test

R P

Thursday, 2 May 2013

செஞ்சியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா



தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செஞ்சி வட்டார கிளையின் சார்பில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா. கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் வட்டார அலுவலகத் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வட்டாரத் தலைவர் சீ.அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.வட்டார துணைச் செயலாளர் தோ.கிளியோபாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநிலத் தலைவர் திரு.கோ.காமராஜ் அவர்கள் வட்டார அலுவலகத்தை திறந்த வைத்தும் பணி நிறைவு பெற்றவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துரையும் இயக்கப் பேருரையும் நிகழ்த்தினார்.ஓய்வு பிரிவு பொதுச்செயலாலர் திரு.சா.அன்பழகன் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துரையும் இயக்க உரையும் ஆற்றினார்.
இவ்விழாவில் மாவட்டத் தலைவர் மற்றும் வட்டாரச் செயலாளர் திரு.சேக்மூசா மாவட்ட செயலாளர் திரு.சு.தண்டபாணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.மா.சிவலிங்கம் மற்றும் மாவட்ட வட்டார இயக்கப் பொறுப்பாளர்களும் ஓய்வு பிரிவு பொறுப்பாளர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலும் அண்டை வட்டார பொறுப்பாளர்களும் இயக்க இருபால் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இறுதியாக வட்டார பொருளாளர் க.நாவப்பன் நன்றியுரை கூறினார்.

0 comments:

Post a Comment