test

R P

Monday, 11 March 2013

இலவச தமி்ழ் இணைய நூலகம்’......


  1. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவுகிறது ஓர் இணையதளம்மின்னூல் வடிவில் புத்தகம் வாசிப்பது இப்போது இணையத்தில் மிகப் பிரபலம்.  ஆனால், தமிழ் மின்னூல் வாசிக்க விரும்பும் புத்தகப் பிரியர்களுக்கு அந்தப் பாக்கியம் கம்மிதான். காரணம், இன்றளவும் தமிழ் மின்னூல்கள் இணையத்தில் அதிகம் இல்லை. இனி அந்தக் கவலை, புத்தகப் பிரியர்களுக்கு இல்லை. 
  2. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவுகிறது, ஓர் இணையதளம். அதுதான், ஓபன் ரீடிங் ரூம்.முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, வரலாறு என வகைவகையான மின்னூல் கோப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றனவும் கிடைக்கின்றன. அ.சிதம்பரநாத செட்டியாரில் துவங்கி அண்ணாதுரை, அசோக மித்திரன், கல்கி, குன்றக்குடி அடிகளார், பரிதிமாற் கலைஞர், புதுமைப்பித்தன் எனப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. உடுமலை நாராயணகவி, சுரதா, மீரா, அழ. வள்ளியப்பா எனப் பிரபல தமிழ்க் கவிஞர்களின் பட்டியலும் நீள்கிறது.பொதுவுடைமையாக்கப்பட்ட நூல்கள், காப்புரிமையுள்ள நூல்கள் என அணிவகுப்பவற்றில் பிடித்தமான புத்தகத்தைத் தேர்வு செய்து, அப்புத்தகத்தை அப்படியே படிக்கத் துவங்கி விடலாம்.
  3.  குறிப்பிட்ட சில புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம். நூல்கள் சேர்க்கப்பட்ட மாதம் வாரியாகவும் பார்க்கலாம். இதற்கென உறுப்பினர் கணக்கு தொடங்க வேண்டியதில்லை. தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் அவசியமில்லை. புத்தகத்தின் பக்கங்களை அடுத்தடுத்து திருப்பி வாசிப்பதைப்போல, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வாசிக்க முடியும். இதனால், புத்தகத்தை நேரடியாகப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வரும் இத்தளத்தில் 2,300 படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன
  4. .இந்த வலைத்தளம், தமிழ் புத்தகப் பிரியர்களுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் என்றே கூறலாம். சிங்கப்பூர் வாழ் தமிழரும், மூத்த பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி இத்தளத்தை நடத்தி வருகிறார். ‘இலவச இணைய நூலகம்’ என்றே இதனை அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஏராளாமான புத்தகங்கள் வாசிப்பிற்காக காத்துக் கிடக்கின்றன. வாசித்துப் பயன் பெறுவோம்
  5. .இணையதள முகவரிwww.openreadingroom.com

0 comments:

Post a Comment