிஅமைப்பு, உடை அமைப்பு, முக ஒப்பனை, இசையமைப்பு, மேடை நிர்வாகம், நடிப்பு, இயக்குதல், குரல்வளம், பேச்சுவளம் என்று பயிற்சிக் காலத்தில் கற்றுத் தரப்படும் தலைப்புகளின் பட்டியல் நீள்கிறது.

40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை

            காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார். 24
மணிநேரம் தமிழ் தேர்வு எழுதுவதற்கான, சாதனை முயற்சி, ஜூலை 13ல் நடந்தது. காலை 10 மணி முதல், மறுநாள் காலை 11.20 வரை தேர்வு எழுதினார். தமிழ் முதல், இரண்டாம் தாள் என, மொத்தம் 8 தேர்வுகள் வைக்கப்பட்டன. மூன்று மணி நேரத்திற்கு, 10 நிமிடம் இடைவெளி விடப்பட்டது. அருண்குமாருடன் பிளஸ் 2 படிக்கும், 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தூங்காமல் இருந்தனர். இப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் தொடர்ச்சியாக செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.

                          அருண்குமார், 24 மணி நேர தேர்வை எழுதி முடித்தார்.இவர் எழுதிய விடைத்தாள்கள், பல ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டது. இதில், முறையே 186, 185, 189, 177 என, மதிப்பெண்கள் பெற்றார். பள்ளி தொடங்கி 40 நாட்களுக்குள், தமிழ் பாடம் முழுவதையும் படித்து, அதில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் ,மாணவர் அருண்குமார் தேர்வு எழுதியுள்ளார். அருண்குமார் கூறுகையில், "எட்டாம் வகுப்பிலிருந்தே தமிழ் மீது ஆர்வம். அதற்கு என்னுடைய தமிழாசிரியர் ஜெயம்கொண்டானும் ஒரு காரணம். தாளாளர் நாராயணன் ஏற்பாட்டில், அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டன. சராசரியாக 184 மதிப்பெண் பெற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் அவர்கள் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

CCE - E-Register for CCE for I to IX Std


1 - 9  ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.

2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.

3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.

4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.

5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.

6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...

To Download CCE -9th Std - English Medium Click Here...

To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...

உலகம் போற்றும் திருக்குறள் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள்!

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்

பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன