test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 26 June 2013

9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை - E-Register for CCE எனப்படும் Excel file

9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது.
மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு
பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும்,
நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர
அறிக்கையைப் பெற இயலும்.

click here to download cce-excel file

6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட
வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி
விழுக்காட்டினையும் அறிய முடியும்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற மாணவர்கள் தவிப்பு...

           கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

          தமிழகத்தில், ஆண்டுதோறும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன. இந்தாண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து, அதற்கான செலவுகள், ஆசிரியர்கள் நியமனம் குறித்து, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

             ஆனால், கல்வித்துறை சார்பில், இன்னும் அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு சேர்வதற்கும், உயர்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 சேருவதற்கு, இன்னும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

          மாற்றுச் சான்றிதழை கொடுத்து விட்டால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவர்; அப்படி சேர்ந்து விட்டால், தரம் உயர்த்தப்பட்ட தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போய் விடும் என்ற சூழலில், பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர்.

               தற்போது, அனைத்துப் பள்ளிகளிலும், பிளஸ் 1 அட்மிஷன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பள்ளிகளில் சேர, மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது,

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.

9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு...

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு

* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013

* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013

* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013

* சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 17.07.2013, 18.07.2013 மற்றும் 29.07.2013, 30.07.2013

* அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 19.07.2013, 20.07.2013 மற்றும் 31.07.2013, 01.08.2013 

இடம்  : மாவட்ட அளவில் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Monday, 24 June 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

 
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

Sunday, 23 June 2013

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு ?

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு
 நாளை முதல் அமுல்படுத்தபடவிருந்த பள்ளி நேரம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி நேர மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது
"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

Saturday, 22 June 2013

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் தொராய (தற்காலிக) பயிற்சி நாட்கள் விபரம்


 





இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள்
 மட்டுமே பயிற்சி நாட்கள்.
குறுவள மையம் 3 நாட்கள் 
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014
பணியிடைப் பயிற்சி 4 நாட்கள்  
1. 20.08.2013
2. 04.09.2013
3. 20.11.2013 

4. 04.12.2013

தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.

காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)

9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை

Friday, 21 June 2013

இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு


அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறந்த கல்லூரி எது? எந்த அடிப்படையில் கல்லூரியை தேர்வு செய்யலாம்? உள்ளிட்ட பலவிதமான கேள்விகளுடன், மாணவர்கள் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கும் நேரம், இந்த கவுன்சிலிங் நேரம். இந்த நேரத்தில்தான், இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-2012ம் கல்வியாண்டில், அகடமிக் அளவில், எந்தெந்த கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி, அண்ணா பல்கலை வெளியிட்ட பட்டியல், மாணவர்களுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் முடிவெடுப்பது சற்று எளிதாக இருக்கும என்று நம்பப்படுகிறது.

இக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் அறிய http://www.annauniv.edu/acaper/acaper.html என்ற வலைதளம் செல்க.

Thursday, 20 June 2013

Wednesday, 19 June 2013

TET APPLICATION - எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம்...


       தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு 

         தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

தகுதித்தேர்வு விண்ணப்பம்

         ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.

           விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திலும் கொடுக்கலாமா?

          விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.

         இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்

            காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.

              இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப . எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

அழிந்த தகவல்களை மீட்கும் Recuva...

கணினி, பென்டிரைவ், மெமரி கார்ட் போன்ற மின்னணு சாதனங்களில் சேமித்த புகைப்படம், பாடல், பைல்கள் போன்ற தகவல்கள் அழிந்து போயிருந்தாலும் அல்லது delete செய்யப்படிருந்தாலும் Recuva மென்பொருள் மூலன் எளிமையாக மீட்டெடுக்கலாம்.
Piriform நிறுவனத்தின் மென்பொருளான Recuva அழிந்த தகவல்களை மீட்டெடுப்பதில் பிரபலமாகி வருகிறது. இந்த Recuva மென்பொருள் வீட்டு பயன்பாட்டுக்கென இலவச மென்பொருளும், அலுவலக பயன்பாட்டிற்கென கட்டண மென்பொருள் என இருவேறு பிரிவுகளாக கிடைக்கிறது.Recuva Recovery மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக்கொள்ள இங்கு அழுத்தவும்.எண்ணற்ற வசதிகள் கொண்ட இலவச மென்பொருட்களை பதிவிறக்கிக் கொள்வதற்கான நிரந்தர இணைப்பு சிந்திக்கலாம் தளத்தின் மேற்பகுதியில் Free Softwares என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல்


மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட மூன்று இணை இயக்குநர் பணியிடங்களும் கடந்த நான்கு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.இதுதவிர, பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 44 மாவட்ட கல்வி அதிகாரிகள், 10 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. "விருதுநகர், சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வித்திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும், திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடங்களும், திருவாரூர், கரூர், செய்யாறு, மத்திய சென்னை, உள்ளிட்ட 44 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்போது, அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்பும் பட்சத்தில், நலத்திட்டங்களை மாணவர்களிடம் எளிதாக கொண்டு செல்ல இயலும்,'' . மாவட்ட நிர்வாகங்களை கவனிக்க வேண்டிய இயக்குனர் பணியிடங்களும், பள்ளிகளின் செயல்பாடுகளை சரிசெய்து கொடுக்கவேண்டிய மாவட்ட கல்வி அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக இருப்பது, பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை பாதிக்கும். 

Tuesday, 18 June 2013

COMPENSATORY SATURDAYS ANNOUNCED

TAMIL NADU GOVT SCHOOLS COMPENSATORY SATURDAYS ANNOUNCED...

21.9.13

30.11.13

14.12.13

18.1.14

1.3.14

5.4.14

12.4.14.

Quarterly holiday 22/9/13 - 2/10/13

Half yearly holidays 24/12/13 - 1/1/13

Monday, 17 June 2013

ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்...

TNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்


  Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schoolsfrom 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted at District Educational Officesonly after obtaining proper acknowledgement:

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

 தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

9 மற்றும் 10ம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10 முதல் 30வரை பயிற்சி


தமிழகத்தில் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம் தேதி ஆரம்பமாகிறது. தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக சென்னையில் கணிதம், திருச்சியில் ஆங்கிலம், கோவையில் அறிவியல், மதுரையில் சமூக அறிவியல், தஞ்சாவூரில் தமிழ் பாட முதன்மை கருத்தாளர்களுக்கு 24 மற்றும் 25ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 20 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இப்பயிற்சியை தொடர்ந்து 26 மற்றும் 27ம் தேதிகளில் கருத்தாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பின்னர் ஜூலை மாதம் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் இப்பயிற்சிக்காக 20 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் சுமார் 1,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட அலுவலர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்ப குருக்கள், செல்வநாயகம் மற்றும் ஆறுமுகராஜன் செய்துள்ளனர்.

Friday, 14 June 2013

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு : தேர்வுக் கூட அனுமதி சீட்டுகள் விநியோகம்


              மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுத ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணாக்கர்கள் / தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள் / தேர்வுக்கு வருகை புரியாது, தற்போது இச்சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) வரும் 17.06.2013 (திங்கட்கிழமை) மற்றும் 18.06.2013 (செவ்வாய் கிழமை) ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
           ”ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு விநியோக மையத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள் தங்களது பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தெரிவித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகரைப் பொறுத்தவரை, சென்னை-2, அண்ணாசாலை, மதரசா-ஐ-ஆசா-ம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்” என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
           சமீபத்தில் நடந்த பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்தோருக்காக, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு, ஜுன் மாதம் 19-ஆம் தேதி தொடங்கி ஜுலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
       இதைப் பற்றி, மேலும் கூறுகையில் - “தேர்வுக்கூட அனுமதிச் சீட்டிலேயே அவர்களுக்குரிய பதிவெண் மற்றும் தேர்வு மையம் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் அம்மையத்தில் தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
           தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பெற்றபிறகு, அதனை ஒரு நகலெடுத்து (Photocopy) தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அசலினை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் முதல் நாளன்று தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
           எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
                மேலும் செய்முறை மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுகளைச் செய்யவேண்டிய தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி மேற்காண் தேர்வுகளைச் செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை ஜூன் 21-ஆம் தேதி, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011-12-ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களையும், கல்லூரியின் தகுதியை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அதன் விவரங்களை வெளியிடக் கோரி, பூபாலசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை, ஜூன் 21-ஆம் தேதி, இணையதளத்தில் கல்லூரி விவரங்களை வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணையை 2 வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Thursday, 13 June 2013

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது: தட்டச்சர், எழுத்தர், வரிதண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான TNPSC குரூப்-4 தேர்வு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுலை 15. மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது. 

மாநிலமெங்கும் தேர்வு நடைபெறும் மொத்த மையங்கள் 258. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர், தேர்வாணைய இணையதளம் சென்று, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 மற்றும் 20ம் தேதி அழைத்து பேச தமிழக அரசு முடிவு

தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர் சங்கங்களுடன் வருகிற 19ம் தேதியும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ம் தேதியும் கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமை செயலாளர்
மற்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு 

Monday, 10 June 2013

ஒன்பதாம் வகுப்பு பொது வழிமுறைகள் - CCE


ஒன்பதாம் வகுப்பு பொது வழிமுறைகள் - CCE

IX CCE General guidelines - Tamil version

IX CCE General Guidelines English Version






இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ?

இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று  பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் குறித்த பட்டியலில் மேற்படி வழக்கு குறித்த விபரம் இடம் பெறவில்லை. ஆகையால் இதுகுறித்த உண்மைநிலையை அறிய விசாரித்த போது, வழக்கு தொடுத்த முக்கிய ஆசிரியர் கூறுகையில், வழக்குறைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மேற்படி வழக்கு வருகிற 12ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

12.06.2013 அன்று காலை 11.00 மணிக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவு..

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் 12.06.2013 அன்று காலை 11.00 மணிக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவு

Sunday, 9 June 2013

தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்


        2013  2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்குகாத்திருக்கும் பணிகளை மற்றவர்களும்  தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1 அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
2.      ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்புகளின் எண்ணிக்கையை ஆசிரியர்களின்ஒத்துழைப்புடன் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
3.      ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து, அவர்களுக்கு பாடங்களையும், வகுப்பாசிரியர் பொறுப்பையும் ஒதுக்கீடு செய்து கால அட்டவணை தயார் செய்துக்கொள்ளுங்கள்.
4.      ஆசிரியர் இல்லாத பாடங்களை நடத்த கலை / ஓவிய / நெசவு / இடைநிலை / உடற்கல்வி ஆசிரியர்களின் ஒத்துழைப்பை நாடுங்கள்.
5.      ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளுங்கள்.
6.      தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பை, ஆர்வமுள்ள, ஒரு சில ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்.
7.      தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குBridge Course நடத்த திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
8.      முதல் நாள் இறைவணக்கக் கூட்டத்தில், சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டுங்கள்.
9.      ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கும், பாட ஆசிரியர்களுக்கும், வகுப்பாசிரியர்களுக்கும் வழங்கத் தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான படிவங்கள் மற்றும் பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
10.  வகுப்பு வாரியாக, இனவாரியாக மாணவ, மாணவியர் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
11.  சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை, வகுப்பு வாரியாக, இனவாரியாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
12.  மாற்றுத்திறனாளிகள், தந்தையை இழந்தவர்கள், பெற்றொரை இழந்தவர்கள், . . . போன்றவர்களின் வகுப்புவாரியான பட்டியல் தயாரிக்க ஆவன செய்யுங்கள்.
13.  தேவையான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பஸ் பாஸ் பெற்றுத் தர ஆவன செய்யுங்கள்.
14.  ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெற்று வழங்கவும், வங்கிக்கணக்குத் துவங்கவும் தேவையானவற்றைப் (புகைப்படம், குடும்ப அட்டை ஒளிநகல், விண்ணப்பம் ...) பெற திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
15.  அரசிடமிருந்து மாணவ, மாணவிகளுக்கு இன்னும் பிற நல திட்டங்களைப் பெற்றுத் தரத் தேவையானதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
16.   சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசனை செய்து, இவ்வாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு உயர என்ன செய்யலாம் என திட்டம் தீட்டிக் கொள்ளுங்கள்.
17.  சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட மற்றும் நம் பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டினையும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் பெயர்களையும் அறிவிப்புப் பலகையில் எழுதி வையுங்கள்.
18.  ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஊரில் உள்ள முக்கியமானவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர்களையும், நல் உள்ளங்களையும் பாராட்டி, பரிசு வழங்குங்கள்; வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
19.  பள்ளி வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கும் நல் உள்ளம், தொண்டுள்ளம் கொண்டவர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
20.  பள்ளி விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள், பாட இணைச் செயல்பாடுகள், சாரண இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் இயக்கம், . . . போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
21.  பள்ளியின் அடிப்படை விவரங்களைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
22.  ஆசிரியர்களின் ஆண்டு ஊதிய உயர்வு நாள், சரண்விடுப்பு வழங்கிய நாள், பொது வருங்கால வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகை வழங்கிய நாள், ... ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
23.  பணியாளர்களின் பிறந்த நாள், மணநாள் ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாட்களில் அவர்களை வாழ்த்த மறக்காதீர்கள்.
24.  பள்ளியில் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மத நல்லிணக்க நாள், . . . போன்ற முக்கிய நாட்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றைக் கொண்டாட திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
25.  மூன்று உள்ளூர் விடுமுறை நாட்களை எப்பொழுது விட வேண்டியிருக்கும் என்பது குறித்து திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்.
26.  ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ, மாணவிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவரை நியமிக்கச் செய்து, பட்டியலிட வகுப்பாசிரியரைக் கேட்டுக்கொள்ளுங்கள். வகுப்பு வாரியாக அப்பட்டியல்களைப் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
27.  சிறிது கால இடைவெளிக்குப் பின், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள, மெல்ல கற்கும் மாணவ, மாணவிகள், தெளிவாகப் படிக்கத் தெரியாத மாணவ, மாணவிகள் பட்டியலையும் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
28.  ஆசிரியர்களுக்கு வழங்க தொகுப்பு மதிப்பெண் பட்டியலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாணவர் தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையும் தயார் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
29.  வருங்கால சமுதாயம் நல்சிந்தனையோடும், ஒழுக்கத்தோடும், பொதுநல நோக்கோடும் செயல்பட மாணவ, மாணவிகளுக்குத் தேவையானவற்றை நல்கிடவும், அறிவுறுத்திக் கூறவும், நல்வழி காட்டிடவும், அல்வழி போகாதிருக்க ஆவனச் செய்யவும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கலந்தாலோசித்து நன்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வருங்கால வலிமையான, சிந்தனை வளமிக்க, மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நாமே! நம் பொறுப்பே!!
30.  சமுதாயச் சீர்கேடுகளைக் களைய வேண்டிய செயலை நாமே முன்னின்று செயல்படுத்துவோம்!!! 

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்

அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகம்


சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அதிக கல்விச்சுமை திணிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதனைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது.

அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தனித்தனியாக மாணவர்கள் பிரித்து படிக்கும் வகையில் முப்பருவப் பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கடந்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறையில் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட மாணவர்களின் தனித்திறனுக்கும் 40 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.இந்த முறை நடப்பாண்டும் தொடரும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜமுருகன் கூறியது:

மாணவர்கள், தங்களது சராசரி உடல் எடையில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற அரசு தீர்மானத்தின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கும் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். மேலும் முதல் நாளன்று தொடங்கிய பாடத்தை அந்த ஆண்டு முடியும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றார் அவர்.

தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி: அனைத்து பாடங்களுக்கும் வழிகாட்டி..


அரசு பொது தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
ஆங்கிலத்தில் 1438 பேர் தோல்வியை தழுவியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. மொத்த தேர்ச்சி விகிதமும் பாதித்தது. பிளஸ் 2வில், இயற்பியல், கணிதம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 500 மாணவர்கள் வரை தோல்வியடைந்தனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவில், கணக்கு பதிவியல் பாட ஆசிரியர்களுக்கும், கல்வியாண்டு துவக்கத்திலேயே சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் திறன் குறைந்த மாணவர்களை ஆரம்பத்திலேயே கணக்கெடுத்து, அவர்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களால் சிறப்பு பயிற்சி அளிப்பது, வினாத்தாளுக்கான "புளு பிரின்ட்" அமைப்பை தெளிவுபடுத்தி, தேர்வு பயத்தை நீக்குவதற்கான உளவியல் பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டங்களை செயல்படுத்தி, கண்காணிக்க குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், "பத்தாவது மற்றும் பிளஸ் 2வில், திறன் குறைந்த மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கவும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம், அனைத்துப் பாடங்களுக்கும் "சிறப்பு வழிகாட்டி" (கைடு) தயாரித்துத் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும்," என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 23.8.2010 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு, தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள். தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும்.

12 லட்சம் விண்ணப்பங்கள்

இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17–ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18–ந்தேதியும் நடத்தப்படுகிறது. தகுதித்தேர்வை இந்த முறை 7 லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எப்போது கிடைக்கும்?

தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வுகட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 1–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடுநிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு முறை

இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட். மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2 மதிப்பெண் தகுதிக்கு அதிகபட்சம் 10 மார்க்கும், இளங்கலை பட்டப்படிப்புக்கு 15 மார்க்கும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஆக மொத்தம் 40 மார்க் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரண்டையும் சேர்த்து 100–க்கு ‘கட் ஆப் மார்க்’ எவ்வளவு? என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.
ஆனால், கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பதை, 10ம் தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும், நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளும், நாளை திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளிகளுக்குச் செல்ல, உற்சாகத்துடன் தயாராக உள்ளனர். ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் அமலில் இருக்கும், முப்பருவ கல்வி திட்டம், இந்த ஆண்டு, 9ம் வகுப்பிலும் அமலுக்கு வருகிறது. எனவே, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று பகுதிகளாக பிரித்து, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். பாடப் புத்தகங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, நாளை காலை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Saturday, 8 June 2013

புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்....


1.தேசம் என்றால் மக்கள், பள்ளி என்றால் படிப்பு.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்லுங்கள்.

3.கற்பித்தல் இல்லா நாளே இருக்க கூடாது என்பதை மனதில் இருத்துங்கள்.

4.தேவையற்ற விடுப்பு, அனுமதி தவிருங்கள்.

5.தனியாக புள்ளி விவர பதிவேடு தொடங்குங்கள்.

6.மாணவர்கள்தாம் ந்ம் எஜமானர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், .கனிவுடன் பேசுங்கள்.

7.காலை உணவு தவிர்க்காதிருக்க அறிவுரை கூறுங்கள்.

8.சிறு சிறு நல்ல செயலையும் பாரட்டுங்கள்.

9.தவறுகள் செய்யும்போது அன்புடன் தனியே கண்டியுங்கள்.

10.உதவி ஆசிரியர்களிடம் அன்புடன் கண்டிப்பாயிருங்கள். அவ்வப்போது மாணவர் எதிரிலேயே பாராட்டுங்கள்.

11.மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேசுங்கள்.

12.கணினி வழிக்கல்வி செயல்முறைப் படுத்துங்கள்.

13.மாணவர்கள் இல்லை என்றால் பள்ளி இல்லை, பள்ளி இல்லை என்றால் பணி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14.மாணவன் நன்மையை முன்னிட்டு கற்பியுங்கள்.

15.தன் ஒழுக்கம் பள்ளியில் அனைத்து செயல்களிலும் அனைவரிடம் இருத்தல் மிக முக்கியம் என்பதை தினமும் செயல்படுத்துங்கள்.

Friday, 7 June 2013

23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும்

பள்ளிக்கல்வி - அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

DSE - TEACHERS APPOINTMENT MADE AFTER 23.08.2010 IN AIDED HIGH / HIGHER SECONDARY SCHOOLS, THOSE WHO SHOULD BE QUALIFIED IN TET & OTHER COMMON CONDITIONS REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

SCERT - HON'BLE SCL EDN MINISTER PLAN TO LAUNCH "KARKA KASADARA MONTHLY MAGAZINE" REG DETAILS CLICK HERE...

Wednesday, 5 June 2013

அரசு ஊழியர்களுக்கு பரிசு

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிலை அலுவலகம், சார்நிலை அலுவலகம், உள்ளாட்சித்துறை அலுவலகம், தன்னாட்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுள் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.எனவே, 2012ல், சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய தகுதியுள்ள பணியாளர்களின் பெயர்பட்டியலை அனுப்பி வைக்குமாறு, அறிவுறுத்தல் கடிதம் மாவட்டந்தோறும் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, 4 June 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்...

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால்,பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக,இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படுகின்றன. 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், பள்ளிகள் இல்லாத இடங்களில், புதிதாக, 54 துவக்கப் பள்ளிகள் துவக்கவும் அரசு முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அவை எந்த பள்ளிகள் என்ற விவரத்தை, அரசு இன்னும் அறிவிக்கவில்லை.பள்ளிகளை திறக்கும்நாள் நெருங்கி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் வெளியிடவில்லை. இதனால், தங்களது பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளதா என, தெரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வருகின்றனர்.குறிப்பாக, தரம் உயர்வைஎதிர்பார்த்து காத்திருக்கும் நடுநிலைப்பள்ளிகள், தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, டி.சி., கொடுப்பதா, வேண்டாமா என, தவித்து வருகின்றன. மாணவர்களைஅனுப்பிய பின், தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியானால், புதிதாக துவங்கும் வகுப்புகளில், மாணவர்களை சேர்ப்பது சிரமம் ஆகிவிடும். இதற்கு தீர்வு காண, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், புதிதாக பள்ளிகள் துவங்கும் இடம் பற்றிய பட்டியல் போன்றவற்றை, பள்ளிக்கல்வித் துறை உடனடியாக, வெளியிட வேண்டும் என, அரசு பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

உலகின் மிக நீண்ட வார்த்‌தை கண்டுபிடிப்பு


பெர்லின் : ஜெர்மனி, உலகின் மிக நீண்ட வார்த்தையை உருவாக்கியுள்ளது. Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz என்ற இந்த நீண்ட வார்த்தைக்கு மாட்டிறைச்சி பதப்படுத்தலை கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கான சட்டம் என்ற பொருள். ஜெர்மன் மொழி்யில் தான் கடினமான வார்த்தைகள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பாரதியார் பல்கலைக்கழகம்

இந்த கல்வியாண்டு முதல், தான் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களை உயர்த்தும் முடிவை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த 2013-14 கல்வியாண்டு முதல், பல்கலையின் இணைப்பு கல்லூரிகள், பல்கலைக்கு செலுத்தும் கட்டணங்களில் 25% உயர்த்தப்பட்டுள்ளது என்ற தகவல், பல்கலை பதிவாளர் மூலமாக, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை படிப்புகளை பதிவு செய்தல், தமிழகம், தமிழகத்திற்கு வெளியே மற்றும் வெளிநாடு ஆகியவற்றில் பதிவுசெய்தல், மெட்ரிகுலேஷன், நிர்வாகம், விளையாட்டு, நூலகம், விதிவிலக்கு/லேட்டரல் என்ட்ரி/பிரைவேட் ஸ்டடி, ஸ்போர்ட்ஸ் இணைப்பு, மாறுதல், மாறுதல் மற்றும் அதனையடுத்த மறுசேர்க்கை, மறுசேர்க்கை, பெயர் மாற்றம் மற்றும் தன்னாட்சி கட்டணம் ஆகிய விஷயங்களில் கட்டணங்கள் 25% உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், கற்பித்தல் மொழி தொடர்பான அம்சத்திற்கு கட்டணம், ரூ.100லிருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவைதவிர, Campus Placement என்ற பெயரில், ரூ.50 மாணவர்களிடமிருந்து, பல்கலையால் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2011-12ம் ஆண்டிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இந்தமுறை செய்யப்பட்ட உயர்வானது, மாணவர்களின் தலையில் அதிக சுமையேற்றுவதாக உள்ளது. ஆனால், இந்தக் கட்டண உயர்வானது, UGC மற்றும் அரசு விதிமுறைகளின்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பல்கலையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பிச்சாண்டி, இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளதுடன், இதனால் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளதுடன், மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையே ஏற்படும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய கல்லூரிகளை தோற்றுவித்தல், இலவச கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் இலவச லேப்டாப்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறான நடவடிக்கைகளை அரசு எடுத்துவரும் நிலையில், இந்த கட்டண உயர்வு நடவடிக்கை முரண்பாடாக உள்ளது. அதிக மாணவர்களை உயர்கல்வி என்ற வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு, இந்த கட்டண உயர்வு நடவடிக்கை பெரும் தடைக்கல்.
சமீபத்தில்தான் கட்டணம் உயர்த்தப்பட்டது, எனவே, அடிக்கடி கட்டண உயர்வு என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால், வழக்கமான உயர்வைவிட, கல்லூரிகள், அதிகமான கட்டணத்தை மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் அபாயமும் உண்டு. எனவே, இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.