test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 31 May 2013

2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் விதியில் திருத்தம்

2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

திருத்தம்
2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.

15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும்
காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின் படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்பொழுது பணிபுரியும் ஆசிரியர் / தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி 

தொடக்கக்கல்வித் துறையில் 2013-14 பொது மாறுதல் மற்றும் பதவியுயர்வு பெற்ற (அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்) அனைவரும் 31.05.2013 பிற்பகல் விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
           ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.   அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

          மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.

2,881 காலி இடங்கள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.

அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

நாளை முதல் விண்ணப்பம்
இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.

கடைசி நாள்
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

click here to download the G.O.No.172 Dt: May 29, 2013   LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2013 2014 – Order–Issued.

Tuesday, 28 May 2013

எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தி்ல் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு: முதல்வர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.

இந்த விவாதத்தின் போது,  ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.

எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.

எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


click here to download the press release Image 
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































கோடை வெயில்... தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு

அதிக கோடை வெயிலின் காரணமாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக கோடை வெயிலின் காரணமாக தற்போது அனைத்து விதமான பள்ளிகளும் அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி விடுமுறை நாட்கள் நீட்டிப்பு: ஜீன் 10ல் பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.


நேற்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் 10ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 27 May 2013

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013
அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து, மே  30ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு.....

       M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது. 

உயர்பதவியான முதுநிலை ஆசிரியராக நியமனம் பெற்றால் மாதம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.1152 வீதம் இழப்பு ஏற்படும். எப்படியெனில்,

I) பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4600
M.A/M.Scக்கான ஊக்க ஊதிய உயர்வு: 840
அகவிலைப்படி: 11792
மருத்துவப்படி: 100
மொத்தம் : 26632 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)

II) முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4800
அகவிலைப்படி: 11280
மருத்துவப்படி: 100
மொத்தம் : 25480 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)

அதாவது உயர்பதவியில் நியமனம் பெற்றால் பிரதி மாதம் ரூ.1152 வீதம் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13824 இழப்பு ஏற்படுகிறது.

1.1.96 ஊதியக்குழுவில் இதுபோன்ற முரண்பாடுகள் வராதவகையில்
இ.நி.ஆ: 4500-125
ப.ஆ: 5500- 175
மு.நி.ஆ: 6500- 200
என்றவாறு இருந்ததை நினைவு கூர்வோம்.

மேல்நிலைப் பணியில் நியமனம் பெற்றால் குறைந்த ஊதியமும் கீழ்நிலைப் பதவியில் நியமிக்கப்பட்டால் அதிக ஊதியமும் பெறுவதாக நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணய முறை ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.------  TESTF

தொடக்ககல்வி நீதி மன்ற தீர்பாணைக்கு உட்பட்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988 க்கு முந்தைய பணிகாலத்தை தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறை படுத்துதல் குறித்து கூடுதல் விவரம் சார்ந்து

click here to download Dir.pro 13368/d4/2011,dt 25.05.2013 Ele.HM Selection grade ,special grade 1.6.1988 regarding

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்.


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.

மே 28-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

மே 29-ம் தேதி காலை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மே 30-ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.

மே 31-ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?


தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே முதுகலை ஆசிரியர், உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ., வரை பதவி உயர்வு பெற முடியும். இதனால், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பலர், பள்ளிக்கல்வித்துறைக்கு இடமாற்றம் பெற்றனர். ஆனாலும், யூனிட் டிரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு, புதிதாக பணியில் சேர்ந்த இடத்தில் பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்பதால், பதவி உயர்வு கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த டிஆர்பி தேர்வின்போது, தொடக்கப்பள்ளிக்கா? உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கா? என கூறவில்லை. ஆனால், போட்டித்தேர்வு மூலம் அதிகை ரேங்க் பெற்று தொடக்கப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த எங்களை காட்டிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும், ரேங்க் குறைவாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சீக்கிரத்தில் பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். யூனிட் டிரான்ஸ்பரில் செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, புதிதாக எந்த இடத்தில் பணியில் சேர்கிறாரோ அந்த இடத்தில் கடைநிலை சீனியாரிட்டியில் வைக்கப்படுவர். அதே விதிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது. இதனால், யூனிட் டிரான்ஸ்பரில் சென்றுள்ள 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கிட்டு, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர்.

புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு


வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் புதுச்சேரியை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் ஜூன் 10-ந் தேதி திறக்க விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, 25 May 2013

சென்னை பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்


மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் தங்களின் எண்னை பதிவு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நேரில் நுழைவுச்சீட்டு விநியோகம் இல்லை என சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் தங்களின் எண்னை பதிவு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு வரை அந்தந்த தேர்வு மையத்தில், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே நுழைவுச்சீட்டு விநியோகம், செய்யப்படும். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் நேரில் வழங்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

www.ideunom.ac.in/hallticket/hall_main_new.asp என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PG TRB தாவரவியல் பிரிவில் 2012 ல் நிலுவையில் உள்ள 197 பேருக்கு மே 27 ல் கலந்தாய்வு..



2012 ஆம் ஆண்டு தாவரவியல் பிரிவில் PG TRB மூலம் தேர்வானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக பணி நியமனம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பால் வரும் மே 27 ஆம் தேதி அந்தந்த CEO அலுவலகங்களில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 197 ஆசிரியர்களுக்கு பணிநியமனம் அளிக்க உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன..

AEEO Revised Seniority List for 2013-14 | திருத்தி அமைக்கப்பட்ட 1 லிருந்து 813 வரை வரிசையிலுள்ள 01.01.2013ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற தகுதியான ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியீடு

Friday, 24 May 2013

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இயக்குநர்



இன்று (மே 24) நடப்பதாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்', தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், ""உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு, சிறப்பாசிரியர் பணிமாறுதல் ஆகிய "கவுன்சிலிங்' நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.

Wednesday, 22 May 2013

490 பேர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்


முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 1 ம் தேதி  பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிகல்வித் துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. நேற்று, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடந்தது.மொத்தம், 490 பணிஇடங்கள் காலியாக இருந்தன. பணிமூப்பு அடிப்படையில், 743 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

சென்னையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில், கலந்தாய்வு நடந்தது. 21 பேர் அழைக்கப்பட்டதில், நான்கு பேர், "ஆப்சென்ட்'; ஐந்து பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர்.அவர்களுக்கான உத்தரவுகளை, சி.இ.ஓ., ராஜேந்திரன் வழங்கினார். 12 பேர், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்துவிட்டனர்.

மாநில அளவில், 60க்கும் அதிகமான ஆசிரியர்கள், விரும்பிய இடம் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர்.பலர், கலந்தாய்வுக்கு வரவில்லை.எனினும், 490 பேர், உரிய இடங்களை தேர்வு செய்ததால், அவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு, கலந்தாய்வு இடத்திலேயே, உத்தரவுகள் வழங்கப்பட்டன.உத்தரவுபதவி உயர்வு கடிதங்களை வழங்கிய அதிகாரிகள், "அனைவரும், ஜூன், 1 ம் தேதி  புதிய இடங்களில் பணியில் சேர வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

AEEO COUNSELLING PROCEDURES

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது


 அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

முதல் சுற்று -29.05.2013 & 30.05.2013

,இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013

           9 ஆம் வகுப்பில் ஒரு பாடம் மட்டும் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்று அல்லது இரண்டாம் சுற்று என இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொண்டால் போதும். 9 ஆம் வகுப்பில் 2 பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்றில் 2 நாட்களும் , 2ஆம் சுற்றில் 01.06.2013 அன்று மட்டும் என மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களில் வேலை செய்பவர்களும் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.


பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு. (TET எழுத உள்ள ஆசிரியர்களின் வசதிகாக அரசால் வழங்கப்பட்ட 9 அரசாணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது) .


click here for GO.(MS) NO.72 HIGHER EDN (K2) DEPT DATED.30.04.2013 - Public Services – Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders

click here for DOWNLOAD GO.58 HIGHER EDUCATION (K2) DEPT, DATED.15.04.2013 - Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee Orders

click here for GO.30 HIGHER EDUCATION (K2) DEPT DATED.4.3.2013 - Public Services – Equivalence of Degree – M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management), and B.Com. (Computer Application) awarded by Bharathidasan University, Tiruchirappalli as equivalent to M.Com. and B.Com. degrees respectively – Recommendation of Equivalence Committee –Orders – issued... 






ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு


2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17ம் தேதியும், இரண்டாம் தாள் ஆகஸ்ட் 18ம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 1,100 உதவிப் பேராசிரியர் நியமனத்தை முடித்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்து, இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இந்தப் பணி நியமனம் நடக்கவில்லை. இந்த விவகாரம், சென்னை, ஐகோர்ட்டுக்கு சென்ற நிலையில், ஒன்பது மாதங்களுக்குள், உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை முடிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.


             TET - 2013 EXAM ANNOUNCED.

Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm

Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm

Recruitment Post = 13,000 (SGT+BT)
Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013

முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டாம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)

Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500
SC/ST/Disabled Fees: Rs. 250
click here to download the TRB - TN-TET announcement  Notification

Monday, 20 May 2013

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலையில் பல்வேறு படிப்பு


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், பல்வேறு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.டெக்., பி.ஆர்க்., பி.பி.டி., பி.எஸ்சி.,நர்சிங், பி.சி.ஏ,இ பி.எட் ஆகிய இளநிலை படிப்புகளும், எம்.எஸ்சி, எம்.பில்., எம்.டெக்., எம்.எஸ், எம்.டி.எஸ் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இப்பல்கலையில் முழுநேர மற்றும் பகுதிநேர படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.drmgrdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, 19 May 2013

2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வுமூலம் தகுதிபெற்ற பணிநாடுநர்கள் தமது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதாக முன்னுரிமை கோரியவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு.


முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை I நியமனம் 2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வுமூலம் தகுதிபெற்ற பணிநாடுநர்கள் தமது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதாக முன்னுரிமை கோரியவர்கள் 03.08.2012 மற்றும் 30.10.2012 தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் தமிழ்வழிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்காக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி, இளநிலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர்கல்வி பட்டம் முதலானவற்றை முற்றிலும் தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்களை பெரும்பாலான பணிநாடுநர்கள் சமர்ப்பிக்கவில்லை. உரிய சான்றிதழ்கள் சமர்பிக்காததால் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமைப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்ப இயலவில்லை. எனவே மீதமுள்ள பணிநாடுநர்களில் தமிழ்வழி என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண்  பெற்றவர்களுக்கு மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்போது ஒருவாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

(1) சென்னை- பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.5 போலீஸ் லேன், சென்னை.15,
(2) விழுப்புரம் - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்
(3) சேலம் - ஜெயராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெத்திமேடு, சேலம்.2
(4) கோயம்புத்தூர் - நல்லாயன் உயர்நிலைப்பள்ளி, கோயம்புத்துhர்.1
(5) மதுரை- சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எம்.ஏகே சாலை, மதுரை-2
(6) திருநெல்வேலி – ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
(7) திருச்சிராப்பள்ளி – ஏடிஎம்ஆர்சிஎம் வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.11 பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி – 620 001

ஆகிய மாவட்டங்களில் மட்டும் 23.05.2013 மற்றும் 24.05.2013 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் அறிவியல் பாடத்திற்குரிய பின்னடைவுப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பணிநாடுநர்களுக்கும் சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படவுள்ளது. பணிநாடுநர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (http://www.trb.tn.nic.in/PG2012/13052013/status.asp) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணிநாடுநர்கள் இதர சான்றிதழ்களுடன் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை கீழ்க்காணும் முறையில் பெற்றுவர தெரிவிக்கப்படுகிறது. கல்வித்தகுதி தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறவேண்டிய உரிய அலுவலர்
எஸ்.எஸ்.எல்.சி தலைமையாசிரியர்
மேல்நிலைக்கல்வி தiலைமயாசிரியர்
இளங்கலை பட்டம் முதல்வர்/ பல்கலைக்கழக பதிவாளர்
முதுகலை பட்டம் முதல்வர் / பல்கலைக்கழக பதிவாளர்
இளங்கலை கல்வியியல் (பி.எட்) பல்கலைக்கழக பதிவாளர் மட்டும்

சான்றிதழ் சரிபார்ப்பின்போது தமிழ்வழியில் பயின்றதற்கான உரிய சான்றிதழ்கள் பணிநாடுநர்களால் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் தமிழ்வழி முன்னுரிமை பணியிடத்திற்கு தகுதியற்றவராக கருதப்படுவர். 03.08.2012 மற்றும்  30.10.2012 ல் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின்போது மேற்கண்டவாறு தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்காதவர்கள் தற்போது உரிய சான்றிதழ்கள் பெற்றிருப்பின் 27.05.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சமர்ப்பித்திட அறிவிக்கப்படுகிறது.