test

R P

Friday, 13 December 2013

இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை ஐ.நா.சபை

இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை" என ஐ.நா., குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, "யுனிசெப்" அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும், 161 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாத முதல் 10 நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது; இங்கு, ஐந்து வயதுக்குக் குறைவான, 7.10 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை,

உலகளவில், 23 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு, "யுனிசெப்" அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்; அவ்வாறு பதிவு செய்வது, குழந்தையின் அடையாளத்தை அறிவதில் முதல் பங்கு வகிக்கிறது; உரிமைகள் மற்றும் அரசின் உதவி பெறுவதில், பிறப்பு சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது" என யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர், கீதா ராவ் குப்தா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment