test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 29 April 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.



இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்காலதடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுது.அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நாங்கள்   இடைக்கால தடை  உத்தரவு கொடுத்துள்ளதால் வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர்

பள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் - உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.



GO.69 SCHOOL EDN DEPT DATED.18.04.2013 - SG ASST WHO R WORKING IN HIGH / HIGHER SECONDARY SCHOOLS WITHOUT PROMOTION & RETIRED AS SG ASST DURING 01.06.1988 TO 31.12.2005(V-PC), PRIMARY HM SEL / SPL GRADE PAY SANCTIONED ORDER CLICK HERE...

Sunday, 28 April 2013


விழுப்புரம் மாவட்ட அளவில் மின்னணு உபகரணங்களைக் கொண்டு கற்பிக்கும் போட்டியில் சத்தியமங்கலம் பள்ளி ஆசிரியர் திலீப் முதலிடம்..... கல்விமணி வாழ்த்துகிறது....
விழுப்புரம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் திருமதி.ப.ஹேமலதா மாவட்ட அளவில் நான்காம் பரிசு பெற்றார்.

குஜராத்தில் கல்விப் புரட்சி


கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.

மோடியின் அரசு, ‘ஷாலா பிரவேஷ் மகோத்சவ்’ என்ற திருவிழாவை நடத்திவருகிறது. இது பள்ளிக்கூடங்கள் திறக்கும் முதல் நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுவதாகும்.இந்தத் திருவிழாவின் நோக்கம் என்னவென்றால், பள்ளியில் சேரும் வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் தேடிப்பிடித்துப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது. அதேபோல் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளையும் கண்டுபிடித்து அவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்த்து படிப்பைத் தொடரச்செய்வது ஆகும்.

இத்திருவிழாவில் கல்வித்துறையினர் மட்டுமல்ல, அரசுத் தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். முதல்வர் நரேந்திர மோடியும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்.

பெண் கல்வி:

அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக ‘கன்யா கேலவாணி’ என்னும் இயக்கம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது. மக்களைப் பார்த்து நரேந்திர மோடி, ‘நான் உங்களிடம் கேட்கும் பிச்சை ஒன்றே ஒன்றுதான். உங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள்’ என்றார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக்கூடம் திறக்கும்போது நரேந்திர மோடியே நேரில் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்துகிறார். இதற்காக அவர் ஆண்டுக்கு ஆறு நாட்களை ஒதுக்குகிறார். 

பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக, கன்யா கேலவாணி ரதம் ஒன்று கிராமம் கிராமமாகச் செல்கிறது. இது பெண் கல்வியின் அவசியத்தை உணர வைக்கிறது.

மோடியின் அதிரடி உத்தரவின்மூலம் மாநிலம் முழுதும், பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்பட்டன.

வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும்போதே அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. எட்டாம் வகுப்பை முடித்தவுடன், அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் அந்த மாணவிக்கு வட்டியுடன் சேர்த்துப் பணம் வழங்கப்படுகிறது.

பெண் கல்வித் திட்டத்துக்காகவே சிறப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடிக்கு முதல்வர் என்ற முறையில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணமும் இந்தப் பெண் கல்வித் திட்ட நிதியில் முழுவதுமாகச் சேர்க்கப்படுகிறது.

குஜராத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை ஒரு குழந்தை எட்டிவிட்டால், அந்தக் குழந்தையைக் கட்டாயம் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். தப்பவே முடியாது. இடையில் நின்றாலும் விடுவதில்லை.

மருத்துவப் பரிசோதனை

குஜராத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஓர் இயக்கமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரம், பள்ளிக்கூட சுகாதார வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது மாநிலம் முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

முதல் நாள், ‘சுத்தமாக இருப்பது எப்படி’ என்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரண்டாம் நாள், அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மூன்றாம் நாள் சத்தான உணவு பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகளுக்கான சமையல் போட்டி முக்கியமானது ஆகும். இதன்மூலம் பள்ளியில் படிக்கும்போதே அவர்கள் நன்கு சமைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. அதோடு, அந்தப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு எப்படிச் சத்தான உணவைச் சமைப்பது என்பதும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. நான்காம் நாள், மேம்பட்ட சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஐந்தாம் நாள், அதாவது இறுதி நாள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்தச் சுகாதார வார நிகழ்ந்ச்சியில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிக்கு வர முடியாத அப்பகுதிச் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களும் பயன் அடைவது இந்தத் திட்டத்தின் சிறப்பு ஆகும்.

மக்களின் பங்களிப்பு

அரசுப் பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து, தனியார் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வோர் முன்வைக்கும் ஒரே வாதம், தரம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ‘குணோத்சவ்’ என்ற இயக்கத்தை 2009ல் தொடங்கினார் மோடி. மோடி, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 3000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் இதில் அங்கத்தினர். இவர்கள் குஜராத்தில் உள்ள மொத்தம் 32,274 தொடக்கப் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய ஆண்டுதோறும் மூன்று நாட்களைச் செலவிடுகின்றனர்.

இந்த ஆய்வின்போது, மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன், அடிப்படை அறிவியல், கணிதத் திறன் போன்றவை கவனிக்கப்படுகின்றன. இதன்மூலம் அப்பள்ளியின் தரம் மதிப்பிடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன.

இந்த இயக்கம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, இதில் இன்னும் மேம்படுத்தவேண்டியது ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளும் பணியை ஒரு மூன்றாம் அமைப்பிடம் கொடுத்துள்ளனர். அவர்களும் இந்த இயக்கத்தின் போக்கைக் கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை வழங்கிவருகின்றனர்.

புதிய பல்கலைக்கழகங்கள்: 2

001-ம் ஆண்டு குஜராத்தில் 11 பல்கலைக்கழகங்களே இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டில் 41 பல்கலைக்கழகங்களாக இது உயர்ந்து நிற்கிறது.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்துக்கு, குழந்தைகள் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் பல்கலைக்கழகத்தில், குழந்தை பிறப்புமுதல் அதனை ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு அதனை வளர்க்கவேண்டும் என்பது தொடர்பான விரிவான படிப்புகளைச் சொல்லிக்கொடுக்கின்றனர். பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதை 2009-ம் ஆண்டு நரேந்திர மோடி தொடங்கினார். இந்தியாவில் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் உள்ளது. உலக அளவில் மொத்தம் 4 பல்கலைகழகங்கள்தாம் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. 

உலகம் முழுவதும், பெட்ரோல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்குக் கடும் கிராக்கி உள்ளது. இத்தகைய படிப்பின் அவசியத்தையும் வேலை வாய்ப்பையும் புரிந்துகொண்ட நரேந்திர மோடி, ‘தீனதயாள் உபாத்தியாயா பெட்ரோலியப் பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை காந்திநகரில் தொடங்கியுள்ளார். இங்கு பெட்ரோலியம் தொடர்பான அனைத்துப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. 

ஐ.டி.ஐ. மாணவர்கள்:

முன்பெல்லாம் குஜராத்தில் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களைவிடக் குறைவாகவே கணக்கிடப்பட்டது. அதாவது ஐ.டி.ஐ படிப்பதற்கு அடிப்படைக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்புத் தேர்ச்சியே, அவர்களின் கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் 12-ம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அரசு வேலைக்கான தேர்வுகளை ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் எழுத முடியாத நிலை இருந்தது. 

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ இரண்டு ஆண்டுகள் படித்தும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையாக இல்லாத நிலையை உணர்ந்த நரேந்திர மோடி, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதற்காக புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம், ஐ.டி.ஐ முடித்த மாணவர்களுக்குத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பும் கிடைக்கும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதும் அரசு தேர்வுகளை எழுதி அதன்மூலமும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலாண்மைக் கல்வி நிறுவனம்:

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் போக மற்றுமொரு உலகத் தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மோடி விரும்பினார். குஜராத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். இதனால் ‘ஐ கிரியேட்’ என்ற புதிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை, குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்படுத்தினார். 

இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இந்தக் கல்வி நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உருவாக்க 150 கோடி ரூபாயை குஜராத் அரசு ஒதுக்கியது என்றால், இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியப் பணி, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது ஆகும். 

மனிதவளத்தில் பெருமளவு பின்தங்கியிருந்த குஜராத்தை மோடியின் பல்வேறு செயல்திட்டங்கள் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளன. இனி வரும் ஆண்டுகளில் குஜராத் மனிதவளத்திலும் பெருமளவு முன்னேறும் என்பது தெளிவு

அரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த ரேடியோ இங்கிலீஷ் - புது திட்டம்!


அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக பெற்றோர் பலர் குழந்தைகளை தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்த போட்டியை சமாளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் தெரிவிப்பது, பொதுஇடங்களில் பழகும்போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது, உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளை கற்பிப்பது போன்ற பல பயனுள்ள தகவல்கள் தமிழ்-ஆங்கிலம் கலந்து (பை லிங்குவல்) ரேடியோ மூலம் உரையாடல் வடிவில் கற்பிக்கப்பட உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கருத்தாய்வு மையங்களில் (சி.ஆர்.சி.) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இத்திட்டத்துக்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ரேடியோ வழங்கப்பட உள்ளது. ரேடியோ வழங்குவதற்கு முன் இப்பயிற்சிக்காக குழந்தைகள் தயார்ப்படுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், கோவை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “தொடக்கப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஏ.பி.எல்., பயிற்சி முறை வாயிலாக, ஏற்கனவே மாணவர்கள் சிறந்த ஆங்கிலத் திறனும் படைப்பாற்றலும் பெற்று வளர்கின்றனர்.

தற்போது அமல்படுத்தப்பட உள்ள ‘ரேடியோ இங்கிலீஷ்’ பயிற்சித் திட்டமும் வழங்கப்பட்டால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்று விடுவர்,” என்றார்.

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,


            அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., - சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு கூட்டத்தில், எம்.டெக்., சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டத்தை, எம்.இ., சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதலாம் என, அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஏற்றபடி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு



 சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சத்துணவுக்கு, ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்புடன் சாதம் வழங்கும் நாளில் ஒரு மாணவனுக்கு ரூ.1.30 எனவும், பலவகை சாதம் வழங்கும் நாட்களில் ஒரு மாணவனுக்கு ரூ.1.70 காசுகள் எனவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவனுக்கு பருப்புடன் சாதம் வழங்கும் நாளில், ஒரு மாணவனுக்கு ரூ.1.40 ஆகவும், பல வகை சாதம் வழங்கும் நாட்களில், ரூ.1.80 காசுகள் ஆகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை, விறகு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அரசு மானியத்தொகையை உயர்த்தியுள்ளது. எனினும், அரசு உயர்த்திய இத்தொகை போதுமானதல்ல என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு மாணவனுக்கு நான்கு ரூபாய் ஒதுக்கினால்தான், சிரமமில்லாமல் சத்துணவு வழங்க முடியும் என இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

வரும் கல்வி ஆண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக 

உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த 

மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வெளி 

மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.நடப்பு கல்வி

ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.

மே மாத கோடை விடுமுறைக்கு பின்னர் 201314ம் கல்வி ஆண்டுக்கான 

நடைமுறை தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்துப் பிரிவு 

ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. 

இதற்கான ஆயத்த பணியில் கல்வித்துறை இறங்கியுள்ளது.


பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணி இடங்கள் பல்வேறு வழிகளில் 

உருவாகின்றன. குறிப்பாக பணி ஓய்வு பெறுவதன் மூலம் 100க்கும் மேற்பட்ட 

பணியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 

தலைமை ஆசிரியராக செல்பவர்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட காலி 


இடங்களும் உருவாகின்றன. மேலும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் 

உயர்த்தப்படும் போது ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 5 முதல் 9 காலி பணி 

இடங்கள் வரை சுமார் 800 பணி இடங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். 

இவ்வாறாக மொத்தம் 1,400 பணி இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது. 



இவை அனைத்தும் மே மாதம் முடிந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும். 

அதன் பிறகு கலந்தாய்வு நடத்தினால் மட்டும் தான் ஏற்கனவே 

இடமாறுதல்களுக்காக சொந்த மாவட்டங்களை விட்டு வெளி 

மாவட்டங்களில் பணி புரிபவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு 

உள்ளது என பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தென் 

மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் வடமாவட்டங்களில் பல 

ஆண்டுகளாக பணிபுரியும் நிலையில் சொந்த மாவட்டங்களுக்கு வர 

முடியாமல் தவிக்கின்றனர்,எனவே இவர்களின் நலன் கருதி அனைத்து 

விதமான புதிய காலி பணி இடங்கள் உருவான பின்னர் அவை பற்றி 

விவரத்தை ஒளிவு மறைவின்றி முழுமையாக அறிவித்து ஏற்கனவே 

காத்திருக்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் 

முன்னுரிமை கொடுத்து இடமாறுதல் உத்தரவு வழங்க கல்வித்துறை 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தல்..


பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தல்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 29.05.2013 அன்றே பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் அளித்து மறுநாள் 30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் அம்மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார

Friday, 26 April 2013

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO பணி மாறுதல் மூலம் மீளவும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோருதல்.

click here to download the DEE proceeding and form for AEEO to Middle HM Transfer for Service extension

Thursday, 25 April 2013

மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...


பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படிப்பை முடித்து விட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல்  மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் சரியான  ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததே ஆகும். எனவே இந்த நிலை மாறினால் மட்டுமே மாணவர்களின் கல்விதரம் உயர்த்த முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சர்வே குறிப்பில் தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் பலர் உள்ளனர்.
எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படவில்லையெனில் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை கூறியுள்ளது.

சென்ற வருட மாறுதல் படிவத்திலேயே மாறுதல் விண்ணப்பம் அளிக்க உத்தரவு


சென்ற வருட மாறுதல் படிவத்திலேயே மாறுதல் விண்ணப்பம் அளிக்க உத்தரவு. ஒன்றியத்திற்குள் 4 விண்ணப்பம் அளிக்கவும் உத்தரவு.


பள்ளிக் கல்வித்துறையின் மாறுதல் படிவம் 

தொடக்கப் பள்ளித்துறையின்  மாறுதல் படிவம் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஈரோடு வட்டாரத்தில் முப்பெரும் விழா



ஈரோடு வட்டாரத்தின் முப்பெரும் விழா 24.04.2013 வட்டாரத் தலைவர் தலைவர் தலைமையில் ஹோட்டல் சவானா கார்டன் A/Cயில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் வட்டாரச் செயலாளருமான திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநிலத் தலைவர் திரு கோ.காமராஜ் அவர்கள் இயக்க உரையாற்றினார். ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டலத் தலைவர், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயரின் சார்பில் அவரது நேர்முக உதவியாளரும், மாநகராட்சி அலுவலர்களும், அரசூழியர் சங்க மாவட்டச் செயலாளரும் பல்வேறு வட்டாரச் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநிறைவு பெற்ற ஆசிரியருக்கும் டெல்லி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராளிகளுக்கும் பொன்னாடை அணிவித்துப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் நன்றி கூறினார். அனைவருக்கும் உயர்தர உணவு வழங்கப்பட்டு விழா சிறப்புற நிறைவு செய்யப்பட்டது.

அண்ணாமலை பல்கலை. புதிய பதிவாளர் நியமனம்

அண்ணாமலை பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த மீனாட்சிசுந்தரத்துக்கு 58 வயதானதால், சமீபத்தில் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். புதிய பதிவாளர் நியமிக்கப்படா மல் காலியாக இருந்தது.இந்நிலையில், புதிய பதிவாளராக பேராசிரியர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவராக பஞ்சநதம் பணியாற்றி வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலை.யின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. நிர்வாக சீர்கேட்டால் பல்கலைக்கழகம் தரம் குறைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஊழியர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்து நடவடிக்கையை எடுத்து வருகிறது.

Wednesday, 24 April 2013

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்


click here to download the Part Time Teachers Application Form

2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்க முடிவு..



வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக
தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும். இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, 23 April 2013

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து, முழு நேர பணியிலுள்ள ஆசிரியர்களாக 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வி கட்டணமாக ரூ.500ம், தபால் மூலம் பெற ரூ.550ம் வரைவோலை எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 25ம் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு  www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஆண்டு இறுதிநிலைத் தொகுப்புப் பட்டியல் தயாரிப்பது குறித்து ஆசிரியர்களிடையே குழப்பம்.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் ஆண்டு இறுதிநிலைத் தொகுப்புப் பட்டியல் தயாரிப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக அறுதியிட்ட படிவங்கள் இல்லை. ஒவ்வொரு AEEOவும் ஒவ்வொரு முறையைச் சொல்கிறார்கள். சிலர் மாணவனின் பெயர் வாரியாக பருவம் வாரியாக பாடம் வாரியாக FA, SA மதிப்பெண்களைத் தனித்தனியே போட்டு Ovel all கிரேடு நிலையில் FA கிரேடையும் SA கிரேடையும் பிரித்துக்காட்ட வேண்டும் என்கின்றனர். சிலர் மொத்தத்தில் 100க்கு கிரேடு காட்ட வேண்டும் என்கின்றனர். சிலர் மீட்டிங்கில் கேட்டுவிட்டு வந்து சொல்கிறேன் என்கின்றனர். இணையத் தளங்களில் கூட ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரியாகப் படிவங்கள் உள்ளன. தனியார் ஸ்டேஷனரி கடைகளில் விதவிதமாக அச்சடிக்கப்பட்டு பதிவேடு வடிவிலும் படிவங்களாகவும் விற்பனை நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதுகுறித்து வளமையப் பணியாளர்களைச் சந்தேகம் கேட்டால், அவர்களுக்குத் தேவையான QMT எனப்படும் Quality Monitoring Tool படிவத்திற்குத் தான் முக்கியம் கொடுக்கிறார்களே ஒழிய தேர்ச்சிச் சுருக்கம் தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கூறுவதில்லை. கடைசி இரண்டு CRC இரத்து செய்யப்பட்டதால் இதற்கான வகுப்பு நடத்த முடியாமல் போய்விட்டதாம். பாதித் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் இதுவரை இதற்கான தெளிவுரைகள் வழங்கப்படாதது ஆசிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

எம்.பி.பி.எஸ்.- விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.


பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 145 மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். இந்த இடத்தில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே மீதம் உள்ள 1,823 இடங்கள் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும்.இந்த இடங்களை நிரப்பவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பவும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப படிவம், பிராஸ்பெக்டஸ் அச்சடிக்கப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20–ந் தேதி.கவுன்சிலிங் ஜூன் மாதம் 21–க்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும்.இப்போது திருவண்ணாமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரி செயல்படத்தொடங்கும். அதன் மூலம் இந்த வருட மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கினால் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். அதில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போய்விடும். அதுபோல சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரியில் இப்போது 165 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்லூரியில் மேலும் 85 மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சென்னை மருத்துவ கல்லூரி விண்ணப்பித்துள்ளது.சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 உள்ளன. மேலும் 100 இடங்கள் கேட்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வருடம் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு, சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி ஆகியவற்றிற்கு கூடுதல் இடங்கள் கிடைத்தால் அவற்றில் 85 சதவீத இடங்களாக 242 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் நிலை உள்ளது. அதாவது மொத்தம் தமிழக மாணவர்கள் 2,065 பேர் சேர வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மே 9 ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு?


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
முதல்வருக்கு பிடித்த எண், 9 என்பதாலும், அன்று, அமாவாசை என்பதாலும், அன்றயை தேதியில், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மே, 10ம் தேதியோ அல்லது அதை ஒட்டினாற்போலவோ, தேர்வு முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"ஆன்-லைன்" விண்ணப்பமும் ஏற்பு: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், பொதுத் தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். 
"ஆன்-லைன்" வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணை..

விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
விண்ணப்பம் வழங்ககடைசி நாள் 20.5.13
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13
* "ரேண்டம்எண் வெளியீடு 5.6.13
* "ரேங்க்பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை
அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும்,
 www.annauniv.edu என்றஇணையதளத்தில் பார்க்கலாம்.
சென்னை:""நடப்பு கல்வி ஆண்டில்பொறியியல்
 படிப்பில் சேர்வதற்கானவிண்ணப்பங்கள்மே, 4ம் தேதி முதல்
தமிழகம் முழுவதும், 59 மையங்களில்வழங்கப்படும்,'' என
அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ்நேற்று மாலை
,தெரிவித்தார்இந்த ஆண்டுஅரசு ஒதுக்கீட்டின் 
கீழ், 2 லட்சம் இடங்கள்இருப்பதாகவும்அவர் குறிப்பிட்டார்.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு..


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34351/ஏ1/இ4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்
அலுவலர்களின் பணிச்சார்ந்த விவர அறிக்கையினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின் அஞ்சல் முகவரிக்கு 22.04.2013 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Monday, 22 April 2013

தேர்வு / தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்விஅலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள்


*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி

Thursday, 18 April 2013

தொடக்க கல்வி பட்டயதேர்வு பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


"தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:

ஜூன் 2013ல் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (18ம் தேதி) முதல் 29ம் தேதி வரை இணையதளத்தின் மூலம் பக்கம் ஒன்று முதல் நான்கு வரை பதிவிறக்கம் செய்து கொண்டு பக்கம் 5 மற்றும் 6ல் உள்ள அறிவுரைப்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


TO DOWNLOAD APPLICATION FOR ADMISSION TO THE EXAMINATION FOR DIPLOMA IN ELEMENTARY EDUCATION CLICK HERE...


மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி 01.01.2013 முதல் வழங்க  இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 72% உள்ள அகவிலைப்படியுடன்  8% சேர்த்து 80%மாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, 17 April 2013

பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள்

click here to download the Records which should be maintained in Govt/ Aided Elementary/ middle schools

உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23-4-2013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. ந.க.எண் - 9013/ஜே3/2013 நாள் - 10.4.2013.


தொடக்கப் பள்ளி ஆண்டுவிழாவில் இரணியன் வதம் தெருக்கூத்து....


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 12.04.2013 வெள்ளிக்கிழமை அன்று ஆண்டுவிழா நடைபெற்றது. பிற்பகல் 2.00 மணியளவில் பள்ளி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அனைத்து பணி நிறைவு மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாலையில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீ.அறிவழகன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் அஞ்சுகம்நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் ரஞசித்குமார் ரவி சிறப்பு பங்கேற்பாளராக கலந்துகொண்டார்.கலைநிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக இரணியன் வதம் என்னும் கர்நாடகத் தெருக் கூத்து பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப் பட்டது.கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ்ர்களை செஞ்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.தே.கருணாநிதி. கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.பெ. அந்தோணிராஜ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு..கு. ஜெயகோபால் ஆகியோர் வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் இப் பள்ளியின் ஆசிரியர்கள் இரா.அமுதா.ந.விஜயலட்சுமி.சா. சாந்தி. பெ.விஜயலட்சுமி.து.சசிகலா மற்றும் பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திரு.சேக்மூசா மற்றும் செஞ்சி வட்டார இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு


அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு
2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 ல் வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


             தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2013-14ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை முதல் தேதி துவங்குகிறது. இக்கல்வியாண்டில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார். 
          பல்கலை துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பல்கலையில் சேர்வதற்காக மாணவர்களின் மத்தியில் கடும் போட்டிகள் நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி தற்போது 12ம் ஜந்தாண்டு திட்டத்தின் கீழ் பல்கலை அரசு கல்லூரிகளில் 10 சதவீதம் மாணவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
                மேலும், இந்தாண்டு முதல் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்து படிக்க 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் வழங்கப்படும். பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான வசதிகள், பாடத்திட்டங்கள், சோதனை கூடம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
               இது தவிர, மாணவர்கள் வெளி மாநில வேளாண் கல்லூரிகளில் ஒரு பருவம் முதல் நான்கு பருவங்கள் வரை பயில புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவிகரமாக அமையும். 2013-14ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 6ம் தேதி முதல் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார்..

Tuesday, 16 April 2013

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய தேர்வு முறை....

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது. மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ இந்த புதிய முறையை திட்டமிட்டுள்ளது. திறந்த புத்தக தேர்வு முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு இந்த முறையை சிபிஎஸ்இ கொண்டு வர உள்ளது. மாணவர்கள் தேர்வு நேரத்தில் அனைத்து பாடங்களையும் படித்து குழம்புவதை விட, தேர்வுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று 4 மாதங்களுக்கு முன்பே மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும். தேர்வுக்கு அதனை மட்டும் படித்தால் போதும், இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பயமின்றி தேர்வு எழுதவும் முடியும். இதனால் சிறந்த புத்தக தேர்வு முறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும்


தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.


பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M,.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics சமமானதாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology சமமானதாகவும் கருத அரசாணை வெளியீடு


click here to download the GO 53 Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee Orders- issued



Thursday, 11 April 2013

மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும் - நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு


அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், மே மாதம் முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும்.

பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பயிலுவதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த எடுத்துக் கூற வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் மே மாதம் பி.எட்., உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் வருவதால், அவற்றை படிக்கும் ஆசிரியர்களின் கல்வி பாதிக்கும் எனவும், ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

"இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வுகிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர்.


ஓராண்டு பட்டப் படிப்பு - அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.
எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. "யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது

Monday, 8 April 2013

2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.

Sunday, 7 April 2013

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15ம் தேதி தொடக்கம்...

"பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும்"என, தேர்வுத் துறை
 வட்டாரங்கள் தெரிவித்தன. 




கடந்த மாதம், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கின.
 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு
 எழுதி வருகின்றனர். இது வரை, தமிழ் மற்றும் ஆங்கில
 மொழிப்பாட தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த இரு
 தேர்வுகளுமே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. 

தமிழ் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்களுக்குரிய, வங்கி
 சலானை வழங்கவில்லை. விருத்தாசலம் அருகே, தமிழ், இரண்டாம்
 தாள் விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து விழுந்து சேதம்
அடைந்தது. ஆங்கிலம் முதற்தாள் தேர்விலும், செஞ்சி அருகே
 பெரிய பிரச்சனை ஏற்பட்டது. 

ஒரு பார்சலை, பஸ்சில் தவற விட்ட விவகாரத்தில்,
 இன்னமும், விடைத்தாளை, தேடிக் கொண்டிருக்கின்றனர்.
 இதற்கிடையே, இன்று கணித தேர்வு நடக்கிறது. 8ம் தேதி,
 அறிவியல் தேர்வும், 12ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுடன்,
 10ம் வகுப்பு தேர்வுகள், முடிகின்றன.

விடைத்தாள் திருத்தும் பணியை, 15ம் தேதி துவக்கி, 30ம் தேதிக்குள்
 முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 66 மையங்களில், இந்தப்
 பணிகள் நடக்கின்றன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
 ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

வரும், 12ம் தேதி, விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள்
 (டி.இ.ஓ.,), பொறுப்பை ஏற்று, விடைத்தாள் எண்ணிக்கை
 குறித்த விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடுவர் என்றும்,
 15ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணிகளில், ஆசிரியர்கள்
 ஈடுபடுவர் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
 இதன் முடிவு, மே மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

சதுரங்கம் (செஸ்) பலகைகள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை
 மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி
 பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் 
அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு
 "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்காக, "செஸ்' போர்டுகள் வாங்க, தமிழக அரசு கடந்த
 ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 2012-13ம்
 கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும்,
 7 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சதுரங்க
 (செஸ்) விளையாட்டுக்கான பலகைகள் வழங்குவதற்கு, 39.47 லட்சம்
 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மாவட்ட தொடக்கக்
 கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. "செஸ்'
 விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த கொள்முதல் குழு ஏற்படுத்தி 
ஆணை வெளியிடப்பட்டது. கொள்முதல் குழு தலைவராக, மாவட்ட
 கல்வி அலுவலரும், உறுப்பினர் செயலராக மாவட்ட தொடக்கக்
 கல்வி அலுவலரும், உறுப்பினர்களாக முதன்மை கல்வி
 அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) உடற்கல்வி இயக்குனர்
 நிலை-1 (மேல்நிலைப்பள்ளி), தலைமையிட மாவட்ட கல்வி
 அலுவலர், மண்டல உடற்கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி
 ஆய்வாளர், தலைமையிட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்,
 தலைமையிட பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை
 ஆசிரியர், தலைமையிட பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை 
ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த, "செஸ்' போர்டுகள்
 விரைவில் வழங்கப்பட உள்ளன.

"செஸ்' போர்டுகளுக்கு முகப்பில், தமிழக முதல்வர்

 ஜெயலலிதாவின் போட்டோ இடம் பெற்றுள்ளது.
 பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும்,
 14 வகையான நலத்திட்ட உதவிகள் குறித்த, "சக்கரம்' இடம்
 பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு - கணித தேர்வில்,"புளூபிரின்ட்"படி கேள்விகள் கேட்கவில்லை

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  நடந்த கணித
 தேர்வில், "புளூபிரின்ட்" (கேள்வித்தாள் அமைப்பு) படி, 
கேள்விகள் கேட்கவில்லை எனவும், இதனால், சாதாரண மற்றும்
 கிராமப்புற மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்கள் வரை, பாதிப்பு
 ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு 
துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன.
 இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி 
அடைந்து வருகின்றனர்.


10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு தேர்வுகளிலும்,
 குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு
 நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா
 என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், 
இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை
 அடைய செய்துள்ளது.எந்தெந்த பாடத்தில் இருந்து,
 எத்தனை கேள்விகள் கேட்கப்படும்,
 எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும்
 என்பது குறித்து, முன்கூட்டியே அட்டவணை தயாரிக்கப்பட்டு,
 ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
 இதுதான், "புளூபிரின்ட்&' என, அழைக்கப்படுகிறது.
இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே, காலாண்டு,
 அரையாண்டு, மாதிரி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, 
அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும். பொதுத்
தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணித
 பாட தேர்வில், "புளூபிரின்ட்" படியே, கேள்விகள்
 கேட்கப்பட்டன.ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான
 பொதுத் தேர்வில், கேள்வித்தாள் அமைப்பின்படி
, பல கேள்விகள் கேட்கப்படவில்லை
 என்றும், இதனால், "ஆவரேஜ்" மாணவர்களும், கிராமப்புற
 மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், கணித
 ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு
 இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 22 முதல் வினியோகம் - அண்ணா பல்கலை



வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில்

 சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில்

 இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம்

 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக
 நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர்
 பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே
 இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என,
 எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி
 முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன. கடந்த
 ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக,
 மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில்
 கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்
போயின.இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என,
 தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே,
 மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம்
 என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய
 தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும்,
 ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க
 வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில்,
 செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன.
 ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு
 காரணம். ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு,
 ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள்
 துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும்,
 முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.

2.5 லட்சம் விண்ணப்பங்கள் : கடந்த ஆண்டு, 2 லட்சத்து
 28 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. இந்த
 ஆண்டு, கூடுதலாக, 20 ஆயிரம் விண்ணப்பங்கள்
 வரை, தேவைப்படலாம் என, அண்ணா பல்கலை
 எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம்
 விண்ணப்பங்களை அச்சிடப்பட்டுள்ளன.


அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இம்மாதம்,
 22ம் தேதி முதல், விண்ணப்பங்களை வழங்க
 திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு,
 ஒருசில நாட்கள், முன்னதாகவே வரும் என,
 எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கால அவகாசம் கிடையாது.
 22ம் தேதி முதல், மே 15 வரை வழங்கலாம் என,
 திட்டமிட்டுள்ளோம். எனினும், இந்த கால அட்டவணை,
 ஒரு சில நாட்கள் முன்னதாகவோ, சில நாட்கள்
 தள்ளிப்போகவோ நேரிடலாம். மாணவர்கள்,
 விண்ணப்பங்கள் மூலமாகவும், "ஆன்-லைன்'
 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு
, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இரண்டு லட்சம் இடங்கள் : கடந்த ஆண்டு, கலந்தாய்வு
 துவங்கிய நேரத்தில், 1.73 லட்சம் இடங்கள், கலந்தாய்வு 
ஒதுக்கீட்டில் இருந்தன. பின், 30க்கும் மேற்பட்ட
 புதிய கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி
 கொடுத்ததன் காரணமாக, கலந்தாய்வு இடங்கள், மேலும்
 சிறிது அதிகரித்தன. எனினும், 1 லட்சத்து 20 ஆயிரம்
 இடங்கள் மட்டுமே நிரம்பின. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
 இடங்கள் நிரம்பவில்லை.
இந்த ஆண்டு, 2 லட்சம்


 இடங்கள், கலந்தாய்வு
 மூலம் நிரப்ப கிடைக்கும் என,


 பல்கலை வட்டாரங்கள்
 தெரிவித்தன. வழக்கம்போல்,


 இந்த ஆண்டும், 50 ஆயிரம் 
இடங்கள் வரை, காலி ஏற்படலாம்


 என,
 எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு துவங்கியதும்,
 முதலில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும்,
 கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலையின்
 உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள, மள என,
 நிரம்பி விடுகின்றன.
அதன்பின், சென்னையைச்


 சுற்றியுள்ள முன்னணி கல்லூரிகளைத் தான், மாணவர்கள்


 தேர்வு செய்கின்றனர். மாநிலத்தின் கடைகோடிகளில்


 உள்ள கல்லூரிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள்


 மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாத


 கல்லூரிகளை, மாணவர்கள், சீண்டுவதில்லை. இந்த ஆண்டு


 கணித தேர்வு, கடினமாக இருந்ததாக மாணவர்கள்


 தெரிவித்தனர். இதனால், "சென்டம்' சரியவும் வாய்ப்பு


 இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதால்,


 "கட்-ஆப்' மதிப்பெண்களும், குறைய


 வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.