test

R P

Nallan pillai petral

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 28 December 2012

ஜனவரி“ 5 -ல் தொடர் முழக்கம்.....

          தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழகம் முழுவதும் நடுவணரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி.  ஜனவரி 5-ல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துகிறது.
       
        விழப்புரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் திரு.ஆ.சேக்மூசா தலைமையில்.மாவட்டச் செயலாளர் திரு.சு.தண்டபாணி அவர்கள் தொடங்கி வைக்க .ஓய்வு பிரிவு பொதுச்செயலாளர் திரு. சா.அன்பழகன் அவர்கள் போராட்ட விளக்கவுரை நிகழ்த்த உள்ளார்கள்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு.மணிவாசகம் அவர்கள் ஆர்பாட்டத்தினை முடித்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.மாவட்ட பொருளாளர் திரு.இரா.குமார் நன்றியுரை கூற உள்ளார்.
       

         ஆசிரியப் பேரினமே அணி  திரண்டு வருக.............

Monday, 24 December 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!

வானுலக வேந்தன் மண்ணுலகில் அவதரித்த நாளாம். இத்திருநாளில் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Sunday, 23 December 2012

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை(24.04.2012)வெளியிடப்படுகிறது....

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (டிச. 24) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஜனவரி 2 முதல் 4 வரை தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் மார்ச் 2013 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த தனித் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்....

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு இணையதள வழியில் கணினி பயிற்சி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி
மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும். இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, "ஆன்-லைனில்' சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்-லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது. பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது. ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகிறது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எனது வாக்குரிமையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக [ ஓட்டு போடுவதற்காக ] மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

10 ஆம் வகுப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், "சிடி"யில் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட மையங்களில் ஒப்படைத்து, பின் அவை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வுத் துறையில், பல்வேறு திட்டங்கள், இணையதளம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களையும், இணையதளம் வழியாக பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, ஆசிரியர் உதவியுடன், தங்களைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Thursday, 20 December 2012

தொடக்கக்கல்வி - தொடக்கக்கல்வி இயக்ககத்தில் 28.12.12 அன்று நடைபெற உள்ள DEEOs ஆய்வுகூட்டத்தில் 24 விவர பட்டியல் தயார் செய்து கூட்டத்தில் சமர்பிக்க உத்தரவு. TO DOWNLOAD PROC REG ALL DEEOs REVIEW MEETING FOR NEW SCHOOLS PROPOSALS, GOVT SCHEMES DETAILS, ESTIMATE VACANCY ON 1.6.13, GO.210 DETAILS CLICK HERE

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் இழப்பு : தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட முடிவு தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ரூ.7,838 இழப்பு ஏற்படுகிறது. அது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் ஜன.,5ல் போராட்டம் நடத்தப்பட உள்ளது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தமிழ்செல்வன் கூறினார். அவர் கூறியதாவது: ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழக பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்கள் ஊதியத்தில் ரூ.7838 இழந்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய இழப்பாக மாறும். மேலும், 1.6.88க்கு பின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வு, சிறப்பு நிலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டந்தோறும் ஜன., 5ல் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. ஓரிரு நாளில், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல் தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்படும்' என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இத்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் முக்கியமானது. முப்பருவ கல்வி முறையில், முழுமையான தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளிகள், மாணவர்கள் கல்வித் தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்குவதற்கான ஒப்புதல் போன்ற பணிகளில், டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தற்போது, 75 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன.டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல், இந்தாண்டு ஜனவரியிலேயே தயாரிக்கப்பட்டு, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எவ்வித அறிவிப்பும், இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: காலியாக உள்ள, டி.இ.ஒ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பணிமூப்பு பட்டியலில், 15 தலைமையாசிரியர்களுக்கு சரியான, "ரெக்கார்டு' இல்லை. பொதுவாக, 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்றால், பணிமூப்பு பட்டியலில் உள்ள, 100 பேருக்காவது, "ரெக்கார்டு'கள், பணிப் பதிவேடு சரியாக உள்ளதா என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது வழக்கமான நடைமுறை. "ரெக்கார்டு' பிரச்னை உள்ள தலைமையாசிரியர்கள் குறித்து அவர்களுக்கு மேல் பணியாற்றிய டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம் சரியான ஆவணங்கள் கேட்டு பெற்று வருகிறோம். காலிப்பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு G.O Ms.No. 242, December 18, 2012 பனிரெண்டாம் வகுப்பு பயிலாமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து தமிழக அரசு ஆணை - பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர். பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர். இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: * பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்... * பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்... * பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்... * பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்... மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது. click here to download the GO 242 of +2 Equalent Qualificications