test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 31 March 2013

தமிழ் முதல் தாள் விடைத் தாளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். -அரசு தேர்வுத் துறை



பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசுப் பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய விடைத் தாள்கள் 3 கட்டுகளாகக் கட்டப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியில் தேர்வுத் தாள் கட்டுகள் இறக்கும்போது, ஒரு கட்டு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விருத்தாச்சலம் ரயில் தண்டவாளத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது விடைத்தாள் கட்டு தண்டவாளத்தில் விழுந்திருப்பதும், சில விடைத் தாள்கள் சிறு, சிறு துண்டுகளாக கிழிந்து சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது. 

சேதமடைந்த விடைத் தாள்கள் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. அதை அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் வசுந்தரா தேவி கூறியது: தண்டவாளத்தில் விழுந்த கட்டில் 357 விடைத் தாள்கள் இருந்துள்ளன. இதில் குறிப்பிட்ட அளவிலான விடைத் தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவர்கள் எழுதியுள்ள தமிழ் முதல் தாள் விடைத் தாளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒருவேளை தமிழ் முதல் தாளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தால் சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கப்படும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

Friday, 29 March 2013

கூட்டுறவு சங்கத்துக்கு ஏப்ரல் 5-ம் தேதி முதல்கட்ட தேர்தல் - இன்று வேட்பு மனு தாக்கல்


 தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 16 ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இணை பதிவாளர், இதர செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், மாநில அளவிலான கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர, எஞ்சியுள்ள 22,192 சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 5,855 சங்கங்களுக்கு ஏப்.5ம் தேதி தேர்தல் நடக்கிறது.
 இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று ( 29.03.13 ) நடக்கிறது. 
இன்றே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு,
 தகுதி வாய்ந்த வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. வேட்பு
 மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள். அன்றைய
 தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஓட்டுச்சீட்டு
 முறையில் வாக்கு பதிவு நடத்தப்படுகிறது. வாக்கு பதிவு இருப்பின்,
 ஏப்.9ம் தேதி ஓட்டுகள் எண்ணப் பட்டு, அன்று மாலை முடிவுகள்
 அறிவிக்கப்படும்.

Thursday, 28 March 2013

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு....

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு கட்டாயமாக தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
இது குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்காக நேரம் ஒதுக்கீடு செய்து விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதே போலவே தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும். ஆபத்து நேரங்களில் மாணவிகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் வகையிலான தற்காப்பு பயிற்சிகள் இந்த வகுப்புகளில் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கான மானிய குழு (யு.ஜி.சி) ஜனவரி மாதத்தில் செயலாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவினர் கல்வி நிறுவன வளாகங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்தும் பாலினம் குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் தற்காப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படுகிறது. இந்த பயிற்சியால் சம்பந்தப்பட்ட மாணவி தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும், சமுதாயத்துக்கும் உதவி செய்ய முடியும். இந்த உத்தரவை வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளின் 6வது பக்கத்தில் 5 மதிப்பெண்களுக்கு படிவம் நிரப்பும் பகுதி கொடுக்கப்படும்.

இந்த பகுதியில், விண்ணப்ப படிவம் ஒன்று கேள்வித்தாளுடன் இணைத்து கொடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான தேர்வு மையங்களில் இந்த படிவம் கொடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், மாணவர்கள் விடைத்தாள்களிலேயே படிவத்திற்கான பதிலை நிரப்ப வேண்டும் என அனைத்து தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை வெளியிட்டார்.

அவ்வாறு முழுமையான பதிலை நிரப்பாவிட்டாலும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால்கூட 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பமோ, கவலையோ அடையத் தேவையில்லை என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலை: எம்.பில். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு....


அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்.பில். படிப்புகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை www.annauniv.edu  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 350-க்கும், பிற பிரிவினர் ரூ. 700 தொகைக்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். வரைவோலையை இயக்குநர் (மாணவர் சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஏப்ரல் 13 கடைசி தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜூன் 2012 ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்களும், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களும் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மார்ச் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்று, பட்யச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ ஏப்ரல் 4ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சிறப்பு தேர்வுக்கட்டணம் ரூ.1000ம் செலுத்தி ஜூன் 2012 முதல் மற்றும் இரண்டாமாண்டுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்த்தில் மார்ச் 30ம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 5ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஜூன் 2012ல் தேர்வெழுதி பெற்ற சான்றிதழின் நகலை கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Wednesday, 27 March 2013

துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது..

 

டிசம்பர் 2012-ல் நடந்த அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்காக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்

Monday, 25 March 2013

தொடக்கக் கல்வி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு. .

 
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில் 26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, 24 March 2013

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., ஈடுபட்டுள்ளது.



இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என, 4,000 காலி பணியிடங்களை நிரப்ப, தொடர்ச்சியாக, வரும், 30ம் தேதி முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இந்து அறநிலையத் துறையில், நான்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான தேர்வுகள், இரு இடங்களுக்கான செயல் அலுவலர் தேர்வுகள் வரும், 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், 164 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, ஏப்.,7ல், நடக்கிறது.சுகாதாரத் துறையில், 2,800 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, ஏப்ரல், 21ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், காவல்துறை பயிற்சிப் பள்ளியில், இரு விரிவுரையாளர்களை (சட்டம், நிர்வாகம்) தேர்வு செய்வதற் கான தேர்வு, ஏப்ரல், 27ல், நடக்கிறது.மேலும், கால்நடை துறையில், உதவி மருத்துவர்கள், 921 பேரை, நியமனம் செய்வதற்கான தேர்வு, ஏப்., 28ல், நடக்கிறது. இந்த, ஐந்து வகையான தேர்வுகளிலும், ஏராளமான, தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி - நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி
 மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு
 முடிவுகள் மார்ச் 25ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை
 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள்
 இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in,
 www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com 
 ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் - பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்..

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்கள் முதலில் திருத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 15ம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வரும் 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைகிறது.

இருக்கை கண்காணிப்பாளர்கள் 100 பேருக்கு பதவி உயர்வு...

பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்" முறையில், நடந்தது. துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கையெழுத்திட்ட உத்தரவு கடிதங்கள், உடனுக்குடன், ஆன்-லைன் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, உதவியாளர்களாக இருப்பவர்களில், 100 பேர், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, 22 March 2013

தொடக்கக்கல்வி துறை - 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக் கல்வி
இயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 21 March 2013

CCE - மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய மென்பொருள் அறிமுகம்

அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Wednesday, 20 March 2013

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு இன்று தள்ளுபடி...



தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம்இன்று தள்ளுபடி செய்தது.
.
சென்னையைச் சேர்ந்த கவுதம் சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் 24 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் இரண்டரை கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். 25 முதல் 30 சதவீதம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் உள்ளனர். கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 

4 கட்டமாக ஏப்ரல் 5, 12, 19, 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து அரசிடம் தான் முறையிட வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடியாது.ஏற்கனவே தேர்தலுக்கான அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தலை தடை செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சத்துணவு புதிய முறை உணவுத் திட்டம் அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..

தமிழ்நாட்டில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் 13 வகையான உணவையும், 4 வகை முட்டை மசாலாக்களும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இந்த திட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ள 32 வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டது. நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில்
 அமைச்சர் வளர்மதி மாணவர்களுக்கு உணவு வழங்கினார்.






கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

 

பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து, இளநிலை உதவியாளர்கள், 500 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, அரசின் அனுமதியை பெற்று, மிக விரைவில், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், 500 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன

அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களையும் வழங்க நடவடிக்கை.

 

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு, அரசால்,15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதல், செயல்படுத்தப்பட்ட, இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும், பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன.

எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே, அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் குறித்து, பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு, 10 நாட்களுக்கு முன், அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே நாளில் இரண்டு அரசுத் தேர்வுகள் - மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?

 

தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு நடந்து வருகின்றன. மார்ச் 27ம் தேதி கடைசி தேர்வாக நர்சிங், புள்ளியல் மற்றும் தொழிற்கல்விக்கான "தியரி" தேர்வுகள் நடக்கின்றன. ஆனால், அதே தேதியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வும் நடக்கின்றது. இதனால், ஒருசில சிறிய மேல்நிலை பள்ளிகளில், இரு தேர்வுகளுக்கும் மையங்கள் ஒதுக்க, போதிய இடவசதி இல்லை.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இரு தேர்வுகளுக்கும், குறைந்தபட்சம் ஒரு நாளாவது இடைவெளி விட்டிருக்கலாம். சமூக அறிவியல், நர்சிங், புள்ளியியல் தேர்வுகளை குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே எழுதுகின்றனர். இதனால், 70 சதவீதம் தேர்வு மையங்களில் பிரச்னை வராது.

ஆனால், 30 சதவீதம் தேர்வு மையங்களில், இருப்பிட அளவை விட, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மையங்களில் எவ்வகையான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை, என்றனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. பல மையங்களில் இப்பிரச்னை ஏற்படாது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அருகே உள்ள பெரிய மையங்களில், கூடுதல் மாணவர்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.


தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு தொடக்கநிலை பள்ளிகளின் எண்ணிக்கை

Tuesday, 19 March 2013

நேரடி நியமனம் மூலம் நிணமனம் செய்யப் பட்ட 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான அரசாணை


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான அரசாணை


அரசாணை பெறஇங்கே சொடுக்கவும்

அரசு ஊழியர்கள், அலுவலர்கள், மே. 2013 துறைத் தேர்வுகள் - ஏப்ரல் 15 வரை "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்'



அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் - மத்திய அமைச்சர்


ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர்  மன்மோகன்சிங் அமைச்சரவையில்  முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய  குழு அமைப்பது தற்போதைய  சூழலில்  தேவை  எனவும் அதை நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும்  பாரத பிரதமரை  யூனியன் மினிஸ்டர் அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார். த்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அஜய் மகேன்

ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர்  மன்மோகன்சிங் அமைச்சரவையில்  முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது.
தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய  குழு அமைப்பது தற்போதைய  லில்  தேவை  எனவும்
அதை நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும்  பாரத பிரதமரை  யூனியன் மினிஸ்டர் அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு


மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு

அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரித்து இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என அறிவித்தது. அதே சமயம் அதிக வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு சலுகை அளிக்க கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வருமான வரம்பை மறுபரிசீலனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நகர் புறங்களில் வருமான வரம்பை ரூ. 12 லட்சமாகவும், கிராம புறங்களில் வருமான வரம்பை ரூ. 9 லட்சமாகவும் உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் பல்லம்ராஜு, சமூக நீதி துறை அமைச்சர் செல்ஜா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு நேற்று தீவிர ஆலோசனை நடத்தியது. வருமான வரம்பை ரூ. 7 லட்சமாக உயர்த்த வேண்டும் என வீரப்ப மொய்லி, நாராயணசாமி, வயலார் ரவி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். வருமான வரம்பை அதிக அளவுக்கு உயர்த்தினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து வருமான வரம்பை ரூ. 6 லட்சமாக உயர்த்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இனி இடஒதுக்கீடு சலுகையை அனுபவிக்கலாம்.

Sunday, 17 March 2013

சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்க முதல்வர் உத்தரவு...

 ரூ.12 கோடி செலவில் 99,329 சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் வழங்கப்படவுள்ளது. புதிய வகை உணவுகள் தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கவும் ஒவ்வொரு மையத்திற்கும் மிக்சி தேவைப்படுவதால் அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உள்பட மிக்சி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முதல்கட்டமாக 43,787 சத்துணவு மையங்கள் மற்றும் 9,094 குழந்தைநல மையங்களில் ரூ. 6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் செலவிலும், இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் ரூ.5 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு, தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் ரூ.12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் செலவில் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி.குரூப்–1 தேர்வுடன் சேர்ப்பு..



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன.

குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (Objective Type) நடத்தப்படும்.

ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் AEEO விவரம் கோரி உத்தரவு

தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் மாவட்டத்தில் 01.06.2013 அன்றைய நிலவரப்படி தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஒன்றியத்தில் பணிபுரியும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சார்பான விவரங்களை 22.03.2013-க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Saturday, 16 March 2013

துறைத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்..



அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு, உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று, பதவி உயர்வு பெற, 1930ல், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப் போது, வனத் துறை, மீன் வளத்துறை, வேளாண்மை, கால்நடை, தொழில்துறை என, குறிப்பிட்ட சில துறைகள் மட்டுமே, துறைத் தேர்வு பட்டியலில் இருந்தன.

சுதந்திரத்திற்குப் பின், படிப்படியாக, அனைத்து துறைகளும் சேர்க்கப்பட்டன. தற்போது, 172 வகை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது. இத்தேர்வு, ஆண்டுதோறும், மே, டிசம்பர் ஆகிய மாதங்களில், இரு முறை நடக்கின்றன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும்போது, துறைத் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களையும், உயர் தரத்தில் மாற்றி, முன்னாள் தலைவர் நட்ராஜ், நடவடிக்கை எடுத்துள்ளார். கடைசியாக, 1990ல் மாற்றப்பட்ட பாடத் திட்டங்களே, தற்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றன. 22 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தேர்வு வகை வாரியாக, ஒவ்வொரு தேர்வுக்கும், உரிய பாடத் திட்டங்கள், தற்போதைய காலத்திற்கு ஏற்றார்போல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 100 மதிப்பெண்களுக்கும், "விரிவாக விடை அளித்தல்' என்ற முறை உள்ளது. இனி, 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள், "கொள்குறி (அப்ஜெக்டிவ்) வகை'யில், கேட்கப் படும். 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மட்டுமே, விரிவாக விடை அளிக்கும் வகையில் கேட்கப்படும்.

தேர்வு எண்ணிக்கை அதிகரிப்பு : தற்போது, மே, டிசம்பரில், தேர்வு நடந்து வரும் நிலையில், இனி, கூடுதலாக, செப்டம்பர் மாதத்திலும், ஒரு துறைத் தேர்வு நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு எடுத்துள்ளது. பாடத் திட்டங்கள், தேர்வு சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு, தமிழக அரசின் ஒப்புதலை, தேர்வாணையம் கேட்டுள்ளது. இதற்கு, அரசின் ஒப்புதல், விரைவில் கிடைத்து விடும் என, கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், புதிய பாடத் திட்டங்கள் உள்ளிட்ட முழு விவரங்களும், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு.



அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 18ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 18ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி முடிகிறது. அதே நாளில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதி முடிகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியுடன் முடித்து ஜூன் 3ம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கீழ் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 18ம் தேதி முடிகிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் செயல்படும்.


கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு 32 பார்வையாளர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் நடக்க உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர் ரா.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து நிலைகளில் நடைபெறும் என்றும் முதல்நிலையில் தேர்தல் நடைபெறும் 22,192 கூட்டுறவுச் சங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெறும் என்றும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் கடந்த 4.3.13 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மாநில தேர்தல் அலுவலர்கள்:-

பெ.சீத்தாராமன், உ.சகாயம், மகேசன் காசிராஜன், டாக்டர் முத்துவீரன், எம்.ராஜேந்திரன், டாக்டர்.டி.கே.ராமச்சந்திரன், மீனாட்சி ராஜகோபால், சி.முனியநாதன், அரமந்தர்சிங் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்வையாளர்கள் விபரம்:-

தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியான பார்வையாளர்கள் விபரம் வருமாறு:

கூடுதல் பதிவாளர் ஆர்.எம்.ஜெயம்பாண்டியன் சென்னை, இணைப்பதிவாளர்கள்: முருகன் அரியலூர், ஆர்.இராமமூர்த்தி கோயம்புத்தூர், பி.ரேணுகாம்பாள் கடலூர், எஸ்.இராமதாஸ் தர்மபுரி, டி.செல்வகுமார் திண்டுக்கல், டி.பிரபு ஈரோடு, எம்.உமாமகேஸ்வரி பெரம்பலூர், கே.வி.எஸ்.குமார் புதுக்கோட்டை, பி.ஆரோக்கியசுகுமார் இராமநாதபுரம், வி.லட்சுமி சேலம், ஜி.காந்தநாதன் சிவகங்கை, எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் தஞ்சாவூர், கே.எம்.வெள்ளியங்கிரி தேனி, ஆர்.தயாளன் திருநெல்வேலி, எஸ்.பாபு திருப்பூர், ஏ.ஜி.சந்திரசேகர் திருவள்ளூர், ஆர்.பிருந்தா திருவாரூர், ஜி.ராஜேந்திரபிரசாத் திருச்சி, கே.பாண்டியன் தூத்துக்குடி, திருகுண ஐயப்பத்துறை திருவண்ணாமலை, எஸ்.ஆர்.வெங்கடேசன் வேலூர், ஏ.பாலகிருஷ்ணன் விழுப்புரம், எஸ்.குருமூர்த்தி விருதுநகர்.

இவர்களுக்கு கூட்டுறவுத் தேர்தல்களை திறம்பட நடத்துவதற்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மார்ச் 2 மற்றும் 3-ம் தேதி சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன, தேர்தல் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 10-ம் தேதி நடத்தப்பட்டது.

முதல் நிலையில், நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின்போது, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்புமனு தாக்கல் செய்தல், தேர்தல் நடத்துதல், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவித்தல் ஆகிய முக்கியமான நிகழ்வுகளின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள காவல்துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளளார்

26 ஒன்றியங்களில் 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் மாதிரிப் பள்ளிகள் .முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும்
மாணவ, மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீரான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின் தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்பொழுது அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்கள், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அந்தியூர் ஒன்றியங்கள், திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி மற்றும் வேப்பனஹள்ளி ஒன்றியங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியம், சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன் பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஆகிய ஒன்றியங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தில் திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், சங்கராபுரம் (கல்வராயன் மலை), உளுந்தூர்பேட்டை ஒன்றியங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்தரம் ஒன்றியம் என 26 ஒன்றியங்களில், ஒன்றியம் ஒன்றுக்கு ஒரு மாதிரி பள்ளி வீதம் 26 மாதிரி பள்ளிகள் துவக்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
6 முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம் 1, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 7, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5, கணினி ஆசிரியர் பணியிடம் 1, உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 1, இசை ஆசிரியர் பணியிடம் 1, ஓவிய ஆசிரியர் பணியிடம் 1 என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர் பணியிடம் 1, நூலகர் பணியிடம் 1, ஆய்வக உதவியாளர் பணியிடம் 1, அலுவலக உதவியாளர் பணியிடம் 1, கூட்டுபவர், துப்புரவு பணியாளர் பணியிடம் 1, இரவு காவலாளி பணியிடம் 1, தோட்டக்காரர் பணியிடம் 1 என 7 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Friday, 15 March 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு.


யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இப்பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய உறுப்பினர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கான புதிய விதிமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய மத்திய இணை மந்திரி நாராயணசாமி, “புதிய விதிமுறைகள் தொடர்பாக யு.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை இந்த விதிமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்வு காணப்படும் வரை யு.பி.எஸ்.சி. தேர்வில் பழைய முறையே தொடரும்” என்றார்.

சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்க ஆணை..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

GO.62 FINANCE (PENSION) DEPT DATED. 28.02.2013 CLICK HERE...

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 14 வரை நடத்த திட்டம்..



பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 14 வரை 55 மையங்களில் நடக்கின்றன. இந்தப் பணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 

கடந்த, 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியல்,கணிதம், விலங்கியல்  தேர்வுகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், வரும், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

வழக்கமாக, முதலில், மொழிப்பாட தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், படிப்படியாக, இதர தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும். இம்முறை, 27ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிந்தபின், மறு நாளில் இருந்து, விடைத்தாளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டதற்குப் பின், "டேட்டா சென்டரில்" பாட வாரியாக, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடக்கும். இந்தப் பணிகள் முடிந்தபின், தேர்வு முடிவு தயாராகும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்..


பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்; மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
இதனால், கணிதத்தில், நூற்றுக்கு நூறு எடுப்பவர்கள் எண்ணிக்கை சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணிதம், விலங்கியல் தேர்வுகள், நேற்று நடந்தன. பொறியியல், சீட் கிடைக்க, கணிதத்தில் பெறும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். கட்-ஆப் மதிப்பெண்களில், 0.25, 0.5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, பல ஆயிரம் மாணவர்களை விட, பின்னுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதுவரை நடந்த தேர்வுகள், எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் கேள்விகள், கடினமாகவும், எதிர்பார்க்காததாகவும் அமைந்து இருந்ததாக, மாணவ, மாணவியர், அதிர்ச்சியுடன் கூறினர்.

ஆறு மதிப்பெண் பகுதியில், 12 கேள்விகள் தரப்பட்டு, அதில், 10 கேள்விகளுக்கு, விடை அளிக்க வேண்டும். இதில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இதற்கு, விடை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆறு மதிப்பெ
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
இதனால், கணிதத்தில், நூற்றுக்கு நூறு எடுப்பவர்கள் எண்ணிக்கை சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணிதம், விலங்கியல் தேர்வுகள், நேற்று நடந்தன. பொறியியல், சீட் கிடைக்க, கணிதத்தில் பெறும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். கட்-ஆப் மதிப்பெண்களில், 0.25, 0.5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, பல ஆயிரம் மாணவர்களை விட, பின்னுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதுவரை நடந்த தேர்வுகள், எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் கேள்விகள், கடினமாகவும், எதிர்பார்க்காததாகவும் அமைந்து இருந்ததாக, மாணவ, மாணவியர், அதிர்ச்சியுடன் கூறினர்.

ஆறு மதிப்பெண் பகுதியில், 12 கேள்விகள் தரப்பட்டு, அதில், 10 கேள்விகளுக்கு, விடை அளிக்க வேண்டும். இதில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இதற்கு, விடை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆறு மதிப்பெண், கட் ஆகிவிடும். இந்த கேள்வி, மிக கடினமாக இருந்ததாக, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. இந்த கேள்வி, இதுவரை, கேட்கப்பட்டதே கிடையாது என்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த பகுதியை நடத்துவது கிடையாது என, கணித பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர்.

இதுகுறித்து, கணித பாட ஆசிரியர்கள் இருவர், மேலும் கூறியதாவது: "வகை நுண்கணிதம் பயன்பாடுகள்" என்ற பாடத்தில் இருந்து தான், ஆறு மதிப்பெண்களுக்கான கட்டாய கேள்வியும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன.

10 மதிப்பெண்களுக்கான கேள்வி, முதலில், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின், பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தபோது, இந்த பகுதியை சேர்த்துவிட்டனர். பாடத்திட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறிவிட்டனர்.
பல மையங்களில், இந்த கேள்விக்கு, மாணவர்கள், விடை எழுதவில்லை என்பது, உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆறு மதிப்பெண் பகுதியில், இடம்பெற்ற 49, 50வது கேள்விகள் கூட, யாருமே எதிர்பார்க்காதது தான். மொத்தத்தில், 200க்கு 200 எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, கண்டிப்பாக சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாடத்தில், தோல்வி அதிகம் இருக்காது. இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ண், கட் ஆகிவிடும். இந்த கேள்வி, மிக கடினமாக இருந்ததாக, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. இந்த கேள்வி, இதுவரை, கேட்கப்பட்டதே கிடையாது என்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த பகுதியை நடத்துவது கிடையாது என, கணித பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர்.

இதுகுறித்து, கணித பாட ஆசிரியர்கள் இருவர், மேலும் கூறியதாவது: "வகை நுண்கணிதம் பயன்பாடுகள்" என்ற பாடத்தில் இருந்து தான், ஆறு மதிப்பெண்களுக்கான கட்டாய கேள்வியும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன.

10 மதிப்பெண்களுக்கான கேள்வி, முதலில், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின், பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தபோது, இந்த பகுதியை சேர்த்துவிட்டனர். பாடத்திட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறிவிட்டனர்.

பல மையங்களில், இந்த கேள்விக்கு, மாணவர்கள், விடை எழுதவில்லை என்பது, உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆறு மதிப்பெண் பகுதியில், இடம்பெற்ற 49, 50வது கேள்விகள் கூட, யாருமே எதிர்பார்க்காதது தான். மொத்தத்தில், 200க்கு 200 எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, கண்டிப்பாக சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாடத்தில், தோல்வி அதிகம் இருக்காது. இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Thursday, 14 March 2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு......

சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு, மத்திய அரசு நடத்தும், சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் (மெயின் தேர்வு), சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதில், பிராந்திய மொழிகளில் தேர்வெழுத, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவத்தை குறைத்து, புதிய பாடத்திட்டத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என, இரு பிரிவுகளின் கீழ், 100 கேள்விகளும், பொது அறிவுக்கு, 100 கேள்விகளும் தரப்படும்.
இதில், பெரும்பான்மையான தேர்வர்கள், பொதுத்தமிழ் பிரிவில், விடை அளிப்பர். ஒவ்வொரு கேள்விக்கும், தலா ஒன்றரை மதிப்பெண்கள் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்படுகிறது. புதிய பாடத் திட்டத்தின்படி, மொழிப்பாடங்களுக்கான கேள்விகள், 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள, 150 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இடம்பெறும். குறைக்கப்பட்ட 50 கேள்விகளும், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், புதிய பகுதி கேள்விகளாக, பொது அறிவு கேள்விகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழி பகுதியில் இருந்து, 50 கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், 75 மதிப்பெண்கள், தேர்வர்களுக்கு பறிபோய் உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறையில் புதிய பாடதிட்டம் அறிமுகம்.


 குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
பல்வேறு மாநிலங்களில், அமலில் உள்ள பாடத்திட்டங்களின் தரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) பாடத் திட்டங்களின் தரமும், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இனி, தேர்வாணைய தேர்வுகள், தேர்வர்களுக்கு, சவாலாக இருக்கும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படும். 12 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்கள், மாற்றி, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு ஆண்டில், தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த நட்ராஜ், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில், ஆறு மாதங்களாகவே, முனைப்பாக ஈடுபட்டு வந்ததாக, துறை வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்தன.
நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டித்தேர்வு பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இல்லாதபடி, புதிய பாடத்திட்டங்கள், தரமாக உருவாக்கப்பட்டு உள்ளன.

பார்லி., முன் ஏப்., 4ல் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மறியல்:

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல், பார்லிமென்ட் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலர், ஈஸ்வரன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டத்தை, ஏற்கனவே முடிவு செய்தது போல், 2015க்குள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் என்பதை தவிர்த்து, தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளி கல்வித் துறையில், தனியார் பங்களிப்பு திட்டத்தையும், ஆசிரியர் தகுதி தேர்வையும் தவிர்க்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளத்தை, தற்போதைய அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். பழைய முறையில் பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல் பார்லிமென்ட் முன், தமிழகம் உட்பட, 19 மாநிலங்களிலிருந்து, 60 ஆயிரம் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு ஈஸ்வரன் கூறனார்.

1000 தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி



தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
அனைவருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது

Tuesday, 12 March 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றம்...


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய தேர்வுமுறையால் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளின் நேரடி நியமனத்திற்காக சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற தேசிய அளவிலான போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது.இன்றைய சூழலுக்கு ஏற்ப சிவில் சர்வீசஸ் தேர்வில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக பேராசிரியர் அருண் நிகவேகர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட மத்திய பணியாளர் நலத்துறை அவற்றின் படி சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடியாக ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, மெயின் தேர்வில் மொத்தம் 7 தாள்கள் இருக்கும். முதல் தாளான ஆங்கிலம் தாளில் கட்டுரை எழுதுதல், ஒரு கட்டுரை கொடுத்து அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல், கொடுக்கப்படும் ஒரு விஷயத்தை சுருக்கி வரைதல் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இதற்கு 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2, 3, 4 ஆகிய மூன்று தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை.2–வது பொது அறிவு தாளில் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, உலக பூகோளம், சமூகம் ஆகியவற்றில் இருந்தும், 3–வது தாளில் நிர்வாகம், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், சமூக நீதி, அரசியல், சர்வதேச உறவுகள் ஆகியவற்றில் இருந்தும், 4–வது தாளில், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண்.

5–வது தாளில் அறநெறி, தேசிய ஒருமைப்பாடு, பொது விழிப்புணர்வுத்திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்பார்கள். தாள் 6, தாள் 7 இரண்டும் விருப்பப் பாடங்கள் ஆகும். 5, 6, 7 தாள்களுக்கும் தலா 250 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.முன்பு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வினை ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்பட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மொழியிலும் தேர்வு எழுதலாம். ஆனால், புதிய முறையில் பிராந்திய மொழியில் தேர்வு எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அந்த மொழியில் தேர்வு எழுதலாம். மற்ற பட்டதாரிகள் பிராந்திய மொழியில் தேர்வு எழுத இயலாது. அதாவது, இனிமேல் பி.ஏ. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே தமிழ்வழியில் தேர்வு எழுத முடியும். அதுபோல அவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முடியும்.பழைய முறையில் எந்த பட்டதாரியும் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்கலாம். தமிழ்நாட்டில் இதுவரை பல மாணவ–மாணவிகள் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து வந்தனர். அதோடு தேர்வில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையத்தினர் கவலை தெரிவித்தனர்.

புதிய முறையில், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கும், இந்திய வனப்பணிக்கும் (ஐ.எப்.எஸ்.) சேர்த்து பொதுவாக ஒரே முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இந்த புதிய தேர்வுமுறை நடப்பு ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் 26–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 4–ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது

Monday, 11 March 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சி - ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு



தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சியை ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு

கவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில்,  மத்திய அரசு, ஆன்லைனில் அந்தச் சட்டம் குறித்த சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ம்2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசுடைய செயல்பாடுகளைப் பற்றியும், அரசு அதிகாரிகளின் அலுவல் பற்றிய தகவல்களையும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி  பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசின் சில துறைகளில் மட்டும் இச்சட்டத்தைப் பயன்படுத்த  சில வரம்புகளும் விதிவிலக்கும் உள்ளன.

இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, 7 நாட்கள் மற்றும் 15 நாட்கள் என  இரண்டு வகைகள் உள்ளன. 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே அடுத்த பிரிவிற்குச் செல்ல முடியும். மேலும், இந்த 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 15 நாட்கள் கொண்ட பயிற்சியில் சேர முடியும்.

இந்தப் பயிற்சியில் சேர்வதற்காக சில தகுதிகள் இருக்கின்றன. பயிற்சியில் சேரும் ஆண்/பெண் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனைப் படித்து புரிந்துகொள்ளும் அளவு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தகவல் உரிமைச் சட்டத்தின் இலவச ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், அதனுடைய தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், பதிவு செய்தவர்களுக்கென கடவுச்சொல் (password)  மற்றும் பயனாளர் ஐ.டி. (user id) குறித்த தகவல்கள் மெயிலில் தெரிவிக்கப்படும். அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சித் தளத்தில் நுழைந்தால், பயிற்சியை தொடங்கலாம்.

மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc.cgg.gov.in