test

R P

Monday, 3 June 2013

ஆசியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன" - சிறப்பு கட்டுரை

ஆசிரியரை தண்டிக்கும் மாணவர்கள்!

      மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிச்ச காலம் மலையேறிப் போச்சு."படி,படி "ன்னு சொல்ற காலத்துல படிக்கறது இல்ல.படிக்கச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்துனா கூட , ஆசிரியர் "என்னை கொடுமைப்படுத்துறார், அடிக்கிறார், பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்" அப்படின்னு கொடி பிடிச்சு போராட ஒரு கூட்டமே இருக்கு.          சொல்லுங்க சார்.நாமெல்லாம் அந்த ஆசிரியர்கிட்ட தானே படிச்சு வளந்தோம்.நாமெல்லாம் நல்ல நிலைமையில இல்லையா?
                யாராவது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி பணி இடைநீக்கம்,பணி நீக்கம் செய்யுங்கள்.வேண்டாம் என்று கூறவில்லைஉண்மையில்ஆசிரியர்கள் மாணவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டும் தங்களது எத்தனையோ சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வாழ்கின்றனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
                சம்பளம் உயர்த்தினால் "ஐயோ ஆசியர்களுக்கு சம்பளம் ஏத்திட்டாங்க ,ஏத்திட்டாங்க"ன்னு ஒட்டுமொத்த மக்களும் கத்தி கூப்பாடு போடறது! ஏன் விலைவாசி ஏறல?           நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்! நாங்கள் மட்டுமே கையூட்டு பெறுவதில்லை.
                   சம்பளம் குறைவாக உள்ளவர்கள் வேறு வகையில் சம்பாதித்து எங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள் .அது எவர் கண்களிலும் தெரிவதில்லை.(அனைத்து ஊழியர்களும் இவ்வாறு இருப்பதில்லை)
             என்ன பாதுகாப்பு இருக்கிறது இன்றைய காலகட்டத்தில் ஆசியர்களுக்கு? குடித்து விட்டு வந்து பள்ளிக்குள் பெற்றோர் மிரட்டுவது,பள்ளிக்கு வெளியே ஆள் வைத்து அடிப்பது,அவ்வளவு ஏன் கத்தியால் குத்தி கூட கொலை செய்யலாம் மக்களோ அல்லது மாணவர்களோ.!அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

                         அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வருகை நாட்கள் அதிகமாக இருந்தால்தான் நியாய விலைக்கடையில் அந்த குடும்பத்துக்கு கிடைப்பவை கிடைக்கும் என்று ஒரு சட்டம் கொண்டு வாங்க பாப்போம்! அப்புறம் பையன் எப்படி பள்ளி வராம போவான்?

                          கல்வித்துறை கேட்கும் புள்ளிவிவரங்களை எழுதிகொடுப்பதும் , ஆண்டு முழுவதும் பள்ளி வேலை நாட்களில் பயிற்சி கொடுப்பதும்,தேர்தல் பணியும்,மக்கள் தொகை கணக்கெடுப்பும் தான் ஆசிரியருக்கு கூடுதல் சுமைகள்.

                  மக்களைப் பார்த்துக் கேட்கிறேன்.உங்களுக்கு இருப்பது மகனோ மகளோ ,ஒருவரோ இருவரோ,ஒரு மணி நேரம் உங்களால் சமாளிக்க முடிகிறதா? நாள் முழுவதும் 40 மாணவர்களை வைத்திருக்கும் ஆசிரியர்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

                   சென்னையைச் சேர்ந்த ஆசிரியை தன் வகுப்பு மாணவனால் குத்தி கொலை செய்யப்படும்போது ஒரு பத்திரிகையில் அழகாக சொன்னார்கள்."ஆசியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன." முற்றிலும் உண்மை.  

                   எனக்குத்தெரிந்த ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சொன்னார்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்கைந்து பேர் பட்டன் கத்தி கொண்டு வருகிறார்கள் என்று.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எதுக்குய்யா பட்டன் கத்தி? நாடு எங்க போயிட்டு இருக்கு?

                    மீடியாவும் இதுக்கு ஒரு காரணம்.வெட்டு ,குத்து,கொலை,கற்பழிப்பு இல்லாத படமே இப்போ வர்றது இல்ல.இதெல்லாம் படத்துக்கு அடிப்படைத் தகுதிங்க!

           ஆயிரம்தான் நீங்க பண்ணுங்க.இன்னும் கூட நாங்க, சொல்லிக்கொடுத்த பசங்க வளந்து பெரிய ஆளாகி கஷ்டப்படுற சூழ்நிலைய நாங்க பாக்க நேரும்போது கண்கலங்காம இருந்ததில்ல.

                            சொல்லிக் கொடுத்த ஆசிரியர் கண்ணுக்கு முன்னாடி,டீ கிளாஸ் கழுவறதும், உணவகங்களின் மேசையை துடைப்பதையும் விட அவன் வேறு என்ன பெரிய தண்டனையை அந்த ஆசிரியருக்குக் கொடுத்து விட முடியும்?

0 comments:

Post a Comment