test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 28 February 2013

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் -8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதுகின்றனர்



தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுக்காக 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டைவிட 43,559 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 48,788 பேர் தனித்தேர்வர்களாக பதிவு செய்துள்ளனர். சென்னையில் 140 தேர்வு மையங்களில் 51,531 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,717 பேர் மாணவர்கள், 27,814 பேர் மாணவியர் ஆவர்.

தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, அவற்றை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட 229 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்வுகளைக் கண்காணிக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிற்படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடத் தேர்வுகளின்போது வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வுகளை நடத்துவர்.

6 - ம் வகுப்பு முதல் 10 - ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்...



அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தனி நபர்வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.

கடந்த ஆண்டுதான் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை  நிகர ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மட்டும் வரி த‌ள்ளுபடி. இது மாத ஊதியம் பெறுபவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது....

ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் - ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி


ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றா‌ர்.

இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ‌சித‌ம்ப‌ர‌ம் கூ‌றினா‌ர்.

Wednesday, 27 February 2013

T.R.B. போட்டித் தேர்வு பாடத் திட்டம் மாற்றி அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு?

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.

எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.

புதிய கல்வி அமைச்சராக திரு. வைகை.செல்வன் நாளை பதவி ஏற்பு...


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.



டாக்டர் வைகை செல்வன் 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகிய
மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
சுகாதாரத்துறை அமைச்சராக திரு. கே.சி.வீரமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பூனாட்சி கதர் கிராம தொழில்துறை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சர்கள் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில்  பதவியேற்க உள்ளனர்.நாளை பதவியேற்க உள்ள அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, 26 February 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு - முன்னேற்பாடுகள் தீவிரம்....

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு
இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்வு நடக்கும் மையங்கள், தேர்வு அறைகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் துண்டு காகிதங்கள் எதுவுமின்றி, சுத்தப்படுத்தவும், பயன்பாடு இல்லாத வகுப்பறைகளை பூட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குள் அன்னிய நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

அப்போது, தேர்வு பணி நியமன உத்தரவு தரப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான எழுது உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருக்கோவிலுார் கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
விமுப்புரம் மாவட்டம். திருக்கோவிலுார் வட்டார தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருக்கோவிலுார் கூடுதல் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆசிரியர் விரோத போக்கு .கல்வி விரோத போக்கு. லஞ்ச விரோத போக்கு – இவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் பாண்டியன் தலைமையில் நேற்று (25.02.2013) நடைபெற்றது.
வட்டார செயலாளர் மரியஆரோக்கியதாஸ் ஆர்ப்பாட்ட நோக்க உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பிரிவு பொதுச்செயலாளர் திரு.சா.அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் விமுப்புரம் மாவட்டத் தலைவர் திரு.ஆ. சேக்மூசா. மாவட்ட செயலாளர் திரு.சு.தண்டபாணி. பொருளாளர் திரு.இரா.குமார் சிறப்புறை நிகழ்த்தினார்கள்..மாவட்ட வட்டார இயக்க மற்றும் ஓய்வு பிரிவு முன்னோடிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை சிறப்பித்தனர்.ஆர்ப்பாட்டத்தினை மேனாள் வட்டார தலைவர் வாசு முடித்து வைத்தார். இவ்வார்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.வட்டார பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Monday, 25 February 2013

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க புதிய திட்டம்...


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க புதிய திட்டம்- புதிய மாணவர்களை அழைத்து வரும் மாணவர்களுக்கு பரிசு திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ ர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்களை சேர்க்க முயற்சி எடுப்போருக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த திட்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 166 அரசு பள்ளிக ளில் இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 871 அரசு தொட க்கப்பள்ளிகள், சுமார் 10 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 1.50 கோடி மாணவ மாணவிகள் படிக்கின்றனர். மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரிய ன்டல் என நான்கு வகை பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை, முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப் படுத்தப் பட்டுள் ளது. அரசு பள்ளிகளில் தகுதித் தேர்வின் அடிப் படையில் ஆசிரியர் நியம னம், கணினி வகுப்பறைகள், உரிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, சீருடை, பாடப் புத்தகங்கள், மடிக் கணினி, மதிய உணவு, கால ணிகள், இலவச பேருந்து பயண அட்டை, கணித உப கரணப் பெட்டி, புவியியல் வரை படம், சிறப்பு ஊக்கத் தொகை என 14 வகை யான சிறப்புத் திட்டங்கள் உள் ளன.
இத்தனை சலுகைகள், வசதிகள் இருந்தபோதிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர் க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரே மாதிரியான பாடம், உதவித் திட்டங்கள் இருந்தும் தனியார் பள்ளி களில் தான் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தர விட் டுள்ளது. இதற்காக மாவட் டவாரியாக கல்வித் துறை அலுவலர்கள் நடவ டிக்கை எடுத்து வருகின் றனர்.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதன்படி, மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில், இன்று காலை 9.15 மணி அளவில் நடந்த இறை வணக்க கூட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள சிறப்புத் திட்டங்கள், மாண வர் களுக்கு கிடை க்கும் பயன்கள், தர மான கல்வி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இறைவணக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் 5 நிமிடம் மாணவர்கள் மத்தியில் அரசு பள்ளிகளின் சிறப்புகள் குறித்து பேசினர். தற்போது அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் தங்களது தம்பி, தங்கை கள், உறவினர் குழந் தைகள் மற்றும் அருகில் உள்ள குழந் தை களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் 166லும் இன்று இந்த பிரசாரம் தொடங்கியது. இதுபோல அரசு மானியம் பெறும் பள்ளிகள் 185லும் இதுபோல விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவ லர் ஜெயக்குமார் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர் களுக்கு தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான கல்வி அளிக்கப்படுகிறது. இலவச கல்வி உள்ளிட்ட 14 வகையான சிறப்புத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆகையால், உதவித் திட்டத்துடன் இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிக ளில் மாணவர்களை சேர் க்க உயர்நிலை, மேல்நிலை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க முயற்சி எடுக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்படும். தலைமையாசிரியர்கள், பெற்றோர் இந்த புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வு?


.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது. புதிய 
ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில்
 சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க
 வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன.
 என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில்
 எதிர்பார்க்கலாம்.

பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய
 இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க
 வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி
 பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
 உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.
 அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை
 படித்தால் போதும்.

பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து
 குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, 
கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல்
 பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக 
எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை
 நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி 
பெற வாழ்த்துக்கள்.

கல்வி உதவித் தொகை பற்றிய இணையதளங்கள்





கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.
பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.
www.scholarshipsinindia.com
www.education.nic.in
www.scholarship-positions.com
www.studyabroadfunding.org
www.scholarships.com
www.scholarshipnet.info
www.eastchance.com
www.financialaidtips.org
இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் பாடத்தை எளிமையாக்க புதிய பயிற்சி திட்டம் ....


அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் பாடங்களை நடத்தும் புதிய பயிற்சி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6,7,8 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர்களை அறிவியல் பாடங்களை ஆர்வமுடன் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வித் துறை மற்றும் எவரெஸ்ட் எஜூ சிஸ்டம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளன.

‘தேடுதல்,ஆராய்தல்,கண்காணித்தல்’ ஆகிய விஷயங்களை கொண்டு அறிவியலை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் முறையை மாணவர்களிடம் அறிமுகம் செய்ய உள்ளனர். இதன் மூலம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முடியும். இதற்காக எவரெஸ்ட் எஜூசிஸ்டம் நிறுவனம் பல்வேறு அறிவியல் உபகரணங்களை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. அத்துடன் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் அந்த உபகரணங் களை கொண்டு அறிவியல் சோதனைகளை செய்தும் காட்டியுள்ளது.

குறிப்பாக 6,7,8 வகுப்பு அறிவியல் பாடங்களில் இடம் பெறும் இதயம், மனித உடல் உறுப்புகள், மலரின் பாகங்கள், காந்தத்தின் பண்புகள் ஆகியவற்றை விளக்கும் உபகரணங்கள், வேதியியலில் இடம் பெறும் அமிலம், காரம், உப்பு ஆகியவை லிட்டுமஸ் தாளில் எப்படி வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது, இயற்பியலில் எலக்ட்ரான், புரோட்டான்களின் ஓட்டம் ஆகியவற்றை விளக்குதல் உள்ளிட்ட சோதனைகள் செய்து காட்டப்படுகிறது.

இதற்காக அரசுப் பள்ளியில் பணியாற்றும் 8 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் 40 அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர். பின்னர் அவர்கள் அருகாமை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். அவர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சோதனைகள் செய்து காட்டப்படுகிறது. முதற்கட்டமாக 40 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த திட்டம் குறித்து அறிந்த மத்திய பள்ளிக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகளும் இந்த திட்டத்தை தங்கள் பள்ளிகளில் செயல்படுத்த தொடக்க கல்வித்துறை அதிகாரிகளை நாடியுள்ளனர்

Saturday, 23 February 2013

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்



சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்.

எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சென்னைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 76 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட் வழங்கப்படும்.

கணித திறமையை வளர்த்துக் கொள்ள பிரத்யேக இணையதளம்

 

உங்களின் குழந்தைகள் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்யேக   இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக
அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.
கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது.

இணையதள முகவரி: www.mathplayground.com

இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் - மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்கள்

 

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்,

கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தனியார் பள்ளிகளில் அந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறினாலும், வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இது குறித்து அவ்வப்போது கட்டண குழுவிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்டண குழுவிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்க பெற்றோர் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், பெற்றோர் சங்கங்களும் ஒன்று திரண்டு, சில கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தன. அதில் ஒன்று, மாவட்ட வாரியாக புகார் தெரிவிக்கும் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பது. இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சட்டப் பூர்வமான குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தலைவர்களாக கொண்டு இந்த குழுக்கள் செயல் படும். அந்த குழுவில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட தலைநகரில் செயல்படும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 7 பேரை உள்ளடக்கி அந்தந்த மாவட்டத்தில் குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.

தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர் மேற்கண்ட குழுவின் தலைவராக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பெறப்படும் புகார்களின் பேரில் சம்மன் அனுப்பி குறிப்பிட்ட பள்ளி முதல் வர் மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து, அதன் அறிக்கையை சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது கட்டணக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.
A

Friday, 22 February 2013

அனைவர்க்கும் அறிவியல் – பிபிசி தமிழோசை


பிபிசியின் உலகசேவையிலிருந்து வழங்கப்படும் தமிழோசை வானொலி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. செய்திகளின் தரத்தாலும், தமிழ் உச்சரிப்பிற்காகவும் அந்த செய்தியறிக்கைக்கான நேயர்கள் ஏராளம்.
நேரடியாக வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாவிட்டாலும் பிபிசியின் தமிழ் இணைய தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கேட்டு மகிழ முடிகிறது.

அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிAnaivarkkum Ariviyal

தமிழோசை நிகழ்ச்சியில் வாரம் ஒரு முறை அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அநேகமாக தமிழில் அறிவியல் செய்திகளை முந்தித் தருவது அந்நிகழ்ச்சியாகவே இருக்கும். பிபிசி தமிழோசையில் அச்செய்தி வந்த பின்னரே பிற தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வருவதை பல சமயம் காணமுடிகிறது.

இலவசமாக பதிவிறக்க

மற்றுமொரு புதிய வசதியாக பிபிசி,  அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிக்கான ஒலிக்கோர்வைகளை (podcasts) இலவசமாக பதிவிறக்க வழிவகை செய்துள்ளது. பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைச் சொடுக்கவும். (http://www.bbc.co.uk/podcasts/series/ariviyal)
பள்ளிகளில் இதற்கான பயன்பாடுகள் பல. குறிப்பாக அறிவியல் ஆசிரியர்களுக்கு இந்த ஒலிக்கோர்வைகள் அதிகம் பயன்படக்கூடும். காலை வழிபாட்டுக் கூட்டங்களில் செய்தி வாசிப்பினிடையே இந்த ஒலிக்கோர்வைகளை பயன்படுத்திக் கொள்ள இயலும்.  

குரூப் 2 பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று தொடங்கியது.


குரூப் 2 பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு வரும் 4-ம் தேதி நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில்:
கடந்த 2011 முதல் காலியாக உள்ள 3 ஆயிரத்து 631 குரூப் 2 பிரிவுக்கு உட்பட்ட பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூன் 13-ல் வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஆயிரத்து 426 பணியிடங்கள் நேர்காணல் தேர்வுடன் கூடியதாகும்.எனவே, இந்த நேர்காணலில் பங்கேற்க 2 ஆயிரத்து 852 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணல் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்  தேர்வில் பங்கேற்க வேண்டிய நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம். 
நேர்காணல் தேர்வு முடிவுற்றபின் விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், வரும் 2-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.1426 நேர்காணல் தேர்வுடன் கூடிய பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கான கவுன்சிலிங் வரும் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள், கலந்து கொள்ள வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்காணல் தேர்வு மற்றும் கவுன்சிலிங் குறித்த தகவல்கள் எதுவும் விண்ணப்பதாரர்களுக்கு தபால் வழியாக அனுப்பப்படமாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இது குறித்து அவ்வப்போது வெளியிடப்படும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கின


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு முன்னதாக, இந்த செய்முறைத் தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. மொத்தம், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 75 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். எழுத்து தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், செய்முறைத் தேர்விலும் பங்கேற்கின்றனர். அதன்படி, 10.5 லட்சம் மாணவ, மாணவியர், இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இம்மாதம், 28ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுப் பணிகளை முடித்து, அதன் விவரங்களை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி

 தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இத்திட்டம் சார்பில், 2009ம் ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக, மானியம் ஒதுக்கப்படுகிறது. 2012-13 ம் ஆண்டிற்காக, மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஆய்வக உபகரணங்கள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் அடிப்படை தேவைக்காக,
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.25 ஆயிரத்திற்கான ஆய்வக உபகரணங்களை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருசில தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்குவதற்கு, தலைமையாசிரியர்களை அத்திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
அந்த நிறுவனங்களில் வாங்கப்படும் உபகரணங்களின் மதிப்பு ரூ.7 ஆயிரம் கூட இருக்காது. அதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலைகளை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என, தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
போதிய ஆய்வக வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கும், இந்த உபகரணங்களை வாங்குவதால், அதை பயன்படுத்த முடியாமல், கடந்த ஆண்டுகளில் வாங்கிய உபகரணங்களே, அட்டை பெட்டிகளுக்குள் காட்சி பொருட்களாக முடங்கி கிடக்கும்போது இந்தாண்டும், அதே பொருட்களை வாங்கி, அதற்கான "பில்" லாக ரூ.25 ஆயிரத்தை காசோலையாக அனுப்ப வேண்டியுள்ளதாக, கவலை தெரிவிக்கின்றனர்.
தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு என்ன வகை அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று, எங்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஆய்வகப் பொருட்களையே வாங்க, திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் அதே பொருட்களை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் மட்டும் வாங்க, வற்புறுத்துகின்றனர். பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், எங்கள் மீது வீண் பழி போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றனர்.
அரசே கொள்முதல் செய்யலாம்...: இத்திட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பெயர்களுக்கு மானிய தொகை அனுப்பப்பட்டு, அதன்பின், ஆய்வகப் பொருட்கள், நூல்கள் வாங்கி, அதற்கான செலவை தலைமை ஆசிரியர்களிடமிருந்து காசோலையாக தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இதற்கு பதில், பள்ளிகளுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் விவரங்களை பள்ளிகளிடமிருந்து முன்கூட்டியே அரசு பெற்று, அதற்கான பொருட்களை அரசே கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கினால், "இடை கமிஷன்" பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Thursday, 21 February 2013

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடம் விவரம் கோரி - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு



அரசு வேலைவாய்பு அலுவலகங்களில் – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை
 பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர்
 தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு
 முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு 
செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர்
 “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை
 எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு 
நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும்
 என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக


இணையதள முகவரி :

ஆந்திராவில் ஆசிரியர் நியமனத்திற்கு காவல்துறை நற்சான்றிதழ் தேவை..

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில், மாணவ மாணவியரை, கண்டிப்பு என்ற பெயரில், ஆசிரியர்கள் பிரம்பால் அடித்தோ, உடல்ரீதியாக துன்புறத்தவோ கூடாது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முகமாக, ஆந்திராவில், ஆசிரியர்கள் நியமனத்தில், புது நடைமுறையை கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், இதற்கு முன் வேலை பார்த்த இடங்களில், எப்படி நடந்து கொண்டார்; வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, போலீசாரிடம் இருந்த சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான், நியமனம் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிநியமனம் இழுபறி

அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்வதற்கு, கடந்த ஆண்டு, மே, 13ல், டி.ஆர்.பி., தேர்வை நடத்தியது. பின், ஜூலை, 8ல், தேர்வு முடிவை வெளியிட்டு, ஒரு இடத்திற்கு, இருவர் வீதம், அதே மாதத்தில், 22 மற்றும் அக்டோபர், 4 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. கடந்த ஆண்டு, அக்டோபர், 18ம் தேதி, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியானது.

இதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல், 22ல் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், அக்டோபர், 18ல், தேர்வுப் பட்டியல் வெளியானது. இரு தேர்வுகளிலும், தேர்வு பெற்ற தேர்வர்களின் விவரங்களை, உயர்கல்வித்துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பியது.

எனினும், 4 மாதங்களாக, இவர்களுக்கு பணி நியமனம் வழங்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், அனைவரையும் பணி நியமனம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு பெற்றவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் -பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி

பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன. 8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சிவபதி, "பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி, மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும்&' என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு, 8.50 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய வினாத்தாள், தேர்வு நெருங்கும் நேரத்தில், அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக, தேர்வு மையங்கள், அதிகரிக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையத்திற்கு அனுமதி கேட்டு, ஏராளமான பள்ளிகள், விண்ணப்பத்திருந்தன.

அதில், 2,000 பள்ளிகளில், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணியில், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவர். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். கண்டறியப்பட்டுள்ள பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை, அந்த சமயத்தில், "ஸ்டேண்டிங் ஸ்குவாட்" அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம், 30 முதல் 40 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள், மாணவர்களை, "பிட்" அடிக்க உதவி செய்வதாக, புகார்கள் வந்துள்ளன. அந்த பள்ளிகள் மீது, அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்கள், "பிட்" அடித்து சிக்கினால், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, முக்கிய பாடமாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாட தேர்வின் போது, அண்ணா பல்கலை ஆசிரியர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

Wednesday, 20 February 2013

பொதுத்தேர்வுக்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம்....


பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தங்களைத் தகுந்த முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விஷயம் பிள்ளைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும்.
இரவில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு, புரதச்சத்துமிக்க உணவுகளையும், சின்ன சின்னதாக இடைவெளிவிட்டு விதவிதமான பழங்களையும் படித்துக்கொண்டே சாப்பிடும் படியாக வெட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளின் மனநம்பிக்கை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த நேரத்தில் மிக அவசியம்.
மாரத்தான் எனப்படும் ஒரு நெடு ஓட்டத்தின் கடைசிக்கட்டம் இது. மாணவர்கள் தங்கள் சக்தியின் எல்லைக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் இதை கவனத்தில் கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டியது மிக மிக முக்கியம். சிரமப்பட்டு படிக்கும் பிள்ளைகள், அவ்வவ்போது மன அழுத்தத்தை நீக்கும் விதமாக சிறிது நேரம் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், கோபப்படாமல் விட்டுக் கொடுங்கள். உங்களால் இயலுமானால் கேரம் போன்ற விளையாட்டுகளை, நீங்களும் அவர்களோடு சேர்ந்து விளையாடலாம். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களோடு மனம்விட்டு பேசுங்கள். அவர்களின் குறிக்கோள்களை மறைமுகமாக ஞாபகப்படுத்துங்கள்.
வாழ்க்கையில் விருப்பப்பட்டு கஷ்டப்பட்டவர்களின் வெற்றிப்பாதையை முன் உதாரணமாகக் காட்டுங்கள். அது உங்களின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். எக்காரணம் கொண்டும் மற்றக் குழந்தைகளின் தன்னார்வத்தையோ, திறமையையோ பட்டியல் இடாதீர்கள். குற்றம் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டிய தருணம் இது. இன்னும் சொல்லப்போனால், தேர்வு முடிந்த பின்னான திட்டமிடல்களைக் கூட குழந்தைகளோடு மேலோட்டமாக கலந்தாலோசிக்கலாம். ‘இந்த நெடும் பயணத்தின் முடிவில் மகிழ்ச்சியும், வெற்றியும் காத்திருக்கின்றது‘ என்று புரிந்துகொள்ளும் மாணவர்கள் புத்துணர்வுடன் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவார்கள்.
இனி என்ன? பதற்றமே இல்லாமல் தங்கள் பிள்ளைகளுடன், பெற்றோர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாமே!
-டாக்டர் உமா

அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு வெளியீடு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் மூலம், தமிழக அரசு கடந்த 22 ஆண்டுகளாக நடத்திய  போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று ஜெயலலிதா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

தமது 30 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இன்றுதான் மனநிறைவைத் தரும் விஷயம் நடந்துள்ளது. இது தமக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் - திரு. பிச்சையிடம், பொறுப்பு ஒப்படைப்பு..


மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்சென்னை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள்

முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் 
சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, 
டி.ஆர்.பி., "பகீர்' தகவலை 
வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.

இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது

Tuesday, 19 February 2013

அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தம் - வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு.

பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம்

போல் செயல்பட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால், ஊழியர்களின் வருகையை அதிகாரிகள் தொகுத்து துறை வாரியாக வைத்து கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



பாவம் தொடக்கக்கல்வித்துறை........ நாளிதழ் செய்தி

பள்ளிக்கல்வித்துறையும், தொடக்கக்கல்வித்துறையும் ஒரே அரசின் கீழ் இயங்கும் இரு துறைகளாக இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்னெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையே உள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு உயர்நிலைப்பள்ளியில் அரசு செலவில் இண்டர்நெட் இணைப்பு கொடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூட இணைய இணைப்பிற்கான நிதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களை மேலாண்மை செய்யும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு போதிய அளவில் கணிப்பொறிகளோ, அச்சுப்பொறிகளோ வழங்கப்படவில்லை. இண்டர்நெட்டின் வாசம் கூட இன்னும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு காட்டப்படவிலை.

கட்டமைப்பு வசதிகள்தான் இல்லையென்றால் பணியாளல் எண்ணிக்கை மிகவும் மோசம். 40 ஆசிரியர்கள் பணிபுரியும் மேல்நிலைப்பள்ளிகளில் 4 அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் 350 ஆசிரியர்கள் பணிபுரியும் ஒரு ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 3 பேரைத் தவிர மீதியெல்லாம் காலிப் பணியிடங்களாக உள்ளன.

தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களோடு சேர்த்து உத்தரவுகளையும் தயார் செய்து கொண்டே அலுவலர்களை அணுக வேண்டிய நிலை நிலவுகிறது.
EMIS திட்டத்தின்படி ஆசிரியர் விவரங்கள், மாணவர் விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது தொடர்பாக உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பட்ட பாடும், படும் பாடும் காணச் சகிக்காதன.
கடந்த 2008 ஆம் ஆண்டில் முதன் முதலாக Teacher Profile கணினிமயமாக்கப்பட்டபோது, அப்பணியை SSA விடம் ஒப்படைத்தது அரசு. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் போதுமான நிதி இருந்தது. தேவையான அளவு கணிப்பொறிகள் இருந்தன. முதன்மைக்கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் தேவையான அளவு கணிப்பொறி பாட ஆசிரியர்கள் இருந்தனர். கணினியில் பதிவேற்றம் செய்ய அருமையான மென்பொருளும் எல்காட் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.

அதே பணியின் நீட்சியாக 2012ல் Teacher Profile update செய்ய தீர்மானிக்கப்பட்ட போது, அந்த வேலை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தலையில் விழுந்தது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் நிதியும் இல்லை, தேவையான கணிப்பொறிகளும் இல்லை. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் கணிப்பொறி பாட ஆசிரியர்களும் இல்லை. இதையெல்லாம் விட பெரிய கொடுமை, பதிவேற்றம் செய்ய உரிய மென்பொருள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதுதான். டேட்டாபேஸை (Database) ஐ காப்பி செய்து கொடுத்து அப்டேட்ட செய்யச் சொல்லி விட்டார்கள். எந்த ஆசிரியரின் பெயர் எங்கு இருக்கிறது என்ற தேடுவதிலும், புதிய ஆசிரியர்களுக்கு வரிசை எண் இடுவதிலும் ஏராளமான நேரம் செலவழிந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் இந்த வேலையை செய்தால் டேட்டா மெர்ஜிங் பிரச்சினை வரும் என்பதால் ஒரு கணினியில் அரும்பாடுபட்டு செய்து முடித்தனர்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் வேறு நிலை, அவர்கள் 2008 ல் எந்த இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்தார்களோ அதே இணையதளத்தில், தங்கள் பள்ளியில் உள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி எளிமையாக செய்து முடித்துவிட்டனர். ஏன் இந்த ஓரவஞ்சனை, தொடக்ககல்வித்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் என்ன பாவம் செய்துவிட்டார்கள்.

சூரிய குடும்பம் - அதிசய அறிவியல் உண்மைகள்


விண்வெளி அறியியல் உண்மைகள்.


   

     விண்வெளி பற்றிய அதிசயிக்கத்தக்க உண்மைகள்:
  • கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே.
  • யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது.
  • நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
  • வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம்.
  • யுரேனஸ் கிரகம் ஜார்ஜ் ஸ்டார் (George’s Star) எனவும் அழைக்கப்படுகிறது.
  • சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய மலை , செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு எரிமலையாகும். இதன் உயரம் 27km ஆகும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.85 km மட்டுமே.
  • சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 cm நகர்கிறது.
  • சூரியன் 1.4 மில்லியன் கிலோமீட்டர் அகலம் கொண்டது. அதாவது அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை வைக்கலாம்.
  • பூமி ஒவ்வொரு நூற்றண்டிலும், ஒரு நாளைக்கு 0.002 வினாடிகள் என்ற அளவில் அதன் சுழற்சி வேகம் குறைகிறது.
  • வியாழன் கிரகத்திற்கான சந்திரன் முற்றிலும் பனியால் சூழப்பட்டுள்ளது.
  • சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் (10,000 டிகிரி பாரன்ஹீட்)