test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 31 January 2013

Latest Pay Roll Software - 9.0 now available.

LATEST PAY ROLL - 9.0  DOWNLOAD......


http://karuvoolam1.tn.gov.in/payroll/

குரூப்-2 தேர்வு முடிவுகள் (01.02.13) நாளை வெளியீடு


தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த உள்ளது.

தேர்வு முறையில் பத்து ஆண்டிகளுக்கு பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் தெரிவித்தார்

TNPSC GROUP IV மூலம் தேர்வ செய்யப்பட்டவர்களுக்கு கல்வித்துறையில் நியமனம்..


தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளி கல்வித்துறை - இளநிலை உதவியாளர் நேரடி நியமனம் TNPSC GROUP IV மூலம் 2007 - 2008 முதல் 2012 -2013 தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 02.02.2013 அன்று நடைபெறும் கலந்தாய்வு மூலம் நியமன ஒதுக்கீடு ஆணை வழங்க உத்தரவு.

ஆள்மாறாட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சருக்கு தண்டனை



ஆள்மாறாட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு தனித்தேர்வில் கல்யாண சுந்தரம் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு திண்டிவனம் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில்,ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்


அரசு பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில், ஆசிரியர்களை "பயிற்சி' என்ற பெயரில் அடிக்கடி அழைத்து, "முடக்கப்படுவதால்' கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்ள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு ஒரு வாரமாக புத்தாக்கப் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. மேலும், இயலாக் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பயிற்சிகளும், இன்று(ஜன.,31) வரை நடக்கிறது.இதுதவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பிலும் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, 10 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் நடக்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வும், பிப்.,2வது வாரம் முதல் செய்முறை தேர்வுகளும் துவங்கவுள்ளன. பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்படும் 80 சதவீதம் ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை சொல்லி கொடுப்பதால், அவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன.ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், ""பள்ளிகள் துவங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதைவிட்டு, பொதுத் தேர்வுகள் துவங்கும் நேரத்தில் இப்படி "விதவிதமான பெயர்களில்' பயிற்சி முகாம்களை போட்டி போட்டு நடத்தப்படுவது வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்,'' என்றனர்

சென்னை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு


நாளை முதல் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 13 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு கட்டமாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 1 முதல் 8 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள 406 பள்ளிகளில் 300 பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டு 51,604 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 30,013 மாணவ, மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

10 - ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது?


பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும் தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பை பொறுத்த வரை, தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதனால், செய்முறைத் தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்வுத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு, இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. பிப்ரவரி இறுதிக்குக்குள், செய்முறைத் தேர்வு, நடத்தி முடிக்கப்படும். இதற்கான தேதிகளை, ஓரிரு நாளில் அறிவிப்போம்" என, தெரிவித்தனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு - 70 தேர்வு மையங்கள் கூடுதல்...


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின்
எண்ணிக்கை 2,048 ஆக அதிகரித்துள்ளது. பள்ளிகளின் மூலம் 8.01 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக சுமார் 50 ஆயிரம் பேரும் என மொத்தமாக 8.51 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட சுமார் 30 ஆயிரம் பேர் இந்த ஆண்டு கூடுதலாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 1,974 தேர்வு மையங்களில் 8.22 லட்சம் பேர் எழுதினர்.கூடுதல் தேர்வு மையங்கள்: இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதுவதையொட்டி, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு கூடுதலாக 70 தேர்வு மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்கும்போது அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. நாளை செய்முறைத் தேர்வு தொடக்கம்: பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு 2,500 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத்தேர்வு எழுத உள்ளவர்களில் 4 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்

திருவாடானை ஒன்றியத்தில் 5 பள்ளிகளை மூட முடிவு?:


பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திருவாடானை ஒன்றியத்தில் 117 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் குழந்தைகளை சேர்ப்பதில், இப்பகுதி மக்களுக்கு ஆர்வம் இல்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர்.

கலியணி கிராமத்தில் குழந்தைகள் சேராததால் இங்குள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்தாண்டு மூடப்பட்டது. பிள்ளையாரேந்தல் ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7, கீழ்க்குடியில் 2, காட்டியனேந்தலில் 4, கீழக்கோட்டையில் 2, கிளியூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளையும் விரைவில் மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அறிவு அவசியம் வேண்டும். இது, அரசு துவக்கப் பள்ளிகளில் முறையாக கிடைப்பதில்லை. எனவே, தனியார் பள்ளிகளை நாட வேண்டி உள்ளது, என்றனர்.

தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள், பை இலவசமாக கொடுத்தும், குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியும், பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை.

ஆகவே, குறைந்த மாணவர்களை உள்ள பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை, எஸ்.பி.பட்டினம், வெள்ளையபுரம், பெருவாக்கோட்டை, கல்லூர், மங்களக்குடி, தொண்டி கிழக்கு, பாசிபட்டினம், என்.மங்கலம் போன்ற ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாணவர்களை உருவாக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறோம், என்றார்

Wednesday, 30 January 2013

TNPSC Annual plan released.....


TNPSC Annual plan released.....

Click the following.....



http://www.tnpsc.gov.in/docu/Annual%20planner_30_01_2013.pdf

வரும் கல்வியாண்டு முதல் பி.எட். எம். எட். புதிய பாடத்திட்டம் அமல்...



தமிழ்நாட்டில் 600–க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. முன்பு ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியும் அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இயங்கி வந்தன.

இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருவதைப் போன்று எல்லா கல்வியியல் கல்லூரிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் வண்ணம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஆசிரியர் கல்விக்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கல்வியியல் படிப்பில் அவ்வப்போது புதிய மாறுதல்களை ஆசிரியர் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, பி.எட். படிக்கும் மாணவ–மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தகுதித்தேர்வு பாடத்திட்டம் கடந்த ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்வுசெய்யக்கூடிய ஒரு பாடமாக சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய கல்வித்தேவைக்கு ஏற்ப பி.எட். எம்.எட். எம்.பில். (கல்வியியல்) படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கல்வியியலிலும், கற்பித்தலிலும் ஏற்பட்டு இருக்கும் நவீன முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டில் (2013–2014) முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.எட். பிப்ரவரி 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து பிப்.,25 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தற்போது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் அதாவது பி.லிட்.,யில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி-இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், உயிரி-வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், நிலவியல்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெரிட் முறையிலும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வரைவோலை எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப ரூ.850 வரைவோலை எடுக்க வேண்டும்.

சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜன.,24ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது. பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.,25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 3ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்

புதியதாக பணியில் சேர்ந்த, ஆசிரியர்களில் 6000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் ஊதியம் வழங்கப்படவில்லை.



புதியதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இது குறித்து, பள்ளிக் கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்' என்றனர்.

TETல் தேர்ச்சி - இரட்டை பட்டம் வழக்கு தள்ளுபடி


 TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி

வழங்கப்படாதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரைகோர்டில்
தள்ளுபடி செய்யப்பட்டது . 
கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர்
தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு
வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது 
கடந்த 21.12.2012 முதல்விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக
நேற்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள்,
இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்றுதீர்ப்பளித்து
மனுவை தள்ளுபடி செய்தார்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை


தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால்,சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போதே துவக்கி விட்டனர். மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர்.
அதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர், அனைத்து மாவட்டத்திலும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திற்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை, வரும் மே மாதம், துவக்கப்பட வேண்டும்.
அதற்கு முன், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்தத் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 30.01.2013 அன்று காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிடங்கள் அமைதி அனுசரித்தப் பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.



 

Tuesday, 29 January 2013


புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில்
விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு 2010-11-ம் கல்வியாண்டில் 10,935 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு அதற்கடுத்த ஆண்டில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டண நிர்ணயம் பொருந்தும் என்பதால் வரும் 2013-14-ம் கல்வியாண்டுக்கு புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு தொடங்கியுள்ளது.

இந்தப் பணிகள் தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது: முதல் கட்டமாக 12,536 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணய விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்படும். புதிய கட்டணங்களை நிர்ணயிப்பதற்குத் தேவையான விவரங்களைச் சேகரிப்பதற்காக பள்ளிகளுக்கு தனித்தனியாக கேள்விப் படிவங்களும் வழங்கப்படும். இந்த நோட்டீஸ் மற்றும் கேள்விப் படிவங்கள் ஆகியவை கடந்த முறை போலவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள் நேரடி விசாரணைக்கு வரும்போது, பூர்த்தி செய்யப்பட்ட கேள்விப் படிவங்களை கொண்டுவர வேண்டும். முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் நர்சரிப் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். நாளொன்றுக்கு அழைக்கப்படும் 40 பள்ளிகளில் 30 நர்சரிப் பள்ளிகளும், 10 இதரப் பள்ளிகளும் இடம்பெறும். டிசம்பருக்குள் கட்டணம்: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 2014 மார்ச் வரை குழுவுக்கு கால அவகாசம் உள்ளது.

கருத்தில் கொள்ளப்படும் முக்கிய அம்சங்கள் எவை? பள்ளிகளின் செலவினத்தில் மாணவர்களின் கற்றலுக்கு அவை எந்த அளவுக்குப் பயன்பட்டன என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கற்றலுக்குப் பயன்படும் செலவினங்களைக் கருத்தில் கொண்டே புதிய கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும். பெற்றோர், பள்ளி நிர்வாகம் ஆகிய இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்டண உயர்வு இருக்கும்.

ரூ.1.5 கோடி ரூபாய் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு: நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக வசூலித்ததாக எழுந்த புகார்களை விசாரித்து இதுவரை ரூ.1.5 கோடி பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து பெற்றோருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் மீது வரும் புகார்களை விசாரித்து அதிகமாக வசூலித்த கட்டணத்தை மீண்டும் பெற்றோர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு குழு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குழுவின் பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பள்ளிகள், புதிய பள்ளிகள் என இதுவரை 1,500 பள்ளிகளுக்கு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த ஆண்டுக்கு எந்தக் கட்டணம்? தமிழகம் முழுவதும் உள்ள 12,536 தனியார் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 2013-14 கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன

பிளஸ் 1 வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு



பிளஸ் 1 தேர்வுகள் வரும் மார்ச் 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.


பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள்
பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30
மார்ச் 5
தமிழ் முதல் தாள்
மார்ச் 8
தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 12
ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 13
ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 19
இயற்பியல் / பொருளியல்
மார்ச் 20
கணினி அறிவியல்
மார்ச் 22
வேதியியல் / கணக்கியல்
மார்ச் 26
கணிதம் / வணிகக் கணிதம்
மார்ச் 28
உயிரியல் / வணிகவியல்

முதுகலை ஆசிரியர் - வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை


முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில், சமீபத்தில், 2,300 முதுகலை ஆசிரியர்களை, டி.ஆர்.பி., தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில், தாவரவியல் பிரிவிற்கான ஆசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், தமிழ் வழிக்கான, 20 சதவீத இட ஒதுக்கீடும் நிரப்பப்படவில்லை.

இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: தாவரவியல் பிரிவில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்வழி இடஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்பவும், பணிகள் நடந்து வருகின்றன. முதுகலை பட்டப் படிப்புடன், பி.எட்., படிப்பை, தமிழ் வழியில் படித்தவர்கள், தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்படுவர்.

வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் மட்டுமே, தமிழ்வழி படிப்புகள் உள்ளன. எனினும், எந்தெந்த பல்கலை, கல்லூரிகளில், தமிழ் வழி பாடப்பிரிவுகள் உள்ளன என்ற விவரங்களை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் உயர்கல்வித் துறையிடம் கேட்டுள்ளோம்; பதில் வரவில்லை. வந்ததும், தமிழ் வழி இட ஒதுக்கீட்டை நிரப்பும் பணி, வேகம் பிடிக்கும்.

மூன்று பாடங்களிலும், 120 இடங்கள் நிரப்பப்படும். பிப்ரவரி இறுதிக்குள், தாவரவியல் மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியலை, வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்

நெருங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு - கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 2001 முதல் 2012 வரை, தமிழகம் முழுவதும் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்திற்கு கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் விஜயகுமார் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 2002-10 வரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் 5 முதுநிலை ஆசிரியர்களுக்கும், பின்னர் 9 ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன. ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல், 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் பணி நியமனம் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், இது சார்ந்த வேறு எந்தவித தகவல்களையும் எங்களால் தெரிவிக்க இயலாது" என்றனர்.

22- தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்....


தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலும், தேசிய அளவிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2012க்கான தேசிய விருது, வரும், செப்., 5ம் தேதி, டில்லியில் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 22 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான இறுதி கட்டப்பணி, டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில், தேர்வுக் குழுவின் சிறப்பு உறுப்பினராக, மைசூர் மண்டல கல்வி நிறுவன பேராசிரியர் ரமா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், மத்திய இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குனர் வசுந்தரா, சென்னை மாநகராட்சி பள்ளிகள் இணை கமிஷனர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் குறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கூறியதாவது: ஏற்கனவே, விண்ணப்பங்களை பெற்று, தகுதியான ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்து விட்டோம். இந்த பட்டியலை, பிற மாநில உறுப்பினர் பார்வையிட்டு, ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதற்காக, இந்த கூட்டம் நடந்தது.

தகுதி வாய்ந்த, 22 ஆசிரியர்களின் பட்டியல், கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு, செப்., 5ல், டில்லியில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான விருதுக்கு, 350 பேர், தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பணி, விரைவில் துவங்கி, ஆகஸ்ட்டில் முடிவடையும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

Monday, 28 January 2013


ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 பணிபுகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள இவர், 
                                                     
சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் 
கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கான, மினியேச்சர் ஊஞ்சலை செய்து, அதன் அச்சுடன் சிறிய ஜெனரேட்டரை இணைத்துள்ளார்.ஊஞ்சலை ஆட்டும்போது, அதன்மூலம் கிடைக்கும் விசை மூலம், ஜெனரேட்டர் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இக்கருவியில் இருந்து, 9 வாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டு சிறிய பல்புகளை எரிய வைத்து, பரிசோதனை மூலம் செய்து காண்பித்தார். குடியரசு தினவிழாவில் இக்கருவியை காட்சிக்கு வைத்திருந்தார். மாவட்ட கவுன்சிலர் அய்யப்பா, தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

இதுகுறித்து, ஆசிரியர் வேலு கூறியதாவது:விஞ்ஞானி மைக்கேல் பாரடே கண்டுபிடித்த, மின்தூண்டல் முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது, அதிக அளவில் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிலக்கரி, அணு சக்தி, காற்றாலை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.இன்றைய நிலையில், எரிபொருள் குறைந்து வருவதால், சோலார் முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருளை பயன்படுத்தாமல், பலவகையிலும் வீணாகும் ஆற்றலை, பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும், என்ற எண்ணம் தோன்றியதால், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயாரித்தேன். இதில், சிறிதாக சோதனை முறையில் செய்துள்ளேன்.இதை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி, விளையாட்டு மைதானங்களில், பொழுதுபோக்கு இடங்களில் அமைக்கப்படும் ஊஞ்சல்களில், இக்கருவியை பொருத்தினால் அதன் மூலம், மின்உற்பத்தி செய்து, குறைந்தபட்சம் சில மின்விளக்குகளையாவது எரியவைக்க முடியும்.இதனால், மின்சாரத்தை சிக்கனம் செய்யமுடியும். இக்கருவியை மேலும் மேம்படுத்தி, பெரிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு, ஆசிரியர் வேலு கூறினார்


சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் இன்று 28.01.2013 வெளியிடப்படுகிறது.சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in உள்ளிட்ட இணையதளங்களில், வெளியிடப்படுகிறது.தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம். சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குளறுபடியா?


ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குழப்பம் . 27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science, Nursing, Statistics ஆகிய தேர்வுகள்
நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் முதல் தாள் நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரும் 3ம் தேதி பயிற்சி முகாம்

நாமக்கல், : நாமக்கல்லில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் கதிரேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாதேஸ், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில பொதுச்செயலாளர் முருக.செல்வராஜன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும் 3ம் தேதி தேர்நிலை அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், அரசாணைகளும் ஐயப்பாடுகளும், விளக்கங்களும், சவால்களை சந்திப்போம். என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20, 21ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறும் 48 மணி நேர அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து அதில் முழுமாயாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 பல்வகை கல்லூரிகள் தொடங்க முதல்வர் உத்தரவு.

 இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 பல்வகை கல்லூரிகள் தொடங்க முதல்வர் உத்தரவு.


NEW ENGINEERING COLLEGES & 10 POLYTECHNIC COLLEGES SANCTIONED REG - PRESS RELEASE NO.68 DT.28.1.13 CLICK HERE...

1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரை அவகாசம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை....

 


தமிழகம் முழுவதும் உள்ள 1.33 கோடி பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்களை உள்ளடக்கி கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை உருவாக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த தகவல்களின் அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாணவர்களின் பெயர், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருமானம் என பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணி கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பணிகள் முடியாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆரம்பத்திலேயே இறுதியான தேதியை தெரிவித்தால் பணிகளை முடிக்காமல் இருந்து விடுவர். இதனால் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் பல பள்ளிகளில் பணிகள் முடியாமல்
இருப்பதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே கால அவகாசத்தை பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு மாத கடைசியில் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி...

 


ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை உரிமை

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

மனு தள்ளுபடி

அடிப்படை வசதிகள் இல்லாத, முறையாக அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 1993–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஏராளமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதித்தேர்வு நடத்துவதில் தவறு இல்லை. இந்த தேர்வு அவர்களது வேலை வாய்ப்பினை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Sunday, 27 January 2013

அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்: வரும் கல்வியாண்டில் அமல்

 


சென்னை: அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.
 சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது.பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே,
இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும்.
ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். பல்கலைக்கழக துறை பாடத் திட்டங்களை பதிவு செய்யும் வகையில், தனி இணையதளம் அமைக்கப்பட உள்ளது.
மாற்றம் செய்யப்படும் பாடத் திட்டங்கள், இதில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம், உலக அளவில் உள்ள பேராசிரியர்களை ஒருங்கிணைக்கிறது. இணையதள தொடர்பு மூலம், துறை பேராசிரியர்கள் வெளிநாட்டில் உள்ள அதே துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் முறைகள், பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து, சர்வதேச தரத்திற்கு கல்வி மேம்பாட்டு வழிகளை மேற்கொள்வர்.
உலகளவில் துறை வாரியாக உள்ள பேராசிரியர்கள் பற்றிய, அடிப்படை புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்கு இடமாறும் மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களே, இதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களையும் முறைப்படுத்தி, ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, ஒரே பாடத்திட்ட முறையால், மாணவர்கள் பெரும் பயனடைவர். தொழில் வல்லுனர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பாடத்திட்ட மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி குழு இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பாடத் திட்டத்தால், மாணவர்களுக்கு உலக தரமான கல்வி கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இடமாற்றத்தில் செல்லும் மாணவர்கள், கல்வி தொடர உதவும். அடுத்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்,&'&' என்றார்

ஆங்கில சொல்லிற்கு முழு விளக்கம் அளிக்கும் இணையதளம்


ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, 
அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு -  Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2 முதல் 10 எழுத்துக்கள் என எழுத்துக்களைக் கொண்டும் அவை தொடங்கும் அல்லது முடியும் மற்றும் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டும் ஆங்கிலச் சொற்களைக் கண்டறியும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. எழுத்துக்களைக் கொண்டு போட்டிக் கேள்விகள் (Quiz)போன்றவையும் தரப்பட்டுள்ளன.

(Dictionary)மற்றும் மொழிமாற்றக் கருவி(Translator)தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இத்தளத்தில் உள்ளன.
இணையதள முகவரி : http://www.wordhippo.com

Saturday, 26 January 2013

SSA -தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதியதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.



தொடக்கக் கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் எஸ்எஸ்ஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.


எனவே அந்தந்த மா வட்ட எஸ்எஸ்ஏ முதன் மை கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளிகளின் பட்டியலை பெற்று, அப்பள்ளிகள் அமைய உள்ள குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் முன்னுரிமை அடிப்படையில் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்க வேண்டும். எஸ்எஸ்ஏ நிர்ணயித்துள்ள பள்ளிகளை விட கூடுதல் பள்ளிகள் துவங்க வேண்டும் அல்லது தரம் உயர்த்த வேண்டும் என்றால், அவற்றையும் பட்டியலில் சேர்க்கலாம்.
எஸ்எஸ்ஏ தேர்வு செய்துள்ள பகுதிகளில் புதிய பள்ளிகள் துவங்குதல் அல்லது தரம் உயர்த்துவதற்கான நிபந்தனை நி� றவு செய்யப்படவில்லை என்றால், வேறு இடத்தில் பள்ளியை துவங்கவும் மற்றும் வேறு பள்ளியை தரம் உயர்த்தவும் பரிந்துரை செய்யலாம். எஸ்எஸ்ஏ நிர்ணயித்துள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் பட்டியல் அமைய வேண்டும். தயாரித்த பட்டியலை தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவ, மாணவியர் விவரம் இணையத்தில் பதிய அவகாசம்

 


 
மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை உள்ளடக்கி, "கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை" உருவாக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில், பல திட்டங்களை செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அவர்களின் பெயர்கள், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருவாய் என, பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பணி, கடந்த ஒரு வாரமாக, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் , விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம், இம்மாதம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளில், பணிகள் முடியாமல் உள்ளன.

சென்னை புறநகர்களில் உள்ள, பல தனியார் பள்ளிகளுக்கு, இரு தினங்களுக்கு முன் தான், தகவல் கிடைத்துள்ளது. 3,000, 4,000 பேர் பயிலும் பள்ளிகளில், தகவல்களை பூர்த்தி செய்ய, பல நாட்கள் தேவைப்படும் நிலை உள்ளது. இருக்கிற ஒரு சில நாட்களில், மாநிலம் முழுவதும் பணிகள் முடிவடையாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை, மேலும் நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்பத்திலேயே, இறுதியான தேதியை தெரிவித்தால், பணிகளை முடிக்காமல் இருந்துவிடுவர். இதனால், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தெரிவித்தோம். ஆனால், பல பள்ளிகளில், பணிகள் முடியாமல் இருப்பது, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே, பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, பிப்ரவரி 15 வரை, நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு, மாத கடைசியில், பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?




ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும்,
அவர்கள் தொழில் செலுத்தும் அளவு உரிய தொகையை ஊதியமாக பெற்று இருந்தால் அவர்கள் பிப்ரவரி 2013க்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 17.12.2012 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.24,888 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.15,590 சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் 28.02.2013 வரை முறையே ரூ.61,819 மற்றும் ரூ.38,724 வர வாய்ப்புள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.706ம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.238 செலுத்தவேண்டி இருக்கும்.
தொழில் வரி:
அரையாண்டு வருமானம் : 21 ,000 வரை : இல்லை
21,001 முதல் 30,000 வரை : ரூ. 94
30,001 முதல் 45,000 வரை : ரூ.238
45,001 முதல் 60,000 வரை : ரூ.469
60,001 முதல் 75,000 வரை : ரூ.706
75,001 முதல் : ரூ.938

உயர்நிலை மேல்நிலை - பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பயிற்சி...

 

 

தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது.
தற்போது 2ம் கட்டமாக பாட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் நான்கு நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழ் பாட ஆசிரியர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும், ஆங்கில பாடத்தில் பிப்ரவரி மாதம் 8, 9, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், கணித பாடத்தில் பிப்ரவரி மாதம் 4, 5, 15 மற்றும் 16ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது.
அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 1, 2, 13 மற்றும் 14ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 11, 12, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது.
இதில் தமிழ் பாடத்தில் 6,950 ஆசிரியர்களுக்கு 71 மையங்கள், ஆங்கில பாடத்தில் 2,256 பேருக்கு 33 மையங்கள், கணித பாடத்தில் 7,564 பேருக்கு 78 மையங்கள், சமூக அறிவியல் பாடத்தில் 7,848 பேருக்கு 80 மையங்கள், அறிவியல் பாடத்தில் 4,558 பேருக்கு 49 மையங்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மொத்தம் 29 ஆயிரத்து 176 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் பயிற்சி நடக்கிறது.

Thursday, 24 January 2013

மேல்நிலைக் கல்வி 11. 12-ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம் அடுத்த மாதம் வெளியீடு

 



அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தற்போதுள்ள பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

எனவே, வரலாறு, அறிவியல், தொழில்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், புதிய பாடத் திட்டங்களை உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பாட வாரியாக, தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு குழுவிற்கும், பல்வேறு பல்கலைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தலைமையில், தலா மூன்று, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, ஆறு பேர், உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த குழுக்களுக்கும், ஓய்வுபெற்ற சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷணராவ், தலைவராக உள்ளார். இக்குழு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 24 பாடங்களுக்கு, தற்காலிக வரைவு பாடத் திட்டத்தை தயாரித்து முடித்துள்ளது.

பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து, இதுகுறித்து கருத்து கேட்கும் கூட்டங்கள், வரும் 30, 31 தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் நடக்கின்றன. முதல் நாள், செய்முறைத் தேர்வு பாடங்களுக்கான கருத்துக் கேட்பும், மறுநாள், செய்முறைத் தேர்வு அல்லாத பாடங்களுக்கு கருத்துக்களை கேட்டறிய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில், பிப்., 13ல், துறை இணையதளத்தில் (www.tnscert.org) வரைவு பாடத் திட்டத்தை வெளியிட்டு, 27ம் தேதி வரை, மீண்டும் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், அதன்பின் வரைவு பாடத் திட்டத்தை இறுதி செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்படும் என்றும், துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

Wednesday, 23 January 2013

ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை ஜனவரி இறுதி (அ) பிப்ரவரிக்குள் நிரப்ப நடவடிக்கை....

 



 
        அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்தவர்களுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.

இவ்வகையில், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, முதல்வர் அனுமதி வழங்கி விட்டதாக, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.